சனி, 31 டிசம்பர், 2022

அருள்மிகு பூதநாயகி அம்மன் திருக்கோயில்


பூதநாயகி அம்மன் விமானம்


மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் உள்ள  பூதநாயகி அம்மன் கோயில்

பூதநாயகி அம்மன்  கோயில்
                                                          ஐயனார் 
                                             பூதநாயகி அம்மன்

                             தல விருட்சம் வீரா மரம் என்றார்கள்

 இந்த வீரா மரத்தைப்பற்றி கேள்வி பட்டதே இல்லையே என்று கூகுளில் இந்த மரத்தைப்பற்றிபடித்தேன்.

  "சர்வதேச மருத்துவ மரம்" என்றும் பல நோய்களை குணபடுத்தும் மருத்துவ மரம் என்றும், உயிர் வேலியாக வளர்க்கலாம் என்றும் போட்டு இருக்கிறது.

அம்மன் கோவிலில் இந்த மரம் இருப்பது சிறப்பு. அம்மன் தீராநோயை தீர்த்து வைப்பாள்.


நன்றி- கூகுள்

பழங்களும் மருத்துவத்திற்கு பயன்படுமாம்.

 கோயிலில் பூச்சொரிதல் விழா, மற்றும் பொங்கல் விழா எல்லாம் சிறப்பாக நடக்குமாம்.                    மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மி

                                                       வாகனங்கள்
                                           சப்த கன்னியர்கள்

வேப்பமரமும் இருக்கிறதுகோயில் திருக்குளம் வெள்ளை  தாமரை பூத்து இருக்கிறது குளத்தின் எதிரே அரசமரம், மேடை முழுவதும் நாகங்கள், ஐயனார் சிலை, மற்றும் ஒரு பெண் தெய்வ சிலை வைத்து இருக்கிறார்கள். 

                          படி எல்லாம் சேதமடைந்து இருக்கிறது.

 மணி மேடையில் ஆடு அழகாய் அமர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறது வருவோரை.

அம்மன் தரிசனம் ஞாயிறு கிடைத்தது மகிழ்ச்சி.ஞாயிறு அம்மன் வழிபாட்டுக்கு உகந்த நாள் என்பார்கள். நினைத்தே பார்க்காமல் கிடைத்த தரிசனம். அம்மா எல்லோருக்கும் மனபலம், மன அமைதி, மன நிறைவு உடல் ஆரோக்கியம் அருள்வாய் அம்மா!நவராத்திரிக்கு மகன் செய்த சாய் கதையை அரிசோனா சாய் கோயிலில் புதுவருட வாழ்த்தாக போட்டு இருக்கிறார்கள். இந்தி, தெலுங்கு , தமிழ் என்று மூன்று மொழிகளிலும்  வாழ்த்து போட்டு இருக்கிறார்கள்.

சாய் பக்தர் அனுப்பியது என்று. புது வருடத்திற்கு பாபாவின் ஆசியும் கிடைத்தது  மனதுக்கு  மகிழ்ச்சி.

விழாக்கள் தரும் மகிழ்ச்சி என்று நவராத்திரிக்கு போட்ட பதிவில் இந்த காணொளி பார்த்து இருப்பீர்கள்.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

 1. அனைவருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
   உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு

 2. ​மருங்காபுரி...! பழைய சிறுவர் கதைகளிலும், தமிழ்ப்பப்படங்களிலும் மன்னர்கள் ஆட்சி செய்யும் ஊர் பெயர் போல இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   மருங்காபுரி என்ற பெயரை படித்தவுடன் நான் நினைத்ததும் அப்படித்தான். மகனிடம் சொன்னேன் அம்பிலிமாமா கதையில் மருங்காபுரி இளவரசி, இளவரசன் என்று எல்லாம் கதையில் பேர் வரும் என்று .

   நீக்கு
 3. அழகிய படங்கள்.  கோவில் தளம் சலவைக்கல்லால் செய்யப்பட்டிருப்பது உறுத்துகிறது!  விவரங்கள் அறிந்துகொண்டேன்.  காணொளி பின்னர் மொபைலில் கேட்கவேண்டும்.  மகனின் பாடல் கோவில்களில் வாழ்த்தாக பாடப்படுவது சிறப்பு.  வாழ்த்துகள்.  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் தளம் சலவைக்கல்லால் செய்யப்பட்டிருப்பது உறுத்துகிறது! //

   இப்போது எல்லாம் கோயில்கள் இப்படித்தானே இருக்கிறது.
   காணொளி "மேரா சாய்" வசனம் மகன் நவராத்திரிக்கு செய்து இருந்தான் பார்த்து இருப்பீர்கள். அதை கோவில் நிர்வாகம் அனுப்ப சொல்லி புதுவருட வாழ்த்து சேர்த்து இருக்கிறார்கள்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

   நீக்கு
 4. ஆலயப் படங்கள் அனைத்தும் அழகு.

  நம் ஊரில்தான் எத்தனை கோவில்கள்... ஒவ்வொரு கோயிலும் குளங்களோடு.

  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன் வாழ்க வளமுடன்

   ஆலயப் படங்கள் அனைத்தும் அழகு.//

   நன்றி.
   நம் ஊரில்தான் எத்தனை கோவில்கள்... ஒவ்வொரு கோயிலும் குளங்களோடு//

   நிறைய அழகிய கோயில்கள் இருக்கிறது பார்க்க.
   புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  நலமா? அங்கு குளிர் எப்படி உள்ளது.? தங்களுக்கும், தங்கள் மகன், மற்றும் மகள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அருள் தரும் ஸ்ரீ பூத நாயகி அம்மனை தரிசித்துக் கொண்டேன்.

  கோவிலின் தலவிருட்சம் பற்றிய விபரம் தெரிந்து கொண்டேன். மரங்களின் படங்கள் அழகாக இருக்கிறது. அம்மன் கோவிலில் வேப்பமரமும் அமைந்திருப்பது சிறப்பு.

  துவரங்குறிச்சி என்றதும் அதன் அருகில் காரைப்பட்டி என்றொரு சிற்றூர் என் நினைவுக்கு வந்தது. அங்கு எங்கள் மாமாதாத்தா ஒருவர் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் எங்கள் அம்மாவுடன் ஒரிரு தடவைகள் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளோம். அப்போது துவரங்குறிச்சி சந்தைக்கு எங்களை தாத்தா அழைத்துச் சென்றிருக்கிறார். இது அந்த துவரங்குறிச்சியா என்றும் தெரியவில்லை. ஏதோ இந்த பழைய நினைவுகள் தங்கள் பதிவை பார்த்ததும் வந்தன.

  தங்கள் மகனுக்கும் அவர் பாடிய பாடல் இன்றைய புத்தாண்டு தினத்தில் வாழ்த்தாக இடம் பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   //நலமா? அங்கு குளிர் எப்படி உள்ளது.?//

   இடுப்பு கால்வலியோடு நலமாக இருக்கிறேன்.
   குளிர் மற்ற ஊர்களை போல இல்லை. தாங்கும் அளவு இருக்கிறது.

   //தங்களுக்கும், தங்கள் மகன், மற்றும் மகள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

   நன்றி.
   துவரங்குறிச்சி சந்தை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். பதிவு உங்கள் மாமா தாத்தா நினைவுகளை கொண்டு வந்தது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   //தங்கள் மகனுக்கும் அவர் பாடிய பாடல் இன்றைய புத்தாண்டு தினத்தில் வாழ்த்தாக இடம் பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.//

   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.


   நீக்கு
 6. தரிசனப் படங்கள் எல்லாமே அருமை தகவல்கள் சிறப்பு.

  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 7. படங்கள் அருமை...

  அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   புத்தாண்டு வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. கோமதிக்கா புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும். பேரன் கவினுக்கும் சொல்லிவிடுங்கள்!!!!

  முதல் இரு படங்கள் கோபுரங்கள் அழகோ அழகு!!!! எனக்குக் கோபுரங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும். பேரன் கவினுக்கும் சொல்லிவிடுங்கள்!!!!//

   நன்றி கீதா, கவினுக்கு சொல்லிவிட்டேன்.

   //முதல் இரு படங்கள் கோபுரங்கள் அழகோ அழகு!!!! எனக்குக் கோபுரங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும்//
   நன்றி கீதா.

   எனக்கும் கோயில் மூலவர் விமானங்கள், வெளி கோபுரங்கள் எடுக்க பிடிக்கும்.


   நீக்கு
 9. ஆலமரமா அது? மரமும் அதைச் சுற்றிய மேடையைப் பார்த்ததும் அதில் அமர்ந்து பின்னில் உள்ள சிறிய மலைகளை ரசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது

  வீரா மரம் // இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். உலகில் எத்தனை எத்தனை செடிகள் மரங்கள் அதுவும் மருத்துவ குணத்தோடு!!! இயற்கை நம்மை அரவணைத்துக் கொண்டு பாதுகாக்கிறது. நாம் தான் அதிலிருந்து விலகிச் செல்கிறோம்....

  படங்கள் ரொம்ப நல்லா இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதுதான் கவனித்தேன், அரசமரத்திற்கு ஆலமரம் என்று எழுதி விட்டேன் என்று. நன்றி.

   //மரமும் அதைச் சுற்றிய மேடையைப் பார்த்ததும் அதில் அமர்ந்து பின்னில் உள்ள சிறிய மலைகளை ரசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது//

   எனக்கும் பிடிக்கும் கீதா.

   //வீரா மரம் // இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். //

   நானும் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன் கீதா.

   //உலகில் எத்தனை எத்தனை செடிகள் மரங்கள் அதுவும் மருத்துவ குணத்தோடு!!! இயற்கை நம்மை அரவணைத்துக் கொண்டு பாதுகாக்கிறது. நாம் தான் அதிலிருந்து விலகிச் செல்கிறோம்....//

   ஆமாம். கிராமத்து பெரியவர்கள் அதன் பயன்பாட்டை அறிந்து இருப்பார்கள்.

   //படங்கள் ரொம்ப நல்லா இருக்கு//

   எல்லாம் அலைபேசியில்தான் எடுத்தேன்.

   நீக்கு
 10. மதுரை வீரன் வெள்ளையம்மாள் பொம்மி வேறு கோயிலிலும் இருக்காங்களோ நீங்க போட்டிருக்கீங்களோ கோமதிக்கா....அல்லது இதே கோயிலா...

  சிறு தெய்வங்கள், வாகனங்கள், கோயில் வளாகம் பெரிதாக இருப்பது எல்லாமே சிறப்பாக இருக்கு அக்கா உங்கள் படங்களும்..

  கோயிலின் வெளியே பச்சை பசேல் தாமரைக் குளம் கண்ணிற்கு விருந்து.

  கிட்டப்பார்வை தாமரைக் குளம் இன்னும் ஈர்க்கிறது

  அது ஆலமரம் தான் இல்லையா...பரவால்ல நான் தூரத்துப் பார்வை ஃபோட்டோவையும் கண்டுபிடித்துவிட்டேனே!!!!!

  மணி மேடையும் ஆடும் க்யூட்.

  ஓ ஞாயிறு அம்மனுக்கு விசேஷ நாளா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை வீரன் வெள்ளையம்மாள் பொம்மி வேறு கோயிலிலும் இருக்காங்களோ நீங்க போட்டிருக்கீங்களோ கோமதிக்கா....அல்லது இதே கோயிலா...//

   இந்த கோயில் இதுதான் முதல் தடவை போகிறேன்.
   கிராம கோயில்களில் பெரும்பாலும் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாள் இருப்பார்கள் .

   //சிறு தெய்வங்கள், வாகனங்கள், கோயில் வளாகம் பெரிதாக இருப்பது எல்லாமே சிறப்பாக இருக்கு அக்கா உங்கள் படங்களும்..//

   கோயிலில் விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடப்பதால் கோயில் நன்றாக இருக்கிறது.

   கிட்டப்பார்வை தாமரைக் குளம் இன்னும் ஈர்க்கிறது

   //அது ஆலமரம் தான் இல்லையா...பரவால்ல நான் தூரத்துப் பார்வை ஃபோட்டோவையும் கண்டுபிடித்துவிட்டேனே!!!!!

   மணி மேடையும் ஆடும் க்யூட்.//
   அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொல்வது மகிழ்ச்சி கீதா.

   //ஓ ஞாயிறு அம்மனுக்கு விசேஷ நாளா?//

   ஆமாம்.

   நீக்கு
 11. ஆமாம் கோமதிக்கா உங்கள் மகன் செய்த சாய் பற்றிய கதையும் ஒளி ஒலி நவராத்திரி பதிவில் பார்த்திருக்கிறேன்..

  //நவராத்திரிக்கு மகன் செய்த சாய் கதையை அரிசோனா சாய் கோயிலில் புதுவருட வாழ்த்தாக போட்டு இருக்கிறார்கள். இந்தி, தெலுங்கு , தமிழ் என்று மூன்று மொழிகளிலும் வாழ்த்து போட்டு இருக்கிறார்கள்.//

  பாராட்டுகள் வாழ்த்துகள்!

  சாய் பக்தர் அனுப்பியது என்று. புது வருடத்திற்கு பாபாவின் ஆசியும் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி.//

  ஆமாம். கண்டிப்பாக எப்போதும் அவர்கள் எல்லோரும் பேரன் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நல்ல விஷயங்கள் நிறைய செய்கிறீர்கள் இறைவனின் ஆசியுடன் நல்லபடியாக இருப்பார்கள் கோமதிக்கா

  புத்தாண்டு வாழ்த்துகள்!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா உங்கள் மகன் செய்த சாய் பற்றிய கதையும் ஒளி ஒலி நவராத்திரி பதிவில் பார்த்திருக்கிறேன்..
   பாராட்டுகள் வாழ்த்துகள்!//

   நன்றி கீதா .

   //ஆமாம். கண்டிப்பாக எப்போதும் அவர்கள் எல்லோரும் பேரன் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நல்ல விஷயங்கள் நிறைய செய்கிறீர்கள் இறைவனின் ஆசியுடன் நல்லபடியாக இருப்பார்கள் கோமதிக்கா//

   அது போதும் கீதா . நன்றி கீதா.

   உங்கள் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் விரிவான பல பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி கீதா.

   நீக்கு
 12. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
  கோவில் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 13. புதிதாய் இன்று ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயிலைப் பற்றித் தெரிந்து கொண்டேன்..

  அனைவரது உடல் உபாதைகளையும் தீர்த்து வைத்து அன்னை நலம் அருள்வாளாக!..

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //புதிதாய் இன்று ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயிலைப் பற்றித் தெரிந்து கொண்டேன்..

   எனக்கும் இந்த கோயில் புதிய கோயில்தான்.

   //அனைவரது உடல் உபாதைகளையும் தீர்த்து வைத்து அன்னை நலம் அருள்வாளாக!..//
   அன்னையிடம் அதை தான் வேண்டினேன். அவள் கோயிலில் நோயை நீக்கும் மரமும் இருக்கிறது. முடிந்தால் ஒரு முறை தரிசனம் செய்து வாருங்கள் . நோயை குணப்படுத்துவாள்.
   வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

   நீக்கு
 14. இடது கணுக்காலில் சிலந்தி கடித்ததனால் ஏற்பட்ட புண், வலி, அரிப்பு வீக்கம், உடல் முழுதும் தடிப்பு இவற்றால் மூன்று மாதங்களுக்கும் மேலாக துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.. புண்கள் ஆறி விட்டாலும் உடல் அரிப்பும் தோலில் தடிப்பும் இன்னும் தீரவில்லை..

  சித்த மருத்துவம் செய்து கொண்டிருக்கின்றேன்.. இன்னும் முழுமையான குணம் கிடைக்க வில்லை.. உள்ளம் நொந்து தவிக்கின்றேன்..

  பிரார்த்தனையில் தான் பொழுது ஓடிக் கொண்டிருக்கின்றது..

  இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிரமம்..

  விராலிமலைப் பதிவில் தங்களைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து விட்டது..

  எனக்காகவும் தாங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலந்தி கடித்ததனால் இவ்வளவு விளைவு ஏற்படுமா? இது ஏதாவது விஷச்சிலந்தியா? துரை செல்வராஜு அண்ணா ... உங்கள் நிலை படித்து மிகவும் வருத்தப்பட்டேன். உங்களுடைய உடல் நிலை வெகு விரைவில் முற்றிலும் குணமாகி பழைய நிலையை அடைந்த உற்சாகத்துடன் இருக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

   நீக்கு
  2. தங்களது கனிவான மறுமொழிக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

   நீக்கு
  3. புண்கள் ஆறி விட்டாலும் உடல் அரிப்பும் தோலில் தடிப்பும் இன்னும் தீரவில்லை..//

   விரைவில் இறைவன் அருளால் நலமாகும்.

   //சித்த மருத்துவம் செய்து கொண்டிருக்கின்றேன்.. இன்னும் முழுமையான குணம் கிடைக்க வில்லை.. உள்ளம் நொந்து தவிக்கின்றேன்..//

   சித்தா கொஞ்சம் தாமதமாகும், ஆனால் பூரண நலம் பெறலாம்.
   பிரார்த்தனை கை கொடுக்கும்.

   //இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிரமம்..//
   வீட்டில் உள்ளவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருக்க நம் உடல்நலத்தைப் பார்த்து கொள்ள வேண்டும். விரைவில் நலம் அடைவீர்கள் மந்திரமாவது நீறு பாடலை பாடி திருநீறு பூசுங்கள் சரிசெய்வார் வைத்திய நாதன்.


   //எனக்காகவும் தாங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்..//

   கண்டிப்பாய் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
   வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 15. தங்களது கனிவான மறுமொழிக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..//
  ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவான வார்த்தையால் ஆறுதல் சொல்லி கொள்வோம். விரைவில் உடல்நலம் அடிவிர்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.ஸ்ரீராமும் பிரார்த்தனை செய்கிறேன் என்கிறார்.
  மனதை தளரவிடாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. @ ஸ்ரீராம்..

  // சிலந்தி கடித்ததனால் இவ்வளவு விளைவு ஏற்படுமா? இது ஏதாவது விஷச்சிலந்தியா?.. //

  தங்கள் அன்பினுக்கும் ஆறுதல் மொழிக்கும் நன்றி ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு