சனி, 14 மே, 2022

திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)
முந்திய பதிவு  திருக்கருகாவூர்  .  திருக்கருகாவூருக்கு  அடுத்து போன கோயில்  "திருக்கடவூர் மயானம்."

  மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களில் இத்தலம் 107 வது தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும்  தேவாரம்   பாடல்கள் பாடப் பெற்ற தலம்.
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் அருகே கிமீ தொலைவில் இருக்கிறது இத் தலம். இடது பக்கம் பெரிய நந்தவனம் இருக்கிறது.

இது அம்மன் சன்னதி இருக்கும் இடம்  கோபுர வாசலுடன் நல்ல பெரிதாக இருக்கிறது.

பிரம்மபுரீசுவரர்  இருக்கும் கோபுர வாசல்.

ஒவ்வொரு யுகத்திலும் சிவபெருமான் பெரும் பிரளயத்தை உண்டாக்கி உலகத்தை அழித்து விடுவாராம், அப்போது பிரம்மாவும் அழிந்து போவாராம். மீண்டும் புதுயுகம் துவங்கும் போது பிரம்மாவை  உண்டாக்கி ஜீவராசிகளை உண்டாக்க ஞான உபதேசம் செய்வாராம் சிவன்.   அதனால் சுவாமியின் பெயர் பிரம்மபுரிஸ்வரர்.

பிரம்மாவை அழித்ததால் கடவூர்மயானம் என்றும், அவரை உயிர்ப்பித்து ஞான உபதேசம் செய்தபடியால் திருமெய்ஞானம் என்ற பெயரும் உண்டு என்று தலவரலாறு கூறுகிறது.

கொடிமரம் இல்லை இந்த கோயிலில் , நந்தியும் பலிபீடமும் மட்டுமே உள்ளது. மாலை நாலுமணிக்கு போனோம். நடை திறந்து விளக்குகள் போட்டார் கோயில் மெய்காப்பாளர்
பிரம்ம தீர்த்தம், காசிதீர்த்தம் என்று அழைக்கப்படும் கிணறு உள்ள இடம்.    கிணறு இருக்கும்  இடத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வெயிலில் கால் சுடாமல் இருக்க வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

மார்க்கண்டேயர் தினம் சிவபூஜை செய்ய  காசியிலிருந்து  கங்கையை இத்தலத்தில் வரவழைத்துக் கொடுத்தாராம் சிவபெருமான். திருக்கடவூர்மாயன பிரம்மபுரீஸவரருக்கு இந்த நீராலால் அபிசேகம் கிடையாது திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கு மட்டுமே இந்த தீர்த்தம். 

இந்த கிணற்றில் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கை பெருகுவதாக ஐதிகம். அன்று மட்டும் பக்தர்கள்  நீராடலாம்.


அமிர்தகடேசுவரார் கோயிலுக்கு அபிசேக தீர்த்தம் இந்த கோயிலில் இருக்கும் கிணற்றிலிருந்து பெரிய குடத்தில்  மாட்டுவண்டியில்  எடுத்து செல்லப்படும்.  முன்பு போட்ட திருக்கடவூர்  பதிவில் அந்த படம்   போட்டு இருக்கிறேன்.


தங்கையும், நானும்
கோயிலின் உட்புறம்  உறவினர்கள் 
துவாரபாலகர்  கையில் அமர்ந்து இருக்கிறது கிளிகள் முகம் காட்ட வில்லை 


ஒலி பெருக்கி மேல் மறைந்து கொண்டது


கலசம் பக்கம் கிளியின் முகம் தெரியும்., மேலே கம்பியில் கருங்குருவி(இரட்டை வால் குருவி)

நால்வரும், சிவபெருமானும்
பெரிய பிரகாரம்
இங்கு உள்ள முருகன் கையில் வில்லோடு காட்சி தருவார்
சிங்காரவேலர் 
தேவார பதிகம்
பிரம்மபுரீஸ்வரர்


வில்வ மரம்
.
கோவில் பிரகாரம்
வாகனங்கள்
வாகனங்கள்  பழுது அடைந்து இருக்கிறது

ஒரு காலத்தில் திருவிழாக்களில் சுவாமியை சுமந்து சென்றவை
சுவாமி சன்னதி விமானம்
கல்வெட்டுக்கள்

பைரவர்
பெருமாள்
  

மலர்குழல் மின்னம்மை  , ஸ்ரீ ஆம்லகுஜநாயகி 

அடுத்து  அம்மன் சன்னதி போவோம். அதுவும் தனி கோயில் போல பெரிய சன்னதி .
அம்மன் கோயிலில் என்ன பார்த்தேன் என்பதையும்  சொல்கிறேன்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
_________________________________________________________________--


46 கருத்துகள்:

 1. அழகான படங்கள்.. திருமெய்ஞானத்திலும் கிளியாக, கருங்குருவியாக இறையருள் தொடர்கின்றது..

  ஓம் நம சிவாய..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   ஆமாம், எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்துவது போல த்தான் இந்த பறவைகள் கோயிலில் இருப்பதை உண்ர்கிறேன்.
   உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. சில முறை திருக்கடவூர் சென்றிருந்தும் இத்திருக்கோவில் சென்றதில்லை.  எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்று நீங்கள் சொல்லவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   இரண்டாவது படத்திற்கு கீழேயே போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம் பார்க்கவில்லை போலும் நீங்கள். திருகடவூரிலிருந்து 2. கி.மீ தூரத்தில் உள்ளது மிகவும் பக்கம் தான். அடுத்த முறை செல்லும் போது சென்று வாருங்கள். நாங்களும் திருக்க்டவூர் பல முறை சென்று இருந்தாலும் இந்த கோயில் இரண்டு , மூன்று தடவை தான் போய் இருப்போம்.
   திருக்கடவூர் திருக்குளம் நேரலையில் கும்பாபிஷேகம் அப்போது பார்த்தேன் மாயவரத்தில் இருக்கும் போது போனதே இல்லை. இந்த முறை போய் வந்தோம். அது சிறிது தொலைவில் இருக்கிறது.

   நீக்கு
 3. பிரம்மா பற்றிய தகவல்கள் புதிது. ஒவ்வொரு யுகத்திலும் மறுபிறப்பு எடுப்பாரா? சரஸ்வதி தேவி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யுகம் யுகமாய் தொடரும் பந்தம் என்றால் சரஸ்வதியும் தொடர்வார்தானே!

   நீக்கு
 4. கோவில் வாசலில் எவ்வளவு பெரிய கோலம்?  படங்கள் மனதை அள்ளுகின்றன.  ஒருகாலத்தில் நிறைந்த பக்தர் கூட்டம் எப்பதும் கோவிலை நிறைத்திருந்திருக்கும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு காலத்தில் கோவில் கோவிலாக இது போல பெரிய கோலங்களை அன்பர்கள் போட்டார்கள். ஒரு காலத்தில் இந்த கோயில்தான் சிரந்து விளங்கி இருக்கிறது. இப்பஒது அவசரமாக திருக்கடவூரில் திருமணம் முடித்து போய் விடுகிரார்கள் . இங்கு வந்து திருமணமானவர்கள் தரிசனம் செய்து போனால் நல்லது என்று தலவரலாற்று குறிப்பு சொல்கிறது.

   நீக்கு
 5. மலர்குழல் மின்னம்மை...  ஆஹா என்ன ஒரு பெயர்!   ஸ்ரீ ஆம்லகுஜ நாயகி...   முதல்முறை கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் , அழகான பெயர். ஆனால் ஸ்ரீ ஆம்லகுஜ நாயகிதான் எழுதி வைத்து இருக்கிறார்கள்
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 6. அழகான படங்களும், விடயங்களும் அருமை.

  இன்று எல்லா பதிவர்களுமே புகைப்படங்கள்தான் நாளை எனது பதிவும் புகைப்படங்களே...

  நீண்ட பிரகார புகைப்படம் அழகு இந்த கல்லில் வெருங்காலோடு ஒருமுறை அல்லது மூன்றுமுறை பிரகாரம் என்ற பெயரில் சுற்றி வருவது காலில் அக்குபஞ்சர் சிகிச்சைக்காக... இது பலருக்கும் தெரிவதில்லை.

  இன்று பணம் பெருத்ததாலும், நாகரீகம் வளர்ந்தது என்ற பெயரில் மார்பிள் கல், கிராணைட் கல், அழகிய டைல்ஸ் பதித்து அதில் நடந்து வழுக்கி விழுந்து செல்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   //இன்று எல்லா பதிவர்களுமே புகைப்படங்கள்தான் நாளை எனது பதிவும் புகைப்படங்களே..//

   ஓ ! அப்படியா நல்லது. இன்று இரவுதான் பதிவுகளை படிக்க வேண்டும். உறவினர்கள் வருகிறார்கள் வீட்டுக்கு.

   //நீண்ட பிரகார புகைப்படம் அழகு இந்த கல்லில் வெருங்காலோடு ஒருமுறை அல்லது மூன்றுமுறை பிரகாரம் என்ற பெயரில் சுற்றி வருவது காலில் அக்குபஞ்சர் சிகிச்சைக்காக... இது பலருக்கும் தெரிவதில்லை.//

   ஆமாம், நான் மாயவரத்தில் இருக்கும் போது தினம் கோவிலை வலம் வருவேன். அதுதான் எனக்கு நடைபயிற்சி.

   ஆமாம் , இப்போது கல தரைகள் இல்லை எங்கும் நீங்கள் சொல்வது போலவே இருக்கிறது வய்தானவர்கள் மிகவும் கவன்மாக நடக்க வேண்டும். குருக்கள் நிறைய தடவை கீழே விழுந்து இடுப்பு எலும்பை உடைத்து கொண்ட வரலாறு உண்டு. படி எல்லாம் வழ வழ என்று டைல்ஸ் ஒட்டி இருந்தார்கள், மக்கள் படியில் விளக்குகள் வைத்து எண்ணெய் வேறு ! பிரகு எப்படி இருக்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 7. படங்கள் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன. எங்களை கைபிடித்து அழைத்து சென்று கோவிலைச் சுற்றிக்காட்டுவது போல் இருக்கிறது.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
   கோயிலை நன்றாக சுற்றிப்பார்த்தீர்களா ! நன்றி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. இந்தக் கோயிலுக்குப் போனதில்லை. அழகான படங்கள். எங்கே போனாலும் பறவைகளும் உங்களைத் தொடர்கின்றன. பெரிய கோயிலாக இருக்கும் போலத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   பெரிய கோயில்தான். நாங்களே அடிக்கடி போனதில்லை. இரண்டு மூன்று தடவை போய் இருக்கிறோம். இந்த முறை உறவினர்கள் அழைத்து போனதால் போனேன்.
   எங்கும் கண்கள் பறவைகளை தேடுகிறது, தேடும் கண்களுக்கு கிடைத்து விட்டால் மகிழ்ச்சி.
   திருக்கடவூர் போகும் வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. கோமதிக்கா முதல் படமே அட்டகாசமாக இருக்கிறது அந்தக் கோணம் வ்யூ....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
   முதல் படம் பிடித்து இருக்கிறதா? மகிழ்ச்சி.

   நீக்கு
 10. திருக்கடவூர் மயானம் - பெயரே வித்தியாசமாக இருக்கிறதே. மயானம் என்பதைப் பார்த்ததும் பதிவு ஏதோ அதைப் பற்றி என்று நினைத்தேன் அப்புறம் போன பதிவில் நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அடுத்து கோயில் பற்றிச் சொல்கிறேன் என்று அப்போதுதான் உறைத்தது கோயில் என்று!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருக்கடவூர் மயானம் பேர் காரணம் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.
   அழகான பழமையான கோயில். இந்து அறநிலை துறையிடம் இருக்கிறது கோயில். ஆதீனத்தை சேர்ந்த திருக்கடவூர் கோயில்கள் எல்லாம் மிக அழகாக புதுமையாக இருக்கிறது. இந்த கோயில் மட்டும் பொலிவு இழந்து இருக்கிறது.

   நீக்கு
 11. இரண்டாவது படமும் செம....

  திருகடவூர் பற்றிய புராணக் கதை தலவரலாறு அறிந்ததில்லை.

  கொடிமரம் இல்லாத கோயிலா அட! மிகப் பழைய கோயில் என்று படங்களில் தெரிகிறது. பராமரிப்பும் அவ்வளவு இல்லை என்று தெரிகிராது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடிமரம் இல்லா கோயில்தான். பழமையான பெரிய கோயில்.
   மக்கள் அதிகம் போவது இல்லை. கோயில் மிக சுத்தமாக இருக்கிறது.
   கடல் காற்று எவ்வளவு பராமரித்தாலும் விரைவில் பழைய தோற்றம் கொடுத்து விடும். மழை அடிக்கடி பெய்வதால் பாசம் பிடித்து விடும் விரைவில்.

   கும்பாபிஷேகம் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டது. தல வரலாறுகள் ஒவ்வொரு கோயிலுக்கும் வேறுபடும்.

   நீக்கு
 12. கொடிமரம் இல்லாத கோயிலா? ஆச்சரியம். கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயில் என்பது தெரிகிறது படங்களிலிருந்து. பராமரிப்பும் இல்லை என்றும் தெரிகிறது. கோயில் கோலம் பிரம்மாண்டம் அழகாகப் போட்டிருக்கிறார்கள். நேர்த்தியாகவும்.

  உங்கள் தங்கை ஜாடை வித்தியாசகாகவும் உங்களை விட உயரமாகவும் இருக்கிறார். தங்கை எங்கள் உறவினர் போல இருக்கிறார். கிட்டத்தட்ட இதே ஜாடையில் ஒருவர் உண்டு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான பெரிய கோலம் போட்டவர்கள் யாரோ! போட்டு பல காலம் ஆகி விட்டது.

   தங்கை உறவினர் போல இருக்கிறாரா! அவளிடம் சொல்கிறேன்.

   நீக்கு
 13. கிளிகள் முகம் பின் பக்கம் பளிச்சென்று தெரிகின்றன துவாரபாலகர் தோல்வியாதி வந்தது போல் இருக்கிறார் எல்லாம் உதிர்ந்து. அவர் கையில் கிளிகள் பொருத்தமாக இருக்கின்றன அந்த இடத்தில் அம்மன் இருந்தால் இன்னும் உண்மையாக அப்படியெ இருக்கும்.

  கலசத்தின் அருகில் கிளி இருப்பது தெரிகிறது ஆனால் சூரிய ஒளி அதிகம் படுகிறதால் கொஞ்சம் டல்லாகி இருக்கு என்று நினைக்கிறேன். கருங்குருவி தெரிகிறது.

  பிராகாரம் நல்ல பெரிதாக இருக்கிறது. ஒரு சுற்று சுற்றினாலே நல்ல நடைப்பயிற்சி!

  வாகனங்கள் பழுதடைந்து அவை இருக்கும் மண்டபமும் அதற்கு அடுத்து இருக்கும் சன்னதிகளும் கொஞ்சம் கண்டு கொள்ளுங்கள் என்பது போல் இருக்கிறது.

  அனைத்துப் படங்களும் அருமை. தெளிவாக இருக்கின்றன. விவரங்களும் அருமை கோமதிக்கா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிளிகள் முகம் காட்டி இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்கும்.

   //அந்த இடத்தில் அம்மன் இருந்தால் இன்னும் உண்மையாக அப்படியெ இருக்கும்.//

   முன்பு அம்மன் கையில் புறா அமர்ந்து இருந்த படம் எடுத்தேன்.

   வெளிச்சம் சரியாக இல்லை அதனால் கிளி முகம் தெரியவில்லை.

   தினம் நடைபயிற்சி செய்ய ஏற்ற பிராகாரம்தான்.
   அனைத்து படங்களையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 14. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி,

   நீக்கு
 15. அழகான கோவில். பராமரிப்பில்லாமல் எத்தனை எத்தனை கோயில்கள். எல்லாவற்றையும் சீர் செய்யும் நாள் எந்நாளோ? உங்கள் பயணம் மூலம் நாங்களும் தகவல்கள் அறிகிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம், வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   ஆமாம், அழகான கோயில்தான்.
   திருக்கடவூர் போலவே இருக்கும்.
   நேரம் வர வேண்டும் கோயில் பராமரிப்புக்கு.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. எவ்வளவு பிரம்மாண்டமான் கோவில். நான் இதுவரை கேள்விப்படாத கோவில்.

  படங்கள் மிக அழகு. இந்த மாதிரி கோவில்களெல்லாம் அதைச் சுற்றியுள்ள மக்கள் திரளால் பேணப்படும். பலர் ஊரைவிட்டுச் சென்றுவிடுகிற காலத்தில் நலிவடைவதும் மவிர்க்க இயலாத்து.

  சமஸ்கிருத, அழகியதமிழ்ப் பெயர்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   ஆலய தரிசனம் முடித்து வந்து விட்டீர்களா?
   தரிசனம் நன்றாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன்.


   //படங்கள் மிக அழகு. இந்த மாதிரி கோவில்களெல்லாம் அதைச் சுற்றியுள்ள மக்கள் திரளால் பேணப்படும். பலர் ஊரைவிட்டுச் சென்றுவிடுகிற காலத்தில் நலிவடைவதும் மவிர்க்க இயலாத்து.//

   ஆமாம் உண்மை.
   உள்ளூர் மக்கள் கோவிலுக்கு வந்தாலே கோயில் நன்றாக இருக்கும்.
   கோயில்களுக்கு விளம்பரமும் தேவை படுகிறது இப்போது.
   அம்மனின் பேர்கள் அருமைதான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. விசாலமான கோவிலாக இருக்கிறது. நிறைந்த படங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள் கண்டு கொண்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. பதினாறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன். மாலை கோவில் நடை திறந்தவுடன் சென்றோம். எங்களைத்தவிர வேறு யாரும் இல்லை. அங்கே பணிபுரிந்த ஒருவர் தனக்கு ஏதாவது பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்தபடி எங்கள் பின்னாலேயே வந்தார். இப்போதைய நிலைமை எப்படியோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் இணையம் திண்ணை, வாழ்க வளமுடன்

   //எங்களைத்தவிர வேறு யாரும் இல்லை. அங்கே பணிபுரிந்த ஒருவர் தனக்கு ஏதாவது பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்தபடி எங்கள் பின்னாலேயே வந்தார். இப்போதைய நிலைமை எப்படியோ தெரியவில்லை.//

   இப்போதும் அப்படித்தான் எங்களை தவிர யாரும் இல்லை. முன்பு எங்கள் உறவினர் போன போது கோயிலுக்கு விளக்கு போட எண்ணெய் வாங்க காசு கேட்டாராம்.
   தான் தான் கோயிலை பார்த்து கொள்கிறேன் காசு கொடுங்கள் என்றாராம்.
   எங்களுக்கு "கங்கை தீர்த்தம்" என்று சுவாமி சன்னதி கிணற்றில் தண்ணீர் எடுத்து கொடுத்தார். எங்களுக்கு தெரியும் அது காசி தீர்த்தம் இல்லை என்று . எங்களுக்கு அடுத்து திருப்பூரிலிருந்து ஒரு குழுவினர் வந்தார்கள், அவர்க்ளிடமும் அப்படி சொல்லி காசு வாங்கி விட்டார்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 19. அன்பின் கோமதிமா,
  வாழ்க வளமுடன்.
  விட்டுப் போன பதிவுகளைப் படித்து வருகிறேன்.

  மெய் ஞானம் ,பெயர் அருமையாக இருக்கிறது.
  பிரம்மா கடந்ததால் மயானம் ஆகிவிட்டதா.
  சிவனாருக்கு அதுவும் ஒரு நற்ஸ்தலம் தானே.
  கோவில் முன் கோலம் எவ்வளவு பிரம்மாண்ட மாக இருக்கிறது!!!
  மிக அருமை மா.

  பல அரசர்களால் கட்டப் பட்டிருக்க வேண்டும்.
  செங்கல் சுண்ணாம்பு எல்லாம் பிற்காலத்தில் வந்தவை தானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   உங்களுக்கு என் பதிவுகளை காட்டவில்லை போலும் என்று நினைத்தேன் அக்கா.

   பாடல் பெற்ற புண்ணிய தலம் தான்.
   இப்படி கோலங்கள் போடுபவர்கள் வாழ்க அளமுடன் என்று வாழ்த்த வேன்டும். இதுவும் ஒரு தொண்டு.

   கருங்கல்லால் ஆன பழைய கோயில்தான். பழுது பார்க்கும் போது கொஞ்சம் சிமெண்ட் பூச்சு உள்ளது.

   நீக்கு
 20. கிளிகளும் செழிப்பு. அந்த இரட்டைவால் கருங்குருவியு வெகு அழகு.
  கோபுரம், பிரம்மாண்ட பிரகாரம்,துவார பாலகர்கள் என்று அத்தனையும் அருமை.

  நீங்களும் தங்கையும் இருக்கும் படம் கச்சிதமாக அழகாக இருக்கிறது.
  இந்த மாதிரி புனித பயணங்கள்
  மனதுக்குத் தெம்பு கொடுக்கும்.

  நாம் எல்லாம் மீள்வது இறைவன் கையில்.
  செய்தியில் விக்கிரகங்களை திருடியவர்கள்
  பயங்கரக் கனவு கண்டதால் திருப்பிக் கொண்டு வைத்து விட்டார்கள் என்று
  படித்தேன்.
  கடவுள் அனைவரையும் பயமுறுத்தா விட்டாலும்
  நினைவு கொள்ள வைத்தால் நலமாக
  இருக்கும்.

  பரம்பரைப் பொக்கிஷங்களை இப்படி கவனமில்லாம் இழக்கிறோமே
  என்று வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிளிகளுக்கு புன்னைமரம், அத்திமரம், கோவை பழம் கிடைக்கிறது நந்தவனத்தில் அதுதான் இத்தனை செழிப்பு. கருங்குருவிக்கு பூச்சிகள் நிறைய கிடைக்கிறது. இறைவன் கோயிலில் குறைவின்றி மகிழ்ச்சியாக இருக்கிறது.
   சொந்தங்களுடன் பயணம் செய்த போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கை, கால் , இடுப்பு வலி தெரியவில்லை.
   நாம் மீள்வது இறை அருளால்தான்.

   இப்படி தப்பு செய்பவர்களை திருந்தும் படி இறைவன் செய்தால் நல்லது. நாட்டில் கெட்டவர்களே இருக்க மாட்டார்கள். குற்றமே இருக்காது.

   பழமையான கோயிலை அதன் பழமை போக்காமல் அப்படியே புதுபித்தால் நல்லது.

   நீக்கு
 21. நந்தியும் மிக அழகு. கல்வெட்டு படிக்கத் தெரிந்தால் எத்தனை நன்மை!!

  நீங்கள் சென்று வந்து பதிவிட்டதால் ஒரு புண்ணியத் தலம் சென்ற
  நன்மை கிடைத்தது தங்கச்சி வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். கல்வெட்டு படிப்பு சாருக்கு உண்டு.
   கோயில்களில் சில கல்வெட்டுக்களை படித்து சொல்வார்கள்.
   இன்னும் போய் வந்த கோயில்கள் இருக்கிறது.
   போட வேண்டும் ஒவ்வொன்றாக .
   இறைவன் எனக்கு மனபலத்தை, தேகபலத்தை கொடுக்க வேண்டும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 22. 2017இல் கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்றபோது இருட்டிவிட்டது. என்றாலும் கோயிலில் ஒரு ஒளிப்படத்தை எடுத்து அதனை திருக்கடையூர்மயானம்பிரம்மபுரீஸ்வரர்கோயில் என்ற தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையில் இணைத்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   நீங்கள் இந்த கோயிலுக்கு சென்று வந்ததும், அதன் விவரங்களை விக்கிப்பீடியாவில் இணைத்துள்ள விவரத்திற்கும் நன்றி.

   நீக்கு
 23. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் மிக அழகு. முதல் படம் மண்டபத்தின் நடுவில் கோவிலோடு கோபுரமும் தெரிகிற மாதிரி கலை நுணுக்கமாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அடுத்தடுத்த வந்த படங்களும் கலை கண்ணோட்டத்துடன் அருமையாக எடுத்திருக்கிறீர்கள். . கொடிமரம் இல்லாத அதுவும் பெரிய கற்கோவில் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது. நந்திகேஷ்வரர் ஜம்மென்று அழகாக உள்ளார்.

  கோவிலின் தல வரலாறு அறிந்து கொண்டேன். கோவில் நன்கு பெரிதாக உள்ளது. பிரம்மபூரீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டேன். அதுவும் நீங்கள் எடுத்த கோணம் கதவின் ஜன்னல் வழியாக நன்றாக உள்ளது.

  கிளிகளின் படங்கள் அனைத்தும் அருமை. கேமராவுக்கு முன் முகம் காட்டாத கிளிகள் ஒலிப் பெருக்கியின் பின்புறம் சென்று தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டபடி தன் குரலால் ஏதாவது பாட்டு பாடுகிறதா? பறவைகளின் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

  வில்லோடு காட்சி தரும் முருகனை வணங்கி கொண்டேன். அங்குள்ள வில்வ மரமும் கண்களுக்கு குளிர்ச்சி.

  தங்கள் தங்கையும், தாங்களும் உள்ள படம் நன்றாக உள்ளது. உடல்நிலை சரியில்லாத அயற்சி தங்கள் முகத்தில் தெரிகிறது. தற்போது பூரண குணம் அடைந்து விட்டீர்களா? உடல் நலனை பார்த்துக் கொள்ளவும். தங்கள் பதிவு எங்களையும் தங்களுடன் வந்து கோவிலைச்சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   கோவில் படங்களை ரசித்து பார்த்து பாராட்டியது மகிழ்ச்சி, நன்றி. நீங்கள் எல்லோரும் கொடுக்கும் ஊக்கத்தால் படம் எடுப்பதில் கவனம் செலுத்துகிறேன்.
   //பிரம்மபூரீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டேன். அதுவும் நீங்கள் எடுத்த கோணம் கதவின் ஜன்னல் வழியாக நன்றாக உள்ளது.//

   கதவு அடைத்து இருந்தாலும் இறைவனை பார்க்க வசதி செய்து இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.
   முன்பு ஒரு கோயிலில் ஸ்பீக்கர் குள் எட்டி பார்த்து கொண்டு இருக்கும் படம் எடுத்து முகநூலில் , பதிவில் பதிந்தேன்.
   கிளி பாட்டு கேட்குதா என்று கேட்டு இருந்தேன்.
   நீங்களும் அது போலவே கற்பனை செய்து இருக்கிறீர்கள்.

   //தங்கள் தங்கையும், தாங்களும் உள்ள படம் நன்றாக உள்ளது. உடல்நிலை சரியில்லாத அயற்சி தங்கள் முகத்தில் தெரிகிறது. தற்போது பூரண குணம் அடைந்து விட்டீர்களா?
   உடல் நலனை பார்த்துக் கொள்ளவும். //
   இப்போது நலம் பெற்று வருகிறேன். உங்கள் தளத்தில் என் உடல் நிலையைபற்றி சொல்லி இருக்கிறேன்.
   பார்த்து கொள்கிறேன் உடல் நலத்தை.

   நீங்களும் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள், உடல் உழைப்பும் தேவை, ஓய்வும் தேவை. கவனமாக இருங்கள். உங்கள் பதிவில் உங்கள் உடல்நலக்குறைவை படித்து மிகவும் வேதனை அடைந்தேன். விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.   நீக்கு