புதன், 15 பிப்ரவரி, 2023

மயிலாடுதுறை தெப்பக்குள விஸ்வநாதர் கோவில்



மயிலாடுதுறை   தெப்பக்குள  விஸ்வநாதர் கோவில்

மயிலாடுதுறையில் ஏழு விஸ்வநாதர் கோவில்கள் இருக்கிறது, அதில் ஒன்று இந்த தெப்பக்குள விஸ்வநாதர் கோவில்.

துலாகட்ட விஸ்வநாதர்,  திருவழுந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர் , படித்துறை  விஸ்வநாதர், பெரிய கோவில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர். தெப்பக்குள விஸ்வநாதர்.

இந்த கோவில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட கோவில்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்.






தெப்பக்குள விஸ்வநாதர் கோவில் 150 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம்  செய்யப்பட்டு இருக்கிறது. 1.9.2022   ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. நாங்கள் டிசம்பர் 
12 ம் தேதி போய் தரிசனம் செய்து வந்தோம்.




கொடிமரத்தில் உள்ள ரிஷ்பாரூடர்




கிணற்றில் நீர் நிறைய இருக்கிறது
காலை நேரம்   கோவில் வாசல் மட்டும் திறந்து இருந்தது, மூலவர் சன்னதிகள் மூடி இருந்தது. கம்பி கதவு வழியாக தரிசனம் செய்தோம்.
                                           சுவாமி விமானம்
                                               அம்மன் விமானம்

    கோவில் உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கம்     பிள்ளையார்
                   இடது பக்கம் முருகன் வள்ளி தெய்வானையுடன்



பிரம்மா 

                                        காவேரி அம்மன்
அகத்தியர் கற்சிலையும், பிரம்மா கற்சிலையும் மட்டும் புதிது 

சுவாமி சன்னதியின் மேல் கஜலட்சுமி
லிங்கோத்பவர்
 சுவாமி விமானத்தில் சோமாஸ்கந்தர்

இந்த வீதி வழியாக தான் துலாகட்டத்திற்கு சுவாமி, அம்மன்,    பஞ்சமூர்த்திகள் வருவார்கள். துலா கட்டத்தில்  கடைமுழுக்கு நடைபெறும் ஐப்பசி   மாதம் கடைசி நாளில் .  மயூரநாதர் கோவில், வள்ளலார் கோவில், அய்யாரப்பர் கோவில், படித்துறை காசி விஸ்வநாதர் கோவில்  பஞ்ச மூர்த்திகளும்  முழுக்குதுறைக்கு தீர்த்தவாரிக்கு  வருவார்கள்.

அப்போது எல்லாம் இந்த  கோவிலை பார்க்கவே முடியாது , கோவிலை சுற்றி கடைகள் இருக்கும், பழக்கடை, பக்கத்தில் பெரிய காய்கறி கடைகள் இருக்கும் இப்போது அவை எல்லாம் அப்புறப்படுத்தபட்டு கோவில் தெரிகிறது. நாங்கள் மயிலாடுதுறையில்  இருந்த வரை இந்த கோவிலை பார்த்ததே  இல்லை.  


மகனால் இந்த கோவிலுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. முழுக்கு துறையை பார்க்க போகும் போது காசி விஸ்வநாதரை யும் , விசாலாட்சியை தரிசனம் செய்து வந்தோம்.
அடுத்த பதிவில் துலாகட்ட காசி விஸ்வநாதரை பார்ப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. காலையில் நல்ல தரிசனம் கிடைத்தது.

    படங்கள் எல்லாமே மிகவும் தெளிவாக இருக்கிறது.

    விவரணம் அருமை சகோ.

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாமே மிகவும் தெளிவாக இருக்கிறது.

      விவரணம் அருமை சகோ.//

      நன்றி ஜி


      உங்கள் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. நல்ல தரிசனம்.

    கும்பாபிஷேகம் ஆன கோவில் என்பதால் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. நல்ல இறை தரிசனம்.

    லிங்கோத்பவர் படம் அருமை. தரிசித்துக்கொண்டேன்.

    அம்பாள் சிவன் இருவரும் மெத்தை போட்டு காளையின் மேல் அமர்ந்திருப்பதாக உள்ள சிற்பம் கவர்ந்தது. நீள முதுகுள்ள காளை போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கும்பாபிஷேகம் ஆன கோவில் என்பதால் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. நல்ல இறை தரிசனம்.//

      ஆமாம், புதிது என்பதால் பளிச் என்று இருக்கிறது.

      //அம்பாள் சிவன் இருவரும் மெத்தை போட்டு காளையின் மேல் அமர்ந்திருப்பதாக உள்ள சிற்பம் கவர்ந்தது. நீள முதுகுள்ள காளை போலிருக்கிறது//
      அம்பாள், சிவன் முருகன் மூவரும் கைலை மலை மேல் இருக்கிறார்கள் பக்கத்தில் காளை இருக்கிறது நெல்லை.
      மெத்தை போட்டு உட்காரவில்லை. இரண்டு பக்கத்திலும் காளை இருக்கிறது.




      நீக்கு
    2. நான் நாலாவது படத்தை (உலோகச் சிற்பம்) சொன்னேன்

      நீக்கு
    3. //நான் நாலாவது படத்தை (உலோகச் சிற்பம்) சொன்னேன்//

      ஓ! சரி. தவறாக புரிந்து கொண்டேன், மன்னிக்கவும். நான் சுவாமி விமானத்தில் உள்ள படம் என்று நினைத்து கருத்து சொல்லி விட்டேன்.

      பிரதோஷ சமயம் ரிஷபத்தின் மேல் வரும் போது இப்படி ஆசனம் அமைத்து இருப்பார்கள். அது போல செய்து இருக்கிறார்கள். காளையும் நீள முதுகு இருப்பது போல இருக்கும்.
      என்னையும் கவர்ந்ததால்தான் அந்த படத்தை எடுத்தேன், மகனும் மிக அழகாய் படம் எடுத்து இருக்கிறான்.

      நீக்கு
  3. கம்பி வலை போட்ட சந்நிதிகள் - முற்காலத்தில் நிறைய பூசாரிகளும் சேவார்த்திகளுமாக (பக்தர்களுமாக) ஜேஜே என இருந்திருக்கும். இப்போ ஓரிருவரே கோவிலைப் பார்த்துக்கொள்ளணும், பொருள்களைப் பாதுகாக்கடும். அதனால் இப்படிச் செய்திருப்பாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கம்பி வலை போட்ட சந்நிதிகள் - முற்காலத்தில் நிறைய பூசாரிகளும் சேவார்த்திகளுமாக (பக்தர்களுமாக) ஜேஜே என இருந்திருக்கும். //

      காலை நேரம் அதனால் குருக்கள் வரவில்லை, அவர் வர நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். நாங்கள் காலை பாங்க் வேலை இருப்பதால் முதலில் கோவிலை தரிசனம் செய்து விட்டு பாங்க் போகலாம் என்று சீக்கீரம் வந்து விட்டோம்.

      //இப்போ ஓரிருவரே கோவிலைப் பார்த்துக்கொள்ளணும், பொருள்களைப் பாதுகாக்கடும். அதனால் இப்படிச் செய்திருப்பாங்க//
      ஆமாம், நீங்கள் சொல்வது போல்தான். கடைத்தெரு இருக்கும் இடம்.
      பொருள்களை பாதுகாக்கும் நோக்கமும் தான்.

      நாங்கள் அங்கு 34 வருடம் இருந்தோம். அதுவரை அந்த கோவிலை பார்க்கவே இல்லை அதற்கு முன்னால் ஜே ஜே என்று இருந்து இருக்குமா என்று தெரியவில்லை.

      கடைத்தெரு முழுக்கு துறை அதன் பக்கம் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் ஜே ஜே என்று இருக்கும். அடுத்து வரும் கோவில்.

      நீக்கு
  4. மயிலாடுதுறை மயூரநாதர் எந்தக் கோவிலில் தரிசனம் தருகிறார்?

    அந்த ஊருக்கு ஒரு முறை சென்று எல்லாக் கோவில்களின் தரிசனமும் வாய்க்கப் பெறணும். கும்பகோணம் கோயில்களே பென்டிங்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் தான் மயூரநாதர் தரிசனம் தருகிறார் . அது பெரிய கோவில் என்று அழைக்கப்படும்.
      அடுத்து அடுத்து வரும். கோவில் பதிவுகள். மகனுடன் இரண்டு நாள் பயணம் , தொடர்ந்து போட்டு வருகிறேன் .

      //அந்த ஊருக்கு ஒரு முறை சென்று எல்லாக் கோவில்களின் தரிசனமும் வாய்க்கப் பெறணும். கும்பகோணம் கோயில்களே பென்டிங்//
      நல்லபடியாக கோவில்தரிசனம் வாய்க்கும். "திருஇந்தளூர்" பார்த்து விட்டீர்கள் தானே!

      நீக்கு
  5. மாயூரத்தில் எது முக்கியமான கோவில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாயூரத்தில் எது முக்கியமான கோவில்?//

      மயூரநாதர் கோவில் , முக்கியம். பாடல்பெற்ற சிவன் கோவில்.

      திருஇந்தளூர் பரிமளரெங்கநாதர் கோவில் மங்களாசாசனம் பெற்ற கோயில்.

      வள்ளலார் கோவில். குரு கோவில். நிறைய கோவில்கள் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. விக்கிப்பீடியாவிற்காக கட்டுரை எழுதச் சென்றபோது இக்கோயிலைக் கண்டேன். விஸ்வநாதர் கோயில், குறிப்பாக காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பல கோயில்களை அங்குக் காணமுடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

      //விக்கிப்பீடியாவிற்காக கட்டுரை எழுதச் சென்றபோது இக்கோயிலைக் கண்டேன். விஸ்வநாதர் கோயில், குறிப்பாக காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பல கோயில்களை அங்குக் காணமுடிந்தது.//

      ஆமாம். 7 கோவில்கள் இருக்கிறது. இந்த கோவிலை இப்போது தான் மீட்டு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. மயிலாடுதுறை தெப்பக்குள விஸ்வநாதர் தரிசனம் பெற்றோம் படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  9. கோயில் அழகு.. கோயிலின் படங்களும் அழகு.. ஆக்கிரமிப்புக்குள் இருந்து மீட்கப்பட்டது போலத் தெரிகின்றது.. மயிலாடுதுறை செல்லும் சமயத்தில் தரிசிக்க வேண்டும்..

    சிறப்பான பதிவுக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      கோயில் அழகு.. கோயிலின் படங்களும் அழகு..//

      நன்றி.

      //ஆக்கிரமிப்புக்குள் இருந்து மீட்கப்பட்டது போலத் தெரிகின்றது.. மயிலாடுதுறை செல்லும் சமயத்தில் தரிசிக்க வேண்டும்..//

      ஆமாம், பல ஆண்டுகள் ஆக்கிரப்பு. பொதுமக்களும், ஆதீனமும் சேர்ந்து அழகான கோவிலை கும்பாபிஷேகம் செய்து இருக்கிறார்கள்.

      துலாகட்டம் செல்லும் போது பார்க்கலாம்.

      //சிறப்பான பதிவுக்கு மகிழ்ச்சி..//
      நன்றி.



      நீக்கு
  10. மயிலாடுதுறைக்குள் ஸ்ரீ விஸ்வநாதர் பெயரில் இத்தனை கோயில்களா!..

    ஆச்சர்யம்...

    தேரழுந்தூர் கோயிலும் மயிலாடுதுறை க்குள் சேருமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மயிலாடுதுறைக்குள் ஸ்ரீ விஸ்வநாதர் பெயரில் இத்தனை கோயில்களா!..ஆச்சர்யம்...//

      ஆமாம் , அந்தக்காலத்தில் காசிக்கு சென்று தரிசனம் செய்வது கடினம் என்பதால் காசி விஸ்வநாதரை இப்படி கட்டி இருப்பார்கள் போலும்.

      //தேரழுந்தூர் கோயிலும் மயிலாடுதுறை க்குள் சேருமா?..//

      மயிலாடுதுறை மாவட்டம் தான் தேரழுந்தூர். அந்த கோவிலையும் அகத்தியர் பூஜை செய்து இருப்பதாக வரலாறு உள்ளது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. கோமதிக்கா இனிய காலை வணக்கம்!

    கோயில் படங்கள் எல்லாம் செம பளிச்! கும்பாபிஷேகம் நடந்ததால் எல்லாம் சுத்தம் பண்ணி வர்ணம் எல்லாம் பூசியிருக்காங்க. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா இனிய காலை வணக்கம்!//

      வணக்கம்

      //கோயில் படங்கள் எல்லாம் செம பளிச்! கும்பாபிஷேகம் நடந்ததால் எல்லாம் சுத்தம் பண்ணி வர்ணம் எல்லாம் பூசியிருக்காங்க. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன கோமதிக்கா//

      ஆமாம், இப்போது மிக அழகாய் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. ஆச்சர்யம்.  அங்கே இருக்கும்வரை பார்க்காத கோவிலை இப்போது தரிசனம் செய்யக் கிடைத்திருப்பது....   உங்களுக்கும் பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்திருக்கும்.  படங்கள் யாவுமே சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ஆச்சர்யம். அங்கே இருக்கும்வரை பார்க்காத கோவிலை இப்போது தரிசனம் செய்யக் கிடைத்திருப்பது....//

      ஆமாம் ஸ்ரீராம் ஆச்சர்ய தான். இரண்டு நாள் மாயவரம் போகும் வேலை வந்தது. மகன் வந்து இருந்த போது முடிக்கவேண்டிய வேலை . அதனால் கிடைத்தது. இந்த கோவிலுக்கு எதிரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடிக்கடி செல்வோம். எங்கள் வீட்டிலிருந்து டவுனுக்கு வருவது என்று வந்து கடைகள், கோவில் , சினிமா பார்க்க எல்லாம் இங்குதான் வருவோம்.
      துலா கட்டத்தை சுற்றி கடைகள்தான் அதில் கிடைக்காத பொருளே கிடையாது. பெரிய காய்கறி மார்கெட் அதில் காய்கள் எல்லாம் வாங்குவோம்.

      //உங்களுக்கும் பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்திருக்கும்.//

      திருவெண்காட்டில் இருக்கும் போதும் கடைத்தெருவுக்கு, சினிமா பார்க்க கோவில் பார்க்க என்று வருவோம்.
      நினைவுகள் வந்து கொண்டே இருந்தது, மகனுக்கும் எனக்கும்.

      படங்கள் யாவுமே சிறப்பு.//
      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. கும்பாபிஷேகம் ஆகி 48 நாட்களுக்குள் சென்று தரிசனம் செய்தால் ரொம்ப நல்லது என்பார்கள்.. அருகில் இருந்தாலே வாய்க்க மாட்டேன் என்கிறது. தூரத்தில் இருந்தால் சுத்தம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கும்பாபிஷேகம் ஆகி 48 நாட்களுக்குள் சென்று தரிசனம் செய்தால் ரொம்ப நல்லது என்பார்கள்.. அருகில் இருந்தாலே வாய்க்க மாட்டேன் என்கிறது. தூரத்தில் இருந்தால் சுத்தம்!//

      ஆவணி மாதம் நடந்து இருக்கிறது, நாங்கள் கார்த்திகை மாதம் பார்த்தோம். திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோவில் இரண்டும் 48 நாட்களுக்குள் பார்க்கும் வாய்ப்பு தங்கையின் மணிவிழாவில் கிடைத்தது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. அழகிய படங்களுடன் தரிசனம் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. அப்புறம் கொடுத்த கருத்துகள் எதுவும் வரலை போல என்னாச்சு?
    அம்மையும் அப்பனும் ரிஷப வாகனம்? அந்தப் படம் மிக அழகு மிகவும்ரசித்தேன்...

    அது போல காசிவிஸ்வநாதர் ஸ்வாமி சன்னதி படம் அழகு.

    விமானங்கள், கஜலஷ்மி ...சோமஸ்கந்தேஸ்வரர், படங்கள் செம

    ரசித்துப் பார்த்தேன்'

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா தேடி பார்த்தேன், வேறு பின்னூட்டங்கள் இல்லையே! இந்தைரண்டு பின்னூட்டங்கள்தான் இருக்கிறது.

      அம்மையும் அப்பனும் ரிஷப வாகனம்? அந்தப் படம் மிக அழகு மிகவும்ரசித்தேன்...

      //அது போல காசிவிஸ்வநாதர் ஸ்வாமி சன்னதி படம் அழகு.

      விமானங்கள், கஜலஷ்மி ...சோமஸ்கந்தேஸ்வரர், படங்கள் செம

      ரசித்துப் பார்த்தேன்'//

      படங்களை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. அப்போது பார்க்க முடியாமல் போன கோயிலை இப்போது மகனுடன் பார்க்க முடிந்ததே மகிழ்வான விஷயம், கோமதிக்கா. கடைசி படத்தில் நீங்கள்!! சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்போது பார்க்க முடியாமல் போன கோயிலை இப்போது மகனுடன் பார்க்க முடிந்ததே மகிழ்வான விஷயம், கோமதிக்கா. கடைசி படத்தில் நீங்கள்!! சூப்பர்//

      ஆமாம், நாங்கள் இருக்கும் வரை அந்த கோவிலை பார்க்க முடியவில்லை, இப்போதுமகனுடன் பார்த்தது மகிழ்ச்சிதான்.

      எதிர்பக்கம் இருக்கும் காசி விஸ்வநாதர் வாசலிலிருந்து எடுத்தான் மகன். அந்த இடம் போக்குவரத்து அதிகம் இருக்கும் கடைத்தெரு.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு