சனி, 25 மார்ச், 2023

தோட்டத்திற்கு வந்த பறவைகள்ஆண், பெண் சிட்டுக்குருவிகள் 

மார்ச் 20 தேதி "உலக சிட்டுக்குருவி தினம் " ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன். இங்கு 19 ம் தேதி இரவு  போட்ட    தோழியின் "தலாட்டு பாடல்"இந்திய நேரப்படி 20ம் தேதி   வந்து விட்டது.  திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இன்று உங்களிடமிருந்து சிட்டுக்குருவி பதிவு வரும் என்று நினைத்து இருந்தேன் என்று சொன்னார்.

இன்று சிட்டுக்குருவி பற்றிய பதிவு வரும் என்று நினைத்திருந்தேன் அம்மா//


தோழி பகிர சொன்ன தாலாட்டு பாடல் மனதில் நிறைந்து இருந்த காரணத்தால் குருவியை மறந்து போனேன்.


அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன் என்றேன். அடுத்து

 உலக தண்ணீர் தினம் போட்டு விட்டேன்.


இந்த பதிவில் மகன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த குருவிகள்  மற்றும் வீட்டுக்கு பக்கத்தில் வந்த பறவைகள் இடம்பெறுகிறது.


பத்திரிக்கையில் படித்த செய்திகள் பகிர்வு:-

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 9வது ஆண்டாக "பசுமை இயக்கம்" சார்பில் உலகசிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்பட்டதாம், அந்த நிகழ்வில் 200 சிட்டுக்குருவி கூடுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதாம்


கோவில்பட்டியில் "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம்"  சார்பில் உலகசிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது .


கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுஜிதா ஆனந்த் தலைமையிலான காவலர்கள் அனைவரும் மண் சட்டிகளில் தண்ணீர் மற்றும் சோளம், கம்பு போன்ற சிறு தானியங்களை  வைத்தார்களாம்.

கோவில்பட்டி அரசு அலுவலகங்களில் சிட்டுக்குருவிகளுக்கு சிறுதானிய உணவு வைக்கப்போவதாகவும் ,அவற்றை பாதுகாக்க போவதாகவும்  தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.


அரிசோனாவில் மகன் வீட்டுத்தோட்டத்திற்கு  அதிகாலையில் வந்த குருவி.


  
குருவி அமர்ந்து இருக்கும் மரம் குளிர் காலத்தில் மொட்டை மரமாக இருந்தது,  வசந்த காலம் வந்ததும் ஒரு வாரத்தில் நன்றாக துளிர்த்து விட்டது.


வசந்தகால மழையில் துளிர்த்து விட்டது


எல்லா பறவைகளுக்கும் பிடித்த மரம்
மொட்டை மரமாக இருந்த போது தேன் சிட்டு தன் அலகை இந்த மரத்தில் தேய்த்து கொண்டு இருக்கும்.
சிறிய காணொளிதான் பாருங்கள். இலைகள் இல்லாமல் இருப்பதால் தேன் சிட்டு நன்றாக தெரியும்

இறக்கையை அடித்து அடித்து மிகவும் அலுப்பாக இருக்கிறது எலுமிச்சை மரத்தில் சற்று ஓய்வு

மூக்கை நீட்டி ஒரு பார்வை
எலுமிச்சை பூவில் தேன் அருந்திவிட்டு மயக்க ஓய்வு


நன்றி 

மாணவர்கள் தேன்சிட்டு பறப்பதை போல கைகளை அசைத்து இரண்டு வரி தேன்சிட்டை பற்றி பாடுகிறார்கள்.

//சிட்டு சிட்டு தேன் சிட்டு, வண்ணப்பூவில் தேன் சிட்டு, தொட்டி தொட்டி பூந்தொட்டி வண்ணப்பூவில் தேன் சிட்டு//


 பக்கத்து வீட்டு மரத்தில்  அமர்ந்து இருக்கும் சிட்டுக் குருவி


காத்து இருக்கும் கண்களே! 


  பின் பக்கம் வீட்டு கூரை மேல் அமர்ந்து இருக்கும் பருந்து.
மாலை பொழுது எடுத்த படம். இரண்டு பருந்து அமர்ந்து இருந்தது காமிராவை எடுத்து வந்த போது ஒன்று மட்டும் இருந்தது,  ஏமாற்றம் எனக்கு.
வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு கம்பம் பறவைகளுக்கு பிடித்த இடம்.

அதிகாலை பொழுது இறை தியானம்
குருவி இனத்தை சேர்ந்ததுதான் சிட்டுக்குருவியை விட கொஞ்சம் பெரிது.

காடை பறவை
ஜன்னல் பக்கத்தில் தெரியும் மதில் சுவரில் மதிய நேரம் நடந்து போகும் காடை பறவை,   சில நேரம்  குடும்பத்துடன்   நடந்து போகும் , நாம் காமிராவை தூக்கிகிட்டு போனால் மதிலுக்கு அந்த பக்கம் குதித்து விடும்.

மதிலை ஜன்னல்வழியாக வீட்டுக்குள் இருந்து பார்க்கலாம்
இந்த ஜன்னல்  என் மடிகணினி மேஜை  பக்கம் இருக்கிறது

ஜன்னல் வழியே என்னை ஒரு பார்வை பார்த்து செல்லும்
பின்னால் தெரியும் மரத்தில் குருவிகள் , தேன் சிட்டு எல்லாம் வரும்.
ஏதோ எழுதி கொண்டு இருக்கிறாய் நான் வாரேன்.

அடிக்கடி வாங்க அடுத்த முறை குடும்பத்துடன் வந்து போஸ் கொடுங்க!

குளிர் அதிகமாக இருந்த போது தோட்டம் பக்கம் போய் படம் எடுக்க முடியவில்லை. குளிர் குறைய ஆரம்பித்து இருக்கிறது, அதனால் தோட்டம் பக்கம் போய் பறவைகளை படம் எடுத்தேன். மணிப்புறாவை வித விதமாக எடுத்து இருக்கிறேன், அதை தனி பதிவாக போடுகிறேன்.

 இருந்தாலும் பறவைகள் வரத்து இப்போது குறைச்சல். இரண்டு தடவை தோட்டத்திற்கு பாம்பு வந்து விட்டதால் உணவு வைக்க கூடாது பறவைகளுக்கு என்று தடை விதித்து விட்டார்கள். உணவை சாப்பிட பறவைகள் மட்டும்  வருவது இல்லை இரவு நேரம்  எலிகளும் தோட்டத்திற்கு வருகிறது, எலியை பிடிக்க பாம்பு வருகிறது என்று சொல்லி விட்டார்கள் அதனால் தினம் பறவைகளுக்கு உணவு வைக்கும் பழக்கதை விட்டு விட்டார்கள். பாம்பு வந்து அதை பிடித்த  காட்சிகளை படத்தோடு பதிவு போட்டது நினைவு இருக்கும். பாம்பு பிடிக்கும் பெண்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

34 கருத்துகள்:

 1. படங்கள் வழக்கம் போல அழகு.

  காணொளிகள் கண்டேன்.

  சிட்டுக்குருவிகள் தினம் வரும்போது எனக்கும் உங்கள் நினைவு வரும்.

  திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில்தான் எங்கள் குலதெய்வக் கோயிலின் மூலஸ்தானம் இருக்கிறது.

  அதிலிருந்து நாங்கள் கட்டிய கோயில்தான் இதம்பாடலில் எங்கள் சொந்த கோயில்.

  வரும் மே மாதம் 24-25 தேதிகளில் கும்பாபிஷேகம் நடத்துகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //படங்கள் வழக்கம் போல அழகு.//

   நன்றி.

   காணொளிகள் கண்டேன்.//
   மகிழ்ச்சி.

   //சிட்டுக்குருவிகள் தினம் வரும்போது எனக்கும் உங்கள் நினைவு வரும்//
   உங்களுக்கும் என் நினைவு வருமா அப்போது! மகிழ்ச்சி, நன்றி.

   //திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில்தான் எங்கள் குலதெய்வக் கோயிலின் மூலஸ்தானம் இருக்கிறது.//
   ஓ அப்படியா? எங்கள் உறவினர்கள் முன்பு வள்ளியூரில் இருந்தார்கள் அம்மா சொல்வார்கள்.

   //அதிலிருந்து நாங்கள் கட்டிய கோயில்தான் இதம்பாடலில் எங்கள் சொந்த கோயில்.

   வரும் மே மாதம் 24-25 தேதிகளில் கும்பாபிஷேகம் நடத்துகிறோம்.//

   இதம்பாடல் கோவில் நீங்கள் அடிக்கடி போட்டு இருக்கிறீகள். ஊரின் பேரே மிக அருமை.
   கும்பாபிஷேகம் படங்களை போட்டு பதிவு போடுங்கள். கும்பாபிஷேகம் நல்லபடியாக இறையருளால் நடக்கட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. சிறப்பான படங்கள். காணொளி கண்டு களித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   //சிறப்பான படங்கள். காணொளி கண்டு களித்தேன்.//

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. உங்களை மகிழ்விக்க வந்து விட்டன சிட்டுக்குருவிகளும் காடை, பருந்தும்.  காணொளிகள் பார்த்தேன்.  சுவாரஸ்யம்.  நான் முகநூலில் சிருக்குருவிக்கு ஒரு நாலுவரி எழுதி அமைதியடைந்தேன்!!!

  பருந்துகள் கண்ணில் சிட்டுக்குருவிகள் பட்டால் ஆபத்துதானே?  தூக்கிக்கொண்டு போய்விடாது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //உங்களை மகிழ்விக்க வந்து விட்டன சிட்டுக்குருவிகளும் காடை, பருந்தும். காணொளிகள் பார்த்தேன்//


   பருந்துகள் கண்ணில் பட்டால் ஆபத்துதான். புறா முட்டைகள் , குஞ்சுகள் தப்பி பிழைப்பது கஷ்டம் தான். சிட்டுக்குருவிகள், காடைகள் எல்லாம் வாழ விதி இருந்தால் பிழைக்கும், . இல்லையென்றால் தூக்கி கொண்டு போய் விடும் தான்.
   அவைகளிடமிருந்து தப்பிக்க சில பறவைகள் தந்திரமாக கூடு கட்டுகிறது, சிலவற்றிற்கு அவ்வளவு அறிவு இல்லை.
   எல்லா உயிரினங்களுக்கு ஒன்றினால் ஒன்று ஆபத்து இருக்கிறது.

   நாம் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், அதை போல பறக்க ஆசை படுகிறோம். அவைகளுக்கு நித்திய கணடம் தான்.

   நீக்கு
 4. காடையின் வாய் வித்தியாசமாக இருக்கிறது. வளைந்த அலகுகள், அகலமான வாய்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காடையின் வாய் வித்தியாசமாக இருக்கிறது. வளைந்த அலகுகள், அகலமான வாய்?//

   குட்டி அலகு , தலையில் கொண்டை முக அமைப்பு ஏதோ மூகமூடி போட்டது போல இருக்கும். நம் ஊர் காடைகள் வேறு மாதிரி இருக்கும்.
   முகநூலில் உங்கள் குருவி கவிதை படித்தேன். நன்றாக இருந்தது.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. படங்கள் அழகு. காடைப் பறவை இன்னும் அழகு

  இங்கும் பறவைகள் நாய்களுக்கு உணவு போடக்கூடாது என்கிறார்கள். யார் கேட்கிறார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   காசி, கயா பயணம் செய்து விட்டு திரும்பி விட்டீர்களா?
   நல்ல தரிசனம் எல்லா இடத்திலும் கிடைத்து இருக்கும்.

   //படங்கள் அழகு. காடைப் பறவை இன்னும் அழகு

   இங்கும் பறவைகள் நாய்களுக்கு உணவு போடக்கூடாது என்கிறார்கள். யார் கேட்கிறார்?//

   பறவை நாய்களுக்கு உணவு அளித்தால் நல்லது என்று இப்போது அதிகமாக உணவு அளித்து கொண்டு இருக்கிறார்கள் நம் நாட்டில்.

   இங்கு பறவைகளின் உணவு பழக்கத்தை நாம் மாற்ற கூடாது என்கிறார்கள்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
  2. காசி கயா பயணம் நன்றாக நடைபெற்றது. வாரணாசியில் பல நாட்கள் இருந்தேன். எல்லாம் சிறப்பாக இருந்தன. மெதுவாக அவை பற்றி எழுதுவேன்

   நீக்கு
  3. //காசி கயா பயணம் நன்றாக நடைபெற்றது. வாரணாசியில் பல நாட்கள் இருந்தேன். எல்லாம் சிறப்பாக இருந்தன. மெதுவாக அவை பற்றி எழுதுவேன்//

   தல யாத்திரை நன்றாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.
   எழுங்கள் படங்களுடன். பார்க்க, படிக்க ஆவலாக உள்ளேன்.
   நன்றி மீண்டும் வந்து பதில் சொன்னதற்கு.

   நீக்கு
 6. நன்றி அம்மா...

  சில கட்டுப்பாடுகளை மீற முடியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

   //நன்றி அம்மா...//

   நானும் நன்றி சொல்லிக்கிறேன் உங்களுக்கு.

   //சில கட்டுப்பாடுகளை மீற முடியாது..//
   ஆமாம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. ஹை! நம்ம கோமதி பாட்டி வந்திருக்காங்க....வா ஒரு ரவுன்ட் போய் பார்த்துட்டு வருவோம்....கொஞ்சம் ஷோ, போஸ் காமிச்சுட்டு வருவோம்...படம் பிடிப்பாங்க.....ஊருல இன்னொரு பாட்டி இருக்காங்க.....அவங்களும் நம்மள பார்க்க முடியுமே....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //ஹை! நம்ம கோமதி பாட்டி வந்திருக்காங்க....வா ஒரு ரவுன்ட் போய் பார்த்துட்டு வருவோம்....கொஞ்சம் ஷோ, போஸ் காமிச்சுட்டு வருவோம்...படம் பிடிப்பாங்க.//

   ஓ! அப்படி வருகிறதா? என்னப்பார்க்க. வரட்டும் , வரட்டும் படம்பிடித்து விடுகிறேன்.


   ...//.ஊருல இன்னொரு பாட்டி இருக்காங்க.....அவங்களும் நம்மள பார்க்க முடியுமே....//

   "ஊரிலே இருப்பவர்கள் பாட்டி இல்லை அத்தை, வேண்டுமென்றால் அத்தை பாட்டி என்று அழைத்து கொள். மிக சுறு சுறுப்பாய் சிட்டுபோல ஓடி பறந்து கொண்டு இருப்பார்கள், நாலும் தெரிந்த அத்தை பாட்டி."
   உங்கள் மேல் ஆசையாக அன்பாக இருப்பார்கள்.   நீக்கு
  2. ஆஹா!! அத்தைப்பாட்டியா!! சரி சரி.....ஆ இப்படி எல்லாம் என்னைப் பத்தி பில்டப் கொடுக்கறீங்களே!!!

   //உங்கள் மேல் ஆசையாக அன்பாக இருப்பார்கள்.//

   ஆஹா....மிக்க நன்றி கோமதிக்கா...உங்கள் பதில் ரசனையாக இருக்கு. ரசித்தேன் கோமதிக்கா...உங்க அன்பையும்.

   கீதா

   நீக்கு
  3. //ஆஹா!! அத்தைப்பாட்டியா!! சரி சரி.....ஆ இப்படி எல்லாம் என்னைப் பத்தி பில்டப் கொடுக்கறீங்களே!!!//

   உண்மைதானே கீதா.

   //ஆஹா....மிக்க நன்றி கோமதிக்கா...உங்கள் பதில் ரசனையாக இருக்கு. ரசித்தேன் கோமதிக்கா...உங்க அன்பையும்.//

   பதிலை ரசித்து அன்புடன் கருத்து மீண்டும் வந்து கொடுத்தமைக்கு நன்றி கீதா

   நீக்கு
 8. சிட்டுக் குருவிகளுக்கு உணவு தண்ணீர் கொடுப்பது பற்றி வள்ளியூர், கோவில்பட்டி ஊர்களில் மக்கள், காவலர்கள் எல்லோரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அருமை.

  அக்காவுக்கு இனி குஷிதான். மகன் வீட்டிற்குக் குருவிகள் வரத் தொடங்கியாச்சு....இனி வேறு வேறு பறவைகள் வரும் அக்கா எடுக்கும் படங்களும் வரும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சிட்டுக் குருவிகளுக்கு உணவு தண்ணீர் கொடுப்பது பற்றி வள்ளியூர், கோவில்பட்டி ஊர்களில் மக்கள், காவலர்கள் எல்லோரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அருமை.//

   விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக நல்ல காரியம்.

   முன்பு பள்ளி பிள்ளைகள் மரங்களில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் கட்டி தொங்க விடுவதை போட்டு இருந்தேன்.

   //அக்காவுக்கு இனி குஷிதான். மகன் வீட்டிற்குக் குருவிகள் வரத் தொடங்கியாச்சு....இனி வேறு வேறு பறவைகள் வரும் அக்கா எடுக்கும் படங்களும் வரும்...//

   வெயில் வந்தவுடன் தோட்டத்திற்கு போக முடிகிறது.
   குளிரில் பறவைகளை கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்து கொண்டு இருந்தேன் .


   நீக்கு
 9. மொட்டை மரங்கள் துளிர்த்திருப்பது பறவைகளுக்குக் குஷியாக இருக்கும். தேன் சிட்டு அலகைத் தேய்த்துக் கொள்வது எல்லாமே பார்க்க அழகு.

  சிட்டுக்குருவி படங்கள் தேன்சிட்டு, குழந்தைகள் பாடும் காணொளி எல்லாமே சிறப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மொட்டை மரங்கள் துளிர்த்திருப்பது பறவைகளுக்குக் குஷியாக இருக்கும். தேன் சிட்டு அலகைத் தேய்த்துக் கொள்வது எல்லாமே பார்க்க அழகு.//

   மொட்டை மரமாக இருந்த போதும் பறவைகள் மரத்தை நேசித்தது, இப்போது மேலும் நேசிக்கும்.
   மரக்கிளைகளில் அவைகளின் அலகை உரசும் எல்லா பறவைகளும்.

   //சிட்டுக்குருவி படங்கள் தேன்சிட்டு, குழந்தைகள் பாடும் காணொளி எல்லாமே சிறப்பு//

   காணொளிகள் பார்த்தது கருத்து சொன்னது மகிழ்ச்சி கீதா.

   நீக்கு
 10. பருந்தும், சிட்டுக்குருவியை விடப் பெரிய குருவியும்...காடை எல்லாமே வெகு அழகு. நானும் இன்று பருந்து காணொளி ஒன்று எடுத்தேன் ஏரிக்கரை மரத்தின் மீது அது அமர்ந்திருந்த போது.

  பறவைகள், நாம் கேமரா தூக்குகிறோம் என்றாலே எப்படித் தெரியுமோ உடனே பறந்துவிடும் ...

  காடைப் பறவை தலையில் ஏதோ ஹெட்லைட் மாட்டிக் கொண்டு இருப்பது போல இருக்கு!!!

  //அடிக்கடி வாங்க அடுத்த முறை குடும்பத்துடன் வந்து போஸ் கொடுங்க!//

  ஹாஹாஹாஹா அதானே....

  எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பருந்தும், சிட்டுக்குருவியை விடப் பெரிய குருவியும்...காடை எல்லாமே வெகு அழகு. நானும் இன்று பருந்து காணொளி ஒன்று எடுத்தேன் ஏரிக்கரை மரத்தின் மீது அது அமர்ந்திருந்த போது.//

   பருந்து காணொளி பதிவில் போடுங்கள் பார்க்கிறேன்.

   //பறவைகள், நாம் கேமரா தூக்குகிறோம் என்றாலே எப்படித் தெரியுமோ உடனே பறந்துவிடும் ...//

   ஆமாம்.

   //காடைப் பறவை தலையில் ஏதோ ஹெட்லைட் மாட்டிக் கொண்டு இருப்பது போல இருக்கு!!!//

   ஆண், பெண் வித்தியாசம் காட்ட அந்த ஹெட்லைட் இருக்கிறது.


   //அடிக்கடி வாங்க அடுத்த முறை குடும்பத்துடன் வந்து போஸ் கொடுங்க!//

   ஹாஹாஹாஹா அதானே....

   எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா//

   எதிர் பக்கம் குடும்பத்துடன் காலை நேரம் நடைபயிற்சி எடுத்து கொள்வது போல நடந்து போகும் ஒன்றன் பின் ஒன்றாக பார்க்க அழகாய் இருக்கும் கீதா.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.   நீக்கு
  2. குடும்பத்தோடு நடைப்பயிற்சி செய்வது போல நடக்கும் அந்த அழகை ரசிக்க வேண்டுமே கோமதிக்கா...முடிஞ்சா காணொளி எடுத்துப் போடுங்க....ஏற்கனவே எடுத்திருக்கீங்களோ?

   கீதா

   நீக்கு
  3. //குடும்பத்தோடு நடைப்பயிற்சி செய்வது போல நடக்கும் அந்த அழகை ரசிக்க வேண்டுமே கோமதிக்கா...முடிஞ்சா காணொளி எடுத்துப் போடுங்க....ஏற்கனவே எடுத்திருக்கீங்களோ?//

   ஏற்கனவே இப்படி வரிசையாக நடந்து போவதை எடுத்தேன், படத்தில் இரண்டு மட்டுமே சிக்கியது.
   மீண்டும் கூட்டமாய் நடந்து போகும் போது எடுக்க முயல்கிறேன்.

   நீக்கு
 11. அழகழகான படங்கள்.. பறவைகளை நேரில் பார்ப்பதும் அழகு.. இப்படி பட்ங்களில் பார்ப்பதும் அழகு..

  தங்களது அசாத்திய திறமை படங்களில் தெரிகின்றது..

  தங்களுக்கும் பறவைகளுக்கும் உள்ள பந்தம் வாழ்க.. வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ, வாழ்க வளமுடன்

   //அழகழகான படங்கள்.. பறவைகளை நேரில் பார்ப்பதும் அழகு.. இப்படி பட்ங்களில் பார்ப்பதும் அழகு..//

   ஆமாம், பறவைகளை இறைவன் அழகாய் நம்மை மகிழ்விக்க படைத்து இருக்கிறான்.

   தங்களது அசாத்திய திறமை படங்களில் தெரிகின்றது..//
   ஏதோ எனக்கு தெரிந்தவரை எடுக்கிறேன். நிறைய திறமை கிடையாது.

   //தங்களுக்கும் பறவைகளுக்கும் உள்ள பந்தம் வாழ்க.. வாழ்க..//

   உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.   நீக்கு
 12. மிக அழகான படங்கள்! காடையின் அலகு வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் நிஜமாகவே ஒரு நல்ல பேர்ட் வாட்செர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

   //மிக அழகான படங்கள்! காடையின் அலகு வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் நிஜமாகவே ஒரு நல்ல பேர்ட் வாட்செர்!//

   நான் கண்ணுக்கு முன்னால் தெரியும் பறவைகளை கவனித்து எடுக்கிறேன்.

   உண்மையில் காடு, மேடு, வயல்வெளி என்று சிலர் தேடி எடுப்பார்கள்.அவர்கள் பேர்ட் வாட்செர். உங்கள் அன்புக்கு நன்றி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. படங்களும் அதற்கான வாசகங்களும் காணொளிகளும் அருமை. காடை பறவையை இப்போதுதான் பார்க்கிறேன். வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //படங்களும் அதற்கான வாசகங்களும் காணொளிகளும் அருமை. காடை பறவையை இப்போதுதான் பார்க்கிறேன். வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது.//
   மகன் ஊருக்கு வரும்போது எல்லாம் தோட்டத்திற்கு வந்த பறவைகள் படம் போடும் பொழுது காடை பறவை படம் போட்டு இருக்கிறேன்.

   https://mathysblog.blogspot.com/2021/12/blog-post_20.html
   இதில் காடை பறவை இருக்கிறது.

   https://mathysblog.blogspot.com/2021/12/blog-post_23.html
   இது காடை பறவையை வல்லூறு அடித்து வீழ்த்திய காட்சி பதிவு.

   https://www.youtube.com/watch?v=112gNNrZYg4&t=27s காடை உணவு உண்ணும் காணொளி போட்டு இருக்கிறேன்.

   காடை மகன் வீட்டில் நிறைய முட்டையிட்டு விட்டு பின் திரும்பி வரவில்லை அதை பற்றியும் கவலை பட்டு பதிவு போட்டு இருக்கிறேன் ராமலக்ஷ்மி.

   இன்னும் நடப்பது, ஓடுவது என்று பதிவு போட்டு இருக்கிறேன், சிலவற்றுக்கு நீங்கள் பின்னூட்டம் கொடுத்து இருக்கிறீகள்.
   காடை பறவை இங்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். நம் ஊர் காடை வேறு மாதிரி இருக்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. சிட்ட்க்குருவிகள் தினத்துக்கு படங்களும் பகிர்வும் நிறைவாக இருக்கிறது.

   அவை வாழ இடம் கொடுப்போம்.

   நீக்கு
  3. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //சிட்ட்க்குருவிகள் தினத்துக்கு படங்களும் பகிர்வும் நிறைவாக இருக்கிறது.

   அவை வாழ இடம் கொடுப்போம்.//

   ஆமாம், அவை வாழ இடம் கொடுப்போம்.
   எல்லா உயிர்களும் வாழதானே இவ்வுலகம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு