ஞாயிறு, 19 மார்ச், 2023

தாலாட்டு பாடல்கள்


தாலாட்டு பாடும் தாய்


 குழந்தைகளை தூங்க வைக்க பாடப்படும் பாட்டு தாலாட்டு . அதை கேட்டு குழந்தைகள் எல்லாம் நன்றாக தூங்கும்.

நகரத்தார் சமூகத்தில் தாலாட்டு பாடலை சிறு வயது முதலே பெண் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

இந்த பதிவில் இந்த தாலாட்டு பாடல் பதிவு பிறந்த கதை வருகிறது படித்து பாருங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

என் சிறு வயதில் சிவகாசியில் இருந்தோம். அந்த ஊரில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த நகரத்தார் குடும்பம் இருந்தார்கள். அவர்கள் அப்பா, அம்மா இருந்தவரை குடும்ப நண்பர்களாக இருந்தார்கள்.

அவர்கள் பெரிய பெண் முத்துமாரி அக்கா தாலாட்டு பாடல்களை சிலேட்டில் எழுதி மனப்பாடம் செய்வார்கள். "எதற்கு மனப்பாடம் செய்கிறீர்கள் அக்கா ?" என்று கேட்டால் தனக்கு குழந்தை பிறந்தால் குழந்தையை தூங்க வைக்க என்பார்கள்.

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ஒரு சமயம் அம்மன் போட்டு இருந்தது. அப்போது முத்துமாரி அக்கா தான் அவர்கள் அம்மா சமைத்து கொடுக்கும் உணவை கொண்டு வந்து தருவார்கள். அம்மன் போட்ட வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, கொடுப்பது, கொள்வது கூடாது என்பார்கள். ஆனால் முத்துமாரி அக்கா முத்துமாரி அம்மன் போல எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்தார்கள்.

அவர்கள் பாடிய பாட்டில் பட்டினத்தாரை அவர் தாய் தாலாட்டு பாடி தூங்க வைத்த பாடலும் அடக்கம். "சாயாவனம் பார்த்து முக்குளம் நீராடி உன்னை பெற்று எடுத்தேன்" என்ற வரி வரும். பட்டினத்தார் பிறந்த ஊர் திருவெண்காடு, திருவெண்காடர் என்ற பெயரும் பட்டினத்தாருக்கு உண்டு. திருவெண்காடு கோவில் முக்குளத்தில் நீராடி விரதம் இருந்து பெற்றாராம் அவர் அம்மா. பட்டினத்தாருக்கு கல்யாணம் பேசி முடிக்கும் விழா திருவெண்காடு கோவிலில் தான் நடக்கும்.

பட்டினத்தார் குழந்தை இல்லாமல் திருவிடைமருதூர் இறைவனை வணங்கி விரதம் இருக்கிறார்.

திருவிடைமருதூரில் வசிக்கும் சிவசர்மா தன் வறுமையை போக்க இறைவனை மனம் உருகி வேண்டுகிறார்.

திருவிடைமருதூர் இறைவன் குழந்தை "மருதவாணராக" ஏழை அந்தணர் சிவசர்மாவின் முன் தோன்றுகிறார். வறுமையை போக்க தன்னை பட்டினத்தாரிடம் கொடு , அவர் பொருள் கொடுப்பார் என்று சொல்லி மறைகிறார்.

ஒரே சமயத்தில் இருவரின் குறையை போக்குகிறார். அந்தணர் வறுமையை போக்கி, பட்டினத்தாருக்கு பிள்ளையை கொடுக்கிறார் இறைவன்.

பூம்புகார் அருகில் உள்ள பல்லவனீச்சுரத்தில் பட்டினத்தார் திருவிழா நடக்கும் ஆடி மாதம்.

பட்டினத்தார் குழந்தையின் எடைக்கு எடை தங்கம் கொடுத்து சிவசர்மாவிடம் வாங்கிய கதை பல்லவனீச்சுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் சாயாவன கோவிலில் "பிள்ளை இடுக்கி திருவிழா" என நடக்கும்.

நான் திருமணம் முடிந்து திருவெண்காடு வருவேன் என்றோ , கோவிலுக்கு அருகில் மடவிளாகத்தில் வீடு இருக்கும் என்றோ சாயாவனம் பார்ப்பேன் என்றோ, முக்குளம் நீராடி குழந்தைகளை பெற்றுக் கொள்வேன் என்றோ அன்று தெரியாது எனக்கு.

திருவெண்காட்டில் நகரத்தார் வீட்டில் குடி இருந்தேன், அவர்கள் வீட்டு மூத்தபெண் உமையாள் எனக்கு தோழி ஆனார். அவர் அப்பா, அம்மா எனக்கு அம்மா, அப்பாவாக இருந்தார்கள், அவர் தம்பி, தங்கைகள் எனக்கு உடன்பிறப்பு ஆனார்கள். என் குடும்பம் பெரிய குடும்பம் அனைவரையும் விட்டு திருவெண்காடு வந்த போது பிரிவு துயர் தெரியாமல் அரவணைத்த குடும்ப உறவு.

அம்மா எனக்கு செட்டி நாட்டு சமையல் முறை, மற்றும் சிக்கனம் , குழந்தை வளர்ப்பு முறை எல்லாம் சொல்லி தந்தார்கள்.

இன்றும் இறைவன் அருளால் அவர்கள் தொடர்பு இருக்கிறது. உமையாள் அப்பா, என் கணவருக்கு பழனி கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியர், கணவர் வேலை பார்த்த பூம்புகார் கல்லூரியில் பிரின்ஸ்பால்.

என் குழந்தைகளுக்கு பிரின்ஸ்பால் தாத்தா.

இப்போது கோவையில் இருக்கும் உமையாள் மற்றும் அவரின் தோழிகள் 6 பேருடன் வாட்ஸ் அப்குழுவில் மாலை 5 முதல் 6 வரை கூட்டு வழிபாடு செய்து வருகிறோம். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடுவோம்.

முன் கதை சொல்லி விட்டேன், இப்போது கதைக்கு வருவோம்.


https://www.youtube.com/wv=TITRQpkYQmQ&t=9shttps://www.youtube.com/watch?v=TITRQpkYQmQ&t=9s

என் தோழி உமையாள் ரவி இரண்டு நாள் முன்பு இந்த பாடலை பாடி அனுப்பி முகநூலில் பகிர சொன்னார். அங்கு பகிர்ந்து விட்டேன். இப்போதும் இங்கும் பகிர்ந்து விட்டேன். கேட்டுப் பாருங்கள். உமையாளுக்கு முகநூல் கணக்கு இல்லை. நண்பர்கள் மட்டுமே படிக்க முடியும் என் முகநூலில் அவர் படிக்க முடியாது என்பதால் இங்கு போட்டு இருக்கிறேன்.

உமையாளின் உறவினர் ஒருவர் தாலாட்டு பாடல் கேட்டு இருந்தாராம், அவருக்கு பாடல் வரிகளை எழுதி அனுப்பி பாடியும் அனுப்பினேன் என்றார்.




பாட்டு படிக்க முடிகிறதா?
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் போய் இருந்த போது துளசி விற்கும் அம்மா தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்த போது எடுத்த படம். (2016ல் காளமேகப் பெருமாள் கோவில் போன போது எடுத்த படம்.)


சிறு வயதில் இருந்தே பக்தியை புகட்ட புராண கதைகளை தாலாட்டு பாடலாக பாடி குழந்தையை தூங்க வைத்து இருக்கிறார்கள்.

உமையாள் ஆடியோவாக அனுப்பி இருந்தார், அது வலை ஏற மறுத்து விட்டது. மகனிடம் சொன்னேன், அவன் அதை ஒரு படத்தை போட்டு வீடியோவாக மாற்றி தந்தான். அதை நான் யூ-டியூப் காணொளியாக மாற்றி போட்டு இருக்கிறேன்.

உமையாளின் பாட்டி பாடி பின் அவர் அம்மா பாடி இப்போது அவள் பேரகுழந்தைகளுக்கு பாடி மகிழ்ந்தது என்றார்.

என் முதல் கவிதை நேரம் இருந்தால் படிக்கலாம். எத்தனை பின்னூட்டங்கள் அவர்கள் எழுதிய கருத்துக்களை மீண்டும் படித்து மகிழ்ந்தேன். வயதானபின் நினைவுகளை அசை போடுதல் சுகம்.
2011ல் போட்ட பதிவு.

நானே எழுதி என் குழந்தைகளுக்கு பாடிய தாலாட்டு பாடல், பின்பு பேரனுக்கு பாடியது இருக்கும் இந்த பதிவில். வேறு என்ன பாடல்கள் பாடி தூங்க வைப்பேன் என்பதும் இருக்கும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குழந்தையை தூங்க வைப்பார்கள். சிலர் மடியில் போட்டு தட்டிக் கொடுத்து பாடி தூங்க வைப்பார்கள், சிலர் தோளில் சாய்த்து தட்டி தூங்க வைப்பார்கள், சிலர் தொட்டிலில் போட்டு வீசி வீசி ஆட்டி தூங்க வைப்பார்கள். அதில் குழந்தைக்கு யார் ஆட்டுவது என்று கூட தெரியும், தன் அம்மாவா, மற்றவர்களா என்று. வேறு யாராவது ஆட்டினால் அழ ஆரம்பித்து விடும். தங்கை பேரன் என் தங்கை ஆட்டினால்தான் தூங்குவான். அவன் அம்மா ஆட்டினால் அழுவான்.

என் கணவர் விசில் செய்து பாடி குழந்தைகளை தூங்க வைப்பார்கள், பேரன் பேத்திகளுக்கும் அப்படி கையில் வைத்து, தோளில் போட்டு தட்டிக் கொடுத்து விசிலில் பாடுவார்கள். பதிவு செய்து வைத்து கொள்ளவில்லையே என்று இப்போது நினைக்கிறேன்.

தாலாட்டில் ஆராரோ, ஆரிராரோ கண்ணே கண் உறங்கு , செல்ல கண்ணே நீ கண் உறங்கு! என்று மாமன் பெருமை, குலபெருமை என்று பாடுவார்கள்.
பராசக்தியில் மாமன்கள் புகழ் பாடும் தாலாட்டு


குல பெருமை, இறைவன் புகழ் எல்லாம் வரும் இந்த பாடலில்


97 வயது பாட்டி  பாடும் தாலாட்டு   மதுரை அழகரை, சொக்கரை  புகழ்ந்து பாடி , விரதம் இருந்து பெற்ற குழந்தை என்று பாடுகிறார். கல்கத்தா ,  இராமேஸ்வரம், காசி  போய் என்று பாடுகிறார். பாட்டை பதிவு செய்பவர்  போதும் என்று  நிப்பாட்ட  சொல்கிறார்கள். இல்லையென்றால் இன்னும் பாடுவார், 97  வயதிலும் பாடலை மறக்காமல் மடை திறந்த வெள்ளம் போல பாடுகிறார்.

என் தோழி    இப்போது உள்ள பெண்கள் சினிமாவில் வரும் தாலாட்டு பாடல்களை போட்டுவிடுகிறார்கள்,   அதை கேட்டுக் கொண்டே தூங்கிவிடுகிறது குழந்தை என்று சொன்னார். 
அந்த வசதி இப்போது இருக்கே! இந்தக்கால தாலாட்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது.

இனிமையான பாடல் அவசியம் கேட்டு பாருங்கள்.https://www.youtube.com/watch?v=Ar5bH0t_Gew
சுசீலா, சித்ரா, ஹரிணி, சரண் பாடிய பாடல்.


முன்புகூட்டுக்குடும்பம், அப்புறம் தனி குடித்தனம், இப்போது உள்ள வேலைப்பார்க்கும் தாய்மார்கள், குழந்தைகளை வேலை செய்பவரிடம் விட்டு விட்டு வேலைக்கு போகும் போது  அலைபேசி மூலம் தாலாட்டு பாடுவது என்று வைரமுத்து எழுதிய தனிப்பாடல். முதல் தலைமுறைக்கு சுசீலா பாடுகிறார்கள்,

 தாலாட்டு பாடலில் காட்சி    மாற்றம் அடைந்ததை காட்டும் பாடல். முதல் தலைமுறை அனைத்து சுற்றமும் குழந்தையை கொண்டாடும் காட்சி  மகிழ்ச்சியை தரும், இரண்டாம் தலைமுறை  தனிக்குடித்தனம்,


மூன்றாவது தலைமுறை பாடல் வேலைக்கு போகும் தாய்மார்கள் கஷ்டத்தை சொல்லும். 
உறவுகள் எல்லாம் வெளிநாடு, அப்பா வெளிநாடு என்று இப்போது உள்ள கால சூழ்நிலையை சொல்லும் கடைசி பகுதி.



மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே பாடல். - குலசேகர ஆழ்வார் பாசுரம்
https://www.youtube.com/watch?v=JVgNquvnFZY&t=20s
மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி

 -பெரியாழ்வார் திருமொழி

https://www.youtube.com/watch?v=oCvTp9vFfsY&t=1s

 

              

தாலாட்டு பாடல்கள் பிடித்து இருக்கும், உங்களுக்கு நினைவு வந்த தாலாட்டு பாடல்களை , நீங்கள் பாடிய தாலாட்டு பாடல்களை பகிரலாம்.

பழைய சினிமா பாடல்களில் வரும் தாலாட்டு பாடல்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும் ஆனால் சோகமாக இருக்கும். "நீலவண்ண கண்ணா வாடா" நன்றாக இருக்கும்.


இப்போது தாலாட்டு பாடல்கள் இந்த வலைத்தளத்தில் நிறைய இருக்கிறது, குழந்தைக்கு பாட. கேட்டு பாருங்கள்.

இந்த பதிவை எழுத வைத்த என் தோழி உமையாளுக்கு நன்றி.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. தாலாட்டு குறித்து தங்களது அனுபவ பதிவு அருமை.

    காணொளிகள் முழுவதும் கேட்டேன் பழைய நினைவுகள் வந்தது.

    இன்றைய பெண்கள் தாலாட்டு பாடுவதில்லை காரணம் முதலில் பாடத் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் புரியாது.. பண்பாடு தெரியாது என்பதே முக்கியம்..

      நீக்கு
    2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //தாலாட்டு குறித்து தங்களது அனுபவ பதிவு அருமை.//
      நன்றி.

      //காணொளிகள் முழுவதும் கேட்டேன் பழைய நினைவுகள் வந்தது.//

      மகிழ்ச்சி.

      //இன்றைய பெண்கள் தாலாட்டு பாடுவதில்லை காரணம் முதலில் பாடத் தெரியாது.//

      இந்த மாதிரி தாலாட்டு பாட வெட்கப்படுவார்கள் போலும் ஆனால் சினிமாவில் வரும் தாலாட்டு பாடல் பாடுகிறார்கள்.
      என் அக்கா மருமகள், "கண்ணன் வருவான் கதை சொல்லுவான் "பாடலை பாடி குழந்தையை தூங்க வைப்பாள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. தாலாட்டு பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை. உங்கள் முன் அனுபவங்கள் சுவாரஸ்யம். திருமணமாகிப் போகப்போகும் ஊர் பற்றிய விவரங்களை முன்னரே அறிய வைத்தது இறைவன் சித்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //தாலாட்டு பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை. உங்கள் முன் அனுபவங்கள் சுவாரஸ்யம்//

      நல்லது , மகிழ்ச்சி.

      //திருமணமாகிப் போகப்போகும் ஊர் பற்றிய விவரங்களை முன்னரே அறிய வைத்தது இறைவன் சித்தம்.//

      ஆமாம், இறைவன் சித்தம்தான், அப்படித்தான் நினைக்கிறேன் நீங்கள் சொன்னதும்.

      நீக்கு
  3. நிறைய பாடல்கள் பகிர்ந்திருக்கிறீர்கள்.  அப்புறம் ஒவ்வொன்றாய் மொபைலில் கேட்கவேண்டும்.  கணினி ஸ்பீக்கர் இன்னும் சரி செய்யவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள். எல்லாம் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  4. மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே பாடல் பி வி ராமன் பி வி லக்ஷ்மணன் பாடி கேட்டுக்கேட்டு அதுவே மனதில் நின்று விட்டது. தாலாட்டு பற்றிய பல திரைப்பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே பாடல் பி வி ராமன் பி வி லக்ஷ்மணன் பாடி கேட்டுக்கேட்டு அதுவே மனதில் நின்று விட்டது. //

      இருவர் பாடிய பாடலும் நன்றாக இருக்கும்.நானும் கேட்டு இருக்கிறேன்.

      //தாலாட்டு பற்றிய பல திரைப்பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.//
      உங்களுக்கு நினைவுக்கு வராமல் இருக்குமா !

      நீக்கு
  5. திருமணமான புதிதில் பழகிய மக்களோடு இன்னமும் தொடர்பில் இருப்பதும், அவர்கள் அன்பும் நெகிழ வைக்கும் விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருமணமான புதிதில் பழகிய மக்களோடு இன்னமும் தொடர்பில் இருப்பதும், அவர்கள் அன்பும் நெகிழ வைக்கும் விஷயங்கள்.//

      உமையாள் அப்பா, அம்மா இருக்கும் போது மாயவரம் வரும் போது எல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.

      அவர்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்வோம். இன்பம், துன்பங்களில் கலந்து கொள்ளும் நட்பு நீடிக்கிறது.
      இன்று காலை பதிவை உ௳இயாளுக்கு அனுப்பி வைத்து பேசினேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..

      சார் மறைவுக்கு பின் வந்து பார்த்து போனார் , அடிக்கடி போனில் பேசி ஆறுதல் சொல்லுவார். அவர் தங்கைகள் எல்லோரும் அடிக்கடி பேசுவார்கள்.

      நீக்கு
  6. அருமையான பதிவு..

    திருவெண்காட்டிற்கு வருவதற்கு முன்பே அவ்வூரைப் பற்றிக் கேள்விப் படுவதும் அங்கே வந்தபின் புதிய உறவுகள் கிடைப்பதும்
    தெய்வச் செயல்...

    பிறகு வருகின்றேன்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //திருவெண்காட்டிற்கு வருவதற்கு முன்பே அவ்வூரைப் பற்றிக் கேள்விப் படுவதும் அங்கே வந்தபின் புதிய உறவுகள் கிடைப்பதும்
      தெய்வச் செயல்...//

      நல்லோர் நட்பு கிடைப்பது தெய்வ செயல்தான். நம் வலைத்தள நட்புகள் அப்படித்தான்.

      வாருங்கள் மெதுவாக.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. மிக நீண்ட பதிவு. 2 அல்லது 3 பதிவுகளாக வெளியிட்டிருக்கலாம். புகைப்படம் அருமை. 

    தாலாட்டு பாடுவது 2 தலைமுறைகளுக்கு முன்பே நின்றுவிட்டது. தற்போது பிள்ளைகள் மொபைலில் விளையாடிக்கொண்டே தூங்கும் காலம். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வகமுடன்

      //மிக நீண்ட பதிவு. 2 அல்லது 3 பதிவுகளாக வெளியிட்டிருக்கலாம். புகைப்படம் அருமை. //
      ஓ! நீண்ட பதிவாக இருக்கா? பாடல்கள் , சுட்டிகள், அதனால் அதிகமாக தோன்றுகிறது.

      //தாலாட்டு பாடுவது 2 தலைமுறைகளுக்கு முன்பே நின்றுவிட்டது. தற்போது பிள்ளைகள் மொபைலில் விளையாடிக்கொண்டே தூங்கும் காலம். //

      ஆமாம், குழந்தைகள் மொபைலில் விளையாடும் காலம் தான். ஆனால் பாடலையும் குழந்தைகள் ரசிக்கிறது. பாட்டை போட்டு விட்டு தூங்க வைக்கிறார்கள் இப்போது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. தாலாட்டு பாடல்கள் அருமையாக உள்ளது அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //தாலாட்டு பாடல்கள் அருமையாக உள்ளது அம்மா...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. இன்று சிட்டுக்குருவி பற்றிய பதிவு வரும் என்று நினைத்திருந்தேன் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று சிட்டுக்குருவி பற்றிய பதிவு வரும் என்று நினைத்திருந்தேன் அம்மா..//

      ஆஹா! மறந்தே போனேன். இன்று "உலக சிட்டுக்குருவி தினம் "இல்லையா? சிட்டுக்குருவிகள் இப்போது குரல் கொடுத்து "எங்களை மறந்து விட்டாயா?" என்று கேட்பது போல உள்ளது.

      குளிரில் மற்ற பறவைகள் குறைவு என்றாலும் சிட்டுக்குருவிகள் அங்கும் இங்கும் பறந்து கொண்டு இருக்கிறது. அடுத்த பதிவில் குருவியை போட்டு விடுகிறேன். நான் உலகசிட்டுகுருவி தினத்தில் பதிவு போடுவேன் என்பதை நினைவு வைத்து சொல்லியது மகிழ்ச்சி தனபாலன், நன்றி.

      தோழி பகிர சொன்ன தாலாட்டு பாடல் மனதில் நிறைந்து இருந்த காரணத்தால் குருவியை மறந்து போனேன்.

      நீக்கு
  10. நான் திருமணம் முடிந்து திருவெண்காடு வருவேன் என்றோ , கோவிலுக்கு அருகில் மடவார்விளாகத்தில் வீடு இருக்கும் என்றோ சாயாவனம் பார்ப்பேன் என்றோ, முக்குளம் நீராடி குழந்தைகளை பெற்றுக் கொள்வேன் என்றோ அன்று தெரியாது எனக்கு.//

    எல்லாமே அந்த மாபெரும் சக்தியின் கணக்குதான் கோமதிக்கா....இல்லையா..!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //நான் திருமணம் முடிந்து திருவெண்காடு வருவேன் என்றோ , கோவிலுக்கு அருகில் மடவிளாகத்தில் வீடு இருக்கும் என்றோ சாயாவனம் பார்ப்பேன் என்றோ, முக்குளம் நீராடி குழந்தைகளை பெற்றுக் கொள்வேன் என்றோ அன்று தெரியாது எனக்கு.//

      உண்மை கீதா, பள்ளியில் சுற்றுலாவில் திருவெண்காடு கோவிலை பார்த்து இருக்கிறேன் அங்கே திருமணம் ஆகி வருவேன் என்று அப்போதும் நினைக்கவில்லை.

      //எல்லாமே அந்த மாபெரும் சக்தியின் கணக்குதான் கோமதிக்கா....இல்லையா..//
      ஆமாம் கீதா, எல்லாமே இறைவனின் கணக்குதான்.

      நீக்கு
  11. சுவாரசியமான பதிவு. உங்கள் தோழி உமையாள் அவர்கள் பாடியதைக் கேட்டேன் நன்றாக இருக்கிறது. அப்படியே நாட்டுப்புறப்பாடலுக்கான குரல் வளம்!!! வரிகளும் வாசிக்க முடிந்தது. கேட்டுக் கொண்டே வாசித்தேன். அருமை..

    திருவெண்காட்டில் கிடைத்த நட்பு இப்போதுவரைதொடர்வது மகிழ்வான விஷயம். பதிவு பிறந்த கதையும் சுவாரசியம்.

    பகிர்ந்த பாடல்கள் எல்லாமே சுகம்.

    மன்னு புகழ் கோசலைதன் பாட்டு பி வி ராமன் பி வி லக்ஷமண் அவர்கள் பாடிக் கேட்டு அந்த ராகங்களே மனதில் பதிந்து இருக்கிறது. என் மகனுக்குப் பாடித் தூங்க வைத்ததுண்டு. அவன் பிறக்கும் முன்னும் கூட....பாடுவேன். அது போல தெரிந்த தமிழ்க் கிருதிகள் பாடுவேன்....தாலாட்டுப் பாடல்கள் என்று இறைவனைப் போற்றிப் பாடி - நீங்கள் சொல்லியிருப்பது போல - இருக்கும் பாடல்கள் பாடியதுண்டு.

    தூளி, தோள், மடி என்று பல வகையிலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுவாரசியமான பதிவு. உங்கள் தோழி உமையாள் அவர்கள் பாடியதைக் கேட்டேன் நன்றாக இருக்கிறது. அப்படியே நாட்டுப்புறப்பாடலுக்கான குரல் வளம்!!! வரிகளும் வாசிக்க முடிந்தது. கேட்டுக் கொண்டே வாசித்தேன். அருமை..//

      தோழி உமையாளுக்கு நீங்கள் சொல்வது போல நல்ல குரல் வளம் தான்.

      //திருவெண்காட்டில் கிடைத்த நட்பு இப்போதுவரைதொடர்வது மகிழ்வான விஷயம். பதிவு பிறந்த கதையும் சுவாரசியம்.//

      இறைவன் அருளால் இனியும் தொடர வேன்டும். பதிவு பிறந்த கதை பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      //மன்னு புகழ் கோசலைதன் பாட்டு பி வி ராமன் பி வி லக்ஷமண் அவர்கள் பாடிக் கேட்டு அந்த ராகங்களே மனதில் பதிந்து இருக்கிறது. என் மகனுக்குப் பாடித் தூங்க வைத்ததுண்டு. அவன் பிறக்கும் முன்னும் கூட....பாடுவேன். அது போல தெரிந்த தமிழ்க் கிருதிகள் பாடுவேன்....தாலாட்டுப் பாடல்கள் என்று இறைவனைப் போற்றிப் பாடி - நீங்கள் சொல்லியிருப்பது போல - இருக்கும் பாடல்கள் பாடியதுண்டு.//

      உங்கள் குரல் இனிமையாக இருக்கும். நீங்கள் பாடவில்லை என்றால் எப்படி! நன்றாக பாடி இருப்பீர்கள். மகனும் ஆனந்தமாக அம்மவின் பாடலை கேட்டு தூங்கி இருப்பார்.

      நீக்கு
  12. பழைய நினைவுகள் பல மீண்டன.

    மாணிக்கம் கட்டி பாடலும் பாடியதுண்டு...

    அருமையான பாடல்கள் பகிர்ந்திருக்கீன கோமதிக்கா...

    மாமா குழந்தைகளைத் தூங்க வைப்பது போன்ற பழைய நினைவுகள் அனைத்தும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழைய நினைவுகள் பல மீண்டன.//

      நன்றி கீதா

      மாணிக்கம் கட்டி பாடலும் பாடியதுண்டு...//

      ஆமாம் நல்ல பாடல்.

      அருமையான பாடல்கள் பகிர்ந்திருக்கீன கோமதிக்கா...//
      நன்றி கீதா உங்களுக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும் என்று தெரியும்.

      //மாமா குழந்தைகளைத் தூங்க வைப்பது போன்ற பழைய நினைவுகள் அனைத்தும் ரசித்தேன்//
      பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி எனக்கு.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றிகள் கீதா.

      நீக்கு
  13. தாலாட்டுப் பாடல்கள் பகிர்வு அருமை. இப்போது எல்லாம் எங்கே?

    நல்ல பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //தாலாட்டுப் பாடல்கள் பகிர்வு அருமை. இப்போது எல்லாம் எங்கே?//

      காலமாற்றம் குழந்தைகள் வளர்ப்பு மாறி இருக்கிறது.

      நல்ல பாடல்கள்.//

      பாடல்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  14. அருமையான
    பதிவு..
    இன்மையான
    பாடல்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான
      பதிவு..
      இன்மையான
      பாடல்கள்..//

      நன்றி உங்கள் கருத்துக்கு சகோ

      நீக்கு
  15. இப்போது சினிமாக்களில் கூட தாலாட்டுவது
    மாதிரி காட்சிகள்
    இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது சினிமாக்களில் கூட தாலாட்டுவது
      மாதிரி காட்சிகள்
      இல்லை..//

      புது தாலாட்டு பாடல் நிறைய் வந்து இருக்கே!
      நாம் புதுபடங்கள் பார்ப்பது இல்லை. தந்தை பாடும் பாட்டு, தாய் பாடும் பாட்டு எல்லாம் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. https://www.youtube.com/watch?v=Jbn8Lc7WN-U
      தந்தையின் தலாட்டு இந்த பாடல் உங்களுக்கு பிடிக்கும் கேட்டு பாருங்கள் சகோ.

      நீக்கு
  16. எத்தனை எத்தனையோ தாலாட்டுப் பாடல்கள் பழைய திரைப் படங்களில்..

    இளைய தலைமுறையினர் அந்த வாய்ப்பினை இழந்தே விட்டனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எத்தனை எத்தனையோ தாலாட்டுப் பாடல்கள் பழைய திரைப் படங்களில்..//
      ஆமாம், உண்மை.

      //இளைய தலைமுறையினர் அந்த வாய்ப்பினை இழந்தே விட்டனர்..//

      திரைபடங்களில் பாடல் இடம்பெறவில்லையென்றாலும் , யூ-டியூப்பில் எத்தனை எத்தனை தாலாட்டு பாடல் அதை கேட்கிறார்கள். கேட்கும் எண்ணிக்கை கீழே இருப்பதை பார்த்தால் தெரிகிறது.
      இனிமையாக பாடுகிறார்கள் இளைய தலைமுறையினர்.

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  17. // புது தாலாட்டு பாடல் நிறைய் வந்து இருக்கே!..//

    புதிய திரைப் படங்கள் பார்ப்பதில்லை..

    வானொலியிலும் கேட்டதில்லையே..

    ஏ.. ஷாமி... ஷாமி.. என்ற பாடலும்

    தாய்க் கெளவி.. என்ற பாடலும் தான் ஓயாமல்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. / புது தாலாட்டு பாடல் நிறைய் வந்து இருக்கே!..//

      புதிய திரைப் படங்கள் பார்ப்பதில்லை..//

      நானும் புதிய திரைப் படங்கள் நிறைய பார்ப்பது இல்லை.

      //வானொலியிலும் கேட்டதில்லையே..//

      இங்கும் நான் வானொலி கேட்கிறேன், நீங்கள் சொல்லும் பாடல் கேட்கவில்லை, பழைய புதிய பாடல்கள் கேட்கிறேன், நல்ல நல்ல பாடல் ஒலிக்கிறது. காலை பக்தி பாடல்களை கேட்கிறேன் , அது எங்கள் இரவில் ஒலிக்கும். ஆத்தீசூடி என்ற காலை பகுதியில் நல்ல நல்ல விஷயங்கள் சொல்கிறார்கள்.

      பண்பலையில் நிறைய நல்ல விஷயங்கள் சொல்கிறார்கள். பாடல் நேயர் விருப்பமும் அருமையாக இருக்கிறது. தமிழ் வானெலி என்று அனைத்து Fm அலை வரிசைகள் இருக்கிறது.

      Hello Fm, RADIO MIRCHI ,Radio City Fm என்று கைபேசியில் கேட்கிறேன். நல்ல பாடல் இல்லையென்றால் வேறு அலை வரிசைக்கு மாறி கொள்ளலாம். பழைய , புதிய பாடல்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள்.அந்த நேரம் கேட்கலாம்.

      உங்கள் மறு வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாலாட்டு பாடல்களை பற்றி சொன்ன விதம் சுவாரஸ்யமானது. தங்கள் நட்பின் பெருமையையும் பற்றி அறிந்து கொண்டேன். நீங்கள் திருமணமாவதற்கு முன்பே பாடல்களை கற்றதையும் பாடல்களில் வருவது போல அந்த ஊரிலேயே வாழ்க்கைப்பட்டு, உங்கள் குழந்தைககள் பிறந்த பின் தாலாட்டு பாடல்களையும் சொந்தமாக இயற்றி குழந்தைகளுக்கும், பேரன் பேத்திக்குமாக தாலாட்டு பாடல்களை பாடியதற்கு மிக்க மகிழ்ச்சி நல்ல விபரமாக பதிவை தொகுத்து தந்துள்ளீர்கள் காணொளிகளை பிறகு நிதானமாக கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நலம்தானே! இரண்டு நாளாக உங்களை எந்த தளத்திலும் காணவில்லையே என்று நினைத்தேன். உடல் நலமாக இருக்கிறீர்கள் தானே!

      இன்று உங்களை நினைத்து கொண்டேன் அடுத்த பதிவு போடுகிறோம் , போன பதிவை கமலா படிக்கவில்லையே என்று நினைத்தேன். வந்து பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள் மகிழ்ச்சி.

      நேரம் கிடைக்கும் போது காணொளியை பாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு