வியாழன், 30 மார்ச், 2023

மெல்லிசை மாலை

மெல்லிசை மாலை நிகழ்ச்சி
இசைக்கு மயங்காதவர்  உண்டோ! இறைவன் முதல் சகல ஜீவராசிகளும் இசைக்கு மயங்குபவர்கள்தான். பிறந்தது முதல் குழந்தை தாயின் தாலாட்டு கேட்டு வளர்கிறது. இசை ஆர்வம் சிறு வயது முதல் வந்து விடுகிறது. குரல் இனிமை, பாடும் திறமை எல்லாம்   சிலருக்கு பிறவியிலேயே வருகிறது. சிலர் இசை ஆர்வத்தால்  கற்றுக் கொண்டு பாடுகிறார்கள். சிலர்  கேள்வி ஞானத்தில் பாடுகிறார்கள்.

தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது மெல்லிசை மாலை நிகழ்ச்சியை. அதில் கலந்து கொண்டேன், பாட இல்லை பார்வையாளாராக. அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில்.

தமிழ்த்தாய் பாடல் பாடும் குழந்தைகள்

விழா ஆரம்பிக்கும் முன் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. என் பேரனும் பாடினான்.

இப்போது உள்ள குழந்தைகளுக்கு மேடை அமைவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு குரல் தேர்வு செய்து  பாட ஆசை உள்ளவர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கிறார்கள்.  உலகம் முழுவதும் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். திறமையை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

நடனம், கர்நாடக இசை எல்லாம் தொலைகாட்சி சேனல்களில் உள்ளது.  அவர்கள் திறமையை காட்ட முடிகிறது.

வெற்றி, தோல்வியை சமமாக பாவித்து வாய்ப்புக்கு நன்றி சொல்லி முன்னேற வேண்டும்.நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.. 

தனி பாடல், சினிமாபாடல், கர்நாடக சங்கீதம் எல்லாம் பிடிக்கும், அதனால் நிகழ்ச்சியை ரசித்து கேட்டேன். எவ்வளவு திறமைகள் இருக்கிறது ஒவ்வொருவரிடமும்  . குழந்தைகள் பாடும் போது பெற்றோர்கள், மற்றும் தாத்தா பாட்டி மகிழ்வதும், பெற்றோர்கள் பாடும் போது குழந்தைகள் ரசிப்பதும் கண் கொள்ள காட்சி.

தொகுத்து வழங்கிய தமிழ்ச்சங்க உறுப்பினர்கள். நன்றாக ரசனையாக தொகுத்து வழங்கினார்கள்.

அமெரிக்காவில்  உள்ள தமிழ் எழுத்தாளர் திரு. உதயநேசன் அவர்கள்,  சினிமா இயக்குனர் திரு.  சீனு ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்கள்.


உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் பெருமையும் பூரிப்பும் அடையும் அளவிற்கு சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று அமெரிக்காவில் உருவாகி இருக்கிறது.  . அதை உருவாக்கி இருப்பவர்  தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் பங்குதார்களில்  ஒருவரும் , படைப்பாளரும், பெருந்தமிழருமான தாழை இரா, உதயநேசன் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்."அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பல்கலைகழகக்கழகம் தமிழ் வளர்ச்சி பணிகள், தமிழ் அமர்வுகள், இலக்கண இலக்கிய வகுப்புகள், தமிழ் வகுப்புகள், படைப்பிலக்கிய பயிற்சி வகுப்புகள் , போன்றவற்றை நடத்துகிறது. தமிழின் சிறந்த  படைப்பாளர்களைத் துறைவாரியாக தேர்வு செய்து சிறப்பு முனைவர் பட்டங்களையும் இந்த பல்கலைக்கழகம்  வழங்க இருக்கிறது, இதற்கான அங்கீகாரத்தையும் கழகம் பெற்றிருக்கிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் வேந்தராக டாக்டர் இரா. உதயநேசன் அவர்கள் இருக்கிறார்.

இண்டியானா பல்கலைக்கழக மருத்துவமனையில் "உளவியல்" ஆலோசகராக இவர் பணியாற்றி வருகிறார்.

வட அமெரிக்காவில் வசித்தாலும் தான் பிறந்து வளர்ந்த  மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று  தன் சொந்த ஊரில் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு  மாலை நேர டீயூசன் வகுப்புகளை தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்.

குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் உள்ள 100 மாணவ, மாணவிகளுக்கு  இலவச வகுப்பும், தினசரி இரவு உணவும் வழங்கி வருகிறார்.

ஆம்பூர் பகுதியில் ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து  அவர்களுக்கு தையல் மிஷின் வழங்கி , அவர்களுக்கு வேலை வாய்ப்பும்  ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.

சமூக தொண்டிற்கும் இலக்கிய தொண்டுக்கும்  எண்ணற்ற  விருதுகள் வாங்கி இருக்கிறார். இவை எல்லாம் பத்திரிக்கையில் அவரை பற்றி அறிந்து கொண்ட செய்திகள். 
அவரை பற்றி தெரிந்து கொள்ள மகனிடம் கேட்டேன். பத்திரிகையில் அவரைப்பற்றி வந்தவற்றை கொடுத்தான் படிக்க. படித்ததை பகிர்ந்து இருக்கிறேன். நக்கீரன்  பத்திரிக்கைக்கு   நன்றி.


அமெரிக்காவில் 29 ஆண்டுகளாக நடைபெறும் பெருமை மிகு பாரம்பரிய செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர்   சீனு ராமசாமியின் திரைப்படம் "மாமனிதன்" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டதால் கலந்து கொள்ள வந்து இருந்தார்.

அப்படியே  இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அடுத்து ஏபரல் 20 முதல் 27 வரை நடைபெறும் 45 வது  மாஸ்கோ சர்வதேச திரைப்படவிழாவில் " மாமனிதன் "படத்தை திரையிட ரஷ்யா அரசாங்கம்  முடிவு செய்து இருக்கிறதாம்.

நான் அந்த படத்தில் என்ன சிறப்பு என்று பார்க்க படம் பார்த்தேன். அமைதியாக சென்று கொண்டு இருந்த ஒருவரின் வாழ்வு எப்படி தடம் புரள்கிறது என்பதை சொல்கிறது.

தன் குழந்தைகள் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் தரமான பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். தரமான பள்ளி  என்றால் அதிகம் காசு கட்டி படிக்கும் பள்ளி என்ற  எண்ணத்தால் பிள்ளைகளை படிக்க வைக்க பணம் சம்பாதிக்க தன் ஆட்டோ வருமானம் பத்தாது. என்று முடிவுக்கு வந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரை நம்பி அதில் அவருடன் இணைந்து படும் அவதியை சொல்கிறது. நன்றாக நடித்து இருந்தார்கள் எல்லா நடிகர்களும். 

மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் பாடபட்டன

சினிமா பாடல்களை மிக அருமையாக பாடினார்கள் அனைவரும். பழைய ,புதிய பாடல்களில் நல்ல பாடல்களை தேர்வு செய்து பாடினார்கள்.
இருவர் பாடும் பாடல்கள், ஒருவர் பாடும் பாடல்கள் என்று எல்லா பாடலும் அருமையாக பாடினார்கள்

மலரே மெளனமா? என்ற பாடலை மலர் போல மலர்ந்து மகிழ்ச்சியாக பாடினார்
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி
ஆடியோ அண்ட் சவுண்ட் கண்ட்ரோலை மகன் பார்த்து கொண்டார் 

டாக்டர்  உதயசேனன் பேசினார்
அடுத்து சீனு ராமசாமி பேசினார்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்களை பாராட்டினார்.  குளிர் அடிக்கும் பாலை வந்து இருப்பதால் பழக்கம் இல்லாத கோட் அணிந்து வந்து இருக்கிறேன் என்றார். இங்கு ஊர் முழுவதும் கள்ளிச்செடிகள் இருக்கிறது.  வைரமுத்து  "கள்ளிக்காட்டு இதிகாசம்" எழுதி இருக்கிறார்.    இங்குவந்தால் கள்ளிக்காட்டு காவியம் எழுதி விடுவார் என்றார். 

பாடியவர்களை பாராட்டி பேசினார். தமிழை நன்கு உச்சரித்து குழந்தைகள் பாடியதை பாராட்டினார், பெரியவர்கள் பாடியதையும் பாராட்டி எல்லோரும் நல்ல பாடல்களை தேர்வு செய்து பாடியதற்கு வாழ்த்துக்கள் சொன்னார்.

அவரிடம் கேள்வி கேட்டார்கள் . தரமான படம் மட்டும் தான் எடுப்பேன்  என்று சொன்னார். 

தமிழ்சங்க உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களுடன்  படம் எடுத்து கொண்டார்கள். தனி தனியாகவும் குடும்பத்துடனும் படம் எடுத்து கொண்டார்கள்.

நாங்களும் எடுத்துக் கொண்டோம் சீனு ராமசாமி "அம்மா வாங்க என் அம்மா போல இருக்கிறீர்கள்" என்றார்.

தமிழ்ச்சங்க தலைவர் திரு. நாகராஜன்தெய்வசிகாமணி , மற்றும்  சிறப்பு விருந்தினர்   , திரு. உதயநேசன் அவர்களுடனும் படம் எடுத்துகொண்டோம்.

மாலை பொழுது மெல்லிசையால்  சுகமானது. பல நினைவுகளை தந்தது.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. நல்லதொரு நிகழ்வை சொல்லிய விதம் அருமை.

    படங்கள் நன்று.

    திரு. உதயநேசன் அவர்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் நன்று.

      திரு. உதயநேசன் அவர்களை வாழ்த்துவோம்.//
      அவர் செய்து வரும் நல்ல காரியங்களுக்கு அவரை வாழ்த்த வேண்டும், வாழ்த்துவோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  2. சிறப்பான நிகழ்வு. குழந்தைகள் வரிசையில் உங்கள் பேரன் இருப்பதைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கடைசியில் பேரன் நிற்பான்

      நீக்கு
  3. திரு உதயநேசன் பற்றி இன்றுதான் அறிகிறேன்.  மாமனிதர்தான். செல்லும் இடமெல்லாம் தடம் பதிப்பவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு உதயநேசன் பற்றி இன்றுதான் அறிகிறேன். மாமனிதர்தான். செல்லும் இடமெல்லாம் தடம் பதிப்பவர்கள்.//

      ஆமாம், மாமனிதர்தான்.

      நீக்கு
  4. பாட்டுக்குப் பாட்டு வேறா?  உங்கள் மகனும் இது மாதிரி விழாவின் அமைப்பாளர்களுடன் இணைவது பெருமையான, பாராட்டப்பட வேண்டிய செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாட்டுக்குப் பாட்டு வேறா? உங்கள் மகனும் இது மாதிரி விழாவின் அமைப்பாளர்களுடன் இணைவது பெருமையான, பாராட்டப்பட வேண்டிய செயல்.//

      பாட்டுக்கு பாட்டு நிகழச்சி சிறிது நேரம் தான். நன்றாக இருந்தது.
      மகனை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  5. மெல்லிசை இரவாக அருமையான பாடல்களுடன் கழிந்தது அந்த மாலை என்று தெரிகிறது.  சந்தோஷ தருணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெல்லிசை இரவாக அருமையான பாடல்களுடன் கழிந்தது அந்த மாலை என்று தெரிகிறது. சந்தோஷ தருணங்கள்.//

      ஆமாம், சந்தோஷ தருணங்கள் தான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. இனிமையான நிகழ்வு அம்மா... படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //இனிமையான நிகழ்வு அம்மா... படங்கள் அருமை...//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அரிசோனா தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சியைப் பற்றி அழகாக விவரித்து கூறியுள்ளீர்கள்.பல செய்திகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    தமிழ் எழுத்தாளர் திரு உதயசேனன், திரைப்பட இயக்குனர் திரு சீனு ராமசாமி அவர்களைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன். திரு உதயசேனன் அவர்கள் தாய் நாட்டுக்கென ஆற்றும் பல நற்செயல்கள் மகிழ்வை தருகின்றன.

    பாடல்கள் பாடுவதில் கலந்து கொண்ட தங்கள் பேரனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இசையுடன் இணைந்து செயல்படும் தங்கள் மகனுக்கும் வாழ்த்துகள்.

    படங்கள் அனைத்தும் வழக்கம் போல் நன்றாக எடுத்துள்ளீர்கள். இறுதியில் விழா முடிந்ததும் தலைமையேற்றவர்களுடன் தங்கள் குடும்பசகிதம் எடுத்த போட்டோக்கள் நன்றாக உள்ளது. அன்றைய பொழுது நல்ல பொழுதாக மன மகிழ்ச்சி தரும் வண்ணம் நடந்தேறியிருக்கும் என நினைக்கிறேன். இத்தனையும் நீங்கள் அழகாக பகிர்ந்து கொள்வதால் நாங்களும் கண்டு விழாக்களில் உடனிருந்தததைப் போன்று பெருமகிழ்ச்சி எய்துகிறோம். இதற்கு உங்களுக்குத்தான் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. அரிசோனா தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சியைப் பற்றி அழகாக விவரித்து கூறியுள்ளீர்கள்.பல செய்திகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.//

      நன்றி, எனக்கும் இந்த நிகழ்வாழ் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

      //தமிழ் எழுத்தாளர் திரு உதயசேனன், திரைப்பட இயக்குனர் திரு சீனு ராமசாமி அவர்களைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன். திரு உதயசேனன் அவர்கள் தாய் நாட்டுக்கென ஆற்றும் பல நற்செயல்கள் மகிழ்வை தருகின்றன.//

      ஆமாம், உதயசேனன் அவர்கள் தாய் நாட்டு மக்களுக்கு உதவி செய்வது நல்ல செயல், சீனு ராமசாமியும் மண் சார்ந்த குடும்பம், அன்பு என்று தரமான படங்களை எடுப்பவர்.

      //பாடல்கள் பாடுவதில் கலந்து கொண்ட தங்கள் பேரனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இசையுடன் இணைந்து செயல்படும் தங்கள் மகனுக்கும் வாழ்த்துகள்.//

      மகனையும், பேரனையும் வாழ்த்தியதற்கு நன்றி .

      //படங்கள் அனைத்தும் வழக்கம் போல் நன்றாக எடுத்துள்ளீர்கள். இறுதியில் விழா முடிந்ததும் தலைமையேற்றவர்களுடன் தங்கள் குடும்பசகிதம் எடுத்த போட்டோக்கள் நன்றாக உள்ளது. அன்றைய பொழுது நல்ல பொழுதாக மன மகிழ்ச்சி //
      அன்றைய பொழுது நல்ல பொழுதுதான். உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி, என் நினைவுகளின் சேமிப்பாகவும் பதிவை எழுதுகிறேன்.
      உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  8. நல்லதொரு நிகழ்வு..

    அதனை விவரித்திருக்கும் விதம் மிகவும் அருமை...

    இங்கே தமிழகத்தில் கூட் இம்மாதிரியான நிகழ்வுகள் அபூர்வம்..

    படங்கள் அழ்ச்கு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //நல்லதொரு நிகழ்வு..

      அதனை விவரித்திருக்கும் விதம் மிகவும் அருமை...//
      உங்கள் கருத்துக்கு, வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  9. கோமதிக்கா முதல் படத்திலேயே பேரன் நிற்பதைப் பார்த்துவிட்டேன்!!! தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் கலந்து கொண்டு பாடியது சிறப்பு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா முதல் படத்திலேயே பேரன் நிற்பதைப் பார்த்துவிட்டேன்!!! தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் கலந்து கொண்டு பாடியது சிறப்பு!!//

      ஆமாம், கவின் தமிழ்த்தாய் பாட்டு மட்டும் பாடினான்.

      நீக்கு
  10. இப்போது உள்ள குழந்தைகளுக்கு மேடை அமைவது மகிழ்ச்சியாக இருக்கிறது.//

    ஆமாம் அக்கா பலவித ஊடகங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதும் தெரிய வருகிறது.

    எவ்வளவு திறமைகள் இருக்கிறது ஒவ்வொருவரிடமும் . குழந்தைகள் பாடும் போது பெற்றோர்கள், மற்றும் தாத்தா பாட்டி மகிழ்வதும், பெற்றோர்கள் பாடும் போது குழந்தைகள் ரசிப்பதும் கண் கொள்ள காட்சி.//

    ஆமாம் உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது மகிழ்வான விஷயம் கோமதிக்கா.

    உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் பெருமையும் பூரிப்பும் அடையும் அளவிற்கு சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று அமெரிக்காவில் உருவாகி இருக்கிறது. . அதை உருவாக்கி இருப்பவர் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் பங்குதார்களில் ஒருவரும் , படைப்பாளரும், பெருந்தமிழருமான தாழை இரா, உதயநேசன் ஆவார்.//

    இதை வாசித்த போது புல்லரித்தது. அடுத்து வரும் பகுதி அவரைப் பற்றி அறிய உதவியது. எவ்வளவு பெரிய மனிதர்!

    //இண்டியானா பல்கலைக்கழக மருத்துவமனையில் "உளவியல்" ஆலோசகராக இவர் பணியாற்றி வருகிறார்.//

    ஆஹா கூடுதல் சிறப்பு!!!..

    குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதிகள் எல்லாம் மிகவும் பின் தங்கி இருக்கும் சிறிய ஊர்கள். நான் சென்றிருக்கிறேன். அவர் செய்துவரும் சேவை அளப்பரியது! மாபெரும் மனிதர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா பலவித ஊடகங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதும் தெரிய வருகிறது.//

      இசைபிரியர்களுக்கு மகிழ்ச்சி இல்லையா!

      //ஆமாம் உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது மகிழ்வான விஷயம் கோமதிக்கா.//

      ஆமாம் கீதா

      //குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதிகள் எல்லாம் மிகவும் பின் தங்கி இருக்கும் சிறிய ஊர்கள். நான் சென்றிருக்கிறேன். அவர் செய்துவரும் சேவை அளப்பரியது! மாபெரும் மனிதர்!//

      அவரின் சேவை இன்னும் நிறைய இருக்கிறது, எதிர்காலத்திட்டம் நிறைய இருக்கிறது. காலம் எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்தி கொடுக்க வேண்டும்.

      நீக்கு
  11. மெல்லிசை மேன்மை தரும் நிகழ்ச்சி.

    திரு.உதயசேனன் அவர்களின் சேவைகள் பாராட்டுக்குரியது.

    உங்கள் பேரன் பாடும் படமும் கண்டோம். குடும்பப் படங்கள் என அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      மெல்லிசை மேன்மை தரும் நிகழ்ச்சி//
      ஆமாம்..

      திரு.உதயசேனன் அவர்களின் சேவைகள் பாராட்டுக்குரியது.//
      ஆமாம் பாராட்டுவோம்.

      //உங்கள் பேரன் பாடும் படமும் கண்டோம். குடும்பப் படங்கள் என அனைத்தும் நன்று.//

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.


      நீக்கு
  12. சீனு ராமசாமி அவரைப் பற்றியும், படம் மாமனிதன் திரையிடப்படுவது பற்றியும் வாசித்ததும், படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துவிட்டேன். அப்படி என்ன இருக்கு அந்தப் படத்தில் என்று.

    நீங்கள் கதை பற்றி சொல்லியிருப்பதை வாசிக்கவில்லை...நான் படம் பார்க்கணுமே!!!!! இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். அதாவது பைசா கட்ட வேண்டிய தளம் அல்லாமல். Daily Motion ல் இருக்கிறது

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சீனு ராமசாமி அவரைப் பற்றியும், படம் மாமனிதன் திரையிடப்படுவது பற்றியும் வாசித்ததும், படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துவிட்டேன். அப்படி என்ன இருக்கு அந்தப் படத்தில் என்று.//

      படம் பார்த்தால் பிடிக்கும் கீதா.

      //நீங்கள் கதை பற்றி சொல்லியிருப்பதை வாசிக்கவில்லை...நான் படம் பார்க்கணுமே!!!!! இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். அதாவது பைசா கட்ட வேண்டிய தளம் அல்லாமல். Daily Motion ல் இருக்கிறது//

      கதையை நான் சொல்லவில்லை கீதா. இணையத்தில் பைசா கட்டி பார்க்கும் படிதான் இருக்கிறது. கொஞ்ச நாளில் தொலைக்காட்சியில் வரலாம்.

      படிப்பினை சொல்லும் கதை. புத்தி சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அதனால் வசூல் சாதனை இல்லை. தரமான தமிழக படம் என்ற வரிசையில் இடம்பெற்று இருக்கிறது சர்வதேசபடவிழாவில்.

      நீக்கு
  13. சீனு ராமசாமி "அம்மா வாங்க என் அம்மா போல இருக்கிறீர்கள்" என்றார்.//

    ஆஹா!!!!

    உங்கள் மகன் இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொறுப்புடன் செயலாற்றுவது ரொம்ப மகிழ்வான விஷயம்! பாராட்டுகளும். வாழ்த்துகளும்!

    இனிய மாலைப்பொழுது. மெல்லிசை என்று பாடகர்களை வரவழைத்துப் பாட வைக்காமல், அங்கிருப்பவர்களே கலந்து கொண்டு பாடியது ரொம்ப ரொம்பச் சிறப்பான நிகழ்வு. அவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் என்பதோடு பலரது திறமையும் வெளிவரும். இப்படி எல்லாம் அழகான நிகழ்வுகள் அங்கு நடப்பது சிறப்பு!

    அருமையாகத் தொகுத்துச் சொல்லியிருக்கீங்க கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனு ராமசாமி "அம்மா வாங்க என் அம்மா போல இருக்கிறீர்கள்" என்றார்.//

      ஆஹா!!!!//

      நான் அவர் பக்கத்தில் நின்று படம் எடுத்து கொள்ள தயங்க்கிய போது அம்மா வாங்க நீங்கள் என் அம்மா மாதிரி என்று சொன்னார். மகனை தம்பியுடன் தனியாக எடுத்து கொள்கிறேன் என்று மகனுடன் தனியாக படம் எடுத்து கொண்டார்.


      //உங்கள் மகன் இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொறுப்புடன் செயலாற்றுவது ரொம்ப மகிழ்வான விஷயம்! பாராட்டுகளும். வாழ்த்துகளும்!//

      ஒவ்வொரு நிகழ்விலும் அவனுக்கு தெரிந்த உதவிகளிய செய்து வருகிறார். உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      //இனிய மாலைப்பொழுது. மெல்லிசை என்று பாடகர்களை வரவழைத்துப் பாட வைக்காமல், அங்கிருப்பவர்களே கலந்து கொண்டு பாடியது ரொம்ப ரொம்பச் சிறப்பான நிகழ்வு. அவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் என்பதோடு பலரது திறமையும் வெளிவரும். இப்படி எல்லாம் அழகான நிகழ்வுகள் அங்கு நடப்பது சிறப்பு!//

      அவர்கள் வேலை வேலை என்று இருப்பவர்களுக்கு பாடுவது உற்சாகம் கொடுக்கும் ஒரு பொழுது போக்கு. அதை இப்படி மேடையில் பாடும் போது மற்றவர்கள் பாராட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.
      காரோக்கி முறையில் பாடினார்கள். அப்படியே அருமையாக பாடினார்கள்.

      //அருமையாகத் தொகுத்துச் சொல்லியிருக்கீங்க கோமதிக்கா//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா

      நீக்கு
  14. அருமையான நிகழ்வு. சிறப்பான தொகுப்பு.

    ஆடியோ சவுண்ட் கண்ட்ரோலை கவனித்துக் கொண்ட தங்கள் மகன் பல்கலை வித்தகர். பாராட்டுகள்.

    கடைசி இருபடங்களில் பேரன் நன்கு வளர்ந்திருப்பது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அருமையான நிகழ்வு. சிறப்பான தொகுப்பு.//

      நன்றி.


      //ஆடியோ சவுண்ட் கண்ட்ரோலை கவனித்துக் கொண்ட தங்கள் மகன் பல்கலை வித்தகர். பாராட்டுகள்.//

      உங்கள் பாராட்டுக்களூக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      //கடைசி இருபடங்களில் பேரன் நன்கு வளர்ந்திருப்பது தெரிகிறது.//
      ஆமாம், வளர்ந்து விட்டான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. உங்கள் பேரன் சிறப்பாக க்ராஃப்ட் வேலைகள் செய்கிறார், காணொளிகள் வெளியிடுகிறார், பாடவும் செய்வாரா? சிறப்பு! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.//

      ஆமாம், சுவாரஸ்யமான நிகழ்ச்சிதான்.


      உங்கள் பேரன் சிறப்பாக க்ராஃப்ட் வேலைகள் செய்கிறார், காணொளிகள் வெளியிடுகிறார், பாடவும் செய்வாரா? சிறப்பு! வாழ்க வளமுடன்!//

      கர்நாடக இசை கற்றுக் கொண்யு பாடுகிறான். அவன் பாடல்கள் பதிவில் போட்டு இருக்கிறேன். நீங்கள் கேட்டது இல்லை போலும்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. அருமையான நிகழ்ச்சி. ஹூஸ்டனிலும் பாரதி கலை மன்றம் வாயிலாக நிகழ்ச்சிகள் நடக்கும். இப்போதெல்லாம் யு.எஸ். போகும் எண்ணத்தையே தவிர்த்து வருகிறோம். உடல் இப்போது இருக்கும் நிலையில் அங்கே போனால் அவங்களுக்குத் தான் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      //அருமையான நிகழ்ச்சி. ஹூஸ்டனிலும் பாரதி கலை மன்றம் வாயிலாக நிகழ்ச்சிகள் நடக்கும்.//
      இங்கும் நிறைய கலை மன்றங்கள் நடத்துகிறது. கச்சேரிகள் பெரிய பாடகர்கள் வருகிறார்கள் இந்தியாவிலிருந்து. லால்குடி ஜெயராமன் அவர்கள் மகனும், மகளும் வந்து வயிலின் வாசித்தார்கள்.


      இப்போதெல்லாம் யு.எஸ். போகும் எண்ணத்தையே தவிர்த்து வருகிறோம். உடல் இப்போது இருக்கும் நிலையில் அங்கே போனால் அவங்களுக்குத் தான் கஷ்டம்.

      //இப்போதெல்லாம் யு.எஸ். போகும் எண்ணத்தையே தவிர்த்து வருகிறோம். உடல் இப்போது இருக்கும் நிலையில் அங்கே போனால் அவங்களுக்குத் தான் கஷ்டம்.//
      உங்கள் மகளுக்கும் உடல் நலமில்லை என்று சொன்னீர்கள்.
      நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களுக்கு கஷ்டம் தான்.
      உதவிக்கு ஆள் இல்லாமல் அவர்களே எல்லா வேலைகளும் செய்கிறார்கள் .


      நீக்கு
  17. விருந்தினர்கள் இருவருமே தெரியாத நபர்கள். சீனு ராமசாமி என்றொரு இயக்குநர் இருப்பதையும் இன்றே அறிந்தேன். இப்போ ஆர்.ஆர்.ஆர். படம் பார்த்துக் கொண்டு இருக்கேன். நேற்றுத் தான் பார்க்க ஆரம்பித்தேன். முதல் மூன்றையும் பார்த்திருக்கேன். இனித் தொடரணும். ஒரேயடியாக உட்கார்ந்து பார்க்க முடியலை. :( காலைத் தொங்கப் போட்டால் வலியும் வீக்கமும் வருது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விருந்தினர்கள் இருவருமே தெரியாத நபர்கள். சீனு ராமசாமி என்றொரு இயக்குநர் இருப்பதையும் இன்றே அறிந்தேன்//

      ஓ அப்படியா, நல்ல படங்கள் எடுத்து இருக்கிறார்.
      தொடர்ந்து அமர்ந்து இருப்பது எனக்கும் முடியாது, நின்றும், இருந்தும், கிடந்தும் என்பதுதான் என் நிலமையும்.

      நீக்கு
  18. நிகழ்ச்சி சம்பந்தப்பட்டப் படங்கள் எல்லாம் அருமை. ஒன்றையும் விடாமல் எல்லோரையும் பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி. இதை எல்லாம் பார்க்கையில் இந்திய வாழ்க்கையை விட அம்பேரிக்க வாழ்க்கையில் கொஞ்சமானும் இலக்கிய/இசை ரசனை இருக்கும் போல் நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிகழ்ச்சி சம்பந்தப்பட்டப் படங்கள் எல்லாம் அருமை. ஒன்றையும் விடாமல் எல்லோரையும் பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள். //

      நன்றி.

      //இதை எல்லாம் பார்க்கையில் இந்திய வாழ்க்கையை விட அம்பேரிக்க வாழ்க்கையில் கொஞ்சமானும் இலக்கிய/இசை ரசனை இருக்கும் போல் நினைத்துக் கொண்டேன்.//

      நம் நாட்டில் இப்படி நிறைய நல்ல நிகழ்ச்சிகள் நடக்கிறது. இங்கு கலந்து கொள்ள முடியவில்லையே என்று தான் வெளி நாட்டில் வாழும் மக்கள் இப்படி நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்து கொள்கிறார்கள்.
      இந்தியாவில் பல்வேறு கலை நிகழச்சிகள் நடப்பதை யூடி-யூடிப் வழியாக பார்க்க கேட்க முடிகிறது. பொதிகை, சங்கரா தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு