golden poppies (கலிஃபோர்னியா தங்கபாப்பி)
அரிசோனாவில் இந்த மலர்கள் வசந்த காலம் ஆரம்பித்தவுடன் பூக்க
ஆரம்பித்து விடுகிறது. தங்க கலர், ஆரஞ்சு கலரில் பூக்கும் செடி.
சிறியதாக புதர் போல வளர்கிறது. ஊரின் பாதை எங்கும்
இருபுறமும் வளர்த்து பார்க்க அழகாய் கண்களுக்கு விருந்தாக
இருக்கிறது. இந்த ஞாயிறு குளிர் காற்று இல்லாமல் வெயில்
நன்றாக இருந்தது. மகன் இந்த மலர்களை பார்க்க அழைத்து
போனான். பேரனுக்கு வசந்தகால விடுமுறை ஒரு வாரம்.
மரகதபச்சையும் மஞ்சள் பூக்களும் அழகு.
இந்த கோல்டன் பாப்பி வசந்தகாலம் முதல், கோடையின்
ஆரம்பம் வரை பூக்கும்இவை வறட்சியை எதிர்க்கும். நிறைய சூரிய ஒளி
உள்ள இடத்தில் நல்ல உழுத மண் போல இருக்கும் இடத்தில்
நன்றாக வளருமாம்.
நாங்கள் பார்த்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டி கொண்டு
இருக்கிறார்கள். தரை உழுதமாதிரி இருக்கிறது. அதனால்
நிறைய வளர்ந்து இருக்கிறது.
பரந்த பள்ளத்தாக்கு, சாலையோரம், மலைப்பகுதிகளில்
வளரும் செடி.
சில பூர்விக மக்கள் இதை மருத்துக்கு பயன்படுத்துவார்களாம்.
இந்த தாவரத்தில் நச்சு பகுதிகளும் உண்டு. இந்த செடியை
சேதபடுத்தினால் தண்டனை உண்டாம். பூ மிக மென்மையாக
இருக்கிறது.
இப்படி இடை இடையே வைலட் கலர் பூக்களும் இருக்கிறது
வேறு மாதிரி நீலக்கலர் பூ
மஞ்சள் பூக்களுக்கு நடுவே நீலக் கலர் பார்க்க அழகுதான்
புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு கொண்டு இருக்கும் இடம்
பெரிய கள்ளிச்செடியும் இருக்கிறது
மொட்டுகளும், மலர்களும்
தனிமை விரும்பும் மலர்
நானும் அவனை போல எடுக்கலாம் என்று மலர் தோட்டத்திற்கு
நடுவில் வைத்து எடுத்த படங்கள்.
இந்த மாதிரி மஞ்சள் பூக்களும் நிறைய பூத்து இருந்தது
இப்படி இடை இடையே சின்ன மஞ்சள் பூக்களும் பூத்து இருந்தது.
மிதமான குளிரில் கோடைக்கு முன் பூக்கும் மலர்கள் எல்லாம் அழகு.
நான் எடுத்த சிறிய காணொளி காற்றில் அவை தலை அசைத்து விடை கொடுப்பது போல உள்ளது
கிளம்பி விட்டோம் பேரன் காரில்.
அடுத்து ஒரு ஏரிக்கு போனோம். அடுத்த பதிவில் ஏரியை பார்ப்போம்.
பூக்கள் மிக அழகு. படங்கள் அருமையாக வந்துள்ளன
பதிலளிநீக்குகவின் நல்ல உயரம்.
டைனசோருடன் கூடிய இரு படங்கள், செட்டப் என பெரிதாக்கியபிறகுதான் தெரிந்தது. என்ன விலங்கு என்ற ஆர்வத்தில் பார்த்தேன்
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//பூக்கள் மிக அழகு. படங்கள் அருமையாக வந்துள்ளன//
நன்றி.
//கவின் நல்ல உயரம்.//
ஆமாம்.
//டைனசோருடன் கூடிய இரு படங்கள், செட்டப் என பெரிதாக்கியபிறகுதான் தெரிந்தது. என்ன விலங்கு என்ற ஆர்வத்தில் பார்த்தேன்//
தொல்மா மிருகம் என்று கவின் தமிழ் பெயர் சொல்வான் சிறு வயதில் பெரிசு சின்னது என டைனோசர் நிறைய வைத்து இருக்கிறான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. வசந்த கால பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது. தங்க கலருக்கு நடுவே ஆரஞ்சு கலருடன் கண்களை கவர்கிறது. நடுநடுவே வயலட் கலர் பூக்கள். நீல கலர் பூக்கள் என இயற்கையின் அழகு பார்க்கும் போது மனதை கண்டிப்பாக கவர்ந்திழுத்திருக்கும். தரை பகுதி முழுக்க பூக்கள் அடர்ந்திருக்கும் படங்களை பார்த்த எனக்கே அந்த இடத்தின் அழகு மனத்தை நிறைக்கும் போது, நேரில் பார்த்த உங்களுக்கு மனது மிக உற்சாகமாகவே இருந்திருக்கும். இல்லையா?
நீல வானமும், அங்குள்ள இந்த ஸ்பெஷலானபூக்களும் மஞ்சள் வயலட், நீல பூக்ககளுமான படங்களை மிகவும் ரசித்தேன். எல்லா படங்களுமே அழகாக உள்ளது. எதையென்று தனியாக குறிப்பிடுவது? "தனிமை விரும்பும் மலர்" அழகான உவமானம். எல்லாவற்றையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.
எல்லா படங்களும் நன்றாக எடுத்துள்ளீர்கள். பேரன் கவின் எடுத்த படங்களும் அழகாக உள்ளது. அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை கூறுங்கள். தங்கள் பேரன் தங்களை விட உயரமாக வளர்ந்து விட்டார். நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் படம் நன்றாக உள்ளது.
பேரன் கவினின் விளையாட்டு
டைனோசரை வைத்து எடுத்த படங்கள் பெரிதாக்கி பார்க்கும் போது, நிஜமான டைனோசர் போலவே உள்ளது.
/பேரன் காரில்.. /
இறுதியில் நீங்கள் பதிவில் முடித்த இந்த வார்த்தைகளையும் ரசித்தேன். தங்கள் கூற்றின்படி அவரும் நன்கு படித்து நல்ல வேலைக்குச் சென்று கார் வாங்கட்டும். அந்தக்காரில் நீங்களும் சென்று பல அழகான இடங்களை பார்த்து ரசித்து பதிவாக எங்களுக்கு தாருங்கள். நாங்களும் படித்து ரசிக்கிறோம். எல்லாம் நல்லதாக நடக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.
தாங்கள் எடுத்த காணொளியும் நன்றாக உள்ளது. இலைகளுடன் பூக்கள் தலையசைப்பது போல் உள்ளது. அடுத்து நதிக்கரை படங்களை காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. வசந்த கால பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது. தங்க கலருக்கு நடுவே ஆரஞ்சு கலருடன் கண்களை கவர்கிறது. நடுநடுவே வயலட் கலர் பூக்கள். நீல கலர் பூக்கள் என இயற்கையின் அழகு பார்க்கும் போது மனதை கண்டிப்பாக கவர்ந்திழுத்திருக்கும். தரை பகுதி முழுக்க பூக்கள் அடர்ந்திருக்கும் படங்களை பார்த்த எனக்கே அந்த இடத்தின் அழகு மனத்தை நிறைக்கும் போது, நேரில் பார்த்த உங்களுக்கு மனது மிக உற்சாகமாகவே இருந்திருக்கும். இல்லையா?//
ஆமாம், மிகவும் உற்சாகமாக இருந்தது. தங்கம், ஆரஞ்சு கலரில் பூக்கள் காற்றில் ஆடி கொண்டு இருந்தது பார்க்கவே அழகு.
வைலட், நீல கலர் பூக்கள் மேலும் அழகு சேர்த்தன.
//நீல வானமும், அங்குள்ள இந்த ஸ்பெஷலானபூக்களும் மஞ்சள் வயலட், நீல பூக்ககளுமான படங்களை மிகவும் ரசித்தேன். எல்லா படங்களுமே அழகாக உள்ளது. எதையென்று தனியாக குறிப்பிடுவது? "தனிமை விரும்பும் மலர்" அழகான உவமானம். எல்லாவற்றையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன்.//
பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தோற்றத்தில் அழகு. சிறு தேனிக்களும், கொசுவை விட சின்னதாக பூச்சிக்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
தனிமை விரும்பும் மலர் போல செடியில் ஒரு மலர் மட்டும் உள்ள சின்ன செடிகள் நிறைய இருந்தன. கொத்து கொத்தாக ஒரு செடியில் நிறைய மலர்கள் இருந்தன.
//எல்லா படங்களும் நன்றாக எடுத்துள்ளீர்கள். பேரன் கவின் எடுத்த படங்களும் அழகாக உள்ளது. அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை கூறுங்கள். தங்கள் பேரன் தங்களை விட உயரமாக வளர்ந்து விட்டார். நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் படம் நன்றாக உள்ளது.//
பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
//பேரன் கவினின் விளையாட்டு
டைனோசரை வைத்து எடுத்த படங்கள் பெரிதாக்கி பார்க்கும் போது, நிஜமான டைனோசர் போலவே உள்ளது.//
அவன் டைனோசர் பிரியன். எங்கு போனாலும் ஏதாவது டைனோசர் எடுத்து செல்வான்.
//தங்கள் கூற்றின்படி அவரும் நன்கு படித்து நல்ல வேலைக்குச் சென்று கார் வாங்கட்டும். அந்தக்காரில் நீங்களும் சென்று பல அழகான இடங்களை பார்த்து ரசித்து பதிவாக எங்களுக்கு தாருங்கள். நாங்களும் படித்து ரசிக்கிறோம். எல்லாம் நல்லதாக நடக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.//
ஆஹா ! கற்பனை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்களுக்கும், பிராத்தனைகளுக்கும் நன்றி.
//தாங்கள் எடுத்த காணொளியும் நன்றாக உள்ளது. இலைகளுடன் பூக்கள் தலையசைப்பது போல் உள்ளது. அடுத்து நதிக்கரை படங்களை காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
தூரத்தில் சூரிய ஒளியில் காற்றில் ஆடும் பூக்களை பார்க்க மிக அழகாய் இருந்தது உண்மை.
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி .
மலர்கள் அழகிய நிறம். எனக்குப் பிடித்த நிறம் இரண்டு. ஒன்று மஞ்சள். இன்னொன்று நீலம். பழகிய காலத்தில் நான் பாஸுக்கு முதன்முதல் வாங்கி கொடுத்த புடைவையின் நிறம் இந்த மலரின் நிறம்தான்! அவர் அதை பெரும்பாலும் கட்டுவதில்லை. பின்னே, இந்த நிறத்தில் புடைவை எடுத்துக் கொடுத்தால் கட்டிக்கொண்டு கல்லூரிக்குப் போகமுடியுமா என்ன!!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்கள் அழகிய நிறம். எனக்குப் பிடித்த நிறம் இரண்டு. ஒன்று மஞ்சள். இன்னொன்று நீலம். பழகிய காலத்தில் நான் பாஸுக்கு முதன்முதல் வாங்கி கொடுத்த புடைவையின் நிறம் இந்த மலரின் நிறம்தான்! அவர் அதை பெரும்பாலும் கட்டுவதில்லை.//
பின்னே, இந்த நிறத்தில் புடைவை எடுத்துக் கொடுத்தால் கட்டிக்கொண்டு கல்லூரிக்குப் போகமுடியுமா என்ன!!//
மஞ்சள் புடவை கட்டினால் மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டீர்களா என்று கல்லூரியில் சிலர் கேலி செய்வார்கள் என்ற பயமாக இருக்கும்.
மாம்பழ கலரில் இருந்தால் நன்றாக இருக்கும் .
உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, மகிழ்ச்சி..
சார் காப்பி பொடி கலரில் இது போல மஞ்சள் பூக்கள் போட்ட சேலை முதன் முதலில் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். நீலமும் அவர்களுக்கு பிடித்த கலர் தான் அந்த நிறத்திலும் புடவை வாங்கி தந்து இருக்கிறார்கள்.
டைனோசர் பொம்மைகளை நடுவில் வைத்ததும் மலர்ச்செடிகள் பூதாகரமான சைஸாய் தெரிய ஆரம்பித்து விடுகின்றன! முதல் டைனோசர் படம் அழகு. நெல்லை சொல்லி இருப்பது போல கவினின் உயரம் சட்டென தெரிகிறது. சுற்றி போடுங்கள்!
பதிலளிநீக்கு//டைனோசர் பொம்மைகளை நடுவில் வைத்ததும் மலர்ச்செடிகள் பூதாகரமான சைஸாய் தெரிய ஆரம்பித்து விடுகின்றன! //
நீக்குபெரிதாக தெரியும் என்றுதான் எடுத்தேன், முதல் படம் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி. கவினிடம் கற்றுக் கொண்டதுதான்.
//நெல்லை சொல்லி இருப்பது போல கவினின் உயரம் சட்டென தெரிகிறது. சுற்றி போடுங்கள்//
மகன் அவன் வயதில் இப்படித்தான் உயரமாக இருப்பான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் வழக்கம் போல அழகு.
பதிலளிநீக்குடைனோசர்கள் நிற்பது பொருத்தமாக இருந்தது.
கவின் ஐடியாக்கள் அருமை.
அடுத்து ஏரியில் நிகழ்ந்த சம்பவங்களை அறிந்து கொள்ள ஆவல்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் வழக்கம் போல அழகு.
டைனோசர்கள் நிற்பது பொருத்தமாக இருந்தது.
கவின் ஐடியாக்கள் அருமை.//
ஆமாம், கவின் ஐடியாக்கள் நிறைய சொல்வான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறப் பூக்கள் எப்போதுமே புத்துணர்ச்சி அளிப்பவை..
பதிலளிநீக்குகாலையில் பதிவைக் கண்டு மிக்க மகிழ்ச்சி..
கவினுடன் தங்களைக் கண்டதில் கூடுதல் மகிழ்ச்சி..
கவின் நன்றாக வளந்து இருக்கின்றார்..
டைனோசர்களின் வருகை நல்ல கற்பனை..
அழகான பதிவு..
வாழ்க நலம்..
வணக்கம் துரைசெல்வாராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறப் பூக்கள் எப்போதுமே புத்துணர்ச்சி அளிப்பவை..//
ஆமாம்.
//காலையில் பதிவைக் கண்டு மிக்க மகிழ்ச்சி..
கவினுடன் தங்களைக் கண்டதில் கூடுதல் மகிழ்ச்சி..//
நன்றி.
//கவின் நன்றாக வளந்து இருக்கின்றார்..
டைனோசர்களின் வருகை நல்ல கற்பனை..
அழகான பதிவு..
வாழ்க நலம்..//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
படங்கள் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கலிஃபோர்னியா தங்கபாப்பி ..வெகு அழகு மா
பதிலளிநீக்குடைனசோருடன் கூடிய படங்கள் நல்ல ரசனை ...ரசித்தேன்
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.
கோல்டனு பொப்பீஸ் அழகு. பரந்து நிறைந்து பூத்திருப்பது கண்ணுக்கு விருந்து. நீலப் பூக்களும் அழகு தருகின்றன.
பதிலளிநீக்குபேரனின் டைனோசர் படங்கள் அழகு. வாழ்த்துகள்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//கோல்டனு பொப்பீஸ் அழகு. பரந்து நிறைந்து பூத்திருப்பது கண்ணுக்கு விருந்து. நீலப் பூக்களும் அழகு தருகின்றன.
பேரனின் டைனோசர் படங்கள் அழகு. வாழ்த்துகள்.//
உங்கள் கருத்துக்கும் பேரனை வாழ்த்தியதற்கும் நன்றி.
மலர் படங்கள் மனதிற்கு உற்சாகம் தருகிறது அம்மா...
பதிலளிநீக்குபேரனுக்கு வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
நீக்குமலர் படங்கள் மனதிற்கு உற்சாகம் தருகிறது அம்மா...
பேரனுக்கு வாழ்த்துகள்...//
ஆமாம், மலர்கள் மனதுக்கு உற்சாகம் தந்தது .
பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி தன்பாலன்.
முதல் படமே தெள்ளத் தெளிவு...அப்படியே ஈர்க்கிறது கோமதிக்கா...அழகு!!
பதிலளிநீக்குஅது போல இடையிடையே வயலட், நீலப்பூக்கள் மஞ்சளழகியின் நடுவில் நீல் அழகி!!!
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அது போல இடையிடையே வயலட், நீலப்பூக்கள் மஞ்சளழகியின் நடுவில் நீல்அழகி!!!/
நல்ல ரசனையான கருத்து கீதா
கோடையின்
பதிலளிநீக்குஆரம்பம் வரை பூக்கும்இவை வறட்சியை எதிர்க்கும். நிறைய சூரிய ஒளி
உள்ள இடத்தில் நல்ல உழுத மண் போல இருக்கும் இடத்தில்
நன்றாக வளருமாம்.//
அட! வறட்சியை எதிர்க்கும் செடிகள் ரொம்ப நல்லதாயிற்றே....அரிசோனா கொஞ்சம் வறண்ட பிரதேசம் இல்லையா?
நம்ம ஊரிலும் இப்படியான செடிகளை வறண்ட பிரதேசத்தில் பயிரிடலாம்....மண்ணின் வளம் காக்கும் இல்லையா?
கீதா
//அட! வறட்சியை எதிர்க்கும் செடிகள் ரொம்ப நல்லதாயிற்றே....அரிசோனா கொஞ்சம் வறண்ட பிரதேசம் இல்லையா?//
பதிலளிநீக்குஆமாம், இயற்கை அந்த அந்த பருவங்களில் அதற்கு ஏற்ற தாவரைகளை அமைத்து கொள்கிறது.
//நம்ம ஊரிலும் இப்படியான செடிகளை வறண்ட பிரதேசத்தில் பயிரிடலாம்....மண்ணின் வளம் காக்கும் இல்லையா?//
நம்ம ஊரிலும் அந்த மாதிரி பயிர்கள் இருக்கும் கீதா.
முன்னோர்கள் அப்படி பட்டத்தை பயிர் செய்து இருப்பார்கள். கவனித்தால் தெரியும்.
இந்த செடியை
பதிலளிநீக்குசேதபடுத்தினால் தண்டனை உண்டாம். //
ஆஹா.....நம்ம ஊருக்கும் இப்படி எல்லாம் சட்டங்கள் வர வேண்டும். பின்னெ எவ்வளவு மரங்கள் செடிகளை அழிக்கிறார்கள்!
மொட்டுகளும் மலர்களும் அழகு. காணொளியில் எல்லாம் தலை அசைப்பது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி!!
டைனோசர் வைத்து எடுத்த படங்கள் ரொம்ப ரொம்ப ரசித்தேன். முதலில் நினைச்சேன் அங்கேயே இப்படி சிலைகள் இருக்கு போல என்று அப்புறம் உங்கள் பேரனின் விளையாட்டுப் பொம்மைகள் என்று தெரிந்ததும் நல்ல ஐடியா உங்களுக்கு என்று தோன்றியது. பாராட்டுகள்! நானும் இப்படி பழைய வீட்டில் மண் குதிரை பொம்மைகள் வைத்து எடுத்தேன். பகிரவில்லை என்று நினைக்கிறேன்....
கீதா
நீக்கு//ஆஹா.....நம்ம ஊருக்கும் இப்படி எல்லாம் சட்டங்கள் வர வேண்டும். பின்னெ எவ்வளவு மரங்கள் செடிகளை அழிக்கிறார்கள்!//
குறுகிய கால செடி இது பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தருவது, மருத்துபயன் உடையது அதனால் இந்த கட்டுப்பாடு.
//நானும் இப்படி பழைய வீட்டில் மண் குதிரை பொம்மைகள் வைத்து எடுத்தேன். பகிரவில்லை என்று நினைக்கிறேன்...//
ஏதவது பதிவில் போடுங்கள் கீதா.
//மொட்டுகளும் மலர்களும் அழகு. காணொளியில் எல்லாம் தலை அசைப்பது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி!!//
அதுதான் போட்டேன் நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும்.
//டைனோசர் வைத்து எடுத்த படங்கள் ரொம்ப ரொம்ப ரசித்தேன். முதலில் நினைச்சேன் அங்கேயே இப்படி சிலைகள் இருக்கு போல என்று அப்புறம் உங்கள் பேரனின் விளையாட்டுப் பொம்மைகள் என்று தெரிந்ததும் நல்ல ஐடியா உங்களுக்கு என்று தோன்றியது. பாராட்டுகள்!//
கவின் எங்கு போனாலும் பொம்மைகள் எடுத்து செல்வான், சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதை படம் எடுப்பான்.
உங்கள் பாராட்டுகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி கீதா..
டைனோசர் வைத்து எடுத்த படங்கள் ரொம்ப இயற்கையாக இருப்பது போல இருக்கு. அழகு....
பதிலளிநீக்குபேரன் நல்ல உயரமாகியிருக்கிறார்.
பேரன் எடுத்த படங்களும் செம கற்பனை....நல்ல பொருத்தமாக வைத்து எடுத்திருக்கிறார்.
சின்ன மஞ்சப் பூக்களும் பூத்து...பிரதேசமே மஞ்சள் பிரதேசமாக இதமாக இருக்கு
பேரனின் கார் வைத்து எடுத்த படமும் ரொம்ப இயற்கையாக இருக்கு....
ஏரியைப் பார்க்க ஆவலுடன்...
கீதா
டைனோசர் வைத்து எடுத்த படங்கள் ரொம்ப இயற்கையாக இருப்பது போல இருக்கு. அழகு....//
நீக்குடைனோசர் பச்சை நிறத்தில் இயற்கையோடு பொருந்தி போகிறது
பேரன் நல்ல உயரமாகியிருக்கிறார்.//
ஆமாம், வளர்ந்து விட்டான்.
//பேரன் எடுத்த படங்களும் செம கற்பனை....நல்ல பொருத்தமாக வைத்து எடுத்திருக்கிறார்.//
ஆமாம்.
சின்ன மஞ்சப் பூக்களும் பூத்து...பிரதேசமே மஞ்சள் பிரதேசமாக இதமாக இருக்கு//
கண்களுக்கு குளிர்ச்சி, மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது கீதா
பேரனின் கார் வைத்து எடுத்த படமும் ரொம்ப இயற்கையாக இருக்கு....//
நன்றி.
ஏரியைப் பார்க்க ஆவலுடன்...//
நன்றி.
கவினுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க...
பதிலளிநீக்குஎல்லாப் படங்கள் மற்றும் காணொளியை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
கவினுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க...//
நீக்குகண்டிப்பாய் சொல்லி விடுகிறேன். அவனே கேட்பான் என்ன சொன்னார்கள் என்று.
//எல்லாப் படங்கள் மற்றும் காணொளியை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா//
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
படங்கள் அனைத்தும் அழகு. கவின் நன்று வளர்ந்து விட்டான். தகவல்கள் மற்றும் காணொளி சிறப்பு. அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் அழகு. கவின் நன்று வளர்ந்து விட்டான். தகவல்கள் மற்றும் காணொளி சிறப்பு. அனைத்தும் ரசித்தேன்.//
ஆமாம், கவின் வளர்ந்து விட்டான்.
படங்களை காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி வெங்கட்.