வெள்ளி, 17 மார்ச், 2023

பார்லெட் ஏரி அரிசோனா ,(Bartlett Lake, Arizona ) பகுதி - 2

                                                              பார்லெட் ஏரியில்  


பார்லெட் ஏரியில் பார்த்த   வான்கோழி கழுகு (Turkey vulture)

பீனிக்ஸ் ஊரிலிருந்து 48 மைல் தூரத்தில் உள்ள பார்லெட் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை போய் இருந்தோம்.

இதற்கு முன் போட்ட பதிவு:-   பார்லெட் ஏரி

ஏரியில் பார்த்த பறவையை அடுத்த பதிவில் பார்க்கலாம் என்று சொன்னேன். ஏரியில் பார்த்த கழுகு படங்கள், மற்றும் வேறு சில படங்கள்  இந்த பதிவில் . 

வானில் வடடமிட்டு கொண்டே இருக்கிறது

கொஞ்சம் கீழே இறங்குது
தண்ணீரின் மேலே ஒரு மீனூம் வரவில்லை 

மூன்று பறவைகள் பறந்தன, ஆனால் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையில் சேர்த்து எடுக்க முடியவில்லை.
 

கீழே ஏரிக்கரையில் இறங்கி விட்டது. 

இந்த பறவை புதர் நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், மற்றும் பாலைவனத்தில்  வாழும் பறவை. தன் கூரிய கண்கள் மூலமும், வாசனை மூலமும் உணவை  கண்டுபிடித்து உண்கிறது. இயற்கையை சுத்தமாக வைப்பதற்கு இந்த பறவை உதவுகிறது. 

மரங்களில் மேல், மலைகளின் பொந்துகளில் கூடு கட்டி இரண்டு முட்டை யிட்டு குஞ்சு பொரிக்கிறது. 

பறவை நிற்கும் இடத்தில்  இருக்கும் மலையில் குகை போன்ற அமைப்பு இருந்தது அங்கு தான் வசிக்கிறது போல.

கரையிலும் இரை கிடைக்கவில்லை

தண்ணீரில் இறங்க வேண்டியதுதான் என்று முடிவு செய்து விட்டது

கருப்பு கோட் போட்டு நிற்பது போல இருக்கிறது

கால் வலிக்கிறது போலும் கொஞ்சம் உட்காருகிறது

ஆஹா ஒரு வழியாக ஏரிநீரில் இறங்கி விட்டது. வான் கோழி போல தலை இருக்கிறது என்றவுடன் கூகுளில் பார்த்து ஆச்சி இது வான்கோழி   கழுகுதான் என்று சொன்னான் பேரன்.

பேரனும் சில படங்கள்  எடுத்தான்  . நான் அமர்ந்து இருந்த இடத்தில் பெரிய பாறை என் முன் இருந்தது, அதனால் நீங்கள் அங்கேயே இருங்கள், நான் எடுத்து தருகிறேன் என்று சொல்லி எடுத்து கொடுத்தான்.
பாறைகளுக்கு இடையே இருந்த செடியில் பூத்த மலர் பேரன் எடுத்த படம்.

கொண்டு வந்த விளையாட்டு பொம்மைகளை வைத்து  கதை காணொளி எடுக்கிறான்.

அவன் அமர்ந்து இருக்கும் பாறை பக்கம் உள்ள பாறையில் பல்லி  சென்றது,  பேரன் அதை படம் எடுக்க சொன்னான், எடுத்து விட்டேன்.

ஏரியை படம் எடுக்கும் அப்பா

அப்பாவின் தோளின் மேல் அமர்ந்து ஏரியின் அழகை  ரசிக்கும்    குழந்தை.


வரும் வழியில் பார்த்த மலை  படுத்து கொண்டு இருக்கும்   சிறுவனின் முகம் போல தெரிகிறது. தலைமுடியை தூக்கி சீவி கொண்டது போல இருக்கிறது. மூக்கு நல்ல எடுப்பாக தெரிகிறது. உங்கள் எல்லோருக்கும் எப்படி தெரிகிறது என்று சொல்லுங்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

 1. முதல் படமே அட்டகாசம் கோமதிக்கா...

  வான் கோழிக் கழுகு இப்போதுதான் பார்க்கிறேன்...

  வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் படம் ஹையோ செம....
  ரொம்ப அழகாக வந்திருக்கிறது படம்.

  எனக்கு இப்படி எடுக்க ரொம்ப முயற்சி செய்கிறேன். ஆனால் சரியாக வருவதில்லை. மரங்கள் இருக்கும் பகுதியில் அவை மறைத்துவிடுகின்றன இல்லை என்றால் கேமராவில் இந்த அளவு தெளிவாக வருவதில்லை...

  ரொம்ப அழகாகத் தெளிவாக இருக்கு, அக்கா, நீங்கள் எடுத்திருக்கும் படம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

   //முதல் படமே அட்டகாசம் கோமதிக்கா...//

   அலைபேசியில் எடுத்தேன்.

   //வான் கோழிக் கழுகு இப்போதுதான் பார்க்கிறேன்...//
   தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன்.
   பேர் இப்போது தெரிந்து கொண்டேன்.

   //வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் படம் ஹையோ செம....
   ரொம்ப அழகாக வந்திருக்கிறது படம்.//

   காமிராவில் எடுத்தேன், அதிகம் ஜூம் செய்தால் ஆடுகிறது. ஒரளவு வந்து இருக்கிறது. இன்னும் முயற்சி செய்ய வேண்டும். நீலவானமும் பறவைகள் பறப்பதும் எனக்கு பிடிக்கும் அதனால எடுத்தேன்.
   இரண்டு மூன்று முறை ஏமாற்றியது. அப்புறம் பிடிபட்டது.

   //ரொம்ப அழகாகத் தெளிவாக இருக்கு, அக்கா, நீங்கள் எடுத்திருக்கும் படம்//
   நன்றி கீதா.

   நீக்கு
 2. கழுகு பறக்கும் படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு கோமதிக்கா....

  அந்த குகையைப் படம் எடுக்க முடியலையோ அக்கா?

  பேரன் உங்கள் அலைவரிசையில் இருப்பது மகிழ்வான விஷயம். பல்லியை புகைப்படம் எடுக்கச் சொன்னது மற்றும் உங்களுக்காகப் படம் எடுத்துக் கொடுத்தது எல்லாமே மகிழ்வான தருணங்கள்! பொக்கிஷத் தருணங்கள். பேரனும் தன் பொம்மைகளை வைத்துக் காணொளி எடுப்பது...ரசித்தேன். நல்ல பாட்டி நல்ல பேரன்!!!!!

  அக்கா நீங்க அடுத்த முறை பறப்பதை இப்படிப் படம் எடுத்த பிறகு ஒரு காணொளியும் முடிந்தால் எடுங்கள் அக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கழுகு பறக்கும் படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு கோமதிக்கா....

   அந்த குகையைப் படம் எடுக்க முடியலையோ அக்கா?//

   அப்போது ஏதோ குகை அதில் முயல், எலி போன்றவை இருக்கும் என்று நினைத்து கொண்டேன். கழுகை பற்றி பதிவு போடும் போது படித்தேன், அப்போது அந்த குகை போன்ற பொந்து இந்த பறவை நின்ற இடத்தில் இருந்ததே! எடுத்து இருக்கலாம் என்று தோன்றியது.

   //பேரன் உங்கள் அலைவரிசையில் இருப்பது மகிழ்வான விஷயம். பல்லியை புகைப்படம் எடுக்கச் சொன்னது மற்றும் உங்களுக்காகப் படம் எடுத்துக் கொடுத்தது எல்லாமே மகிழ்வான தருணங்கள்! பொக்கிஷத் தருணங்கள். பேரனும் தன் பொம்மைகளை வைத்துக் காணொளி எடுப்பது...ரசித்தேன். நல்ல பாட்டி நல்ல பேரன்!!!!!//

   அவன் என்னை பதிவில் போட அது எடுக்கவில்லையா? இது எடுக்க வில்லையா? என்று கேட்பதும், நான் உன் கதைக்கு நல்ல இடம் இங்கு படம் எடு, என்று சொல்வதும் நடக்கும். ஒருவரை ஒருவர் உற்சாக படுத்தி கொள்வோம் கீதா.

   //அக்கா நீங்க அடுத்த முறை பறப்பதை இப்படிப் படம் எடுத்த பிறகு ஒரு காணொளியும் முடிந்தால் எடுங்கள் அக்கா...//
   எடுக்கிறேன் கீதா. உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி.


   நீக்கு
 3. ஆமாம் கருப்பு கோட் போட்டது போல இருக்கு. ஆமாம் கழுத்து முகம் வான் கோழி மாதிரி இருக்கிறது. அது நடந்து சென்று நீரில் இறங்குவதையும் காணொளி எடுத்திருக்கலாமோ அக்கா? அக்கா இனி அடுத்த முறை அப்படிச் செய்யுங்க முடிஞ்சா...உங்கள் கேமராவில் காணொளிகளும் நன்றாக வருகின்றன அக்கா. அதனால் சொல்றேன். யுட்யூபில் போடுங்க.

  பேரன் மிக அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் பூ படம்

  பேரன் சொன்னதும் உடனே பின்னே பேரன் சொல்லி படம் எடுக்காமல் இருக்க முடியுமா...

  அப்பாவின் தோளின் மேல் குழந்தை....இப்படியான படங்களை மிகவும் ரசிப்பதுண்டு. அப்பா, அம்மா குழந்தைகள் பாட்டி தாத்தா பேரக் குழந்தைகள் என்று அது ஒரு தனி பிணைப்பு!!

  கடைசியில் பாறையின் படம் - // படுத்து கொண்டு இருக்கும் சிறுவனின் முகம் போல தெரிகிறது. தலைமுடியை தூக்கி சீவி கொண்டது போல இருக்கிறது. மூக்கு நல்ல எடுப்பாக தெரிகிறது. //

  நீங்கள் சொன்னதை வைத்துப் பார்த்த போது அப்படியும் தெரிந்தது . ஆனால் எனக்கு முதலில் டக்கென்று தோன்றியது, ஒரு பெரியவர் தன் நெற்றியில் ஒரு உருண்டைக் கல்லை அது உருண்டு விடாமல் பாலன்ஸ் செய்து வைத்திருக்கும் வித்தையைச் செய்வது போன்று தோன்றியது.

  எல்லாப் படங்களையும் மிகவும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கருப்பு கோட் போட்டது போல இருக்கு. ஆமாம் கழுத்து முகம் வான் கோழி மாதிரி இருக்கிறது//

   ஆமாம் , வான் கோழி மாதிரி அமைப்பு அந்த சிவப்பு தலை.

   அது நேரே நிமிர்ந்து நடப்பது பார்க்க அழகாய் இருந்தது.

   //நடந்து சென்று நீரில் இறங்குவதையும் காணொளி எடுத்திருக்கலாமோ அக்கா? அக்கா இனி அடுத்த முறை அப்படிச் செய்யுங்க முடிஞ்சா...உங்கள் கேமராவில் காணொளிகளும் நன்றாக வருகின்றன அக்கா. அதனால் சொல்றேன். யுட்யூபில் போடுங்க.//
   எடுத்தேன் கீதா ஒரே ஆட்டமாக ஆடி இருந்தது கடைசியில் ஒரு நிமிடம் மட்டும் நன்றாக இருந்தது அதனால் டெலிட் செய்து விட்டேன்.
   அலைபேசியில் எடுத்து இருக்கலாம். தூரம் அதிகமாக இருக்கிறது என்று காமிராவில் எடுத்தேன், சரியாக வரவில்லை.

   நீக்கு
 4. வான் கோழிக் கழுகு பறவை பற்றிய தகவல்களும் தெரிந்துகொண்டேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வான் கோழிக் கழுகு பறவை பற்றிய தகவல்களும் தெரிந்துகொண்டேன்//
   நானும் பதிவுக்காக த்ரிந்து கொண்டேன். பறவை ஆர்வலர் சதிஷ் அவர்கள் பறவைகளின் பேரை ஆங்க்கிலத்திலும் போடுங்கள் தேட எளிதாக இருக்கும் என்றார். அதனால் இப்போது தேடி ஆங்கிலத்திலும் போடுகிறேன்.

   நீக்கு
 5. அருமையான படமாக்கம் மற்றும் விவரணைகள்! நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //அருமையான படமாக்கம் மற்றும் விவரணைகள்! நன்றி.//
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது விளக்கம் நன்று.

  இறுதியில் உள்ள படம் மனித தலைபோல் தான் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது விளக்கம் நன்று.

   இறுதியில் உள்ள படம் மனித தலைபோல் தான் தெரிகிறது.//

   மனைத தலை போல் தெரிகிறதே அது போதும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. வான்கோழி கழுகு வினோதமாக இருக்கிறது.  நீங்கள் சொல்லி  கோட் போட்டுக்கொண்டு வினோதமான தலையுடன் வில்லன் கூட்ட பாஸ் போல இருக்கிறது!  சில கழுகுகள் மனிதர்களையே தாக்கும் இயல்புடையது வேறு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   //வான்கோழி கழுகு வினோதமாக இருக்கிறது. //

   ஆமாம்.

   நீங்கள் சொல்லி கோட் போட்டுக்கொண்டு வினோதமான தலையுடன் வில்லன் கூட்ட பாஸ் போல இருக்கிறது! //

   சினிமாவில் வரும் மொட்டை பாஸ் போல இருக்கிறார் இல்லே!


   //சில கழுகுகள் மனிதர்களையே தாக்கும் இயல்புடையது வேறு...//

   ஆமாம், பிணம் தின்னும் கழுகு. உயிர் உள்ள நைத்தையும் தாக்கி கொன்று தின்னும். பிற விலங்குகள் அடித்து போட்டதை ஆற அமர தின்னும்.

   நீக்கு
 8. கவினின் விளையாட்டைக் காண வந்த பல்லியை படம் எடுத்து பயமுறுத்தித் துரத்தி விட்டீர்கள் போல!!!  ஓடி விட்டது.  கவின் அலுக்காமல் கதை படைக்கிறான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கவினின் விளையாட்டைக் காண வந்த பல்லியை படம் எடுத்து பயமுறுத்தித் துரத்தி விட்டீர்கள் போல!!! ஓடி விட்டது. கவின் அலுக்காமல் கதை படைக்கிறான்!//

   ஓ! அப்படியா , இது தெரியாமல் விரட்டி விட்டேனே! சிறு வய்தைல் வீட்டில் பல்லி பார்த்தால் அதை நம்மை விரட்ட சொல்வான் அது போய் விட்டதை பார்த்தால் தான் நிம்மதியாக இருப்பான்.

   நிறைய கதை காணொளிகள் யூடியூப் சேனலில் போட்டு வருகிறான், ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள்.

   நீக்கு
 9. அந்த மலையைப் பார்த்தால் ஒரு சிறுவன் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்த மலையைப் பார்த்தால் ஒரு சிறுவன் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது.//

   உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா? முகம் வானை நோக்கி இருப்பது போல எனக்கு தெரிகிறது. .

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை.ஏரியின் படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அழகாக வந்துள்ளது.நீல வானமும் ஏரியின் அழகும் கண்களை கவர்கிறது.

  வான் கோழி கழுகு படங்களை ரசித்தேன். அதன் ஒவ்வொரு நிலைக்கும் தங்களின் பொருத்தமான வரிகளையும் ரசித்தேன். வானில் பறப்பதால் இதற்கு வான்கோழி கழுகு என பெயர் வந்ததா? கழுகின் தலைபாகம் வித்தியாசமான நல்ல சிகப்பு கலந்த கலராக உள்ளது. நம்மூர் கழுகு எல்லாம் ஒரே கருமை கலந்த நிறந்தான்.

  தங்கள் பேரனும் தங்களைப் போலவே அழகாக படம் எடுத்துள்ளார் . தங்கள் பேரன் எடுத்த
  மலர் படம் அருமையாக உள்ளது. அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  அந்த மலையின் படத்தில் தங்கள் கற்பனை நன்றாக உள்ளது. முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்த ஒரு மனிதனின் வளைந்த முதுகையும் நான். இந்த மலையில் கற்பனை செய்து பார்த்தேன். படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கம்லாஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //பதிவு அருமை.ஏரியின் படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அழகாக வந்துள்ளது.நீல வானமும் ஏரியின் அழகும் கண்களை கவர்கிறது.//

   நன்றி.

   //வான் கோழி கழுகு படங்களை ரசித்தேன். அதன் ஒவ்வொரு நிலைக்கும் தங்களின் பொருத்தமான வரிகளையும் ரசித்தேன்.//

   நன்றி.

   //வானில் பறப்பதால் இதற்கு வான்கோழி கழுகு என பெயர் வந்ததா? //

   நல்ல கற்பனை.


   //கழுகின் தலைபாகம் வித்தியாசமான நல்ல சிகப்பு கலந்த கலராக உள்ளது. நம்மூர் கழுகு எல்லாம் ஒரே கருமை கலந்த நிறந்தான்.//

   நம்மூரிலும் வித வித கழுகுகள் இருக்கும். பருந்து, கருடன், பிண்ம் தின்னும் கழுகு என்று வித்தியச வித்தியசமாக இருக்கிறது.


   //தங்கள் பேரனும் தங்களைப் போலவே அழகாக படம் எடுத்துள்ளார் . தங்கள் பேரன் எடுத்த
   மலர் படம் அருமையாக உள்ளது. அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.//

   பேரனை வாழ்த்தி பாராட்டியதற்கு நன்றி.

   //அந்த மலையின் படத்தில் தங்கள் கற்பனை நன்றாக உள்ளது. முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்த ஒரு மனிதனின் வளைந்த முதுகையும் நான். இந்த மலையில் கற்பனை செய்து பார்த்தேன். படங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   உங்கள் கற்பனையும் அருமை. பதிவை ரசித்து விரிவான கருத்து கொடுத்தமைக்கு நன்றி.

   நீக்கு
 11. அருமையான படங்கள்...

  அந்தப் படம் சிறுவன் போலவே உள்ளது... ஒரு பொம்மையை கொஞ்சுவது போலவும் உள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //அருமையான படங்கள்...//
   நன்றி.

   //அந்தப் படம் சிறுவன் போலவே உள்ளது... ஒரு பொம்மையை கொஞ்சுவது போலவும் உள்ளது...//

   உங்களுக்கு தோன்றிய காட்சி அருமை.
   உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்..

   நீக்கு
 12. வான் கோழி கழுகு நல்ல அழகுடன் இருக்கிறது. ஏரிக்கரை , மலைகள் செடிகள் படங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   //வான் கோழி கழுகு நல்ல அழகுடன் இருக்கிறது. ஏரிக்கரை , மலைகள் செடிகள் படங்கள் நன்று.//

   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி

   நீக்கு
 13. படங்கள் மிக அழகு. அதுவும் துல்லிய நீல வானப் பின்னணியில் வட்டமிடும் கழுகு படம் மிகவும் கவர்ந்தது.அந்தப் பாறை ஒரு சிறுவன் அல்லது சிறுமி அமர்ந்து புத்தகம் படிப்பது போல இருக்கிறது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கு நன்றி.

   நீக்கு