புதன், 22 மார்ச், 2023

உலக தண்ணீர் தினம் (2023)


உலக தண்ணீர் தினம்

மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பதிவு போட்டு வருகிறேன். 

ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருள் மாறும். இந்த ஆண்டின் கருப்பொருள் " நீரை மதிப்பிடுதல்" ஆகும்


//ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை முன்வைக்க சில தீம்கள் கையாளப்படும். அந்த வகையில் நேற்று  செனகலின் டாக்கரில் 9வது உலக நீர் மன்றத்தின் தொடக்க அமர்வில் IGRAC (nternational Groundwater Resources Assessment Centre)  தனது கருப்பொருளான நிலத்தடி நீர் - Making The Invisible Visible என்பது முன்மொழியப்பட்டுள்ளது. //

நன்றி - தினமலர்.
2022 ல்  கருப்பொருள்.

உலக தண்ணீர் தினம் போன வருடம் உலக தண்ணீர் தினத்தில் போட்ட பதிவு.

//தண்ணீர் லாரிகள் இப்போது குடியிருப்புகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. எவ்வளவு காலம்  இது  பூர்த்தி செய்யும்? கேள்வி நெஞ்சில் அலை மோதுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

நிலத்தடி நீர் இருந்தால் தானே தண்ணீர் கிடைக்கும். இன்னும் இன்னும் என்று பூமியை ஆழ ஆழ தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு இருந்தால் தானே தண்ணீர் வரும்.//


போன வருடம் போட்ட பதிவில் இருந்து கொஞ்சம்.
முந்திய பதிவில் உலக தண்ணீர் தினத்தில் முன்பு போட்ட பதிவுகள் சுட்டிகள் இருக்கிறது.

இந்த ஆண்டு நீரை எப்படி அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யலாம். தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்தி பேச போகிறார்கள். கிராமபுறங்களில் நீர்நிலையை மேம்படுத்த மக்கள் முன் பேச போகிறார்களாம்.


மக்கள் என்ன சொல்வார்கள்,சுத்தமான குடிநீர் வேண்டும் என்று இன்னும் நிறைய மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை.

, வீட்டு தேவைகளுக்கு, மற்றும் கால்நடை வளர்ப்புக்கு நீர்,

விவசாயம் செய்ய நீர்பாசன வசதி வேண்டும் என்று சொல்வார்கள்.

குளம், குட்டைகளை தூர் வார வேண்டும். என்று சொல்வார்கள்.

மழை நீரை சேமித்து வளம் பெறுவோம். நீர் வளத்தை காப்போம்.

நீர் ஆதாரங்களை முறையாக திட்டமிட்டு கையாண்டு அனைவருக்கும் நீர் கிடைக்க செய்ய வேண்டும்.


நல்ல தீர்வு கிடைக்கட்டும்.

சகல ஜீவராசிகளும் வாழ நீர் அவசியம்.


பேரன் மழை உடை அணிந்து பள்ளி போகிறான்.
நல்ல மழை பெய்தால் கவின் பள்ளி போகிற பாதையிலும் வெள்ளம் வருமாம்.

அரிசோனாவில் வசந்தகால மாற்றத்தால் நல்ல மழை இரண்டு நாட்களாக பெய்து கொண்டு இருக்கிறது.
நிறைய இடங்களில் வெள்ளம்.

முன்பு போட்ட பதிவு பார்லெட் ஏரி நினைவு இருக்கும். அந்த ஏரி நிறைந்து வெள்ளம் போகிறது, கரை ஓரம் இருப்பவர்களை வேறு இடத்திற்கு போக எச்சரிக்கப் பட்டு இருக்கிறார்கள். பாதைகள் அடைக்கப்பட்டு விட்டது.


அரிசோனாவில் மார்ச் 15ம் தேதி ஏற்பட்ட வெள்ளம் காணொளி.

வெள்ளம் யாருக்கும் சேதம் இல்லாமல் இறைவன் காப்பாற்ற வேண்டும். இங்கு முன்பே எச்சரிக்கை விட்டு விடுவதால் இழப்பு தவிர்க்கபடுகிறது.

இன்று இங்கு காலை 7.51. தண்ணீர் தின பதிவு அவசரமாக போட்டு விட்டேன்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


-----------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

 1. நீரின்றி அமையாது உலகு.  அதிகரித்துக்கொண்டே போகும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் தண்ணீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.  மனிதன் சுயநலமாக பூமியை தோண்டி தண்ணீர் எடுத்துக் கொண்டே இருக்கிறான்.மண்ணைத்தோண்டி தண்ணீர் தேடாமல் தன்னைத் தோண்டி ஞானம் கண்டால் விழித்துக்கொண்டு தண்ணீரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பான்!  அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் என்கிறார்கள். .  என்ன  ஆகுமோ எதிர்காலம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //நீரின்றி அமையாது உலகு. அதிகரித்துக்கொண்டே போகும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் தண்ணீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. //

   ஆமாம். தண்ணீரின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
   நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது.

   //தன்னைத் தோண்டி ஞானம் கண்டால் விழித்துக்கொண்டு தண்ணீரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பான்! அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் என்கிறார்கள். . என்ன ஆகுமோ எதிர்காலம்!//

   மனிதன் ஞானம் பெற வேண்டும் என்று சொன்னது சரி.
   தண்ணீரை சேமிக்க நல்ல திட்டமிடல் நடக்கட்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 2. வணக்கம் அம்மா. உலக தண்ணீர் தினம்..... உங்கள் முந்தைய பதிவுகள் நினைவில் இருக்கிறது. நானும் ஒரு வருடம் எழுதியிருக்கிறேன்.

  அரிசோனா வெள்ளம் காணொளி அச்சுறுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   //வணக்கம் அம்மா. உலக தண்ணீர் தினம்..... உங்கள் முந்தைய பதிவுகள் நினைவில் இருக்கிறது. நானும் ஒரு வருடம் எழுதியிருக்கிறேன்.//

   தொடர் அழைப்பில் எல்லோரும் எழுதினோம்.
   காணொளி அச்சமாக இருந்தது பார்க்கவே, குடியிருப்பு பகுதி அது.
   உங்கள் கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 3. நல்லதொரு பதிவு

  நீரின் அவசியத்தை அரசும் நினைப்பதில்லை, மக்களுக்கும் கவலை இல்லை.

  மக்களின் ஒரே குறிக்கோள் விவசாய நிலங்கள், குளம், ஏரிகளை பிளாட் போட்டாலும் வாங்கி குவிக்க வேண்டும்.

  மழைநீரை சேகரிக்கும் எண்ணம், முயற்சி இல்லாமல் வெள்ளம் வந்தால் இறைவன் சோதிக்கிறான் என்று சொல்வது...

  காமராஜர் ஆட்சிக்கு பிறகு இதுவரையில் யாரும் அணை கட்டவில்லை.

  இதை மக்கள் முதலில் உணரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //மக்களின் ஒரே குறிக்கோள் விவசாய நிலங்கள், குளம், ஏரிகளை பிளாட் போட்டாலும் வாங்கி குவிக்க வேண்டும்.//

   ஆமாம், நிறைய குளம், ஏரிகள், விவசாய நிலங்கள் பிளாட் போட பட்டு வீடுகளும் அரசாங்க அலுவலங்களும் இருக்கிறது.

   //மழைநீரை சேகரிக்கும் எண்ணம், முயற்சி இல்லாமல் வெள்ளம் வந்தால் இறைவன் சோதிக்கிறான் என்று சொல்வது..//

   மழைநீரை சேகரிக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.

   //காமராஜர் ஆட்சிக்கு பிறகு இதுவரையில் யாரும் அணை கட்டவில்லை.

   இதை மக்கள் முதலில் உணரவேண்டும்.//

   ஆமாம், மக்கள் உணர்ந்தால் நன்றாக இருக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. காணொளிகள் முழுவதும் கண்டேன் தண்ணீர் சரியான பாதையில் செல்ல அமைத்து இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காணொளிகள் முழுவதும் கண்டேன் தண்ணீர் சரியான பாதையில் செல்ல அமைத்து இருக்கிறார்கள்.//

   தண்ணீர் அனைத்தும் சில மணிகளில் வடிந்து வானவில் வானத்தில் தெரிவது பார்க்க அழகு. பயமாக இருந்த வெள்ளம் வடிந்தவுடன் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
   காணொளியை பார்த்து விட்டு மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 5. வான் சிறப்பை அனைவரும் உணர வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //வான் சிறப்பை அனைவரும் உணர வேண்டும்.//

   ஆமாம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. உலக தண்ணீர் தினம் அவசியமான பகிர்வு.

  எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை போற்றி பாதுகாப்போம்.

  இயற்கையை பேணிப் பாதுகாப்போம் நலம் பெறுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   உலக தண்ணீர் தினம் அவசியமான பகிர்வு.

   //எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை போற்றி பாதுகாப்போம்.//

   ஆமாம் , அதை நினைவில் கொள்ள வேண்டும்.


   //இயற்கையை பேணிப் பாதுகாப்போம் நலம் பெறுவோம்.//

   இயற்கையை பேணினால் அது நம்மை பாதுகாக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 7. கோமதிக்கா, காணொளிதான் முதலில் பார்த்தேன். தண்ணீரி வடிகிறதே எனவே பயம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஓடிச் சென்று வடிகிறது. எங்கள் ஊரிலும் அப்போது வெள்ளம் வந்த போது ஓடி வடிந்துவிட்டது. ஆனால் இனி எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று தெரியவில்லை ஏன்னா ஆற்றங்கரை போகும் வழில எல்லாம் வீடுகள் வந்தாச்சு. தண்ணி ஓட வழி வேனுமே? எங்கு போகும் வீட்டுக்குள்ளதான் போகும் இந்த முறையும் அப்படித்தான் ஆச்சு வயல்பரப்பில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

  நாம தவறுகள் செய்துட்டு சும்மா இயற்கையைக் குற்றம் சொல்கிறோம் தண்ணீ வந்திடுச்சு வெள்ளம் வந்திடுச்சு வீட்டுக்குள் புகுந்திடுச்சு என்று. நாம தன்ணி தேங்கும் இடத்தில் வீடுகளை வாங்குகிறோம்...சென்னை வேளச்சேரி இதற்கு மிகப் பெரிய உதாரணம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
   காணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் உடனே வடிந்து விடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது அது தான் அந்த காணொளியை பகிர்ந்தேன்.

   //ஆற்றங்கரை போகும் வழில எல்லாம் வீடுகள் வந்தாச்சு. தண்ணி ஓட வழி வேனுமே? எங்கு போகும் வீட்டுக்குள்ளதான் போகும் இந்த முறையும் அப்படித்தான் ஆச்சு வயல்பரப்பில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.//

   நீங்கள் உங்கள் ஊர் மழை பதிவு போட்ட போது காணொளிகள் பார்த்தேன்


   தண்ணீர் நிற்காமல் வடிந்து விட்டதை. இப்போது நீங்கள் சொல்வதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது, மழை நீர் ஆற்றுக்கு போக வசதி செய்யபடவில்லையா?

   நம் நாட்டிலும் சில இடங்களில் மழை வெள்ளம் வந்தால் நீர் போக வசதி இல்லாமல் தேங்கி நிற்பதை.


   //நாம தவறுகள் செய்துட்டு சும்மா இயற்கையைக் குற்றம் சொல்கிறோம் தண்ணீ வந்திடுச்சு வெள்ளம் வந்திடுச்சு வீட்டுக்குள் புகுந்திடுச்சு என்று. நாம தன்ணி தேங்கும் இடத்தில் வீடுகளை வாங்குகிறோம்...சென்னை வேளச்சேரி இதற்கு மிகப் பெரிய உதாரணம்.//

   ஆமாம், அனைவருக்கும் வீடு வேண்டும், விவசாயம் செய்ய முடியவில்லை, அதனால் விளை நிலங்கள் வீட்டுமனை ஆச்சு.
   வேள்ச்சேரி போல நிறைய இடம் இருக்கிறது கீதா.

   நீக்கு
 8. நான் அடிக்கடி சொல்வது, இயற்கை இலவசமாகத் தரும் தண்ணீரை நாம் மதிப்பதில்லை. பலர் வீடுகளிலும் பாத்திரம் கழுவும் போது, பல் தேய்க்கும் போது குழாயைத் திறந்திருக்கும்படியேதான் செய்கிறார்கள். தண்ணீர் போய்க்கொண்டே இருக்கும்...பல் தேய்க்கும் வரை...அது போல பாத்திரம் கழுவும் போதும் குழாய் முழுவதும் திறந்து வைத்துக் கொண்டு கழுவுவது அடுத்த பாத்திரம் எடுத்து தேய்ப்பது இல்லை கழுவுவது வரை தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும்..

  நான் சிக்கனமாகச் செலவழிப்பேன். முன்பு இருந்த வீட்டில் நாங்கள் மட்டுமே தனி வீடு. எனவே அங்கு ஆன தண்ணீர் செலவுக்கும் இப்போது ஆகும் தண்ணீர் செலவுக்கும் மூன்று மடங்கு ரூபாய் கட்டுகிறோம். மேலே இரு குடித்தனங்கள். தனி தனியாக தண்ணீர் மீட்டர் வைத்திருக்கலாம். ஆனால் மூன்று வீடுகளுக்கும் சேர்த்து என்பதால் இப்படி...அது தவிர பொது ஏரியாவில் கழுவி விட, அவர்களின் காரைக் கழுவ அதுவும் வாரத்தில் இரு முறை இரு சக்கரவாகனம் கழுவ என்று செலவில் நாங்களும் கொடுக்க வேண்டியதாக இருக்கு. இதற்கு ஆகும் மின்சாரமும் சேர்த்து. என்ன சொல்ல?

  நான் செடிகளுக்குக் கூட, வீட்டில் அரிசி களையும் தண்ணீர், காய் கழுவும் தண்ணீர், சும்மா சோப் இல்லாமல் கை கழுவும் தண்ணீர் என்று சேர்த்து செடித் தொட்டிகளில் விடுவது வழக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நான் அடிக்கடி சொல்வது, இயற்கை இலவசமாகத் தரும் தண்ணீரை நாம் மதிப்பதில்லை.//

   உண்மை.

   //பலர் வீடுகளிலும் பாத்திரம் கழுவும் போது, பல் தேய்க்கும் போது குழாயைத் திறந்திருக்கும்படியேதான் செய்கிறார்கள். தண்ணீர் போய்க்கொண்டே இருக்கும்...பல் தேய்க்கும் வரை...அது போல பாத்திரம் கழுவும் போதும் குழாய் முழுவதும் திறந்து வைத்துக் கொண்டு கழுவுவது அடுத்த பாத்திரம் எடுத்து தேய்ப்பது இல்லை கழுவுவது வரை தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும்..//

   நானும் இநத பழக்கத்தைபற்றி எழுதி இருக்கிறேன், ஒரு புடவை அலச பல வாளி தண்ணீரை வீண் செய்வது, கேடை காலம் வந்து விட்டால் தண்ணீர் செலவு அதிகம் இருவேளை குளியல், மொட்டைமாடியில் தண்ணீர் ஊற்றுவது என்று. நாங்கள் கோடை காலத்தில் வீட்டின் மேல் தென்னை ஓலை பந்தல் போட்டுவிடுவோம். தற்காலிக பந்தல். கோடை முடிந்தவுடன் வந்து எடுத்து சென்று விடுவார்கள்.

   //நான் சிக்கனமாகச் செலவழிப்பேன். முன்பு இருந்த வீட்டில் நாங்கள் மட்டுமே தனி வீடு. எனவே அங்கு ஆன தண்ணீர் செலவுக்கும் இப்போது ஆகும் தண்ணீர் செலவுக்கும் மூன்று மடங்கு ரூபாய் கட்டுகிறோம். //

   நானும் அப்படித்தான் , அதிகமாக தண்ணீர் கட்டணம் கட்டும் போது மனம் புலம்பி போகிறது.

   மேலே இரு குடித்தனங்கள். தனி தனியாக தண்ணீர் மீட்டர் வைத்திருக்கலாம். ஆனால் மூன்று வீடுகளுக்கும் சேர்த்து என்பதால் இப்படி...அது தவிர பொது ஏரியாவில் கழுவி விட, அவர்களின் காரைக் கழுவ அதுவும் வாரத்தில் இரு முறை இரு சக்கரவாகனம் கழுவ என்று செலவில் நாங்களும் கொடுக்க வேண்டியதாக இருக்கு. இதற்கு ஆகும் மின்சாரமும் சேர்த்து. என்ன சொல்ல?//

   ஓன்றும் சொல்லமுடியாதுதான். நானும் இதௌ மாதிரி காட்சிகளை பார்த்து மனம் குமறி பதிவுகளில் போட்டு இருக்கிறேன், வேறு என்ன செய்வது! மக்கள் உணர வேண்டும். பாத் டப் போல குழந்தைகள் குளிக்க பெரிய காற்று அடைக்கும் தொட்டிகள் வெயில் காலத்தில் விற்கிறார்கள் அதை வாங்கி நீர் நிறைத்து குழந்தைகளை விளையாட விடுகிறார்கள் . நீரின் அவசியத்தை குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்.

   குளிப்பதற்கு இரண்டு கப் தண்ணீரில் குளிக்கும் கானோளி கூட போட்டேன்.


   //நான் செடிகளுக்குக் கூட, வீட்டில் அரிசி களையும் தண்ணீர், காய் கழுவும் தண்ணீர், சும்மா சோப் இல்லாமல் கை கழுவும் தண்ணீர் என்று சேர்த்து செடித் தொட்டிகளில் விடுவது வழக்கம்.//

   நானும் அப்படி செய்வேன், என் ஓர்படியும் அப்படி செய்வார்கள்.

   நீக்கு
 9. எத்தனை ஃப்ளாடுகள் எங்கள் பகுதியில் வருகின்றன....அனைத்திற்கும் தண்ணீர் பூமியைத் தோண்டி எடுக்கறாங்க...பூமியின் நிலத்தடி நீர் வற்றிப் போகாதா? வற்றினால் எத்தனை விளைவுகள்?! மனிதன் சுயநலவாதி.

  தான் அதிகமாகச் செலவழிக்கும் தண்ணீர் மற்றொருவருடைய தேவைக்கு இடைஞ்சல் என்பதும் தோன்ற வேண்டும்.

  மழை நீர் சேகரிப்பும் இல்லை. என்ன சொல்ல? கோமதிக்கா?

  பதிவு அருமை. காணொளியை ரசித்துப் பார்த்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எத்தனை ஃப்ளாடுகள் எங்கள் பகுதியில் வருகின்றன....அனைத்திற்கும் தண்ணீர் பூமியைத் தோண்டி எடுக்கறாங்க...பூமியின் நிலத்தடி நீர் வற்றிப் போகாதா? வற்றினால் எத்தனை விளைவுகள்?! மனிதன் சுயநலவாதி.//

   ஆமாம், நாளைய பிரச்சனை நாளைக்கு இன்று நன்றாக வாழவேண்டும் என்பது இப்போதைய மக்களின் மனநிலை.

   //தான் அதிகமாகச் செலவழிக்கும் தண்ணீர் மற்றொருவருடைய தேவைக்கு இடைஞ்சல் என்பதும் தோன்ற வேண்டும்.//

   தண்ணீர் மட்டும் அல்ல அதிகமாக வாங்கி குவிக்கும் உடைகள் மற்றும் மற்ற பொருட்களும் அப்படித்தான் என்று பெரியவர்கள், ஞானிகள் சொல்கிறார்கள். எல்லாவற்றிலும் சிக்கனம் சீர்திருத்தம் வேண்டும்.

   //மழை நீர் சேகரிப்பும் இல்லை. என்ன சொல்ல? கோமதிக்கா?
   ஆமாம்.


   பதிவு அருமை. காணொளியை ரசித்துப் பார்த்தேன்//
   நன்றி கீதா.   நீக்கு
 10. மழை உடை அணிந்து பேரன் செல்வது புத்தகத்தை அழகாக மழையிலிருந்து பாதுகாக்க மூடியிருக்கும் பை சூப்பர்.

  எல்லாமே இங்குள்ள குழந்தைகளை எண்ண வைக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மழை உடை அணிந்து பேரன் செல்வது புத்தகத்தை அழகாக மழையிலிருந்து பாதுகாக்க மூடியிருக்கும் பை சூப்பர்.//

   நன்றாக கவனித்து பார்த்து இருக்கிறீர்கள். புத்தகபை பாதுகாக்க மூடி இருப்பதை பார்த்தது வியப்பு!.

   மழை காலத்தில் பள்ளி, அலுவலகம் செல்வோர் நிலை கஷ்டம் தான்.
   மழையும் வேண்டி இருக்கே! மனிதன் வாழ.
   பாதுகாப்பு நடவடிக்கை செய்து கொள்ள வேண்டும்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 11. /// இன்னும் இன்னும் என்று பூமியைத் தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு இருந்தால் தானே தண்ணீர் வரும்..///

  சிந்தனைக்கு உரிய விஷயம்...

  இந்த வருடம் மழை குறைவு.. சாலை விரிவு என்ற பேரில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன...

  மரக்கன்றுகள் நடப்பட்டு விட்டதாக கணக்கு.. ஆடு வந்து மேய்ந்து விட்டது..

  எங்கும் பொய் எதிலும் பொய் என்றாகி விட்டது.. நல்லவர்க்கு இறைவன் தான் துணை..

  சிறப்பான பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வறாஜு, வாழ்க வளமுடன்

   //சிந்தனைக்கு உரிய விஷயம்...//
   சிந்தித்து செயல்பட்டால் நல்லது நடக்கும்.

   இந்த வருடம் மழை குறைவு.. சாலை விரிவு என்ற பேரில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன...//

   ஆமாம். சாலை விரிவு நாளுக்கு நாள் அத்தியாவசியமாக போய் விட்டது.

   //மரக்கன்றுகள் நடப்பட்டு விட்டதாக கணக்கு.. ஆடு வந்து மேய்ந்து விட்டது.//
   ஆடு மேயாமல் இருக்க தகுந்த வேலி, நீர் வசதி இருந்தால்தானே மரக்கன்றுகள் வளரும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. காணொளிகள் அழகு..

  மண்ணும் அழகு..
  மழையும் அழகு..

  மழைக்குப் பின் வான வில்லும் அழகு..

  பதிலளிநீக்கு
 13. காணொளிகள் அழகு..

  மண்ணும் அழகு..
  மழையும் அழகு..

  மழைக்குப் பின் வான வில்லும் அழகு..//

  காணொளிகளை ரசித்து கவிதையாக கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 14. மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல்
  இங்கே அடைத்து விட்ட கொடுமை ..

  எங்கே போய் சொல்வது?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல்
   இங்கே அடைத்து விட்ட கொடுமை ..//

   மழைநீர் வடிவதற்கு வழி இல்லையென்றால் கஷ்டம்தான்.


   எங்கே போய் சொல்வது?..//

   சொன்னாலும் வேலை நடக்க வேண்டும் ,அது வரை கஷ்டம் தான் .

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரி

  இன்று உலக தண்ணீர் தினத்திற்காக எழுதிய பதிவு அருமை. காணொளிகள் பார்த்தேன். நன்றாக உள்ளது. மழை நீரும் தேவைக்கதிகமாக கொட்டித் தீர்த்து வெள்ள அபாயத்தை ஏற்படுத்தினால் மக்களுக்கு அவஸ்தைதான். அது போல் மக்களும் கோடையில் வரும் தண்ணீர் தட்டுப்பபாட்டை உணர்ந்து மழை நீரை சேமித்து வைத்துக் கொண்டால், அவர்களுக்கும் உதவியாக இருக்கும். இதில் அரசாங்கமும் நல்வழிகளை கவனத்துடன் மக்களுக்கு ஏற்படுத்தி தந்தால் நல்லது.

  உங்கள் ஊரில் வெள்ள நீர் உடனடியாக வடிந்து விடுவது நல்ல செயல். இங்கு நாங்கள் இருக்கும் ஏரியாவிலும் இந்த வசதி உள்ளது. ஆனால் நல்ல விடாமல் பெய்யும் மழை காலங்களில் ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்படுகிறது. என செய்திகளில் படிக்கிறேன்.

  இப்போதெல்லாம் நிறைய அப்பார்ட்மெண்ட்டுகள் உருவாவதால் நிலத்தடி நீர் கணிசமாக குறைந்துதான் வருகிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //இன்று உலக தண்ணீர் தினத்திற்காக எழுதிய பதிவு அருமை. காணொளிகள் பார்த்தேன். நன்றாக உள்ளது. //

   நன்றி.

   //மழை நீரும் தேவைக்கதிகமாக கொட்டித் தீர்த்து வெள்ள அபாயத்தை ஏற்படுத்தினால் மக்களுக்கு அவஸ்தைதான். அது போல் மக்களும் கோடையில் வரும் தண்ணீர் தட்டுப்பபாட்டை உணர்ந்து மழை நீரை சேமித்து வைத்துக் கொண்டால், அவர்களுக்கும் உதவியாக இருக்கும். இதில் அரசாங்கமும் நல்வழிகளை கவனத்துடன் மக்களுக்கு ஏற்படுத்தி தந்தால் நல்லது.//

   ஆமாம். அந்த காலத்தில் மழை காலத்தில் மழை தண்ணீரை வீட்டில் எல்லோரும் பிடித்து வைத்து கொள்வோம். அந்த தண்ணீர் தீரும் வரை அதை உபயோகப்படுத்துவோம். மழை நீரை பிடித்து வைத்து கொள்ளும் வசதி இல்லை இப்போது உள்ள வீடுகளில்.
   மழை நீரை சேமிக்கும் வசதி எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டும்.

   //உங்கள் ஊரில் வெள்ள நீர் உடனடியாக வடிந்து விடுவது நல்ல செயல். இங்கு நாங்கள் இருக்கும் ஏரியாவிலும் இந்த வசதி உள்ளது. ஆனால் நல்ல விடாமல் பெய்யும் மழை காலங்களில் ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்படுகிறது. என செய்திகளில் படிக்கிறேன்.//

   சில தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து விடுகிறது.
   செய்திகளில் படிக்கிறோம்.


   //இப்போதெல்லாம் நிறைய அப்பார்ட்மெண்ட்டுகள் உருவாவதால் நிலத்தடி நீர் கணிசமாக குறைந்துதான் வருகிறது.

   ஒன்றும் சொல்வதற்கில்லை.//

   ஒன்றும் செய்ய முடியாது, சொல்லமுடியாது, நம் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து கொள்ளமட்டும் முடியும். வேறு ஒன்று சொல்வதற்கு இல்லைதான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு