மகள் வீட்டுத்தோட்டத்திற்கும் .வீட்டுக்கும் வந்த பூனைகள்
உங்களை எல்லாம் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது. தினம் வாங்க நீங்கள் எல்லாம்" என்று சொல்லி இருக்கிறேன். பறவைகளும், அணில்களும் பூனைகளும் இனி தொடர்ந்து வருவதாக வாக்கு அளித்து இருக்கிறார்கள். என்று போன அணில்பதிவில் சொல்லி இருந்தேன், நினைவு இருக்கும்.
தினம் வருகிறார்கள். அணிலை மீண்டும் பல கோணங்களில் படம் எடுத்தேன் அவை இன்னொரு பதிவில்.
இந்த பதிவில் மகள் வீட்டுக்கு வந்த பூனைகளும். நான் மற்ற இடங்களில் பார்த்த பூனைகளும் இடம் பெறுகிறது.
பூனையை பற்றி படித்த செய்திகள் கொஞ்சம் பகிர்ந்து இருக்கிறேன் சில படங்களுக்கு கீழ்.
தோட்டத்தில்
பால்கனியில் போட்டு இருக்கும் மடக்கு நாற்காலியில் வந்து படுத்து கொள்ளும்
இன்னொரு பூனை
இதன் கழுத்தில் டை கட்டியது போல வெள்ளைத்திட்டு
பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோளுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாதாம்.
இந்த இடத்தில் அடிக்கடி வந்து படுத்து கொள்ளும்
இந்த பூனை யார் வீட்டிலோ வளர்க்கும் செல்ல பூனை கழுத்தில் சின்ன மணி கட்டி இருக்கிறார்கள்.
சின்ன குருவிகள், பட்டாம் பூச்சிகள், பறக்கும் எல்லா பூச்சிகளையும் வேட்டையாட ஓளிந்து இருக்கும், அங்கேயே தவம் செய்வது போல காத்து இருக்கும், தூங்கும் அந்த மரத்தடியில்.
அதிரா வைத்து இருப்பார் பூனை கையை அசைப்பது போல,
அது போல பூச்சிகளை காலால் அடித்து வீழ்த்தி தின்னும்.
பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளதாம், மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்றாம்.
திருவனந்தபுரத்தில் என் மாமாவீட்டின் பின்புறம்
தென்னைமரத்தின் பின்னே ஒளிந்து கொண்டு ஒரு பார்வை பார்க்கிறது பூனைகுட்டி
மறுநாள் பயமில்லை
நான்கு குட்டி போட்டதாம், இரண்டை வேறு யாரோ எடுத்து போய் விட்டார்களாம்.
பெண்பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைப்பார்களாம்.
மதுரையில் எங்கள் குடியிருப்பில் பக்கத்து வீட்டு குப்பைகூடையை உருட்டும் பூனை
குப்பை கூடையை தள்ளி அதில் உள்ளதை தின்னும் நாம் கதவை திறந்தால் கூடைக்கு பின் ஒளிந்து கொண்டு பார்க்கும்.
பொதுவாக பூனைகள் ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்தபின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணுமாம்.
அதிகாலையில் குப்பை கூடை எப்போது வைப்பார்கள் என்று மாடி படியில் குட்டியுடன் காத்து இருக்கிறது
மதுரையில் எங்கள் குடியிருப்பு பூனைகள் மதிய நேரம் ஓய்வு எடுக்கிறது
பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்குமாம்.
மாயவரத்தில் எங்கள் குடியிருப்பு பூனைகள் இரண்டும்.
இதற்கு உடம்பு சரியில்லை .மெலிந்து இருக்கும்.
மதுரையில் வடக்கு மாசி வீதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பார்த்த அழகான பூனைகள். ஒரு பூனை தூங்குகிறது, ஒரு பூனை விழித்துப்பார்க்கிறது.
பூனைகளை பார்த்தவுடன் நமக்கு பள்ளியில் படித்த பாடல்கள் நினைவுக்கு வரும்.
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாமபல் நிறத்தொரு குட்டி
கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறம் ஒரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம், என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவருக்கும் ஒன்றென காணீர்
- தேசீய கவி பாரதி
பாரதியின் கவிதை போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்.
பி. சுசீலா அவர்கள் நன்றாக பாடி இருக்கிறார்கள் கேட்டுப்பாருங்கள்.
அன்பை நாடி வரும் ஜீவன். வீட்டை சுற்றி சுற்றி வரும் , நம் காலில் உரசி கொண்டு சத்தம் கொடுக்கும். என்னை வீட்டுக்குள் விடேன் என்று. நாய் வளர்த்தவர்களை விரும்பும். பூனை வாழும் வீட்டை விரும்பும் என்பார்கள்.
நம் வலைத்தள நண்பர்கள் அதிரா, ஏஞ்சல், துளசி கோபால் நினைவுக்கு வருவார்கள். செல்லபிராணியாக பூனையை அன்பாக வளர்ப்பவர்கள்.
ஸ்ரீராம் வீட்டிலும் பூனைகுட்டி இருந்தது. அவர் மடியில் படுத்து இருக்கும் படம் போட்ட நினைவு இருக்கிறது.
பூனைகள் படம் அழகு. கவர்ச்சியான செல்லங்கள் பூனைகள். நாய்கள் அன்பானவை. பூனைகள் தந்திரமானவை. முன்பு இதுபற்றி நான் ஒரு கவிதை முயற்சியும் செய்திருந்தேன். நட்பில் நாயளவு இருப்பதில்லை
//சாதுவாகக் காணப்படும் பூனை சில இனங்களே அழியக் காரணமாகி இருக்கிறதா? ஆச்சர்யம். அழகின் பின்னே எப்போதும் ஆபத்து!!// எனக்கும் செய்தியை படித்தவுடன் வியப்பு. அதிரா சொல்வார்கள் பூனையை வெளியே விட்டால் சிறு குருவிகளை தின்று விடும் என்று. இங்கு தினம் இந்த கறுப்பு பூனை பறக்கும் பூச்சிகளை தின்பதை பார்க்கிறேன்.
பாரதியார் பாடலைப் படிக்கத்தொடங்கிய உடனே அது கமல் குரலில் ஒலித்தது! வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் தேங்காய் சீனிவாசனிடம் சொல்வார் இந்தப் பாடலை!//
பாலசந்தர் படத்தில் பாரதியார் பாடல் நிறைய இடம்பெறும். இந்த படத்திலும் பாடலும் கமல் பேசும் வசனமும் நினைவுக்கு வருகிறது. மியாவ் மியாவ் பூனை குட்டி வீட்டை சுற்றும் பூனை குட்டி பாடலும் நினைவுக்கு வந்தது.
பூனைகள் அழகான செல்லங்கள் தான்..ஆனாலும் அவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது.. பூனையின் உரோமங்கள் வீட்டுக்குள் உதிரக் கூடாது.. மேலும் அவை வேட்டையாடும் ஜீவன்களை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வரும் இயல்பை உடையன..
தவிரவும் பூனையின் வேட்டையை நாம் பார்க்கக் கூடாது.. பூனை என்று மட்டும் அல்ல!..
//பூனைகள் அழகான செல்லங்கள் தான்..ஆனாலும் அவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது.. பூனையின் உரோமங்கள் வீட்டுக்குள் உதிரக் கூடாது.. மேலும் அவை வேட்டையாடும் ஜீவன்களை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வரும் இயல்பை உடையன..//
பூனையை தூக்க அனுமதிக்க மாட்டார்கள் அம்மா, அதன் முடி உதிர்ந்தால் தங்கத்தில் பூனை செய்து திருசெந்தூர் கோவிலில் கொண்டு வைக்க வேண்டும் என்று சொல்லி பயமுறுத்தி வைத்து இருந்தார்கள். அதனால் எட்டி நின்று ரசிப்பதுடன் சரி.
//தவிரவும் பூனையின் வேட்டையை நாம் பார்க்கக் கூடாது.. பூனை என்று மட்டும் அல்ல!..//
ஓ சரி. நேற்றுதான் அவை பூச்சிகளை அடிப்பதை பார்த்தேன்.விலங்குகள் வேட்டையாடுவதை தொலைக்காட்சியில் காட்டுவதையே பார்க்க மாட்டேன் நான்.
கருப்புப் பூனையின் கண்கள்....திகில் படத்தில் வரும் பூனை போல இருக்கு. சிவப்பு ரோஜா படத்திலும் கூட இப்படியான ஒரு பூனைதான் இல்லையாஅ?
ஸ்ரீராமிடமும் இருந்தது.
மகனும் வைத்திருக்கிறான் கோமதிக்கா. முன்பு படத்துடன் பதிவு போட்டிருந்தேன் என்று நினைக்கிறேன்...கதம்பமாக...ஒன்றில்...பூனையின் பெயர் செபாஸ்டின் - செபி!
இப்போது ஒரு பைரவியையும் காப்பாற்றி வளர்க்கிறான். அதன் சொந்தக்காரர் அதற்குக் காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தபின் அதில் தொற்று ஏதோ ஏற்பட்டிட அவர் பூனையை காப்பகத்தில் கொண்டுவிட்டுவிட அந்தத் தொற்று அதிகமாகிட,,,அவர்கள் மகன் இருக்கும் கால்நடைமருத்துவக் கல்லூரிக்கு வர அங்கு தொற்றினை சரி செய்ய முயற்சிக்கும் போது அது படர்ந்து காலை அகற்ற வேண்டும் என்று சொன்னதும் அதன் சொந்தக்காரர் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன் பின் காப்பகமும் நிராகரித்துவிட...அதனைக் கருணைக் கொலை செய்யலாம் என்று மருத்துவமனை தீர்மானித்திட மகன் வேண்டாம் நான் வளர்க்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டுவந்துவிட்டான். ஜெர்மன் ஷெப்பர்ட். பெண் நாய். அவன் கொண்டு வரும் போது 1 வயது முடிந்து மூன்று மாதமே ஆகியிருந்தது. இப்போது மகனோடு ஒட்டிக் கொண்டு நட்புடன் அன்பு செய்து கொண்டு இருக்கிறது.
//கருப்புப் பூனையின் கண்கள்....திகில் படத்தில் வரும் பூனை போல இருக்கு. சிவப்பு ரோஜா படத்திலும் கூட இப்படியான ஒரு பூனைதான் இல்லையாஅ?//
ஆமாம், பார்க்கவே பயமாக இருக்கும்.
ஸ்ரீராமிடமும் இருந்தது.
//மகனும் வைத்திருக்கிறான் கோமதிக்கா. முன்பு படத்துடன் பதிவு போட்டிருந்தேன் என்று நினைக்கிறேன்...கதம்பமாக...ஒன்றில்...பூனையின் பெயர் செபாஸ்டின் - செபி!//
ஓ ! பார்த்து இருப்பேன் நினைவில் இல்லை.
//அதன் பின் காப்பகமும் நிராகரித்துவிட...அதனைக் கருணைக் கொலை செய்யலாம் என்று மருத்துவமனை தீர்மானித்திட மகன் வேண்டாம் நான் வளர்க்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டுவந்துவிட்டான். ஜெர்மன் ஷெப்பர்ட். பெண் நாய். அவன் கொண்டு வரும் போது 1 வயது முடிந்து மூன்று மாதமே ஆகியிருந்தது. இப்போது மகனோடு ஒட்டிக் கொண்டு நட்புடன் அன்பு செய்து கொண்டு இருக்கிறது.//
மகனின் பாதுகாப்பில் பைரவி இருப்பது மகிழ்ச்சி. , மகனின் கருணை உள்ளம் அருமை. நேசிக்க ஆரம்பித்தால் அவை வாழும் காலம் வரை அவைகளுக்கு கஷ்டம் இல்லை.
ஆமாம் அக்கா இங்கு வந்த பெண் பூனை குட்டி போட்டுவிட்டு அதை மாற்றுவதற்கு நம் வீட்டில் வந்து ஆராய்ந்தது. பாவம் அதற்காக வேண்டும் என்றே ஒரு ஷெல்ஃப் அடியில் பழைய துணிகள், மாற்றி மாற்றிப் பயன்படுத்த மிதியடிகள் கை துடைக்கும் துணிகள் எல்லாம் துவைத்து அடுக்கி வைத்திருப்பது வழக்கம். கூடவே ஒரு பையில் மாற்றி பயன்படுத்த வேண்டிய போர்வைகள் விரிப்புகள் எல்லாம்....இவற்றின் நடுவில் அது போய் படுத்துப் பார்த்துக் கொண்டது. எனவே அந்த ஷெல்ஃபின் கதவைத் திறந்து வைத்திருப்பேண் கொஞ்சமாக. அது தினமும் வந்து மூன்று நாட்கள் தொடர்ந்து வந்து அந்த இடத்தைப் பரிசோதித்துவிட்டு நான்காவது நாள் குட்டிகள் ஒவ்வொன்றாகத் தூக்கிக் கொண்டு வந்து உள்ளே வைத்தது. 7 நாட்கள் ஆனதும் மீண்டும் வேறு இடத்திற்குச் சென்று வைக்க இடம் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டது. என்ன ஒரு அன்பு! ப்பவும் வந்து கொஞ்சிவிட்டு செல்கிறாள் அந்தக் குட்டிப் பெண். படங்கள் காணொளி ஒன்றும் எடுத்திருக்கிறேன்...போடுவதற்குத் தயங்கிக் கொண்டு போடவில்லை...
பூனைகுட்டிகள் அடிக்கடி இடம் மாற்றும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். உங்கள் வீட்டில் அருமையான இடம் கிடைத்தது அதற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
//7 நாட்கள் ஆனதும் மீண்டும் வேறு இடத்திற்குச் சென்று வைக்க இடம் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டது. என்ன ஒரு அன்பு! ப்பவும் வந்து கொஞ்சிவிட்டு செல்கிறாள் அந்தக் குட்டிப் பெண். படங்கள் காணொளி ஒன்றும் எடுத்திருக்கிறேன்...போடுவதற்குத் தயங்கிக் கொண்டு போடவில்லை...//
மீண்டும் வந்து பார்த்து போவது மகிழ்ச்சி. காணொளி போடுங்கள் என்ன தயக்கம் !
இங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.
இங்கும் ஆண் பூனை இருக்கிறது. அதுவும் நம் வீட்டில் சாப்பிடுகிறது. இதுவரை பெண்ணும் ஆணும் சண்டை போட வில்லை. ஆனால் ஆண் பூனை வந்தால் பெண் பூனை உடனே வந்துவிடும் அதைச் சாப்பிடவிடாமலல் செய்யும்./....
//இங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.//
உரிமை போராட்டம் ,யார் கீதாவுடன் அதிக அன்பாய் இருப்பது என்று தான்.
//இங்கும் ஆண் பூனை இருக்கிறது. அதுவும் நம் வீட்டில் சாப்பிடுகிறது. இதுவரை பெண்ணும் ஆணும் சண்டை போட வில்லை. ஆனால் ஆண் பூனை வந்தால் பெண் பூனை உடனே வந்துவிடும் அதைச் சாப்பிடவிடாமலல் செய்யும்./....
படங்கள் எடுத்திருக்கிறேன்//
இங்கும் உங்களை தேடி பூனைகள் வந்து விட்டதா?
அன்பு அலைகள் இழுத்து வந்து விடும். படங்களை பதிவு போடுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஆமாம் அக்கா....ஆச்சரியமாக இருக்கு.....தானாகவே வந்து வீட்டுக்குள் வந்து உணவு கேட்பது, உரசுவது...எல்லாம். ஆனால் அடுக்களைக்குள் நுழைவதில்லை. ஓர் எல்லை வைத்திருக்கின்றன....
அது போல ரோட்டில் நடந்து செல்லும் போது சில பைரவ/விகள் அருகில் வந்து ஏக்கமாகப் பார்த்து காலால் என்னைத் தொட்டு ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறது. நான் ப்ரெட், பிஸ்கட் கொடுத்தாலும் அதை உடனே தின்பதில்லை. என்னிடம் கொஞ்சச் சொல்லி ஏதோ சொல்ல வாயை அசைத்து....தீனக் குரல் எழுப்பி நான் தடவிக் கொடுத்து சாப்பிடு சாப்பிடுமா என்று சொன்னதும் சாப்பிடுகின்றன....நான் அதிக நேரம் நிற்க முடியாதே நம் கடமைகள் இருக்கே என்று அவை சாப்பிடும் போது நகர்ந்தால் உடனே ஓடி வந்து வாலை ஆட்டி என்னைக் காலால் தட்டும்...போகாதே என்கிறதோ என்று தோன்றும். மனம் வேதனையாக இருக்கும்....அதன் பின் அவற்றிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறேன்.....
ஆமாம் அக்கா அதைக் கண்கூடாகக் காண்கிறேன்..நம் உடல் மொழி மனம் அதில் கருணையும் அன்பும் இருந்தால் அது எளிதாக மற்ற உயிர்களுக்கும் பரவுகிறது என்பது தெரிகிறது. மகன் இதை நிறைய சொல்வான்.
//ஆமாம் அக்கா அதைக் கண்கூடாகக் காண்கிறேன்..நம் உடல் மொழி மனம் அதில் கருணையும் அன்பும் இருந்தால் அது எளிதாக மற்ற உயிர்களுக்கும் பரவுகிறது என்பது தெரிகிறது. மகன் இதை நிறைய சொல்வான்.//
//நம் கடமைகள் இருக்கே என்று அவை சாப்பிடும் போது நகர்ந்தால் உடனே ஓடி வந்து வாலை ஆட்டி என்னைக் காலால் தட்டும்...போகாதே என்கிறதோ என்று தோன்றும். மனம் வேதனையாக இருக்கும்....அதன் பின் அவற்றிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறேன்.....//
உங்கள் கடமைகளுக்கு நடுவே அதற்கும் நேரம் கொடுத்து பார்த்து பேசி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்களும் செல்லத்தை வளர்த்தவர் என்று அதற்கு தெரியும் அதனால் அவை உங்களை அன்புடன் அணுகும்.
இங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.
இங்கும் ஆண் பூனை இருக்கிறது. அதுவும் நம் வீட்டில் சாப்பிடுகிறது. இதுவரை பெண்ணும் ஆணும் சண்டை போட வில்லை. ஆனால் ஆண் பூனை வந்தால் பெண் பூனை உடனே வந்துவிடும் அதைச் சாப்பிடவிடாமலல் செய்யும்./....
//இங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.//
கீதாவின் அன்புக்கு உரிமை கொண்டாட சண்டை. இருவருக்கும் அன்பு உண்டு என்று தெரிந்டஹ்பின் சணடி இருக்காது.
எடுத்த படங்களை பதிவில் போடுங்கள், பார்ப்போம். மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பதிவு அருமையாக உள்ளது. படங்களும் அருமை. பூனைகள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. அந்த கருப்புப் பூனையை பார்க்கும் போது சிகப்பு ரோஜாக்கள் படம் நினைவுக்கு வருகிறது.
பூனைகளின் பழக்க வழக்கங்களை பற்றி கூறியதற்கு நன்றி. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.
தங்கள் பேரன் கவினின் காணொளி அருமையாக உள்ளது. என் வாழ்த்துக்களை அவருக்கு கூறி விடுங்கள். அவர் யூடியூப் சேனல் வைத்திருப்பதற்கும் வாழ்த்துகள்.
பூனை கடிக்கு மருந்தில்லை என முன்பெல்லாம் எங்கள் அம்மா கூறுவார்கள். இப்போது வளர்ப்பவர்கள் அதற்குரிய ஊசிகளை போட்டுக் கொள்கிறார்களோ என்னவோ.?
பாடல்கள் அருமை. பாரதியார் பாடல் நன்றாக நினைவில் உள்ளது. அடுத்தப்பாடலும் அறிவேன். மறக்கவொண்ணா பாடல்கள். சுசீலா அவர்களின் காணொளியையும் கேட்டு மகிழ்ந்தேன்.
உங்களிடம் பழகுவதற்காக எத்தனை ஜீவன்கள் அன்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் அன்புக்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
//பூனைகள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. அந்த கருப்புப் பூனையை பார்க்கும் போது சிகப்பு ரோஜாக்கள் படம் நினைவுக்கு வருகிறது.//
உங்களுக்கும் , கீதா போல அந்த படம் நினைவுக்கு வந்து விட்டதா? அந்த படத்தில் கருப்பு மூனையை காட்டி பயமுறுத்துவார்கள்.
//பூனைகளின் பழக்க வழக்கங்களை பற்றி கூறியதற்கு நன்றி. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.// பூனை வளர்க்க விரும்புபவர்களுக்கு 10 செய்திகள் என்று கூகுள் காட்டியது அதிலிருந்து சில என் படத்து பொருத்தமானதை எடுத்து போட்டேன்.
//தங்கள் பேரன் கவினின் காணொளி அருமையாக உள்ளது. என் வாழ்த்துக்களை அவருக்கு கூறி விடுங்கள். அவர் யூடியூப் சேனல் வைத்திருப்பதற்கும் வாழ்த்துகள்.// அவன் பொழுது போக்கு கதைகளை எழுதி அதற்கு படங்களை இணைத்து அவனே பேசி எல்லோருக்கும் மாற்றி மாற்றி அவனே குரல் கொடுத்து என்று செய்வான். உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன்.
//பூனை கடிக்கு மருந்தில்லை என முன்பெல்லாம் எங்கள் அம்மா கூறுவார்கள். இப்போது வளர்ப்பவர்கள் அதற்குரிய ஊசிகளை போட்டுக் கொள்கிறார்களோ என்னவோ.?// அமெரிக்காவில் செல்லபிராணிகளை வள்ர்ப்பவர்களுக்கு நிறைய வசதிகள் உள்ளன. அதற்கு தேவையான உணவு, அதற்கு தேவையான நகம் வெட்டுதல் அதை பாரமரித்தலுக்கு வீட்டுக்கே வந்து செய்து கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
//பாடல்கள் அருமை. பாரதியார் பாடல் நன்றாக நினைவில் உள்ளது. அடுத்தப்பாடலும் அறிவேன். மறக்கவொண்ணா பாடல்கள். சுசீலா அவர்களின் காணொளியையும் கேட்டு மகிழ்ந்தேன்.//
காணொளிகளை பார்த்து கேட்டு மகிழ்ந்தமைக்கு நன்றி.
//உங்களிடம் பழகுவதற்காக எத்தனை ஜீவன்கள் அன்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் அன்புக்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
தூரத்திலிருந்து அன்புதான். அதற்கு உணவு அளிக்க தடை. நம் வீட்டில் வளர்த்தால் தான் உணவு தரலாம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
//வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி..! படங்கள், பகிர்ந்த பாடல்கள், பேரன் தயாரித்த காணொளிகள் அத்தனையும் அருமை!// வீட்டைச்சுற்றிய பூனைக்குட்டிகள், பேரன் தயாரித்த காணொளிகளை பார்த்து கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன் நலமாக இருக்கிறேன். உங்கள் பெண் எப்படி இருக்கிறார்? படிப்பு எப்படி போகிறது. வார விடுமுறையில் அவர்கள் வருகிறார்களா? நீங்கள் போய் பார்த்து வருகிறீர்களா நேற்று புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள் அதிரா, அப்போது அனுப்பினேன். நீங்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போது எட்டி பாருங்கள்.
ஆஹா இது நம்ம ஏரியாவாச்சே :) அந்த bell கட்டி வைக்க ஒரு காரணம் இருக்கு .எல்லா பூனைகளுக்கும் அந்த மணியை கட்டி வச்சா அவை சின்ன பறவைகளை வேட்டையாட பதுங்கி பாயும்போது மணி ஓசையெழுப்பி பூனை இருக்குன்னு பறவைகளை அலெர்ட் செஞ்சுடும். ஜெர்மனில ஒரு ஸ்டேட்டில் கவர்ன்மென்ட் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்காங்க பூனைகளை வீட்டில் வச்சு வளர்க்க காரணம் பல் பறவை இனம் அழிவதால் . பொதுவா பூனைகள் பிடிக்கும் இரையை சாப்பிடறதில்ல சும்மாவாகும் டிஸ்பிளே பண்ணி வைக்குங்க இல்லாட்டி பாசத்தோடு ஓனருக்கு கொண்டாருதுங்க
ஆஹா இது நம்ம ஏரியாவாச்சே :) அந்த bell கட்டி வைக்க ஒரு காரணம் இருக்கு .எல்லா பூனைகளுக்கும் அந்த மணியை கட்டி வச்சா அவை சின்ன பறவைகளை வேட்டையாட பதுங்கி பாயும்போது மணி ஓசையெழுப்பி பூனை இருக்குன்னு பறவைகளை அலெர்ட் செஞ்சுடும்.//
ஆமாம், நல்லது பறவைகள் தப்பிக்கும்.
//ஜெர்மனில ஒரு ஸ்டேட்டில் கவர்ன்மென்ட் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்காங்க பூனைகளை வீட்டில் வச்சு வளர்க்க காரணம் பல் பறவை இனம் அழிவதால் .//
பூனைகளை வீட்டில் வளர்க்கும் போது வெளியே விடாமல் இருந்தால் பறவைகள் காப்பாற்றபடும் தானே!
//எல்லா பூனைகளும் படங்களும் அழகு . கவினின் காணொளி நல்லா இருக்கு மியூசிக் சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்//
கவினிடம் சொல்கிறேன். நிறைய கதைகளுக்கு மியூசிக் சேர்த்து இருக்கிறான் இதற்கு ஏன் சேர்க்கவில்லை தெரியவில்லை. கேட்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் வெகு நாட்களுக்கு பின் வந்தது மகிழ்ச்சி. பூனைகள் உங்களை அழைத்து வந்து விட்டது பூனைகளுக்கு நன்றி.
பூனைகள் படம் அழகு. கவர்ச்சியான செல்லங்கள் பூனைகள். நாய்கள் அன்பானவை. பூனைகள் தந்திரமானவை. முன்பு இதுபற்றி நான் ஒரு கவிதை முயற்சியும் செய்திருந்தேன். நட்பில் நாயளவு இருப்பதில்லை
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//பூனைகள் படம் அழகு. //
நன்றி.
//கவர்ச்சியான செல்லங்கள் பூனைகள். நாய்கள் அன்பானவை. பூனைகள் தந்திரமானவை//
ஆமாம். நீங்கள் சொல்வது உண்மை.
//முன்பு இதுபற்றி நான் ஒரு கவிதை முயற்சியும் செய்திருந்தேன். நட்பில் நாயளவு இருப்பதில்லை //
கவிதை முன்பு பகிரவில்லையா? பூனை வீட்டைத்தான் நேசிக்கும், மனிதர்களை நேசிப்பதை விட என்றால் பூனையை வளர்ப்பவர்களுக்கு கோபம் வரும.
முன்பும் பகிர்ந்திருக்கிறேன்.
நீக்குஓ ! அப்படியா , படித்து இருப்பேன் நினைவு இல்லை.
நீக்குசாதுவாகக் காணப்படும் பூனை சில இனங்களே அழியக் காரணமாகி இருக்கிறதா? ஆச்சர்யம். அழகின் பின்னே எப்போதும் ஆபத்து!!
பதிலளிநீக்கு//சாதுவாகக் காணப்படும் பூனை சில இனங்களே அழியக் காரணமாகி இருக்கிறதா? ஆச்சர்யம். அழகின் பின்னே எப்போதும் ஆபத்து!!//
நீக்குஎனக்கும் செய்தியை படித்தவுடன் வியப்பு.
அதிரா சொல்வார்கள் பூனையை வெளியே விட்டால் சிறு குருவிகளை தின்று விடும் என்று.
இங்கு தினம் இந்த கறுப்பு பூனை பறக்கும் பூச்சிகளை தின்பதை பார்க்கிறேன்.
பாரதியார் பாடலைப் படிக்கத்தொடங்கிய உடனே அது கமல் குரலில் ஒலித்தது! வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் தேங்காய் சீனிவாசனிடம் சொல்வார் இந்தப் பாடலை!
பதிலளிநீக்குபாரதியார் பாடலைப் படிக்கத்தொடங்கிய உடனே அது கமல் குரலில் ஒலித்தது! வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் தேங்காய் சீனிவாசனிடம் சொல்வார் இந்தப் பாடலை!//
நீக்குபாலசந்தர் படத்தில் பாரதியார் பாடல் நிறைய இடம்பெறும்.
இந்த படத்திலும் பாடலும் கமல் பேசும் வசனமும் நினைவுக்கு வருகிறது.
மியாவ் மியாவ் பூனை குட்டி வீட்டை சுற்றும் பூனை குட்டி பாடலும் நினைவுக்கு வந்தது.
பேரன் காணொளி பின்னர் மொபைலில் பார்க்கவேண்டும். கணினிக்கு புதிய ஸ்பீக்கர் வாங்கி அதுவும் ரிப்பேர் ஆகி மருத்துவமனை சென்றிருக்கிறது!
பதிலளிநீக்குகவின் காணொளி வாசிக்க மட்டும் தான் அத்னால் ஸ்பீக்கர் தேவை இல்லை ஸ்ரீராம். கதை வாசித்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
நீக்கு//பேரன் காணொளி பின்னர் மொபைலில் பார்க்கவேண்டும். கணினிக்கு புதிய ஸ்பீக்கர் வாங்கி அதுவும் ரிப்பேர் ஆகி மருத்துவமனை சென்றிருக்கிறது!//
நீக்குவிரைவில் சரியாகி வரட்டும். பேரன் கதை மட்டும் படிக்கிற மாதிரிதான் இருக்கிறது. கேட்க வேண்டாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
தலைப்பே எம் எஸ் ராஜேஸ்வரி பாட்டை நினைவு படுத்துவதை சொல்ல மறந்து விட்டேன்!
பதிலளிநீக்கு//தலைப்பே எம் எஸ் ராஜேஸ்வரி பாட்டை நினைவு படுத்துவதை சொல்ல மறந்து விட்டேன்!//
நீக்குஆமாம், நானும் நினைத்தேன்.
உங்கள் வீட்டில் கொஞ்ச நாள் பூனை இருந்தது தானே!
காணொளிகள் அருமை...
பதிலளிநீக்குபூனை படங்கள் அழகு...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி, பூனை படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தன்பாலன்.
பி. சுசீலா அவர்களின் பாடல் இனிமை...
பதிலளிநீக்குபி. சுசீலா அவர்களின் பாடல் இனிமை..//
நீக்குஆமாம், நானும் நேற்று தான் கேட்டேன், இனிமியயாக பாடி இருக்கிறார்.
நன்றி பாடலை கேட்டு கருத்து சொன்னதற்கு.
படங்கள் வழக்கம் போல அருமை சகோ.
பதிலளிநீக்குகவினின் கதை சொல்லும் காணொளி மற்ற காணொளிகளும் கண்டேன் சிறப்பு
வணக்கம் சகோ தேவக்கோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் வழக்கம் போல அருமை சகோ.
கவினின் கதை சொல்லும் காணொளி மற்ற காணொளிகளும் கண்டேன் சிறப்பு//
படங்களை ரசித்து காணொளிகளை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.
பூனைகள் அழகான செல்லங்கள் தான்..ஆனாலும் அவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது.. பூனையின் உரோமங்கள் வீட்டுக்குள் உதிரக் கூடாது.. மேலும் அவை வேட்டையாடும் ஜீவன்களை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வரும் இயல்பை உடையன..
பதிலளிநீக்குதவிரவும் பூனையின் வேட்டையை நாம் பார்க்கக் கூடாது.. பூனை என்று மட்டும் அல்ல!..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//பூனைகள் அழகான செல்லங்கள் தான்..ஆனாலும் அவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது.. பூனையின் உரோமங்கள் வீட்டுக்குள் உதிரக் கூடாது.. மேலும் அவை வேட்டையாடும் ஜீவன்களை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வரும் இயல்பை உடையன..//
பூனையை தூக்க அனுமதிக்க மாட்டார்கள் அம்மா, அதன் முடி உதிர்ந்தால் தங்கத்தில் பூனை செய்து திருசெந்தூர் கோவிலில் கொண்டு வைக்க வேண்டும் என்று சொல்லி பயமுறுத்தி வைத்து இருந்தார்கள். அதனால் எட்டி நின்று ரசிப்பதுடன் சரி.
//தவிரவும் பூனையின் வேட்டையை நாம் பார்க்கக் கூடாது.. பூனை என்று மட்டும் அல்ல!..//
ஓ சரி. நேற்றுதான் அவை பூச்சிகளை அடிப்பதை பார்த்தேன்.விலங்குகள் வேட்டையாடுவதை தொலைக்காட்சியில் காட்டுவதையே பார்க்க மாட்டேன் நான்.
கவினின் காணொளி அருமை..
பதிலளிநீக்குகவினின் காணொளியை பார்த்தது மகிழ்ச்சி.
நீக்குநன்றி.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது பாடல் ஏழாம் வகுப்பில் படித்தது..
பதிலளிநீக்குஇன்னும் நினைவில் உள்ளது..
//கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களது பாடல் ஏழாம் வகுப்பில் படித்தது..
நீக்குஇன்னும் நினைவில் உள்ளது..//
ஆமாம். நினைவில் வைத்துக் கொள்வது போன்ற பாடல். படமும் நினைவில் இருக்கிறது, பெரிய உய்ரமான நெற்குதிர் படம்.
பல காலங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் கிளிகள் வளர்ந்தன.. கூண்டு இல்லாமல் வளர்ந்த அதனை புறம்போக்குப் பூனை ஒன்று பிடித்துக் கொன்று விட்டது..
பதிலளிநீக்குஅதிலிருந்து வீட்டில் கிளிகள்
வளர்ப்பதில்லை..
//பல காலங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் கிளிகள் வளர்ந்தன.. கூண்டு இல்லாமல் வளர்ந்த அதனை புறம்போக்குப் பூனை ஒன்று பிடித்துக் கொன்று விட்டது..//
நீக்குஎங்கள் வீட்டிலும் கிளி கொஞ்ச காலம் வளர்ந்தது. தென்னைமரத்திலிருந்து விழுந்த கிளியை காப்பாற்றி வளர்த்தோம்.
இறகுகள் வளர்ந்தவுடன் பறந்து சென்று விட்டது.
//அதிலிருந்து வீட்டில் கிளிகள்
வளர்ப்பதில்லை..//
கிளியை வளர்த்து பூனைக்கு இரையாகி விட்டால் வருத்தமாக இருக்கும், மீன்டும் வளர்க்க தோன்றாது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
போன பதிவை படித்தீர்களா?
pபூனைகள் எல்லாம் செம அழகு. பெண் பூனைகள் ஆண் பூனைகள் என்று ஒவ்வொரு இடத்திலும் எடுத்தவற்றைப் பகிர்ந்திருப்பது அழகா இருக்கு.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//பூனைகள் எல்லாம் செம அழகு. பெண் பூனைகள் ஆண் பூனைகள் என்று ஒவ்வொரு இடத்திலும் எடுத்தவற்றைப் பகிர்ந்திருப்பது அழகா இருக்கு.//
நன்றி கீதா.
கருப்புப் பூனையின் கண்கள்....திகில் படத்தில் வரும் பூனை போல இருக்கு. சிவப்பு ரோஜா படத்திலும் கூட இப்படியான ஒரு பூனைதான் இல்லையாஅ?
பதிலளிநீக்குஸ்ரீராமிடமும் இருந்தது.
மகனும் வைத்திருக்கிறான் கோமதிக்கா. முன்பு படத்துடன் பதிவு போட்டிருந்தேன் என்று நினைக்கிறேன்...கதம்பமாக...ஒன்றில்...பூனையின் பெயர் செபாஸ்டின் - செபி!
இப்போது ஒரு பைரவியையும் காப்பாற்றி வளர்க்கிறான். அதன் சொந்தக்காரர் அதற்குக் காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தபின் அதில் தொற்று ஏதோ ஏற்பட்டிட அவர் பூனையை காப்பகத்தில் கொண்டுவிட்டுவிட அந்தத் தொற்று அதிகமாகிட,,,அவர்கள் மகன் இருக்கும் கால்நடைமருத்துவக் கல்லூரிக்கு வர அங்கு தொற்றினை சரி செய்ய முயற்சிக்கும் போது அது படர்ந்து காலை அகற்ற வேண்டும் என்று சொன்னதும் அதன் சொந்தக்காரர் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன் பின் காப்பகமும் நிராகரித்துவிட...அதனைக் கருணைக் கொலை செய்யலாம் என்று மருத்துவமனை தீர்மானித்திட மகன் வேண்டாம் நான் வளர்க்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டுவந்துவிட்டான். ஜெர்மன் ஷெப்பர்ட். பெண் நாய். அவன் கொண்டு வரும் போது 1 வயது முடிந்து மூன்று மாதமே ஆகியிருந்தது. இப்போது மகனோடு ஒட்டிக் கொண்டு நட்புடன் அன்பு செய்து கொண்டு இருக்கிறது.
பூனைகள் என்றாலே ஏஞ்சல், அதிரா, துளசிக்கா நினைவுக்கு வருவாங்க
கீதா
//கருப்புப் பூனையின் கண்கள்....திகில் படத்தில் வரும் பூனை போல இருக்கு. சிவப்பு ரோஜா படத்திலும் கூட இப்படியான ஒரு பூனைதான் இல்லையாஅ?//
நீக்குஆமாம், பார்க்கவே பயமாக இருக்கும்.
ஸ்ரீராமிடமும் இருந்தது.
//மகனும் வைத்திருக்கிறான் கோமதிக்கா. முன்பு படத்துடன் பதிவு போட்டிருந்தேன் என்று நினைக்கிறேன்...கதம்பமாக...ஒன்றில்...பூனையின் பெயர் செபாஸ்டின் - செபி!//
ஓ ! பார்த்து இருப்பேன் நினைவில் இல்லை.
//அதன் பின் காப்பகமும் நிராகரித்துவிட...அதனைக் கருணைக் கொலை செய்யலாம் என்று மருத்துவமனை தீர்மானித்திட மகன் வேண்டாம் நான் வளர்க்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டுவந்துவிட்டான். ஜெர்மன் ஷெப்பர்ட். பெண் நாய். அவன் கொண்டு வரும் போது 1 வயது முடிந்து மூன்று மாதமே ஆகியிருந்தது. இப்போது மகனோடு ஒட்டிக் கொண்டு நட்புடன் அன்பு செய்து கொண்டு இருக்கிறது.//
மகனின் பாதுகாப்பில் பைரவி இருப்பது மகிழ்ச்சி. , மகனின் கருணை உள்ளம் அருமை. நேசிக்க ஆரம்பித்தால் அவை வாழும் காலம் வரை அவைகளுக்கு கஷ்டம் இல்லை.
//பூனைகள் என்றாலே ஏஞ்சல், அதிரா, துளசிக்கா நினைவுக்கு வருவாங்க//
ஆமாம். குழந்தை போல வளர்க்கிறார்கள்.
ஆமாம் அக்கா இங்கு வந்த பெண் பூனை குட்டி போட்டுவிட்டு அதை மாற்றுவதற்கு நம் வீட்டில் வந்து ஆராய்ந்தது. பாவம் அதற்காக வேண்டும் என்றே ஒரு ஷெல்ஃப் அடியில் பழைய துணிகள், மாற்றி மாற்றிப் பயன்படுத்த மிதியடிகள் கை துடைக்கும் துணிகள் எல்லாம் துவைத்து அடுக்கி வைத்திருப்பது வழக்கம். கூடவே ஒரு பையில் மாற்றி பயன்படுத்த வேண்டிய போர்வைகள் விரிப்புகள் எல்லாம்....இவற்றின் நடுவில் அது போய் படுத்துப் பார்த்துக் கொண்டது. எனவே அந்த ஷெல்ஃபின் கதவைத் திறந்து வைத்திருப்பேண் கொஞ்சமாக. அது தினமும் வந்து மூன்று நாட்கள் தொடர்ந்து வந்து அந்த இடத்தைப் பரிசோதித்துவிட்டு நான்காவது நாள் குட்டிகள் ஒவ்வொன்றாகத் தூக்கிக் கொண்டு வந்து உள்ளே வைத்தது. 7 நாட்கள் ஆனதும் மீண்டும் வேறு இடத்திற்குச் சென்று வைக்க இடம் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டது. என்ன ஒரு அன்பு! ப்பவும் வந்து கொஞ்சிவிட்டு செல்கிறாள் அந்தக் குட்டிப் பெண். படங்கள் காணொளி ஒன்றும் எடுத்திருக்கிறேன்...போடுவதற்குத் தயங்கிக் கொண்டு போடவில்லை...
நீக்குகீதா
பூனைகுட்டிகள் அடிக்கடி இடம் மாற்றும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். உங்கள் வீட்டில் அருமையான இடம் கிடைத்தது அதற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
நீக்கு//7 நாட்கள் ஆனதும் மீண்டும் வேறு இடத்திற்குச் சென்று வைக்க இடம் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டது. என்ன ஒரு அன்பு! ப்பவும் வந்து கொஞ்சிவிட்டு செல்கிறாள் அந்தக் குட்டிப் பெண். படங்கள் காணொளி ஒன்றும் எடுத்திருக்கிறேன்...போடுவதற்குத் தயங்கிக் கொண்டு போடவில்லை...//
மீண்டும் வந்து பார்த்து போவது மகிழ்ச்சி. காணொளி போடுங்கள் என்ன தயக்கம் !
கவினும் யுட்யூப் சானல் வைத்திருப்பது மகிழ்ச்சி. கவின் கதை வித்தியாசமாக நன்றாக இருக்கு. வாழ்த்துகள் சொல்லிடுங்க!
பதிலளிநீக்குகீதா
//கவினும் யுட்யூப் சானல் வைத்திருப்பது மகிழ்ச்சி. கவின் கதை வித்தியாசமாக நன்றாக இருக்கு. வாழ்த்துகள் சொல்லிடுங்க!//
நீக்குஅவன்நிறைய யூட் யூப் சேனல் வைத்து இருக்கிறான்.
கவினிடம் சொல்லி விடுகிறேன் உங்கள் வாழ்த்தை.
ஓ அப்படியா நிறைய இருக்கிறதா?
நீக்குநீங்கள் இங்குப் பகிர்ந்திருப்பதில் அவர் பேசுவது கேட்கவில்லையே கோமதிக்கா? பேசியிருக்கிறாரா? எழுத்துகளின் மூலம் சொன்னதை வாசித்துவிட்டேன்..
கீதா
பேசவில்லை கவின். எழுத்துக்கள் மூலம் தான் கதையை சொல்லி இருக்கிறான்.
நீக்குஇங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.
பதிலளிநீக்குஇங்கும் ஆண் பூனை இருக்கிறது. அதுவும் நம் வீட்டில் சாப்பிடுகிறது. இதுவரை பெண்ணும் ஆணும் சண்டை போட வில்லை. ஆனால் ஆண் பூனை வந்தால் பெண் பூனை உடனே வந்துவிடும் அதைச் சாப்பிடவிடாமலல் செய்யும்./....
படங்கள் எடுத்திருக்கிறேன்
கீதா
//இங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.//
நீக்குஉரிமை போராட்டம் ,யார் கீதாவுடன் அதிக அன்பாய் இருப்பது என்று தான்.
//இங்கும் ஆண் பூனை இருக்கிறது. அதுவும் நம் வீட்டில் சாப்பிடுகிறது. இதுவரை பெண்ணும் ஆணும் சண்டை போட வில்லை. ஆனால் ஆண் பூனை வந்தால் பெண் பூனை உடனே வந்துவிடும் அதைச் சாப்பிடவிடாமலல் செய்யும்./....
படங்கள் எடுத்திருக்கிறேன்//
இங்கும் உங்களை தேடி பூனைகள் வந்து விட்டதா?
அன்பு அலைகள் இழுத்து வந்து விடும்.
படங்களை பதிவு போடுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஆமாம் அக்கா....ஆச்சரியமாக இருக்கு.....தானாகவே வந்து வீட்டுக்குள் வந்து உணவு கேட்பது, உரசுவது...எல்லாம். ஆனால் அடுக்களைக்குள் நுழைவதில்லை. ஓர் எல்லை வைத்திருக்கின்றன....
நீக்குஅது போல ரோட்டில் நடந்து செல்லும் போது சில பைரவ/விகள் அருகில் வந்து ஏக்கமாகப் பார்த்து காலால் என்னைத் தொட்டு ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறது. நான் ப்ரெட், பிஸ்கட் கொடுத்தாலும் அதை உடனே தின்பதில்லை. என்னிடம் கொஞ்சச் சொல்லி ஏதோ சொல்ல வாயை அசைத்து....தீனக் குரல் எழுப்பி நான் தடவிக் கொடுத்து சாப்பிடு சாப்பிடுமா என்று சொன்னதும் சாப்பிடுகின்றன....நான் அதிக நேரம் நிற்க முடியாதே நம் கடமைகள் இருக்கே என்று அவை சாப்பிடும் போது நகர்ந்தால் உடனே ஓடி வந்து வாலை ஆட்டி என்னைக் காலால் தட்டும்...போகாதே என்கிறதோ என்று தோன்றும். மனம் வேதனையாக இருக்கும்....அதன் பின் அவற்றிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறேன்.....
கீதா
அன்பு அலைகள் இழுத்து வந்து விடும்//
நீக்குஆமாம் அக்கா அதைக் கண்கூடாகக் காண்கிறேன்..நம் உடல் மொழி மனம் அதில் கருணையும் அன்பும் இருந்தால் அது எளிதாக மற்ற உயிர்களுக்கும் பரவுகிறது என்பது தெரிகிறது. மகன் இதை நிறைய சொல்வான்.
நன்றி கோமதிக்கா
கீதா
//ஆமாம் அக்கா அதைக் கண்கூடாகக் காண்கிறேன்..நம் உடல் மொழி மனம் அதில் கருணையும் அன்பும் இருந்தால் அது எளிதாக மற்ற உயிர்களுக்கும் பரவுகிறது என்பது தெரிகிறது. மகன் இதை நிறைய சொல்வான்.//
நீக்குஉங்கள் மகன் சொல்வதும் சரிதான்.
//நம் கடமைகள் இருக்கே என்று அவை சாப்பிடும் போது நகர்ந்தால் உடனே ஓடி வந்து வாலை ஆட்டி என்னைக் காலால் தட்டும்...போகாதே என்கிறதோ என்று தோன்றும். மனம் வேதனையாக இருக்கும்....அதன் பின் அவற்றிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறேன்.....//
நீக்குஉங்கள் கடமைகளுக்கு நடுவே அதற்கும் நேரம் கொடுத்து பார்த்து பேசி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்களும் செல்லத்தை வளர்த்தவர் என்று அதற்கு தெரியும் அதனால் அவை உங்களை அன்புடன் அணுகும்.
இங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.
பதிலளிநீக்குஇங்கும் ஆண் பூனை இருக்கிறது. அதுவும் நம் வீட்டில் சாப்பிடுகிறது. இதுவரை பெண்ணும் ஆணும் சண்டை போட வில்லை. ஆனால் ஆண் பூனை வந்தால் பெண் பூனை உடனே வந்துவிடும் அதைச் சாப்பிடவிடாமலல் செய்யும்./....
படங்கள் எடுத்திருக்கிறேன்
கீதா
//இங்கு நம் வீட்டிற்கு ஒரு பெண் பூனை வந்து செல்கிறது. உணவு கொடுக்கிறோம். ரொம்ப ஒட்டிக் கொள்கிறது. முன்பு இருந்த வீட்டிலும் ஒரு பூனை வந்து கொண்டிருந்தது ஆண் பூனை. அதற்கும் உணவு கொடுத்தோம். அதர்கும் பெண் பூனைக்கும் உணவுக்காகச் சண்டை வந்ததை காணொளி எடுத்திருக்கிறேன். பெண் பூனை எங்கள் வீட்டில் உரிமை கொண்டாட ஆண்பூனையும் உரிமை கொண்டாட இரண்டிற்கும் சண்டை.//
நீக்குகீதாவின் அன்புக்கு உரிமை கொண்டாட சண்டை. இருவருக்கும் அன்பு உண்டு என்று தெரிந்டஹ்பின் சணடி இருக்காது.
எடுத்த படங்களை பதிவில் போடுங்கள், பார்ப்போம்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. படங்களும் அருமை. பூனைகள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. அந்த கருப்புப் பூனையை பார்க்கும் போது சிகப்பு ரோஜாக்கள் படம் நினைவுக்கு வருகிறது.
பூனைகளின் பழக்க வழக்கங்களை பற்றி கூறியதற்கு நன்றி. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.
தங்கள் பேரன் கவினின் காணொளி அருமையாக உள்ளது. என் வாழ்த்துக்களை அவருக்கு கூறி விடுங்கள். அவர் யூடியூப் சேனல் வைத்திருப்பதற்கும் வாழ்த்துகள்.
பூனை கடிக்கு மருந்தில்லை என முன்பெல்லாம் எங்கள் அம்மா கூறுவார்கள். இப்போது வளர்ப்பவர்கள் அதற்குரிய ஊசிகளை போட்டுக் கொள்கிறார்களோ என்னவோ.?
பாடல்கள் அருமை. பாரதியார் பாடல் நன்றாக நினைவில் உள்ளது. அடுத்தப்பாடலும் அறிவேன். மறக்கவொண்ணா பாடல்கள். சுசீலா அவர்களின் காணொளியையும் கேட்டு மகிழ்ந்தேன்.
உங்களிடம் பழகுவதற்காக எத்தனை ஜீவன்கள் அன்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் அன்புக்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது. படங்களும் அருமை.//
நன்றி.
//பூனைகள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. அந்த கருப்புப் பூனையை பார்க்கும் போது சிகப்பு ரோஜாக்கள் படம் நினைவுக்கு வருகிறது.//
உங்களுக்கும் , கீதா போல அந்த படம் நினைவுக்கு வந்து விட்டதா?
அந்த படத்தில் கருப்பு மூனையை காட்டி பயமுறுத்துவார்கள்.
//பூனைகளின் பழக்க வழக்கங்களை பற்றி கூறியதற்கு நன்றி. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்.//
பூனை வளர்க்க விரும்புபவர்களுக்கு 10 செய்திகள் என்று கூகுள் காட்டியது அதிலிருந்து சில என் படத்து பொருத்தமானதை எடுத்து போட்டேன்.
//தங்கள் பேரன் கவினின் காணொளி அருமையாக உள்ளது. என் வாழ்த்துக்களை அவருக்கு கூறி விடுங்கள். அவர் யூடியூப் சேனல் வைத்திருப்பதற்கும் வாழ்த்துகள்.//
அவன் பொழுது போக்கு கதைகளை எழுதி அதற்கு படங்களை இணைத்து அவனே பேசி எல்லோருக்கும் மாற்றி மாற்றி அவனே குரல் கொடுத்து என்று செய்வான். உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன்.
//பூனை கடிக்கு மருந்தில்லை என முன்பெல்லாம் எங்கள் அம்மா கூறுவார்கள். இப்போது வளர்ப்பவர்கள் அதற்குரிய ஊசிகளை போட்டுக் கொள்கிறார்களோ என்னவோ.?//
அமெரிக்காவில் செல்லபிராணிகளை வள்ர்ப்பவர்களுக்கு நிறைய வசதிகள் உள்ளன. அதற்கு தேவையான உணவு, அதற்கு தேவையான நகம் வெட்டுதல் அதை பாரமரித்தலுக்கு வீட்டுக்கே வந்து செய்து கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
//பாடல்கள் அருமை. பாரதியார் பாடல் நன்றாக நினைவில் உள்ளது. அடுத்தப்பாடலும் அறிவேன். மறக்கவொண்ணா பாடல்கள். சுசீலா அவர்களின் காணொளியையும் கேட்டு மகிழ்ந்தேன்.//
காணொளிகளை பார்த்து கேட்டு மகிழ்ந்தமைக்கு நன்றி.
//உங்களிடம் பழகுவதற்காக எத்தனை ஜீவன்கள் அன்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் அன்புக்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
தூரத்திலிருந்து அன்புதான். அதற்கு உணவு அளிக்க தடை.
நம் வீட்டில் வளர்த்தால் தான் உணவு தரலாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி..! படங்கள், பகிர்ந்த பாடல்கள், பேரன் தயாரித்த காணொளிகள் அத்தனையும் அருமை!
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//வீட்டைச் சுற்றும் பூனைக்குட்டி..! படங்கள், பகிர்ந்த பாடல்கள், பேரன் தயாரித்த காணொளிகள் அத்தனையும் அருமை!//
வீட்டைச்சுற்றிய பூனைக்குட்டிகள், பேரன் தயாரித்த காணொளிகளை பார்த்து கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
வணக்கம் கோமதி அக்கா.நலமா இருக்கீங்களா.அதிராக்கு லிங்க் அனுப்பியிருந்திங்கன்னு சொல்லி எனக்கும் அனுப்பினாங்க.அவங்க பின்ன வருவாங்க
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குநலமாக இருக்கிறேன்.
உங்கள் பெண் எப்படி இருக்கிறார்? படிப்பு எப்படி போகிறது.
வார விடுமுறையில் அவர்கள் வருகிறார்களா? நீங்கள் போய் பார்த்து வருகிறீர்களா
நேற்று புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள் அதிரா, அப்போது அனுப்பினேன். நீங்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போது எட்டி பாருங்கள்.
ஆஹா இது நம்ம ஏரியாவாச்சே :) அந்த bell கட்டி வைக்க ஒரு காரணம் இருக்கு .எல்லா பூனைகளுக்கும் அந்த மணியை கட்டி வச்சா அவை சின்ன பறவைகளை வேட்டையாட பதுங்கி பாயும்போது மணி ஓசையெழுப்பி பூனை இருக்குன்னு பறவைகளை அலெர்ட் செஞ்சுடும்.
பதிலளிநீக்குஜெர்மனில ஒரு ஸ்டேட்டில் கவர்ன்மென்ட் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்காங்க பூனைகளை வீட்டில் வச்சு வளர்க்க காரணம் பல் பறவை இனம் அழிவதால் .
பொதுவா பூனைகள் பிடிக்கும் இரையை சாப்பிடறதில்ல சும்மாவாகும் டிஸ்பிளே பண்ணி வைக்குங்க இல்லாட்டி பாசத்தோடு ஓனருக்கு கொண்டாருதுங்க
ஆஹா இது நம்ம ஏரியாவாச்சே :) அந்த bell கட்டி வைக்க ஒரு காரணம் இருக்கு .எல்லா பூனைகளுக்கும் அந்த மணியை கட்டி வச்சா அவை சின்ன பறவைகளை வேட்டையாட பதுங்கி பாயும்போது மணி ஓசையெழுப்பி பூனை இருக்குன்னு பறவைகளை அலெர்ட் செஞ்சுடும்.//
நீக்குஆமாம், நல்லது பறவைகள் தப்பிக்கும்.
//ஜெர்மனில ஒரு ஸ்டேட்டில் கவர்ன்மென்ட் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்காங்க பூனைகளை வீட்டில் வச்சு வளர்க்க காரணம் பல் பறவை இனம் அழிவதால் .//
பூனைகளை வீட்டில் வளர்க்கும் போது வெளியே விடாமல் இருந்தால் பறவைகள் காப்பாற்றபடும் தானே!
//பொதுவா பூனைகள் பிடிக்கும் இரையை சாப்பிடறதில்ல சும்மாவாகும் டிஸ்பிளே பண்ணி வைக்குங்க இல்லாட்டி பாசத்தோடு ஓனருக்கு கொண்டாருதுங்க //
அவை வண்ணத்து பூச்சியோடு விளையாடுவதை பார்த்து இருக்கிறேன்.
பாசத்தோடு அல்லது நான் வெற்றிகரமாக வேட்டையாடியதை மகிழ்வாய் காட்டவும் இருக்குமோ!
//பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்குமாம்.//
பதிலளிநீக்குஅதே அதே மிகச்சரி அதிரா கூட அப்படித்தானே :))
//பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்குமாம்.//
நீக்குஅதே அதே மிகச்சரி அதிரா கூட அப்படித்தானே :))//
பாவம் தூங்கட்டும். ஓய்வு கிடைப்பது பெரிய கஷ்டமாக இருக்கே! ரொம்ப பிஸியாக இருப்பதாக சொன்னார்.
எல்லா பூனைகளும் படங்களும் அழகு . கவினின் காணொளி நல்லா இருக்கு மியூசிக் சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்
பதிலளிநீக்கு//எல்லா பூனைகளும் படங்களும் அழகு . கவினின் காணொளி நல்லா இருக்கு மியூசிக் சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்//
நீக்குகவினிடம் சொல்கிறேன். நிறைய கதைகளுக்கு மியூசிக் சேர்த்து இருக்கிறான் இதற்கு ஏன் சேர்க்கவில்லை தெரியவில்லை. கேட்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் வெகு நாட்களுக்கு பின் வந்தது மகிழ்ச்சி. பூனைகள் உங்களை அழைத்து வந்து விட்டது பூனைகளுக்கு நன்றி.