திங்கள், 3 ஏப்ரல், 2023

மலர்களே மலருங்கள்



மகன் வீட்டுத் தோட்டத்தில் வெயில் வந்தவுடன் மலர் செடிகள் துளிர்த்து மொட்டுக்கள் வைத்து, மலர்கள் பூக்க  ஆரம்பித்து விட்டது. 

குளிர் குறைந்து வருகிறது. கோடை வரப்போகிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள், ஆரஞ்சு வண்ணத்தில் பூக்கள் சாலை ஓரங்களில் பூத்து அழகாய் இருக்கிறது. மலைகளில் மஞ்சள் பூக்கள் பூக்கும் செடிகள் படர்ந்து இருக்கிறது. மஞ்சள் போர்வை போர்தி இருப்பது போல் உள்ளது.

வசந்தம் வருவதை தெரிந்து கொண்ட  மலர்கள் மகிழ்ச்சியாக    மலர்ந்து வசந்தத்தை வரவேற்கிறது.

தேனீக்களும், வண்டுகளும் , பறவைகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. சிறு சிறு வெள்ளை, மஞ்சள் வண்ணத்து பூச்சியும் வருகிறது.

ரோஜாமொட்டு 
மலர ஆரம்பிக்கிறது









மொட்டு மலர் ஆகி விட்டது










செம்பருத்தி  மொட்டு









 


குளிர் காலத்தில் தோட்டம் பக்கம்  போகவே முடியவில்லை, இப்போது வெயில் ஆரம்பித்தவுடன் தோட்டத்திற்கு  தினம் தினம் போய் எடுத்த படங்கள் இவை.

மழை நீர் முத்து முத்தாக பூவில்.  இந்த செம்பருத்தி செடி வீட்டின் முன்புறம் இருக்கிறது

செம்பருத்திசெடியின் வேர் உள்ளே போக முடியாமல் மண் வாகு இருக்கிறது. குட்டையாகவே இருக்கிறது, அதில் இரண்டு மூன்று பூக்கிறது.


எலுமிச்சை  மலரின் மொட்டு 


மொட்டுமலரும் அதன் வாசனையும் அருமையாக இருக்கிறது

இந்த மலரின் மகரந்தங்களில் வரும் எறும்பு மற்று பூச்சிகளை சிட்டுக் குருவி, தின்ன வருகிறது. சிட்டுக்குருவிகளை படம் எடுத்து இருக்கிறேன், வேறு பதிவில் அவற்றை போடுகிறேன்.

எலுமிச்சை மரத்திற்கு உரம் வாங்கி வைத்து இருக்கிறார் மகன் இன்று

இது மாதிரி இருக்கிறது உரம் இதை மண்ணில் ஆணி அடிப்பது போல மரத்தின் அடியில் புதைத்து வைக்க வேண்டும். மண் கடினமாக இருப்பதால் தண்ணீர் ஊற்றி இதை சுத்தியல் கொண்டு அடித்து உள் இறக்கினார் மகன். கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உரமாகும் போல. நமக்கு சத்து மாத்திரை போல மரத்திற்கு சத்து மாத்திரை. கட்டியாக கல் மாதிரி இருக்கிறது உரம்.


சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் விழுவது போல செய்து கொடுத்து இருந்தார். அதை கட் செய்கிறார் தோட்டக்காரர்.

பின் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் மதில் சுவர்  சேதம் அடைவதாக சுவர் பக்கம் இருக்கும் செடிகளை அப்புறபடுத்த சொன்னார். அதனால் இரண்டு அரளி செடிகளை எடுத்து விட்டார்  தோட்டவேலை செய்பவர் . மீண்டும் "வேறு இடத்தில் நட முடியுமா" என்று கேட்டதற்கு முடியாது என்று சொல்லி விட்டார்.

உப்பு தண்ணீர் என்பதால் சுவர் வெள்ளையாக பூத்து பார்க்க நன்றாக இல்லை, நாளடைவில் சுவர் சேதம் ஆகி விடும் என்ற கவலை பின் வீட்டில் உள்ளவருக்கு.

குடிக்க,  குளிக்க  நீரின் கடின தன்மையை போக்க  உப்பு வாங்கி போட வேண்டும்.


எனக்கு பூக்கும் சமயம் இப்படி பிடுங்கபட்டு விட்டதே! என்ற கவலை. ரோஸ் கலர் அரளி நிறைய பூக்கும் பார்க்கவே மிக அழகாய் இருக்கும். மலர் கோலம் பகிர்வில் பார்த்து இருப்பீர்கள்.
மலர்கள் கேட்டேன் பாடல் வரிகளுடன் எனக்கு பிடித்த பாடல்



இறைவனிடம் மனம் கசிந்து கேட்பது போல இருக்கும் 
சினிமாவில் இந்த பாடல்  வரும் காட்சியும் நன்றாக இருக்கும் .

நான் பாட்டு வரிகள் வேண்டும் என்பதால் இந்த காணொளியை தேர்வு செய்தேன். பாட்டு மனதை வருடி கண்ணீர் மல்க வைக்கும்  பாடல். சித்ரா அருமையாக பாடி இருப்பார்.


மலர்களை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி.

செடியோ, மனிதர்களோ நாம் கவனிக்கப்படுகிறோம் என்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நம் கவனிப்பை, அன்பை அனைத்து உயிர்களுக்கும் வழங்குவோம். அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


------------------------------------------------------------------------------------------------

56 கருத்துகள்:

  1. அழகான மலர்கள். பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி பொங்குவது மலர்களிலும் இயற்கையிலும் மட்டுமே கிடைக்கக்கூடிய ஆனந்தம். காலை வேளையில் மலர்களைக் கண்டு aananthm அடைந்தேன். நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      அழகான மலர்கள். பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி பொங்குவது

      மலர்களிலும் இயற்கையிலும் மட்டுமே கிடைக்கக்கூடிய ஆனந்தம். //
      ஆமாம், உண்மை தான்.

      //காலை வேளையில் மலர்களைக் கண்டு aananthm அடைந்தேன். நன்றிம்மா.//
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.



      நீக்கு
  2. ரோஜா, செம்பருத்தி பூவின் படங்கள் படிப்படியாக வளர்ந்து வருவதை அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.

    காணொளி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //ரோஜா, செம்பருத்தி பூவின் படங்கள் படிப்படியாக வளர்ந்து வருவதை அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.//

      ஆமாம், தினம் கொஞ்சம் வெயில் காய்ந்து விட்டு அப்படியே படங்களை எடுத்து வைத்தேன். இப்போது பதிவாச்சு.

      காணொளி பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  3. 'வசந்தமே அருகில் வா..'  என்று எஸ் பி பி குரல் மனதில் ஒலிக்கிறது.  மலர்ந்த மலர்களை பார்க்கும்போதே மனதில் ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //'வசந்தமே அருகில் வா..' என்று எஸ் பி பி குரல் மனதில் ஒலிக்கிறது. மலர்ந்த மலர்களை பார்க்கும்போதே மனதில் ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வருகிறது.//

      நீங்கள் சொல்லும் பாடலை இப்போதுதான் கேட்டேன், இனிமையாக இருக்கிறது.
      நீங்கள் சொல்வது சரியே! மலர்ந்த மலர்கள், மலர்ந்த முகங்களை பார்த்தால் மனதில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் , நம்பிக்கையும் வருவது நிச்சயம்.

      நீக்கு
  4. அந்த ரோஜா எனக்கு என் மூன்று, நான்காம் வகுப்பை நினைவூட்டுகிறது.  என்னிடம் ஸ்கூலுக்கு எடுத்துச் செல்ல காது வைத்த யானைக்கலர் பை இருந்தது.  அதில் இரண்டு பக்கங்களிலும் இது மாதிரி மலர்ந்த ரோஜா படம் இருந்தது.  அதில் பூவுக்கும் மேல் பாதியும் கீழே மறுபாதியுமாய் "மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்" என்று எழுதி இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த ரோஜா எனக்கு என் மூன்று, நான்காம் வகுப்பை நினைவூட்டுகிறது. என்னிடம் ஸ்கூலுக்கு எடுத்துச் செல்ல காது வைத்த யானைக்கலர் பை இருந்தது. அதில் இரண்டு பக்கங்களிலும் இது மாதிரி மலர்ந்த ரோஜா படம் இருந்தது. //

      ஆஹா! மலரும் நினைவுகள் வந்து விட்டதே! மலர்ந்த ரோஜாவை பார்த்தவுடன்.

      //அதில் பூவுக்கும் மேல் பாதியும் கீழே மறுபாதியுமாய் "மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்" என்று எழுதி இருக்கும்!//

      உண்மை. மலர்ந்த முகம் வாழ்க்கையின் இன்பம்தான்.மலர்ந்த குழந்தையின் முகம் நமக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும். என்று மலர்ந்த முகத்தோடு இருப்பவர்களை பார்த்தாலும் நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.

      நீக்கு
  5. எலுமிச்சை மலர், மொட்டு பார்த்ததில்லை. இப்போதுதான் படத்தில் காண்கிறேன்! உரம் இடும் முறை புதிதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எலுமிச்சை மலர், மொட்டு பார்த்ததில்லை. இப்போதுதான் படத்தில் காண்கிறேன்! உரம் இடும் முறை புதிதாக இருக்கிறது.//

      வசந்த கால மலர்கள் என்று முன்பு இங்கு வந்த போது போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம். இரண்டு வகை எலுமிச்சை இருந்தது முன்பு ம்கன் தோட்டத்தில், சாத்துகுடி இருந்தது. அதன் மலர்களையும் படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.

      இப்போது ஒரு எலுமிச்சை மட்டுமே இருக்கிறது.

      நீக்கு
  6. அங்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொந்தரவு உண்டா?  முணுமுணுப்புகளை சமாளிக்க முடியாது!  பாடலை பின்னர் மொபைலில் கேட்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அங்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொந்தரவு உண்டா? முணுமுணுப்புகளை சமாளிக்க முடியாது! பாடலை பின்னர் மொபைலில் கேட்கவேண்டும்!//
      தொந்திரவு என்று இல்லை மகனை கூப்பிட்டு காட்டி சொல்லி விட்டார் மகனும் எடுத்து விட்டான்.

      பூத்து குலுங்கும் அரளிச்செடிகளை வீட்டுக்குள் இருந்தே பார்ப்போம். இப்போது வெறிச் என்று இருக்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. படங்கள் அழகு.
    உர மருந்து கெட்டியாய் இரும்புபோல் இருப்பது வியப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்ம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      //படங்கள் அழகு.//
      நன்றி.

      //உர மருந்து கெட்டியாய் இரும்புபோல் இருப்பது வியப்பு//
      எனக்கும் வியப்பு அதுதான் பகிர்ந்து கொண்டேன்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. ரோஜா, செம்பருத்திச் செடிகளும் பூக்களும் கொள்ளை அழகு. மகள் வீட்டில் இன்னும் பெரிதாக ரோஜா பூக்கும். ஆனால் காய்கறிகளோ, எலுமிச்சை, நாரத்தை போன்றவையோ வரவில்லை. முருங்கை கூட நாங்க போனப்போ வைச்சுப் பார்த்தோம். கருகப்பிலையைத் தொட்டியில் வைத்துக் குழந்தையைப் போல் பாதுகாக்கிறாள். இங்கே எல்லாமே அழகாக உள்ளன. உரம் இப்படிக் கல் போல் இருப்பதையும் இப்போதே அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      உடம்பு தேவலையா?

      //ரோஜா, செம்பருத்திச் செடிகளும் பூக்களும் கொள்ளை அழகு. மகள் வீட்டில் இன்னும் பெரிதாக ரோஜா பூக்கும்.//

      ரோஜா இன்னும் பெரிதாகும் .

      ஆனால் காய்கறிகளோ, எலுமிச்சை, நாரத்தை போன்றவையோ வரவில்லை. முருங்கை கூட நாங்க போனப்போ வைச்சுப்பார்த்தோம்.//

      இங்கும் காய்கறிகளை முயல் சாப்பிட்டு போய்விடும். முருங்கை வைத்து நெடு நெடு என்று வளர்ந்து பிஞ்சு காய் வருகிறது. ஆனால் அப்படியே காய்ந்து விடுகிறது.
      கருகப்பிலை, மருதாணி எல்லாம் வைத்து இருந்தாள் மருமகள் மதுரை சென்ற வருடம் வந்த போது காய்ந்து விட்டது.
      கருகப்பிலையை குழந்தை போலதான் வளர்க்க முடியும், பெரிய தொட்டியில் வளர்த்தாள்.

      //இங்கே எல்லாமே அழகாக உள்ளன//
      ஆமாம்.

      //உரம் இப்படிக் கல் போல் இருப்பதையும் இப்போதே அறிந்தேன்.//

      ஆமாம், நானும் இன்றுதான் அறிந்து கொண்டேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.



      நீக்கு
  9. ரோஜா செம்பருத்தி மலர்களின் படங்கள் மிக அழகு. ரோஜா பல நாட்கள் வாடாமல் இருக்கும் (ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால்).

    நானும் நேற்று, மிக அருகில் தேன் சிட்டைப்்பார்த்தேன் (மேல்கோட்டையில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //ரோஜா செம்பருத்தி மலர்களின் படங்கள் மிக அழகு. ரோஜா பல நாட்கள் வாடாமல் இருக்கும் (ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால்).//
      செடியில் இருந்தாலே ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கிறது. நிறம் மாறி கறுத்துவிடும்.

      //நானும் நேற்று, மிக அருகில் தேன் சிட்டைப்்பார்த்தேன் (மேல்கோட்டையில்)//
      நீங்கள் பார்த்தது மகிழ்ச்சி.

      ஓ ! நிறைய வகை தேன் சிட்டு இருக்கிறது. நம் ஊர் பக்கம் மஞ்சளும், இளம் பச்சையிலும் இருக்கும்.

      நீக்கு
    2. நானும் நேற்று, மிக அருகில் தேன் சிட்டைப்்பார்த்தேன் (மேல்கோட்டையில்)...நெல்லை சார் வைரமுடி சேவைக்கா ...நேற்று நாங்களும் அங்கு வந்து இருந்தோம்

      நீக்கு
    3. அனுப்ரேம்...அநியாயம் நீங்க செய்யறது....எனக்குத் தெரிந்திருந்தால் உங்களை வந்து பார்த்திருப்பேன். என்ன மூன்று சிறிய தெருக்கள். கண்டுபிடிப்பதா கஷ்டம்?

      (வைரமுடி செல்வப்பிள்ளையை, 1 அடி தூரத்தில், தோளில் சுமந்து செல்பவர்களுக்கு இடையில் சென்று-அதாவது இரண்டு மூங்கில் கம்புகளுக்கு இடையில், 1 நிமிடம் சேவித்தேன். இது இரண்டாவது வருடம்)

      நீக்கு
    4. (வைரமுடி செல்வப்பிள்ளையை, 1 அடி தூரத்தில், தோளில் சுமந்து செல்பவர்களுக்கு இடையில் சென்று-அதாவது இரண்டு மூங்கில் கம்புகளுக்கு இடையில், 1 நிமிடம் சேவித்தேன். இது இரண்டாவது வருடம்) ஆஹா நெல்லை சார் என்ன ஒரு பிராப்தம்.

      எங்கள் பயண குறிப்பை தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.

      நாங்கள் அஹோபில மடத்தில் தங்கினோம். போன முறை நெரிசலில் கொஞ்சம் கஷ்ட பட்டதால் இந்த முறை தள்ளியே நின்று சேவித்தோம்.அத்தையை அழைத்து சென்றிந்தோம் அதனால் அருகில் செல்ல கூட எண்ணவில்லை. ஆனால் கணவர் மட்டும் மீண்டும் ஒரு முறை சென்று அருகில் தரிசித்து வந்தார்.

      நீக்கு
    5. நெல்லை, அனு இருவரும் வைரமுடி சேவையை தரிசனம் செய்து வந்தது அறிந்து மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்கும் போது விழாக்களை கண்டு களித்து விட வேண்டும். இறைவன் அருள்வார் வாய்ப்புகளை.

      நீக்கு
  10. உரத்திற்கான கல்போன்ற உரம் ஆச்சர்யமளிக்கிறது

    உப்பு நீர், நீரின் கடினத் தன்மையைப் போக்க உப்பு என்ற பகுதி புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உரத்திற்கான கல்போன்ற உரம் ஆச்சர்யமளிக்கிறது//எனக்கும் வியப்பை தந்தது.

      //உப்பு நீர், நீரின் கடினத் தன்மையைப் போக்க உப்பு என்ற பகுதி புரியவில்லை//
      வைரத்தை வைரத்தால் அறுப்புது போல . உப்பு நீரை நந்நீராக மாற்ற உப்பை கொட்டி சரி செய்கிறார்கள். (நல்ல தண்ணீராக கிடைக்கிறது.)

      நீக்கு
  11. நான் சிறு வயதில் பார்த்த, நாங்கள் குடியிருந்த வீட்டில் இருந்த மணம் வீசும் ரோஜா மலர்களை இப்போது காண இயலவில்லை. மணமில்லாத அழகிய ரோஜாக்கள்தாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //நான் சிறு வயதில் பார்த்த, நாங்கள் குடியிருந்த வீட்டில் இருந்த மணம் வீசும் ரோஜா மலர்களை இப்போது காண இயலவில்லை. மணமில்லாத அழகிய ரோஜாக்கள்தாம்//

      மாயவரம் வீட்டில் பன்னீர் ரோஸ், மற்றும் மணம் வீசும் குட்டி சிவப்பு ரோஸ் இருந்தது.

      இப்போதும் மதுரையில் எங்கள் வீட்டுக்கு பூ போடும் அம்மா கொண்டு வருவார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  12. அழகான பதிவு... சமீபத்திய மூணாறு பயணம் நினைவுக்கு வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      மூணாறு மிக நன்றாக இருக்கும் நாங்களும் முன்பு போய் வந்தோம்.
      இயற்கை எழில் சூழ்ந்த இடம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. ரோஜா, செம்பருத்தி பூக்களின் படிப்படியான வளச்சியை பொறுமையுடன் அழகாக எடுத்து இருக்கின்றீர்கள்..

    மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்று அந்தக் காலத்தில் கடைத் தெரு துணிப்பைகளில் அச்சிட்டு இருப்பார்கள்..

    அது தான் உண்மை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //ரோஜா, செம்பருத்தி பூக்களின் படிப்படியான வளச்சியை பொறுமையுடன் அழகாக எடுத்து இருக்கின்றீர்கள்..//

      நன்றி.

      //மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்று அந்தக் காலத்தில் கடைத் தெரு துணிப்பைகளில் அச்சிட்டு இருப்பார்கள்..//

      ஸ்ரீராமும் சொல்லி இருக்கிறார்.நல்ல கருத்தை மக்கள் மத்தியில் சொல்ல நல்ல உத்தி.

      //அது தான் உண்மை..//

      ஆமாம், முன்பு காவடி சிந்தில் ஒரு பாட்டும் உண்டு குறுநகை மட்டும் போதும் என்று. எது போனாலும் பராவாயில்லை உன் குறுநகை மட்டும் போதும் என்று.

      வாழ்க நலம்..//
      வாழ்த்துக்கு நன்றி.





      நீக்கு
  14. மலர்கள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

    உங்கள் மகன் வீட்டு மலர்களும் அழகு. சிவப்பு ரோஜா கவர்கிறது.

    கொழும்பு வாசம் என்றால் பால்கனியில் சிறு காட்டின் . பூக்கும் மரங்களும் கீரையும் உண்டு.

    ஊரில் பெரிய காட்டின் அரளி, பொன்நொச்சி, செவ்வரத்தை இனங்கள், நந்தியாவட்டை மல்லிகை பவள மல்லிகை நித்திய கல்யாணி குரோட்டன்ஸ், கோளியாஸ் இனங்கள், என இடத்துக்கு ஏற்றபடி பலதும் பத்தும் பூத்து இருப்பதில் மகிழ்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //மலர்கள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.//

      ஆமாம். நம்மை மகிழ்விக்க இறைவன் பூமிக்கு அனுப்பிய தேவதை என்று நினைப்பேன்.


      //கொழும்பு வாசம் என்றால் பால்கனியில் சிறு காட்டின் . பூக்கும் மரங்களும் கீரையும் உண்டு.//

      ஆஹா! நினைவுகளில் அந்த வாசம் வந்துவிடும் அல்லவா!

      //ஊரில் பெரிய காட்டின் அரளி, பொன்நொச்சி, செவ்வரத்தை இனங்கள், நந்தியாவட்டை மல்லிகை பவள மல்லிகை நித்திய கல்யாணி குரோட்டன்ஸ், கோளியாஸ் இனங்கள், என இடத்துக்கு ஏற்றபடி பலதும் பத்தும் பூத்து இருப்பதில் மகிழ்ச்சி தான்.//

      கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
      மகன் வீட்டிலும் நித்திய கல்யாணி பூ இருக்கிறது.வெள்ளை அரளி, சிவப்பு, ரோஸ் அரளி இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.



      உங்கள் மகன் வீட்டு மலர்களும் அழகு. சிவப்பு ரோஜா கவர்கிறது.


      நீக்கு
  15. ரோஜா, செம்பருத்தி பூவின் படங்கள் அழகு மா ...

    எலுமிச்சை மலரின் மொட்டு ஆஹா மிக மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //ரோஜா, செம்பருத்தி பூவின் படங்கள் அழகு மா ...

      எலுமிச்சை மலரின் மொட்டு ஆஹா மிக மிக அழகு//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அனுபிரேம்.

      நீக்கு
  16. நவீன விஞ்ஞானம் வந்ததும் எல்லா இயற்கை வளங்களுக்கும் ஆணி அடிக்கப்பட்டு விட்டது...

    இப்போது உரமும் சேர்ந்தாயிற்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நவீன விஞ்ஞானம் வந்ததும் எல்லா இயற்கை வளங்களுக்கும் ஆணி அடிக்கப்பட்டு விட்டது...

      இப்போது உரமும் சேர்ந்தாயிற்று...//

      என்ன செய்வது ! காலமாற்றம்.

      நீக்கு
  17. காணொளிப் பாடல் இப்போது தான் கேட்கிறேன்..

    இனிமை.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளிப் பாடல் இப்போது தான் கேட்கிறேன்..

      இனிமை.. அருமை..//

      அருமையான பாடல். மிகவும் பிடிக்கும் புது பாடல்களும் சில நல்ல இனிமையாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  18. ரோஜா மொட்டும் அது மலரும் ஒவ்வொரு படமும் செமையா இருக்கு அது போலவே செம்பருத்தியும்...மொட்டும் மலரும் செம அழகு..அந்த நிறமும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //ரோஜா மொட்டும் அது மலரும் ஒவ்வொரு படமும் செமையா இருக்கு அது போலவே செம்பருத்தியும்...மொட்டும் மலரும் செம அழகு..அந்த நிறமும்//


      அதன் நிறம் எனக்கும் பிடித்தது கீதா.

      நீக்கு
  19. சுவற்றின் அருகில் அதன் பின்னணியில் இருப்பது படங்கள் செம அழகு..

    சிவப்பும் அதுவும் மழை நீர் முத்துக்களுடன் செம அழகு!!! புல்வெளிகளும் மலர்கள் இலைகள் எல்லாம் மழை நீர்த்துளிகளுடன் இருப்பது ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுவற்றின் அருகில் அதன் பின்னணியில் இருப்பது படங்கள் செம அழகு..//

      தூண் பக்கத்தில் இருக்கிறது அந்த செம்பருத்தி செடி.


      //சிவப்பும் அதுவும் மழை நீர் முத்துக்களுடன் செம அழகு!!! புல்வெளிகளும் மலர்கள் இலைகள் எல்லாம் மழை நீர்த்துளிகளுடன் இருப்பது ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கும்!//

      நீர்த்துளி, பனித்துளி எல்லாம் புல்வெளியில் மலரில் இருந்தால் பார்க்க அழகுதான் கீதா.

      நீக்கு
  20. குட்டைச் செடிகளில் செம்பருத்தி கிண்ணம் போல இருப்பது பார்க்க அழகு...இன்னும் விரியும் இல்லையா?

    எலுமிச்சை மொட்டுகள் பார்த்திருக்கிறேன். உங்க ஃபோட்டோல ரொம்பவே அழகா இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குட்டைச் செடிகளில் செம்பருத்தி கிண்ணம் போல இருப்பது பார்க்க அழகு...இன்னும் விரியும் இல்லையா?//
      ஆமாம் கீதா. விரிந்தால் இன்னும் பெரிதாக இருக்கும்.
      //எலுமிச்சை மொட்டுகள் பார்த்திருக்கிறேன். உங்க ஃபோட்டோல ரொம்பவே அழகா இருக்கு!!!//
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  21. அழகான மொட்டுகளையும் பூக்களையும் மிக அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள். அரளிச் செடியை அகற்ற வேண்டி வந்தது வருத்தமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அழகான மொட்டுகளையும் பூக்களையும் மிக அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள்.//

      நன்றி.

      //அரளிச் செடியை அகற்ற வேண்டி வந்தது வருத்தமே.//
      ஆமாம் வருத்தம் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  22. உரம் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, //சத்து மாத்திரை போல மரத்திற்கு சத்து மாத்திரை. கட்டியாக கல் மாதிரி இருக்கிறது உரம்.//

    ஆமாம் சத்து மாத்திரை போல இருக்கு

    எனக்கு பூக்கும் சமயம் இப்படி பிடுங்கபட்டு விட்டதே! //

    எனக்கும் தோன்றியது....என்னடா இது பிடுங்க வேண்டுமா? அது என்ன செய்யப் போகிறது மதிலை என்று. என்னவோ ...ம்ம் இரண்டு செடிகள் இப்படி போச்சே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரம் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது,//

      ஆமாம், வித்தியாசமான உரம்.

      //எனக்கும் தோன்றியது....என்னடா இது பிடுங்க வேண்டுமா? அது என்ன செய்யப் போகிறது மதிலை என்று. என்னவோ ...ம்ம் இரண்டு செடிகள் இப்படி போச்சே...//

      வேறு வழி இல்லை. செடிக்கு தண்ணீர் போகும் போது சுவர் அருகே போகிறது தண்ணீர். இவ்வளவு நாட்களாக அப்படி இல்லை. இப்போதுதான் அப்படி ஆகிறது. என்ன செய்வது!
      இருந்தவரை பூத்து குலுங்கி மகிழ்ச்சியை கொடுத்தது .




      நீக்கு
  23. செடியோ, மனிதர்களோ நாம் கவனிக்கப்படுகிறோம் என்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். //

    ஆமாம் அக்கா இது ரொம்ப உண்மை...

    நம் கவனிப்பை, அன்பை அனைத்து உயிர்களுக்கும் வழங்குவோம். அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்.//

    நிச்சயமாக. இப்போது வீட்டருகில் ஒரு நாய்க்குட்டி பெண் குட்டி ஒன்று (கண்ணழகி போலவே இருக்கு) என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என் காலில் கொஞ்சி படுத்து என்னைக் கொஞ்சு என்று சொல்கிறது!! மல்லாக்கப்படுத்து உருள்கிறது, வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கவும் முடியாது....அங்கேயே கொஞ்சிவிட்டு வருகிறேன். மனம் ரொம்பக் கஷ்டமாக இருக்கும்....என்ன செய்ய?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிச்சயமாக. இப்போது வீட்டருகில் ஒரு நாய்க்குட்டி பெண் குட்டி ஒன்று (கண்ணழகி போலவே இருக்கு) என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என் காலில் கொஞ்சி படுத்து என்னைக் கொஞ்சு என்று சொல்கிறது!! மல்லாக்கப்படுத்து உருள்கிறது, வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கவும் முடியாது....அங்கேயே கொஞ்சிவிட்டு வருகிறேன். மனம் ரொம்பக் கஷ்டமாக இருக்கும்....என்ன செய்ய?//

      நாய்குட்டி, பூனைகுட்டி எல்லாம் இப்படித்தான் மனிதர்களை விரும்பும் அன்பு செலுத்தும். நாம் வீட்டில் கொண்டு வந்து வைத்து கொள்ள முடியாது. என்ன செய்வது?

      கண்ணழகி நினைவுகள் வந்து உங்களை வருத்தும்.

      நீக்கு
  24. பாட்டு ரொம்ப நல்லாருக்கு கோமதிக்கா. இப்பதான் இந்தப் பாட்டு கேட்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாட்டு ரொம்ப நல்லாருக்கு கோமதிக்கா. இப்பதான் இந்தப் பாட்டு கேட்கிறேன்//
      பாட்டு வரிகளும், சித்ரா அவர்களின் குரலும் மிகவும் நன்றாக இருக்கும். கேட்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. மலர்களின் படங்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள்.
    ரோஜா மொட்டின் படிப்படியான மலரும் படங்கள் நன்றாக உள்ளது. விதவிதமான கலர்களில் மலர்களின் படங்களை பார்க்கையில் மனதுக்கு உற்சாகமாக உள்ளது. இங்கும் பிங்க் கலரில் ஏராளமான பூக்கள் மலர்ந்துள்ளது. அதன் பெயர் தெரியவில்லை. போன வாரம் வெளியே சென்ற போது பார்த்து மகிழ்ந்தேன்.

    அந்த உரத்தின் பயன்பாடு பற்றியும் தெரிந்து கொண்டேன். இந்தப் பதிவுக்கு வருவதில் கொஞ்சம் தாமதமாகி விட்டது.

    /செடியோ, மனிதர்களோ நாம் கவனிக்கப்படுகிறோம் என்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நம் கவனிப்பை, அன்பை அனைத்து உயிர்களுக்கும் வழங்குவோம். அன்பை கொடுத்து அன்பை பெறுவோம்./

    சரியாக சொனன்னீர்கள். எந்த உயிர்களுக்கும் நாம் அன்பை தந்தால் பதிலுக்கு இருமடங்கு அன்பு மீண்டும் கிடைக்கும். அத்தனை படங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமையாக உள்ளது. மலர்களின் படங்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள்.//

      நன்றி கமலா.

      //ரோஜா மொட்டின் படிப்படியான மலரும் படங்கள் நன்றாக உள்ளது. விதவிதமான கலர்களில் மலர்களின் படங்களை பார்க்கையில் மனதுக்கு உற்சாகமாக உள்ளது. இங்கும் பிங்க் கலரில் ஏராளமான பூக்கள் மலர்ந்துள்ளது. அதன் பெயர் தெரியவில்லை. போன வாரம் வெளியே சென்ற போது பார்த்து மகிழ்ந்தேன்.//

      உங்கள் ஊரில் வித விதமான மலர்கள் ரோஜா அதிகமாக இந்த சீஸனில் இருக்குமே! மலர்கள் மகிழ்ச்சியை தரும் .

      //அந்த உரத்தின் பயன்பாடு பற்றியும் தெரிந்து கொண்டேன். இந்தப் பதிவுக்கு வருவதில் கொஞ்சம் தாமதமாகி விட்டது.//

      நானும் உங்களுக்கு பதில் தர நேரம் ஆகி விட்டது.
      நேற்று மகள் ஊருக்கு வந்தேன்.

      //சரியாக சொனன்னீர்கள். எந்த உயிர்களுக்கும் நாம் அன்பை தந்தால் பதிலுக்கு இருமடங்கு அன்பு மீண்டும் கிடைக்கும். அத்தனை படங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      அன்பு கொடுத்தாலும் சில் நேரம் மனிதர்களிடம் திரும்பி கிடைக்க மாட்டேன் என்கிறது, ஆனால் தாவரங்களிடம் அன்பும் கவனிப்பும் கொடுத்தால் நம்மை ஏம்மாற்றாமல் அவை மகிழ்ந்து பல மடங்கு திருப்பி கொடுக்கும்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.









      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      நானும் இரு தினங்களாக வீட்டின் வேலைகள், மகன் குடும்பத்துடன் கூடியிருப்பது என பொழுது கழிந்து விட்டது. உங்களையும் கடந்த இரு தினங்களாக எந்தப் பதிவிலும் கருத்துரைகளில் காணவில்லையே என நினைத்தேன். வேறு எங்காவது வெளியில் சென்றிருப்பீர்கள் எனவும் நினைத்தேன். மகள் ஊருக்கு வந்திருக்கிறீர்களா ? மகிழ்ச்சி. மகள் வீட்டில் அனைவரையும் விசாரித்ததாக கூறுங்கள்

      /அன்பு கொடுத்தாலும் சில் நேரம் மனிதர்களிடம் திரும்பி கிடைக்க மாட்டேன் என்கிறது, ஆனால் தாவரங்களிடம் அன்பும் கவனிப்பும் கொடுத்தால் நம்மை ஏம்மாற்றாமல் அவை மகிழ்ந்து பல மடங்கு திருப்பி கொடுக்கும்.. /

      உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். என்ன செய்வது..? இதுவும் மனித சுபாவங்களில் ஒன்றுதானே.. .!

      நீங்கள் ஊருக்கு வந்ததும் சிரமம் பாராமல் என் கருத்துரைக்கு ,உடன் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. நன்றாக ஓய்வெடுத்து உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள் சகோதரி. நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //நானும் இரு தினங்களாக வீட்டின் வேலைகள், மகன் குடும்பத்துடன் கூடியிருப்பது என பொழுது கழிந்து விட்டது. உங்களையும் கடந்த இரு தினங்களாக எந்தப் பதிவிலும் கருத்துரைகளில் காணவில்லையே என நினைத்தேன். வேறு எங்காவது வெளியில் சென்றிருப்பீர்கள் எனவும் நினைத்தேன். மகள் ஊருக்கு வந்திருக்கிறீர்களா ? மகிழ்ச்சி. மகள் வீட்டில் அனைவரையும் விசாரித்ததாக கூறுங்கள்//

      நீங்கள் சகோ துரைசெல்வராஜூ பதிவிலும் என்ன தேடியதை அறிந்து நன்றி சொல்லி பதில் போட்டேன். அவர்கள் இன்னும் அதை போடவில்லை.

      //உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். என்ன செய்வது..? இதுவும் மனித சுபாவங்களில் ஒன்றுதானே.. .!//

      ஆமாம்,

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி க்மலா


      நீக்கு