காவிங்கடன் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் நிறுவபட்டது.
காவிங்கடன் டவுன்டவுன் சதுக்கம் ஜார்ஜியாவின் அழகிய நகரங்களில் ஒன்று என்று தேர்வு செய்யப்பட்ட இடம்.
அட்லாண்டாவுக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த இடத்திற்கு புதன் கிழமை மாலை அழைத்து போனாள் மகள். வீட்டிலிருந்து 30 மைல் இருக்கும்.
பார்க்க மிக அழகாய் இருந்தது.
நாங்கள் போன போது மணிக்கூண்டிலிருந்து 8 மணி ஒலித்தது. திடீர் என்று மணி ஒலிக்க ஆரம்பித்ததும் அலைபேசியை சட்டென்று எடுத்து காணொளி எடுத்தும் 5 மணி ஒலிக்கும் ஓசையை தான் எடுக்கமுடிந்தது.
ஜெட் விமானம் மணிக் கூண்டுக்கு மேலே போகிறது.
வால் நட்சத்திரம் போல தெரிகிறது. வால்நாட்சத்திரம் மேலே இருந்து கீழ் நோக்கி இருக்கும், இது மேல் நோக்கி இருக்கிறது.
இரவு எட்டு மணிக்கு மணிக்கூண்டில் விளக்கும் போட்டு விட்டார்கள் பார்க்க அழகாய் இருந்தது . எட்டு மணிக்கு மேல் தான் இருட்ட ஆரம்பிக்கிறது.
உள் நாட்டு போரில் தோல்வி அடைந்த குழுவை சேர்ந்தவர்களின் நினைவு சின்னம். சமநீதியை விரும்புவர்கள் இந்த போரின் நினைவுகளை மறக்க விரும்புகிறார்கள். இந்த இடத்தில் உள்ள நினைவு சின்னத்தை அகற்ற வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்களாம். போரில் பங்கு கொண்டவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் இதை அகற்ற வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்களாம்.
சிலை இருக்கும் பீடத்தை சுற்றி இருந்த அழகான மலர்கள்.
மஞ்சள் மலர் வண்ணத்துப்பூச்சி போல மிக அழகாய் இருக்கிறது.
2017 இல் சதர்ன்லிவிங்க் இதழில் ஜார்ஜியாவின் அழகான சிறிய நகரங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
2018 இல் அட்லாண்டா ஜர்னல்-கான்ஸ்டிடியூஷனின் வாசகர்களால் அட்லாண்டாவின் சிறந்த டவுன் சதுக்கமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஆலமரம் மாதிரி பார்க்க இருக்கிறது, வெள்ளை பூக்கள் பூத்து இருந்தது.
மரத்தடி பெஞ்சில் சிகரெட் புகைத்தபடி மூட்டை முடிச்சுகளுடன் வீடு இல்லாதவர் அமர்ந்து இருந்தார்."ஏதாவது உணவு கொண்டு வந்து இருந்தால் கொடு" என்று மகளிடம் கேட்டார் . பிரட்டும், ஜாமும் கொண்டு போய் இருந்தோம். அதை கொடுத்தாள் என் மகள். அந்த அம்மா இந்திய உணவை எதிர்ப்பார்த்து இருப்பார்களோ! என்னவோ தெரியவில்லை. நன்றி சொல்லி வாங்கி பைக்குள் வைத்து கொண்டார்.
வீட்டுக்கு வர நேரம் ஆகி விட்டால் எனக்கு பசிக்குமே ! என்று கொண்டு வந்தாள். அதனால் அந்த அம்மாவுக்கு கொடுக்க முடிந்தது.
போர் நினைவுச்சின்னம்
எந்த எந்த நாட்டுடன் போர் புரிந்தார்கள் என்ற விவரம் உள்ளது
தூணின் நாலுபக்கமும் இருந்த சின்னங்கள்
இப்படி ஜெட் விமானங்கள் மாலை நேரம் சதுக்கத்தை சுற்றி பறந்து கொண்டு இருந்தன.
மேலே, கீழே என்று குறுக்கு கோடுகள் போட்டு போய் கொண்டு இருக்கிறது.
பின்னால் தெரியும் கட்டடிடத்தில் இந்த கடை இருக்கிறது.
நினைவு பரிசு பொருட்கள், மற்றும் தொலைக்காட்சி தொடரில் வரும் "வெளவால் மனிதன்" உடைகள் , "இரத்தம் குடிக்கும் டிராகுலா" முக மூடிகள் விற்பனை செய்யும் கடை. பழமையான பொருட்களும் கிடைக்கும்.
அந்தக்காலத்து விளக்கு போல பார்க்க அழகு. ஜெட் விமானம் போகிறது.
கொடிமரம்
கொடிமரத்திற்கு கீழ் உள்ள பலகை.
நகை கடை, பீட்சா கடை இருக்கிறது ஒளி வெள்ளத்தில் இருப்பதுதான் பீட்சா கடை
குடும்பத்துடன் மாலை நேரம் பொழுதைபோக்கும் இடமாக இருக்கிறது.
மாடியில் மாலை முதல் இரவு வரை இயங்கும் உணவு விடுதி
வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டு சாப்பிட வசதி
பழைய வரலாற்று கட்டிங்கள் இந்த சதுக்கதை சுற்றி உள்ளது. பூங்காவை சுற்றி பசுமையான மரங்கள் பூச்செடிகள் மேலும் அழகு சேர்க்கிறது. இங்கு இசை நிகழ்ச்சிகள் நடக்குமாம். மற்றும் தொலைக்காட்சி தொடர்கள், சினிமா படப்பிடிப்புகள் நடக்குமாம். படப்பிடிப்பை பார்ப்பதற்கும் மக்கள் இங்கு வருவார்களாம்.
"தி ஹாலிவுட் ஆஃப்தி சவுத்" என்று 100க்கு மேற்பட்ட திரைப்படங்கள் இந்த யவுன் டவுன் காவிங்கடனில் எடுக்கப்பட்டு இருக்கிறதாம். "தி வாம்பயர் டைரிஸ் , "ஈன் தி ஹீட் ஆஃப்தி நைட் " "ட்யூக்ஸ் ஆஃப் ஹஸார்ட் " மற்றும் பல தொலைக்காட்சி நிகழச்சிகள் இங்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.
//"தி வாம்பயர் டைரிஸ்
இந்தத் தொடர் மனிதர்களுக்கும், வாம்பயர் எனப்படும் ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கும் (ரத்த காட்டேரி) மற்றும் வோல்ப் எனப்படும் ஓநாய் மனிதர்களுக்கும் நடக்கும் காதல், வெறுப்பு, துயரம், பயம், போன்றவற்றை மையமாகக வைத்து எடுக்கப்பட்டுளது.//
நன்றி - விக்கிப்பீடீயா
1897 ஆம் ஆண்டு ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய "டிரகுலா" தான் மிகவும் திகில் ஊட்டிய கதை. கற்பனை கலந்து எழுதிய அந்த கதையை அடிப்படையாக கொண்டு அன்றும் , இன்றும் டிரகுலா சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன.
தென் அமெரிக்காவில் மட்டும் விலங்குகளின் இரத்தம் குடிக்கும் வெளவால்கள் உண்டு அதை வைத்து கதை செய்து இருக்கிறார்கள்.
இரத்தவெறி பிடித்த ட்ரகுலா யாரை கொன்று இரத்தம் குடிக்கிறதோ , அவர்களும் இரத்த வெறி பிடித்தவர்களாக மாறி விடுவார்கள். இந்த கதையை இன்றும் எடுக்கிறார்கள், மக்கள் ரசிக்கிறார்கள்.
மக்கள் படப்பிடிப்பு நாட்களில் இங்கு அதிகமாக வருவார்களாம், படப்பிடிப்பை ரசிக்க.
//புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிரபு பொன்முடி, விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அதீத பற்று கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாக கடந்த 21 ஆண்டுகளாக இவரது வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.//
இப்படி வெளவால்கள் பற்றி கெட்டதாக வெளி நாட்டில் படம் எடுக்கும் போது அவற்றால் எவ்வளவு நன்மைகள் என்று புதுச்சேரியில் வெளவால்களுடன் வாழும் ஒருவர் சொல்வதை கேளுங்கள். மனிதர்கள் வெளவால்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார். மனிதர்களுக்கு உலகில் வாழ உரிமை இருப்பது போல வெளவால்களுக்கும் வாழ உரிமை இருக்கிறது என்கிறார்.
வெளவால்கள் மீது ஏன் இந்த வீண்பழி? மு. மதிவாணன் அவர்கள் எழுதிய இந்த கட்டுரையும் படித்துப்பாருங்கள் நேரம் கிடைக்கும் போது. வெளவால்கள் பற்றி நல்ல செய்திகள் சொல்கிறார்.
நம் நாட்டிலும் பெண் வாம்பய்ரகளை வேதாளம் என்றும், ஆண் வாம்பய்ரகளை "இரத்தக் காட்டேரி" என்று அழைப்பார்களாம். மோகினி என்றும் பிசாசு என்று சொல்லி படம் எடுத்து இருக்கிறார்கள்.
அடுத்த நாள் வேறு இடத்திற்கு அழைத்து சென்றாள் . அது அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன் //அழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.//
நன்றி.
//விபரங்கள் அருமை அங்கு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கிறது.// ஆமாம், மக்களின் கருத்துக்கு மதிப்புளித்து நிறைய இந்த மாதிரி இடங்களை அழித்து விட்டார்கள். சில பிழைத்து இருக்கிறது.
//சுட்டிகளுக்கு பிறகு செல்வேன்//
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அழகு.... உணவிடும் சந்தர்ப்பம் வந்தது மிக மகிழ்ச்சி//
அங்கு சிலர் இது மாதிரி உணவு கேட்பவர்களுக்கு உணவும் கொடுத்து அன்று இரவு தங்குவதற்கு மோட்டல்களில் அறையும் எடுத்து கொடுப்பார்களாம். இவர்களே காசு நிறைய சேர்ந்து விட்டால் மோட்டல்களில் தங்குவார்களாம். அரசாங்கம் குளிர் காலத்தில் தங்குவதற்கு இடம் வசதி செய்து கொடுப்பார்களாம்.
//குளிர் இல்லை போலிருக்கு. சிலுசிலு காற்று இருந்ததா?//
அவர்கள் குளிர் குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு குளிராக இருந்தது. ஸ்வெட்டர் அணிந்து சென்றேன்.
//நினைவுச் சின்னங்கள் வரலாற்றைச் சொல்பவை// ஆமாம், நினைவு சின்னங்கள் வரலாற்றைச் சொல்பவைதான். இந்த நினைவுகளை மறக்க விரும்புகிறார்கள் அதனால் வேண்டாம் என சிலர் நினைக்கிறார்கள்.
பதிவு ஒரே ஒரு ஊரில் ஒரு சதுக்கத்தைப் பற்றியதாகிலும் விவரங்கள் நிறைய கொடுத்திருக்கிறீர்கள்.
confederate federate independance war அமெரிக்க சரித்திரத்தில் நீக்க முடியாத ஒன்று. அதற்கும் தற்போதைய ருசியா உக்ரைன் யுத்தத்திற்கும் ஒரு ஒற்றுமையைக் காண்கிறேன். படங்கள் நன்றாக உள்ளன. Jayakumar
//பதிவு ஒரே ஒரு ஊரில் ஒரு சதுக்கத்தைப் பற்றியதாகிலும் விவரங்கள் நிறைய கொடுத்திருக்கிறீர்கள். //
அந்த சதுக்கத்திற்கு நிறைய செய்திகள் இருக்கிறது. நான் கொடுத்தது கொஞ்சம்.
//confederate federate independance war அமெரிக்க சரித்திரத்தில் நீக்க முடியாத ஒன்று. அதற்கும் தற்போதைய ருசியா உக்ரைன் யுத்தத்திற்கும் ஒரு ஒற்றுமையைக் காண்கிறேன். படங்கள் நன்றாக உள்ளன.//
போர் பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கு நன்றி சார்.
பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக இருக்கிறது. அங்குள்ள பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்.
காணொளியில் மணிக்கூண்டிலிருந்து மணி ஒலிக்கும் சத்தம் கேட்டேன். நீங்கள் கூறுவது போல ஐந்து முறைதான் கேட்டது. மணிக்கூணடின் படங்களும், நினைவுச் சின்ன தூண்களின் படங்களும் நன்றாக உள்ளன. அந்த இடங்கள் மிக சுத்தமாக உள்ளன. தூணை சுற்றியுள்ள அழகிய மலர்களின் படங்களையும் ரசித்தேன்.
ஜெட் போகும் படங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளன. நிறைய விபரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. தங்களுக்கென கொண்டு சென்ற உணவையும் பசியென கேட்ட அவருக்கு தந்து விட்டீர்கள். உங்கள் இருவரின் அன்பு உள்ளத்தை பாராட்டுகிறேன்.
திரைப்படங்கள் எடுக்கும் இடமென்றால் அதைப்பார்க்கவும் மக்கள் கூட்டமாக வருவார்கள். விடுமுறை மற்றும் மாலை நேரம் பொழுதை போக்கவும், மக்கள் கூடுமிடமென்பதால், அந்த சதுக்கம் அமைந்துள்ள இடத்திற்கு எவ்வளவு சிறப்பு என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் பதிவின் மூலம் நானும் அதை கண்டு களித்தேன் .
வெளவ்வால்கள் பற்றி சுவாரஸயமான கூறி உள்ளீர்கள். நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளில் பிறகு சென்று படிக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
//பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக இருக்கிறது. அங்குள்ள பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்.//
நன்றி.
//காணொளியில் மணிக்கூண்டிலிருந்து மணி ஒலிக்கும் சத்தம் கேட்டேன். நீங்கள் கூறுவது போல ஐந்து முறைதான் கேட்டது. மணிக்கூணடின் படங்களும், நினைவுச் சின்ன தூண்களின் படங்களும் நன்றாக உள்ளன. அந்த இடங்கள் மிக சுத்தமாக உள்ளன. தூணை சுற்றியுள்ள அழகிய மலர்களின் படங்களையும் ரசித்தேன்.//
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//திரைப்படங்கள் எடுக்கும் இடமென்றால் அதைப்பார்க்கவும் மக்கள் கூட்டமாக வருவார்கள். விடுமுறை மற்றும் மாலை நேரம் பொழுதை போக்கவும், மக்கள் கூடுமிடமென்பதால், அந்த சதுக்கம் அமைந்துள்ள இடத்திற்கு எவ்வளவு சிறப்பு என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் பதிவின் மூலம் நானும் அதை கண்டு களித்தேன் .//
நாங்கள் புதன் கிழமை போனதால் கூட்டம் இல்லை.
//வெளவ்வால்கள் பற்றி சுவாரஸயமான கூறி உள்ளீர்கள். நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளில் பிறகு சென்று படிக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.// நேரம் கிடைக்கும் போது படித்தால் போதும். நல்ல செய்திகள் இருக்கிறது. வெளவ்வால் மனிதன் மக்களுக்கு நல்லது செய்வது போலவும் படம் நாடகம் இருக்கிறது போல குழந்தைகளை கேட்டால் சொல்வார்கள். இது மாதிரி கற்பனை கதைகளை வர்கள் தானே ரசிக்கிறார்கள்.
போர் நினைவுச்சின்னங்கள் எல்லாமே கலைநயத்துடன் வைச்சிருக்காங்க! விவரங்களுடன்,,கடைகள் எல்லாமே நல்லாருக்கு
விளக்கு சூப்பர்! நிறைய ஜெட் விமான வரிகள் தடங்கள்.
அங்கு பீட்சா கடைகள் இல்லைனாதான் ஆச்சரியம்...இங்கும் அப்படித்தானே அக்கா! இல்லைனாதான் ஆச்சரியம்.
இரவு வெளிச்சப்படங்கள் எல்லாம் செம...
டிராகுலா கதை இன்னும் ஈர்ப்பது ஆச்சரியம்தான் ஆனா அந்த மக்கள் இப்படியான கதைகளை ரசிப்பாங்க...மட்டுமில்ல அவங்க சிலவற்றை இப்படித்தான் காட்டுவார்கள்.
புதுச்சேரி விஷயம் வியப்பாக இருக்கிறது. கண்டிப்பாக அக்கா இந்த உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லாருக்காகவும் படைக்கப்பட்துதான் இந்த உலகம்..ஆனா மனுஷன் தான் அழிப்பதே. வௌவால் கட்டுரை வாசிக்கிறேன் கோமதிக்கா...
ஆமாம். நம் ஊரிலும் இப்போது பீட்சா சாப்பிடுவது அதிகமாகி விட்டதே!
//டிராகுலா கதை இன்னும் ஈர்ப்பது ஆச்சரியம்தான் ஆனா அந்த மக்கள் இப்படியான கதைகளை ரசிப்பாங்க...மட்டுமில்ல அவங்க சிலவற்றை இப்படித்தான் காட்டுவார்கள்.//
ஆமாம். எறும்பு, சிலந்தி, வண்டு, என்று எல்லாம் பூதகரமாக வந்து பயமுறுத்தும்.
//புதுச்சேரி விஷயம் வியப்பாக இருக்கிறது. கண்டிப்பாக அக்கா இந்த உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லாருக்காகவும் படைக்கப்பட்துதான் இந்த உலகம்..ஆனா மனுஷன் தான் அழிப்பதே. வௌவால் கட்டுரை வாசிக்கிறேன் கோமதிக்கா...//
ஆமாம். வெளவ்வால்களால் எவ்வளவு நன்மை என்று அவர்கள் கட்டுரைகளை படித்தால் தெரியும். அதை நாம் வெறு ஒதுக்கிறோம்.
இனவேற்றுமையை தூண்டி விட்டு அதற்கு ஆதரவு தெரிவித்தவர் அதனால் அவர் ஆதரவாளர்கள் கட்டி இருப்பார்கள் நினைவுச் சின்னம். இன்னும் சில இடங்களில் இந்த இனவேற்றுமை சண்டைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது. நினைவுச்சின்னத்தை அழிக்க சொல்லியும் அழிக்ககூடாது என்று வாக்குகெடுப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது.
மஞ்சள் மலர்கள் அழகு. வெண்பூக்களுடன் மரம்... வயதான மரம் போலும்... நரைத்திருக்கிறதே...! சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களை நினைவூட்டுகிறது
//மஞ்சள் மலர்கள் அழகு. வெண்பூக்களுடன் மரம்... வயதான மரம் போலும்... நரைத்திருக்கிறதே...! சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களை நினைவூட்டுகிறது //
அந்த மரம் நல்ல பச்சையாக இருந்தது வெள்ளை மலர்களுடன் பார்க்க அழகாய்.நான் அலைபேசியில் வெகு தூரத்திலிருந்து எடுத்தேன் யாசகம் கேட்ட அம்மா அதன் அருகில் இருந்ததால். அதுதான் சரியாக மரம் விழவில்லை. உங்கள் கற்பனை நன்றாக இருக்கிறது.
//அடடே.. அங்கும் யாசகர்கள்... ஒரு சந்தோஷம்தான்! //
இப்படி ஒரு சந்தோஷமா!
ஏழ்மை இல்லாத ஊர், நாடு இருக்கா?
முன்பு இங்கு வந்து இருந்த போது போட்ட ஒரு போஸ்டில் இது மாதிரி வீடு இல்லாதவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு பூங்கா முழுவதும் இருப்பதை பற்றி சொல்லி இருந்தேன்.
அவர்கள் குற்றம் புரிந்து ஜெயிலுக்கு சென்றவர்கள் உண்டு. அவர்களுக்கு வேலை யாரும் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் நாள் முழுவதும் இப்படி அழைந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வண்டியில் உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள், வரிசையில் நின்று வாங்கி உண்டு விட்டு இரவு அவர்களுக்கு தங்க முகாம் உண்டு அங்கு போய் படுப்பார்கள்.
மகன் ஊரிலும் நிறைய இருக்கிறார்கள். பாதை ஓரத்தில் அட்டையில் வீடு இல்லாதோர் என்று எழுதிய அட்டையை தாங்கி பிடித்து நிற்பார்கள்.
//பீட்சா கடை முன்னே ஒட்டடை (அடிக்கும்) குச்சி போல ஒரு மரம். கோன் ஐஸை கவிழ்த்துப் பிடித்தாற்போல..!//
அங்கேயும் யாசகம் கேட்கிறவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். எங்கே போனாலும் இம்மாதிரி ஓர் இருட்டு இடம் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கெனக் கொண்டு வந்ததை அவருக்குக் கொடுத்துட்டீங்க. நீங்க அப்புறம் எங்கே சாப்பிட்டீங்க? எல்லா இடங்களுமே பார்க்கவும், ரசிக்கவும் அழகாகவும் ரம்மியமாகவும் உள்ளன. வௌவால் பற்றிய செய்திகள் புதியது. புதுச்சேரியில் வௌவால் வளர்ப்பவர் பற்றியும் இப்போத் தான் தெரியும்.
வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன் அங்கேயும் யாசகம் கேட்கிறவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். எங்கே போனாலும் இம்மாதிரி ஓர் இருட்டு இடம் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கெனக் கொண்டு வந்ததை அவருக்குக் கொடுத்துட்டீங்க. நீங்க அப்புறம் எங்கே சாப்பிட்டீங்க? //
யாசகம் கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் அட்லாண்டாவில். நான் மதியம் சரியாக சாப்பிடவில்லை அதனால் இரவு வீட்டுக்கு வந்து சாப்பிடும் வரை பசி தாங்க வேண்டும் என்று கொண்டு வந்த உணவு அது. வீட்டுக்கு போய் இட்லியும், சட்னியும் சாப்பிட்டேன்.
//எல்லா இடங்களுமே பார்க்கவும், ரசிக்கவும் அழகாகவும் ரம்மியமாகவும் உள்ளன. வௌவால் பற்றிய செய்திகள் புதியது. புதுச்சேரியில் வௌவால் வளர்ப்பவர் பற்றியும் இப்போத் தான் தெரியும்.// நானும் வெளவால் வளர்ப்பவரை பற்றி அன்றுதான் தெரிந்து கொண்டேன்.
அட்லாண்டாவில் நிறைய இடங்கள் பார்க்க, ரசிக்க, அழகாக ரம்மியமாக இருக்கிறது. ஊரே ஏரிகள், மரங்கள் என்று பார்க்க அழகாய் இருக்கிறது.
அழகான படங்கள்..
பதிலளிநீக்குசிறப்பான பதிவு..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
ஜார்ஜியாவின் அழகான சிறிய நகரங்களில் ஒன்றான
பதிலளிநீக்குகாவிங்டன் டவுன்டவுன்
சதுக்கத்தின் அழகினைப் பதிவில் வைத்தது சிறப்பு..
//ஜார்ஜியாவின் அழகான சிறிய நகரங்களில் ஒன்றான
நீக்குகாவிங்டன் டவுன்டவுன்
சதுக்கத்தின் அழகினைப் பதிவில் வைத்தது சிறப்பு//
அழகான நகரம். மிகவும் சுத்தமாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
பதிலளிநீக்குவிபரங்கள் அருமை அங்கு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கிறது.
சுட்டிகளுக்கு பிறகு செல்வேன்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.//
நன்றி.
//விபரங்கள் அருமை அங்கு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கிறது.//
ஆமாம், மக்களின் கருத்துக்கு மதிப்புளித்து நிறைய இந்த மாதிரி இடங்களை அழித்து விட்டார்கள். சில பிழைத்து இருக்கிறது.
//சுட்டிகளுக்கு பிறகு செல்வேன்//
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நகரமும் சதுக்கமும் பளிச் என்று இருக்கின்றன
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//நகரமும் சதுக்கமும் பளிச் என்று இருக்கின்றன//
ஆமாம், நன்றாக இருந்தது.
படங்கள் அழகு.... உணவிடும் சந்தர்ப்பம் வந்தது மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குகுளிர் இல்லை போலிருக்கு. சிலுசிலு காற்று இருந்ததா?
நினைவுச் சின்னங்கள் வரலாற்றைச் சொல்பவை
படங்கள் அழகு.... உணவிடும் சந்தர்ப்பம் வந்தது மிக மகிழ்ச்சி//
நீக்குஅங்கு சிலர் இது மாதிரி உணவு கேட்பவர்களுக்கு உணவும் கொடுத்து அன்று இரவு தங்குவதற்கு மோட்டல்களில் அறையும் எடுத்து கொடுப்பார்களாம். இவர்களே காசு நிறைய சேர்ந்து விட்டால் மோட்டல்களில் தங்குவார்களாம். அரசாங்கம் குளிர் காலத்தில் தங்குவதற்கு இடம் வசதி செய்து கொடுப்பார்களாம்.
//குளிர் இல்லை போலிருக்கு. சிலுசிலு காற்று இருந்ததா?//
அவர்கள் குளிர் குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு குளிராக இருந்தது. ஸ்வெட்டர் அணிந்து சென்றேன்.
//நினைவுச் சின்னங்கள் வரலாற்றைச் சொல்பவை//
ஆமாம், நினைவு சின்னங்கள் வரலாற்றைச் சொல்பவைதான்.
இந்த நினைவுகளை மறக்க விரும்புகிறார்கள் அதனால் வேண்டாம் என சிலர் நினைக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகிய இடம்... அருமையான படங்கள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய இடம்... அருமையான படங்கள்...//
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.
பதிவு ஒரே ஒரு ஊரில் ஒரு சதுக்கத்தைப் பற்றியதாகிலும் விவரங்கள் நிறைய கொடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குconfederate federate independance war அமெரிக்க சரித்திரத்தில் நீக்க முடியாத ஒன்று. அதற்கும் தற்போதைய ருசியா உக்ரைன் யுத்தத்திற்கும் ஒரு ஒற்றுமையைக் காண்கிறேன்.
படங்கள் நன்றாக உள்ளன.
Jayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு ஒரே ஒரு ஊரில் ஒரு சதுக்கத்தைப் பற்றியதாகிலும் விவரங்கள் நிறைய கொடுத்திருக்கிறீர்கள். //
அந்த சதுக்கத்திற்கு நிறைய செய்திகள் இருக்கிறது. நான் கொடுத்தது கொஞ்சம்.
//confederate federate independance war அமெரிக்க சரித்திரத்தில் நீக்க முடியாத ஒன்று. அதற்கும் தற்போதைய ருசியா உக்ரைன் யுத்தத்திற்கும் ஒரு ஒற்றுமையைக் காண்கிறேன்.
படங்கள் நன்றாக உள்ளன.//
போர் பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி சார்.
அழகான காட்சிகள் மா ..ரசித்தேன்
பதிலளிநீக்குவணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான காட்சிகள் மா ..ரசித்தேன்//
பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக இருக்கிறது. அங்குள்ள பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்.
காணொளியில் மணிக்கூண்டிலிருந்து மணி ஒலிக்கும் சத்தம் கேட்டேன். நீங்கள் கூறுவது போல ஐந்து முறைதான் கேட்டது. மணிக்கூணடின் படங்களும், நினைவுச் சின்ன தூண்களின் படங்களும் நன்றாக உள்ளன. அந்த இடங்கள் மிக சுத்தமாக உள்ளன. தூணை சுற்றியுள்ள அழகிய மலர்களின் படங்களையும் ரசித்தேன்.
ஜெட் போகும் படங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளன. நிறைய விபரங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. தங்களுக்கென கொண்டு சென்ற உணவையும் பசியென கேட்ட அவருக்கு தந்து விட்டீர்கள். உங்கள் இருவரின் அன்பு உள்ளத்தை பாராட்டுகிறேன்.
திரைப்படங்கள் எடுக்கும் இடமென்றால் அதைப்பார்க்கவும் மக்கள் கூட்டமாக வருவார்கள். விடுமுறை மற்றும் மாலை நேரம் பொழுதை போக்கவும், மக்கள் கூடுமிடமென்பதால், அந்த சதுக்கம் அமைந்துள்ள இடத்திற்கு எவ்வளவு சிறப்பு என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் பதிவின் மூலம் நானும் அதை கண்டு களித்தேன் .
வெளவ்வால்கள் பற்றி சுவாரஸயமான கூறி உள்ளீர்கள். நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளில் பிறகு சென்று படிக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக இருக்கிறது. அங்குள்ள பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்.//
நன்றி.
//காணொளியில் மணிக்கூண்டிலிருந்து மணி ஒலிக்கும் சத்தம் கேட்டேன். நீங்கள் கூறுவது போல ஐந்து முறைதான் கேட்டது. மணிக்கூணடின் படங்களும், நினைவுச் சின்ன தூண்களின் படங்களும் நன்றாக உள்ளன. அந்த இடங்கள் மிக சுத்தமாக உள்ளன. தூணை சுற்றியுள்ள அழகிய மலர்களின் படங்களையும் ரசித்தேன்.//
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//திரைப்படங்கள் எடுக்கும் இடமென்றால் அதைப்பார்க்கவும் மக்கள் கூட்டமாக வருவார்கள். விடுமுறை மற்றும் மாலை நேரம் பொழுதை போக்கவும், மக்கள் கூடுமிடமென்பதால், அந்த சதுக்கம் அமைந்துள்ள இடத்திற்கு எவ்வளவு சிறப்பு என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் பதிவின் மூலம் நானும் அதை கண்டு களித்தேன் .//
நாங்கள் புதன் கிழமை போனதால் கூட்டம் இல்லை.
//வெளவ்வால்கள் பற்றி சுவாரஸயமான கூறி உள்ளீர்கள். நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளில் பிறகு சென்று படிக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.//
நேரம் கிடைக்கும் போது படித்தால் போதும். நல்ல செய்திகள் இருக்கிறது.
வெளவ்வால் மனிதன் மக்களுக்கு நல்லது செய்வது போலவும் படம் நாடகம் இருக்கிறது போல குழந்தைகளை கேட்டால் சொல்வார்கள்.
இது மாதிரி கற்பனை கதைகளை வர்கள் தானே ரசிக்கிறார்கள்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
கோமதிக்கா...சூப்பர் படம் முதல் படமே....
பதிலளிநீக்குமணிக்கூண்டு மணியின் நாதம் நல்லாருக்கு. டக்கென்று எடுத்துட்டீங்களே...சூப்பரா வந்திருக்கு 3 ஒலி தானே குறைகிறது செம வேகம் நீங்க...
எனக்கு இப்படி டக்கென்று எடுப்பது வரவில்லை அக்கா...
ஆமாம் வால் நட்சத்திரம் போல இருக்கு
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா...சூப்பர் படம் முதல் படமே....//
நன்றி.
//மணிக்கூண்டு மணியின் நாதம் நல்லாருக்கு. டக்கென்று எடுத்துட்டீங்களே...சூப்பரா வந்திருக்கு 3 ஒலி தானே குறைகிறது செம வேகம் நீங்க...//
ஆமாம், மணியின் ஒலி நான்றாக இருந்தது
எனக்கு இப்படி டக்கென்று எடுப்பது வரவில்லை அக்கா...//
உங்களுக்கும் எல்லாம் வரும் ஏன் வராது?
//ஆமாம் வால் நட்சத்திரம் போல இருக்கு//
வால் நட்சத்திரத்தை ரசித்தமைக்கு நன்றி.
தமிழ் நாட்டில் பழைமையான நினைவுச் சின்னங்கள் இப்படியெல்லாம் பராமரிக்கப்படுவது இல்லை..
பதிலளிநீக்குபற்பல அரண்மனைகளின் மிச்சங்கள் நாளுக்கு நாள் சிதைந்து விழுந்து கொண்டிருக்கின்றன..
//தமிழ் நாட்டில் பழைமையான நினைவுச் சின்னங்கள் இப்படியெல்லாம் பராமரிக்கப்படுவது இல்லை..
நீக்குபற்பல அரண்மனைகளின் மிச்சங்கள் நாளுக்கு நாள் சிதைந்து விழுந்து கொண்டிருக்கின்றன..//
பராமரித்து மக்கள் பார்வைக்கு அனுமதித்தால் நன்றாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அங்கும் சிலை வைப்பதில் கருத்து வேறுபாடுகள்...இருபக்கமும் சரியானவைதான்.
பதிலளிநீக்குபூக்கள் படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்ற்ன..
பாவம் வீடு இல்லாதவர். மகள் கொடுத்தது அவர் வாங்கிக் கொண்டாரே...நல்ல விஷயம். நம் உணவு என்றால் அவர் வாங்குவதில் தயக்கம் காட்டியிருப்பாரோ?
கீதா
//அங்கும் சிலை வைப்பதில் கருத்து வேறுபாடுகள்...இருபக்கமும் சரியானவைதான்.//
நீக்குஆமாம், அதுதான் இன்னும் அப்புறபடுத்தாமல் இருக்கிறார்கள்.
//பாவம் வீடு இல்லாதவர். மகள் கொடுத்தது அவர் வாங்கிக் கொண்டாரே...நல்ல விஷயம். நம் உணவு என்றால் அவர் வாங்குவதில் தயக்கம் காட்டியிருப்பாரோ?//
தெரியவில்லை, அவர்பசியை போக்க ஒரு உணவு நம்மிடம் கொடுப்பதற்கு இருந்தது என்ற மன நிம்மதி நமக்கு அவ்வளவுதான்.
பூக்கள் படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்ற்ன..
போர் நினைவுச்சின்னங்கள் எல்லாமே கலைநயத்துடன் வைச்சிருக்காங்க! விவரங்களுடன்,,கடைகள் எல்லாமே நல்லாருக்கு
பதிலளிநீக்குவிளக்கு சூப்பர்! நிறைய ஜெட் விமான வரிகள் தடங்கள்.
அங்கு பீட்சா கடைகள் இல்லைனாதான் ஆச்சரியம்...இங்கும் அப்படித்தானே அக்கா! இல்லைனாதான் ஆச்சரியம்.
இரவு வெளிச்சப்படங்கள் எல்லாம் செம...
டிராகுலா கதை இன்னும் ஈர்ப்பது ஆச்சரியம்தான் ஆனா அந்த மக்கள் இப்படியான கதைகளை ரசிப்பாங்க...மட்டுமில்ல அவங்க சிலவற்றை இப்படித்தான் காட்டுவார்கள்.
புதுச்சேரி விஷயம் வியப்பாக இருக்கிறது. கண்டிப்பாக அக்கா இந்த உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லாருக்காகவும் படைக்கப்பட்துதான் இந்த உலகம்..ஆனா மனுஷன் தான் அழிப்பதே. வௌவால் கட்டுரை வாசிக்கிறேன் கோமதிக்கா...
படங்களூம் தகவல்களும் ரொம்பச் சிறப்பு....
கீதா
//போர் நினைவுச்சின்னங்கள் எல்லாமே கலைநயத்துடன் வைச்சிருக்காங்க! விவரங்களுடன்,,கடைகள் எல்லாமே நல்லாருக்கு//
பதிலளிநீக்குஆமாம். முன்பு போன போர் நினைவு சின்னம் பூங்கா இன்னும் பதிவு செய்யவில்லை . போட வேண்டும் பதிவு.
//விளக்கு சூப்பர்! நிறைய ஜெட் விமான வரிகள் தடங்கள்.//
ஜெட் விமானம் போய் கொண்டே இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
//அங்கு பீட்சா கடைகள் இல்லைனாதான் ஆச்சரியம்...இங்கும் அப்படித்தானே அக்கா! இல்லைனாதான் ஆச்சரியம்.//
ஆமாம். நம் ஊரிலும் இப்போது பீட்சா சாப்பிடுவது அதிகமாகி விட்டதே!
//டிராகுலா கதை இன்னும் ஈர்ப்பது ஆச்சரியம்தான் ஆனா அந்த மக்கள் இப்படியான கதைகளை ரசிப்பாங்க...மட்டுமில்ல அவங்க சிலவற்றை இப்படித்தான் காட்டுவார்கள்.//
ஆமாம். எறும்பு, சிலந்தி, வண்டு, என்று எல்லாம் பூதகரமாக வந்து பயமுறுத்தும்.
//புதுச்சேரி விஷயம் வியப்பாக இருக்கிறது. கண்டிப்பாக அக்கா இந்த உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லாருக்காகவும் படைக்கப்பட்துதான் இந்த உலகம்..ஆனா மனுஷன் தான் அழிப்பதே. வௌவால் கட்டுரை வாசிக்கிறேன் கோமதிக்கா...//
ஆமாம். வெளவ்வால்களால் எவ்வளவு நன்மை என்று அவர்கள் கட்டுரைகளை படித்தால் தெரியும். அதை நாம் வெறு ஒதுக்கிறோம்.
//படங்களூம் தகவல்களும் ரொம்பச் சிறப்பு...//
எட்டு மணிக்கு மேல்தான் இருட்ட ஆரம்பிக்கிறதா? போர் அடிக்காது?!!!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//எட்டு மணிக்கு மேல்தான் இருட்ட ஆரம்பிக்கிறதா? போர் அடிக்காது?!!!
நமக்கு போர் அடிக்கும் அவர்களுக்கு பழகி விட்டது.
மணிக்கூண்டு படம் சிறு வெளிச்சத்துடன் கருப்பு டயல் கைக்கடிகாரம் போல அழகு. காணொளி பார்த்தேன். தோல்வி அடைந்த போருக்கும் நினைவுச்சின்னமா? ஆச்சர்யம்.
பதிலளிநீக்குஇனவேற்றுமையை தூண்டி விட்டு அதற்கு ஆதரவு தெரிவித்தவர் அதனால் அவர் ஆதரவாளர்கள் கட்டி இருப்பார்கள் நினைவுச் சின்னம்.
நீக்குஇன்னும் சில இடங்களில் இந்த இனவேற்றுமை சண்டைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
நினைவுச்சின்னத்தை அழிக்க சொல்லியும் அழிக்ககூடாது என்று வாக்குகெடுப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது.
மஞ்சள் மலர்கள் அழகு. வெண்பூக்களுடன் மரம்... வயதான மரம் போலும்... நரைத்திருக்கிறதே...! சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களை நினைவூட்டுகிறது
பதிலளிநீக்கு//மஞ்சள் மலர்கள் அழகு. வெண்பூக்களுடன் மரம்... வயதான மரம் போலும்... நரைத்திருக்கிறதே...! சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களை நினைவூட்டுகிறது //
நீக்குஅந்த மரம் நல்ல பச்சையாக இருந்தது வெள்ளை மலர்களுடன் பார்க்க அழகாய்.நான் அலைபேசியில் வெகு தூரத்திலிருந்து எடுத்தேன் யாசகம் கேட்ட அம்மா அதன் அருகில் இருந்ததால்.
அதுதான் சரியாக மரம் விழவில்லை.
உங்கள் கற்பனை நன்றாக இருக்கிறது.
அடடே.. அங்கும் யாசகர்கள்... ஒரு சந்தோஷம்தான்! பீட்சா கடை முன்னே ஒட்டடை (அடிக்கும்) குச்சி போல ஒரு மரம். கோன் ஐஸை கவிழ்த்துப் பிடித்தாற்போல..!
பதிலளிநீக்கு//அடடே.. அங்கும் யாசகர்கள்... ஒரு சந்தோஷம்தான்! //
நீக்குஇப்படி ஒரு சந்தோஷமா!
ஏழ்மை இல்லாத ஊர், நாடு இருக்கா?
முன்பு இங்கு வந்து இருந்த போது போட்ட ஒரு போஸ்டில் இது மாதிரி வீடு இல்லாதவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு பூங்கா முழுவதும் இருப்பதை பற்றி சொல்லி இருந்தேன்.
அவர்கள் குற்றம் புரிந்து ஜெயிலுக்கு சென்றவர்கள் உண்டு. அவர்களுக்கு வேலை யாரும் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் நாள் முழுவதும் இப்படி அழைந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வண்டியில் உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள், வரிசையில் நின்று வாங்கி உண்டு விட்டு இரவு அவர்களுக்கு தங்க முகாம் உண்டு அங்கு போய் படுப்பார்கள்.
மகன் ஊரிலும் நிறைய இருக்கிறார்கள்.
பாதை ஓரத்தில் அட்டையில் வீடு இல்லாதோர் என்று எழுதிய அட்டையை தாங்கி பிடித்து நிற்பார்கள்.
//பீட்சா கடை முன்னே ஒட்டடை (அடிக்கும்) குச்சி போல ஒரு மரம். கோன் ஐஸை கவிழ்த்துப் பிடித்தாற்போல..!//
நல்ல கற்பனை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அங்கேயும் யாசகம் கேட்கிறவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். எங்கே போனாலும் இம்மாதிரி ஓர் இருட்டு இடம் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கெனக் கொண்டு வந்ததை அவருக்குக் கொடுத்துட்டீங்க. நீங்க அப்புறம் எங்கே சாப்பிட்டீங்க? எல்லா இடங்களுமே பார்க்கவும், ரசிக்கவும் அழகாகவும் ரம்மியமாகவும் உள்ளன. வௌவால் பற்றிய செய்திகள் புதியது. புதுச்சேரியில் வௌவால் வளர்ப்பவர் பற்றியும் இப்போத் தான் தெரியும்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குஅங்கேயும் யாசகம் கேட்கிறவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். எங்கே போனாலும் இம்மாதிரி ஓர் இருட்டு இடம் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கெனக் கொண்டு வந்ததை அவருக்குக் கொடுத்துட்டீங்க. நீங்க அப்புறம் எங்கே சாப்பிட்டீங்க? //
யாசகம் கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் அட்லாண்டாவில்.
நான் மதியம் சரியாக சாப்பிடவில்லை அதனால் இரவு வீட்டுக்கு வந்து சாப்பிடும் வரை பசி தாங்க வேண்டும் என்று கொண்டு வந்த உணவு அது. வீட்டுக்கு போய் இட்லியும், சட்னியும் சாப்பிட்டேன்.
//எல்லா இடங்களுமே பார்க்கவும், ரசிக்கவும் அழகாகவும் ரம்மியமாகவும் உள்ளன. வௌவால் பற்றிய செய்திகள் புதியது. புதுச்சேரியில் வௌவால் வளர்ப்பவர் பற்றியும் இப்போத் தான் தெரியும்.//
நானும் வெளவால் வளர்ப்பவரை பற்றி அன்றுதான் தெரிந்து கொண்டேன்.
அட்லாண்டாவில் நிறைய இடங்கள் பார்க்க, ரசிக்க, அழகாக ரம்மியமாக இருக்கிறது. ஊரே ஏரிகள், மரங்கள் என்று பார்க்க அழகாய் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.