வெள்ளி, 14 ஏப்ரல், 2023

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்




சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு.
 மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, 
தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே
 கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை 
கண்விழித்தவுடன் இநத மங்கல பொருட்களைப் பார்த்தால் ஆண்டு 
முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள். எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம்
 செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.








வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும் என்பதை எடுத்துக்

 காட்டுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப்புத்தாண்டில் இனிப்பு, 

கசப்பும் என்று எல்லா சுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் 

என்பார்கள். அதை ஒழுங்காய் கடைபிடிப்பது தமிழ்ப்புத்தாண்டில் தான். 

இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல், புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம், அல்லது மாங்காய் வேப்பூம்பூ  பச்சடி  என்று உணவில் 

சேர்த்துக் கொள்வார்கள்.





வெயில் காலத்தில் வேப்பமரத்தின் காற்று எல்லோருக்கும் மிக தேவையாக இருக்கிறது. கிராமப்புரத்தில் கோடைக்காலத்தில் வேப்பமரத்தில் ஊஞ்சல்

 கட்டி விளையாடுவது, கயிற்றுக் கட்டிலை மரத்தடியில் போட்டு தூங்குவது

 என்று இயற்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.

சித்திரை மாதத்தில், புளி, மாங்காய், மாம்பழம், பலா, வாழை மஞ்சள், 

இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு 

வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். 

வேப்பம்பூ இப்போது தான் கிடைக்கும். அதைக் காயவைத்து, மோரில்உப்புடன் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து 

வைத்துக்கொள்வார்கள், அதன் மருத்துவப்பயன் அறிந்தமையால். 

வேப்பம்பூவை வெந்நீர் விட்டு டீ டிகாக்ஷன் போல் இறக்கி, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால், வாதம், பித்தம், அகலும். வாய்க்கு ருசி,

 வயிற்றுக்கு பசி ஏற்படும், சரும நோய்கள் விலகும் என்பார்கள்.

சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள். இந்த சமயத்தில் பூக்கள், 

பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும். அதைய நாம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு எல்லோரும் நலமாக 

இருக்க வேண்டிக்கொள்ளலாம்

பழங்கள்:

சமைக்காத உணவுகளாக பழங்கள் பச்சைக் காய்கறிகள், சாப்பிடலாம். 

அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்பது நல்லது. சமைக்காத 

உணவாக பழங்களை, பச்சைகாய்கறிகளை உண்ணலாம். இந்த சீஸனில் 

என் கணவர்  கணினியில் வரைந்த முக்கனிகள் ஓவியம் .

சித்திரைத்திருநாள் பதிவுக்கு வரைந்து கொடுத்த பதிவு.


மா, பலா, வாழை பழங்கள், மற்றும் எல்லா பழங்களும் நிறையகிடைக்கும்.

 “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்.”

நாம் தமிழ்ப்புத்தாண்டில் இறைவனுக்கு என்று வழங்கும் பிரசாதங்கள்

 எல்லாம் என்ன பயன்களைத் தருகின்றன, உணவில் கசப்புச் சுவையை ஏன் கலந்து உண்ணச் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன?

நம் வீட்டை அலங்கரிக்கும் மாவிலை, வாழை மரத்தின் பயன்கள் என்ன 

என்பதையும் ஏன் அதை நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள் என்பதை எல்லாம் எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் என்ற 

புத்தகம் மூலம் சொல்கிறார் Dr. C.K.திரு. மாணிக்கவாசகம். அவர்கள்

 எழுதியதைப் படித்தேன் அதில் சில பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:-

பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள் :


நிலம் - அருகம்புல்

நீர் - மாவிலை,

நெருப்பு  வாழைஇலை

காற்று  வேப்பிலை.

ஆகாயம்  வெற்றிலை

அருகம்புல்:

அருகம்புல் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கிறோம். அது நோய்களை நீக்கும் “

ஆகாதது அருகம்புல்லில் ஆகும்என்பது பழமொழி.வாரம் ஒரு முறை 

கஷாயம் வைத்து குடித்தால் வலியும், வியாதியும் இன்றி

வாழலாம். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தோல் நோய்கள், புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களையும் போக்கும் குணம் அருகம்புல்லுக்கு உண்டு.

மாவிலை:

மாவிலை கஷாயம் நீரின் மூலமாகப் பரவும் நோய்களைப் போக்குகிறது.

கங்கை நீர் என்று கலசங்களில் நீரை எடுத்து

மாவிலை வைத்து கும்பாபிஷேகங்களிலும், புதுமனை புகுவிழாவிலும், 

மற்றும் விழாக்களிலும் வைத்து வணங்கி, அந்த நீரை மாவிலைகளால் 

தெளித்துத் தூய்மைப்படுத்தி, பின் மக்கள் மீதும் வீடுகள் மீதும் மற்றும் 

எல்லா இடங்களிலும், தெளிப்போம். தூய்மையான நீரை தெளித்து 

சுற்றுப்புறத்தை தூய்மை ஆக்கிறோம். வீட்டில் மாவிலை கட்டுவதும் காற்றில் உள்ள நீரைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள நீர்

 நிலைகளையும் சுத்தம் ஆக்கும்.

வாழைமரம் கட்டும் காரணம் :

விஷமுறிவுக்கு வாழை என்பார்கள். திருமணம், கோயில் விழாக்கள் 

வாயில்களில் வாழை கட்டுவதற்கு காரணம், விழாக்களின் போது தீங்கு

 இழைக்க கூடிய ஜந்துக்களை விரட்டவும், தவறி விஷஜந்துக்கள்

தீண்டிவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேறு எங்கும் 

தேடிக்கொண்டு இருக்காமல் உடனே அருகில் கட்டி இருக்கும் வாழை 

மரத்திலிருந்து வாழைப்பட்டையை எடுத்து தீமூட்டி அனலில் வாட்டி,

வதக்கி சாறு எடுத்து அரை டம்பளர் உள்ளே கொடுத்து, பின் சாறு எடுத்து

 உடல் முழுக்க பூசிவிட்டால் விஷக்கடியிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள். இப்படிநல்லது கெட்டது என்று மக்கள் கூடும் இடங்களில் வாழைமரம்

 கட்டும் காரணம் இது தான் என்பார்கள். ஆதிகாலத்தில் வீடுகள் கோயில்கள் எல்லாம்

 காட்டுப் பகுதி சூழ்ந்த இடங்களில் தானே இருந்தன!

வேப்பிலை:

வேப்பிலை சக்தி கடவுளுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு வேண்டிய 

சக்திக்கும் தான். வேப்பிலை கஷாயம் அருந்தி வந்தால், உடலிலுள்ள 

நோய்க் கிருமிகள் அழிவதுடன் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் அன்றாட 

உடல் உறுப்பு தேய்மானத்தை தடுத்து உடலைப் புதுப்பிக்கிறது. 

பிணியின்றி வாழ வைக்கிறது. கசப்பு சுவை பிடிக்காது என்பதால் அதைச் சாப்பிடாதவர்

களுக்கு உடலில் இருக்கும், எலும்பு மூட்டுக்கள், பாதங்களின் தசைகள், 

பற்கள், என்று பல உறுப்புக்கள் தேய்மானம் ஆகிறது. கசப்பு உண்டு வந்தால், தேய்மானம் தடுக்கப் படுகிறது. பாவைக்காய், சுண்டைக்

காய், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெற்றிலை:

கடவுளுக்குப் படைப்பதற்கு மட்டும் அல்ல வெற்றிலை ,அறுசுவை 

உணவை அளவோடு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொள்வதால் 

உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உடலுக்கு சக்தி கிடைக்கும். 

அதனால்.இப்படி பண்டிகையில் சேர்த்து கொள்ளும் பொருட்கள் 

எல்லாம் காரண காரியமாய் சேர்க்கப்பட்டு இருக்கிறது.


இந்த பதிவு ஒரு மீள் பதிவு. நந்தன ஆண்டு 2012 ல் போட்ட பதிவு. 

 

இந்த சோபகிருது தமிழ் புத்தாண்டு அனைவருக்கும்  எல்லா வளங்களையும், 

நலங்களையும்  இறைவன் அருள  வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

வாழ்க வையகம் ! வாழ்க வைய்கம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.//

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. வேப்பம்பூவின் பலன்களை அறிந்தவர்கள் முன்னோர்.  முத்தாக சொல்லி வைத்துச் சென்றிருக்கிறார்கள்.  வேப்பம்பூ பச்சடி என்று வேப்பம்பூ போட்டு வெள்ளம், புலி சேர்த்து எமனுக்கு கசப்பாக, மனிதர்க்கு இனிப்பாக என்று மூன்று முறை சொல்லிக் கொடுப்பார்கள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேப்பம்பூ பச்சடி என்று வேப்பம்பூ போட்டு வெள்ளம், புலி சேர்த்து எமனுக்கு கசப்பாக, மனிதர்க்கு இனிப்பாக என்று மூன்று முறை சொல்லிக் கொடுப்பார்கள். //

      வேப்பம்பூ பச்சடி வெல்லமும், புளியும் சேர்த்து உங்கள் அம்மா மூன்று முறை சொல்லி கொடுப்பதை முன்பு பழைய பதிவில் சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. ////வேப்பம்பூ பச்சடி என்று வேப்பம்பூ போட்டு வெள்ளம், புலி சேர்த்து எமனுக்கு கசப்பாக, மனிதர்க்கு இனிப்பாக என்று மூன்று முறை சொல்லிக் கொடுப்பார்கள். ////

      படித்துப் பார்க்காமலேயே பின்னூட்டம் போட்டால் இந்த கதிதான்.  வெல்லம், புளி என்று திருத்திப் படிக்கவும்.  

      நீக்கு
    3. தட்டச்சு வேகமாக செய்யும் போது இப்படி சில நேரம் ஆகி விடுகிறது.
      எல்லோருக்கும் புரியும் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அதே போல எங்கள் வீடுகளில் விஷுகனி, கைநீட்டம் பழக்கங்கள் கிடையாது.  நான் இப்போது பதிவிலேயே மானசீகமாக 'கைநீட்டம்' செய்கிறேன்!!! காசு வேணாம், ஆசி கொடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதே போல எங்கள் வீடுகளில் விஷுகனி, கைநீட்டம் பழக்கங்கள் கிடையாது. நான் இப்போது பதிவிலேயே மானசீகமாக 'கைநீட்டம்' செய்கிறேன்!!! காசு வேணாம், ஆசி கொடுங்கள்!//

      எங்கள் ஆசி என்றும் உண்டு. (எங்கள் என்றே வருகிறது.) என்றும் என் ஆசி உண்டு.
      இறைவன் அருளால் இந்த ஆண்டு உங்கள் விருப்பம் எல்லாம் நிறைவேற வேண்டும். மருமகள் வீட்டுக்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. அப்படிதானே வரும்?  ஸார் உங்களுக்குள்ளேயே இருக்கும்போது வேறு எப்படி வரும்?  அவர் ஆசீர்வாதமும் எனக்கு உங்கள் மூலம் கிட்டுகிறது.

      நீக்கு
  4. பஞ்சபூதத்துக்கென தனியாக மூலிகைகள் இருக்கிறதா? தகவல் எனக்கு. சாரின் ஓவியம் மறுபடி கண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பஞ்சபூதத்துக்கென தனியாக மூலிகைகள் இருக்கிறதா? தகவல் எனக்கு. சாரின் ஓவியம் மறுபடி கண்டதில் மகிழ்ச்சி.//

      ஆமாம், பஞ்சபூதங்களுக்கு மூலிகைகள் இருக்கிறது. அதை மருத்துவர் மிக அழகாய் சொன்னார் அதனால் இந்த பகிர்வு.
      சார் மிக வேகமாக இந்த ஓவியம் வரைந்து தந்தார்கள்.திடீர் என்று கேட்டேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்... உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், கவின் உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்... உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், கவின் உட்பட//
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. கவினிடம் சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  6. மயிலை கற்பகாம்பாள் கோவிலில் நட்சத்திரத்துக்கு மரங்கள் இருப்பது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மயிலை கற்பகாம்பாள் கோவிலில் நட்சத்திரத்துக்கு மரங்கள் இருப்பது நினைவுக்கு வந்தது//

      மயிலாடுதுறை பக்கம் ஒரு கோவிலில் 27 நட்சத்திரத்துக்கும் மரங்கள் இருக்கிறது. முன்பு பதிவு போட்டு இருக்கிறேன்.

      அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் திருக்கோயில்,பெருஞ்சேரி.

      https://mathysblog.blogspot.com/2014/03/1.html
      https://mathysblog.blogspot.com/2014/03/2.html
      இரண்டு பதிவாக போட்டேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
    2. அனைவருக்கும் அன்பின் இனிய சோபகிருது புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      வாழ்க நலம்..

      நீக்கு
    3. சிறப்பான கருத்துக்கள்..

      அழகான படங்கள்..

      ஐயா அவர்களை நானும் நினைத்துக் கொள்கின்றேன்..

      எல்லாருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்...

      நலம் வாழ்க..

      நீக்கு
    4. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      சிறப்பான கருத்துக்கள்..

      அழகான படங்கள்..

      ஐயா அவர்களை நானும் நினைத்துக் கொள்கின்றேன்..

      எல்லாருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்..//

      உங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. விளக்கங்கள் சிறப்பு... வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      //விளக்கங்கள் சிறப்பு... வாழ்த்துகள் அம்மா.//
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  8. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  9. கோமதிக்கா உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு விஷு வாழ்த்துகள்!

    விஷுக் கனி கண்டாச்சு!! இங்கு. கைநீட்டம் தான் இல்லை. அதெல்லாம் ஊரோடு போய்விட்டது. புகுந்த வீட்டில் இப்பழக்கம் இல்லை விஷுக் கனியும் பழக்கமில்லை...கண்ணை மூடிக் கொண்டு சென்று பார்க்கும் வழக்கம் இல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //. உங்களுக்கும் எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு விஷு வாழ்த்துகள்!//


      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கீதா.

      //விஷுக் கனி கண்டாச்சு!! இங்கு. கைநீட்டம் தான் இல்லை. அதெல்லாம் ஊரோடு போய்விட்டது. புகுந்த வீட்டில் இப்பழக்கம் இல்லை விஷுக் கனியும் பழக்கமில்லை...கண்ணை மூடிக் கொண்டு சென்று பார்க்கும் வழக்கம் இல்லை...//

      கனி கண்டாச்சு இல்லையா ! அது போதும். அப்பா இருக்கிறார்கள் தானே! அப்பாவிடம், கணவரிடம் ஆசி போதுமே!

      நீக்கு
  10. நம் வீட்டில் செய்கிறேன். நல்ல விஷயம் பின்பற்றுவதில் தவறில்லையே.

    பாருங்க பஞ்சபூதங்களுக்கும் ஒவ்வொரு மூலிகை. பல விஷயங்கள் இப்படிப் பொருத்திச் சொன்னால்தான் மக்கள் ஏற்பார்கள் என்பதால் சொல்லியிருப்பாங்களோ நம் முன்னோர்கள்!! என்று அடிக்கடி தோன்றும்.
    இந்தத் தகவல் புதியதாகத் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம் வீட்டில் செய்கிறேன். நல்ல விஷயம் பின்பற்றுவதில் தவறில்லையே.

      பாருங்க பஞ்சபூதங்களுக்கும் ஒவ்வொரு மூலிகை. பல விஷயங்கள் இப்படிப் பொருத்திச் சொன்னால்தான் மக்கள் ஏற்பார்கள் என்பதால் சொல்லியிருப்பாங்களோ நம் முன்னோர்கள்!! என்று அடிக்கடி தோன்றும்.
      இந்தத் தகவல் புதியதாகத் தெரிந்து கொண்டேன்.//

      ஆமாம் கீதா , காரண காரியங்களை ஆராய்ந்து அதை செய்து இருக்கிறார்கள். ஏன் எதற்கு என்ற காரணம் தெரிந்தால் நல்லது என்று மருத்துவர் விவரித்து சொல்கிறார்.

      நீக்கு
  11. கோயில்களில் கூட இப்படி மரங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தல விருட்சம் என்பதோடு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோயில்களில் கூட இப்படி மரங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தல விருட்சம் என்பதோடு...//
      ஆமாம். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரம் உண்டு.

      நீக்கு
  12. நெருப்பு, காற்று - வாழை, வேப்பிலை ரொம்பப் பொருத்தமாகிருக்குன்னு தோன்றுகிறது கோமதிக்கா.

    நெருப்புக் காயம் ஏற்பட்டால் வாழை இலையில் படுக்க வைத்து சுற்றிக் கட்டுவாங்க இல்லையா?

    அதுபோல வேப்பமரக் காற்று சுவாசிப்புக்கு ரொம்ப நல்லது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நெருப்பு, காற்று - வாழை, வேப்பிலை ரொம்பப் பொருத்தமாகிருக்குன்னு தோன்றுகிறது கோமதிக்கா.//

      ஆமாம்.

      //நெருப்புக் காயம் ஏற்பட்டால் வாழை இலையில் படுக்க வைத்து சுற்றிக் கட்டுவாங்க இல்லையா?//

      ஆமாம். பூக்குழி இறங்கும் அன்பர்களுக்கு காலில் ஏற்படும் எரிச்சலுக்கு வாழைமட்டையை பிழிந்து விடுவார்கள். எரிச்சல் அடங்கும்.

      //அதுபோல வேப்பமரக் காற்று சுவாசிப்புக்கு ரொம்ப நல்லது..//

      ஆமாம்., முன்பு ஒவ்வொரு வீட்டுமுன்பும் வேப்பமரம் இருக்கும்.
      எங்ககள் குடியிருப்பு வளாகத்தில் வேப்பமரங்கள் நிறைய வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  13. மாமாவின் கணினி ஓவியம்! நீங்கள் ஒவ்வொரு முறை மாமா பற்றி சொல்வதும் அவர் வரைந்த ஓவியங்கள், மகனோடு ஒரு தோழராகப் பேசிய புகைப்படம் எல்லாம் நினைவுக்கு வரும் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாமாவின் கணினி ஓவியம்! நீங்கள் ஒவ்வொரு முறை மாமா பற்றி சொல்வதும் அவர் வரைந்த ஓவியங்கள், மகனோடு ஒரு தோழராகப் பேசிய புகைப்படம் எல்லாம் நினைவுக்கு வரும் கோமதிக்கா..//

      நன்றி கீதா. பண்டிகை என்றால் மாவிலை தோரணம் வாசலில் கட்டுவது, இறைவன் படங்களுக்கு பொட்டு வைப்பது, பழங்கள் வாங்கி வருவது என்று நினைவுகள் வந்து விடுகிறது.

      நீக்கு
  14. மாமா இறைவனிடத்தில் இருந்து கொண்டு உங்கள் எல்லோருக்கும் ஆசிகள் வழங்குவார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாமா இறைவனிடத்தில் இருந்து கொண்டு உங்கள் எல்லோருக்கும் ஆசிகள் வழங்குவார்.//
      அப்படித்தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

      உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களுக்கும், மற்றும் தங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நிறைய விபரங்கள் பதிவில். பழங்களின் நன்மை குறித்து சொன்னது சிறப்பு. பஞ்ச பூதங்களுக்கான மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது. இந்த சோபகிருது வருடம் அனைவருக்கும் நல்ல பலன்களை தர வேண்டுமாய் இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹ்ரிஹரன், வாழ்க வளமுடன்
      வணக்கம் சகோதரி

      //பதிவு அருமை. தங்களுக்கும், மற்றும் தங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

      உங்கள் நல் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

      //நிறைய விபரங்கள் பதிவில். பழங்களின் நன்மை குறித்து சொன்னது சிறப்பு. பஞ்ச பூதங்களுக்கான மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது. இந்த சோபகிருது வருடம் அனைவருக்கும் நல்ல பலன்களை தர வேண்டுமாய் இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கம்லா.

      நீக்கு
  16. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

    பதிவின் விபரங்கள் அருமை.
    படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

      பதிவின் விபரங்கள் அருமை.
      படங்களும் நன்று.//

      உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு