ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

சிறு மலர்கள்



வசந்தம் வந்ததும் புல் பூண்டுகள் நன்றாக பச்சை பசேல் என்று வளர்ந்து இருக்கிறது. மழை பெய்து புற்கள் வளர்ந்தவுடன் அதனுடன் சேர்ந்து சிறு சிறு செடிகளும் வளர்ந்து குட்டி குட்டி பூக்கள்  மிக அழகாய் பூத்து இருந்தது. அட்லாண்டாவில் உள்ள மகள் வீட்டு தோட்டத்தில் .

இன்னும் புல் பெரிதாக வளர்ந்தால் வெட்டி விடுவார்கள், அப்போது இந்த அழகிய குட்டி பூக்களும் போய் விடும். அதற்குள் படம் எடுத்து விட்டேன்.



குட்டி குட்டி மஞ்சள் பூ

இந்த பூக்கள் மாலையில் வாடி விடுகிறது.
மிகவும் குட்டியாக பூக்கிறது

புற்களுக்கு இடையே இந்த பூவின் செடி தலைத்தூக்கி கொஞ்சம் உயரமாக பூக்கும் காய்ந்தவுடன் வெள்ளையாக மாறிவிடும், பிறகு பறக்க ஆரம்பித்துவிடும்.

இந்த பூ இவ்வளவுதான் மலர்கிறது, மாலையில் வாடி விடும்

இந்த பூவின் இலைகளும் பூ போன்ற வடிவம் தான். பூ ஐந்து இதழ், இலை மூன்று இலை

இந்த பூ நாலு இதழ் கொண்டதாகவும்


மூன்று இதழ் கொண்டதாகவும் பூக்கிறது.


இதன் மொட்டும் இரண்டு விதமாக இருக்கிறது, 


இந்த புற்களுக்கு இடையில் வேறு அழகிய இலைகள் கொண்ட சிறு சிறு கொடிவகைச்செடி படர்ந்து இருக்கிறது.
      இலை பெரிது பூ சிறிது பூவின் இதழ்கள் தும்பை பூ போல 

இலை வடிவ பூ

மிக சிறிய புல்லில் மிக அழகான  பூ டிசம்பர் பூ போல மூன்று பூக்கள், அதே வண்ணத்தில் மூன்று இலை வடிவ இதழ்கள். பூக்களின்  மஞ்சள் வண்ணம் தீட்டியது போல தோற்றம்.
தூரத்திலிருந்து பார்த்தால் ரோஸ் வண்ண  குட்டி ரோஜா போல் காட்சி அளிக்கும் 

புதர்ச்செடி போல இருக்கிறது பரந்து விரிந்து இதை அழகிய வடிவில் சில இடங்களில் வெட்டி விட்டு இருக்கிறார்கள்.  மகள் வீட்டில் இரண்டு மூன்று இடங்களில் படர்ந்தும், குத்துச்செடி போலவும் இருக்கிறது.




             மகன் ஊரில் கற்களுக்கு இடையே  பார்த்த சிறு  மலர்

இயற்கையின் அற்புத படைப்பில்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.

புல்வெளியில் பறவைகளும், பூச்சிகளும்  , வண்டுகளும்  அணில்களும், பூனைகளும்   ஓடி விளையாடுவதை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.  பூப்பூக்கும் ஓசை  அதை கேட்கத்தான் ஆசை பாடல் மனதுகுள் ஓடுகிறது. இன்று காலை முதல் மழை பறவைகள் , அணில்கள், பூச்சிகள் எங்கோ மறைந்து இருக்கிறது. மழையின் ஓசை மட்டும் இருக்கிறது.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

22 கருத்துகள்:

  1. அழகான படங்கள்
    பூக்கள் என்றுமே மனதுக்கு இதமான காட்சிகள்தான்...

    ரசனையாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள்
      பூக்கள் என்றுமே மனதுக்கு இதமான காட்சிகள்தான்...//

      ஆமாம், மிகவும் சிறிய பூக்கள் அதில்தான் எத்தனை அழகு !

      //ரசனையாக எழுதி இருக்கிறீர்கள்.//

      இறைவன் மிகவும் ரசனையானவன் அவன் படைத்ததை ரசித்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  2. வண்ண வண்ண பூக்கள் அழகு.  வாசமில்லா மலர்கள் என்றாலும் கண்கவரும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வண்ண வண்ண பூக்கள் அழகு. வாசமில்லா மலர்கள் என்றாலும் கண்கவரும் அழகு!//

      ஆமாம் , வாசமில்லா மலர்தான் ஆனால் அதன் கண்கவரும் அழகு எத்தனை விதமான பூச்சிகள் , வண்டுகள் மொய்க்கிறது!

      நீக்கு
  3. எனக்கு இன்று மலர்களை பார்த்ததும் சட்டென நினைவுக்கு வந்த பாடல் 'மலர்கள் நனைந்தன பனியாலே..  என் மனமும் குளிர்ந்தது நிலவாலே ...'  பாடல்.  உடனே சென்று அதை ஒருமுறை கேட்டு விட்டுதான் அடுத்த பிளாக், அடுத்த கமெண்ட், அடுத்த வேலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு இன்று மலர்களை பார்த்ததும் சட்டென நினைவுக்கு வந்த பாடல் 'மலர்கள் நனைந்தன பனியாலே.. என் மனமும் குளிர்ந்தது நிலவாலே ...' பாடல்.//

      எனக்கும் பிடிக்கும். நிறைய பாடல்கள் மனதில் வந்தன ஆனால் புல்வெளியில் வளர்ந்த பூக்கள் என்பதால் இந்த பாடல் மனதில் நின்றது.


      //உடனே சென்று அதை ஒருமுறை கேட்டு விட்டுதான் அடுத்த பிளாக், அடுத்த கமெண்ட், அடுத்த வேலை!//

      பாடலை கேட்டு இருப்பீர்கள். //
      //மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலவன் வடிவம்// அதில் கண்டேன் என்ற பாடலும் நினைவுக்கு வந்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. சிறு மலர்கள் படங்கள் மிக அழகு. பல மலர்கள் எங்கள் வளாகத்திலும் உள்ளன.

    பாம்புகள் வருமா?

    நன்றாக எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //சிறு மலர்கள் படங்கள் மிக அழகு. //

      நன்றி.

      பல மலர்கள் எங்கள் வளாகத்திலும் உள்ளன.//

      அங்கும் அழகான புல்வெளி உண்டே! அதனால் புற்களுக்கு இடையே இருக்கும்.

      பார்க்க புல்வெளி அழகாய் இருக்க வேண்டும் வெட்டவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பும் நகராட்சி. புதர் மாதிரி இருந்தால் பாம்பு இருக்கும் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //மனதை கவர்ந்த மலர்கள்..//

      ஆமாம், மனதை கவர்ந்த மலர்கள் தான்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. படங்களுடன், பூக்களை நன்கு கவனித்துப் பகிர்ந்திருக்கும் தகவல்களும் சுவாரஸ்யம். ஒரே வகைப்பூ 3 இதழ்கள் கொண்டும், 4 இதழ்கள் கொண்டும் பூக்கின்றது.. அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்ம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களுடன், பூக்களை நன்கு கவனித்துப் பகிர்ந்திருக்கும் தகவல்களும் சுவாரஸ்யம்.//

      நன்றி.

      //ஒரே வகைப்பூ 3 இதழ்கள் கொண்டும், 4 இதழ்கள் கொண்டும் பூக்கின்றது.. அழகு!//

      ஆமாம், நிறைய வியப்பை தரும் விஷயம். நிறைய பூக்கள் அப்படி இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. அழகான பூக்கள்...
    படங்கள் எல்லாமே தரம்..

    மனதுக்கு மகிழ்ச்சியான காட்சிகள் தான் எப்போதும்..

    அந்த மகிழ்ச்சி தான் வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      //அழகான பூக்கள்...
      படங்கள் எல்லாமே தரம்.//
      நன்றி.

      //மனதுக்கு மகிழ்ச்சியான காட்சிகள் தான் எப்போதும்..

      அந்த மகிழ்ச்சி தான் வேண்டும்..//

      கவலைகளை மறக்க இயற்கை எப்போதும் அள்ளி வழங்கும் காட்சிகள் அரு மருந்து.
      எப்போதும் இயற்கையை நேசிப்பேன். இப்போது இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்.



      நீக்கு
  8. இந்தப் புதர்களுக்குள் விஷ ஜந்துக்களும் இருக்கலாம்...

    கவனம் தேவை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. //இந்தப் புதர்களுக்குள் விஷ ஜந்துக்களும் இருக்கலாம்...

    கவனம் தேவை..

    வாழ்க நலம்..//
    கவனமாக இருக்கிறேன்.
    நன்றி .

    பதிலளிநீக்கு
  10. பூக்கள் என்ன அழகு இல்லையா? காட்டுப் பூ தானாகவே வளர்ந்திருக்கு என்றாலும் என்ன அழகு!! அவற்றின் வண்ணம். மூன்று இதழ் நான்கு இதழ் என்று ஒரே பூ வகை என்ன ஆச்சரியம் இல்லையா? இயற்கை இயற்கைதான்...

    அழகா விவரிச்சிருக்கீங்க..

    பூக்கள் எல்லாம் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //பூக்கள் என்ன அழகு இல்லையா? காட்டுப் பூ தானாகவே வளர்ந்திருக்கு என்றாலும் என்ன அழகு!! அவற்றின் வண்ணம். மூன்று இதழ் நான்கு இதழ் என்று ஒரே பூ வகை என்ன ஆச்சரியம் இல்லையா? இயற்கை இயற்கைதான்...//

      தானாக வளர்ந்த பூக்கள் அழகுதான், இன்று இன்னொரு மஞ்சள் பூ பூத்து இருக்கு. இயற்கையில் எல்லாம் அழகு.

      //அழகா விவரிச்சிருக்கீங்க..

      பூக்கள் எல்லாம் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா//

      நன்றி கீதா.

      நீக்கு
  11. மூன்று இலை செடி - 5 இதழ் கொண்ட மஞ்சள் பூ மூன்று இலை....அந்த மூன்ரு இலைச் செடி ஆரைக் கீரை போல இருக்கு கோமதிக்கா. அங்கு மண்ணில் ஈரம் இருந்து கொண்டே இருக்குமோ?

    ஆரைக் கீரை தண்ணீர் வளம் இருக்கும் இடங்களில் நிறைய கூட்டம் கூட்டமாக வளரும் நல்ல மருத்துவப் பயன்கள் கொண்டவை. முன்ன இருந்த வீட்டில் நான் தண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தப்ப அந்த நிலத்தில் நிறைய வளர்ந்தன. ரசம் வைத்தும், சூப் போன்ரும் வைத்தும் கஷாயத்தில் போட்டும் குடித்ததுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மூன்று இலை செடி - 5 இதழ் கொண்ட மஞ்சள் பூ மூன்று இலை....அந்த மூன்ரு இலைச் செடி ஆரைக் கீரை போல இருக்கு கோமதிக்கா. அங்கு மண்ணில் ஈரம் இருந்து கொண்டே இருக்குமோ?//
      ஆமாம், மண்ணில் ஈரம் இருக்கும். வேறு தோட்டம் அமைக்க முடியாது, அணில்கள் நிமிஷ்மாக அழித்துவிடும்.
      மரங்கள் தான் ஒவ்வொரு வீட்டிலும், அப்புறம் புதர் செடிகள். உண்டு.

      //ஆரைக் கீரை தண்ணீர் வளம் இருக்கும் இடங்களில் நிறைய கூட்டம் கூட்டமாக வளரும் நல்ல மருத்துவப் பயன்கள் கொண்டவை. முன்ன இருந்த வீட்டில் நான் தண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தப்ப அந்த நிலத்தில் நிறைய வளர்ந்தன. ரசம் வைத்தும், சூப் போன்ரும் வைத்தும் கஷாயத்தில் போட்டும் குடித்ததுண்டு//

      ஆரைக்கீரை கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் சாப்பிட்டது இல்லை.

      நீக்கு
  12. டிசம்பர் பூ போன்ற அந்த நிறம் மற்றும் ரோஸ் கலர் பூ செம கலர்.

    எல்லாப் பூக்களையும் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //டிசம்பர் பூ போன்ற அந்த நிறம் மற்றும் ரோஸ் கலர் பூ செம கலர்.

      எல்லாப் பூக்களையும் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா...//

      இனிதான் பூச்செடிகள் வாங்கி வைப்பார்கள். வசந்தம் வந்ததும் பூக்களை வைப்பார்கள். மீண்டும் குளிர்காலத்தில் பட்டு போய் விடும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு