கிழக்கு நீலப்பறவை (Eastern Bluebird )
அட்லாண்டாவில் மகள் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த பறவை. குளிர் காலம் போனபின் கோடை வந்து விட்டால் இந்த பறவையின் வரத்து அதிகமாக இருக்குமாம்.
கிழக்கு நீலப்பறவைகள் கிழக்கு வட அமெரிக்கா மற்றும் தெற்கில் நிகரகுவா வரை காணப்படுகின்றன. கிழக்கு மற்றும் தெற்கு பறவைகளை விட வடக்கிலும் மேற்கிலும் வாழும் பறவைகள் அதிக முட்டைகளை இடுகின்றன.
என்ன பார்வை ! உந்தன் பார்வை!
உடலை சிலிர்த்து கொண்டு இருக்கிறது
கீழ் பார்வை
பக்க வாட்டு பார்வை
மரக்கிளை ஊஞ்சல்
இப்படி தூரத்தில் மரக்கிளையில் இருந்த நீலப்பறவையை நான் ஜூம் செய்து எடுத்த படங்கள்
ஒரு பூச்சியைப் பார்த்தால் அதன் மேல் திடீரென விழுமாம்.
நான் நீலப்பறவை மரக்கிளையிலிருந்து விழுந்து இறக்கையை விரித்து படுத்தவுடன் குளிர் காய்கிறது இளம் வெயிலில் என்று நினைத்தேன். இந்த பறவையை பற்றி கூகுளில் படித்தபின் தான் அது தன் இரையை பிடிக்க இப்படி செய்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
இந்த படம் உதவி கூகுள் . நன்றி கூகுளுக்கு.
தோட்டத்திற்கு பெண் பறவை வரவில்லை , நான் பார்க்கவில்லை. அதனால் கூகுள் உதவி.
ஆண் நீலப்பறவை பின்புறம் மற்றும் தலையில் ஒரு அற்புத மான ராயல் நீல நிறமாகவும், மார்பில் சிவப்பு- பழுப்பு நிறமாக இருக்கும். இறக்கைகள் மற்றும் வாலில் நீல நிற மும், சாம்பல் நிறமும் கலந்து இருக்கும், அது பெண் பறவைக்கு அழகான தோற்றத்தை கொடுக்கிறது.
ஆண் பறவை கூட்டை எட்டி பார்ப்பது, பெண் பறவை சிறகடித்து பறப்பது. இரண்டும் வித்தியாசம் தலையில், வாலில் உள்ளது.
//ஆண் ஈஸ்டர்ன் ப்ளூபேர்ட் ஒரு பெண்ணைக் கவரும் வகையில் தனது கூடு குழியில் காட்சியளிக்கிறது. அவர் கூடு பொருட்களை துளைக்கு கொண்டு வருகிறார், உள்ளேயும் வெளியேயும் செல்கிறார், அதன் மேலே அமர்ந்து தனது இறக்கைகளை அசைப்பார். அதுவே கூடு கட்டுவதில் அவரது பங்களிப்பு அதிகம்; பெண் ஈஸ்டர்ன் ப்ளூபேர்ட் மட்டுமே கூடு கட்டி முட்டைகளை அடைகாக்கும்.//
கூடு கட்ட குச்சிகளை கொண்டு வருவது வட்டமாக கட்டிய கூட்டின் நடுவில் அமர்ந்து உடலை அசைத்து அதை விரிவு படுத்தி கூட்டின் குழியின் ஆழம் சரியாக இருந்தால் குச்சிகள் கொண்டு வருவதை நிறுத்தி விடும் போல.
இந்த காணொளி சின்ன காணொளிதான் பாருங்கள் . முட்டையிட்டு குஞ்சுபொரித்து உண்வு ஊட்டும் காட்சிகள் இருக்கிறது. இறைவன் ஒவ்வொரு பறவைக்கும் எவ்வளவு அறிவை கொடுத்து இருக்கிறான் என்ற வியப்பை தரும் காட்சி.
காணொளியை எடுத்தவருக்கு நன்றிகள்.
மகள் வீட்டில் வளர்க்கும் அழகு புதர் செடியில் கூடு கட்டி இருக்கிறது. வட்டமாக இருக்கிறது.
இந்த செடியில் தான் கூடு உள்ளது
காணொளி மிக நன்றாக இருக்கிறது. பறவை எப்படி கூடு வெளியில் அமைக்குமோ அது போலவே நாம் பெட்டி மாதிரி துளையோடு கூடு வைத்தாலும் அது உள்ளே தன் வழக்கப்படி கூடு அமைத்து உள்ளது. 5 முட்டைகள் உள்ளது அதை முட்டை ஓட்டை உடைத்து பெண் பறவை அந்த முட்டை ஓட்டை தின்று விடுகிறது. பெண் பறவைக்கு கால்சியம் சத்தாம். குஞ்சுகளுக்கு இரண்டு பறவைகளும் உணவு கொடுப்பது அழகு.
இன்னொரு வியப்பு தரும் செய்தி ;-
கிழக்கு நீலப்பறவைகள் வருடத்திற்கு ஒரு முறை 5, ஆறு முட்டைகளை இட்டு குஞ்சு பொரிக்கும். கோடையில் முட்டையிடும் குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து போய் விடும், பின் குளிர்காலத்தில் பெற்றோர்களுடன் அடிக்கடி வந்து தங்குமாம். பழைய முறை படி கட்டிய கூட்டில் தங்குவது இல்லையாம், இப்படி பிற்காலத்தில் மனிதன் அமைத்து கொடுத்த கூட்டில் குளிர்காலத்தில் வந்து தங்கும் என்று சொல்கிறார்கள். இந்த கூடு பாதுகாப்பாக இருப்பதால் என்று நினைக்கிறேன்.
இறைவன் அவைகளை நல்ல படியாக வைத்து இருக்கட்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
_________________________________________________________________
அழகிய பறவை. அழகிய படங்கள். இங்கும் அங்கும் பார்ப்பது அழகு. உங்கள் படங்களை பார்த்து நான் நினைத்த அளவை விட அதன் அளவு சிறியது என்பது கூகுள் படத்தில் பார்த்ததும் தெரிந்தது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய பறவை. அழகிய படங்கள். இங்கும் அங்கும் பார்ப்பது அழகு. //
ஆமாம். சிறிது நேரம் கூட தலையை அசைக்காமல் இருக்கமாட்ட்டேன் என்கிறது. கண்களும் தலையும் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
//உங்கள் படங்களை பார்த்து நான் நினைத்த அளவை விட அதன் அளவு சிறியது என்பது கூகுள் படத்தில் பார்த்ததும் தெரிந்தது.//
சிறிய பறவைதான் ஸ்ரீராம்.
காணொளி அருமை. முட்டை ஓட்டைத் தின்று விடுகிறது என்பதை நானும் ரிவர்ஸ் செய்து ரிவர்ஸ் செய்து மறுபடி பார்த்தேன். அப்புறம் நீங்களும் எழுதி இருக்கிறீர்கள். அப்பா பறவை வெளியிலிருந்து மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உணவு கொண்டு வந்து தருவது அருமை.
பதிலளிநீக்கு//காணொளி அருமை. முட்டை ஓட்டைத் தின்று விடுகிறது என்பதை நானும் ரிவர்ஸ் செய்து ரிவர்ஸ் செய்து மறுபடி பார்த்தேன்.//
நீக்குஉங்களுக்கு ஸ்பீக்கர் கெட்டு விட்டது என்று சொன்னீர்கள் முட்டைஓட்டை உடைத்து அது கடக் , முடக் என்று தின்னும் சத்தம் கேட்கும்.
//அப்பா பறவை வெளியிலிருந்து மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உணவு கொண்டு வந்து தருவது அருமை.//
அடைகாக்கும் போது வெளியே உனவு தேடலுக்கு போக முடியாத இணைபறவைக்கு உணவு கொண்டு கொடுப்பதும் , முதலில் அது சாப்பிடுகிறது, பிறகு குஞ்சுகளுக்கு கொடுப்பது அழகு.
இறக்கை முளைத்து பறந்த உடன் மறந்து விடும் என்று பார்த்தால் மறுபடி அப்பா அம்மாவுடன் வந்து தங்கும் என்பது ஆச்சர்யமான செய்தி.
பதிலளிநீக்கு//இறக்கை முளைத்து பறந்த உடன் மறந்து விடும் என்று பார்த்தால் மறுபடி அப்பா அம்மாவுடன் வந்து தங்கும் என்பது ஆச்சர்யமான செய்தி.//
நீக்குஆமாம் ஸ்ரீராம், மீண்டும் வருவது வியப்பான செய்தி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீலப் பறவையின் தகவல்கள் சிறப்பு
பதிலளிநீக்குகாணொளியை எடுத்தவரை பாராட்டத்தான் வேண்டும்.
படங்களும் நன்று
வணக்கம் சகோ தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//காணொளியை எடுத்தவரை பாராட்டத்தான் வேண்டும்.//
ஆமாம் ஜி, கூட்டுக்குள் காமிராவை வைத்து எடுத்து இருக்கிறார். நன்றாக எடுத்து இருக்கிறார் . பாராட்டத்தான் வேண்டும்.
//படங்களும் நன்று//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஜி
நீலப் பறவை மிக அழகு. இரையைப் பிடிக்க அதன்மேல் விழும் என்பது புதிது.
பதிலளிநீக்குஇந்த நீல முட்டைகளை மற்ற பறவைகளும் போடும் என நினைக்கிறேன். ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன்.
காணொளி மிக அழகு
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//நீலப் பறவை மிக அழகு. இரையைப் பிடிக்க அதன்மேல் விழும் என்பது புதிது.//
ஆமாம், எனக்கும் புதிது. கீழே விழுந்த போது வியப்பாக இருந்தது.
//இந்த நீல முட்டைகளை மற்ற பறவைகளும் போடும் என நினைக்கிறேன். ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன்.//
வேறு பறவைகளின் முட்டையும் நீல கலரில் இருக்கிறது.
//காணொளி மிக அழகு//
ஆமாம், அழகாய் எடுத்து இருக்கிறார்.
எங்கள் வளாகத்தில் காக்காய், கழுகு கூட்டை - மரத்திலிருப்பதைப் படங்களெடுத்து வைத்துள்ளேன்.
பதிலளிநீக்குநேற்று ஒரு இடத்தில் 100 காக்காய்கள் மதிளில் அமர்ந்திருந்தது. இத்தனை காக்காய்களை நான் பார்த்ததில்லை. அவைகளில் ஒருவர் இறந்தால் இந்தமாதிரி கூடி, குளிக்கும் என்பதைப் படித்திருக்கிறேன்.
//எங்கள் வளாகத்தில் காக்காய், கழுகு கூட்டை - மரத்திலிருப்பதைப் படங்களெடுத்து வைத்துள்ளேன்.//
நீக்குகழுகு, காக்கா கூடு கட்டுவதை பார்த்து இருக்கிறேன், நானும் கூட்டை படம் எடுத்து வைத்து இருக்கிறேன், காக்கா குச்சி எடுத்து போவதை படம் எடுத்து இருக்கிறேன்.
//நேற்று ஒரு இடத்தில் 100 காக்காய்கள் மதிளில் அமர்ந்திருந்தது. இத்தனை காக்காய்களை நான் பார்த்ததில்லை. அவைகளில் ஒருவர் இறந்தால் இந்தமாதிரி கூடி, குளிக்கும் என்பதைப் படித்திருக்கிறேன்.//
ஆமாம். நானும் பார்த்து இருக்கிறேன். பறந்து கொண்டே இருக்கும், அமர்ந்து சத்தம் கொடுக்கும், குளிக்கும்.
திரும்பவும் அப்பா அம்மாவைப்்பார்க்க வருமா? வியப்பாக இருக்கிறது
பதிலளிநீக்கு//திரும்பவும் அப்பா அம்மாவைப்்பார்க்க வருமா? வியப்பாக இருக்கிறது//
நீக்குஇதுதான் மிகவும் வியப்பான செய்தி.
இறக்கை முலைத்தால் பறந்து போய் விடும் என்றுதான் கேள்வி பட்டு இருக்கிறேன். இந்த செய்தை படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.
அதுவும் குளிர்காலத்தில் என்று படித்தவுடன் மேலும் மகிழ்ச்சி. குளிருக்கு இதமாய் பெற்றோர்களின் அரவணைப்பில் இருக்க வந்து விடும் போல.
உங்கல் கருத்துக்களுக்கு நன்றி.
இப்படியும் ஒரு பறவை.. புதிய செய்தி.. தெரிந்து கொண்டேன்.. அழகான படங்கள்..
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//இப்படியும் ஒரு பறவை.. புதிய செய்தி.. தெரிந்து கொண்டேன்.. அழகான படங்கள்..//
உங்கள் கருத்துக்கு நன்றி.
மறுபடியும் அப்பா அம்மாவுடன் வந்து தங்கும் என்பது வியப்பான செய்தி...
பதிலளிநீக்குமனிதர்கள் இதனை நினைவில் கொள்ள வேண்டும்..
//மறுபடியும் அப்பா அம்மாவுடன் வந்து தங்கும் என்பது வியப்பான செய்தி...
நீக்குமனிதர்கள் இதனை நினைவில் கொள்ள வேண்டும்.//
ஆமாம், வியப்பான செய்திதான். மனிதர்கள் போல பெற்றோர்களை தேடி வருவது மகிழ்ச்சியான செய்திதான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகான பறவை...
பதிலளிநீக்குவியப்பூட்டும் தகவல் அருமை அம்மா...
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான பறவை...
வியப்பூட்டும் தகவல் அருமை அம்மா...//
ஆமாம், அழகான பறவைதான்.
நிறைய வியப்பூட்டும் தகவல்கள.
கொண்ட பறவைதான் .
உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்.
கோமதிக்கா படம் செமையா இருக்கு...கிழக்கு நீலப்பறவை!
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா படம் செமையா இருக்கு...கிழக்கு நீலப்பறவை!//
ஆமாம் கீதா, நீலப்பறவை அழகு.
கிழக்கு நீலப்பறவை பற்றிய தகவல்கள் ஆச்சரியம்! அது அழகாகக் கழுத்தைப் பின்பக்கம் திருப்பிப் பார்க்கிறது. யாரோ நம்மள ஃபோட்டோ எடுத்து தள்ளுறாங்களேன்னு பின்னாடி பார்க்கிறதோ? முகத்தையும் காட்டுவோம்னு!!!
பதிலளிநீக்குகீதா
//கிழக்கு நீலப்பறவை பற்றிய தகவல்கள் ஆச்சரியம்! அது அழகாகக் கழுத்தைப் பின்பக்கம் திருப்பிப் பார்க்கிறது. யாரோ நம்மள ஃபோட்டோ எடுத்து தள்ளுறாங்களேன்னு பின்னாடி பார்க்கிறதோ? முகத்தையும் காட்டுவோம்னு!!!//
நீக்குஆமாம், மிக கவனமான பறவை. பால்கனி (ஸிட் அவுட்) பக்கத்தில் இருக்கும் புதர் செடியில் தான் கூடு கட்டி கொண்டு இருக்கிறது. நான் அமர்வதால் வேறு இடம் தேடிவிடாமல் அங்கு முட்டியிட்டால் பார்க்கலாம். பார்ப்போம் என்ன செய்கிரது என்று.
தூரத்தில் இருந்ததை ஜூம் செய்து எடுத்தவை எல்லாம் அருமையாக வந்திருக்கு.
பதிலளிநீக்குபக்கவாட்டுப் பார்வை, கீழ்ப்பார்வை எல்லா போஸ்களிலும் அழகு. சின்ன பறவை ஆனால் என்ன அழகு! ரொம்பப் பிடித்தது பறவையை. தொட்டுப் பார்த்துத் தடவிக் கொடுக்க வேண்டும் போல இருக்கு. பின்பக்கம் ரொம்ப மிருதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது வெல்வெட் போல!!
முதுகின் இறக்கை கலர் அழகு ...
கீதா
தூரத்தில் இருந்ததை ஜூம் செய்து எடுத்தவை எல்லாம் அருமையாக வந்திருக்கு.//
நீக்குநன்றி.
//பக்கவாட்டுப் பார்வை, கீழ்ப்பார்வை எல்லா போஸ்களிலும் அழகு. சின்ன பறவை ஆனால் என்ன அழகு! ரொம்பப் பிடித்தது பறவையை. தொட்டுப் பார்த்துத் தடவிக் கொடுக்க வேண்டும் போல இருக்கு.
முதுகின் இறக்கை கலர் அழகு ...//
ஆமாம் நம் கையில் வருமா ? வளர்த்தால் வரும்.
பின்பக்கம் ரொம்ப மிருதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது வெல்வெட் போல!!//
ஆமாம், வெல்வெட் போல மிக மிருதுவாக இருக்கும் போல தெரிகிறது.
இறக்கையை விரித்து வைத்திருக்கும் அழகைப் பாருங்க கோமதிக்கா!! விசிறி விரித்து வைத்தது போல!!
பதிலளிநீக்குஓ உணவைப் பிடிக்கத்தான் இப்படியான போஸா!!
கூகுள் படம் - பறவை பறக்கும் போது அதன் வண்ணங்கள் வாவ்!!!
காணொளி - அடை காத்து, முட்டை உடைந்து குஞ்சு அசைவது தெரிகிறது..முட்டையின் வண்ணமுமே அழகாக இருக்கிறது. குஞ்சு வெளியில் வந்ததும் அம்மா பறவை வருகிறது. அம்மா பறவை முட்டையையா சாப்பிடுகிறது?
ஆண் பறவை? வந்து ஒரு பூச்சியைக் கொடுக்கிறது பெண் பறவைக்கு!! செம அழகு. ரசித்துப் பார்த்தேன். பறவையின் சத்தமும் கேட்கிறது. நாம முறுக்கு தட்டையை கருக் முருக் நு கடிப்பது போல அதுவும் காலி முட்டை தோலை கருக் முருக் நு கடிச்சு சாப்பிடும் சத்தமும் கேட்கிறது!! காணொளி பார்த்து வியந்து விட்டேன். ரொம்ப ரசித்துப் பார்த்தேன். நேரம் போவதே தெரியாது இப்படி உயிர்களுடன் நாம் இருந்தால் மனம் மகிழ்வாக இருக்கும்.
கீதா
//இறக்கையை விரித்து வைத்திருக்கும் அழகைப் பாருங்க கோமதிக்கா!! விசிறி விரித்து வைத்தது போல!!//
நீக்குஆமாம், அழகு.
//ஓ உணவைப் பிடிக்கத்தான் இப்படியான போஸா!!//
ஆமாம், சின்ன பறவைக்கு எவ்வளவு சாகஸம்! என்று வியக்க வைக்கிறது.
கூகுள் படம் - பறவை பறக்கும் போது அதன் வண்ணங்கள் வாவ்!!//
பெண் நீலப்பறவை அதன் வண்ணங்க்கள் வேறு அதை காட்டதான் இந்த படத்தை பகிர்ந்தேன்.
//காணொளி - அடை காத்து, முட்டை உடைந்து குஞ்சு அசைவது தெரிகிறது..முட்டையின் வண்ணமுமே அழகாக இருக்கிறது. குஞ்சு வெளியில் வந்ததும் அம்மா பறவை வருகிறது. அம்மா பறவை முட்டையையா சாப்பிடுகிறது?//
முட்டையை சாப்பிடவில்லை, முட்டை ஓட்டை சாப்பிடுகிறது. முட்டையை உடைத்து குஞ்சை வெளியில் கொண்டு வருகிறது.
ஆண் பறவை? வந்து ஒரு பூச்சியைக் கொடுக்கிறது பெண் //பறவைக்கு!! செம அழகு. ரசித்துப் பார்த்தேன். பறவையின் சத்தமும் கேட்கிறது. நாம முறுக்கு தட்டையை கருக் முருக் நு கடிப்பது போல அதுவும் காலி முட்டை தோலை கருக் முருக் நு கடிச்சு சாப்பிடும் சத்தமும் கேட்கிறது!! காணொளி பார்த்து வியந்து விட்டேன். ரொம்ப ரசித்துப் பார்த்தேன். நேரம் போவதே தெரியாது இப்படி உயிர்களுடன் நாம் இருந்தால் மனம் மகிழ்வாக இருக்கும்.//
காணொளியை ரசித்துப்பார்த்தது மகிழ்ச்சி.
இப்படி பறவைகளை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி, நேரமும் போய் விடுகிறது, தனிமை உணர்வும் இல்லை.
குஞ்சுகளுக்கு இரண்டு பறவைகளும் உணவு கொடுப்பது அழகு.//
பதிலளிநீக்குஆமாம்.
//கோடையில் முட்டையிடும் குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து போய் விடும், பின் குளிர்காலத்தில் பெற்றோர்களுடன் அடிக்கடி வந்து தங்குமாம். பழைய முறை படி கட்டிய கூட்டில் தங்குவது இல்லையாம், இப்படி பிற்காலத்தில் மனிதன் அமைத்து கொடுத்த கூட்டில் குளிர்காலத்தில் வந்து தங்கும் என்று சொல்கிறார்கள். இந்த கூடு பாதுகாப்பாக இருப்பதால் என்று நினைக்கிறேன். //
மிகவும் வியப்பான தகவல். ஆமாம் பாதுகாப்பாக இருப்பதால் என்றே தோன்றுகிறது..
உங்கள் மகள் வீட்டில் தோட்டத்தில் கூடு கட்டியிருப்பது மகிழ்வான விஷயம். அப்ப இன்னும் கொஞ்சம் நாட்களில் முட்டை குஞ்சு எல்லாம் இங்கு வரும் நினைக்கிறேன்...
அனைத்தும் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா
கீதா
படங்களையும் தகவல்களையும் ரசித்தேன்
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
நீக்குஅழகான பறவை. அருமையான படங்கள் மற்றும் பல தகவல்கள்! நன்றி. காணொளியை ரசித்தேன். மனிதர் அமைத்த கூடு ஆகையால் கேமராவை மேலே செட் செய்து தெளிவாகப் படமாக்கப்பட்டுள்ளது.
பதிலளிநீக்கு//குளிர்காலத்தில் பெற்றோர்களுடன் அடிக்கடி வந்து தங்குமாம்//
ஆச்சரியம். இது போல சில வகைப் பறவைகளில் வளர்ந்து வெளியேறும் குஞ்சுகள் தாய் தந்தையின் அடுத்த அடை காக்கும் பருவத்தில் வந்து உதவும் என வாசித்திருக்கிறேன். என் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன்.
//அழகான பறவை. அருமையான படங்கள் மற்றும் பல தகவல்கள்! நன்றி. காணொளியை ரசித்தேன். ///
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
//மனிதர் அமைத்த கூடு ஆகையால் கேமராவை மேலே செட் செய்து தெளிவாகப் படமாக்கப்பட்டுள்ளது.//
ஆமாம், மேலே கூகுள் படத்தில் காட்டி இருக்கும் மரக்கூடுதான்.
அதில் தான் காமிரா செட் செய்து எடுத்து இருக்கிறார்கள்.
நாங்கள் மகன் வீட்டில் வாங்கி வைத்தோம், நியூஜெர்சியில் இருக்கும் போது. மதுரை வீட்டுக்கு வீடு போன்ற தோற்றத்தில் வாங்கி வைத்தான், ஆனால் குருவி அதன் வழக்கமான இடத்தில் தான் கூடு கட்டுகிறது.
//ஆச்சரியம். இது போல சில வகைப் பறவைகளில் வளர்ந்து வெளியேறும் குஞ்சுகள் தாய் தந்தையின் அடுத்த அடை காக்கும் பருவத்தில் வந்து உதவும் என வாசித்திருக்கிறேன். என் பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன்.//
ஆச்சிரியமான தகவல்தான். அடை காக்கா உதவுகிறது, நீங்கள் சொன்ன பதிவில்.
குளிர் காலத்தில் தங்கி போகிறது இந்த பறவைகள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.