வியாழன், 25 அக்டோபர், 2018

அன்னாபிஷேகம்

Image may contain: people standing, plant, food and indoor
ஐப்பசி மாதத்தில்  பெளர்ணமியன்று சிவபெருமானுக்கு  அன்னாபிஷேகம் செய்வார்கள்.  இந்த அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டால்  உணவுப் பஞ்சம் ஏற்படாது என்றும் சொல்வார்கள். 

Image may contain: food

No automatic alt text available.

Image may contain: food
நந்திக்கு அருகம்புல் மலை, மற்றும் கத்திரிக்காய் மாலை.

சந்திரனைத் தன் முடியில் சூடியவருக்குச்  சந்திரன் தன் முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பான  அன்னாபிஷேகம் மற்றும் மற்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரத்தில் பார்த்து இருக்கிறேன்.  கூடை கூடையாக வடித்த அன்னத்தை வரிசையாக சிவாச்சாரியார்களும் பக்தர்களும்  ஒருவர் கை மாறி மாறி சிவபெருமான் இருக்கும் இடம் வரை தூக்கிச் செல்வது  பார்க்க அழகு.

இந்த ஆண்டு 2500 எடை கொண்ட பச்சரிசி 6 கொதிகலன் நீராவி அடுப்பில் சமைத்து ஒலைபாயில் ஆறவைத்து  கொண்டு சென்றார்களாம்.


 நன்றி -மாலைமலர் .

கங்கை கொண்ட சோழபுரத்தில் அன்னபிஷேக சாதம் நிறைய இடங்களில் அன்னதானமாக கொடுக்கப்படும். மீதி ஆறு குளங்கள், கிணறுகளில் கரைக்கப்படும்.  நீர் நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் உணவாகும்.
23ம் தேதியே இந்த கோவிலில் அன்னாபிஷேகம் செய்து விட்டார்கள்.

மாயவரத்தில் புனுகீஸ்வரர் கோவிலில் செய்யப்படும் அன்னதானம் இரவில் பூஜைக்குப் பின்  தயிர் சாதமாக கலக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.

இந்தப் பதிவில் இடம்பெற்ற கோவில் மதுரை ஜெயநகர் வெற்றி விநாயகர் கோவிலில் உள்ள  சுந்தேரேஸ்வரர் சொர்ணாம்பிகைக்கு  நடைபெற்ற அன்னாபிஷேகம். இந்தக் கோவிலில் 24ம் தேதி மாலை நடைபெற்றது.


Image may contain: one or more people and people standing
இந்தப் படங்கள் பிரதோஷ சமயம்  எடுத்தது. குருக்களே சிறிய பிரதோஷச் சிலைகளைத் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்து பூஜை செய்து விடுவார். சுற்றி வந்தபின் பிரதோஷநாயகரைக் கீழே வைக்கும் காட்சி. முதல் படத்தில் பிரதோஷ  நாயகர் தெரிவார், சின்ன ரிஷபவாகனத்தின் மேல் எழுந்துள்ள சின்ன அழகான திருவாச்சியுடன் உள்ள சிலை. எலுமிச்சை மாலை, கத்திரிக்காய்மாலையால் அலங்கரித்து இருப்பார்கள் பார்க்கலாம்.

பிரதோஷம் அன்று காய்கறி, அரிசி வாங்கி கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்று சொன்னார் குருக்கள். அரிசி வாங்க பணம் கொடுத்தோம்.

No automatic alt text available.
மாலை 5.30க்கு அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது. 6.30க்கு பெளர்ணமி விளக்கு பூஜை.
 அன்னாபிஷேக பூஜை முடிந்தவுடன்  சாம்பார் சாத பிரசாதம்  கொடுத்தார்கள். 
அனைவருக்கும் எல்லா நலன்களையும் தர வேண்டி வந்தோம்.
                                                            வாழ்க வளமுடன்.

19 கருத்துகள்:

  1. அன்னாபிஷேக பூஜை குறித்த அழகிய படங்களை அளித்தமைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அன்னாபிஷேகம் பற்றிய விளக்கம் அருமை. படங்களை மிகவும் ரசித்தேன்.

    நான், காய்கறிகள், அன்னம் இவற்றை பிறகு, கதம்ப சாதமாக (சாம்பார் போலச் செய்து) மாற்றி பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
      முன்பு அன்னாபிஷேகம் மட்டும் தான் செய்வார்கள்.
      இப்போது அலங்காரமாய் காய்கறிகள், வடை என்று வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
      மறுநாள் காலை கோவிலுக்கு போனால் காய்களை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

      நேற்று கோவிலில் சாம்பார் சாதம் கொடுத்தார்கள் என்று போட்டு இருக்கிறேன் பாருங்கள்.

      நிறைய அரிசி, காய்கறி வந்ததால் அன்னாபிஷேகத்திற்கு போக மீதி சாதம் , காய்கறி அலங்காரத்திற்கு போக மீதியை சாம்பார் செய்து கலந்து பிரசாதம் ஆக்கி வந்தவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அழகு. நான் இதுவரை இதை நேரில் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      ஒரு முறை பாருங்கள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது சிவன் கோவிலில் . எல்லா சிவன் கோவில்களிலும் செய்வார்கள். இப்போது மக்களும் சின்ன கோவில்களில் கூட இந்த விழா சிறப்பாக நடக்க உதவுகிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. எங்கள் வீட்டில் மாமா சிவ பூஜை செய்வார்கள் அவர்களும் ஐப்பசி மாதத்தில் பெளர்ணமியன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள்.
      இப்போது அவர்களின் சிவபூஜையை சாரின் அண்ணா செய்கிறார்கள். அவர்கள் நேற்று அன்னாபிஷேகம் செய்தார்கள். அந்த படத்தையும் இணைத்து இருக்கலாம்.

      நீக்கு
  4. அனைத்துப் படங்களும் அழகு.. இப்படி நான் முன்பு கேள்விப்பட்டதில்லை..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    ஓ! கேள்வி பட்டது இல்லையா?
    இலங்கையில் சிவன் கோவிலில் செய்ய மாட்டார்களா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. >>> நிறைய அரிசி, காய்கறி வந்ததால் அன்னாபிஷேகத்திற்கு போக மீதி சாதம் , காய்கறி அலங்காரத்திற்கு போக மீதியை சாம்பார் செய்து கலந்து பிரசாதம் ஆக்கி வந்தவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்...<<<

    பல கோயில்களிலும் இப்படித்தான் செய்கின்றனர்...

    மூன்றாண்டுகளுக்கு முன் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில்
    அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தில் மூன்றில் ஒரு பங்கை வைத்துக் கொண்டு
    மீதியை தயிர் சாதமாக பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர்..

    அந்த ஒரு பங்கு அன்னத்தினை வாத்ய முழக்கத்துடன் அடியார்கள் சுமந்து வர
    அருகில் வெண்ணாற்றில் விசர்ஜனம் செய்தனர்...

    அப்படி அன்னத்தினைச் சுமந்து செல்லும் பாக்யம் எளியேனுக்கும் கிடைத்தது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      கங்கை கொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம் செய்யும் அன்னம் லாரியில் ஏற்றப்பட்டு பக்கத்து ஊர் கோவில்களுக்கு போகும் அந்த கோவில்களில் இத்தனை மணிக்கு கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வரும் எல்லோரும் பெற்றுக் கொள்ளலாம் என்று பலகையில் எழுதி கோவில் வாசலில் வைத்து இருப்பார்கள். மக்கள் காத்து இருந்து பெற்று செல்வார்கள். கங்கை கொண்ட சோழபுரம் அருகில் நிறைய இடத்தில் இந்த அன்னாத்தால் அன்னதானம் நடக்கும்.

      அந்த ஒரு பங்கு அன்னத்தினை வாத்ய முழக்கத்துடன் அடியார்கள் சுமந்து வர
      அருகில் வெண்ணாற்றில் விசர்ஜனம் செய்தனர்...

      அப்படி அன்னத்தினைச் சுமந்து செல்லும் பாக்யம் எளியேனுக்கும் கிடைத்தது...//

      அப்படியா? மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.



      நீக்கு
  8. அன்னாபிஷேகத்துக்கு அரிசி என்றால் கொடுப்பார்கள் ஆனால் பிடி அரிசி திட்டம் மூலம் அன்னதானம் செய்பவர்கள் எண்ணிக்கை மிகவு குறைவு

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    இப்போது பிடி அரிசி திட்டம் இல்லையென்றாலும் அன்னதானம் கோவில், மற்றும் தனியார் அமைப்புகள் கேட்கும் அன்னதானத்திற்கு மக்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பொதுவாகக் காய்கறிகளை அம்பிகைக்குத் தான் சாகம்பரி அலங்காரத்தில் அலங்கரிப்பார்கள். அன்னாபிஷேகத்தில் காய்கறிகளால் அலங்கரிப்பதை இப்போது தான் பார்க்கிறேன். எல்லாப் படங்களும் அருமையாக உள்ளன. தாமதமான வருகை! ஒரு நாளைக்கு 2 பதிவுகள்னு பார்க்கும்போது சிலருடையது தாமதம் ஆகிறது. ஒரேயடியாய் உட்கார முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    ஆடி வெல்ளிக்கிழமை அம்பிகைக்கு காய்கறி அலங்காரம் உண்டு.
    மாயவரத்தில் இருந்த போது புனுகீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக படம் முன்பு போட்டு இருந்தேன்.
    அங்கும் காய்கறி, வடை , பழங்கள் எல்லாம் வைத்து அலங்காரம் செய்வார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி. உடல் நலம் தான் முக்கியம் பதிவு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. அன்னாபிஷேகம் நேரில் பார்த்ததில்லை. படங்கள் அருமை. தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு