வியாழன், 2 அக்டோபர், 2014

நவராத்திரி வாழ்த்துக்கள்.

 சகலகலாவல்லி மாலை :-

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளம் தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

நாடும் சொற் சுவை பொருட் சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொலோ உளம்கொண்டு
தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

 தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

 பஞ்சு அப்பு, இதம் தரும், செய்ய, பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகலகலாவல்லியே!

சொற்விற்பன்னமும்,  அவதானமும், கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலா வல்லியே!

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்ட மன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே!

                                                          -குமரகுருபரசுவாமிகள்
காமாட்சி அலங்காரம்
கஜலக்ஷ்மி அலங்காரம்

சரஸ்வதி அலங்காரம்

கொலுவில் தேச பிதா, பாரதமாதா, நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள், இந்தியமக்கள்

                           வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம்
                          தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
                                   பாழ்பட்டு நின்ற தாம் ஓர் பாரத தேசம் தன்னை
                          வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!

                           அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
                                                         வாழ்க வளமுடன்.
                                                                   ==========

38 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 2. ’சகலகலாவல்லி மாலை ’

  வெகு அழகாக இன்றைய நாளுக்கு ஏற்றபடி கொடுத்துள்ளது இனிமையோ இனிமை.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

  சகலகலாவல்லி மாலை கூட சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சிவசிதம்பரம் குரல்களில் கேட்டது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  அம்மா
  பாடலும் படங்களும் மனதை கவர்ந்து விட்டது.. பகிர்வுக்கு நன்றி த.ம 1வது வாக்கு

  -நனறி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் என் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் தோழி !

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ரூபன் , வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன். நலமா?
  கால் பூரண நலமா?
  உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. குமரகுருபரரின் பாடல் அருமை. விதம்விதமான அலங்காரத்தில் தேவியின் தரிசனமும் மனதை அள்ளுகிறது.
  இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ரஞ்சனி , வாழ்கவளமுடன்.
  உங்கள் வர்ழ்வுக்கும், கருத்துக்கும் இனிய நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. பாடலும் படங்களும் மனம் கொள்ளை கொள்கின்றன. இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள் மேடம்.

  பதிலளிநீக்கு
 13. சகலகலாவல்லி மாலையும்
  அழகான படங்களுமாக மிக அருமை அக்கா!

  அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. இனிய நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துக்கள். தேசப் பிதா பிறந்த தினத்தன்று அவரையும் நினைத்துப் பதிவிட்டது பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 15. தங்களுக்கு எனது உளங்கனிந்த நவராத்திரி விழா வாழ்த்துக்கள்!
  மலரும் நினைவான உங்கள் கொலுவினில் மறக்காமல் தேசப்பிதா காந்தி மற்றும் இந்திய மக்கள். வாழ்க தேசபக்தி!
  த.ம.2

  பதிலளிநீக்கு
 16. பதிவு படங்களுடன், மிகவும் அருமை கோமதி .உங்களுக்கு எனது இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் இரண்டாவது பின்னூட்டம் மறைந்து இருந்து பின் வெளிபட்டது.
  உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் இனிய நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், இனிய நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி இளமதி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் தி. தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், உளங்கனிந்த வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. அருமை!

  வாழ்த்துகளுக்கு நன்றி.

  எங்கள் வாழ்த்துகளும் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும்!

  கஜலக்ஷ்மி, சூப்பர்!

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. சகலகலாவல்லி மாலை மற்றும் படங்கள் அருமை....

  பதிலளிநீக்கு
 30. படங்களும் பாடல் பகிர்வும் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 31. நான் இப்போது கோவையில். உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 32. சகலகலாவல்லிமாலை சிறியபிராயத்தின் நினைவுமீட்டல்களில் ஒன்றெனக்கு. பலநாள் கழித்து அதை மீட்டிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் மோகன்ஜி, வாழ்க வளமுடன்.
  நலமா? வெகு நாட்கள் ஆயிற்றே!

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 34. தீபாவளி நல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு