வணக்கம். அந்த பறவைகளின் பெயர் Canada goose.
என்னுடைய வலைப்பூவில் பறவைகள் பற்றி எழுதி வருகிறேன். நன்றி.
https://ivansatheesh.blogspot.com/
போவோமா ஊர்கோலம் ! என்ற பதிவில் இந்த பறவைகளை ஒரு ஏரியில் நீந்துவது, கரையேறுவது போட்ட பதிவுக்கு வந்து சொல்லி இருந்தார். அவர் பதிவுகளை படித்தேன். மிக அருமையான பதிவுகள் நேரம் இருக்கும் போது போய் படிக்கலாம். பெங்களூர் வாசி இவர். 2016 புத்தக திருவிழாவில் " சிறந்த சுற்றுச் சூழல் விருது" வாங்கி இருக்கிறார். சுற்று சுற்றுச் சூழல் எழுத்தாளர்.
வாத்துக்கு கால் இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்த காணொளி. அங்கு வந்து இருந்த ஒரு குடும்பத்தினர் ஒலிக்க விட்டு இருந்த பாடல் இந்த காணொளிக்கு பின்னனியாக ஒலிக்கிறது. பாடலை மிக சத்தமாக வைத்து அதிர அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஒரே ஏரி இரு வண்ணங்களில் தெரிகிறது. வானத்தின் நீலம் நீரில் தெரிகிறது, மரத்தின் பசுமை தெரிகிறது.
வெள்ளை வாத்து எப்போதும் மனதை கவரும்.
மரங்களிம் பசுமை நீரில் தெரிகிறது. இடை இடையே வானத்தின் நீலம் தெரிகிறது.
தெளிந்த சுத்தமான ஏரி
குழந்தைகளின் உற்சாக குரலுக்கு அவர்களை நோக்கி விரைந்து வருகிறது.
தனிமையிலே இனிமை காண விரும்புகிறது.அழகான மர ஊஞ்சல் . ஊஞ்சலில் அமர்ந்து ஏரியின் அழகை ரசித்து கொண்டு இருக்கலாம்.
ஏரியின் நடுவே பாட்டு கேட்டுக் கொண்டு இருவரும் உரையாடி கொண்டு மீன் பிடிக்கிறார்கள். கரை ஒரத்தில் ஒரு குடும்பம் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். பிடித்த மீனை கரி அடுப்பில் சமைத்து கொண்டு இருந்தார்கள். பாட்டை போட்டுக் கொண்டு உற்சாக குரல் எழுப்பி பேசி சிரித்து கொண்டு இருந்தார்கள். மூன்று நான்கு குடும்பம் சேர்ந்து வந்து இருந்தார்கள் . இந்த குடும்பங்கள் இல்லையென்றால் இந்த இடம் மிக அமைதி தவழும் இடம். அலைகள் கரையில் மோதும் ஒலியும், பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்கும்.
ஒரு கார் நிறுத்தி கொள்ள 5 டாலர் கொடுக்க வேண்டும். காலை முதல் மாலை வரை இருக்கலாம்.
நாங்கள் 1 மணி நேரம் இருந்தோம். மெல்லிய குளிரும் , காற்றும், காலை இளம் வெயிலும் நன்றாக இருந்தது.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
படங்கள் அழகு. ஏரிக்கரையின் மேலே என்று யாராவது பாடினார்களா?!!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபடங்கள் அழகு//
நன்றி.
//ஏரிக்கரையின் மேலே என்று யாராவது பாடினார்களா?!!//
யாரும் பாடவில்லையே!
ஒற்றைக்கால் தவம்..
பதிலளிநீக்குஇன்னொரு காலில் முள் குத்தி இருக்குமோ! அல்லது அடிகிடி பட்டிருக்குமோ!
ஒற்றைக்காலில் நிறபது பிடிக்கும் போல!
நீக்கு௳துரையில் ஒரு புறா ஒருகாலிலே எப்போது பார்த்தாலும் நிறகும், நான் அதற்கு ஒரு கால்தான் இருக்கு போல என்று நினைத்தேன். அப்புறம் பார்த்தால் ஒரு நாள் இரண்டு காலில் நின்றது. நீங்கள் சொல்வது போல அதற்கு காலில் முள் குத்தி இருக்கலாம்.
முன்பு ஒருவர் வாத்தின் காலில் ஏதோ கொடி சுற்றி மாட்டிக் கொண்டு இருந்ததை எடுத்து விட்டு காப்பாற்றிய காணொளி பார்த்தேன்.
அமைதியாக நீந்துவது போல தோன்றினாலும் நீருக்கு கீழே பார்த்தால் வாத்தின் கால்களின் அயராத உழைப்பு தெரியும்.
பதிலளிநீக்கு//அமைதியாக நீந்துவது போல தோன்றினாலும் நீருக்கு கீழே பார்த்தால் வாத்தின் கால்களின் அயராத உழைப்பு தெரியும்.//
நீக்குஆமாம், நீங்கள் சொல்வது போல அயராத உழைப்பு வேண்டும். அது நீந்தி செல்வதை பார்க்க நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கோ ? உணவு தேடி பல மைல்கள் நீந்த வேண்டும், கால் கடுக்க தவம் இருந்து இரையை தேடவேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅருமையான பதிவு. அழகான படங்கள். நீலக் கலரில் விஸ்தாரமான அந்த ஏரியும், அந்த ஒற்றை காலில் தவமிருக்கும் வாத்தும், பறவைகளும், மிக அழகாக உள்ளன. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல உள்ளது. வெள்ளை வாத்துகளின் படங்கள் கண்களை கவர்கிறது. அனைத்தையும் மீண்டும் ஒரு பெரிதாக்கி நாளை பார்த்து ரசிக்கிறேன். காணொளியும் நாளைக்கு பார்த்து விட்டு நாளை மறுபடி வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஅருமையான பதிவு//
நன்றி.
படங்களை எல்லாம் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வெள்ளை வாத்துக்களை இரண்டு குழந்தைகள் நீண்ட நேரம் ரசித்து பார்த்து மகிழ்ந்து கொண்டு இருந்தது.
நீங்கள் சொன்னது போல அவை நீந்தி செல்வதை பார்த்து கொண்டே இருக்கலாம்.
மெதுவா வாங்க .
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான படங்கள்.இயற்கையின் அழகை மிக அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள் வண்ண மாற்றம் உட்பட. எல்லாப் படங்களும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன. காணொளிகளும் நன்றாக வந்திருக்கின்றன. படம் பிடிப்பதில் திறமை மிகுந்தவராக ஆகி வருகிறீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான படங்கள்.இயற்கையின் அழகை மிக அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள் வண்ண மாற்றம் உட்பட. எல்லாப் படங்களும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன.//
நன்றி. ஏரிகள் எல்லாம் அழகாய் இருக்கிறது. வண்ண மாற்றம் வியப்பை தருகிறது.
வானம் நீலக்கலரில் இருப்பது ஏரியில் பிரதிபலிப்பது பார்க்கும் போது கடல் போல காட்சி அளிப்பதை பார்க்கலாம்.
இன்னும் ஏரிகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகாய் காட்சி அளிக்கிறது.
காணொளிகள், படங்கள் எல்லாம் பார்த்து பாராட்டி கருத்து சொன்னதற்கு , மகிழ்ச்சி, நன்றி.
ஒரு காலில் அடிபட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது... ஆனாலும் அழகு...
பதிலளிநீக்குதண்ணீரில் விழும் நிழல் குறித்த படங்கள் அனைத்தும் அருமை...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது போல அடிபட்டு இருக்கலாம், அல்லது கொக்கு போல ஒற்றை கால் தவம் இதுவும் இருக்குமோ ! என்று நினைக்க தோன்றுகிறது.
தண்ணீரில் விழும் படங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் மிக மிக அழகு. அதிலும் அந்தப் பறவையின் படம்... ஆஹா
பதிலளிநீக்குசலனமில்லாத ஏரியில், யார் வேணுமானாலும் குளிக்க முடியுமா?
வணக்கம் நெல்லைத் தமிழன் வாழ்க வளமுடன்
நீக்கு//சலனமில்லாத ஏரியில், யார் வேணுமானாலும் குளிக்க முடியுமா?//
எந்த ஏரியிலும் யாரும் குளிக்கவில்லை. இங்கு எல்லாம் மீன் பிடிக்கிறார்கள்.
படங்கள் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கோமதிக்கா படங்கள் அட்டகாசம்!!! ஹையோ பார்த்து முடியலை.
பதிலளிநீக்குஅதுவும் நீலம் மற்றும் பசுமை நிறத்தண்ணீர் (ஏரியின் அடி பிரதிபலிப்பு) என்று அழகோ அழகு. அந்தப் பசுமை நிறத்தில் வெள்ளை வாத்துகள் செம அழகு
ரொம்ப அழகான படங்கள்
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா படங்கள் அட்டகாசம்!!! ஹையோ பார்த்து முடியலை.//
நன்றி.
படங்களை எல்லாம் ரசித்து பார்த்தது மகிழ்ச்சி.
மிக அழகான, தெளிவான படங்கள். நேரில் பார்ப்பது போல இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அந்த கனடா வாத்து ஒற்றைக்காலில்....ஒற்றைக்காலில் காத்திருக்குமாம் கொக்கு என்றால் இங்கு வாத்தும்!!! ஆழமில்லாத இடத்தில் அது இருப்பதால் நடக்க நினைத்திருக்கும் அப்ப மீன் அல்லது ஏதாச்சும் உணவு அதன் கண்ணில் பட்டிருக்கும் எடுத்த காலை கீழ வைச்சுட்டா தண்ணீர் சலனமுற்று மீன் அல்லது உணவு தப்பிச்சுடுமோன்னு அப்படியே ஒற்றைக்காலில் நிற்கிறதா இருக்குமோ?!!!!
பதிலளிநீக்கு(ஹப்பா இந்த கீதா என்னா விளக்கம் இதுக்கு...என்னவோ வாத்தோட மனச படிச்சா மாதிரி!!! ஹாஹாஅஹாஹா)
கீதா
ஒற்றைக்காலில் காத்திருக்குமாம் கொக்கு என்றால் இங்கு வாத்தும்!!!//
நீக்குகொக்கு போலவே இதுவும் ஒற்றைகால் தவம் இருப்பது வியப்புதான்.
//ஆழமில்லாத இடத்தில் அது இருப்பதால் நடக்க நினைத்திருக்கும் அப்ப மீன் அல்லது
ஏதாச்சும் உணவு அதன் கண்ணில் பட்டிருக்கும்?/
இருக்கலாம்.
வாத்தோட மனச படிச்ச மாதிரி விளக்கம் அருமை.
நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.
அக்கா மற்ற கருத்துகள் வந்தனவா?
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் மனதைக் கட்டிப் போட்டுவிட்டது. என்ன ஒரு அழகு
காணொளிகளும் பார்த்தேன் ரொம்ப நல்லாருக்கு
கீதா
போட்ட கருத்துக்கள் எல்லாம் வந்து விட்டன.
நீக்குபடங்கள், காணொளிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
பகிர்வும் படங்களும் மனதைக் கவருகின்றன
பதிலளிநீக்குநன்றி சகோதரி
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் வெகு சிறப்பாக எடுத்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகாணொளிகளும் கண்டேன். மிகவும் அழகான இடம்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் வெகு சிறப்பாக எடுத்து இருக்கிறீர்கள்.//
நன்றி.
காணொளிகள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
அழகான இடம்தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ரம்மியமான சூழல். படங்களும் பகிர்வும் மிக அருமை. சதீஸ் அவர்களது வலைப்பூ பறவைகளின் பெயர்கள் அறிய எனக்கு உதவக் கூடும். பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், ரம்மியாமான் சூழல்தான்.
//படங்களும் பகிர்வும் மிக அருமை.//
நன்றி.
//சதீஸ் அவர்களது வலைப்பூ பறவைகளின் பெயர்கள் அறிய எனக்கு உதவக் கூடும். பார்க்கிறேன்.//
ஆமாம், உங்களுக்கு உதவகூடும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நன்றி. சிட்டுக்குருவிகள் பற்றியும் எழுதியிருக்கிறேன்.
நீக்குhttps://ivansatheesh.blogspot.com/2016/03/20.html?m=1
வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
நீக்குவீட்டுக்கு வந்த பறவைகள், தோட்டத்திற்கு வந்த பற்வைகள் என்று சிட்டுக்குருவிகளை படம் எடுத்து போட்டு நானும் பதிவுகளில் பகிர்ந்து இருக்கிறேன் நிறைய.
உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.
தகவலுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது படங்களை நன்கு பெரிதாக்கி பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு படங்களையும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். காணொளிகளும் பார்த்தேன். எல்லாமே அழகு. ஏரியின் அழகும் சுற்றிலும் இயற்கையின் அழகும் மனதை அள்ளுகிறது.
கடல் மாதிரி விரிந்து இருக்கும் ஏரியின் நீல நிற அழகை. எப்போதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல உள்ளது. அந்த வாத்துவின் ஒற்றைக்கால் தவ படங்களும், அது நீரைப் பருகிய போது, வரிவரியாக வட்டமாக எழுந்த நீரின் வர்ண ஜாலங்களும் பார்க்க ரம்மியமாக உள்ளது. வெள்ளை நிற வாத்துக்கள் ஜோடியாக அங்குமிங்கும் சென்றபடி இருக்கின்றனவே.. இதையெல்லாம் நேரில் கண்ட பின் அங்கிருந்து கிளம்பவே மனசு வராது எனத் தோன்றுகிறது. ஊஞ்சலில் ஆடியபடி நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருக்கலாம் . ஆனால், அந்த ஊஞ்சலில் இடம் பிடிக்க யாரேனும் வந்து விடுவார்களே...! எல்லா காட்சிகளும் கண்களுக்கு நல்ல விருந்து.
உங்களுக்கு பதில் கருத்து தந்த சதீஸ் என்பவரை இப்போது இரண்டு நாட்களாக எ. பியிலும் பார்க்கிறேன். அவர் பதிவுகளுக்கு கொஞ்சம் சென்று பார்த்தேன். பறவைகளின் மேல் நன்றாக கவிதைகள் எழுதுகிறார். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குமீண்டும் பதிவை படித்து, பார்த்து கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி.
//ஏரியின் அழகும் சுற்றிலும் இயற்கையின் அழகும் மனதை அள்ளுகிறது.//
ஆமாம்.
நீங்கள் சொல்வது போல கடல் மாதிரி ஏரியும் அதன அழகையும் வாத்துக்களையும் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தான் இருந்தது.
ஊஞ்சலில் சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கைப்பார்த்தோம். இரண்டு குடும்பம் தான் இருந்தோம். அவர்கள் பாட்டை போட்டு கொண்டு சமைத்து கொண்டே பேசி மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள் உறவினர்களுடன். அதனால் ஊஞ்சலுக்கு போட்டி இல்லை.
ஆமாம், கொஞ்ச நாட்களாக பறவைகளை பற்றி போடும் போது வந்து கருத்து சொல்லி அவர் சுட்டி கொடுத்தார்.
நானும் போய் பார்த்தேன். பறவை கவிதை , அப்புறம் சுற்று சூழல் பற்றியும் கட்டுரைகள் போட்டு இருக்கிறார்.
எ.பியிலும் நான் பார்த்தேன்.
நீங்கள் சொல்வது போல எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
மீள்வருகைக்கு நன்றி.