திங்கள், 15 நவம்பர், 2021

டோம்ப்ஸ்டோன் கோர்ட்ஹவுஸ் மியூசியம்

அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக போட்டு வந்தேன். இடையில் வேறு பதிவுகள்  போட்டதால் தொடர முடியவில்லை மீண்டும் தொடரலாம்  .

இந்த பதிவில் கோர்ட்ஹவுஸ் மியுசியத்தில்  பார்த்த காட்சிகளின் பகிர்வு.

மிக அழகான சிவப்பு நிறக்கட்டிடம். விக்டோரியன் பாணியில் வடிவமைக்கப்பட்ட இரண்டு அடுக்கு நீதி மன்றம்.  வரலாற்று சிறப்பு மிக்க  வீடு

பழமையும் , புதுமையும்

நகர் வலம்

ன்றும் , அன்றும்

துப்பாக்கி சண்டை

இதற்கு முன்பு போட்ட டோம்ப்ஸ்டோன் பதிவுகள்


சாட்டின் துணியில் அழகான மலர் கொத்து  கைபின்னல் வேலைப்பாடு
நாடக கலைஞர்களின் உடை

பழைய காலத்து ஆயுதங்கள், அதை எடுத்துப் போகும் பெட்டகம்
பழைய காலத்து ஆடைகள் , வித்தியாசமான நாற்காலி

அழகான உடைகள்
அழகான அலமாரி
பழைய காலத்து கண்ணாடி அலமாரி, அதில் பீங்கான் பாத்திரங்கள்

பழைய காலத்து  வெள்ளி பாத்திரங்கள்
ழகான சின்ன ஜாடிகள்,  அழகான கைபைகள்

தலைக்கு வைக்கும் கிளிப்புகள் , கொண்டை ஊசிகள், கையுரைகள், கவுனின் மடிப்பு, பெண்ணின் கால்
தொப்பி, பழைய வாட்ச், மடக்கு கத்தி, சிகரட் லைட்டர்
அந்தக்காலத்து பொம்மைகள், உடைகள்

பொம்மைக்கு அழகாய்  உடை தைத்து போட்டு இருக்கிறார்கள். அந்தக்காலத்தில் குழந்தை விளையாடிய பொருட்கள்

அழகான பின்னல் வேலைப்பாடு
கைவேலைப் பாடு அழகான பின்னல்கள் 

வேலிகளுக்கு பயன்படுத்திய முள் வேலிகள் வித விதமாக  காட்சி படுத்தி இருக்கிறார்கள். 

மேலும்  அங்கு பார்த்தவைகளை அடுத்த பதிவில்  பார்க்கலாம்.
 

வாழக வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

--------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

 1. அழகிய பாடங்கள். வித்தியாசமான படங்கள்... அந்த நாற்காலியில் எப்படி அமர்வார்கள்?!! எல்லாப் படங்களும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   உயரமான ஈஸிசேர் போல தானே இருக்கிறது நன்றாக அமரலாம் ஸ்ரீராம்., இரண்டு பக்கம் கைபிடி வேறு இருக்கிறது. முதுகுக்கு சாய்வு இருக்கிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. அன்பின் கோமதிமா,

  வாழ்க வளமுடன்.
  எத்தனை அருமையான படங்கள். வெகு கச்சிதமாகப்
  படம் எடுத்திருக்கிறீர்கள்.

  வித விதமான உடைகள். இரவு உடைகள்.
  தலை அலங்காரம்,
  அந்தப் பெரிய நாற்காலி எல்லாமே அதிசயிக்க
  வைக்கின்றன.
  நாற்காலியில் உட்கார்ந்த படியே தூங்கி விடுவாரளோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //எத்தனை அருமையான படங்கள். வெகு கச்சிதமாகப்
   படம் எடுத்திருக்கிறீர்கள்.//

   நன்றி அக்கா.
   வித விதமான பொருட்கள் அந்தக்கால பொருட்கள் என்று பார்ப்பது வியப்பை
   தந்தது.
   பெரிய நாற்காலி நீங்கள் சொல்வது போல் கால்களை நீட்டிக் கொண்டு தூங்கலாம்தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 3. புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.

  உடைகள், நாற்காலி, பலவித சாமான்கள்... அந்தக் காலத்தைக் கண்ணில் கொண்டுவருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   இந்த ஊரைப்பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது.

   //உடைகள், நாற்காலி, பலவித சாமான்கள்... அந்தக் காலத்தைக் கண்ணில் கொண்டுவருகிறது//

   ஆமாம், இன்னும் வரும் அடுத்த பதிவில் அந்தக்கால பொருட்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 4. அழகான படங்கள். பாரம்பரியமான பொருட்களின் அணிவகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   பாரம்பரிய பொருட்களை பாதுகாத்து வைத்து இருப்பது பார்க்க நன்றாக இருந்தது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. அழகான படங்கள் எடுத்த விதம் மிகவும் அருமை சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள். எப்போதும் ஒவ்வொரு படத்தையும் பெரிதாக்கி பார்த்து ரசிப்பேன். ஆனால், இன்று இயலவில்லை. ஒவ்வொன்றையும் தொட்டால் பழைய பதிவுகள்தாம் வருகின்றன. பெரிய மரபீரோக்கள் பழைய வெள்ளி, கண்ணாடி சாமான்கள், உடைகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைகள், பொம்மைகள் என அனைத்தும் அழகாக உள்ளது. இவை அனைத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருபவர்களுக்கு நன்றி. மேலும் இதன் தொடர்ச்சியாக அடுத்தப் பதிவையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   //பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள்.//

   நன்றி கமலா.


   //எப்போதும் ஒவ்வொரு படத்தையும் பெரிதாக்கி பார்த்து ரசிப்பேன். ஆனால், இன்று இயலவில்லை. //

   என்ன காரணம் தெரியவில்லையே!

   பாதுகாத்து பத்திரபடுத்தி காட்சி பொருளாக வைத்து இருப்பவர்களை பாராட்ட வேண்டும்.

   சுற்றுலா வரும்மக்களால் அவர்களுக்கு பொருள் ஈட்டி தருகிறது .

   தொடர்வதற்கும், கருத்துக்கும் நன்றி.


   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 8. அழகான பொருள்களை மிக அழகாக படமெடுத்திருக்கிறீர்கள். சாதாரணமாக அருங்காட்சியகங்களில் புகைப்படமெடுக்க அனுமதிக்க மாட்டார்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்க்டேஷ்வரன், வாழ்க் வளமுடன்

   //அழகான பொருள்களை மிக அழகாக படமெடுத்திருக்கிறீர்கள்.//

   நன்றி.

   //சாதாரணமாக அருங்காட்சியகங்களில் புகைப்படமெடுக்க அனுமதிக்க மாட்டார்களே?//

   புகைப்படம் எடுக்க வேண்டாம் என அறிவுப்பு இல்லை. நான் எடுத்த போது யாரும் தடுக்கவில்லை.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 9. கோமதிக்கா படங்கள் எல்லாம் செம.

  பொம்மைகளுக்கான உடைகள், க்ளிப்புகள் கண்ணாடி வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் மனதைக் கவர்கின்றன.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
   வந்து விட்டீர்களா ஊருக்கு?
   நலமா?

   பொம்மைகளுக்கான உடைகள், க்ளிப்புகள் கண்ணாடி வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் மனதைக் கவர்கின்றன.

   மனதை கவர்ந்தது அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 10. அரிவாள்மனை போன்று மடக்கு கத்தி விரித்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  அந்த நாற்காலியில் நான் அமர்ந்தால் கால் எட்டவே எட்டாது ஹாஹாஹா...மட்டுமல்ல நான் படுத்துவிடலாம் போல!!!

  அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அரிவாள்மனை போன்று மடக்கு கத்தி விரித்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.//

   அரிவாள் போன்ற மடக்கு கத்தி. அவர்களுக்கு கீழே அமர்ந்து வெட்டும் அரிவாள்மனி பழக்கம் இருக்காது.


   //அந்த நாற்காலியில் நான் அமர்ந்தால் கால் எட்டவே எட்டாது ஹாஹாஹா...மட்டுமல்ல நான் படுத்துவிடலாம் போல!!!//

   நமக்கு படுத்துக் கொள்ள வசதிதான்.
   அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


   நீக்கு
 11. சுவாரஸ்யமான தொகுப்பு. பழைய வெள்ளிப் பாத்திரங்கள் அருமை. நமது வழக்கத்திலும் இப்போது உபயோகிப்பது அரிதாகி வருகிற பல வகை சாமான்கள் இப்படி உண்டு. வீட்டிலேயே கூட பார்வைக்கு வைக்கலாம் :) .

  பதிலளிநீக்கு
 12. அந்தச் சாய்வு நாற்காலியைப் பார்த்தால் உடனே படுத்துக்கச் சொல்கிறதே! நன்றாய்க் காலை நீட்டிக்கொண்டு இந்த மாதிரிப் படுத்துக் கொள்ளணும் போல் இருக்கு. அந்தக் காலத்து ஆடைகள், ஆபரணங்கள், அழகுசாதனப் பொருட்கள் அனைத்தும் அருமை. எந்தக் காலமாக இருந்தாலும் மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் தவற மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 13. வெள்ளிசாமான்கள் கறுத்துப் போயிருந்தாலும் எல்லாம் பெரியவையாக இருக்கின்றன. மாதிரி முள்வேலிகள், குழந்தை ஆடைகள், கைவேலைப்பாடுகள் எல்லாமும் நன்றாக இருக்கின்றன. எங்களுக்கும் ரசிக்கக் கொடுப்பதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   வெள்ளிசாமான்கள் பெரிதாக இருப்பது வியப்பு இல்லை, அங்கு வெள்ளி சுரங்கம் இருந்தது. கை வேலைபாடுகள் இத்தனை காலமாக இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

   நீங்கள் எல்லோரும் ரசித்து பார்த்து கருத்து சொல்வதால் எனக்கு பகிரும் ஆசை வருகிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. பதில்கள்
  1. வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு