வியாழன், 18 நவம்பர், 2021

டோம்ப்ஸ்டோன் கோர்ட்ஹவுஸ் மியூசியம் பகுதி -2

 

அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக போட்டு வந்தேன். இடையில் வேறு பதிவுகள்  போட்டதால் தொடர முடியவில்லை மீண்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.

திங்கள் அன்று போட்ட  பதிவில் கோர்ட்ஹவுஸ் மியூசியத்தில்  பார்த்த காட்சிகளை பகிர்ந்து இருந்தேன், அதன் தொடர்ச்சி இந்த பதிவு.

கடந்த காலத்தைச் சொல்லும் கண்காட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.


                           பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்கள்.
மருத்துவர் பற்றிய செய்தியுடன் அவர் பயன்படுத்திய பொருட்கள் இருக்கிறது.


இந்த சலூன் மிகவும் பேர் பெற்றது வரலாறு இருக்கிறது

பெரிது செய்து படித்து பாருங்கள் நிறைய விஷயங்கள் இருக்கிறது

பழைய காலத்து காமிரா
பழைய காலத்து கடிகார கூடு, பீங்கான் பாத்திரம், இரண்டு பக்கம் கைபிடி வைத்த பாத்திரம்,  பாட்டில், வித விதமான் இஸ்திரி பெட்டிகள்
வித்தியாசமான  இஸ்திரி பெட்டி

மது பாட்டில்கள்
இசை தட்டுக்கள்
 கிராமபோன் , சாவி கொடுக்கும் கருவி வலது பக்கம் இருக்கிறது. மூடி வைத்துக் கொள்ள உயரமான அழகான பெட்டிக்குள் இருக்கிறது.

                                                          பியானோ


இந்த வாத்தியத்தை வாசித்த இசைக்குழுவினர்
பழைய காலத்து வண்டிகள்



வெள்ளிச்சுரங்ககத்தில்  பணி செய்த போது வைத்து இருந்த விளக்குகள்.













மேலும் படங்கள் அடுத்த பதிவில்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
-------------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. மருத்துவரின் உபகரணங்களை பார்க்கும்போது மெக்கானிக் நினைவுக்கு வருகிறார்! இவர் உடலுக்கு மெக்கானிக்!

    சலூனில் என்ன வரலாறு இருக்க முடியும் என்று யோசிக்கிறேன்!


    பழைய காலத்து கேமிரா... விர்ர்ர்... டக் என்று படம் எடுக்கும் யந்திரம்!

    இஸ்திரிப்பெட்டியில் இணைந்துள்ள பாய்லர்!!

    இசைத்தட்டுகளை டாக்கிங் மெஷின் என்று போட்டிருக்கிறார்கள்.. நம் மதுரைப்பக்கம் பாட்டு படிப்பது போல!


    அதென்ன கோவில் மணி போல ஒன்று? மணியேதானா?

    அனைத்த்துப் படங்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மருத்துவரின் உபகரணங்களை பார்க்கும்போது மெக்கானிக் நினைவுக்கு வருகிறார்! இவர் உடலுக்கு மெக்கானிக்!//

      ஆமாம்.

      //சலூனில் என்ன வரலாறு இருக்க முடியும் என்று யோசிக்கிறேன்!//

      துப்பாக்கி சண்டை பதிவில் இந்த சலூன் மேல் தளத்திலும் கீழ் தளத்தில் மதுபான கடையும் இருக்கும். இங்கு சண்டை நடக்கும் 30 நிமிடம். என்று போட்டு இருந்தேன் அல்லவா? அதில் முன் பகுதி மதுபாட்டில்கள் இருந்த முன் பகுதி மட்டுமே மிச்சம் இருந்த கதையை சொல்கிறது. போனில் பார்த்தால் அதில் போட்டு இருப்பதை படிக்கலாம்.

      //அதென்ன கோவில் மணி போல ஒன்று? மணியேதானா?//

      மணியே தான்.இரண்டு விதமான மணி இருக்கிறது. ஒன்று சக்கரம் சுழலும் அடித்தால். இன்னொன்று கட்டைகளில் இணைக்கப்பட்டது.

      படங்களை எல்லாம் ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.







      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      //ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது...//

      நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
  3. அழகாக இருக்கிறது ஒவ்வொரு படங்களும் பழமையை மறக்காத நாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி,

      //அழகாக இருக்கிறது ஒவ்வொரு படங்களும் பழமையை மறக்காத நாடு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. கடைசிப் படங்கள் டீ ஜக் போல இருக்கிறதே அடியில் அடுப்பு ஜக்கில் தண்ணீர் வைத்து காபி அல்லது டீ போடுவார்கள் போல கூடவே கப் இருக்கிறதே...

    அடுத்து அண்டா குண்டா எல்லாம்!!! ஹாஹாஹா சாக்கோல் போட்டு சூடு செய்யும்படி ஒரு குண்டான் இருக்கிறது போல...சாமான் வைத்து தள்ளும் வண்டியோ அல்லது குப்பைகள் போட்டுத் தள்ளும் வண்டியோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      கடசி படம் டீ ஜக் தான் அது எடுத்து செல்ல வசதியாக தூக்கி செல்ல அமைத்து இருக்கிறார்கள். அடியில் இருப்பது அடுப்பு அல்ல. கைபேசியில் பார்த்தால் அதை ஜூம் செய்து பார்த்தால் தெரியும்.அதை மியூசியத்திற்கு நங்கொடை அளித்தவர் பேர் கீழே போட்டு இருக்கிறது. அது சுத்தமான வெள்ளியில் செய்யப்பட்டதாம்.

      எல்லாம் கனமான இரும்பு பாத்திரங்கள். வெள்ளி சுரங்கத்திற்கு பயன்பட்டு இருக்கலாம். வெள்ளியை வெட்டி எடுத்து வர பயன்படுத்த பட்ட வண்டியாக இருக்கலாம்.

      நீக்கு
  5. எவ்வளவு பெரிய மணி செம வெயிட் இருக்கும் போல...

    டோம்ப்ஸ்டோனை வாழும் இடமாகக் கொள்ள பலர் விரும்பவில்லை போலும் அப்படித்தானே அந்த எழுத்து ஃபோட்டோ சொல்கிறது இல்லையா? அது கொஞ்சம் சரியாகப் புரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு பெரிய மணி செம வெயிட் இருக்கும் போல.//
      ஆமாம்.


      //டோம்ப்ஸ்டோனை வாழும் இடமாகக் கொள்ள பலர் விரும்பவில்லை போலும் அப்படித்தானே அந்த எழுத்து ஃபோட்டோ சொல்கிறது இல்லையா? அது கொஞ்சம் சரியாகப் புரியவில்லை.//

      நிறைய காரணங்கள் கீதா. நீங்கள் டோம்ப்ஸ்டோன் ஊரைப்பற்றி படித்தால் தெரியும்.

      பூர்வ குடிகள் பல்வேறு நாடுகளுக்கு பல வேலைகள் செய்ய போய் விட்டார்கள்.


      நீக்கு
  6. அதற்கு மேலே உள்ள படங்களின் எழுத்துகள் வாசிக்க முடியலை கோமதிக்கா..பரவாயில்லை

    சைக்கிள் வண்டிகள் வித்தியாசமாக இருக்கிறது அது போல இசைக்கருவிகள்

    ஏதோ சோதனைக்கூடம் போல இருக்கிறது ஒன்று

    டாக்கிங்க் மெஷின் என்பது இசைத்தட்டைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் போலும் அதில் பேசிப் பதிவார்கள் போலும் ஒரு பக்கம் இருபக்கம் என்றும் இருக்கிறதே மாற்றிப் போட்டும் பதியலாம் போலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பக்கம் முடிந்துவிட்டது என்பதை எப்படி அறிவார்கள் என்று தெரியவில்லை..

    வித்தியாசமான இஸ்திரி பெட்டி. இப்போதும் கூடப் பயன்படும் என்று நினைக்கிறேன். அதில் சாக்கோல் போட்டால் அப்பொது பாய்லர் போல அது பயன்பட்டிருக்கும்...

    ரொம்ப அழகாக இருக்கிறதி இஸ்திரிப் பெட்டி

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சைக்கிள் வண்டிகள் வித்தியாசமாக இருக்கிறது அது போல இசைக்கருவிகள்//
      ஆமாம் நிறைய வித்தியாசமாக இருக்கிறது.

      ஏதோ சோதனைக்கூடம் போல இருக்கிறது ஒன்று//

      மருந்து பாட்டில்கள் , நெருப்பு புகையை வெளியேற்றும் அந்தக்கால சிமினி.இருக்கிறது அந்த படத்தில்.


      //டாக்கிங்க் மெஷின் என்பது இசைத்தட்டைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் போலும் அதில் பேசிப் பதிவார்கள் போலும் ஒரு பக்கம் இருபக்கம் என்றும் இருக்கிறதே மாற்றிப் போட்டும் பதியலாம் போலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பக்கம் முடிந்துவிட்டது என்பதை எப்படி அறிவார்கள் என்று தெரியவில்லை..//

      கீழே இரண்டு பேட்டரி கட்டைகள் போல இருக்கிறது. பதிவு செய்வது என்று போட்டு இருக்கிறது.


      //வித்தியாசமான இஸ்திரி பெட்டி. இப்போதும் கூடப் பயன்படும் என்று நினைக்கிறேன். அதில் சாக்கோல் போட்டால் அப்பொது பாய்லர் போல அது பயன்பட்டிருக்கும்...//

      ஆமாம்.
      அனைத்தையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.



      நீக்கு
  7. கேமரா வித்தியாசமாக அழகாகவும் இருக்கு

    மருத்துவரின் உபகரணங்கள் எல்லாம் ஏதோ வண்டி மெக்கானிக் ஷாப் போல இருக்கிறது!!!

    எல்லாப்படங்களும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கேமரா வித்தியாசமாக அழகாகவும் இருக்கு//

      பழையகாலத்து காமிரா அப்படித்தானே இருக்கும்.

      //மருத்துவரின் உபகரணங்கள் எல்லாம் ஏதோ வண்டி மெக்கானிக் ஷாப் போல இருக்கிறது!!!//

      அவரும் உடலை செப்பனிடுதல் தானே!
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  8. பழைய கேமரா உட்பட அனைத்தும் அருமை. மிகக் கவனமாகக் காட்சிப் படுத்திப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      உங்களை பழைய காமிரா கவர்ந்து விட்டது!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய பதிவிலும் ஒவ்வொரு படங்களும் அழகாக உள்ளது. பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்கள், மருத்துவர் உபயோகித்த உபகரணங்கள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.

    பழைய கால கேமிரா, அந்த கால பெண்டுலம் நகரும் மாதிரி அமைப்புள்ள கடிகாரம் எல்லாமே நன்றாக உள்ளது.

    இஸ்திரி பெட்டி வித்தியாசமாக இருக்கிறது. அருகில் உள்ள பாத்திரத்தில் நீர் நிரப்பினால் தானே தெளித்து இஸ்திரி செய்யுமோ ? நல்ல கலை நுணுக்கம்.

    இசைக்கருவிகள், வெள்ளிச் சுரங்கங்கத்தில் பயன்படும் விளக்குகள், வித்தியாசமான மணி, என அனைத்துப் பொருட்களும் கலை ஆர்வத்தோடு உருவாக்கப்பட்டதாக உள்ளன. ரசித்துப் பார்த்தேன். தொடர்ந்து வரும் கலை பொக்கிஷங்களை காணவும் ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //இன்றைய பதிவிலும் ஒவ்வொரு படங்களும் அழகாக உள்ளது.//

      ஆமாம், அனைத்து பொருட்களும் அழகு.
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      ஒவ்வொன்றும் கலைநுணக்கத்துடன் வடித்து இருக்கிறார்கள். மியூசியத்திற்கு அதை நன் கொடையாக அளித்து மகிழ்ந்து இருக்கிறார்கள்.

      உங்கள் மகன் மருமகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
      ஆசிகள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. மிக அழகான படங்கள். பெளதீக தராசு, ரசாயன குடுவைகள் போல இருப்பவை என்ன என்று தெரியவில்லை. சோதனைச் சாலை சாமான்களா?
    மிகவும் பெரிதாக இருக்கும் இஸ்திரி பெட்டி போர்வைகள், கம்பளிகள் போன்றவை இஸ்திரி செய்வதற்காக இருக்குமோ?
    கடைசியில் இருக்கும் மெகா சைஸ் கோப்பை மிரட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      மருந்து குப்பிகள், பெளதீக தராசு மருந்து பொடிகள் அளந்து கொடுக்க .

      //மிகவும் பெரிதாக இருக்கும் இஸ்திரி பெட்டி போர்வைகள், கம்பளிகள் போன்றவை இஸ்திரி செய்வதற்காக இருக்குமோ?//

      இருக்கலாம்.


      //கடைசியில் இருக்கும் மெகா சைஸ் கோப்பை மிரட்டுகிறது.//

      மிரட்டி விட்டதா!

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. எங்கள் பிளாக் தவிர்த்த ஏனைய தளங்களுக்கு வருவதற்கு இயலவில்லை.. மன்னிக்கவும்..

    15 நாட்களுக்கும் மேலாக வாட்டி எடுத்த காய்ச்சல் இப்போது இல்லை.. ஆயினும் சளித் தொல்லை இன்னும் தீரவில்லை.. பதிவின் வழி தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //எங்கள் பிளாக் தவிர்த்த ஏனைய தளங்களுக்கு வருவதற்கு இயலவில்லை.. மன்னிக்கவும்..//

      பரவாயில்லை.அங்கு சந்தித்து நலம் விசாரித்து கொள்கிறோம்.

      இப்போது நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      சுக்கு காப்பி குடிங்க.உடலநலம் சரியாகிவிடும் விரைவில்.


      நீக்கு
  12. நல்ல படங்கள். சரியான வரலாற்றுச் சின்னங்களை மிக அருமையாகப் பாதுகாக்கின்றனர். அந்தக் காலத்துப் பொருட்களைப் பார்க்கையில் வியப்பும் ஆச்சரியமுமாக உள்ளது. மருத்துவ உபகரணங்களும் அபாரம். மணி எத்தனை பெரிது? இரண்டும் ஒரே மணியா? வெவ்வேறா? கடைசியில் இப்போதைய காஃபி மேக்கர் போல் அந்தக் காலத்துக் காஃபி மேக்கரோ? எத்தனை விதமான இஸ்திரிப் பெட்டிகள்! இந்த மாதிரி இடங்கள் எல்லாம் நீங்கள் போய்ப் பார்த்துச் சொல்வதால் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      ஆமாம், வரலாற்று சின்னங்களை அருமையாக பாதுகாக்கின்றனர்.
      இரண்டு மணியும் வேறு வேறு.

      காப்பி சேகரித்து வைத்து விருந்தில் பயன்படுத்தும் பாத்திரம். வித விதமான பொருட்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
      நம் ஊர் மியூசியத்தில் படம் எடுக்க விட மாட்டார்கள், அங்கும் வியக்க வைக்கும் பொருடகள் காட்சியில் இருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      ஒரே சமயத்தில் அனைத்து பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி , நன்றி.

      நீக்கு
  13. மருத்துவ உபகரணங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

    அன்றைய உபகரணங்கள் அனைத்தும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆமாம், மருத்துவ உபகரணங்கள் ஆச்சிரியப்பட வைத்தது உண்மை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு