செவ்வாய், 15 நவம்பர், 2016

நிலவே ! நிலவே !

இரவு 9.30  க்கு மொட்டை மாடியில் எடுத்த  நிலா   நிலாவைச் சுற்றி பெரிதாகக் கோட்டை கட்டி இருந்தது

இதுவும் இரவு எடுத்த நிலா


காலையில்  ஜன்னல் வழியாக  எடுத்த  நிலா
காலை 5.30 க்கு எடுத்த படங்கள்  இனி வருபவை எல்லாம்.


 69 ஆண்டுகளுக்கு பின்  நேற்று வந்த  பெளர்ணமி  சிறப்பு வாய்ந்த பெளர்ணமியாம். எல்லோரும் அதைச் சிறப்பித்துப் பதிவு போடும் போது நானும்   நான்  எடுத்த நிலாக்களையும் போட நினைத்து போட்டு விட்டேன்.  அன்புப் பரிசாக  வந்த  கை அடக்க சின்ன காமிராவில் எடுத்த  நிலாப் படங்கள். நிலவைக் காட்டிச் சோறு ஊட்டிய அன்னைக்குக் குழந்தையின் பரிசு.

அடுத்து டிசம்பர் 14ல் தெரியும் என்கிறார்கள். இது போன்ற சிறப்பு பெளர்ணமியை 2034ல் தான் இனி  பார்க்க  முடியுமாம்.

கடற்கரை, மரங்கள் அருகே எடுத்தால்  நன்றாக  இருக்கும் . மொட்டைமாடியிலும், ஜன்னல் வழியாகவும்  இவ்வளவு தான் எடுக்க முடிந்தது.34 கருத்துகள்:

 1. நிலவென வாராயோ .... ஒரு பதில் கூறாயோ .... என்ற அழகான பாடல் போல ....

  நிலவென வந்துள்ள இந்தப்பதிவும் அழகோ அழகாக உள்ளது.

  இங்கு திருச்சியில் நேற்று இரவு 7 மணியிலிருந்து மேக மூட்டங்கள் மிகவும் அதிகமாக இருந்ததால், முழு நிலவைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்தக்குறை இல்லாமல் இங்கு உங்கள் பதிவினில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியே !

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் எல்லாம் அருமை. இங்கேயும் நிலவைச்சுற்றிச் சாம்பல் பூத்துக் காணப்பட்டது. மழை வரும் என்பார்கள். ஆனால் இன்று வெயில் கொளுத்தியது.

  பதிலளிநீக்கு
 3. அருமை. இங்கும் மேக மூட்டமாகவே இருந்தது. ஆயினும் 7-8 மணியளவில் காத்திருந்து எடுத்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அழகாக வந்திருக்கின்றன.

  எத்தனை பேர் பதிவு போட்டாலென்ன?.. அத்தனையிலும் அதன் அந்த அழகு கூடத் தான் செய்கிறது.

  அன்று நிலவைப் பார்க்காதவர்க்ள், இந்தப் படங்களைப் பார்த்து மகிழலாம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  நல்ல பாடல் பகிர்வுடன் கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  ஓ! சாம்பல் பூத்து இருந்தால் மழை வரும் என்பார்களா?
  இங்கும் மழை இல்லை.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  அருமையாக எடுத்து இருந்தீர்கள் ந்லா படத்தை.
  உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் மற்றவர்கள் போட்ட பதிவுகளிலும்
  நிலாவின் அழகு கூடித்தான் இருக்கிறது, திறமை, காமிரா எல்லாம் சேர்ந்து நிலவின் அழகை அனைவரும் தந்து விட்டார்கள்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.


  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோ கரந்தை ஜெய்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நிலவைப் பிடித்து அதன் கறைகள் துடைத்து என்னும் கவிதை நினைவிலாடியது வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்கவளமுடன்.
  கவிதை பாட வைத்துவிடும் நிலா எல்லோரையும்.உங்கள் கவிதைக்கும், வாழ்த்துக்கும் ந்ன்றி.

  பதிலளிநீக்கு
 12. நிலவு என்றாலே கவிதை நினைவில் வந்து முட்டி மோதுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், கவிஞர்கள் பெரும்பாலும் நிலவை பெண்ணாக உருவகபடுத்தி இருக்கிறார்கள். புராணங்கள் சொல்வது நிலவு ஒரு ஆண் என்று. எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் . கண்ணிற்குக் குளிர்ச்சியாக தினம் நிலவு வருவதற்கு ஆண்டவனிற்கு நன்றி சொல்வோம்.

  பதிலளிநீக்கு
 13. நிலவு வந்து வானத்தையே திருடிக் கொள்கிறது!

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ராஜலட்சுமி பரமசிவம், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
  நாம் பார்ப்பதற்கு கண் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  பாட்டு பகிர்வு அருமை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. படங்களெல்லாம் அருமை. நான் ஒரு படம்தான் எடுத்தேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
 19. சில படங்கள் அருமை. நிலவு, வானம், கடல், யானை-- எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை புகைப்படம் எடுத்தாலும் அலுக்காது.

  "நிலவென வாராயோ .... ஒரு பதில் கூறாயோ .... என்ற அழகான பாடல் போல" - கோபு சார்... பாடல் அப்படி அல்ல. "நிலவென வாராயோ அருள் மழை தாராயோ" - இது 'மணியே மணியின் ஒலியே....சொல்லடி அபிராமி' பாடல்.

  மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
  அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
  பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
  பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

  சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
  சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
  பதில் சொல்லடி அபிராமி வானில்
  சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
  பதில் சொல்லடி அபிராமி
  நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
  நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

  சொல்லடி அபிராமி

  பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
  படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
  பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
  படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
  சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
  சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
  சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?

  சொல்லடி அபிராமி

  வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
  வாராயோ அருள் மழை தாராயோ?
  வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
  வாராயோ அருள் மழை தாராயோ?

  வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
  நடுவில் நின்றாடும் வடிவழகே
  கொடிகளாட முடிகளாட குடிபடை
  எழுந்தாட வரும் கலையழகே
  பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
  கொட்டி வர மத்தளமும் சத்தமிட

  வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
  வாராயோ அருள் மழை தாராயோ?

  செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
  ஜெயம் ஜெயம் என்றாட - இடை
  சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
  தண்டை கலந்தாட - இரு
  கொங்கை கொடும்பகை வென்றனமென்று
  குழைந்து குழைந்தாட - மலர்ப்
  பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
  நிலவு எழுந்தாட
  விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
  கனிந்து வாராயோ

  காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
  கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
  வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
  வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
  அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
  அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  பதிலளிநீக்கு
 20. To நெல்லைத் தமிழன் Sir,

  ’சொல்லடி அபிராமி’ என்பதில் முழுப்பாடல் வரிகளையும் இங்கு கொடுத்துள்ளதற்கு என் நன்றிகள்.

  நான் சொல்லியுள்ள ஒருசில வார்த்தைகளும் ஆங்காங்கே அந்தப் பாடலில் எங்கோ வருகின்றன என்பதில் எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியே.

  எனக்கு இசை ஞானம் அவ்வளவாகப் போதாது ..... ஸ்வாமீ.

  இதுபற்றி சங்கீதப் பிரியையான என் மேலிடத்திற்கு மிக நன்றாகவே தெரியும். :)))))

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
  நிலா அழைத்து விட்டதே உங்களை!
  நலமா?

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
  நிலா அழைத்து விட்டதே உங்களை!
  நலமா?

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
  //நிலவு, வானம், கடல், யானை-- எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை புகைப்படம் எடுத்தாலும் அலுக்காது.//

  நீங்கள் சொல்வது போல் நிலவு, வானம், கடல் யானை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும், புகைப்படம் எடுத்தாலும் அலுக்காது தான்.
  சார் சுருக்கமாய் குறிப்பிட்டார்கள்.நீங்கள் முழுபாடலையும் பகிர்ந்து விட்டீர்கள்.

  உங்கள் கருத்துக்கும் முழு பாடல் பகிர்வுக்கும் மகிழ்ச்சி, நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  //நான் சொல்லியுள்ள ஒருசில வார்த்தைகளும் ஆங்காங்கே அந்தப் பாடலில் எங்கோ வருகின்றன என்பதில் எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியே.//


  வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
  வாராயோ அருள் மழை தாராயோ?

  நீங்கள் சொன்ன வரிகள் வருகிறதே.

  மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 26. நீங்கள் உங்கள் காமிராவில் சிறைப்பிடித்த நிலவை இன்று தான் பார்த்தேன். எங்கள் வீட்டிலும் மேல்மாடிக்குப் போகாமல் வீட்டிற்குள்ளிருந்தே இந்த நிலவைப் பார்க்க முடிந்தது. மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது. அதேபோல விடியற்காலை எங்கள் அறையின் ஜன்னல் வழியே தெரிந்த சந்திரன் மனதிற்கு ஏகப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்தது. அன்று முழுவதும் மனம் உற்சாகமாக இருந்தது. படங்கள் நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள், கோமதி.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
  இரவு மாடியில் தெரியும் நிலா, காலைதான் பால்கனி ஜன்னல் வழியாக பார்க்கலாம். பெளர்ணமி நிலாவின் அழகு நாள் முழுவதும் மகிழ்ச்சியை தரும் என்றுதான் முன்னோர்கள் பெளர்ணமி அன்று நிலாவை தரிசிக்க சொல்லி இருக்கிறார்கள் போலும். பழைய கால வீட்டு முற்றத்தின் வழியாக நிலவை பார்ப்பது எத்தனை ஆனந்தம்!

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ரஞ்சனி.

  பதிலளிநீக்கு
 28. இந்த நிலவுக்குள் மட்டும் எத்தனை எத்தனை கதைகள்.. கவிதைகள்!..

  அத்தனையையும் - அந்த நிலவு மட்டுமே அறியும்!..

  நிலவைப் போலவே - பதிவும் அழகு.. அருமை..

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 30. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  பதிலளிநீக்கு