திங்கள், 28 நவம்பர், 2016

நான் எடுத்த படங்களும் , பத்திரிக்கையில் வந்த செய்திகளும்


நான் எடுத்த சில படங்களுக்குப் பொருத்தமாய் இன்றைய தினமலரில் செய்திகள் வந்தன.  என் பழைய பதிவுகளும்  தினமலர் செய்தியையும் இணைத்துக்   கொடுத்து இருக்கிறேன்.  நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.


கங்கை கொண்ட சோழபுரத்தில் நான் எடுத்த  பூச்சிபிடிப்பான்
பூச்சிபிடிப்பான் படம் கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம் பதிவில்


தினமலர் பட்டத்தில் இந்த பறவையை கதிர்க் குருவி, என்றும்,, பூச்சிகளை உண்டு வாழும் பறவை என்றும், தாவரங்களை சேதப்படுத்தும் சிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, இவை உணவுச் சங்கிலியில்ட் சூழலுக்கு உதவி புரிகிறது   சாந்தாகிரிதரன் சொல்லி இருந்தார்கள். 
                                                           *         *         *



சோழவந்தான் பேரூராட்சியில் மக்கா குப்பைகளைத் தரம்பிரித்து பிளாஸ்டிக்கைச் சுழற்சி முறையில் பொடியாக்கி தார் ரோடு பணிக்கும், கண்ணாடி, பீங்கான், தகரம், ஈயம் ஆகிய பொருட்களை விற்பனை செய்து பல்வேறு நலத் திட்டப்பணிகளுக்குப் பயன்படுத்துவதாய்ப்  பேரூராட்சி நிர்வாக அதிகாரி கூறியதாக செய்தி.. சோழவந்தான் பேரூராட்சிக்குப் பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
    
குங்குமம் ஸ்டார்  தோழிக்காக மறுசுழற்சி பற்றி கேட்டதற்கு என் பதில்

என் கணவர் மறு சுழற்சிக்கு வரைந்து தந்த படம்

//மனிதன் தனக்குச் சாதகமாக தான் துய்க்கும் பொருள்களை மாற்றி அமைத்துக் கொள்கிறான்.  பின்விளைவுகள் ஏற்படாத மாதிரி மறுசுழற்சி செய்வதில் தவறு இல்லை. நாட்டுக்கு, வீட்டுக்கு சமுதாயத்துக்கு இப்போது  மறுசுழற்சி அவசியம். 

பிளாஸ்டிக் பைகளை கூழாக்கித் தார்ச் சாலை அமைக்கிறார்கள். அது மழையால் 
பாதிப்படையாது. பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் மூலம் டீசலுக்கு சமமான எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார்கள்.

 காலி தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானக் குடுவைகளில் மணல் அடைத்து சுற்றுச்சுவர் எடுக்கிறார்கள். குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். குப்பைகளைக் கொண்டு விவசாயத்துக்கு வேண்டிய உரங்கள் கிடைக்கின்றன. 

மனிதக்கழிவை  விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். சாக்கடை நீரில் இருந்து மின்சாரம், எரிவாயு தயாரிக்கப்படுகின்றன. வீட்டுக்காய்கறி குப்பைகளைச் சேகரித்து மண்புழு உரம் தயாரித்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படி குப்பைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயனுள்ளதாகச் செய்வது அதிகமாக நடைபெற வேண்டும். 

மரம் செடிகளின் குப்பைகள் மீண்டும் அந்த மரம் செடிகளுக்கே உரமாகின்றன. அதுபோல் உலோகங்களையும் உருக்கி மறுசுழற்சி செய்கிறார்கள். அலுமினியம், தாமிரம்,இரும்பு போன்றவற்றையும் மறுசுழற்சி செய்து புதுவகை கருவிகள் படைக்கிறார்கள்.//

                                                                       *             *            *


திருமலைநாய்க்கர்  மகால் போய் இருந்த போது இப்படி புதர் மண்டி கிடக்கிறதே என்று நினைத்தேன் , இப்போது மலையாளி சமாஜ சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது அறிந்து மகிழ்ச்சியாய் இருக்கிறது. மலையாளி சமாஜம் அமைப்பாளர்களுக்கு நன்றி.

இது போன்ற வரலாற்றுச் சிறப்பு பெற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் முதலில் அந்த இடத்தின் தூய்மையை விரும்புவார்கள், தூய்மையாக இருக்க சுற்றிப்பார்க்க வருபவர்களும்,  இது போன்ற இடங்களின் பாதுகாவலர்களும் (இருதரப்பினரும்) இணையும் போது எப்போதும் சுத்தமாக இருக்கும்.
                                                          *********************
மக்கள் இயக்க சார்புக்குப் பாராட்டுக்கள் நன்றிகள்.




ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியாகொல்கத்தாவிற்கு வருகை தரும்போது இதை கொண்டுவந்து ஊக்ளிநதியில் விட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வூக்ளி நதியானது லண்டனில் உள்ள தேம்சு நதிப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக இடப்பட்டது.
 ஊதாநிறப்பூக்களையும் பூக்கின்றன. இவையே இதன் கவர்ச்சிக்கும் உலகை ஆட்கொண்டதிற்கும் காரணம்.


அண்ணன் கோவில் (திருவெள்ளக்குளம்)   கருட சேவைக்கு போய் இருந்த போது   எடுத்த படம். கோவில் அருகில் உள்ள ஒரு குளத்தில் இப்படி ஆகாயத் தாமரை   குளத்தின் தண்ணீர் தெரியாத அளவு படர்ந்து இருந்தது. அங்கு எடுத்த படம்.

ஆகாயத்தாமரையால்  ஏற்படும் தீமைகள் 

  • குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
  • கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
  • அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
  • இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிசன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
  • நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
  • இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
  • கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதன் இனப்பெருக்கத்திற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
  • வெள்ளக் காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
  • பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள்விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.

தடுப்புமுறை[மூலத்தைத் தொகு]

இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. வேதிக் களைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதின் மூலம் இவைகளை அகற்றமுடியும். ஆனால் இவை நீரில் வளரக்கூடிய தாவரமாகையால் இவை நீர்நிலைகளில் பாதிப்பு மிகுதியாகும் வாய்ப்பு உள்ளது.

மாற்றுமுறை[மூலத்தைத் தொகு]

சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயுகாகிதம் தயாரித்தல், கயிறுநூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மண்புழு உரம் மற்றும் ஆகாயத்தாமரையின் மக்கிய பகுதிகளை உரமாகவும் பயன்படுத்தலாம்.


நன்றி - விக்கிப்பீடியா.
***  **** ****

தினமலரில் இன்று வந்த செய்தி , நான் எடுத்த  சங்காபிஷேகப் படம்


******************


சாலையிலே புளியமரம் 

”சாலையிலே புளியமரம் ஜாமீந்தார்  வைத்த மரம் ஏழைகளை காக்கும் மரம்”  இப்படி ஒரு பாட்டு சினிமாவில் வரும் இப்போது சாலைகளில் உள்ள புளியமரங்களில் உள்ள மரங்களில் உள்ள புளியம்பழங்களை எடுக்க முடிகிறதா?

கடைசி இந்த செய்தி ஒரு மாறுதலுக்காக . 

வாழ்க வளமுடன்



24 கருத்துகள்:

  1. படங்களும் அதற்கு பொருத்தமான செய்திகளும் தந்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அனைத்துப் படங்களும், செய்திகளும், மறுசுழற்சி பற்றிய விளக்கங்களும், சுத்தம் + சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தரும் விஷயங்களும், கடைசியில் உள்ள புளியமரச் செய்தியும் சிந்திக்க வைப்பதாகவும் மிகவும் சிறப்பாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    அனைத்தையும் குறிப்பிட்டு கருத்து சொன்னதற்கும், உங்கள் பாராட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  5. மிகுந்த சமூக அக்கறை இல்லையெனில்
    இத்தனை அருமையாகச் செய்தல் கடினம்
    தொடர வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் எடுத்த படங்களும், படங்களுக்குப் பொருத்தமாக செய்திகளும் என அசத்தல் பகிர்வு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    நீஙகளும் சமூக அக்கறையுடன்சீமைக் கருவேல மரங்களின்
    தீமைகள் மற்றும்சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்த
    மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினீர்கள் தானே சார்.
    நான் செய்தி மட்டும் பகிர்ந்து இருக்கிறேன் நீங்கள் களப்பணியிலும் ஈடுபட்டு இருக்கிறீர்கள்.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோ ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் புகைப்படத்துக்குப் பொருத்தமான செய்திகள் அமைந்தது ஆச்சர்யம் ப்ளஸ் மகிழ்ச்சி! ஸாரின் ஓவியம் ஜோர். நல்ல ஒரு செய்தியைச் சொல்லும் ஓவியம்.

    பிளாஸ்டிக் கழிவுகளை வைத்துச் சாலைகள் அமைத்தால் மழைபெய்யும்போது சாலைகள் நீரை உள்வாங்குமா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. சில இடங்களில் கான்க்ரீட் சாலைகள் அமைத்திருப்பார்கள். அங்கு தண்ணீர் உள்புக முடியாமல் போகுமே என்று தோன்றும். அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  13. >>> இப்போது சாலைகளில் உள்ள புளியமரங்களில் உள்ள மரங்களில் உள்ள புளியம்பழங்களை எடுக்க முடிகிறதா?..<<<

    தஞ்சாவூர் நகரைச் சுற்றி விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்களையெல்லாம் பெயர்த்து எறிந்து விட்டார்கள்..

    நல்ல எண்ணங்கள் பலிக்கவேண்டும் என்ற ஆவல் மேலிடும்போது
    இயற்கையாகவே ஏதாவது துணை கிடைப்பது அற்புதம்..

    பதிலளிநீக்கு
  14. அருமையான தொகுப்பு அம்மா....

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஸ்ரீராம்,வாழ்க வளமுடன். ஸ்டார் தோழிக்காக வரைந்து தந்த பழைய படம் தான் , நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

    //பிளாஸ்டிக் கழிவுகளை வைத்துச் சாலைகள் அமைத்தால் மழைபெய்யும்போது சாலைகள் நீரை உள்வாங்குமா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. சில இடங்களில் கான்க்ரீட் சாலைகள் அமைத்திருப்பார்கள். அங்கு தண்ணீர் உள்புக முடியாமல் போகுமே என்று தோன்றும்.//

    நீங்கள் சொன்னது போல் நானும் நினைப்பேன், மழைக் காலத்தில் சாலை விரைவில் பழுதடைந்து விடுகிறது. சாலையாவது நல்லா இருக்குமே! என்று நினைத்துக் கொள்வேன். மழை தண்ணீர் பூமிக்குள் போக மாற்று ஏற்பாடு அவசியம் தான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    தஞ்சாவூர் நகரைச் சுற்றி விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்களையெல்லாம் பெயர்த்து எறிந்து விட்டார்கள்..//

    ஆமாம், சாலையோர மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடங்களில் நடவேண்டும், அப்படி செய்தால் நல்லது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  17. வணக்கம் பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  18. உங்கள் தீர்க்க தரிசனத்துக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. படத்துக்காக செய்தியா, செய்திக்காக படமா என்ற நிலையில் ஒன்றையொன்று விஞ்சும் அளவு உள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாரட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு