புதன், 23 நவம்பர், 2016

வண்டியூர்த் தெப்பக்குளம் -பகுதி- 2

மையமண்டபத்தில்  மேல்தளம் போக ஏறும் முதல் படிக்கட்டு


படிகளில் இறங்கி வந்தவர்கள் மேல் தளத்திற்கு போகப் படிகள் குறுகிய படிகளாய் இருக்கிறது, உங்களால் ஏறமுடியாது என்றும் சொன்னார்கள், 

அதற்குள் கீழே இறங்குங்கள் எல்லோரும், பேச்சு ஆரம்பிக்கப் போகிறது. அப்புறம் பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது. நாங்கள் மேலே போய் பார்த்தோமா? அங்கு என்ன இருந்தது என்பது அடுத்த பதிவில்.  என்று  சொல்லி இருந்தேன். முந்திய பதிவைப் படிக்க வில்லை என்றால் படித்து விட்டு வந்து இந்தப் பதிவைப் படிக்கலாம்.

நாங்கள் பசுமை நடை அமைப்பாளர் அவர்களிடம் மீண்டும் நாங்கள்  கீழ் தளத்திற்கு இறங்கி பின் மேல் தளத்திற்கு வர மறுபடியும் ஏற வேண்டும் . அதனால் நாங்கள் எல்லோரும் கீழே போய் அமர்ந்து பேச்சு  ஆரம்பிப்பதற்குள் வந்து விடுகிறோம், மேலே போய் விட்டு என்று அனுமதி பெற்றோம். அவர் துணைவியார் எங்கள் அனுமதி அளித்து பாதுகாப்புக்கு இன்னும் இருவரையும் உடன் அனுப்பி உதவி செய்தார். கவனமாய்ப் போய்ப் பார்த்து வாருங்கள் என்றும் கனிவுடன் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி  மேலே போய் பார்த்து விட்டுக் கீழே இறங்கி வந்தவுடன் யாரும் இருக்கிறார்களா மேலே என்று மறுபடியும்  போய்ப் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்  வந்தார் நீராழிமண்டபத்தை பார்த்துக் கொள்பவர்.  

மேலே ஒரே சமயத்தில் எல்லோரும் ஏறக்கூடாது என்று சொன்னார்கள்,   பத்துப்பத்து பேராய்ப் போய் வாருங்கள் என்றார்கள்.

இங்கிருந்து  குளத்தைப் பார்க்கலாம். வேப்பமரக் காற்று அருமையாக  வீசுகிறது.

மேலே கொஞ்சம் புதுப்பிக்கப்பட்டு இருந்தது. சுதை வேலைப்பாடுகள் வர்ணம் பூசப்பட்டு இருந்தது.
                                 
கோபுரம் தாங்கும் பொம்மை
பூக்களைக் கொட்டும்  தேவமகள், 

மேல் விதானத்தில் அழகிய கோலம்
சுழலும் சக்கரம் போல்
இங்கிருந்து சாளரங்கள் வழியாக வண்டியூர் மாரியம்மன் கோவில்
 மரப்படியில்  ஏறிச் சென்ற பின்  மீண்டும்  இன்னொரு  தளம்   செல்ல  காங்கிரீட் படிகள்.
மிகவும் குறுகிய படிகள்.
அங்கிருந்த ஜன்னல் வழியாக  - குளம், முக்தீஸ்வரர் கோவில்

 மூன்றாம் தளம் செல்ல இது தான் கடைசிப் படிக்கட்டு அதற்கு மேல்   குனிந்து போய் முட்டிக்கால் போட்டுத்தான் குளத்தையும், குளத்திற்கு அப்பாலும் பார்க்கலாம்.
சுற்றிவர மரச் சட்டம் இதில் நிறையபேர் ஏறி நின்றால் மரச்சட்டம் உடைய வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவராக ஏறிச்சென்று பார்த்து இறங்கி வர வேண்டும்.
குளத்தின் மைய கோபுரத்தின் மேல்விதானம் - அழகிய வேலைப்பாடு

கீழே இறங்கும் படிகள்

மேல்தளத்தைப்பார்த்து விட்டு வரும் போது  பேராசிரியர் சுந்தர்காளி  நீராழிமண்டபங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.  அவர்களைத் தாண்டி முன் பக்கம் போக வேண்டும். அதனால் பின் புற மண்டபத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டோம்.  நீராழி மண்டபத்தை எப்படிப் பாதுகாப்பது, நீர் வரும் பாதைகளை மீட்டெடுப்பது போன்றவை பற்றிப் பேசினார்.


காலை 6.30க்கு   குளத்தின் படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யும் அம்மா

பசுமை நடை அமைப்பாளர் பேசும் போது இந்த குளக்கரையில் மாலை நேரம்  உணவுக் கடைகள்  நிறைய இருக்கும். இங்கு காற்று வாங்கிப் போக வருபவர்கள் அந்த உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு விட்டு அந்த கவர், தட்டு, டம்ளர்களை போட்டு விட்டு போய் விடுகிறார்கள். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும்  மீண்டும்  வருகிறது. விற்பவர்கள் தங்கள் பொறுப்பில் குப்பைகளை அகற்றும் பணியைச் செய்யலாம் என்றார்கள்.

குளத்தின் படிகளில் அமர்ந்து சாப்பிட்டவர்கள் சிதறிய  உணவு, படிக்கட்டில் வளை அமைத்து இருக்கும் எலியாருக்கு  விருந்தாகிறது.


இன்னொரு அன்பர் ’வெளி’ பற்றிப் பேசினார். இது போன்ற வெளி நகருக்குள் இல்லை, அதனால் தெப்பக் குளத்தைச் சுற்றி உள்ள வெளியைப் பாதுகாப்பது நம் கடமை என்றார்.

தெப்பக்குளத்தைத் தங்கள் ஆடுகளமாய்ப்  பயன்படுத்துபவர்களால் இப்போது புல், புதர் மண்டி இருக்கவில்லை. அதுவரை சந்தோஷம். 


கல்யானை மேல் அமர்ந்து பேச்சைக் கவனிக்கும்   சிறுவன். நாளை அவனுக்கும் பொறுப்பு உள்ளதே ! நீராழிமண்டபங்களை ப்பாதுகாப்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் தான்.

அங்கிருந்து கிளம்பும் போது  மீண்டும் ஒரு முறை மண்டபத்தின் உள்புறம் திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் எங்களைத் தனியாக விட்டு போகிறீர்களா? என்று கேட்பது போல் இருந்தது கல் தூணில் இருக்கும்  சிற்பங்கள்..

--------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

19 கருத்துகள்:

 1. நான் இதுவரை மைய மணடபம் போய்ப் பார்த்ததில்லை. மேலே பார்க்கப் பெரிதாக ஒன்றுமில்லை போலும். புகைப்படங்கள் மூலம் நாங்களும் நேரில் பார்த்த உணர்வை உண்டாக்கி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு

 2. வழக்கம்போல் பதிவும் படங்களும் சிறப்பாக உள்ளன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் நுணுக்கமாகவும் கவனமாகவும் பராமரிக்கவேண்டிய பகுதிகள்.. ஏறி இறங்குவது ஒரு சாகசம் போலத்தான் இருக்கும் போலும். நம் மக்களிடம் குப்பைகளைக் கண்ட இடத்திலும் எறியும் வழக்கத்தை முதலில் மாற்றவேண்டும். அதற்கு எல்லா இடங்களிலும் குப்பைத்தொட்டிகளை வைத்து அவற்றை முறையாகப் பராமரிக்கவேண்டும். பசுமை நடை அனுபவப் பகிர்வுக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 4. 'படிப்படி'யாக சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 5. கூடவே வந்து பார்த்தாச்சு, எலி வளை உட்பட!! :-)
  'எங்கள் ப்ளாகி'ல் உங்கள் பெயர் பார்த்தீர்களா?:-)

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் மேல்தளத்தில் ஒன்றும் இல்லை என்றாலும் , இரண்டாம் தளத்தில் அழகிய சாளரங்களும், மேல்விதானத்தில் அழகிய வேலைப்பாடும் உள்ளதே. கீழ்தளத்து சிற்பங்களை பார்க்க விளக்கு போடலாம். மரங்களின் நிழல் மண்டபத்தை இருட்டாய் வைத்து இருக்கிறது.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
  ஏறி இறங்குவது சாகசம் தான். டெல்லி ஜும்மா மசூதி மேல்தளத்திற்கு இது போன்ற படிகளில் ஏறி போய் இருக்கிறேன். பல கோட்டைகளில் இதை விட அதிகமாய் படிகள் இருக்கும் ஏறும் இடம் இருட்டாய் வேறு இருக்கும்.
  குப்பைத்தொட்டிகளை வைத்து பராமரித்தாலும் அதில் குப்பையை போட வேண்டுமே! நீங்கள் சொல்வது போல் மக்களிடம் மாற்றம் வர வேண்டும்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  நானும் உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் மிடில்கிளாஸ் மாதவி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்து என் பிழையை திருத்த உதவியது(எலி வளை)
  நன்றி.

  எங்கள்ப்ளாகி'ல் நான் கருத்து சொல்லும் போது படம் வரவில்லை, அப்புறம் நீங்கள் சொன்ன பிறகு பார்த்தேன். உங்கள் கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள்.
  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. படங்களுடளுடன் பகிர்வு
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. அழகான படங்கள்.. மதுரை தெப்பக்குளம் கண்முன்னால் விரிந்திருக்கின்றதைப் போன்ற உணர்வு..

  (இரண்டு நாட்களாக Blogger திறக்கவில்லை.. அதற்கு என்ன கோபமோ தெரியவில்லை..)

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.


  GOOGLE - நிறைய மாற்றம் வந்துள்ளது... பழகிக் கொள்ள வேண்டும்...//

  திண்டுக்கல் தனபாலன் அவர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

  ரீடிங் லிஸ்ட் மூலம் தான் படிக்க முடிகிறது, அதில் நாம் படிக்கும் பதிவர்கள் பதிவுகள் காட்டுது.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. படங்களும் பகிர்வும் அருமை. விற்பனையாளர்கள் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதோடு பொதுமக்களுக்கும் வலியுறுத்தி பரமாரிப்பு வேலையை எளிதாக்கலாம்.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  // விற்பனையாளர்கள் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதோடு பொதுமக்களுக்கும் வலியுறுத்தி பரமாரிப்பு வேலையை எளிதாக்கலாம்.//

  நீங்கள் சொல்வது போல் விற்பனையாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் பரமாரிப்பு வேலையும் எளிதாகும்

  குளத்து சுற்றுபுறம் நன்றாக இருக்கும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. நான் இதுவரை பார்த்தது இல்லை.மதுரை வந்திருக்கேன்.மீண்டும் வர மீனாட்சி அருள் வேண்டும்.வந்தால் பார்கிரேன்.பட்ங்கள் அழ்காக உள்ளது.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் பாலாஜி , வாழ்க வளமுடன்.
  மீனாட்சி அருளால் மீண்டும் மதுரை வந்து வண்டியூர்த் தெப்பக்குளம் பார்க்கலாம்.
  இன்னும் அழகாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு