வியாழன், 3 நவம்பர், 2016

சுவாமிமலை

வாசல் முகப்பு
கோவில் அமைப்பு  நெட்டியில் - கண்ணாடிப் பெட்டிக்குள்

அப்பனுக்குப் பாடம் சொன்ன  சுப்பையா
ஆடவல்லான்
மாலை  நேரம் கோவில் நடை திறக்கப் படியில் காத்து இருக்கும் பக்தர்கள்

                                     வள்ளி தெய்வானையுடன் முருகன்-மேல் விதானத்தில் வரைந்திருந்த படங்கள்
தண்டாயுத பாணியாய்க் காட்சி அளித்தல்

ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன  சுவாமிநாதன் 
 சாரம் கட்டி கழுத்தை அண்ணாந்து பார்த்து வரையும் ஓவியர்களின் திறமை   வியக்க வைக்கிறது.  அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் அன்று அவர்களுக்கு விடுமுறை போல, யாரும் இல்லை.
12 ராசிகளை அழகாய் வடித்து உள்ளார்கள்
அழகான பூ வேலைப்பாடு

நாளை  இந்த குட்டி அழகனும்  தந்தைக்குப்  பாடம் சொல்வானோ?
கீழிருந்து மேல் நோக்கி எடுத்தது -அவ்வளவு உயரம்  மதில்

 கும்பாபிஷேகத்திற்கு  வேலை நடந்ததால் கோபுர தரிசனம் இவ்வளவுதான்.
முருகனின்  அருள் உண்டு  என்று அகவும் மயில்
சுவாமிநாதன் விமானம்

சஷ்டியின் நான்காவது நாள் இன்று. நான்காவது படை வீடு சுவாமிமலை. சில ஆண்டுகளுக்கு முன் சென்று இருந்த போது கும்பாபிஷேக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.

கும்பகோணத்திலிருந்து எட்டு கி,மீ தூரத்தில் இருக்கும்   சுவாமிமலைக்கு மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி போவோம் - உறவினர்கள் , மற்றும்  நண்பர்கள் வரும் போது. திருவெண்காட்டில் இருக்கும் போது சாப்பாடு கட்டிக்கொண்டு போய் கும்பகோணம் அருகில் இருக்கும் கோவில்களைப்  பார்த்து விட்டு வருவோம். கோவில்களைத் தரிசித்துவிட்டு நாம் கொண்டு போன உணவையும் கோவில் பிரசாதங்களையும்  பகிர்ந்து உண்ணுவது   ஆனந்தம்.

சுவாமிமலை பற்றித் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 
புராணப்பெயர் : திருவேரகம்,  திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் திருவேரகம் என்று பாடி இருக்கிறார்,

இக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. முருகனுக்கு எதிரே மயிலுக்குப் பதிலாக யானை இருக்கிறது. இந்திரன் முருகனுக்கு அளித்தது என்று சொல்லப்படுகிறது.


முருகனுக்கு பெயர் சுவாமிநாதன். வலக்கரத்தில் தண்டாயுதம் தாங்கி, இடக்கையை தொடையில் தாங்கியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

நாமகள், பூமகள்,  இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். பூமகள் நெல்லிமரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.  சுவாமிமலை, த்ந்தைக்குக் குருவாக இருந்ததால் குருமலை என்றும்   சொல்கிறார்கள்.


முருகன் கையில் உள்ள வஜ்ரவேலால் இங்குள்ள  நேத்திர தீர்த்தம் உருவாக்கப்பட்டது என்று தலபுராணம் சொல்கிறது.

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி இருக்கிறார்., நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் நிறைய பாடி இருக்கிறார்.

’தெய்வம்’ திரைப்படத்தில் பித்துக்குளி முருகதாஸ் பாடலை யாரும் மறக்க முடியாது. 

//நாடறியும்  100 மலை நான் அறிவேன் சுவாமி மலை.
 கந்தன் ஒரு மந்திரத்தை, கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை சுவாமி மலை சுவாமி மலை//


 ஓம் எனும்    பிரணவத்தின்  பொருள்தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்தார்,  படைப்புத் தொழிலை தானே செய்தார். பின் சிவபெருமானின் அன்பு வேண்டுகோளுக்கு அடிபணிந்து பிரம்மனை விடுதலை செய்தார்.

பிரணவமந்திரத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க எல்லோர் அறிய சொல்ல முடியாது என்று சிவனின் காதில் சொன்னார்.  
அந்த அற்புதக் காட்சி சிலையாக கோயிலில் உள்ளது, ஓவியமாய் உள்ளது.  

மாசித் திங்கள்  மகநாளில் ஆகம சிக்ஷைக்கு உகந்தநாள். அன்று சீடனாக இருந்து சரவணனிடம்  பிரணவத்தின் பொருளைச் சிவபெருமான் தெரிந்து கொண்டார். குழந்தையிடம் பாடம் கேட்பது என்றால் தந்தைக்கு மகிழ்ச்சி தானே!.

சுவாமிமலை முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு!விபூதி அலங்காரத்தில் மிகவும் அழகாய் இருப்பார்.
வியாழக்கிழமையில்   தங்ககவசம், வைரவேல்  அணிவிப்பார்கள்.

சுவாமிமலை முருகன் எல்லோருக்கும் அருள்புரிவாராக!

                                                    வாழ்க வளமுடன் !

                                                               -------------------

22 கருத்துகள்:

  1. ’ஸ்வாமிமலை’ முருகன் பற்றிய பதிவு, முருகனைப்போலவே மிக அழகாக அமைந்துள்ளது.

    ஸ்வாமிமலை நான் சிலமுறை நேரில் போய் தரிஸித்து வந்துள்ள கோயிலாக இருப்பதால், இந்தப்பதிவினைக் காண மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

    படங்கள் எல்லாமே பளிச்சென்று நன்றாக வந்துள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  2. அறுபது ஆண்டுகளின் பெயர்கள் படிகளில் எழுதி இருக்கும் அறுபது படிகள் கொண்ட சின்ன மலை

    பதிலளிநீக்கு
  3. என் தமக்கையின் திருமணம் 71இல் நடந்தபோது இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். திருமணம் சுவாமிமலையில்தான் நடந்தது. இதன் பிரகாரங்களைச் சுற்றி வருகையில் எங்கள் ஆசிரியர்களில் ஒருவரும் எனது தாய்மாமன்களில் ஒருவருமான திரு ராமன் (யக்ஞராமன்) பிபரே ராமராசம், நனு பாலிம்ப உள்ளிட்ட பாலமுரளி பாடல்களை பாடிக்கொண்டே சுற்றி வந்தார். அது நினைவுக்கு வருகிறது. அதன்பின் இரண்டொரு முறை பயனத்தின் நடுவே அவசர தரிசனம் செய்துள்ளோம். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன் உறையுமிடம்!

    "தந்தைக்கு மந்திரத்தை தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருளுரைத்த உந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்.. பல் முளைக்கும் முன்னே எனக்கு கவிதை தந்தான்.. கந்தன் வந்தான்... கவிதை தந்தான்.."

    பதிலளிநீக்கு
  4. படங்கள், தகவல்கள் அனைத்தும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  5. Arumai. Oru murai poyirukkiren. Ethirpara iniya Ascharyam kodutha idam!! Thanks for sharing!!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கோபலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    //ஸ்வாமிமலை நான் சிலமுறை நேரில் போய் தரிஸித்து வந்துள்ள கோயிலாக இருப்பதால், இந்தப்பதிவினைக் காண மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.//

    மகிழ்ச்சி சார்.

    சேமிப்பில் தேடிய போது இந்த படங்கள் தான் கிடைத்தன , பட சேமிப்பை தேட வசதியாக இப்போது பெயர் கொடுத்து விடுகிறேன், முன்பு அப்படி செய்யாத காரணத்தால் தேடும் படலம் ஆகி விட்டது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    சுவாமி மலை படிகள் மிக விசேஷம் ஆனது. ஜனவரி முதல் தேதி படி பூஜை சிறப்பாக நடக்கும். எல்லோருக்கும் சுவாமி மலை பற்றி தெரியும் என்பாதாலும் நேரமின்மையாலும் தகவல்கள் நிறைய பகிரவில்லை.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரர் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் தமக்கையின் திருமணம் அங்கு நடந்தது அறிந்து மகிழ்ச்சி.
    நிறைய கல்யாணங்கள் அங்கு நடந்து நானும் பார்த்து இருக்கிறேன்.
    மாமாவின் பாடல் நினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி.

    உங்கள் கருத்துக்கும், தினம் ஒரு கந்தன் பாடல் பகிர்வுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  10. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் தொடர் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் மிடில் கிளாஸ் மாதவி, வாழ்க வளமுடன்.

    இனிய ஆச்சிரியம் கொடுத்ததை மறக்க முடியுமா?
    எதிர்பாராமல் கிடைப்பது மகிழ்ச்சிதான் என்றும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    மீண்டும் எழுதுங்கள் நிறைய.

    பதிலளிநீக்கு
  12. சுவாமிமலை முருகன்...அழகு...

    பதிலளிநீக்கு
  13. சுவாமி மலை முருகப்பெருமானை தரிசிக்க செய்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் அனுராதா பிரேம். வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  16. ஆஹா! அற்புதம்!

    குமரன் கோயில்களின் தொகுப்பு அற்புதம்! படங்கள் நேரில் பார்த்திருந்த உணர்வுகளை மீட்டி எடுக்கின்றன.

    ரொம்பவும் நன்றி, கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  18. சுவாமிமலை. படங்கள் அருமை. இன்னும் குறிப்புகள் கொடுத்திருக்கலாம். பித்துக்குளியை நினைவுபடுத்தியதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
    சுவாமிமலை பதிவு போட நினைத்த அன்று வீட்டிற்கு விருந்தினர் வருகை,
    கோவில் வழிபாடு என்று நேரம் போய் விட்டது. சஷ்டியில்
    கந்தபுராணத்தை ஆறு நாட்களில் படித்து முடிப்பேன், அதிலிருந்து போட திட்டம் எல்லாம் போட்டு இருந்தேன், ஆனால் இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் சிறு குறிப்புடன் எல்லோருக்கும் சுவாமிமலை பற்றிய செய்திகள் தெரியும் என்று விட்டு விட்டேன். அடுத்த சஷ்டிக்கு விளக்கமாய் போட்டு விடுவோம் முருகன் அருளால்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கண்டு தரிசனம் செய்தேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் தொடர் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு