திங்கள், 14 நவம்பர், 2016

அன்னாபிஷேகம்







ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அனைத்து சிவாலயங்களிலும்  நடைபெறும். கங்கை  கொண்ட சோழபுரத்தில் ஒருமுறை பார்த்து இருக்கிறேன். அங்கு கூடைகூடையாக சாதம் மலையாக  அபிஷேகம் செய்யப்படும்.  பக்கத்து ஊர்களுக்கு  எல்லாம்  சாதம் லாரியில் கொண்டு  போய் கொடுப்பார்கள்  முன்பு.   அங்கும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம்  நடைபெறும். அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க ஆறு, குளங்களிலும் கொஞ்சம் கலக்கப்படும். பறவைகள், எறும்புகளுக்கும் வழங்கப்படும்.

மாயவரத்தில் புனுகீஸ்வரர் கோவிலில்   இரவு நடைபெறும்,  பல வருடங்கள் பார்த்து இருக்கிறேன். இரவு அர்த்தசாம பூஜை   முடிந்தவுடன்  அலங்காரம்  கலைக்கப்பட்டு சாதத்தில் தயிர் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.  


இன்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஞானபிரசனாம்பிகை உடனுறை, காளகத்தீஸ்வரர்  கோவிலில்  நடை பெற்ற   அன்னாபிஷேக  விழாவில் கலந்து கொண்டேன். காலை பத்துமணிக்கு   மற்ற பால், தயிர், இளநீர் அபிஷேகங்கள்  முடிந்தவுடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்பே பக்தர்கள் அரிசி, மற்றும் காய்கனிகள் கொண்டு வந்து கொடுத்து  விட்டோம்.

அன்னாபிஷேகம்  செய்து பின் காய்கனிகளால் அலங்காரம் செய்த பின் பூஜையானது.

அதன்பின் அன்னதானம் நடந்தது.  அதன்பின் கடவுளுக்கு அலங்காரம் செய்த  காய்கனிகளை எல்லோருக்கும் வழங்கினார்கள். விழாவை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.

அபிசேக சமயத்தில் தேவார , திருவாசகம் படித்தோம் அனைவரும்.
உலக நன்மைக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது. இன்று மாலை அபிராமி அந்தாதி பாராயணம் நடக்கும்.


மற்ற தானங்களை விட அன்னதானம் தான் சிறப்பாக  சொல்லப்படுகிறது. இன்று அன்னாபிஷேகம் பார்த்து அந்த அன்னத்தை உண்டால் காலம் முழுவதும்   அன்னத்திற்குப்   பஞ்சம் இல்லாமல்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அனைத்து  உயிர்களுக்கும்  தாயாக  இருக்கும்   இறைவன்,  உயிர்கள்  வாழ மழையைக்கொடுத்து அதனால் பயிர் பச்சைகள் செழித்து    சுபிட்சமாய் வாழ  அருள்புரிய வேண்டும்!

                                                         வாழ்க வளமுடன்!
                                                                     ----------------

20 கருத்துகள்:

  1. அன்னாபிஷேகம் படங்கள் அருமை. இதுவரை கேள்விதான் பட்டிருக்கிறேன். தஞ்சை பிரகதீஸ்வரர் அன்னாபிஷேகப் படம் பார்த்திருக்கிறேன். விளக்கமாக எழுதியது நல்லா இருந்தது. எப்படி வெறும் அன்னத்தைப் பிரசாதமாகத் தருவார்கள் என்று நினைத்தேன்.. ஓரிடத்தில், தயிர் சேர்த்துத் தருவார்கள் என்று எழுதியிருந்ததைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் பதிவும் வழக்கம்போல மிகவும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சின்ன வயசிலே மதுரையிலே பார்த்தது! பகிர்வுக்கு நன்றி. இங்கெல்லாம் கூட்டம் அதிகம் இருப்பதால் போக முடியறதில்லை. கீழே உட்காரவும் முடியாது! :(

    பதிலளிநீக்கு
  9. முதன் முறையாக அன்னாபிஷேகம் காண்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  10. ஒரு தொலைக்காட்சியில் காண்பிக்கபட்டது எந்தக் கோவில் என்று சரியாக கவனிக்க வில்லை, வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? தஞ்சை, அல்லது கங்கை கொண்ட சோழபுரம் காட்டி இருப்பார்கள். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன். எனக்கும் வெகு நேரம் கீழே உட்காரமுடியாது. அடிக்கடி போகும் கோவில், சின்ன கோவில் அதனால் அவர்கள் எனக்கு நாற்காலி கொடுத்தார்கள். அதில் உட்கார்ந்து தான் எல்லாம் பார்த்தேன். முடியதவர்களை நாற்காலியில் அமரச் சொல்லி உபசரிப்பார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    காணொளி எடுத்தேன் பகிர்ந்து இருப்பேன் , அது அலைபேசியில் எடுத்தேன்.
    மடி கணனியில் தலைகீழேக தெரிகிறது சரி செய்து விட்டு போடுகிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்னாபிஷேகம் சிறுவயதில் திருவண்ணாமலையில் பார்த்தது ஞாபகம் வந்தது. உங்கள் கட்டூரைகளால் நிறைய தரிசனங்கள் காணக் கிடைப்பது ணகிழ்ச்சியாக இருக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. அன்னாபிஷேக தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் திருவாக்கு..

    நலம் வாழ்க.. - என்றென்றும்!..

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு