ஞாயிறு, 6 நவம்பர், 2016

பழமுதிர்சோலை

இன்று (06.11.2016ஆறாம் படைவீடு சோலைமலையில்  (  பழமுதிர் சோலை) வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்  பார்த்தோம்.  திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருமணம் நடைபெறும்..

ஆறு நாட்களும் முருகன் திருத்தலம் தரிசித்த   நீங்கள்  கல்யாணத்தையும் கண்டு  களிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

திருமணத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுதல்
மலர்ப் பந்தல்,  திருமண விழாக் காண வந்து இருக்கும் கூட்டம்
முருகனின் பொற்பாதங்கள் வெள்ளிப் பல்லக்கில்  வருகிறது

பொற்பாதங்களில் மாங்கல்யத்தை வைத்து அபிஷேகங்கள் செய்யப்படுகிறது 


                                       பாலபிஷேகம் செய்யப்படுகிறது


முருகனுக்குப் பட்டாடை அணிவிக்கப்படுகிறது.


வள்ளி தெய்வயானைக்குப் பட்டாடைகள்!


வேலுக்குப் பொட்டிடுதல்
காப்புக்கட்டுதல்


 திருமாங்கல்யம்மங்கள வாத்தியங்கள் முழங்க , முருகப்  பெருமான்  தெய்வயானை தேவியாரின் திருக்கழுத்தில்   திருமாங்கலயத்தைத் தாரணம் செய்தார்.

நல்ல முகூர்த்த நேரத்தில் நம்பிராஜன் , திருமுருகனின் பொற்கரத்தில் , வள்ளிப்பிராட்டியாரின்  திருக்கரத்தை வைத்து , “தவமிருந்து  பெற்ற நாயகியை  தேவரீருக்குத்  தாரை வார்த்துத்  தருகிறேன் “ என்று சொல்லி வேதமுறைப்படி    தாரை  வார்த்துக்  கொடுத்தான்.

 நாரதர்முனிவர்  மறைவிதிப்படி  மங்கலச் சடங்குகளை
நடத்தினார்.  முருகவேள்  தங்கத் திருமண    மாங்கல்ய  நாணினைத்
 தேவியாரின்    திருக்கழுத்தில் கட்டினார்.

- ஸ்ரீ கந்த புராணம்.


மாலை மாற்றுதல்
நைவேத்தியம்தீபாராதனைகலியுகவரதன்   முருகன் - அவன்  விரும்பி  எழுந்தருளியிருக்கும்  படை வீடுகளோ  ஆறு.. அந்த  ஆறையும்  நினைத்தால்  ஆறுமே மனம் ! இவ்வாறு  ஆறுபடை  கொண்டு விளங்கும்  ஆறுமுகப்  பெருமான்  ஆறுமுகம்  கொண்டு  நம்மைக்  காத்தருளுகின்றார்.
                                                                 -----------------
                                                            வாழ்க வளமுடன்.

22 கருத்துகள்:

 1. உங்களுக்குக் கிடைத்த பேரனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதி.
  படங்களுடன் விளக்கங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா, மிக அழகான அற்புதமான பதிவு. ஸ்ரீ முருகப்பெருமானின் திருக் கல்யாணக் காட்சிகளை நாங்களும் நேரில் வந்து தரிஸித்தது போல மகிழ்ச்சியாக உள்ளது.

  படங்கள் எல்லாமே சூப்பரோ சூப்பராக பளிச்சென்று உள்ளன.

  பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 3. அழகான படங்கள்.... நீங்கள் ரசித்த காட்சிகளை எங்களுக்கும் காணத் தந்தமைக்கு மிக்க நன்றிம்மா....

  பதிலளிநீக்கு
 4. அழகிய படங்கள். திருக்கல்யாணத்தை நேரில் பார்த்த உணர்வு. முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே என்று பாடத் தோன்றுகிறது. பழமுதிர்சோலை அற்புதமான ஸ்தலம்.


  பதிலளிநீக்கு
 5. அழகான படங்களுடன் நாங்களும் திருப்பரங்குன்றத்தில் முருகன் திருமணக் காட்சிகளை கண்டு பேறு பெற்றோம்...

  பதிலளிநீக்கு
 6. தெளிவான படங்கள் மண்டபத்தில் நாமும் உட்கார்ந்து அழகன் முருகன் ஆறுமுகனின் திருமண வைபத்தைக் கண்டு களித்த உணர்வைத் தந்தது.

  இந்த பேற்றைத் தந்த உங்களுக்குத் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ராஜலட்சுமி பரமசிவம் , வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
  நாங்கள் சுவாமி தரிசனம் முடித்து மண்டபத்திற்குள் 9.30 க்கு நுழைந்து அமர்ந்து விட்டோம். எங்களுக்கு முன்பே 10 வரிசை அமர்ந்து விட்டார்கள். அவர்கள் பின்புறத்தில் அமர்ந்து இவ்வளவு தான் எடுக்க முடிந்தது ஜூம் செய்து.

  உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் வெங்கட். வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  பழமுதிர் சோலை அற்புதமான தலம் தான்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  அருமையான முருகன் பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் திண்டுக்கல் தனாஅலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  திருமணக்காட்சியை காணும் பேற்றை தந்த முருகனுக்கு
  நன்றி சொல்லவேண்டும் சார்.

  உங்கள் அனபான கருத்துக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 14. நேரில் வந்திருந்தால்கூட இவ்வளவு துல்லியமாகப் பார்த்திருக்க முடியுமோ என நினைக்குமளவு அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. படங்களும் அருமை. எங்களையும் தரிசிக்கவைத்ததற்கு நன்றி. உங்களுக்கு அடிக்கடி கோவில் தரிசனம் கொடுத்துவைத்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
  இறைவன் அருளால் முடிந்தவரை கோவில்களுக்கு சென்று
  இறை தரிசனம் செய்வோம், அப்புறம்
  வீட்டில் இருந்தபடி இறைநாமத்தை உச்சரிக்க வேண்டியது தான்.
  வானொலி, தொலைகாட்சி ஆகியவை கோயில் உலா நிகழ்ச்சிகளை நாள்தோறும் நம் வீட்டுக்கே தருகிறார்கள் அதை பார்த்து மகிழ வேண்டும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. அருமையான படங்களுடன் கூடிய பதிவு. கூடவே ஒரே பெண்ணை எத்தனை முறைதான் மணமுடிப்பார்கள் என்னும் எண்ணமும் எழுகிறது. கோபிக்க வேண்டாம் எண்ணம் தவிர்க்க முடியவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  தினம் கல்யாண உற்சவம் செய்து மகிழ்கிறார்கள். பக்தி சேன்ல்களில்.
  நாம் வருட வருடம் திருமணநாள் கொண்டாடுகிறோம்.
  தெய்வதிருமணங்களை செய்து மகிழ்கிறார்கள் பக்தர்கள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 20. திருக்கல்யாண நிகழ்ச்சிகளை சற்று தாமதமாகத்தான் கண்டு களித்தேன். மனம் நிறைந்த பக்தி நிகழ்ச்சிகள். நேரில் பங்குகொண்ட உணர்வு. நன்றி . அன்புடன்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு