புதன், 2 நவம்பர், 2016

செஞ்சேரி முருகன் திருக்கோயில்( மந்திரகிரி வேலாயுத சுவாமி)


முருகன் விமானம்செஞ்சேரி மலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலுக்கு  2012 ம் வருடம்  பிப்ரவரி மாதம் 2 ம் தேதி என் கணவரின் தம்பி குடும்பத்துடன் அவர்கள் காரில் சென்று இருந்தோம். 

 வழி- சூலூர் , காரணம் பேட்டை , கரடி வாவி, சுல்தான் பேட்டை . மாலை 3. 30 க்கு கிளம்பினோம். முதல்நாள் தைப்பூசம் நடந்து முடிந்து இருந்தது. தேர் நிலையில் நின்றிருந்தது..

                                              

தைப்பூச விழாவிற்குப்  போட்டு இருந்த கடைகளை   எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
                                     

முருகன் இருக்கும் மலை சிறிய மலைதான் , மலையைச் சுற்றிவர கிரிவீதி இருந்தது. அழகிய படிக்கட்டுகள் மலையின் கிழக்கு பகுதியில் இருந்தது. 
                                          
                               படி மண்டபங்கள்  இடை இடையே  இருந்தன.

                                             
            படிவழியாக போனால் கோவில் சந்நதிக்கு நேரே போகிறது.
                                                 
                                                     அங்கு ஒரு தோரண வாயில்

                                              
                      செவ்வக வடிவமாய் அமைந்த மண்டபம் , கொடிமரம்.

                                       என் கணவர் வரைந்த  முகப்பு மண்டபம்.         
இங்குள்ள திருமால் வலது கையில் சிவலிங்கத்தை வைத்து க்கொண்டு இருக்கிறார்  அதைத்தான்  நாங்கள் உற்றுப்பார்க்கிறோம்.


பிரகாரத்தில்  சின்ன சின்ன மாடங்கள் உள்ளன

                                              
              வாகனங்களில் செல்லும் பாதை, அழகிய தோரண வாயில்

                                           
                                     வளைந்து வளைந்து போகும் பாதை
பாறைகளைத் தகர்த்து வாகனம் போகப் பாதை அமைத்து இருக்கிறார்கள்.                       
படி ஏறமுடியாதவர்களுக்கு    வாகனங்களில் செல்ல மலையின் பின்புறம் மேற்கில் வாகனப் பாதை உள்ளது வசதியாக இருக்கிறது. வளைந்து வளைந்து செங்குத்தாய்  சாலை கோவிலின் அருகில் முடிகிறது.

சாரின் தம்பி மகன் சிறிய வயது மிக திறமையாக ஓட்டி வந்தான். கோயில் கிட்டே போகும் போது  கவனமாய் ஓட்டவில்லை என்றால் பின்னால் சர சர என்று இறங்க ஆரம்பித்துவிடும். கவனமாய் பிரேக் போட்டு   கார் டயரின் அருகில் ஒரு பெரிய கல்லை வைத்துவிட்டான்.

வடமேற்குப் பிரகாரகத்தின் மூலையில்  உள்ளே நுழையும் வழி உள்ளது.  படி வழியாகச் சென்றால்  சந்திதிக்கு நேரே  கிழக்கு பார்த்த மூன்று நுழைவாயில்கள் உள்ளன

நுழைவாயில் மூன்றாக இருந்தாலும் அம்மன், ஸ்வாமி, முருகன் மூவரையும் ஒரே  மண்டபத்தில் அடுத்து அடுத்துக் காணலாம்.
அம்மன் பெரியநாயகி அம்மன், சுவாமி கைலாசநாதர், தெற்கில் நடராஜர் சன்னதி உள்ளது.

முருகன் மந்திரகிரி வேலாயுத சுவாமி இருக்கும் சந்நதி பெரியது.
முருகன் சூரசம்கார காலத்திற்கு முந்தியது என்பதால்  மயில் முருகனது இடதுபுறம் நோக்கி இருக்கிறது. 


//சூரசம்காரத்திற்கு முன் இந்திரன் மயிலாக இருப்பார் முருகனுக்கு, அப்புறம் சூரசம்காரம்  செய்தபின் சூரபதுமனின் உடல் , ஒரு பாதி சேவலாகவும், மற்றொரு பாதி  மயிலாவும்  மாறின. இறைவன் அவற்றுக்கு ஞானத்தை அளித்து சேவலைக் கொடியாகவும்,  மயிலை வாகனமாகவும்  ஆக்கிக் கொண்டார். அதன் பின் இந்திரனாகிய   மயில் மீதிருந்து   இறங்கி  சூரபத்மனாகிய   மயில்   மீது எழுந்தருளினார். பின் இதுவரை மயிலாகவும் சேவலாகவும் நின்ற  இந்திரனும், அக்கினியும்  முருகன்  அருட்பார்வையால் பழைய வடிவை பெற்றனர்.//

(கந்தபுராணத்தில் படித்தது.)

மந்திரகிரிவேலாயுத சுவாமி ஆறுமுகங்களுடன், பன்னிரு கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடனும், மயிலுடனும்    நின்றகோலத்தில்  காட்சி அளிக்கிறார்.

இடது கையில் சேவலே ஒரு கருவி போல இருக்கிறது,    இது முருகன் தவம் செய்த இடம். இந்த கோவிலை பற்றி இங்குள்ள குருக்கள் சொன்னது :-

இந்த ஊரில்  உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு   மந்திரகிரி என்று பெயர் வைப்பது வழக்கம்   எந்த வீட்டில் பசு, கன்றை ஈன்றாலும்  முதலில் கறந்த பாலை முருகனுக்கு கொடுத்து விடுவார்களாம்.   காரியங்களை தொடங்கும் போது முருகனின்  பூவிழுதல் குறிபார்ப்பார்களாம் ,வலது பக்கம்  பூ விழுந்தால்  நல்லது, இடது பக்கம்  பூ விழுந்தால்  கெட்டது.  இரண்டுபுறமும் விழுந்தால் பரவாயில்லை  என்று அர்த்தமாம்.


 தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்கிறார்கள்.  கோவிலுக்கு வடக்கில்  வள்ளிசுனை உள்ளது.

                                                 

இந்தக் கோவிலில் சஷ்டி, கிருத்திகை, அமாவாசை விஷேச பூஜைகள் நடக்குமாம். கோவையில் இருந்து குருக்கள் வருகிறார்கள் 15 நாளுக்கு ஒருவர் என்று முறை போட்டு வருகிறார்களாம். 
சாயரட்சை  பூஜை    முடிந்து   வெண்பொங்கல்  பிரசாதம்   தந்தார்.

                          கல்வெட்டில் அருணகிரிநாதர்  பாடிய திருப்புகழ்

.இயற்கைக்  காட்சி
மலை மீது இருந்து எடுத்த   ஊரின்  அழகு

மாலைச் சூரியன்
பக்கத்தில் உள்ள மலைகள்

அமைதியும் அழகும் நிறைந்த  மந்திரகிரி மலை அனைவரையும் மகிழ்விக்கும்.

                                                             வாழ்க வளமுடன். 

18 கருத்துகள்:

 1. முகப்பு மண்டபம் உட்பட அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  நலமா?
  உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அற்புதமான படங்களுடன், வழக்கம்போல் அருமையான பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. திருமுருகன் சேவலை ஏந்தியவாறு அருள் பாலிக்கும்
  செஞ்சேரி மலையைப் பற்றிய விவரமான தகவல்கள்..

  அழகான படங்கள்.. கந்தசஷ்டி விழா நாட்களில் அடுத்தடுத்து முருகன் திருக்கோயில்களை பற்றிய பதிவுகள் கண்டு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 5. கோவில் அமைந்திருக்கும் இடமும் கோவிலும் அழகாக இருக்கின்றன. எத்தனை வருடப் பழைய கோவில் அது? ஸாரின் 'முகப்பு மண்டப' ஓவியமும் அழகு.

  மனமே முருகனின் மயில்வாகனம்... குரலே செந்தூரின் கோவில்மணி..

  பதிலளிநீக்கு
 6. நினைவில் இருக்கும் கோவில் உலா வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  கந்த சஷ்டி சிறப்பு பதிவுதான் அடுத்து அடுத்து முருகன் கோவில்கள்.
  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் இருப்பதால் பழைமையான கோயில் தான்.

  ஆண்டு தெரியவில்லை.

  மனமே முருகனின் மயில்வாகனம்... குரலே செந்தூரின் கோவில்மணி//

  எனக்கு மிகவும் பிடித்த பாடல் பகிர்வுக்கும், கருத்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 11. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்....அருமை...


  தங்கள் வழியாக நாங்களும் தரிசித்தோம்...

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் அனுராதா பிரேம். வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. தங்கள் படங்களுடன் சார் வரைந்து முகப்பு மண்டபப் படமும் மிக அருமை.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. படங்கள் அருமை. உங்கள் வழியே நாங்களும் தரிசித்தோம். விஷ்ணுவைப்பற்றிக் குறிப்புகள் காணோமே.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
  விஷ்ணுவை பற்றி குறிப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.
  விஷ்ணு சிவ பூஜை செய்து இருக்கிறார், 1000 மலர்களை வைத்து பூஜை செய்த போது ஒரு மலர் குறைந்து விட்டது என்று தன் கண்மலரை சமர்ப்பணம் செய்தார் என்று வரலாறு சொல்கிறது . அதை சொல்வது போல் அமைத்து இருக்கலாம்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு