ஆடி வருகுது வேல்!
ஆடி வருகுது வேல் சுற்றி நில்லாதே பகையே!
முத்தான முத்துக்குமரா முருகையா வாவா
சித்தாடும் செல்வக் குமரா சிந்தைமகிழ வாவா
நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி வருகுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் வருகுதையா
---------------------------------
வாழ்க வளமுடன்.
பெங்களூர் ரமணி அம்மா அவர்கள் பாடிய இந்த பாட்டைக் கேட்கும் போதலெல்லாம் மனக்கண்ணில் ,வேலும், மயிலும் ஆடிவருவதும், மக்கள் கூட்டம் வரும் காட்சியும் விரியும்..
விராலி மலை மேல் சண்முகநாதர் கோவில்
காரில் போகும் போது எடுத்த படம்.
சமீபத்தில் நானும் என் கணவரும் விராலிமலை சண்முகநாதர் கோவில் போயிருந்தோம். திருச்சியிலிருந்து 20 கி,மீ தூரத்தில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்.
நிறைய மயில்கள் உள்ள ஊர். நாங்கள் அங்கு படியேறும்போது எங்களுக்கு முன் தோகைமயில் ஒன்று அழகாய்ப் படியேறிக் கொண்டிருந்தது.(அதற்கு முருகனிடம் என்ன பிரார்த்தனையோ? )
அப்போது மழை மேகம் இருந்ததால் இன்னொரு மயில் தன் தோகையை விரித்து அகவியவாறு ஆடியது. அது முருகனைப் நினைத்து பாடியாடிதைப் போல இருந்தது. இருந்தாலும் அதன் பின்புறத்தைக் காட்டியவாறு ஆடிக்கொண்டிருந்தது. பக்தர்கள், திரும்பியாடு முருகா என்று ஆரவாரித்தார்கள். ஆனால் அது நீண்டநேரத்திற்குப் பின் தான் திரும்பியது.திரும்பும்போதே அது தன் தோகையைச் சுருக்க ஆரம்பித்தது. அவசரமாக எடுத்ததால் அந்தப் படம் தெளிவாக இல்லை.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனின் மீது திருப்புகழ பாடியுள்ளார்,
இங்கு உள்ள ஒரு பாறையில் அருணகிரிநாதருக்கு மயில் மீது வந்து முருகன் காட்சி தந்தாராம். அஷ்டமா சித்திகளை அவருக்கு அருளிய தலம். வயலூர் வந்த அருணகிரியை விராலிமலை வா என்று முருகன் அழைத்தாராம், வழி தெரியாமல் நின்ற போது வேடனாக வந்து வழி காட்டினாராம்.
மலைமேல் உள்ள கோயிலில் ஆறுமுகர் வள்ளி , தெய்வானையுடன் காட்சி தருகிறார். அவரது மூன்று முகங்கள் நேராகவும் மூன்று முகங்கள் பின்புறமுள்ள கண்ணாடியிலும் தெரிகின்றன. புறக்கண்களால் பார்க்கக் கூடிய மூன்று முகங்கள் நேராகவும், அகக்கண்களால் பார்க்க கூடிய மூன்றுமுகங்கள் கண்ணாடியிலும் தெரிகின்றன.
சூரனுக்குத் தூது சென்று விசுவரூப தரிசனம் கொடுத்த வீரபாகுவின் பெரிய உருவச்சிலை உள்ளது. அருணகிரிநாதர், விநாயகர்,சிவன், பார்வதி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு
உருவச்சிலைகள் உள்ளன.
சஷ்டி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுமாம். சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை சிறப்பு.
சஷ்டி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுமாம். சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை சிறப்பு.
மலையழகைக் காண்பதற்காகக் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் இருந்து இயற்கை அழகைப்பார்க்கலாம் என்றால் குரங்குகள் நிறைய நின்றன . இங்குக் குரங்குக் கூட்டத்தின் குறும்புகளைத் தான் காண முடிந்தது.
மரங்களிலும் பாறைகளிலும் மயில்கள் அமர்ந்த காட்சிகளைக் கண்டவாறே மலையிலிருந்து இறங்கினோம்.
சூரபதுமனை அழிக்க ப் போர் தொடுக்கும் முன் தூது அனுப்பினர் ,வீரபாகுவை சூரனிடம். ஆஜாநுபாகுவாக சூரனின் முன் காட்சி அளித்தார் . அந்த அற்புதத் திருவுருவம் இங்கு இருக்கிறது.
முருகன் அழகிய முருகன் நல்ல உயரமான முருகன். நிறைய அற்புதங்கள் நடத்தி இருக்கிறார். சித்தர்கள் நிறைய பேர் இருந்து இருக்கிறார்கள் இங்கு.
கந்த சஷ்டி சிறப்புப் பதிவாய் முருகன் அருளால் ஆறு பதிவுகள் தொடர்ந்து போட அருளிய முருகனுக்கு நன்றி.
தொடர்ந்து வந்து கருத்துச்சொன்ன அன்பர்களுக்கு நன்றி.
சூரபதுமனை அழிக்க ப் போர் தொடுக்கும் முன் தூது அனுப்பினர் ,வீரபாகுவை சூரனிடம். ஆஜாநுபாகுவாக சூரனின் முன் காட்சி அளித்தார் . அந்த அற்புதத் திருவுருவம் இங்கு இருக்கிறது.
முருகன் அழகிய முருகன் நல்ல உயரமான முருகன். நிறைய அற்புதங்கள் நடத்தி இருக்கிறார். சித்தர்கள் நிறைய பேர் இருந்து இருக்கிறார்கள் இங்கு.
கந்த சஷ்டி சிறப்புப் பதிவாய் முருகன் அருளால் ஆறு பதிவுகள் தொடர்ந்து போட அருளிய முருகனுக்கு நன்றி.
தொடர்ந்து வந்து கருத்துச்சொன்ன அன்பர்களுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
கந்தர் சஷ்டி பதிவுகள் உங்களுக்கு முருகன் மேல் இருக்கும் ஆழ்ந்த அபிமானத்தைக் காட்டுகிறது வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குசென்று பார்க்க வேண்டிய தலம்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஆஹா, விராலிமலைக்கு வந்திருந்தீர்களா !!!!!
பதிலளிநீக்குவிராலிமலை வழியே பலமுறை பேருந்தில் நான் வெளியூர்களுக்குச் சென்றுள்ளேன்.
நான் திருச்சியிலேயே இருந்தும்கூட விராலிமலையில் இறங்கி இதுவரை அந்தக்கோயிலுக்குச் சென்றது இல்லை.
தங்களின் இந்தப் பதிவினில், விராலிமலைக் கோயிலையும் அங்குள்ள மயில்களையும் இன்று கந்தசஷ்டி நல்ல நாளில் தரிஸித்தது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
உங்கள் வேகத்திற்குப் பின் தொடர முடியவில்லை.
பதிலளிநீக்குதொடர்ந்து திருமுருகன் திருநாட்கள் என்பதினால், தினம் ஒரு முருகன் திருத்தலமா?..
இந்த ஸ்தலமும் பார்த்ததில்லை! மயில்களின் கூடு!
பதிலளிநீக்குஇன்று.இன்று..
முருகனுக்கொரு நாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவத் திருநாள்
வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றி சார்..
வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநேரம் கிடைக்கும் போது போய் பாருங்கள்.
உங்கள் வரவுக்கு நன்றி.
இன்று 05.11.2016 இப்போது (9 PM to 10 PM) எங்கள் குடியிருப்பு வளாக கட்டட வாசலில் சூர சம்ஹார உத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.
பதிலளிநீக்குநாங்கள் எங்கள் வீட்டு ஜன்னல் வழியாகக் கண்டு களித்துக்கொண்டு இருக்கிறோம்.
ஆட்டுகடா வாகனத்தில் ஜோராக கையில் வேலுடன் ஸ்ரீ முருகப்பெருமான்.
அவரை எதிர்த்து பல ரூபங்களில் பல தலைகளுடன் சூரன் வந்து கொண்டிருக்கிறான்.
ஒவ்வொரு முறையும் அவன் தலை வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது.
சூரன் வையாளி ஆட்டத்துடன் விழா ஜோராக நடைபெற்றுக்கொண்டுள்ளது.
என் வீட்டுக்கு அருகேயுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லீ ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலின் ஏற்பாடு இது. ஒவ்வொரு வருஷமும் ஜகத் ஜோதியாக நடைபெற்று வரும் விழா இது.
கடைசி சூரன் தலை வெட்டப்பட்டதும் ஸ்வாமிக்கு ஸ்பெஷல் தீபாராதனைகள் நடைபெறும்.
அதன் பின் பல பத்தாயிரம் வாலா பட்டாஸுகள் தெரு மத்தியில் மிக நீளமாக வைத்து வெடித்துக் கொண்டாடுவார்கள்.
வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநான் பல வருடங்களுக்கு முன் வந்தோம் சார். இருமுறை வந்து இருக்கிறோம்,
குழந்தைகளுடன், அப்புறம் நாங்கள் மட்டும். நாங்களும் வெளியூர்களுக்கு போகும் போது வரும் போதும் இறங்கி கும்பிட்டு போனது தான் சார்.
முருகன் மிக அழகாய் இருப்பார் முடிந்தால் சென்று பாருங்கள்.
கந்தசஷ்டிக்கு முருகன் பதிவுகள் போட ஆசை ஆனால் புது புது கோவில்கள் போக முடியவில்லை. முன்பு போன கோயில்கள் பதிவு ஏற்றாமல் இருப்பது, போட்ட பதிவை மீள்பதிவாய் போட்டு என்று ஆறு நாட்களை எப்படியோ முருகன் அருளால் நிறைவு செய்து விட்டேன்.
திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்களை நினைத்துக் கொண்டேன். தினம் ஒரு பதிவு பக்தி மணம் கமழ போட்டு கொண்டு இருப்பார்கள் , எப்படித்தான் போட்டோர்களோ! என்று வியக்க வைத்தவர்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநான் இந்த முறை ஆறு நாளும் போடலாமே என்று போட்டேன் சார்.
என்னாலும் முடியவில்லை, காலை கோவில் தரிசனம், கந்தபுராணம் படித்தல்,
வீட்டு வேலைகள் இவ்வளவுக்கும் இடையில் இணையம் என்று எப்படியோ நிறைவு செய்து விட்டேன் சார் மீள் பதிவுகள் போட்டு.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் மயில்களின் கூடு தான் விராலி மலை.
இன்றைய முருகன் பாடல் பகிர்வு அருமை.
தினம் தொடர்ந்து வந்து முருகன் பாடல்களும் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//எங்கள் குடியிருப்பு வளாக கட்டட வாசலில் சூர சம்ஹார உத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.
நாங்கள் எங்கள் வீட்டு ஜன்னல் வழியாகக் கண்டு களித்துக்கொண்டு இருக்கிறோம்.//
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் சார்.
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை மட்டும் தான். சூர சம்ஹார உத்ஸவம் கிடையாது. மாலை ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தோம்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஆறுமுருகனுக்கு அழகான ஆறு பதிவுகள்... அருமை... வாழ்த்துக்கள் அம்மா...
பதிலளிநீக்குசிறு வயதில் அப்பா , அம்மா...உடன் கூஜா வில் பால் எடுத்துக் கொண்டு சென்றது மனதில் வருகிறது....ஆனால் கோவிலை பற்றிய நினைவுகள் இல்லை...
பதிலளிநீக்குஅவ்வழியாக செல்லும் போது இவரை நினைக்க மறந்ததும் இல்லை..
தொடர் முருகன் பதிவுகளுக்கு நன்றி...
முந்தைய பதிவுகளையும் பார்த்து விட்டு வருகிறேன். அனைத்துப் பகிர்வும் தகவல்களுடன் அருமை. சஷ்டி நேரத்தில் எங்களுக்கும் சிறப்பான தரிசனம். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅனைத்துப் பகிர்வுகளையும் படித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அனுராதா பிரோம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபோகும், வரும் போது அவரை வழிபட்டு தான் செல்வோம் நாங்களும்.
உங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டத்ற்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
விராலிமலை தரிசனம் அற்புதம். நேரில் கண்டு களிப்பதுபோல எனக்கு இருக்கிறது. இப்பேர்ப்பட்ட பதிவுகளின் மூலம் எல்லாவற்றையும் விடாமல் தரிசிக்க முடிகிறது. நேரில் போயிருந்தால் கூட ஏதாவதை மறந்து விடுவோம். மயிலும் மலை ஏறியது அழகாக இருந்தது. கண்டேன் களித்தேன் என்று எழுதுகிறேன். நன்றி. அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களை சில பதிவுகளில் காணோம் என்று தேடினேன்
சஷ்டி சிறப்பு பதிவாக ஆறு பதிவுகள் போட்டு இருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது பாருங்கள்., இன்று முருகன் திருக்கல்யாணம்.
உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.
விராலிமலை சென்றுள்ளேன். தற்போது உங்கள் பதிவு மூலமாக மறுபடியும். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குஇது என்ன அதிசயம்!!!
முருகன் என்னை இப்படிக் காண வைத்தானே!!!
மயில் ஏறும் அழகு மலைக்க வைக்கிறது. ஏதோ விராலி மலை என்று ஆரம்பித்த நம் பேச்சு
இப்போது இங்கே கொண்டு வந்துவிட்டிருக்கிறது.
அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.
மிக மிக நன்றி கோமதி.என் அன்புத் தங்கச்சி வாழ்க
வளமுடன். முருகன் நம்முடன் எப்பொழுதும் இருக்கட்டும்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//இது என்ன அதிசயம்!!!
முருகன் என்னை இப்படிக் காண வைத்தானே!!!//
முருகன் உங்களை விரலிமலை மயிலைப்பற்றி சொல்லவைத்தான்.
அதனால் என் மூலம் இந்த பதிவை காணவைத்தான். முருகனை நினைக்க வைத்தான்.
//அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.//
நன்றி அக்கா.
முருகன் அருள் என்றும் வேண்டும். எப்போதும் இருக்கட்டும் முருகன் நம்முடன்.
பதிலளிநீக்குஅப்போது மழை மேகம் இருந்ததால் இன்னொரு மயில் தன் தோகையை விரித்து அகவியவாறு ஆடியது. அது முருகனைப் நினைத்து பாடியாடிதைப் போல இருந்தது. இருந்தாலும் அதன் பின்புறத்தைக் காட்டியவாறு ஆடிக்கொண்டிருந்தது. பக்தர்கள், திரும்பியாடு முருகா என்று ஆரவாரித்தார்கள். ஆனால் அது நீண்டநேரத்திற்குப் பின் தான் திரும்பியது.திரும்பும்போதே அது தன் தோகையைச் சுருக்க ஆரம்பித்தது. அவசரமாக எடுத்ததால் அந்தப் படம் தெளிவாக இல்லை.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனின் மீது திருப்புகழ பாடியுள்ளார்,////////////இதுதான் அற்புதம். மயிலைக் காண்பது பெரும்பாக்கியம்.
நானும் இந்த பதிவை உங்களால் மீண்டும் படித்தேன்.
நீக்குமயிலை காண்பது பெரும் பாக்கியம் என்றும் தெரிந்து கொண்டேன்.
சார் இரு முறை மயில் ஆடுவதைப்பற்றி சொற்பொழிவு செய்தார்கள் மாயவரம் மயூரநாதர் கோவிலில், அப்போது மயில் தோகைவிரித்து ஆடிக் கொண்டே இருந்தது.
இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.