புதன், 9 நவம்பர், 2016

விஷம் நீக்கும் பிள்ளையார்கோயில், கொடிக்குளம்


விஷம் நீக்கும் பிள்ளையார். சிறிய சிவலிங்கம், இருபுறமும் நாகங்கள், மூஞ்சூறு எல்லாம் ஒரே வரிசையில் இருக்கிறார்கள்.
திருமணப் பத்திரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

                           பிள்ளையாருக்கு எதிரில் நந்தி  இருக்கிறது.

உயரமான மரங்களின் நிழலில் அழகாய் கொலுவிருக்கிறார் பிள்ளையார்

பிள்ளையாரின் எதிரில்  இரண்டு கல் தூண்களில்  வெண்கல மணிகள்  கட்டி  இருந்தது.

மண்டபக் கூரையிலும் மணிகள்.

பிள்ளையார் கோயிலின் வாசலில் அமர்ந்து இருந்த  ஒருவர்  எங்களைப் பார்த்து விஷம் சொல்ல வந்து  இருக்கிறீர்களா?  என்று கேட்டார்  எங்களுக்கு புரியவில்லை என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்ட போது  விஷப்பூச்சிகள் கடித்தால்  இங்கு வந்து வேண்டிக் கொள்வார்களாம் . குணமாகியதும் நேர்த்திக்கடனாய் மணிகளைக் கட்டுவார்களாம்.  அதுதான் விஷம் சொல்ல வந்தீர்களா? அல்லது பெருமாள் கோயிலுக்கு வந்தீர்களா என்று கேட்டேன் என்றார்.
இன்று பெருமாள் கோவிலில்நடக்கும் விழாவிற்கு பெரிய பெரிய சாமிகள் எல்லாம் வருவார்கள் என்றார்.  பிள்ளை லோகாச்சாரியார் வைபவத்திற்கு வருபவர்களை பற்றிச்  சொன்னார்.   7.11/,2016 ல் எழுதிய எனது பதிவைப் படித்து இருப்பீர்கள் அல்லவா?


வர்ணத்தில் இருந்தார்    முருகன்அகலமாக இருந்த மரத்தைச் சுற்றி மணிகள்.

பிள்ளையார் கோவில் அருகிலிருந்த  எல்லா மரங்களிலும் மணிகள்

வேப்பமரத்தின் அடியில்  மேடை கட்டி அதைச் சுற்றி நாகங்கள்.
பிள்ளையார் கோவில் பின் புறம் அரசமரம் அங்கிருந்த மேடையில்  நாகங்கள்  வேப்பமரமும் புதிதாக வைத்து அதுவும் நன்கு வளர்ந்து கொண்டு  இருக்கிறது.
 கால்நடைகளுக்குத் தண்ணீர் வைக்கும் கல்தொட்டி


காராம்பசுக்கள், கொக்குகள்
மாடுகள் நடக்கும் போது கூடவே கொக்குகள் நடப்பது பார்க்க அவ்வளவு அழகு
குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு, சீஸாபலகை   உள்ளன
கிராமக்  கோவிலாம் இங்கு பெண்கள் சுற்றி வரக்கூடாது என்றார்  ஒரு பெரியவர் வெளியில் நின்று கும்பிடலாம் என்றார்.
தாமரைக்குளத்திற்கு வலது பக்கம் பிள்ளை லோகாச்சாரியார் திருவரசு, இடது பக்கம்  விஷம் நீக்கும் பிள்ளையார் கோவில்
ஆனைமலையில் தேனீ கூடு


கொடிக்குளத்தில் உள்ள ஜோதிஷ்குடி போகும் பாதையின் ஆரம்பத்தில் இந்த பிள்ளையார்  இருக்கிறார். அழகான குடில்
ஊருக்குள் நுழையும் போதே விஷம் சொல்ல வருபவர்கள் செருப்பு அணிந்து வரக்கூடது என்று  அறிவுப்பு  பலகை வைத்து இருக்கிறார்கள்.  பிள்ளையார் பார்க்க வருபவர்கள் பிள்ளை லோகாச்சாரியார் கோயில்  போகலாம்,   பிள்ளை லோகாச்சாரியாரை   தரிசிக்க போகிறவர்கள்   பிள்ளையாரையும்  தரிசிக்கலாம்,  நிறைய பேர்களுடன்   சாப்பாடு கட்டிக் கொண்டு போய்  நகரத்தின் சந்தடி இல்லாமல் அமைதியாக  இயற்கையை  களித்து வரலாம்..  இயற்கையைப் பாழ்  செய்யாமல் வரலாம்.
குப்பைகள்  இல்லாமல் சுத்தமாய்  இருக்கிறது  அப்படியே பராமரித்து வரலாம்.  மரங்கள் எல்லாவற்றிற்கும் மண் அனைத்தும் வைத்து  இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

கோயில் இருப்பிடம்;-

மதுரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரையிலிருந்து ஒத்தக்கடையைக் கடந்து மேலூர்   செல்லும் வழியில் இடது புறம் திரும்பி கொடிக்குளம்  செல்லும் பாதையில் 2 கி.மீ செல்ல வேண்டும்.

                                                           வாழ்க வளமுடன்
                                                                 -------------------

18 கருத்துகள்:

 1. இதுவரை சென்றதில்லை... செல்ல வேண்டும்... நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமானதொரு கோயில்! அழகான படங்கள் தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. தினம் ஒரு கோயில் பற்றி ..... :)

  அருமையான படங்களுடன், வழக்கம் போல அழகான தகவல்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  பிள்ளை லோலாச்சாரி கோவில் போன போது பார்த்தது தான் சார்.
  இந்த கோவிலும் அதே இடத்தில் தான் இருக்கிறது.
  இரண்டையும் சேர்த்து போட வேண்டாம் என்று தனி பதிவாக
  போட்டேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 7. பிள்ளையாருக்கு எதிரில் நந்தி! அட!

  எவ்வளவு மணிகள்!! அப்பப்பா....

  புதிய அறிமுகங்கள்.. படங்கள் கவர்கின்றன.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  கீழே கிடக்கும் பட்டு போன மரத்திலும் மணிகள் இருந்தன.
  அதை படம் எடுக்க மறந்து விட்டேன்.
  அவர்கள் வேண்டுதல்கள் பலித்தக் காரணத்தால் தானே !
  என்று நினைக்கும் போது
  பிள்ளையாரின் பெருமை புரிகிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அமைதியான இடத்திலிருந்து அருள்பாலிக்கும் விநாயகர். நோய் தீர்ந்து மக்கள் கட்டிய மணிகள்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இடமும், கோவிலும் அழகு..

  ஆச்சாரியார் பிள்ளை லோகாச்சாரியர் கோவிலுடன்...
  விஷம் நீக்கும் பிள்ளையாரையும் வணங்கினோம்...

  பதிலளிநீக்கு
 11. கொடிக்குளம் பிள்ளையார் விஷம் நீக்கும் பிள்ளையாராக இருக்கிறார். மணிகளின் களமாகவும் இருக்கிரார். சிவலிங்கமும் உடன் இருப்பதால் நந்தியும் எதிரில் அமைந்துள்ளது என்று நினைக்கிறேன். மண்டபம்,மரங்கள் யாவும் மணிகளால் நிறைந்திருப்பதைப் பார்க்கும்போது எவ்வளவு விசேஷம் வாய்ந்த பிள்ளையார் என்று மனதாலேயே வணங்கத் தோன்றியது. காராம்பசுவும்,கொக்கும், மற்ற ஏனைய படங்களும் மிகவும் அழகு. பதிவின் மூலமே தரிசித்த உணர்வினைக் கொடுத்த உங்களுக்கு மிகவும் புண்ணியம். நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  ஆம் ராமலக்ஷ்மி, அமைதியான இடம். மக்கள் குறைதீர்த்த சாட்சியாய் மணிகள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
  உங்கள் தொடர் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொன்னது போல் உள்ளே சின்ன சிவலிங்கம் இருப்பதால் நந்தி இருக்கிறது. மூஞ்சூறு வாகனமும் இருக்கிறது.
  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. எனக்கு இங்கு (உகாண்டாவில்) ஏதொ பூச்சி கடித்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
  ஊருக்கு வரும்போது சென்றுவர வேண்டும் நன்றி

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சிவகுமாரன், வாழ்க வளமுடன்.
  ஊருக்கு வரும் போதும் சென்று வரலாம். இப்போது
  மனதால் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள் சரியாகிவிடும்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஆனைமலையே சுற்றிப் பார்க்க ஆசைதான். ஆனால் முடியலை! இந்தக் கோயில் குறித்து இப்போது தான் கேள்விப் படுகிறேன். நல்ல பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு