வாழைக்காய் அப்பளம்
எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்
திங்கள் பதிவுக்கு சமையல் குறிப்பு கேட்டார்கள்
கீதா அக்கா சொல்லி இருப்பது போல உங்களிடமிருந்து கட்டாயம் ஒரு சமையல் குறிப்பு உடனேஎதிர்பார்க்கலாமா? பேராசை எனக்கு!
//உற்சாக மன நிலையில் உணவு சமைத்தபோது படம் எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவேன்.//
என்ற என் பின்னூட்டத்தில் போட்டதை வைத்தே என்னை எழுத வைத்து விட்டார் ஸ்ரீராம்.
//இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் அனுப்பலாமே....! தயிர் சாதம் கூட வித்தியாசமாக செய்திருந்தால் அதைக்கூட அனுப்பலாம். நீங்களோ புகைப்படங்கள் எடுப்பதிலும் மன்னி!//
இப்படி வேறு கூடை நிறைய ஐஸ் வைத்தால் எழுதாமல் இருக்க முடியுமா?
//திங்கட்கிழமை. "திங்க"ற கிழமை! //
திங்கட்கிழமை வெளியாகும் சமையல் பதிவை பாராட்டி கீதா சாம்பசிவம் அவர்கள் அழகாய் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள். அந்த புகழ் பெற்ற திங்கட்கிழமையில் நானும் இணைவதில் பெருமை கொள்கிறேன்..
இப்படி எழுதி வைத்து பல வருடம் ஆச்சு. எழுதி வைத்ததை மறந்தே விட்டேன்.
நேற்று கொஞ்சம் வாழைக்காய் அப்பளம் மகன் கேட்டான் என்று செய்தேன். அப்போது நான் மாயவரத்தில் இருந்த போது போட்ட பதிவு நினைவுக்கு வந்தது. போட்ட பதிவை தேடி படித்த போதுதான் டிராப்பிட்டில் இருந்த இந்த பதிவு கிடைத்தது. அதை இங்கே பகிர்கிறேன் இன்று.
கப்பல் பயண தொடர் அடுத்து வரும்.
