கந்த சஷ்டி சிறப்பு பதிவாக தொடர் பதிவு செய்து கொண்டு
இருக்கிறேன்.
இன்று கந்த சஷ்டி - ஆறாம் நாள்
இன்று ஆறாம் படை வீடு பழமுதிர்ச்சோலை இடம் பெறுகிறது.
மதுரை வந்த பின் நிறைய தடவை பழமுதிர்ச்சோலை முருகனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது, ஆங்கில புத்தாண்டு, மற்றும் கிருத்திகை தோறும் தரிசனம் செய்து வருவோம்.
இதற்கு முன் போட்ட பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு
திருப்பரங்குன்றம் திருப்புகழ் கந்த சஷ்டி - இரண்டாம் நாள் நாள் பதிவு
வேலை வணங்குவது எமக்கு வேலை - மூன்றாம் நாள் பதிவு
சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !- நான்காம் நாள் பதிவு
திருத்தணி முருகா தென்னவர் தலைவா ! - கந்த சஷ்டி - ஐந்தாம் நாள் பதிவு திருத்தணிகை.
முருகனுக்கு கடைபிடிக்கும் விரதங்கள் மூன்று
1. வாரா வாரம் செவ்வாய் கிழமை முருகனை நினைத்து விரதம் இருப்பார்கள்
2. கிருத்திகை நட்சத்திரம் அன்று விரதம் இருப்பார்கள்
3. ஒரு மாதம் வரும் இரண்டு சஷ்டியில் விரதம் இருப்பார்கள்
அதில் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் வரும் சஷ்டியில் சூரபன்மனை சம்ஹாரம் செய்த நாள்
அதனால் அது மிகவும் சிறப்பு.
அதிலிருந்து சில படங்கள் இங்கு இடம்பெற்று இருக்கிறது முழுமையாக படிக்க , பார்க்க மேலை உள்ள சுட்டியில் பார்க்கலாம்.
பழமுதிர்சசோலை திருப்புகழ்
வெற்றிவேல் முருகன் அனைவருக்கும் எல்லா நலங்களும், வளங்களும் அருள வேண்டும். இந்த ஆறு நாட்களும் முருகனை சிந்திதோம், ஆறு நாட்கள் வந்து படித்து கருத்துக்கள் கொடுத்து ஆதரவு அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
என் தோழி உமையாளுக்கு அவள் தங்ககை லட்சுமிக்கும் நன்றி . உமையாள் மற்றும் அவள் தோழிகளுடன் கூட்டு வழிபாட்டில் கந்தர் அனுபூதி, சண்முக கவசம், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், முருகன் தனி பாடல்கள்
என்று பாடினோம்.,பாட வைத்தான் முருகன்.
அவள் தங்கை கந்த சஷ்டி விழா அபிஷேகம், அலங்கார பூஜை படம் அனுப்பினாள்.
ஜோதி டிவியில் தினம் ஒரு முருகன் கோயில் பார்த்தேன்.
காலை எப் எம் ரேடியோவில் ஆத்திசூடியில் நல்ல நல்ல பாடல்கள் , முருகன் சிந்தனைகள், சஷ்டி கவசம் கேட்டேன்.
எல்லோருக்கும் நன்றி.
என் மடிகணினிக்கும் நன்றி இடை இடையே மறைந்து மறைந்து மாயம் செய்தாலும் பதிவு போட அனுமதி அளித்தமைக்கு நன்றி.
வெற்றி வேல் வீரவேல்! வெற்றி வேல் வீரவேல்!
பகைவனுக்கும் அருள்வான் கந்தன்
ஆணவம், கன்மம், மாயை எனும் தீமைகளை அழித்து நீலமயில் மீது எழுந்தருளி ஞாலமெல்லாம் வலம் வந்த வேலவனை வெற்றித் திருமகனை கந்தனை, கடம்பனை சரவணனை, செங்ககோட்டு வெற்பனை குகனை ஷண்முகனை -பாலதண்டாயுதபாணியை ஆயிரம் கோடி திருநாமங்களால் அர்ச்சித்து அவரின் திருவருளை பெறுவோம்.
சேவலும், மயிலுமாக மாறிய சூரபத்மனுக்கு ஞானத்தை அளித்து ஆட்கொண்டு , சேவலை தேரிலும், மயிலை வாகனமாக ஏற்று .அருளிய முருகனை வணங்கி மகிழ்வோம்.
.
மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி! போற்றி!
கந்தவேள் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------









பழமுதிர்ச் சோலை தலைப்பு பழமுதிர்ச் சோலையிலே தோழி... பாடலை நினைவுபடுத்தியது.
பதிலளிநீக்குமுருகனின் படங்கள் காலையை மலரச் செய்தன
எனக்கு வருஷம் 16 பாடல்தான் முதலில் நினைவுக்கு வந்ததது!!
நீக்குமகன் செய்து கொடுத்த சூரனின் பதுமைகள் மிக அழகு. பொறுமையாகச் செய்திருக்கிறார்.
பதிலளிநீக்குகவினும் இதனைப் பின்பற்றி முயல்வான். வாழ்த்துகள்.
பழமுதிர்சோலை அழகர்மலையிலேயே இருந்ததால் சிலமுறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
பதிலளிநீக்குமதுரையிலேயே இரண்டு படைவீடுகள்.
ஆறு நாட்களும் பதிவு போட்டு சிறப்பித்து விட்டீர்கக்ள். பழைய பதிவுகளுக்கும் சென்று பார்த்தேன். பார்த்தகிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஅபிஷேகத்தில் வேலுடன் முருகன் உருவம் தெரிவது நல்ல தரிசனம். அழகு.
பதிலளிநீக்குஅறுபடை வீடு என்று அல்லது திருப்புகழ் என்று யேசுதாஸ் ஒரு கேசெட் கொடுத்திருந்தார். அதில் அகரமுமாகி வேறு ராகத்தில் கேட்டிருக்கிறேன். என்னிடம் அந்த கேசெட் இருந்தது. தரங்கிணி தயாரிப்பு.
பதிலளிநீக்குசூரசம்ஹாரம் பார்த்தால் திருமணமும் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய கந்த சஷ்டி நிறைவு விழா பதிவு மிக அருமையாக உள்ளது. பழமுதிர்சோலை முருகனை தரிசித்துக் கொண்டேன். தங்கள் மகன் செய்து தந்த பதுமை சூரர்கள் அழகாக உள்ளனர். திறம்பட செய்த அவருக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள்.
இவ்வருட கந்த சஷ்டியான ஆறுநாட்களும் உங்களுடன் பயணிக்க வைத்து ஆறுபடையிலிருக்கும் கந்தவேளை, முருகப்பெருமானை தரிசிக்க வைத்த உங்களுக்கும் நன்றி. தினமும் ஒவ்வொரு கோவிலாக விமர்சித்து, முருகன் பாடல்கள், திருப்புகழ் பாடல்களை தந்து சிறப்பாக செய்து விட்டீர்கள். எல்லாம் தெய்வ சங்கல்பம். எல்லாம் "அவனருள்" . அவனையே எந்நாளும் போற்றித் துதிப்போம். தினமும் முருகனை காண வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.
இன்றைய பாடல்களை கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமுருகனின் திருமண காட்சி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.
ஆம். சூரசம்ஹாரம் பார்த்தால், மறுநாள் முருகன் தெய்வானையுடனான திருமண வைபவத்தை பார்க்க வேண்டும். இன்றே அதையும் பார்த்தாகி விட்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
/ஆணவம், கன்மம், மாயை எனும் தீமைகளை அழித்து நீலமயில் மீது எழுந்தருளி ஞாலமெல்லாம் வலம் வந்த வேலவனை வெற்றித் திருமகனை கந்தனை, கடம்பனை சரவணனை, செங்ககோட்டு வெற்பனை குகனை ஷண்முகனை -பாலதண்டாயுதபாணியை ஆயிரம் கோடி திருநாமங்களால் அர்ச்சித்து அவரின் திருவருளை பெறுவோம்.
சேவலும், மயிலுமாக மாறிய சூரபத்மனுக்கு ஞானத்தை அளித்து ஆட்கொண்டு , சேவலை தேரிலும், மயிலை வாகனமாக ஏற்று .அருளிய முருகனை வணங்கி மகிழ்வோம்./
நன்றாக சொல்லியுள்ளீர்கள். முருகனை தினமும் தவறாது பணிவோம். அவனருளை தப்பாது பெறுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
தலைப்பில் வெற்றி வேல் என்பது ஓரெழுத்து கனிணியின் தவற்றால் மாறி "வே" என வந்துள்ளது. சுட்டிக் காண்பித்ததமைக்கு மன்னிக்கவும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தலைப்பை சரி செய்து விட்டேன் நன்றி
நீக்குஆறாம்நாள் பழமுதிர் தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குமுருகன் படங்கள் அலங்காரங்கள் நன்றாக இருக்கின்றன.
மகன் கோவிலுக்கு செய்து குடுத்த சூரசம்ஹாரம் மிகவும் அழகாக உள்ளன.
கந்த சஷ்டி காலையில் உங்கள் முருகன் பதிவுகளை படித்து வணங்கிக் கொண்டோம் தொடர்ந்து பதிவூகள் தந்த உங்களுக்கு நன்றி. இறைவன் உங்களை நலமே வைத்திருக்க வேண்டுகிறேன்.
ஓம் முருகா சரணம்.