புதன், 10 நவம்பர், 2021

பழமுதிர் சோலையில் முருகனின் திருமணம்

 


                    திருமணத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுதல்

6.11.2016 ம் வருடம் கந்த சஷ்டிக்கு சிறப்பு  பதிவாக (தொடர் பதிவாக) முருகன் ஆலயங்களை பகிர்ந்து இருந்தேன். அவற்றை  தினம் பார்த்து படித்துக் கொண்டு இருந்தேன். பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனேன்.

பழமுதிர் சோலையில் கண்டு களித்த முருகனின் திருமணத்தை  மீள்பதிவாக போட்டு இருக்கிறேன்.


மலர்ப் பந்தல்,  திருமண விழாக் காண வந்து இருக்கும் கூட்டம்

ஆறாம் படைவீடு சோலைமலையில்  (  பழமுதிர் சோலை) வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்  பார்த்தது இங்கு பதிவாக.  

முருகனின் பொற்பாதங்கள் வெள்ளிப் பல்லக்கில்  வருகிறது


பொற்பாதங்களில் மாங்கல்யத்தை வைத்து அபிஷேகங்கள் செய்யப்படுகிறது .
 பாலபிஷேகம் செய்யப்படுகிறது
முருகனுக்குப் பட்டாடை அணிவிக்கப்படுகிறது.

வள்ளி தெய்வயானைக்குப் பட்டாடைகள் அணிவிக்கப்படுகிறது


வேலுக்குப் பொட்டிடுதல்



                                                         காப்புக்கட்டுதல்

திருமாங்கல்யம்


மங்கள வாத்தியங்கள் முழங்க , முருகப்  பெருமான்  தெய்வயானை தேவியாரின் திருக்கழுத்தில்  திருமாங்கலயத்தைத் தாரணம் செய்தார்.

நல்ல முகூர்த்த நேரத்தில் நம்பிராஜன் , திருமுருகனின் பொற்கரத்தில் , வள்ளிப்பிராட்டியாரின்  திருக்கரத்தை வைத்து , “தவமிருந்து  பெற்ற நாயகியை  தேவரீருக்குத்  தாரை வார்த்துத்  தருகிறேன் “ என்று சொல்லி வேதமுறைப்படி    தாரை  வார்த்துக்  கொடுத்தான்.

 நாரதர்முனிவர்  மறைவிதிப்படி  மங்கலச் சடங்குகளை
நடத்தினார்.  முருகவேள்  தங்கத் திருமண    மாங்கல்ய  நாணினைத்
 தேவியாரின்    திருக்கழுத்தில் கட்டினார்.

- ஸ்ரீ கந்த புராணம்.


                                                         மாலை மாற்றுதல்

                                                           நைவேத்தியம்







                                                               
தீபாராதனை





ஆறுபடை வீடுகளும் இந்த பாடலில் இருக்கிறது  பார்த்து வணங்கி  மகிழ்வோம்.

கலியுகவரதன்   முருகன் - அவன்  விரும்பி  எழுந்தருளியிருக்கும்  படை வீடுகளோ  ஆறு.. அந்த  ஆறையும்  நினைத்தால்  ஆறுமே மனம் ! இவ்வாறு  ஆறுபடை  கொண்டு விளங்கும்  ஆறுமுகப்  பெருமான்  ஆறுமுகம்  கொண்டு  நம்மைக்  காத்தருளுகின்றார்.

28 கருத்துகள்:

  1. அழகிய படங்கள், சுவாரஸ்யமான நினைவுகள்.  பழமுதிர்சோலை சிலமுறைகள் சென்று வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மதுரை வந்த பின் மாத கார்த்திகை , ஆங்கில புத்தாண்டுக்கு அழைத்து சென்றார்கள். குழந்தைகள், உறவினர்கள் வந்த போதும் பழமுதிர்சோலை, அழகர் கோயில் அழைத்து சென்றார்கள். மனம் முழுவதும் நினைவுகள் அதை ஆற்றுப்படுத்தவே ஆறுமுகனை வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.

      நீங்கள் பழமுதிர்சோலை படங்கள் முகநூலில் போட்டு கொண்டு இருந்தீர்கள் பழமுதிர்சோலை போய் இருந்த போது, நினைவு இருக்கிறது.

      நீக்கு
  2. முருகன் திருக்கல்யாணம் இதுவரை எங்கும் பார்த்ததில்லை.  அவ்வளவு வருடங்கள் மதுரையில் இருந்தும் மீனாட்சி திருக்கல்யாணம் ஓரிருமுறை பார்த்திருக்கிறேன், அவ்வளவுதான்.  கூட்டத்தில் சென்று மாட்டிக்கொள்ள விருப்பமிருப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையில் அம்மா வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலில் , மயிலாடுதுறையில், பழமுதிர்சோலையில் பார்த்து இருக்கிறேன். மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு முறை பார்த்து இருக்கிறேன். மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்டம் இருக்கும்.பழமுதிர்சோலையில் அவ்வளவு கூட்டம் இல்லை.

      நீக்கு
  3. ஆமாம், இந்த இனிமையான பாடலில் அறுபடைவீடுகளையும் தரிசிக்கலாம்.  நான் நிறைய படைவீடுகள் பார்த்ததில்லை என்பது எனக்கு குறை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார், ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுவாமி மலை, வருடத்திற்கு ஒரு முறை பழனி என்று அழைத்து செல்வார்கள். திருச்செந்தூர் உறவுகளின் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவார்கள் அதற்கு போய் இருக்கிறோம்.திருபரங்குன்றமும் விடுமுறைக்கு அம்மாவீட்டுக்கு வருபோது எல்லாம் போவோம். திருத்தணி மட்டும் தான் நாங்கு தடவை மட்டுமே பார்த்து இருக்கிறோம்.
      சாருக்கு முருகந்தான் இஷ்ட தெய்வம், அதுவும் பழனிமலை முருகன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. அழகான படங்கள் திருமண கோலக் காட்சிகள் அருமை தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. சஷ்டிக்குப் பொருத்தமான மீள் பதிவு. படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      சஷ்டி விரதம் நிறைவு பெற்றதும் திருக்கல்யாணம் இல்லையா? அதுதான் பழமுதிர்சோலையில் கண்டு களித்த திருக்கல்யாண பகிர்வு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. முருகனின் கல்யாண உத்சவங்கள் அடங்கிய பழமுதிர் சோலை படங்களை கண்டு களித்தேன். அனைத்தும் அருமையாக எடுத்துள்ளீர்கள். நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போது, திருப்பரங்குன்றமும், பழமுதிர் சோலையும் ஒரு தடவை சென்றுள்ளேன். இன்னமும் பல தடவைகள் நிதானமாக சென்று தரிச்சித்திருக்கலாம் என இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எதற்கும் அவன் அழைப்பு என்று ஒன்று வேண்டுமில்லையா?

    /கலியுகவரதன் முருகன் - அவன் விரும்பி எழுந்தருளியிருக்கும் படை வீடுகளோ ஆறு.. அந்த ஆறையும் நினைத்தால் ஆறுமே மனம் ! இவ்வாறு ஆறுபடை கொண்டு விளங்கும் ஆறுமுகப் பெருமான் ஆறுமுகம் கொண்டு நம்மைக் காத்தருளுகின்றார்./

    உண்மை. அவனை நினைத்தாலே காயம் பட்ட மனதும் ஆறும். ஆறுமுகன் என்றும் துணையிருப்பான். அவனை நினைக்கும் போது மனதுக்குள் சந்தோஷம் வருகிறது. கந்தா சரணம். முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. முருகனின் கல்யாண உத்சவங்கள் அடங்கிய பழமுதிர் சோலை படங்களை கண்டு களித்தேன். அனைத்தும் அருமையாக எடுத்துள்ளீர்கள்.//

      நன்றி .
      நிதானமாக கண்டு தரிசனம் செய்யும் காலம் வரும். முருகன் அழைப்பார்.


      உண்மை அவரை நினைத்து அவன் பாடல்களை கேட்டு மனம் ஆறி வருகிறது.

      கந்தனின் சரணம் சொல்லி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அனைவரும்.
      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  9. சோலைமலைக்கு ஒரு தடவைதழ்ன் சென்றிருக்கின்றேன்...

    அப்போது ராஜகோபுரம் மற்ற கட்டுமானங்கள் இல்லை..

    அழகான படங்கள்.. இனிய பதிவு..

    முருகன் திருவருள் முன்னின்று காக்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      நிறைய மாற்றங்களை பார்த்து விட்டேன் பழமுதிர் சோலையில் முன்பு நடந்து தான் போக வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் மலை ஏற முடியாது.
      இப்போது காரில், வண்டியில் வசதியாக போகலாம் மலை மேல்.,தேவஸ்தான பஸ் போகிறது. வசதிகள் வந்து விட்டது.
      குரங்குகள் கோபுர பொம்மைகளின் கைகளை உடைத்து விடுகிறது.

      //அழகான படங்கள்.. இனிய பதிவு..//

      நன்றி.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் மிக அருமை அன்பு கோமதி.
    வாழ்க வளமுடன்.

    எத்தனை அழகான தாலி, மாலை. முருகன் என்றாலே அழகு தான்.
    வள்ளி தெய்வானையுடன் முருகனின் திருமணத்தைக்'
    கண்டு மகிழ முடிந்தது.
    சீர்காழியின் அறுபடை வீடு கொண்ட ' படல் எப்பொழுதுமே
    விரும்பிக் கேட்பது.
    இங்கும் கேட்க முடிந்ததே அருமை. மிக நன்றி கோமதிமா.

    கந்தன் அருள் எங்கும் நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து பாடலை கேட்டது மகிழ்ச்சி.
      நீங்கள் விரும்பி கேட்கும் பாடல் என்பது மகிழ்ச்சி.
      பழமுதிர்சோலை முருகன் மிக அழகாய் இருப்பார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  11. அழகா இருக்கு அக்கா படங்கள் அத்தனையும். ஓ சஷ்டிப் பதிவு இல்லையாக்கா. நான் தாமதமாக வந்திருக்கிறேன். படங்களை ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க அக்கா மிகவும் ரசித்தேன்

    இதுவரை முருகனின் கல்யாண உத்சவம் பார்த்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      ஊருக்கு போய் விட்டு வந்துவிட்டீர்களா?

      படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. அழகான படங்கள். திருப்பரங்குன்றத்தில் தேவயானையை மட்டும்தானே முருகன் மணந்து கொண்டதாக புராணம் கூறுகிறது. நீங்கள் பகிர்ந்திருக்கும் படங்களில் வள்ளி, தேவயானை இரண்டு பெரும் இருக்கிறார்களே? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வாழ்க வளமுடன்
      திருபரங்குன்றத்தில் தேவயானையை மட்டுமே மண்ப்பார். திருத்தணிகையில் வள்ளியை மணப்பார்.
      பழமுதிர் சோலையில் இருவருடன் காட்சி அளிக்கிறார்.
      அதனால் இருவருரையும் திருமணம்புரிகிறார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. பழமுதிர்ச்சோலை நிறையத் தரம் போயிருந்தாலும் இம்மாதிரி விழா நாட்களில் போனதிலை.மிக அழகான தரிசனம். காணக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இந்த காட்சிகள் எல்லாம் மீள் பதிவு. கந்த சஷ்டி சிறப்பு பதிவாக ஒரு வருடம் போட்டது.
      இதற்கு சார் அழைத்து போனது ஒரு பெரிய காரியம் அவர்களும் கூட்டத்தில் அழைத்து செல்ல மாட்டார்கள்.
      ஆனால் பழமுதிர்ச்சோலை அவர்களை கவர்ந்து விட்டது, கூட்டம் அள்வாக தள்ளு முள்ளு இல்லாமல் இறைவனை தரிசிக்கலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு