சுவாமி மலை
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு
திருப்பரங்குன்றம் திருப்புகழ் - கந்த சஷ்டி இராண்டாம் நாள் பதிவு
வேலை வணங்குவது எமக்கு வேலை - கந்த சஷ்டி மூன்றாம் நாள் பதிவு
இன்று நான்காம் நாள் கந்த சஷ்டி விழாவில் சுவாமி மலை திருப்புகழ் இடம் பெறுகிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இந்த கோயில் நான்காம் படை வீடு .
குருவாக இருந்து தகப்பனுக்கு அருளியதால் குருமலை என்றும் அழைக்கப்படுகிறது.
இறைவன் இங்கு சுவாமி நாதனாக இருப்பதால் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது. அருண்கிரி நாதரின் பாடல்கள் இடம்பெற்று இருக்கிறது.
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
சிவய.திருக்கூட்டம் வலைத்தளத்தில் இரு திருப்புகழ பாடல்களை எடுத்தேன் அவர்களுக்கு நன்றிகள் பல
சுவாமி மலை பதிவில் சுவாமி மலை படங்கள் இடம்பெற்று இருக்கிறது
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா பாடல்
சுவாமிமலையை இந்த பழைய பாடலில் பார்க்கலாம்
ஆறுபடை வீடுகளையும் காட்டுவார்கள் இந்த பாடலில்
இந்த பாடல் வரிகள் என் பழைய பதிவில் இடம் பெற்று இருக்கிறது
சுவாமி மலை முருகன் அனைத்து செல்வங்களையும் அருள்வான்.
கந்தவேள் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------


சுவாமி மலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாளாக. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பதிலளிநீக்குஇன்றைய திருப்புகழை பல்லவி அனுபல்லவி என்ற வடிவில் பாடியிருக்கிறார்.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//சுவாமி மலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாளாக. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.//
விரைவில் வாய்ப்பு கிடைக்க முருகன் அருள்வான்
//இன்றைய திருப்புகழை பல்லவி அனுபல்லவி என்ற வடிவில் பாடியிருக்கிறார்.//
இன்றும் பாடி பார்த்தீர்களா மகிழ்ச்சி.
சுதா அவர்கள் பாடியது பாட்டு. பிரித்துப் பாடவில்லை என்று தெரிகிறது. பெரும்பாலும் கச்சேரி போலப் பாடுபவர்கள் பிரித்துப் பாடுவதில்லை அப்படியே பாடுகிறார்கள். அப்படிப் பாடும் போது அது என்னவோ போல இருக்கிறது
பதிலளிநீக்குமுதலில் பாடியவர் மிக அழகாகப் பதம் பிரித்துப் பாடுவதால் அர்த்தம் நன்றாக இருக்கிறது. பாடுவதும் எளிதாக இருக்கிறது
கீதா
//சுதா அவர்கள் பாடியது பாட்டு. பிரித்துப் பாடவில்லை என்று தெரிகிறது. பெரும்பாலும் கச்சேரி போலப் பாடுபவர்கள் பிரித்துப் பாடுவதில்லை அப்படியே பாடுகிறார்கள். அப்படிப் பாடும் போது அது என்னவோ போல இருக்கிறது//
நீக்குஅவர்கள் பாணி .
//முதலில் பாடியவர் மிக அழகாகப் பதம் பிரித்துப் பாடுவதால் அர்த்தம் நன்றாக இருக்கிறது. பாடுவதும் எளிதாக இருக்கிறது//
ஆமாம், எளிமையாக பாட எளிதாக இருக்கும் அடுத்த பதிவில் அவர் பாடலை தேடி போடுகிறேன்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா பாடலை இப்பதான் கேட்கிறேன்! நாட்டுப்புறப் பாடல் போன்ற வடிவில் நல்லாருக்கு, கோமதிக்கா
பதிலளிநீக்குகீதா
//அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா பாடலை இப்பதான் கேட்கிறேன்! நாட்டுப்புறப் பாடல் போன்ற வடிவில் நல்லாருக்கு, கோமதிக்கா//
நீக்குபடத்தில் கிராமத்து மக்கள் பாடுவது போலதான் இருக்கும்.
போன முறை பகிர்ந்த பாடல் அந்த பதிவில் இப்போது இல்லை
பாடல் வரிகள் மட்டும் இருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
சுவாமி மலை பற்றிய பதிவையும் பார்த்தேன் கோமதிக்கா
பதிலளிநீக்குஅப்பவும் சஷ்டி நான்காவது நாள் சுவாமிமலைதான் இல்லையா?
கும்பாபிஷேகம் வேலைகள் நடந்து கொண்டிருந்த படமும். விதானத்தில் இருக்கும் ஓவியங்கள் எல்லாம் மிக அழகு, நீங்க சொல்லியிருப்பது போல் எப்படி வரைஞ்சாங்களோ என்ன ஒரு திறமை இல்லையா?
அந்தக் குட்டி அழகன் யார்? அக்கா உங்க உறவினரா?
முருகன் தன் தந்தைக்குப் பிரணவம் சொல்லிக் கொடுத்ததில் ஒரு வாழ்க்கைத் தத்துவமும் இருப்பதாக எனக்குப் படும். நீங்கள் அந்தப் படத்திற்குச் சொல்லியிருக்கும் கருத்தேதான்.
குழந்தைகள் நமக்கு நிறைய சொல்லித்தருகிறார்கள்.
கீதா
//சுவாமி மலை பற்றிய பதிவையும் பார்த்தேன் கோமதிக்கா
நீக்குஅப்பவும் சஷ்டி நான்காவது நாள் சுவாமிமலைதான் இல்லையா?///
ஆமாம் , நான்காம் படை வீடு சுவாமி மலை அதனால் நான்காம் நாள் இடம் பெறுகிறது.
//கும்பாபிஷேகம் வேலைகள் நடந்து கொண்டிருந்த படமும். விதானத்தில் இருக்கும் ஓவியங்கள் எல்லாம் மிக அழகு, நீங்க சொல்லியிருப்பது போல் எப்படி வரைஞ்சாங்களோ என்ன ஒரு திறமை இல்லையா?//
ஆமாம் , பல வருடம் ஆச்சு நான் போன போது கும்பாபிஷேக வேலை நடந்து கொண்டு இருந்தது. முன்பு அடிக்கடி போகும் கோயில்.
//அந்தக் குட்டி அழகன் யார்? அக்கா உங்க உறவினரா?//
இல்லை கீதா, கோயிலுக்கு வந்து இருந்த அழகன்
//முருகன் தன் தந்தைக்குப் பிரணவம் சொல்லிக் கொடுத்ததில் ஒரு வாழ்க்கைத் தத்துவமும் இருப்பதாக எனக்குப் படும். நீங்கள் அந்தப் படத்திற்குச் சொல்லியிருக்கும் கருத்தேதான்.//
ஆமாம். உங்கள் கருத்தும் அதுதானா மகிழ்ச்சி.
//குழந்தைகள் நமக்கு நிறைய சொல்லித்தருகிறார்கள்//
இப்போது அவர்களுக்கு நிறைய தெரிகிறது நமக்கும் அவர்களிடம் கற்றுக் கொள்வதில் சிரமம் இல்லை . அவர்களுக்கு நேரம் இருக்க வேண்டும், நமக்கு கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.