பழனி மூலவர் தங்கவிமானம்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு
திருப்பரங்குன்றம் திருப்புகழ் - கந்த சஷ்டி இராண்டாம் நாள் பதிவு
இன்றைய பதிவில் பழனி திருப்புகழ் இடம்பெறுகிறது.
யூடியூப்பில் இந்த பாடல் பகிர்ந்தவருக்கு நன்றி.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்
ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா
சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்
ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா
சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.
பாடல் வரிகள் எடுத்த இடம் முருகனருள்
திருப்புகழ் புத்தகத்தில் இருப்பதை பார்த்து எழுதலாம் அந்த வேலையை குறைத்து கொள்ள இவர் தளத்திலிருந்து பகிர்ந்து விட்டேன் . நீங்களும் அவர் தளம் சென்று திருப்புகழ் பாடல்களை படிக்கலாம் . பாடல் வரி தேடும் அன்பர்களை அவரும் வருக வருக என்று அழைக்கிறார்.
இவருக்கும் நன்றி.
இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
பாடல் வரிகள் அருள்வெளியில் எடுத்தேன் இவர் தளத்திலும் திருப்புகழ் பாடல்களும் பாடல்களுக்கு அர்த்தமும் பதம் பிரித்து பாடும் முறையும், பதவுரையும் சொல்லி தருகிறார். இவருக்கும் நன்றி.
என்ற பதிவில் போட்ட பழனி படங்கள் சிலவற்றை இந்த பதிவில் போட்டு இருக்கிறேன். மேலும் விவரங்கள் படங்கள் பார்க்க வேண்டு என்றால் இந்த பதிவை படிக்கலாம்.
இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி
பெங்களூர் ரமணி அம்மாள் பாடல் முருகா முருகா பாடல். ஆறுபடை முருகனையும் பாடுவார்
வெற்றிவேல் முருகன் பொற்பாதம் போற்றி போற்றி!
வேலை வணங்குவது எனக்கு வேலை வேண்டும் வரம் தருவது வேலனுக்கு வேலை என்று சொல்வார்கள் எனக்கு இனி என்ன வேண்டும் என்பது வேலனுக்கு தெரியும் அதை அருளினால் போதும் வேலன்.
கந்தவேள் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------

முருகன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குமுருகன் நம் எல்லோரையும் காப்பார்
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகந்த சஷ்டி சிறப்பு பதிவு அருமை. இன்றைய பதிவில் பழனி மலை முருகனை தரிசித்து மகிழ்ந்தேன். பழனி மூலவர் தங்க விமானம் தரிசித்துக் கொண்டேன். மற்றைய படங்களும் நன்றாக உள்ளது. திருப்புகழ் பாடல்களும், பாடல் பகிர்ந்த வர்களின் விபரமும், தெரிந்து கொண்டேன். நேரமிருக்கையில் அங்கும் சென்று படிக்கிறேன்.
/வேலை வணங்குவது எனக்கு வேலை வேண்டும் வரம் தருவது வேலனுக்கு வேலை /
நல்ல அர்த்தமுள்ள வரிகள். நமக்கு வேண்டியதை இறைவன் கண்டிப்பாகத் தருவார். வேண்டுவது ஒன்றுதான் நம் வேலை.
கந்தனருள் எங்கும் பொங்கட்டும். உங்கள் தயவில் நானும் முருகனை மூன்று தினங்களாக இடைவிடாது வழிபட்டு வருகிறேன். தொடரட்டும் தங்களின் சேவை. நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குவணக்கம் சகோதரி
//கந்த சஷ்டி சிறப்பு பதிவு அருமை. இன்றைய பதிவில் பழனி மலை முருகனை தரிசித்து மகிழ்ந்தேன். பழனி மூலவர் தங்க விமானம் தரிசித்துக் கொண்டேன். மற்றைய படங்களும் நன்றாக உள்ளது. திருப்புகழ் பாடல்களும், பாடல் பகிர்ந்த வர்களின் விபரமும், தெரிந்து கொண்டேன். நேரமிருக்கையில் அங்கும் சென்று படிக்கிறேன்.//
ஆமாம் , தேவை படும் போது நேரம் கிடைக்கும் போது அங்கு போய் பாடல்களை கேட்டு மகிழலாம்.
//நல்ல அர்த்தமுள்ள வரிகள். நமக்கு வேண்டியதை இறைவன் கண்டிப்பாகத் தருவார். வேண்டுவது ஒன்றுதான் நம் வேலை.//
ஆமாம் அர்த்தம் உள்ள வரிகள்
//கந்தனருள் எங்கும் பொங்கட்டும். உங்கள் தயவில் நானும் முருகனை மூன்று தினங்களாக இடைவிடாது வழிபட்டு வருகிறேன். தொடரட்டும் தங்களின் சேவை. நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
தொடர்ந்து வந்து பதிவை படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.
எனக்கும் தொடர்ந்து பதிவு போட உடல் துன்பம் மற்றும் கணினி தொந்திரவு இருந்தாலும் பதிவு போட்டபின் மகிழ்ச்சி இருக்கிறது.
உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலா.
பாடல்கள் அருமை. பாடியவர் குரல் மிக அருமை. மிக அழகாக பாடியிருக்கிறார் .இரண்டு பாடல்களையும் ரசித்து கேட்டேன். பாடியிருப்பவர் யார் என்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அடுத்து ஆறுமுகம் ஆறுமுகம் என பூதி என்று இல்லாமல் போதி என்று இருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//பாடல்கள் அருமை. பாடியவர் குரல் மிக அருமை. மிக அழகாக பாடியிருக்கிறார் .இரண்டு பாடல்களையும் ரசித்து கேட்டேன். பாடியிருப்பவர் யார் என்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அடுத்து ஆறுமுகம் ஆறுமுகம் என பூதி என்று இல்லாமல் போதி என்று இருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.//
பாடியவர் பேர் குறிப்பிட மறந்து விட்டேன் அவர் பேர் சம்பந்தம் குருக்கள். அவர் திருப்புகழ் ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். நல்ல குரல் வளம்.
ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுதடவை பாடுவதை பூதி என்று சொல்கிறது.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//பாடல்கள் அருமை. பாடியவர் குரல் மிக அருமை. மிக அழகாக பாடியிருக்கிறார் .இரண்டு பாடல்களையும் ரசித்து கேட்டேன். பாடியிருப்பவர் யார் என்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அடுத்து ஆறுமுகம் ஆறுமுகம் என பூதி என்று இல்லாமல் போதி என்று இருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.//
பாடியவர் பேர் குறிப்பிட மறந்து விட்டேன் அவர் பேர் சம்பந்தம் குருக்கள். அவர் திருப்புகழ் ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். நல்ல குரல் வளம்.
ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுதடவை பாடுவதை பூதி என்று சொல்கிறது.
பெங்களூரு ரமணியம்மாள் பாடலும் கேட்டு ரசித்தேன். எப்போதுமே அவர் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குமுதல் இரண்டு பாடல்களை பாடியிருப்பவர் தர்மபுரி சுவாமிநாதனோ என்கிற சந்தேகமும் இருக்கிறது .
இப்போது கரண்ட் இல்லை. கணினியில் வரும்போது ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.
//பெங்களூரு ரமணியம்மாள் பாடலும் கேட்டு ரசித்தேன். எப்போதுமே அவர் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் பிடிக்கும்.//
நீக்குஆமாம், அதனால் தான் இந்த பகிர்வு
//முதல் இரண்டு பாடல்களை பாடியிருப்பவர் தர்மபுரி சுவாமிநாதனோ என்கிற சந்தேகமும் இருக்கிறது ...
இல்லை சம்பந்தம் குருக்கள்.
//இப்போது கரண்ட் இல்லை. கணினியில் வரும்போது ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.//
அப்புறம் பாருங்கள் நிறைய பாடி இருக்கிறார்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
ஓ இன்று பழனியா! பதிவு பார்த்துவிட்டேன் அக்கா வருகிறேன்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஇன்று பழனிதான் .
மெதுவா வாங்க