சனி, 2 நவம்பர், 2019

கலியுக வரதன்


இன்று காலை  2.11. 2019   சூரசம்மாரம் இல்லையா ! அதனால் பழமுதிர்சோலை போனோம். அங்கு நடைபெற்ற யாகசாலை பூஜை, அபிஷேக , அலங்கார பூஜைகள் இந்தப் பகிர்வில்.
மாலை நடைபெறும் சம்ஹாரம். தாராசுரன்   முதலில் வதம் செய்யப்படுவார், அடுத்து சிங்கமுகன், அடுத்து சூரசம்மாரம். சூரன் தலை சிவப்புக் கலராக அவன் கோபத்தை காட்டுது. சிங்கமுகம் பச்சைக் கலராக இருக்கிறது. 

கூட்டம் கூட்டம்! நாங்கள் யாக சாலை பூஜை,  பார்த்தபின் உற்சவர்களுக்கு 10 மணிக்கு மேல் அபிஷேகம் என்று சொன்னதால்  மூலவரைப்பார்க்க 100 டிக்கட் வாங்கி கொண்டு கூட்டம் இல்லாமல் நிம்மதியாக அர்ச்சனை செய்து கும்பிட்டோம்.  இறைவனுக்கு அணிவித்த மாலை இன்று என் கணவருக்குக் கிடைத்தது  எனக்குத் தாமரைப் பூ.  தங்கக்கவசத்தில், மூவரும் அழகாய் ஜொலித்தார்கள். விபூதி அலங்காரம் முகத்தில். குறுநகையுடன் இருந்தார் முருகன்.
கொடி மரத்திற்குப் போட்ட பெரிய மாலை அழகு
நாங்கள் வாங்கிப் போய் இருந்த தாமரை மலரை  இறைவனுக்கு அணிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டம் இல்லை காலையில் . அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள் தாமரைப் பூவை கொடுத்தவுடன் சாற்றி விட்டார்.

அபிஷேகத்திற்கு  - தங்கம், வெள்ளிக் குடங்களில் புனித நீர்

ஆறு  நாளும் அங்கே   இருந்து இருப்பார்கள் போலும். மூட்டை முடிச்சுகளுடன் இருந்தார்கள் பக்தர்கள். எல்லோரும் மாவிளக்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள்.
யாகசாலையில் கடம், மற்றும் வெள்ளி வேலுக்குப் பூஜை

எல்லா அபிஷேகங்களும் ஆச்சு, சிலவற்றை மட்டும் இங்கு பகிர்கிறேன்
  பஞ்சாமிர்தம்
பால்




தயிர்


                                                            விபூதி

                                                         சந்தனம்

                                                 அலங்கார பூஜை


மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராரு தோள் போற்றி காஞ்சி
 மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி.
-  ஸ்ரீ கந்தபுராணம்
'ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்.'



கலியுகவரதன் முருகன் - அவன் படை வீடுகள் ஆறு.
அந்த ஆறையும் நினைத்தால் ஆறுமே மனம்.


சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா பாட்டி?

அறுபடை வீடு காட்சியாக வைத்து இருந்தார்கள்.



 தேவார, திருப்புகழ் பாடினார்கள் ஓதுவார்கள்.
 குழந்தைகள் நடனம் ஆடினார்கள். அவை எல்லாம் அடுத்த பதிவில்.
                                                         

வாழ்க வளமுடன்.

58 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    கந்தசஷ்டிக்கு அருமையான முருகன் தரிசனம். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை கோவிலின் சிறப்பான தரிசனம் முருகனருளால் இன்று எனக்கு கிடைக்கப் பெற்றது.

    ஒவ்வொரு அபிஷேக படங்களும் நன்றாக அழகாக வந்துள்ளது. அலங்காரப் பிரியனின் கற்பூர தீபாராதனை மன நிறைவை தந்தது. சுட்டப்பழம் வேண்டுமா? என கேட்டு ஔவைக்கு காட்சி தந்த முருகன் தங்கள் பதிவு மூலமாக எனக்கும் காட்சி தந்து விட்டார். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      http://mathysblog.blogspot.com/2019/10/blog-post_31.html

      என் முந்திய பதிவுக்கு உங்களை காணவில்லையே!
      நலம் தானே?

      மாமனை போல் இவரும் அலங்காரபிரியன், அப்பாவை போல் அபிஷேகபிரியன்.
      உங்களுக்கும் முருகன் காட்சி தந்தது மகிழ்ச்சி.
      எல்லோரும் பார்ப்பீர்கள் என்று சோர்வையும் விரட்டி விட்டு பதிவை சூட்டோடு சூடாய் போட்டேன்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      நான் நலமாக எப்போதும் போல் கால் வலி, உடல் வலி என உள்ளேன். இரண்டொரு நாட்களாக கொஞ்சம் வெளி வேலை வேறு. குழந்தைகளுக்கும் ஆபீஸ், சின்னக்குழந்தைகளுக்கும் பள்ளிகள் என விடுமுறை. அவர்களுடனும் சமையல், சாப்பாடு என நேரம் சரியாக உள்ளது. (இப்போது இரண்டு நாட்களாய் விட்டுப் போன எல்லோரின் பதிவுகளையும், கண்டு கருத்துரை தந்து கொண்டே வருகிறேன்.) உங்கள் முந்தைய பதிவுக்கும் வந்து படித்து கருத்துரை தரலாமென வந்தேன். அதற்குள் தங்களுடைய புதுப்பதிவான பழமுதிர் சோலையை கண்டதும், இனிமையான முருகனின் தரிசனம் கிடைத்ததில் அதற்கு கருத்து இட்டு விட்டேன். முந்தைய பதிவை அன்று வெளியில் கிளம்பும் அவசரத்தில் பார்த்ததுதான்...! இப்போது நன்கு படித்து விட்டு வருகிறேன். நன்றி.

      நீக்கு
    3. கமலா ,நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      வெளி வேலைகள், வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்த பின் ஓய்வு வேளையில் தான் பதிவுகளை படிக்க முடியும் நம்மால். அந்த ஓய்வு வேலை மனது மகிழ்ச்சியை தரும் நேரம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. ஆஹா... உங்கள் தயவால் எங்களுக்கும் அற்புத தரிசனம். முருகப்பெருமான் அனைவருக்கும் பூரண அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      முருகபெருமான் அனைவருக்கும் பூரண அருள் புரிய வேண்டும், அதைதான் வேண்டி வந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. அனைத்து அபிஷேக காட்சிகளும் தரிசித்தேன் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. கந்த சஷ்டிக்கொரு திருநாள் என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது!  அம்மாடி...    சுக தரிசனம்... எவ்வளவு படங்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்,வாழ்க வளமுடன்
      நிறைய படங்கள் என்பதால் தான் மீதி படங்கள் அடுத்த பதிவு என்றேன்.
      ஆமாம் , அந்த பாடல் இன்றும் காலை வானொலியில் வைத்தார்கள்.
      பிடித்த பாடல்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      உங்கள் பாஸ் கோவிலுக்கு போய் வந்து விட்டார்களா?

      நீக்கு
    2. இன்று என் பாஸ் கோவிலுக்குப் போய் வந்தது பெரிய கதை.   ஒன்பதரைக்கு வரச்சொன்னார்கள்.  போய்ப்பார்த்தால் அவர் வரவில்லை.  பதினொன்றரை ஆகும் என்றார்கள்.  பாஸா, சாப்பிடாமல் இருப்பதால் வீட்டுக்கு வந்துவிடுனு நான் சொல்ல, அவர் மறுக்க... களேபரம்.  இரண்டு ண்டையானது.  வீடு வந்ததும் தலைப்பேசி வந்துவிட்டது, அவர் வந்து விட்டாரென.  மறுபடி சென்று பன்னிரண்டரை மணிக்கு வந்தார்.   அதற்குள் நான் சமைத்து வித்த்து விட்டேன்.  

      நீக்கு
    3. நல்லது செய்தீர்கள் ஒரு நாள் நீங்கள் சமைத்து கொடுங்கள். பாவம் இங்கு ஒரு மனமும் அங்கிருந்து வர முடியாத மனமுமாய் சாமி கும்பிட்டு இருப்பார் பாஸ்.

      நாங்கள் காலை எட்டு மணிக்கு போனோம், வீடு வர 2 மணி ஆகி விட்டது.
      நான் மட்டும் விரதம். காலை டிபன் சாருக்கு கொண்டு போய் விட்டேன், மதியம் புளியோதரை வாங்கி விட்டேன் அவர்களுக்கு. அபிஷேகம் 10 மணிக்கு என்று சொல்லி விட்டு இடையில் குழந்தைகளின் ஆடல், 11 மணிக்கு தான் அப்புறம் அபிஷேகம்

      நீக்கு
  5. இவ்வளவு படங்கள் உள்ளே எடுக்க முடிந்ததா?   அனுமதித்தார்களா?  ஆச்சர்யமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. மூலவரை மட்டும் எடுக்க கூடாது என்று போட்டு இருக்கிறார்கள்.
    வேறு எல்லா இடங்களிலும் எல்லோர் கைகளிலும் அலைபேசி சிணுங்கி கொண்டே இருந்தது.
    வாகனங்கள், குழந்தைகள் ஆடல், அப்புறம் எல்லா அபிஷேகமும், வானரங்கள் செய்த சேட்டைகள் என்று நிறைய எடுத்தேன். இடம் போய் விடும் என்று இருந்த இடத்திலேயே இருந்து எடுத்த படங்கள். இறைவன் அருளால் அமர்ந்து இருக்க முடிந்தது. விரதம் வேறு அவர் பலம் கொடுத்தார்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் தளத்தில் நான் இடும் கமெண்ட்ஸ், நண்பர்கள் இடும் கமெண்ட்ஸ் என் மெயில் பெட்டிக்கு வருவதில்லை.  ஆனால் எல்லோருக்கும் நீங்கள் இடும் பதில் மட்டும் வருகிறது.  கடந்த இரு பதிவுகளாக எனக்கு இந்நிலை.

    பதிலளிநீக்கு
  8. ஏன் என்று தெரியவில்லையே!
    மற்றவர்கள் தளத்தில் நண்பர்கள் இடும் கமெண்ட்ஸ் வருகிறதா?
    நான் புதிதாக மாற்றுகிறாயா என்று கேட்டு வந்தது தளத்தை மாற்றினேன்.

    நான் புதிதாக மாற்றினேன். Bloggerரை
    புதிதாக மாற்று கிறாயா? என்று கேட்டது
    சரி என்று மாற்றினேன் அதனால் இருக்குமோ!

    No new comments
    Check again later for new comments

    இப்படி வரும் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மற்றவர்கள் தளத்தில் நண்பர்கள் இடும் கமெண்ட்ஸ் வருகிறதா? //

      வருகிறது.  உஙகள் தளத்தில் மட்டுமே இப்படி!    

      இப்போது கூட சகோதரி ப்ரியசகியின் கமெண்ட் என் பாக்ஸுக்கு வரவில்லை.   ஆனால் அவருக்கான உங்கள் பதில் சரியாக வந்து சேர்ந்து விட்டது!

      நீக்கு
    2. நம் வலைசித்தர் திண்டுக்கல் தனபாலன் தான் காரணம் சொல்ல வேண்டும்.
      என்ன காரணம் என்று தெரியவில்லையே!

      நீக்கு
  9. ஆஹா இங்கு நான் எங்க ஊரல வீட்டுகு அருகில் இருக்கும் முருகனை நினைத்தேன். இப்ப ஆறுமுகசுவாமி புறப்பட்டிருப்பார். சூரசம்ஹாரம் ஆரம்பித்திருக்குமென கற்பனையில் அங்கு நடப்பதை நினத்தேன் அக்கா. நீங்க பதிவில் நீங்க பார்த்ததுமில்லாமல் எங்களுக்கு பதிவாக்கியமைக்கு மிக்க நன்றி. உண்மையில் மகிழ்ச்சி. அழகாந தரிசனம் புகைபடவாயிலாக.
    ஆறுபடை விடு காட்சி அருமையா இருக்கு. வாவ்..எவ்வளவு அழகான அலங்காரம் முருகன் வள்ளி,தெய்வானை. கூடவே ஒளவைபாட்டி சூப்பரா இருக்கு.
    நீங்க கொடுத்த பூவினை முருகனுக்கு சாத்தியது அளவில்லா ஆனந்ததை தந்திருக்கும். அப்படமும் அழகா இருக்கு. பிரசாதமா மாலையும்கிடைத்திருக்கே சாருக்கு. முழுமையான அருள் உங்களுக்கு கிடைத்த்ருக்கு அக்கா. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      நீங்கள் மனதில் நினைத்து வணங்கியது மேலும் சிறப்பு.
      உங்கள் ஊரில் சூரசமாரம் சிறப்பாக நடைபெற்று இருக்கும்.

      ஆறுபடை வீடூகளில் உள்ள முருகனை காட்சி படுத்தி இருந்தார்கள்.
      பழமுதிர்சோலை படம் மட்டும் இந்த பதிவில். நிறைய படங்கள் இருக்கிறது, இன்னொரு பதிவில்.

      மற்ற எந்த கோவில் போனாலும் இங்கு போய் வந்த நிறைவு கிடைக்காது அம்மு,

      பக்கத்தில் முருகனை பார்க்கலாம். அலங்காரம் மிக அழகாய் செய்வார்கள் குருக்கள் எல்லாம்.

      நாம் கொடுத்த பூவை நம் கண் முன்னால் சாற்றுவது மனதுக்கு மகிழ்ச்சி தரும் . மூலவருக்கு மாலைகள் வந்து கொண்டே இருந்தது. அதில் ஒரு மாலை இறைவனுக்கு சாற்றியது கிடைத்ததால் மேலும் மகிழ்ச்சிதான். சாருக்கு இஷ்ட தெய்வம் முருகன்.
      மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமரனை தரிசனம் செய்வோம்.

      உங்கள் அன்பான கருத்துக்கும் தொடர் வரவுக்கும் நன்றி அம்மு.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. சிறப்பான தரிசனம் கிடைத்தது அம்மா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. காலை வந்து பார்த்து விட்டு கருத்து போடும் போது யாரோ வந்து விட்டார்கள். மீண்டும் இப்போது தான் வலைப்பக்கம் வரமுடிந்தது.
    முருகனை தரிசித்து, அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை கண்டு வணங்கினேன்.
    பொருமையாக நிறைய படங்கள் எடுத்து இருக்கிறீர்கள் அம்மா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் உமையாள் வாழ்க வளமுடன்
      முடிந்த போது வந்து கருத்து சொல்லுங்கள் உமையாள்.
      பொருமையாக அனைத்தையும் பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி உமையாள்.
      நன்றி.

      நீக்கு
  13. நல்ல தரிசனம் காலை வேளையில். பால், தயிர், சந்தனம் எல்லாமும் பார்த்து அலங்காரங்களுடன் முருகனை தரிசனம் செய்தாச்சு. நேற்று இங்கே இவங்களுக்கு வேலை இருந்ததால் கோயிலுக்குப் போகமுடியலை. அதோடு இங்கிருந்து எல்லாக் கோயில்களும் கொஞ்சம் தூரமாக வேறே உள்ளன. அவன் அழைத்தால் போக முடியும். பார்ப்போம். இத்தனை படங்களை எடுக்க அனுமதித்திருப்பது ஆச்சரியமாகவும் உள்ளது. நல்லபடியாக விரதம் முடித்திருக்கிறீர்கள். பொதுவாக இந்தியாவில் இருந்தால் நான் விழாக்காலங்களில் கோயில் போவதைத் தவிர்த்துவிடுவேன். கூட்டம் ஒத்துக்கொள்ளாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆமாம், அங்கு எல்லாம் கோவில் தூரமாக ஓரு மணி நேரம் போகிற மாதிரிதான் இருக்கும். அவர்கள் உதவி இல்லாமல் நாம் தனியாக போக முடியாது.

      நாங்களும் கூட்டம் தள்ளு முள்ளு இருக்கும் இடங்களுக்கு போக மாட்டோம்.
      இங்கு அப்படி இல்லை. கூட்டமாக இருந்தாலும் வரிசையில் பார்க்க வசதி 10 ரூபாய் டிக்கட் எடுத்தாலும் நன்றாக் முருகரை பார்க்கலாம் பக்கத்தில். அமர்ந்து பார்க்க 100 ரூபாய் அர்ச்சனை செய்வார்கள் பூஜை காட்டுவார்கள் நாம் எழுந்து கொண்டதும் அடுத்த குடும்பத்தை உட்கார்த்தி வைப்பர்கள்.
      நாம் அர்ச்சனை செய்யும் போது நிதனாமாய் இறைவனை பார்த்து கொள்ளலாம்.

      உற்சவர் இருக்கும் இடத்திலும் எவ்வளவு கூட்டம் வந்தாலும் தள்ளு முள்ளு இல்லை.அதனால் தான் சார் அழைத்து செல்கிறார்கள்.திருப்பரகுன்றத்தில் இது போல் பார்க்க முடியாது.

      கோவிலை சுற்றி மக்கள் கூட்டம் இருந்தது. பெரிய திரை டி.வி வைத்து இருந்தார்கள்.மக்கள் இருந்த இடத்திலேயே இறைவனை பார்த்தார்கள்.

      மூலவரை தவிர மற்ற இடங்களை, உற்சவரை எடுக்க அனுமதி உண்டு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. படங்கள் அத்தனையும் அழகு. பிள்ளையார்முக தாராசுரன் அழகாக இருக்கிறார்.

    எங்கள் நாட்டிலும் சில ஊர்களில் மட்டும் மக்கள் கோயிலிலேயே தங்கி விரதமிருப்பர். அதுதான் அக்கா நேற்று பேசும்போது சொன்னா, கந்தசஷ்டி விரதம் கோயிலில் தங்கிப் பிடிப்பது சுலபம் போல இருக்கு, நாங்க வீட்டில் வேலையும் பார்த்து, வேர்க்குக்கும் போய்ப் பிடிப்பதென்பது மிகவும் கஸ்டமாக இருக்குது என, அக்காவும் பாலும் பழத்தோடும் இருந்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      இங்கு திருச்செந்தூர் தான் சஷ்டிக்குவிரததிற்கு மிகவும் சிறப்பு . அங்கேயே தங்கி விரத இருப்பார்கள், என் அத்தை, மாமா மற்றும் மாமாவின் சகோதரர்களின் குடும்பம்.விடுதியில் அறை எடுத்து காலை, மாலையும் முருகனை தரிசனம் செய்து எப்போதும் அவன் திருனாமத்தை சொல்லி இருப்பார்கள்.வேறு சிந்தனைகள், வேறு கடமைகள் கிடையாது.(வீட்டுவேலை) அதுவும் நன்றாக இருக்கும் என்பார்கள்.

      இறைவனை பார்த்துக் கொண்டே இருக்கும் போது பசி, தாகம் இருக்காது.

      உங்கள் அக்காவும் விரதம் இருந்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  15. பாலாபிசேகம், சந்தன அபிசேகம் எல்லாம் மிக அழகாக கமெராவுக்குள் சிக்கி இருக்கு. அது பாலோ தயிரோ? மிக தடிப்பாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் இருப்பது பால், அடுத்து உள்ளதுதான் தயிர் தடிப்பாக இருக்கிறது.

      நீக்கு
  16. uங்கள் தயவால் எனக்கும் அபிசேகம் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கு.

    //எவரும் துதிக்க நின்ற ஈராரு தோள் போற்றி//
    இதில் தவறு இருக்குதோ? தேவரும் என நினைச்சிருந்தேன் நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏவரும் என்றும் போடலாம், எவரும் என்றும் போடலாம். தவறு இல்லை.ஏவரும் என்றால் எல்லோரும் என்று அர்த்தம்.

      தேவரும் இல்லை ஏவரும் தான் எல்லோரும் துதிக்கலாம் முருகனை என்பதுதான் பாடலின் பொருள்.

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  17. ஆறுபடை வீட்டுக் காட்சி மிக அழகு, அதில் இருக்கும் முருகனின் முகம் பெண்கள் முகம்போல இருக்குதே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதும் கவனித்தேன் மூன்று முகமும் ஓரே மாதிரிதான் இருக்கிறது.

      நீக்கு
  18. அருமையான தரிசனம் எங்களுக்கும் கிடடியது உங்களால். அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சி. குறிப்பாக சந்தனமும் பாலாபிஷேகமும் மிக அழகாகப் Uதித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. அறுமுகச் செவ்வேளுடைய
    அருமையான தரிசனம்...

    சும்மாவா சொன்னார்கள்
    அழகெல்லாம் முருகனே!.. என்று...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
      போன பதிவில் உங்களை காணோம்.
      வேலை அதிகமோ அலுவலகத்தில்?
      அழகெல்லாம் முருகன் தான்.
      என்றும் இளமை அழகு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. வெட்ட வெட்ட துளிர் விடும் செடி போல அழிக்க அழிக்கமுளைப்பவர்கள் சூர பதுமர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      வெகு நாட்கள் ஆகி விட்டது நீங்கள் என் வலைத்தளம் பக்கம் வந்து.
      அவர்கள் முளைப்பும், அழிப்பும் நடந்து கொண்டே தான் இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. பதில்கள்
    1. வணக்கம் ஹேமா, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. எங்களையும் பழமுதிர்ச் சோலை  முருகனை தரிசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  23. அருமையான படங்கள். நல்ல தரிசனம் சகோதரி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  24. கோமதிக்கா உள்ளே படங்கல் எடுக்க அனுமதி கிடைத்ததா பரவாயில்லையே! எங்களுக்கும் காண முடிந்ததே...படங்கள் மூலம் நல்ல தரிசனம் கிடைத்தது கோமதிக்கா. அறுபடை வீடு காட்சி அழகாக இருக்கிறது. ரொம்ப கலர்ஃபுல்லா...

    ஒவ்வொன்றும் விளக்கமாக எடுத்துருக்கீங்க கோமதிக்கா. ரொம்ப அழகு. முருகன் அல்லவா!!!

    வாட்சப்பில் கூட அமெரிக்காவில் ஒரு வீட்டில் சூரசம்ஹாரம் நடத்தியது காட்சியாக வந்தது. அந்த வீட்டுப் பையன் விளக்கம் கொடுத்துச் செய்ததும். அங்கு இருந்த நீச்சல் குளம் திருச்செந்தூர் கடற்கரை என்ரும் அதன் அருகில் அப்பையன் மர்றும் அவர் அக்காவாக இருக்க வெண்டும் என்ரு நினைக்கிறேன் இருவருமாக...(கீபோர்டில் தட்டச்சு கடினமாக இருக்கு. வல்லின எழுத்துக்கள், நெடில் எழுத்துக்கள் எதுவும் சரியாக வருவதில்லை. அந்த கீஸ் எல்லாம் கொஞ்சம் மக்கர் செய்கிறது...)

    நன்ரி கோமதிக்கா..

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      கோவிலில் மூலவரை தவிர மற்ற இடங்களில் படம் எடுக்கலாம்.

      வாடசப்பில் அமெரிக்காவில் வீட்டில் நடைபெற்ற சூரசமஹாரம் எனக்கும் வந்தது நன்றாக செய்தார் அந்த சிறுவன், சிறுவனின் அக்கா, அப்பா எல்லோரும் நன்றாக செய்தார்கள்.

      கீபோர்ட் மக்கர் செய்வது வேறு வாங்க சொல்லுது போல!
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  25. அழகிய படங்களுடன் நல்ல தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  26. பதில்கள்
    1. வண்ககம் Ramesh DGI, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  27. பழமுதிர்சோலை ...மிக அருமையான தரிசனம் மா ...

    என் தளத்தில் பழமுதிர்சோலை பற்றி பகிரும் போது நீங்கள் நேரிலையே தரிசனம் செய்து இருப்பீர்கள் என நினைத்துக் கொண்டேன் ..அது போலவே நீங்களும் தரிசித்து அழகிய படங்களுடன் பகிர்ந்து உள்ளீர்கள் ...

    சில பல வேலைகளால் சிறிது தாமதமான வருகை ...

    ஆனாலும் அழகன் முருகன் தரிசனம் மிக அருமை ..

    படங்கள் எல்லாம் மிக அழகு ..

    5 ம் படமும் கடைசி படமும் மிக அதிகமாக கவர்ந்தன ...


    முருகா சரணம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      போனமுறை திருமணத்திற்கு போனோம், இந்த முறை சூரசம்ஹாரம் அன்று போனோம். மாலைதான் சம்ஹாரம். காலை அபிஷேகம் , அலங்காரம் பார்த்து வந்து விட்டோம்.

      படங்களையும் பதிவையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.

      நீக்கு
  28. அன்பின் வணக்கம்....

    தங்கள் நலறிய ஆவல்....

    இரண்டு வாரங்களாகப் பதிவொன்றும் வரவில்லையே...

    விரைவில் வழங்க வேணுமாய்
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உடல் நலக்குறைவு இருந்தது இப்போது நலம்.
      பழைய வீட்டில் மராமத்து வேலைகள் நடக்கிறது. அதனால் போவதும் வருவதும் நாள் முழுவதும் சரியாகி விட்டது. ஒருவாரம் கொஞ்சம் ஓய்வு. இனி மேல் கொண்டு என்ன செய்வது என்ற யோஸனை . இப்படி பொழுது போய் கொண்டு இருக்கிறது.
      பதிவு போட வேண்டும்.
      உங்கள் அனபான விசாரிப்புக்கு நன்றி.
      விரைவில் பதிவு போடுகிறேன்.

      நீக்கு