அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!
எங்கள் வளாக கொலுவில் ஒரு சகோதரி கோல அச்சு கொடுத்தார், அதை நடுவில் போட்டு அரிசி மாக்கோலம் சுற்றி போட்டு விட்டேன் மஞ்சள் கலர் பொடியும் கொடுத்தார்
நேற்று செய்த குங்கும அர்ச்சனை மலர் அர்ச்சனை
அனைவருக்கும் குறைவில்லா நிறை செல்வத்தை தருகிறாள் திருமகள் , சகல நன்மைகளையும் தருவாள். வழிபாடுகள் உடலுக்கும் , உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரும்.
எங்கள் குடியிருப்பு வளாகத்தில் வைத்த கொலுவில் இடம் பெற்றது.
இப்போதும் கால மாற்றத்தால் கிரைண்டர், மிக்சியை பொட்டு வைத்து வழி படுகிறோம்.
தினம் எங்கள் பக்கத்து வீட்டு பெண் மலர் மாலைகள் அம்மனுக்கு கொண்டு வருவார் சிறு வளையல் மாலை பவளம் போன்ற பாசியும் வெட்டி வேரும் சேர்த்து மாலை என்று கட்டி கொண்டு வருவார். ..
அம்மனுக்கு நேற்று கட்டிக் கொண்டு வந்த மாலை.
எல்லோருக்கும் மூன்று அன்னையரும் கருணை செய்ய வேண்டும்
ஓம் முப்பெரும் தேவியார் போற்றி!
சரஸ்வதி, லட்சுமி, பார்வதியாம் முப்பெரும் தேவிக்கே சரணம்.
மகன் வீட்டு கொலு தனி பதிவாக போடுகிறேன்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக