திங்கள், 6 அக்டோபர், 2025

பேரனின் வீர அனுமன் குறும்படம்


                  

மருமகள்  வரைந்த  கோலம்

மகன் வீட்டுக் கொலு   கொலு முடிந்தவுடன் போடுகிறேன் என்று நினைக்காதீர்கள். பேரனின் குறும்படம் வந்தவுடன் போடலாம் என்று இருந்தேன். இன்றுதான் பேரன் அனுப்பினான்.

மகன் வீட்டுக் கொலு, மகன் செய்த அனுமன், மருமகள் கைவண்ணத்தில் கொலு    இவைகள் இந்த  பதிவில் இடம் பெறுகிறது. 



பேரன் உறவுகளை நட்புகளை கொலுவுக்கு அழைக்கும் அழைப்பிதழ்.


வீட்டு வாசலில் வரவேற்க எல்லாம் தயார் நிலையில்


பேரனின் நாடகம் பார்க்க அழைப்பு.


படிகள் அமைத்தாகி விட்டது. ஒவ்வொரு வருடமும்  ஒவ்வொரு குடும்ப  நண்பர்கள் வந்து உதவுவார்கள்  இந்த வருடம் ஒரு குடும்ப நண்பரும், அவர் மனைவியும் வந்து உதவினார்கள்.  




கொலு பார்க்க வந்து விட்டீர்களா? பன்னீர் தெளித்து விட்டான் பேரன், சந்தனம், குங்குமம் , கல்கண்டு எடுத்து கொள்ளுங்கள்.

திருவிளக்கில்  பெருமாளும், தாயாரும் வந்து விட்டார்கள்.


வீட்டில் பூத்த மல்லிகை சூடி கொண்டு தாயார் அழகாய் கொலுவீற்று இருக்கிறாள்.



பேரனின் குறும்படம்



குறும்படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்.



இந்த வருடம் பேரனின்  ஷோ 

பேரனின் நிக்ழச்சியை பார்க்கும் அன்பர்கள்.

மகன் செய்த அனுமன். அனுமன் தன் இதயத்தில் ராமனும், சீதையும் என்று  வாழ்ந்து கொண்டு இருப்பதை காட்டுகிறார்.
ராமன் மேல் உள்ள பக்தியை அனைவருக்கும்  காட்டுகிறார்.



பேரன் அனுமனை பற்றி சொன்னதால் மகன் கொலுவில் ராமனை  நடுநாயகமாக வைத்து இருக்கிறான். 





வந்தவர்களை வரவேற்று அவர்களிடம் உரையாடி 10 நாட்களும் அவர்களுடன் படமும் எடுத்து கொண்டேன். டிவி திரையில் நேரலையில் என்னைப்பார்த்தார்கள் . போன வருடம் அங்கு இருந்ததை நினைவு படுத்தி பேசினார்கள்.
சில நட்புகள் பிரசாதங்கள் எடுத்து வந்து இருந்தார்கள்,

படத்தில் முதலில் நிற்கும் அன்பு நட்பு "ஆன்டி வடை, கேசரி எல்லாம் செய்து கொண்டு வந்தேன்" எடுத்து கொள்ளுங்கள்  என்று அங்கிருந்து எனக்கு கொடுத்தார்கள்.
 
மருமகளும், அவள் அம்மாவும் சேர்ந்து தினம் பிரசாதங்கள் செய்து அனைவரையும் சாப்பிட வைத்து  தாம்பூலம் கொடுத்து உபசரித்தனர். 

நண்பர்களின் குழந்தைகளும் பாட்டி எப்போது வருவீர்கள் இங்கு ? எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு என்னுடன் படம் எடுத்து கொண்டார்கள் .( அக்காவும், தம்பியும்)

சில குழந்தைகள், பெரியவர்கள், பாடினார்கள், நானும் இங்கிருந்து பாடினேன். மருமகள் நடனம் கற்றுக் கொள்கிறாள், அவளின் குரு, மற்றும் கற்றுக் கொள்ளும் தோழியர் எல்லாம் சேர்ந்து அயிகிரி நந்தினி பாடலுக்கு ஆடினார்கள். விழா இனிதாக நிறைவு அடைந்தது.

ஸ்ரீ மஹிஷாஸூரமர்த்தினி ஸ்தோரத்தில் 
அயிகிரி நந்தினி என்று ஆரம்பிக்கும்  முதல் பாராவுக்கு தோட்டத்தில் ஆடினார்கள்

 

தேவி படம் அனுப்ப மறந்து விட்டான், நான் இங்கு இருந்து எடுத்தது அதனால் அம்மன் தெளிவாக தெரியவில்லை, மகன் அனுப்பினால் நான் மீண்டும் அம்மனை அனுப்புகிறேன்.
மூன்று அம்மனும் இடம் பெறுவார்கள், இந்த இரண்டும் கொலூ முன்பே  இருக்கும். சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடிக்கி வைத்து அதன் மேல் அம்மன் அலங்காரம் செய்வோம் அது அந்த சரஸ்வதி அம்மன் படம் தான் இல்லை. அதற்கு என்று இடம் விட்டு இருப்பது தெரியும்.



நெல்லைத்தமிழன் உங்கள் மகன் வீட்டு கொலு வருமா? என்று கேட்டு இருந்தார் கொலுவை பகிர்ந்து விட்டேன்.

அன்பு சூழ் உலகு என்றும் வாழ்க!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. அக்கா அழைப்பிதழ் சூப்பர். கவினின் திறமைக்கு வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா அழைப்பிதழ் சூப்பர். கவினின் திறமைக்கு வாழ்த்துகள்.//
      நன்றி கீதா, கவினுக்கு உங்கள் வாழ்த்தை சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  2. நல்வரவு போர்டு, மருமகளின் கோலம் எல்லாம் நல்ல திட்டமிட்டு செய்யறாங்க எல்லாரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அக்கா உங்க ப்ளாகர் வடிவமே வித்தியாசமாக இருக்கு, கீழே கருத்துப் பெட்டி பெரியதாக இல்லாமல் குட்டியாக வருது

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கொலு பார்க்க வந்து விட்டீர்களா? பன்னீர் தெளித்து விட்டான் பேரன், சந்தனம், குங்குமம் , கல்கண்டு எடுத்து கொள்ளுங்கள்.//

    கொலு பார்க்கவும், வீர ஹனுமான் படம் பார்க்கவும் வந்துவிட்டோம். ஆமாம் குங்குமம் எடுத்துக் கொண்டேன். கல்கண்டு எடுத்து உங்க பேரனுக்கே கொடுத்தாச்சு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. திருவிளக்கில் பெருமாள் தாயார் அலங்காரம் வடிவமைப்பு அட்டகாசம் என்றால் வீட்டில் பூத்த மல்லிப்பூ தொடுத்த விதம் மதுரை மல்லியைத் தோற்கடித்துவிட்டது. பூவும் நம்ம ஊர் பூ போலவே அழகா இருக்கு அங்கு வேற்று நிலத்தில் வளர்ந்து பூத்தாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கவினின் குறும்படம் சூப்பர் சூப்பர், கோமதிக்கா பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க. யுட்யூபிலும் கருத்து கொடுத்திருக்கிறேன்.

    ஹனுமான் குரம் கவினா?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சீதாவிற்கும் குரல் மாற்றி சொல்லியிருக்கிறாரோ கவின்?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. படத்தில் கடைசில சொல்லும் மெசேஜ் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அனுமன் இதயம் திறந்து காட்டும் வடிவமைப்பு சூப்பர். மகனும் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார் அதான் கவினும் 16 அடிக்கும் மேலே பாய்கிறார் ஹனுமனைப் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வந்தவர்களை வரவேற்று அவர்களிடம் உரையாடி 10 நாட்களும் அவர்களுடன் படமும் எடுத்து கொண்டேன். டிவி திரையில் நேரலையில் என்னைப்பார்த்தார்கள் . //

    சூப்பர் கோமதிக்கா. நட்பும் சுற்றமும் இப்படி இருந்தால் இனிய மகிழ்ச்சிதான்.

    நண்பர்களின் குழந்தைகளும் பாட்டி எப்போது வருவீர்கள் இங்கு ? எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு என்னுடன் படம் எடுத்து கொண்டார்கள் .( அக்காவும், தம்பியும்)//

    வாவ் வாவ்!!! அக்கா கலக்கல் போங்க.

    இப்படி நான் அன்பை வழங்க வழங்க அது தானாகவே பெருகும்.

    அன்பே சிவம் !!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. மருமகள் நடனம் கற்றுக் கொள்வது நல்ல விஷயம் கோமதிக்கா. உடலுக்கும் மனதிற்குமே மிக மிக நல்லது.

    அவங்க எல்லாரும் அபிநயம் பிடித்ததும் சூப்பர். அவங்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  12. உங்கள் மகன் வீட்டுக் கொலு சூப்பர்.

    நீங்க கண்டிப்பாகப் போடுவீங்கன்னு தெரியும் கோமதிக்கா.

    ரசித்துப் பார்த்தேன் எல்லாமும்

    கீதா

    பதிலளிநீக்கு