இந்த ஆண்டு திருசெந்தூர் சுப்பிரமணிய கோயிலில் கந்த சஷ்டி விழா 22.10. 25 ம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடை பெற உள்ளது. முதல் 6 நாட்கள் வரை சஷ்டி விரதம். 27 ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். 28 ம் தேதி முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணமும் அதை அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.
வாய்ப்பு உள்ளவர்கள் திருச்செந்தூர் போய் முருகனை தரிசனம் செய்யலாம்.
வீட்டிலிருந்தும் முருகனை சிந்திக்கலாம்.
இந்த பதிவில் கோவை நீலிக்கோணாம்பாளையம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் இடம்பெறுகிறது.
கோயில் வாசலில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் வழிபாட்டு மண்டபம் என்று போட்டு இருக்கிறது.
மூலவர் முருகன் முன் இருக்கும் அழகான மயில் நம்மை கவர்கிறது.
ஓம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயில் என்று இருக்கிறது இருபக்கமும் முருகன் வரலாறு காட்சி அமைப்பாக இருக்கிறது, இந்த இரண்டு கதை காட்சிகளும் நான் சொல்ல வேண்டியது இல்லை உங்களுக்கே தெரியும்.
பழத்தை பெற உலகை சுற்றிவர மயிலில் முருகன் பறப்பது, வள்ளியை பயமுறுத்த யானைவடிவில் அண்ணன் கணபதி முருகனுக்கு உதவ வந்துள்ளார்.
பிள்ளையார் சன்னதி
பிள்ளையார் இருபக்கமும் ராகு, கேது இருக்கிறார்கள்
நவக்கிரக சன்னதி
வெளிப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி
மூலவர் முருகன் விமானத்தில் தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி
லிங்கோத்பவர்
துரக்கை
மூலவர் சன்னதியில் வள்ளி, தெய்வானையோடு உற்சவர் இருக்கிறார்.
மூலவர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகன் சந்தனகாப்பில் மிக அழகாய் காட்சி தருகிறார்.
காது குத்துக்கு ஆசாரி ஏற்பாடு செய்ய போனபோது சந்தனகாப்பில் இருந்தார் செவ்வாய்க்கிழமை முருகன்
ஆகஸ்ட் 16 ம் தேதி என் கணவரின் தம்பி பேத்திக்கு மொட்டையடித்து காது குத்தினார்கள், முதல் மொட்டை பழனியில் வைக்கலாம் என்றால் மூத்தவர்கள் எல்லோருக்கும் பழனி வர கஷ்டம் என்று அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபாலதண்டாயுதபாணி முருகன் கோயிலை தேர்வு செய்தார்கள். அதனால் எனக்கு இந்த அழகு முருகனின் தரிசனம் கிடைத்தது. நீங்களும் பார்க்க பகிர்ந்து விட்டேன்.
இந்த கோயிலில் வயதான அம்மா காது குத்த ஏற்பாடு செய்து தந்தார்கள் சில நொடிக்குள் திறமையாக குத்தி விட்டார்.
காது குத்தும் விழா அன்று விபூதி அலங்காரம். உள்ளே முருகன் சன்னதியில் தான் அந்த விழா நடந்தால் வெளியே தூரத்திலிருந்து எடுத்தேன் முருகனை.
இந்த படம் இணையம் உதவி
கோயிலுக்கு வரும் அனைவருக்கு பூக்கள் கொடுத்து பிராசதங்கள் கொடுக்கிறார்கள். வந்தவர்கள் அனைவருக்கும் பூ பிரசாதம் கொடுக்கிறார்கள். இரண்டு நாள் போய் பார்த்தேன் அருமையான மன அமைதி கிடைக்கும் இந்த கோயில் முருகனை பார்த்து கொண்டே இருக்கலாம்.
முருகன் விழாக்கள் எல்லாம் மிக சிறப்பாக நடக்கிறதாம் ஓர்ப்படி சொன்னார்.
கொடிமர விநாயகர்
இந்த படமும் கூகுள் உதவி
இந்த படமும் கூகுள் உதவி
கோயில் முழுவதும் கொட்டகை போட்டு இருப்பதால் கொடிமரத்தை இப்படி பார்க்க வசதி
இந்த படமும் கூகுள் உதவி
இந்த படங்களை இணையத்தில் பகிர்ந்த அன்பருக்கு நன்றி
விழாக்கள் நடத்த கோயிலின் பின்புறம் வசதியாக இருக்கிறது
//நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீ வந்த வாழ்வைக் கண்டதானாலே
மால் கொண்ட பேதைக்குன் மணநாறும் மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே
வேல் கொண்டு வேலைப் பண்டெறிவோனே வீரங்க்கொள் சூரர்க்குங்க் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே
முருகனை சிந்திப்போம் கந்தசஷ்டி விழா சிறப்பு பதிவில் கந்தசஷ்டி விழாபற்றி நான் எழுதியது முருகன் அருளால் ஆறு நாட்களும் முருகன் பதிவுகள் போட்டேன்.
//முருகனுக்கு உகந்த விரதங்கள் மூன்று. வாரத்தில் கடைப்பிடிக்வேண்டிய விரதம் செவ்வாய்க் கிழமை விரதம், நட்சத்திரத்தை வைத்துகடைப்பிடிக்க வேண்டிய விரதம் கார்த்திகை விரதம், திதியை வைத்து கடைப்பிடிக்கப்படுவது சஷ்டி விரதம்.
முருகனுக்கு உகந்த விழா கந்தசஷ்டி விழாவாகும். சூரபன்மனைச் சம்ஹாரம் செய்த வைபவத்தைக் கொண்டாடுவது கந்தசஷ்டி விழா.
இன்று கந்த சஷ்டி தொடக்க நாள். கந்தன் பெருமைகளை, பாடல்களைப்பாடி விரதம் இருப்பார்கள். தீபாவளிபலகாரங்கள் சாப்பிட்டு முடிக்கும்முன்னே சஷ்டி விழா வந்து விடும்.
தீபாவளி பலகாரங்களை மறந்து மன வைராக்கியத்தோடு கந்தனைநினைத்து வேண்டும் வரங்களைத் தரச்சொல்லி விரதம் இருப்பார்கள்.ஆறு நாளும் மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் சிலர்.
ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்பவர்கள் உண்டு, அவர்கள் காலையும்,மாலையும் பால் பழம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு. சூரசம்காரம் அன்று முழுவது உணவு அருந்தாமல், மறுநாள் விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். ஆறு நாளும் சாப்பிடாமல் முருகன்
கோவிலில் தங்கி விரதம் இருப்போரும் உண்டு.//
இந்த ஆண்டு முருகன் அருளால் பதிவுகள் போட நினைத்து இருக்கிறேன், முருகன் வழித்துணையாக வர வேண்டும்.
கொடி மரம் தாண்டியதும் பெரிய ஹால் போன்று இருக்கிறதே! கல்யாணமே செய்துவிடலாம் போல இருக்கிறது.
பிள்ளையார் அருகில் ராகு கேது இப்பாங்களா? நான் இப்பதான் இப்படிப் பார்க்கிறேன். இல்லை நான் கவனிக்காமலும் இருந்திருக்கலாம் ஒரு வேளை அப்படியான கோவிலுக்குப் போயிருந்தாலும் கூட...
பதிவு பார்த்துவிட்டேன் அக்கா. வருகிறேன்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு பார்த்துவிட்டேன் அக்கா. வருகிறேன்.//
வாங்க வாங்க கீதா
முருகன் வடிவம் முதல் படம் அழகு!!
பதிலளிநீக்கு௳யில் அழகான வடிவம்.
ஆமாம் அக்கா முருகனின் கதைகள் இருபுறமும் புரிந்துவிடும்
கீதா
//முருகன் வடிவம் முதல் படம் அழகு!!
நீக்கு௳யில் அழகான வடிவம்.
ஆமாம் அக்கா முருகனின் கதைகள் இருபுறமும் புரிந்துவிடும்//
ஆமாம், முருகன் என்றாலே அழகுதான், அவன் ஏறும் மயிலும் அழகு.
முருகனின் கதைகள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
கொடி மரம் தாண்டியதும் பெரிய ஹால் போன்று இருக்கிறதே! கல்யாணமே செய்துவிடலாம் போல இருக்கிறது.
பதிலளிநீக்குபிள்ளையார் அருகில் ராகு கேது இப்பாங்களா? நான் இப்பதான் இப்படிப் பார்க்கிறேன். இல்லை நான் கவனிக்காமலும் இருந்திருக்கலாம் ஒரு வேளை அப்படியான கோவிலுக்குப் போயிருந்தாலும் கூட...
கீதா