வியாழன், 23 அக்டோபர், 2025

திருப்பரங்குன்றம் திருப்புகழ்




கந்தசஷ்டி சிறப்பு பதிவாக  நேற்று கந்தசஷ்டி முதல் பதிவாக 

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் கோயில் வந்தது . படிக்காதவர்கள் படிக்கலாம்.  இன்று  கந்த சஷ்டி இரண்டாம் நாள்  இந்த பதிவில்  திருப்பரங்குன்றம் திருப்புகழ்  பாடல்கள் இடம்பெறுகிறது.


மலையே லிங்க வடிவமாக தோன்றும் 




திருப்பரங்குன்றம்  2022 ம் வருடம் போட்ட பதிவில் உள்ள படங்களை இப்போது பகிர்ந்து இருக்கிறேன். 


குன்றத்துக்குமரன்  கோயில் படங்கள் அங்கு நடந்த  பங்குனி பெருவிழா படங்கள் உள்ள பதிவு


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

தெய்வானை முருகப்பெருமான் திருமணக் கோலம் பதிவு


.

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.




சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.



//கந்தசஷ்டிக்கொரு திருநாள் என்று பாடத்தோன்றுகிறது.  முருகன் நம் அனைவரையும் காக்கட்டும்.//


என்று நேற்று போட்ட பதிவில் ஸ்ரீராம் இந்த பாடல்  சொன்னார்

இன்று இந்த பாடல் பகிர்ந்து விட்டேன்



https://www.youtube.com/watch?v=x4r9n4ggxoQ


ஸ்ரீ கந்தபுராணம் படித்து வருகிறேன்  இன்று சம்பவ காண்டம் வரை படித்து இருக்கிறேன்.

மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி

மாவடிவைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான் 

சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி!

- கந்தபுராணம்


மந்திரப் பொருளே போற்றி மாமயில் தலைவா போற்றி 

கொந்தளிர் கடம்பா போற்றி குன்றுறை குமரா போற்றி

எந்திரத் திருப்பாய் போற்றி எண்எழுத் தானாய் போற்றி

தந்தை தாய் ஆவாய் போற்றி சண்முகா போற்றி போற்றி!


திருப்பரங்குன்றம் முருகன் , தெய்வானை முத்தங்கி சேவையில்

நன்றி ஆன்மீகதகவல்.

கந்தவேள் முருகனுக்கு அரோகரா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

21 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கந்த சஷ்டி திருநாள் இரண்டாம் பதிவில் திருப்பரங்குன்றம் குமரனை இன்று காண வைத்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

    பாடல்கள் அனைத்தும் அருமை. குழந்தை சூரிய நாராயணன் அவர்களின் பல பாடல்களை தினமும் கேட்கிறேன். சிறுவயதிலேயே அருமையான குரல்வளம். அவரின் பாடல்களும், பாடலுக்கேற்ற முக பாவங்களும் நன்றாக இருக்கும். அவர் பல்லாண்டு சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    பிறகு பகிர்ந்த காணொளிகளை கேட்கிறேன். சுதா ரகுநாதன், சூலமங்கலம் சகோதரிகளின் பாடலகளும் நன்றாக இருக்கும். "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற சினிமா பாடலும் என் மனதிற்குள் ஒலித்தது.

    அழகன் முருகனைப் பற்றிய பாடல்களும் என்றுமே இனிக்கும் தன்மை கொண்டவை. . நீங்கள் தினமும் கந்த புராணம் படிப்பதற்கு வாழ்த்துகள். உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் கந்தன் தர வேண்டிக் கொள்கிறேன். கந்த சஷ்டி பதிவுகளுக்கு தொடர்ந்து வருகிறேன் சகோதரி. காணொளிகளை யும் பிறகு கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. கந்த சஷ்டி திருநாள் இரண்டாம் பதிவில் திருப்பரங்குன்றம் குமரனை இன்று காண வைத்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.//

      காலையில்வந்து பதிவை படித்து உடனே கருத்து சொன்னதற்கு நன்றி.

      //பாடல்கள் அனைத்தும் அருமை. குழந்தை சூரிய நாராயணன் அவர்களின் பல பாடல்களை தினமும் கேட்கிறேன். சிறுவயதிலேயே அருமையான குரல்வளம். அவரின் பாடல்களும், பாடலுக்கேற்ற முக பாவங்களும் நன்றாக இருக்கும். அவர் பல்லாண்டு சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.//

      இந்த குழந்தையின் பாடலை அடிக்கடி கேட்பீர்களா? மகிழ்ச்சி. இவர் பாடலை தேர்வு செய்தது மகிழ்ச்சி எனக்கு. குழந்தையை ஆசீர்வாதம் செய்தது மிக மகிழ்ச்சி, நன்றி.

      //பிறகு பகிர்ந்த காணொளிகளை கேட்கிறேன். சுதா ரகுநாதன், சூலமங்கலம் சகோதரிகளின் பாடலகளும் நன்றாக இருக்கும். "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற சினிமா பாடலும் என் மனதிற்குள் ஒலித்தது.//

      திருப்பரங்குன்றம் என்றதுமே திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடல் நினைவுக்கு வரும் தான். எங்ககும் வந்தது ஆனால் அது அடிக்கடி கேட்ட பாடல் என்று புதுபாடல் பகிர்ந்தேன்.

      //அழகன் முருகனைப் பற்றிய பாடல்களும் என்றுமே இனிக்கும் தன்மை கொண்டவை. ///

      ஆமாம்

      . //நீங்கள் தினமும் கந்த புராணம் படிப்பதற்கு வாழ்த்துகள். உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் கந்தன் தர வேண்டிக் கொள்கிறேன்.///

      உங்கள் வேண்டுதலுக்கு நன்றி.

      //கந்த சஷ்டி பதிவுகளுக்கு தொடர்ந்து வருகிறேன் சகோதரி.//

      வாங்க வாங்க உங்கள் வரவுதான் எனக்கு உற்சாகம் அளிக்கும்.

      //காணொளிகளை யும் பிறகு கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      பிறகு கேளுங்கள் உங்கள் கருத்துக்கு நன்றி.






      நீக்கு
  2. மலை லிங்க வடிவமாகத் தெரிவதை அருகில் உள்ள கட்டிடங்கள் மற்ற இடங்கள் மறைக்கின்றன.  சமீபத்தில் அங்கே முருகனுக்கு பெரும் சோதனை வந்தது.  நம்மை பக்தர்கள் எந்த அளவு மதிக்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மலை லிங்க வடிவமாகத் தெரிவதை அருகில் உள்ள கட்டிடங்கள் மற்ற இடங்கள் மறைக்கின்றன.//

      ஆமாம்.

      //சமீபத்தில் அங்கே முருகனுக்கு பெரும் சோதனை வந்தது. நம்மை பக்தர்கள் எந்த அளவு மதிக்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார் போலும்!//

      இந்த சோதனைகளை செய்வது அவன் தான் சோதிப்பதும், சோதனைக்கு உள் ஆக்கவதும் அவனேதான்.

      நீக்கு
  3. பாடல் கேட்டேன்.  நான் சொன்ன பாடலையும் இணைத்ததற்கு நன்றி.  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் என்கிற  பாடல் இப்போது நினைவுக்கு வரும்போது மதுரையில் திருப்ப்பரங்குன்றம் அருகே இருந்த நாங்கள் திருத்தணியில் அண்ணன் மகனுக்கு பெண் எடுத்தோம் என்பது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாடல் கேட்டேன். நான் சொன்ன பாடலையும் இணைத்ததற்கு நன்றி//

      சாருக்கு மிகவும் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடித்த பாடல் என்பதால் பகிர்ந்து விட்டேன்.

      //திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் என்கிற பாடல் இப்போது நினைவுக்கு வரும்போது மதுரையில் திருப்ப்பரங்குன்றம் அருகே இருந்த நாங்கள் திருத்தணியில் அண்ணன் மகனுக்கு பெண் எடுத்தோம் என்பது நினைவுக்கு வருகிறது.//

      எல்லாம் அவன் அருள்.

      நீக்கு
  4. மதுரையில் இருந்தபோது நாங்கள் டேப்ரெக்கார்டர் வாங்கிய புதிதில் அப்பா முதலில் வாங்கிய கேசெட்டுகளில் ஒன்று கந்தசஷ்டி கவசமும், ஸ்கந்தகுரு கவசமும்.  செவ்வாய்க்கிழமைகளில் காலை அதை போட்டு விடுவார்.  கந்தசஷ்டி கவசம் முடிந்த உடன் திருப்பிப் போட்டால் ஸ்கந்தகுரு கவசம் ஒலிக்கும்.  எனவே இப்போதும் கந்த சஷ்டி கவசம் எங்காவது காதில் விழுந்தால், கேட்டால், அது  முடிந்த உடன் மனதில் "கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே" என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கும்! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுரையில் இருந்தபோது நாங்கள் டேப்ரெக்கார்டர் வாங்கிய புதிதில் அப்பா முதலில் வாங்கிய கேசெட்டுகளில் ஒன்று கந்தசஷ்டி கவசமும், ஸ்கந்தகுரு கவசமும். செவ்வாய்க்கிழமைகளில் காலை அதை போட்டு விடுவார். கந்தசஷ்டி கவசம் முடிந்த உடன் திருப்பிப் போட்டால் ஸ்கந்தகுரு கவசம் ஒலிக்கும். எனவே இப்போதும் கந்த சஷ்டி கவசம் எங்காவது காதில் விழுந்தால், கேட்டால், அது முடிந்த உடன் மனதில் "கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே" என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கும்! //

      எங்கள் வீட்டிலும் இந்த இரண்டு பாடல்களும் ஒரே கேஸட்டில் இருந்தன . ஆமாம், முதல் பாட்டு முடிந்தவுடன் அடுத்த பாட்டின் வரி நினைவுக்கு வந்து வாய் முனு முனுக்க ஆரம்பித்து விடும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அக்கா காலையிலேயே போட்டுட்டீங்களா. நான் எதிர்பார்க்கவும் இல்லை.

    எபில கருத்து சொல்லிட்டு, கொஞ்சம் வீடியோ வேலைகள் வீட்டு வேலைகள் முடித்து ஓய்வு எடுக்க வேண்டியதானது.

    திருப்பரங்குன்றம் எப்பொழுதோ பார்த்தது. சின்ன வயசுல. அப்போது மலையின் வடிவம் இன்னும் நன்றாகத் தெரியும்.

    நீங்கள் எடுத்திருக்கும் கோணம் வடிவத்தைக் காட்டுகிறது.

    சஷ்டி மண்டபம் எல்லாம் புதியதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா காலையிலேயே போட்டுட்டீங்களா. நான் எதிர்பார்க்கவும் இல்லை.//

      காலையிலேயே போட்டு விட்டேன், இந்த ஆறுநாட்களும் போட எண்ணம் முருகன் அருள வேண்டும்.

      //எபில கருத்து சொல்லிட்டு, கொஞ்சம் வீடியோ வேலைகள் வீட்டு வேலைகள் முடித்து ஓய்வு எடுக்க வேண்டியதானது.//

      நினைத்தேன், ஏதோ வேலையில் இருக்கிறீர்கள் என்று.


      //திருப்பரங்குன்றம் எப்பொழுதோ பார்த்தது. சின்ன வயசுல. அப்போது மலையின் வடிவம் இன்னும் நன்றாகத் தெரியும்.//

      ஒவ்வொரு கோணத்தில் மலை நன்றாக தெரியும். நான் கோயிலிக்குள் இருந்து எடுத்தேன்

      //நீங்கள் எடுத்திருக்கும் கோணம் வடிவத்தைக் காட்டுகிறது.

      சஷ்டி மண்டபம் எல்லாம் புதியதோ?//

      ஆமாம்.

      நீக்கு
  6. திருப்பரங்குன்றம் அப்ப போட்ட பதிவு இந்தக் கந்த சஷ்டி மண்டபம் பார்த்ததும் நினைவு படுத்தியது. அப்ப யானை எல்லாம் போட்டிருந்தீங்க என்று நினைவு.

    குன்றத்துக் குமரன் பதிவு பார்த்திருக்கிறேனா என்று நினைவில்லை. அங்கு சென்று பார்க்கிறேன், அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருப்பரங்குன்றம் அப்ப போட்ட பதிவு இந்தக் கந்த சஷ்டி மண்டபம் பார்த்ததும் நினைவு படுத்தியது. அப்ப யானை எல்லாம் போட்டிருந்தீங்க என்று நினைவு.//

      ஆமாம்.

      //குன்றத்துக் குமரன் பதிவு பார்த்திருக்கிறேனா என்று நினைவில்லை. அங்கு சென்று பார்க்கிறேன், அக்கா//

      நேரம் கிடைத்தால் பாருங்கள்.

      நீக்கு
  7. குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் வாசித்த நினைவு இருக்கு ஒன்று நல்ல நினைவு அது இப்பதிவில்தானா என்பது தெரியலை உங்கள் மகன்/பேரன் செய்த சூர சம்ஹாரம் காட்சிகள் அது நினைவில் இருக்கு!

    அட! சூரியநாராயண் குழந்தை. குல்தீப் பாய் அவர்களின் வந்தே குருபரம்பரம் தொடரில் கேட்டிருக்கிறேன். சூரிய காயத்ரி, இந்தக் குழந்தை, ராகுல்வெள்ளால் போன்ற பல குழந்தைகள். இப்ப அவங்க தனியாகக் கச்சேரி செய்யத் தொடங்கிவிட்டார்கள். குல்தீப் பாய் அவர்கள் நிஜமாகவே பெரிய ஒரு விஷயம் செய்துவருகிறார். இக்குழந்தைகளைக் கொண்டு ஆல்பம் எல்லாம் போட்டார்.

    இக்காணொளியும் இப்பவும் கண்டேன். சூப்பராகப் பாடுகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் வாசித்த நினைவு இருக்கு ஒன்று நல்ல நினைவு அது இப்பதிவில்தானா என்பது தெரியலை உங்கள் மகன்/பேரன் செய்த சூர சம்ஹாரம் காட்சிகள் அது நினைவில் இருக்கு!//

      ஆமாம் , இந்த பதிவில் தான்.

      //அட! சூரியநாராயண் குழந்தை. குல்தீப் பாய் அவர்களின் வந்தே குருபரம்பரம் தொடரில் கேட்டிருக்கிறேன். சூரிய காயத்ரி, இந்தக் குழந்தை, ராகுல்வெள்ளால் போன்ற பல குழந்தைகள். இப்ப அவங்க தனியாகக் கச்சேரி செய்யத் தொடங்கிவிட்டார்கள். குல்தீப் பாய் அவர்கள் நிஜமாகவே பெரிய ஒரு விஷயம் செய்துவருகிறார். இக்குழந்தைகளைக் கொண்டு ஆல்பம் எல்லாம் போட்டார்.

      இக்காணொளியும் இப்பவும் கண்டேன். சூப்பராகப் பாடுகிறார்.//

      ஆமாம், நிறைய பாடல்கள் பாடி இருக்கிறார்.

      இந்த பாட்டும் நன்றாக பாடுகிறார்.

      நீக்கு
  8. சுதா ரகுநாதன், சூலமங்கலம் எல்லோரையும் கேட்டேன் அக்கா.

    தினமும் எனக்கு கந்தசஷ்டி கவசம், அதுவும் ஸ்கந்த குரு கவசம் கேட்காமல் இருக்கமே மாட்டேன். என்னை மிகவும் அதிலே ஆழ்ந்திருக்கச் செய்யும் சூலமங்கலம் அவர்களின் குரலில் ஸ்கந்த குரு கவசத்தின் மெட்டு ரொம்ப அருமையாக இருக்கும். ஆழமாக அழுத்திப் பாடுவார்கள். நம் மனதைக் கட்டிப் போடும் வரிகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுதா ரகுநாதன், சூலமங்கலம் எல்லோரையும் கேட்டேன் அக்கா.//

      ஓ சரி

      //தினமும் எனக்கு கந்தசஷ்டி கவசம், அதுவும் ஸ்கந்த குரு கவசம் கேட்காமல் இருக்கமே மாட்டேன். என்னை மிகவும் அதிலே ஆழ்ந்திருக்கச் செய்யும் சூலமங்கலம் அவர்களின் குரலில் ஸ்கந்த குரு கவசத்தின் மெட்டு ரொம்ப அருமையாக இருக்கும். ஆழமாக அழுத்திப் பாடுவார்கள். நம் மனதைக் கட்டிப் போடும் வரிகள்//

      ஆமாம், எத்தனை பேர் பாடி வெலியிட்டாலும் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது போல வராது. நாம் கேட்டு கேட்டு பழகி விட்டோம். ஸ்கந்த குரு கவசத்தின் மெட்டு, பாடல் வரிகள் எல்லாம் நம்மை கட்டி போடும் தான்.

      நீக்கு
  9. ஸ்ரீ கந்தபுராணம் படித்து வருகிறேன் இன்று சம்பவ காண்டம் வரை படித்து இருக்கிறேன்.//

    நல்ல விஷயம் கோமதிக்கா. நீங்கள் எல்லாம் ரொம்ப சின்சியர் இறைவனிடம். முன்னுதாரணம் குழந்தைகளுக்கு.

    எனக்கு உட்கார்ந்து வாசிக்கும் அளவு பக்தி இல்லையக்கா!! ஹிஹிஹிஹி. ஆனால் ஒலி வடிவத்தில் கவசம் கேட்பதோடு சரி. அருட்ஜோதி வடிவம் என்றுதான் சொல்லப்படுவது. அந்த அருட்ஜோதி மனதில் அன்பு வடிவமாய் வந்திட வேண்டும் என்று ஏனென்றால் அன்பே சத்தியம் அன்பே நித்தியம் அன்பே சாந்தம், அன்பே ஆனந்தம்....

    தினமும் கேட்டாலும் மனுஷ மனம் பலவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் அதை அடைய....விடுபட முடியலையே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எனக்கு உட்கார்ந்து வாசிக்கும் அளவு பக்தி இல்லையக்கா!! ஹிஹிஹிஹி. ஆனால் ஒலி வடிவத்தில் கவசம் கேட்பதோடு சரி. அருட்ஜோதி வடிவம் என்றுதான் சொல்லப்படுவது. அந்த அருட்ஜோதி மனதில் அன்பு வடிவமாய் வந்திட வேண்டும் என்று ஏனென்றால் அன்பே சத்தியம் அன்பே நித்தியம் அன்பே சாந்தம், அன்பே ஆனந்தம்....

      தினமும் கேட்டாலும் மனுஷ மனம் பலவற்றிலிருந்தும் விடுபட வேண்டும் அதை அடைய....விடுபட முடியலையே!!!!!//

      கேட்டாலே போதும். உட்கார்ந்து படித்து ஆக வேண்டும் இல்லை.
      மனம் அது செம்மை ஆனால் மந்திரம் ஜெபிக்க வேண்டியது இல்லை கீதா , முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

      நீக்கு
    2. உங்கள் அனைத்து கருத்துக்களூக்கும் நன்றி கீதா

      நீக்கு
  10. திருப்பரம் குன்றத்து முருகனை தரிசித்துக் கொண்டோம்.

    பாடல்களும் படங்களும் அழகாக தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //திருப்பரம் குன்றத்து முருகனை தரிசித்துக் கொண்டோம்.

      பாடல்களும் படங்களும் அழகாக தந்துள்ளீர்கள்.//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு