சனி, 1 ஆகஸ்ட், 2009

ஆடி வருகுது வேல்

ஆடி வருகுது வேல்!

ஆடி வருகுது வேல் சுற்றி நில்லாதே பகையே!முத்தான முத்துக்குமரா முருகையா வாவா
சித்தாடும் செல்வக் குமரா சிந்தைமகிழ வாவா
நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி வருகுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் வருகுதையா

பெங்களூர்  ரமணி அம்மா அவர்கள் பாடிய இந்த பாட்டைக்  கேட்கும் போதலெல்லாம்  மனக்கண்ணில்     ,வேலும், மயிலும் ஆடிவருவதும், மக்கள் கூட்டம் வரும் காட்சியும் விரியும்.. 

.

சமீபத்தில் நானும் என் கணவரும் விராலிமலை போயிருந்தோம்.

நாங்கள் அங்கு படியேறும்போது எங்களுக்கு முன் தோகைமயில் ஒன்று அழகாய்ப் படியேறிக் கொண்டிருந்தது.(அதற்கு முருகனிடம் என்ன பிரார்த்தனையோ? )

அப்போது  மழை  மேகம்  இருந்ததால்  இன்னொரு  மயில்  தன் தோகையை  விரித்து அகவியவாறு  ஆடியது. அது முருகனைப்   நினைத்து பாடியாடிதைப்  போல இருந்தது. இருந்தாலும்  அதன் பின்புறத்தைக்  காட்டியவாறு ஆடிக்கொண்டிருந்தது. பக்தர்கள், திரும்பியாடு முருகா என்று ஆரவாரித்தார்கள். ஆனால் அது நீண்டநேரத்திற்குப் பின் தான் திரும்பியது.திரும்பும்போதே அது தன் தோகையைச் சுருக்க ஆரம்பித்தது. அவசரமாக எடுத்ததால் அந்தப் படம் தெளிவாக இல்லை.

நூறு மயில்களுக்கு மேல் அங்கிருப்பதாக தல வரலாறு சொல்கிறது. இங்குள்ள ஒரு பாறையில் அருணகிரிநாதருக்கு மயில் மீது வந்து முருகன் காட்சி  தந்தாராம். மலைமேல் உள்ள கோயிலில் ஆறுமுகர் வள்ளி , தெய்வானையுடன் காட்சி தருகிறார்.  அவரது மூன்று முகங்கள்  நேராகவும்  மூன்று  முகங்கள்  பின்புறமுள்ள கண்ணாடியிலும்  தெரிகின்றன.  புறக்கண்களால்
பார்க்கக் கூடிய மூன்று முகங்கள் நேராகவும், அகக்கண்களால் பார்க்கக் கூடிய மூன்றுமுகங்கள் கண்ணாடியிலும் தெரிகின்றன.

சூரனுக்குத் தூது சென்று விசுவரூப தரிசனம் கொடுத்த வீரபாகுவின் பெரிய உருவச்சிலைஉள்ளது.  அருணகிரிநாதர், விநாயகர்,சிவன், பார்வதி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு
உருவச்சிலைகள் உள்ளன.

மலையழகைக் காண்பதற்காகக் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் இருந்து  இயற்கை அழகைப்பார்க்கலாம்  என்றால்  குரங்குகள் நிறைய நின்றன .  இங்குக் குரங்குக் கூட்டத்தின் குறும்புகளைத் தான் காண முடிந்தது.

மரங்களிலும் பாறைகளிலும் மயில்கள் அமர்ந்த காட்சிகளைக் கண்டவாறே  மலையிலிருந்து  இறங்கினோம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------                                                              -வாழ்க வளமுடன்

6 கருத்துகள்:

 1. தமிழ்மணத்துல சேர்ந்தாச்சு. இனி தினமும் ஒரு பதிவாவது நாங்க எதிர்பார்க்கிறோம் அம்மா!

  புகைப்படங்கள் அழகு..

  /நூறு மயில்களுக்கு மேல் அங்கிருப்பதாக தல வரலாறு சொல்கிறது//

  இதுவும் தல வரலாறுல வருமா?!

  பதிலளிநீக்கு
 2. சென்ஷி, ஆதரவுக்கு நன்றி.
  இதற்கு ,முந்திய பதிவு பார்க்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 3. \\ புறக்கண்களால்
  பார்க்கக் கூடிய மூன்று முகங்கள் நேராகவும், அகக்கண்களால் பார்க்கக் கூடிய மூன்றுமுகங்கள் கண்ணாடியிலும் தெரிகின்றன.//

  அருமை :)
  முருகையா பாட்டும் நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 4. சுதந்திரமாக அழகு மயில்கள் உலவுவதைக் காண்பது கண்களுக்கு விருந்து. வீறுநடை போட்டு படியேறும் மயில் படம் அருமை.

  நான் கூட்டம் கூட்டமாய் மயில்களைப் பார்த்தது திருவண்ணாமலை ரமண மகிரிஷி ஆஸ்ரமத்தில்.

  பதிலளிநீக்கு
 5. விராலியர் மலை.(விரலி-நடனக் கலைஞர்) என்பதே விராலி மலை
  என்று மருவியதாக சொல்லப்படுகிறது.


  சிறந்த நடன கலைஞர் போல ஆடியும்
  காட்டியது.

  வாழ்க வளமுடன் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு