கார்டன்ஸ் பை தி பே என்பது சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் இருக்கும் பூங்கா. 250 ஏக்கரில் அமைந்து இருக்கும் ஒரு இயற்கை பூங்கா.
சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தின் அருகில் இருக்கும் தாவரயியல் பூங்கா. இயற்கை பூங்கா.
மகன் குடும்பத்துடன் ஜூன் மாதம் சிங்கப்பூர் , மலேஷியா போய் வந்தேன். சிங்கப்பூரில் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்து மகிழ்ந்தோம். உறவுகளுடன் சில இடங்களை சுற்றிப்பார்த்தோம். சிங்கப்பூரில் சென்று வந்த கோயில்கள் பற்றி மூன்று பகுதிகள் பதிவு செய்தேன். இந்த பதிவில் இயற்கைப் பூங்கா பற்றிய பதிவு.
சிங்கப்பூர் முழுவதும் மிக அழகாய் செடி, கொடிகள், மரங்கள் என்று நட்டு பராமரிக்கிறார்கள். எங்கும் பசுமைதான். ஊரே பசுமை தோட்டமாக கண்ணுக்கு விருந்தளிக்கும்.
இந்த பூங்காவில் செயற்கை அருவி, அழகிய மலர்த்தோட்டம், அரியவகை மரங்கள், செடிகள், கொடிகள் , மரவேரில் செய்த சிற்பங்கள் என்று அழகாய் இருக்கிறது.
கார்ட்ன்ஸ் பை தி பே என்பது நகரத்தின் பசுமை மற்றும் தாவரங்களை மேம்படுத்தி அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்த பட்டது.
"கார்டன்ஸ் பை தி பே" சிங்கப்பூரின் முதன்மையான நகர்ப்புற வெளிப்புற பொழுதுபோக்கு இடமாகவும் தேசிய அடையாளமாகவும் கருதப்படுகிறது.
சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது, 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வரும் இடம்.
கொடி படர்ந்து அழகாய் இருக்கிறது. பேரன் நிற்கிறான்.
என் கணவரின் தம்பி பேரன். இவன் தான் இந்த பூங்காவை சுற்றி காட்டினான்.
.
நீல வானமும் பசுமை கொடிகளும் பார்க்க அழகு
இது கீழே உள்ளது, மாலை விளக்கு வெளிச்சத்தில்
இது மேலே உள்ளது
கீழே படுத்து கொண்டு பார்த்து காணொளி எடுக்கிறார்கள்
இது மேலே உள்ளது மக்கள் காத்து இருந்தார்கள் ஒளி ஒலி காட்சி பார்க்க நாங்களும் காத்து இருந்து பார்த்தோம். நன்றாக இருந்தது இசையும் வண்ண விளக்கும். மேலே உள்ள பாலத்தின் மேல் இருந்து மக்கள் பார்க்கிறார்கள்.
கீழே படுத்து கொண்டு பார்த்து காணொளி எடுக்கிறார்கள்
நான் எடுத்த காணொளி
பின்னனி இசையுடன் வண்ண விளக்குகள் மாறி மாறி ஒளி வெள்ளத்தை சிதற செய்யும் போது அழகு
நேரம் இருந்தால் ஒளி, ஒலி காட்சி பார்க்கலாம்.
பூங்கா காட்சிகள் இன்னும் வரும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
-------------------------------------------------------------------------------------------------
படங்கள் அழகு. மரங்களைக் காக்க எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. அந்த ஒரு படம் பல்வேறு கோணங்களில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறது! உலகின் இப்போதைய அத்தியாவசியத்தேவை அபசுமையைக் காப்பது.
பதிலளிநீக்குகாணொளி கண்டு ரசித்தேன். வண்ணமயமாக இருக்கிறது. மின் ஜாலம்.
பதிலளிநீக்குகாணொளி கண்டு ரசித்தது மகிழ்ச்சி. பின்னனி இசையும் நன்றாக இருக்கிறது.
நீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//படங்கள் அழகு. //
நன்றி.
//மரங்களைக் காக்க எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது//
ஆமாம். பாராட்ட வேண்டும்.
//அந்த ஒரு படம் பல்வேறு கோணங்களில் மீண்டும் மீண்டும் வந்திருக்கிறது! //
காணொளி பார்த்தீர்களா? பூங்கா படங்கள் நிறைய இருக்கிறது, அடுத்த பதிவில் வரும்.
//உலகின் இப்போதைய அத்தியாவசியத்தேவை அபசுமையைக் காப்பது.//
பசுமையை காப்பதுதான் முக்கியம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
காணொளியில் விளக்கின் வர்ண ஜாலங்கள். அழகாக இருக்கிறது. குளிராக இருந்ததா இல்லை வெப்பமாகவா?
பதிலளிநீக்குவணக்க்ம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//காணொளியில் விளக்கின் வர்ண ஜாலங்கள். அழகாக இருக்கிறது. குளிராக இருந்ததா இல்லை வெப்பமாகவா?//
குளிர் இல்லை, வெப்பம்தான். இசையை , வர்ண ஜாலங்களை பார்க்கவும் தான் கூட்டம் காத்து இருந்தது.
எங்களுக்கும் நடந்து வந்த களைப்பு அதனால் அமர்ந்து பார்த்து வந்தோம். மேலே இதை பார்க்க படிகள், லிப்ட் இருக்கிறது. நாங்கள் லிப்டில் போனோம்.
படங்கள் எப்போதும்போல் அழகு.
பதிலளிநீக்குமுகப்புக் காட்சிகளே நிறைய வந்துள்ளன. மிகுதிப் படங்கள் அடுத்த பகுதியில் வரும் என நினைக்கிறேன்.
பூங்காவினுள் நடந்தீர்களா இல்லை வாகனமா?
//படங்கள் எப்போதும்போல் அழகு.//
நீக்குநன்றி.
//முகப்புக் காட்சிகளே நிறைய வந்துள்ளன. மிகுதிப் படங்கள் அடுத்த பகுதியில் வரும் என நினைக்கிறேன்.//
ஆமாம், முகப்பு காட்சிகளும் , மேலே உள்ளதும் வந்து இருக்கிறது.
இனிதான் பூங்காவிற்குள் போக வேண்டும் அடுத்து அடுத்து பகுதிகளில் வரும்.
//பூங்காவினுள் நடந்தீர்களா இல்லை வாகனமா?//
நடந்து தான் போனோம். முடிந்தவரை எல்லாம் பார்த்தோம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது குறிப்பாக கொடிமரம்.
பதிலளிநீக்குகாணொளி கண்டேன் வெகு அருமையாக உள்ளது.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது குறிப்பாக கொடிமரம்.//
கொடி படர்ந்து இருக்கும் அந்த அலங்கார கம்பம் வித விதமாக மேலும், கீழும் இருக்கிறது.
//காணொளி கண்டேன் வெகு அருமையாக உள்ளது.//
காணொளி பார்த்தது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.
/// சிங்கப்பூர் முழுவதும் மிக அழகாய் செடி, கொடிகள், மரங்கள் என்று நட்டு பராமரிக்கிறார்கள். எங்கும் பசுமைதான். ஊரே பசுமை தோட்டமாக கண்ணுக்கு விருந்தளிக்கும்.////
பதிலளிநீக்குநாற்பது வருடங்களுக்கு முந்தைய சிங்கப்பூர் கண்களில் நிழலாடுகின்றது..
தனித்துவமான நாடு அது!..
தனித்துவமான மக்கள்!..
வழக்கம் போல அழகான படங்களுடன் பதிவு..
வாழ்க நலம்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//நாற்பது வருடங்களுக்கு முந்தைய சிங்கப்பூர் கண்களில் நிழலாடுகின்றது..//
அப்போ இந்த பூங்கா இருந்து இருக்காது இல்லையா?
உங்கள் நினைவுகளில் சிங்கப்பூர் காட்சி அளித்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி.
//தனித்துவமான நாடு அது!..
தனித்துவமான மக்கள்!..//
எல்லா நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நாடுதான் சிங்கப்பூர்.
வழக்கம் போல அழகான படங்களுடன் பதிவு.
வாழ்க நலம்..//
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ஆமாம் கோமதிக்கா, சிங்கப்பூர் சின்ன ஊர்தான் என்றாலும் எங்கும் பசுமை, அழகான பூங்காக்கள், மரங்கள் என்று பராமரிப்பு செமையா இருக்கும்.
பதிலளிநீக்குமுதல் படமே அட்டகாசம். ரொம்ப அழகா எடுத்திருக்கீங்கக்கா
இது அப்ப 2001ல் இல்லை...2005ல் வந்ததுன்னு தெரிந்தது.
கொடி படர்ந்து அழகா ய் இருக்கும் படம் ரொம்ப அழகு..
டக்கென்று....அட மாமாவைப் போல் இருக்கிறாரே என்று பார்த்துவிட்டு கீழே வாசித்த போது தெரிந்தது மாமாவின் தம்பி பேரன் என்று! அவர்தான் சுற்றிக்காட்டினார் என்பது மகிழ்ச்சி...
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆமாம் கோமதிக்கா, சிங்கப்பூர் சின்ன ஊர்தான் என்றாலும் எங்கும் பசுமை, அழகான பூங்காக்கள், மரங்கள் என்று பராமரிப்பு செமையா இருக்கும்.//
ஆமாம், ஏர்போர்ட், மற்றும் கட்டிங்கள் அனைத்திலும் படரும் கொடிகள், செடிகள், மரங்கள் என்று நட்டு பராமரிப்பு அழகாய் செய்கிறார்கள்.
//முதல் படமே அட்டகாசம். ரொம்ப அழகா எடுத்திருக்கீங்கக்கா//
நன்றி.
//இது அப்ப 2001ல் இல்லை...2005ல் வந்ததுன்னு தெரிந்தது.//
2014 முதல் வருடா வருடம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறதாம். சிறந்த பொழுது போக்கு இடம், விழாக்கள், போட்டோ எடுக்கும் நிகழச்சிகளுக்கு சிறப்பான இடம்,.
//டக்கென்று....அட மாமாவைப் போல் இருக்கிறாரே என்று பார்த்துவிட்டு கீழே வாசித்த போது தெரிந்தது மாமாவின் தம்பி பேரன் என்று! அவர்தான் சுற்றிக்காட்டினார் என்பது மகிழ்ச்சி...//
உங்களுக்கு சாரின் ஜாடை தெரிகிறதா? கோவில் பதிவிலும் அவன் படம் வந்தது. பஸ்ஸில் அமர்ந்து இருந்தான்.
நிறைய இடம் சுற்றி காட்டுவதாக சொன்னான், எங்களுக்கு இருந்த நேரத்தில் எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு பார்த்தோம்.
படங்கள் எல்லாமே அழகு கோமதிக்கா....ஒவ்வொரு கோணத்திலும்...அதுவும் மாலை மயங்கும் நேரப் படங்கள் செம. அந்தக் கோணமும்..
பதிலளிநீக்குவண்ணவிளக்குகளுடன் ஆன படங்களும் சூப்பர். காணொளி வர்ண ஜாலம்தான். வண்ண வண்ண விளக்குகள் மாறி மாறி வந்து ஒளிச்சிதறல் அருமை. ரசித்தேன் கோமதிக்கா
கீதா
//படங்கள் எல்லாமே அழகு கோமதிக்கா....ஒவ்வொரு கோணத்திலும்...அதுவும் மாலை மயங்கும் நேரப் படங்கள் செம. அந்தக் கோணமும்..//
நீக்குமாலை நேரம் அந்த நீலவண்ண விளக்கு உள்ள படம் தானே! எனக்கும் பிடித்தது.
//வண்ணவிளக்குகளுடன் ஆன படங்களும் சூப்பர். காணொளி வர்ண ஜாலம்தான். வண்ண வண்ண விளக்குகள் மாறி மாறி வந்து ஒளிச்சிதறல் அருமை. ரசித்தேன் கோமதிக்கா//
ஆமாம், எதற்கு மக்கள் இப்படி காத்து இருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்த கொண்ட பின் அமர்ந்து நாங்களும் பார்த்தோம். ஒளிச்சிதறல் பார்க்க அழகு, பின்னனி இசை அதைவிட அருமை.
காணொளி எடுக்கும் போது இடையில் வேறு ஒருவரும் எடுப்பது தெரிகிறது...இடையிடையே!! இப்படியான இடங்களில் எடுப்பது சிரமம் என்றாலும் நீங்கள் அழகா எடுத்திருக்கீங்க கோமதிக்கா..இரவுக் காட்சி அதுவும் வர்ண விளக்குகளுடன் ஆன காணொளி நன்றாகவே வந்திருக்கிறது
பதிலளிநீக்குகீதா
//காணொளி எடுக்கும் போது இடையில் வேறு ஒருவரும் எடுப்பது தெரிகிறது...இடையிடையே!! இப்படியான இடங்களில் எடுப்பது சிரமம் என்றாலும் நீங்கள் அழகா எடுத்திருக்கீங்க கோமதிக்கா..//
நீக்குஆமாம், கையை உயர்த்தி விடுகிறார்கள் அலை பேசியும் தெரியும்.
நான் காமிராவில் எடுத்தேன் காணொளி மட்டும்.
//இரவுக் காட்சி அதுவும் வர்ண விளக்குகளுடன் ஆன காணொளி நன்றாகவே வந்திருக்கிறது//
அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
காணொளி அட்டகாசம்...
பதிலளிநீக்குபடங்கள் அழகு...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி அட்டகாசம்...//
நன்றி.
படங்கள் அழகு...//
நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.
சிங்கப்பூர் சின்ன நாடு தான் என்றாலும் சட்டங்கள் பொதுவானவை.. வலுவானவை..
பதிலளிநீக்குஆளுக்கு ஒன்று என்று இல்லை..
//சிங்கப்பூர் சின்ன நாடு தான் என்றாலும் சட்டங்கள் பொதுவானவை.. வலுவானவை..
நீக்குஆளுக்கு ஒன்று என்று இல்லை.//
ஆமாம்.
மீள் வருகைக்கு, கருத்துக்கு நன்றி.
படங்களும் பகிர்வும் நன்று. காணொளியும் பின்னணி இசையும் சிறப்பு. தொடருங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும் பகிர்வும் நன்று. காணொளியும் பின்னணி இசையும் சிறப்பு. தொடருங்கள்.//
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.