பத்துமலை சுப்பிரமணியர் கோவில் தொடர் பதிவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை சுப்பிரமணியர் கோவில் தொடர் பதிவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஆகஸ்ட், 2023

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 2

வள்ளி, தெய்வானையுடன் முருகன்

மலேசியாவில் புகழ் பெற்ற  குகை கோவிலுக்கு ஜூன் 7 ம் தேதி குடும்பத்துடன்   போய் தரிசனம் செய்து வந்தோம். 
பத்துமலை  ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் முதல் பகுதி  படிக்கவில்லை என்றால் படிக்கலாம். 

முருகனை ஆடி கிருத்திகை அன்று பார்ப்போம். என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். முருகனின் அருளால் இந்த பதிவில் முருகனின்  படங்கள் இடம்பெறுகிறது.
----------------------------------------------------------------------------------------------

ஸ்ரீசுப்பிரமணியர் இருக்கும் சன்னதி  இங்கு திரை போட்டு இருப்பாதால் மேலே  40  படிகள் ஏறி அங்கு வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை வணங்கி வர சென்றோம். 

நானும் பேரன் கவினும் ஏற போவதை மகன் மேல் படியிலிருந்து எடுத்த படம்

மிகவும் சின்ன படிகள் படிகளின் ஓரம் கொஞ்சம் உடைந்து உடைந்து இருந்தது. கவனமாக ஏற வேண்டும்.

சேவல்கள் நிறைய இருக்கிறது. எங்களுக்கு முன் அது படி ஏறி சென்றது. மலை முழுவதும்   கொக்கரக்கோ  என்ற ஒலி கேட்டு கொண்டே இருந்தது. நான் காணொளி எடுக்கும் போது சத்தம் இல்லை. சிறிய காணொளிதான் பாருங்கள்.

பேரன் நீண்ட காணொளி எடுத்து இருக்கிறான் அதன் கொக்கரக்கோ ஒலியை கேட்க, அது சத்தம் கொடுக்காமல்  ஓடி கொண்டே இருந்தது.

முருகன் சன்னதி


முருகன் சன்னதிக்கு நாங்கள் போன போது மாலை  மணி 4.30  திரை போட்டு இருந்தது, சற்று நேரத்தில் திறந்து விடுவோம் என்றார்கள். 5 நிமிடத்தில் திரை விலகியது, அற்புத காட்சி கொடுத்தார் முருகன் வள்ளி தெய்வானையோடு புன்முறுவல் சிந்த விபூதி அலங்கார்த்தில்  நின்றார். 

அங்கு இருந்த குருக்கள் பூஜை செய்து பிரசாதம் கொடுத்தார். மகனுக்கு திருமணநாள் என்று சொன்னதும் ஆசீர்வாதம் செய்து நாளை காலை  பால் அபிஷேகத்திற்கு 50 வெள்ளி  பணம் கொடுக்க சொன்னார்   கொடுத்தோம். இன்னொருவர் தேவாரம் பாடினார் அவருக்கும் மகன் பணம் கொடுத்தான்.
பூர்வீகம் தஞ்சை என்றாலும் அவர்கள் தாத்தா , பாட்டி காலத்திலே இருந்தே மலேசியாவில் வசிப்பாதாக சொன்னார்கள்.

குகைக்குள் இருப்பதால் மாலை நேரம் இருட்டாக இருக்கிறது
மேலே  இருந்து வெளிச்சம் கொஞ்சம் வருகிறது
முருகனின்  விமானம் குகைகுள்  நடுவில் இருப்பதை பார்க்க அழகு. 1991 ம் ஆண்டு இந்த முருகன் சன்னதி கட்டப்பட்டதாம்.
முருகன் பிரகாரத்தை சுற்றி வரும் இடத்தில் ஆசனம்  நல்லோர் உபயம் 

நாரதர் , தந்தைக்கு உபதேசம் செய்யும் குருநாதர் ,  , பிரணவத்திற்கு பொருள் சொல்ல முடியாத பிரம்மா , மற்றும் இடும்பன் சிலை .


மலையை  தலையில் தாங்கி நிற்பது போல
குகைக்குள்  பார்க்க அழகான முருகன் விமானம்

குகையின் அழகிய தோற்றங்கள்

மழை காலத்தில் மழையும், வெயில் காலத்தில் வெயிலும்  இந்த திறந்தவெளியிலிருந்து வருவது பார்க்க அருமையாக இருக்குமாம், எவ்வளவு வெயில் அடித்தாலும்  குகையின் உட்புறம் குளிர்ச்சியாக இருக்குமாம். 4.30க்கு அங்கு இருந்தோம் வெயில் தெரியவில்லை, மெல்லிய மழைச்சாரல் இருந்தது. மழை பன்னீர் தூவலாக இருந்தது நன்றாக இருந்தது.


சுண்ணம்பு குன்றும், இயற்கையாக அமைந்த குகையும் பார்க்க பார்க்க அழகு

அந்த குன்றில் நமக்கு நிறைய வடிவங்கள்   கண்களுக்கு தெரிகிறது!
மரம் செடி, கொடிகளின் மரகத பச்சை வண்ணம்  அழகு



மேலே அந்த திறந்தவெளியை படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

பெற்றோர்களுடன் முருகனை தரிசனம் செய்து விட்டு இறங்கும் குழந்தை


மேல் படியிலிருந்து மகன் எடுத்த படங்கள்

மலைக்கு நடுவில் கோபுரம்  பளிச் என்று தெரிய போக்கஸ் லைட் போட்டு பார்க்க அழகு. 


 கீழே குகை அடிவாரத்தில்   இருக்கும்  மூலவர்  ஸ்ரீ சுப்பிரமணியர்  , முன்னால் வேலும் உற்சவ முருகரும் இருக்கிறார்கள். தை பூசத்திற்கு வரும் பால்குடங்கள் இந்த வேலுக்கு தான் ஆகுமாம்.  பால் காவடி எடுத்து வருவது  இங்கு உள்ள மக்கள் போல் யாராலும் செய்ய முடியாதாம், ஆழமான பக்தி கொண்டவர்களாம், இங்கு வாழ் மக்கள்.

முன்பு தொலைகாட்சியில் பார்த்து இருக்கிறேன்  குகை நன்றாக தெரியும் இப்போது தங்கநிறத்தில்  கலர் அடித்து உள்ளார்கள். கிரானைட் போட்டு இருக்கிறார்கள் .


//80 களில் வெளிவந்த வருவான் வடிவேலன் எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு பத்துமலை, சிங்கப்பூர் தைப்பூச விழாவைக் காண மாட்டோமா என்ற ஆவல் வந்தது..

முருகன் அருளால் அது நிறைவேறியது.. சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகள்.. தைப்பூச விழாவில் கலந்து கொண்டு படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றேன்..//


இப்படி சகோ துரை செல்வராஜூ அவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். நானும் பார்த்து இருக்கிறேன் அந்த படம் என்றேன். அதில் கண்ணதாசன் எழுதிய பாடல்


 சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மற்றும் முன்னனி பாடகர்கள் அனைவரும் பாடியது.   பாடிய பாடல் மிகவும் அருமையாக இருக்கும். கேட்டு பாருங்கள். அது பெரிய பாடல் அவ்வளவும் இந்த காணொளியில் இடம் பெறவில்லை.

பத்துமலைத் திரு முத்துக்குமரனை என்ற பதிவில் பாடல் வரிகளையும் இந்த பாடலையும் கேட்கலாம்.  பத்துமலை முருகனையும் தரிசிக்கலாம். 
முருகனருள்  வலைத்தளம். 

பத்துமலைத்திரு முத்துக்குமரனைப் பார்த்து களித்திருப்போம்.

மூலவர் படங்கள் மேலும் வரும.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------