Wednesday, August 13, 2014

கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழா

இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை  உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய நீர்நிலைகளையும்  வணங்கினர். இப்போது நீர்வளங்களைத் தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன.  அதனால்  ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில் பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா  ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.    ஆடிப்பெருக்கு விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப் பார்த்து எழுதிய பதிவு இது.

கொள்ளிடக்கரையில் (வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழாவைப்  பார்க்க போனோம். கொள்ளிடம் பாலம் விழா கோலம் பூண்டு இருந்தது. தென்னை ஓலை, குறுத்தோலை, கலர் பேப்பர்களால் அலங்காரம் என்று  பாலம், கார்கள், பஸ்கள், வேன்கள் என ஜே ஜே என்று  இருந்தது.


கொள்ளிடக்கரை போகும் வழி எல்லாம் கடைகள்  இருந்தன,
ஆற்றுக்குப் போகும் பாதையில் வரவேற்புக்கு வாழைமரத்தோரண வாயில்
குழந்தைகளுக்குப் பலூன் 
ஆலமரத்தின் நிழலில் குடைராட்டினம் 

பலூன், ஐஸ்கிரீம், பழங்கள் , (வரலக்ஷ்மி பூஜைக்கு) முறம் விற்பவர்கள்.
எங்கும் குதூகலம்! கோலாகலம்!
பூஜைப் பொருட்கள், கறுப்பு, சிவப்புக்கயிறுகள்  விற்பனை
மாங்காய், தேங்காய்  பட்டாணி சுண்டல் , கொண்டைக்கடலை சுண்டல்
அழகிய  பீங்கான் பொம்மைகள், ஜாடிகள், பூத்தட்டு ,சின்ன உரல்  என்று விற்பனைப் பொருட்கள்
குல்பி ஐஸ்
போகும் வழி எங்கும் வேப்பமரம்- சித்ரான்னங்களை அங்கு வைத்து சாப்பிடுகிறார்கள்
பஞ்சுமிட்டாய்  
ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.
எல்லோரும் மங்கலமாக இருக்கவும், ஊர் செழிக்கவும் மழை வேண்டியும் வேண்டிக் கொண்டோம்.
ஆற்று மண் எடுத்து காவேரி அம்மனாக பிடித்து வைத்து  காப்பரிசி, மாவிளக்கு, கனிவகைகள், காதோலை, கருவளையல், மஞ்சள் கயிறு, பூக்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
வழிபட்டபின் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறுகள் கட்டிக் கொள்கிறார்கள்.
படைத்து  ஆற்றில் விட்ட காசு  போன்ற பொருட்களை எடுக்கும் சிறுவர்கள் 
தூரத்தில் கொள்ளிடம் ரயில் பாலம்

இன்னொரு புறம் -கொள்ளிடம்    சாலைப்போக்குவரத்துப்  பாலம்

புனிதநீராடும் பக்தர்கள், 

அந்தக்காலத்தில் ஆடிப்பெருக்கு சமயத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும் . மரங்கள் செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்கும்.  சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாம் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்வார்கள் . ஆற்றில், அருவியில் குளித்தால் நல்ல பசி எடுக்கும் . அப்போது கொண்டுவந்திருக்கும் கட்டுசாதம், சித்ரான்னங்களை குடும்பத்துடனும் நட்புகளுடனும் சாப்பிட்டுக் களித்து இருப்பர். ஆடி மாதம் நல்ல காற்று வீசி உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும்.  

 ஆனால் இப்போது மரங்கள் குறைந்து மழை குறைந்து வளம் குன்றிக் காணப்படுகிறது.  ”ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்” என்பார்கள். இப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மரங்களும் அசையவேமாட்டேன் என்கிறது . ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் காற்று வேகமாய் வீசும் என்பார்கள்.மீண்டும் அந்தக்காலம் வரவேண்டும். ஆறுகள் நிறைய வேண்டும்.

ஆடிப் பட்டம் தேடி விதை என்று மரங்களும் செடிகளும் நட்டு  வளப்படுத்த வேண்டும்.

’நீரின்றமையாது உலகு’ என்பது போல் அந்தக்காலத்தில் கனவுகளின் பலன்களிலும்  ஆறு, குளம் இடம் பெற்று இருக்கிறது அவற்றில் சில:-

 ‘ஆற்றில் ஓடி வருகின்ற நீரைஅதில் வெள்ளமாகக் கண்டாலும் நன்மை உண்டாகும்.”

“குளங்கள், கிணறுகள், ஆறுகள்  முதலியவை வற்றிப்போகுமாறு கனவு கண்டால் வறுமை வந்து சேரும் . 

“ஆறுபெருகிக் கரைகளை உடைத்துச்சென்றால் வெகுவிரைவில் நாட்டின் மீது பகைவர் படையெடுப்பர் ’

கடலைத் தாண்டுதல், ஆற்றைத் தாண்டுதல்  போல் கனவு கண்டால் நினைத்த காரியம் முடியும்

இப்படி அந்தக் காலத்தில் நீர் நிலைகளைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை பின்னப்பட்டு இருந்தது..

அக்காலத்திலும் காவிரி நதி பாயும் சோழநாட்டில் கடும் பஞ்சம் வந்த போது திருநனிபள்ளி என்ற ஊர் பாலை நிலமாக் இருந்தது என்றும், அதை மருதநிலமாக மாற்றினார் திருஞானசம்பந்தர் என்றும் புராணங்கள் மூலம் அறிகிறோம்.  இந்தக்காலத்திலும் அப்படி மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பு வருகிறது.

ஆறு, குளங்களில் நீர் இல்லை இப்போது.  ஆடி பெருக்குவிழாவை  மக்கள் மழை வேண்டியும் குடும்ப நலம் வேண்டியும் வணங்கி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காவேரி அன்னை! கருணை மழை பொழிய வேண்டும்! 
வாழ்க வளமுடன்!
-------------------

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் !
-------------------------

47 comments:

துரை செல்வராஜூ said...

அருமை.. அருமை..

பாரம்பர்ய திருநாளை அழகான படங்களுடன் பதிவில் காட்டியதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

வளங்குன்றாமல் காத்து காவேரி அன்னை - கருணை புரிய வேண்டும்!..

வாழ்க நலம்!..

Anonymous said...

தற்போதய நிலைக்கு மக்களே காரணம்! விதைத்ததை தானே அஅறுவடை செய்யமுடியும்.

ஸ்ரீராம். said...

முதல் புகைப்படத்திலேயே திருவிழாச்சூழல் மனதில் படிகிறது.

குட்டி குட்டிக் கடைகளைப் பார்த்தால் ஆர்வமாக இருக்கிறது, அதில் என்னென்ன இருக்கிறது என்று மேய!

பொதுவாகவே எல்லா ஆறுகளிலும் தண்ணீரின் அளவு குறைந்துதான் காணப் படுகிறது. மரங்களை வெட்டுவதும் மணலை அள்ளுவதும் மனிதன் இயற்கைத் தாய்க்குச் செய்யும் பெரும் துரோகம் மட்டுமல்லாது இதன் மூலம் தங்கள் சந்ததிகளின் எதிர்கால வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிக் கொள்கிறோம் என்றும் தெரிவதில்லை. வருத்தமான நிகழ்வுகள்.

ரூபன் said...

வணக்கம்
அம்மா.
பதிவை படித்த போது. எங்களுடைய ஊர் நினைவுதான் வந்தது.முதலில்

நிகழ்வை அழகிய புகைப்படங்களுடன் பதிவு ஒளிர்கிறது. திருஞானசம்மந்தர் செய்தருளிய அற்பும் பற்றியும் எடுத்துரைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி அம்மா.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

எங்கும் குதூகலம்! கோலாகலம்!
திருவிழாவை அருமையாகக் காட்சிப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள்.!

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

அன்புடையீர் வண்க்கம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரிதான். விதைத்தைதான் அறுவடை செய்யமுடியும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நிறைய அருமையான சாமான்கள் இருந்தன அந்த கடைகளில் ஆனால் வாங்கவில்லை. கைகளை கட்டுப்படுத்துவது கஷ்டமாய் இருந்தது.
ஆற்றுப் பாலத்திற்கு கடைசியில் மண் பாத்திரங்கள் வெகு அழகாய் வைத்து இருந்தார்கள்.
மண்பானை சமையல் உடலுக்கு நல்லது என்பதால் வாங்கலாம் என்று இருந்தேன்.மீண்டும் அந்த வழியில் கூட்டத்தில் போக முடியாது என்று சார் சொல்லிவிட்டார்கள். வாங்க வில்லை என்றாலும் ஒரு போட்டோ எடுக்க முடியாமல் போய் விட்டதே! என்று வருத்தம் எனக்கு.

//தங்கள் சந்ததிகளின் எதிர்கால வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிக் கொள்கிறோம் என்றும் தெரிவதில்லை. வருத்தமான நிகழ்வுகள்.//

எதிர்கால சந்ததிகளுக்கு ஏழுதலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து பயன் இல்லை.
இயற்கையை பாழ செய்யாமல் அப்படியே விட்டு சென்றால் தான் அவர்களுக்கு நல்லது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.


கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
உங்கள் ஊர் நினைவு வந்து விட்டதா? அங்கு அழகிய நீர் நிலைகள், இயற்கை அன்னை அழகாய் குடி கொண்டு இருக்கும் ஊர் அல்லவா!
நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம்,நாலுவருடங்களுக்கு முன்.
சுதந்திரதின வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

Anuradha Prem said...

நான் கூட காவேரி ஆற்றை பார்த்தது போன்று உணர்ந்தேன் ..பகிர்வுக்கு நன்றி

கீத மஞ்சரி said...

திருவிழாக்களில் கலந்துகொண்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன. இன்று அந்த நிறைவைத் தந்தன தங்கள் பதிவும் படங்களும். நன்றி மேடம். அந்தக்காலத்தில் நீர்நிலைகளை அடிப்படையாய் வைத்து வரும் கனவுகளின் பலன்கள் அறிய வியப்பாய் உள்ளது. கொள்ளிடக்கரை திருவிழா மனம் கொள்ளை கொண்டுவிட்டது.

G.M Balasubramaniam said...

பண்டிகை என்றோ நல்ல நாட்கள் என்றோ மனதை உற்சாகப் படுத்திக் கொள்ளஎல்லாமே தேவைப் படுகிறது, ஆறுகளின் குறுக்கே அணைகள் வந்து விட்டதால் நீர் வரத்துக் குன்றிப் போய் இருக்கலாம் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நேரில் பார்க்கிற உணர்வைத் தருகிற மாதிரி எல்லாக் காட்சிகளையும் படமாக்கித் தந்திருக்கிறீர்கள். நல்ல படங்கள். ஆடி மாதம் காற்றில்லை என்பது ஆச்சரியமாகதான் இருக்கிறது.

rajalakshmi paramasivam said...

தண்ணீர் ஓரளவாவது இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
ஒரு திருவிழாவிற்கு உங்கள் விரல் பிடித்து வந்த திருப்தியைத் தந்து விட்டீர்கள் கோமதி.
நன்றி அருமையான கொள்ளிடக் கரைக் காவேரியை அகம் குளிர தரிசனம் செய்து வைத்ததற்கு.

கே. பி. ஜனா... said...

நேரில் பார்த்த உணர்வு!

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
திருவிழாவை கண்டு மகிழ்ந்து ,நீர்நிலை கனவுகளின் பலன்களை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதமஞ்சரி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.

திருவிழாக்கள் எல்லாம் மனதை மகிழ்ச்சிபடுத்தவே.நீங்கள் சொல்வது போல் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டபடுவதும் தண்ணீர்வரத்துகுறைய காரணம் தான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
காற்றே இல்லை இப்போது.
ஆடிமாதம் போலவே இல்லை என்பதுதான் மக்களின் பேச்சு.

கோவிலில் கோபுரவாசலில் சும்மவே காற்று பிய்த்துக் கொண்டு போகும். இப்போது அங்கு நின்றால் கூட லேசான காற்றுதான் வீசுகிறது.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
கொள்ளிடத்தில் நீங்கள் பார்த்த தண்ணீர் காவேரி தண்ணீர் இல்லை, கடல் தண்ணீர். இன்னும் இங்கு வந்து சேரவில்லை மேட்டூர் அணையிலிருந்து.

என் விரல்பிடித்து வந்து ஆடிபெருக்குவிழாவை பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி ராஜிசிவம்.

கோமதி அரசு said...

வணக்கம் கே.பி. ஜனா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா அற்புதம்
படங்கள் ஒவ்வொன்றும் அருமை

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆடிப்பெருக்கு விழாவினை அழகான படங்களுடன் பதிவு செய்துள்ளது மிகவும் ஜோராக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆடிப் பெருக்குக்குத் தண்ணீர் குறைவாக இருந்தாலும் மக்கள் மனசில் ஈரம் நிறைய இருக்கிறது. அது வளரட்டும். அன்னை மகிழ்ந்து தண்ணீரை அள்ளி வழங்கட்டும். அன்பு கோமதி மறந்த நல்ல காட்சிகளைக் கண்முன் நிறுஇத்தி இருக்கிறீர்கள். படங்கள் அத்தனையும் அருமை. ம்க மிக நன்றி மா.

கோமதி அரசு said...

வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரிதான். மக்கள் மனதில் ஈரம் இருப்பதால் தான் உலகம் இப்படி அன்பால் இயங்கி கொண்டு இருக்கிறது.

படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

அம்பாளடியாள் வலைத்தளம் said...

மனம் மகிழத் தந்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !

கோமதி அரசு said...

யாழ்பாவாணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளடியாள் , வாழ்க வளமுடன்.
கால் பூரண குணம் அடைந்து விட்டதா?
எனக்கும் காலில் அடிப்பட்டு வலி இருக்கிறது .

உங்கள் வரவுக்கும் , பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்பாளடியாள்.

மனோ சாமிநாதன் said...

திருவிழா கோலங்களுடன் அருமையான புகைப்படங்கள்!!

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
உங்கள வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

வணக்கம் தோழி !
தங்களின் கால் இப்போது எப்படி உள்ளது தோழி ?..எனது கால் இப்போது ஓரளவிற்கு வலி குறைந்துள்ளது இது ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை என்பதால் தடியோடு தான் வீட்டிக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றேன் தோழி .இருப்பினும் முன்பு இருந்த
தொல்லைகள் இனி இருக்காது என்று எண்ணிப் பார்க்கையில் மனதிற்குத் தென்பும் அதிகமாகவே உள்ளது :)) ஆனாலும் இன்னும் பொறுமையாக ஓரிடத்தில் உட்கார்ந்து
(கதிரையில் )இருந்து எந்த ஓர் அலுவலையும் பார்க்க முடியவில்லை விரைவில்
இந்நிலையும் மாறும் தேறும் என்றே துணிகின்றேன் .மிக்க நன்றி தோழி நலன் விசாரிப்புகளுக்கும் இனிய நற் கருத்துரைகளிற்கும் .முடிந்தால் வாருங்கள் தோழி என் தளத்தில் இரண்டு கவிதைகள் கவிதைப் போட்டிக்காக எழுதியுள்ளேன் பிடித்திருந்தால் தவறாமல் தமிழ்மண
வாக்கும் அளித்து விடுங்கள் .நன்றி தோழியே !

Geetha Sambasivam said...

தாமதமாய்ப் பார்க்கிறேன். அருமையாக உள்ளன படங்கள். சில திறக்கவில்லை என்றாலும் தச்சக்குள மாரியம்மன் தரிசனம் கிடைத்தது. கூட்டம் அதிகம் இல்லையோ? இங்கே அம்மாமண்டபத்தில் கூட்டம் அலை மோதும். :)

கோமதி அரசு said...

வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
நானும் தாமதமாய் தான் வருகிறேன் வலைத்தளங்களை பார்வையிட.

குடும்பவிழாக்கள் நிமித்தம் பயணங்கள்
உறவினர் வருகை, உடல்நிலை அனைத்தும் இணையம் பக்கம் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறேன்.
மீண்டும் வருவேன்.

நீங்கள் சொல்வது போல் கூட்டம் குறைச்சல்தான். தண்ணீர் வரவில்லை வரவில்லை என்று மக்களின் கவலையால் பண்டிகையை உற்சாகமாய் கொண்டாட முடியவில்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்..
விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

துரை செல்வராஜூ said...

தங்களுக்கு காலில் அடிபட்டதாமே.. தாமதமாகத் தான் அறிந்தேன். இருப்பினும் உடனடியாக விசாரிக்க இயலவில்லை. நலம் பெற வேண்டுகின்றேன்..

சர்வரோக நிவாரணன் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் நலம் அருள்வாராக!..

கோமதி அரசு said...

வணக்கம் சார், இப்போது கொஞ்சம் பரவாயில்லை.உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.

சர்வரோக நிவாரணன் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் நலம் அருள்வாராக!..//

நீங்கள் சொன்னது போல் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன்அருளால் நலமாகி வருகிறேன்.

Anonymous said...

படங்களாலேயே ஒரு பதிவு, ஆம் எழுத்தும் இருந்தது.
படங்கள் நேரில் சென்ற மாதிரிப் பரவசம் தந்தது.
நன்றி. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

கோமதி அரசு said...வணக்கம் வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வேதா இலங்காதிலகம்

இளமதி said...
This comment has been removed by the author.
இளமதி said...
This comment has been removed by the author.
இளமதி said...

வணக்கம் இனிய சகோதரி!

தாங்களும் விருதினைப் பெற்ற விபரம் ஆங்காங்கே அறிந்து வந்தேன்.
உளமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!!!

நலமாக இருக்கின்றீர்களா? காலில் அடிபட்டதாமே..! இப்போ எப்படி?

கவனம் கொள்ளுங்கள்!
நலமடைய வேண்டுகிறேன் சகோதரி!

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
நீங்கள் விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் இளமதி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நான்கு மாதம் ஆகி விட்டது இடது காலில் பெருவிரலில் அடிப்பட்டு மறுபடியும் மறுபடியும் அந்த காலில் இடித்துக் கொள்வதால் சிறிது விரிவு ஏற்பட்டு இருக்கிறது, எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டோம், சேர்ந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் சரியாக வேண்டும்.

ஊர் பயணங்கள், குடும்பவிழாக்கள். நண்பர்கள் வீட்டு திருமணங்கள். அதனால் இணையம் பக்கம் வர முடியவில்லை.
தொடர் பயணங்களால் சிறிது உடல் துன்பம்.
விரைவில் உங்கள் எல்லோர் அன்பு
வேண்டுதல்கள் என்னை நலம்பெற செய்யும். கவனமாய் இருக்கிறேன்.
உங்கள் அன்புக்கு நன்றி இளமதி.

இளமதி said...

உங்கள் அன்பான வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி சகோதரி!

இன்று உங்களுக்குப் பதிவிடும் சமயம் என் கணினி ஏதோ கோளாறாகி நின்று நின்று இயங்கியதால் ஒரே கருத்து மூன்றுமுறை இட்டுவிட்டதோ?. மன்னிக்கவும். இரண்டு கருத்துகளை நானே நீக்கிவிட்டேன்!

விரைவில் உங்கள் நலன் சிறக்க வேண்டுகிறேன் சகோதரி!

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன். உங்களுக்கும் அப்படித்தானா? இங்கும் வலைதொடர்பு போய் போய் தான் வருகிறது. மூன்று நாட்களாய் இதே தொந்திரவு தான்.
உங்கள் மறுவருகைக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

18 ஆம் பெருக்கில் கலந்துகொண்டது போல குதூகலமாக இருந்தது. :)