புதன், 17 பிப்ரவரி, 2021

மரங்கொத்திப் பறவைகள்



Gila Woodpecker  

மரங்கொத்திகள் நிறைய வகை இருக்கிறது, இந்த வகை  மரங்கொத்தி  பறவை மகன்  ஊரில் இருக்கிறது. அரிசோனா மாநிலப்பூவான சாகுவாரோ கற்றாழை  பூவின் மேல் அமர்வது  இதற்கு பிடித்தது.   கள்ளியில் துளையிட்டு கூடு அமைக்கும்.  இது மெக்சிகோவில் நிறைய காணப்படுமாம். இதன் பூர்வீகம் மெக்சிகோ. பீனிக்ஸில் இப்போது பறந்து  திரிந்து கொண்டு இருக்கிறது.


ஊரிலிருந்து வரும் போது காமிரா எடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னான் மகன், மனம் நிலையில்லாமல் இருந்ததால் ஜூம் பழுது பட்ட காமிராவை எடுத்து வந்து விட்டேன். மகன் புது காமிரா வாங்கி தந்து தினம் வீட்டுக்கு வரும் பறவைகளை  ஜூம் செய்து எடுங்கள் என்று கொடுத்தான். அதில்  எடுத்த படங்கள் இவை.


மகன் வீட்டு பின் வாசலிருந்து எடுத்த படம். மதில் தாண்டி தெருவிளக்கின் மேல் அமர்ந்து இருக்கும் மரங்கொத்திப் பறவை. இதன்  நெற்றி(தலை) பகுதியில் சிவப்பு பொட்டு போல் இருக்கிறது பாருங்கள் அது ஆண்பறவை.
பொட்டு இல்லா பறவை பெண் பறவை. இரண்டு பறவைகளும்  மேல் படத்தில் இருக்கிறது.

மதில் மேல் உடம்பை சிலிர்த்துக் கொண்டு நிற்பதும் இந்த பறவைதான். கழுத்திலிருந்து அடி பகுதி எல்லாம் வெள்ளையாக இருக்கிறது ,  இறக்கைகள்  மிக அழகாய் இருக்கிறது. 
மகளிடம் இந்த பறவையை  படம் எடுத்தேன் என்று சொன்னேன் .  மரங்கொத்தி என்கிறார்கள், நம் ஊர் மரங்கொத்தி போல் இல்லை என்றேன்.
அவள் பறவைகள்  படம் உள்ள புத்தகம் வைத்து இருக்கிறாள் ,அதில் பார்த்து இந்த மரங்கொத்தியின் பெயர் சொன்னாள். புத்தகத்தில் உள்ள அந்த பறவையின்  படம் அனுப்பினாள்.

மகன் வீட்டில் இந்த மரம் உயிரற்றுவிட்டது, இருந்தாலும் இலைகள் உதிராமல் அதுவும்  ஒரு அழகாய் நிற்கிறது. இந்த மரத்தை  அடிக்கடி வந்து கொத்தும் இந்த மரங்கொத்திப் பறவை. பத்து வருடம் ஆகுமாம் இந்த மரம் வளர. கீழே இருந்து வந்து கொண்டு இருக்கிறது துளிர்கள்.

2017ல் இங்கு  வந்தபோது எடுத்த  படம்  அப்போது இலைகள் பசுமையாக இருந்தன.

பால்கனியில் அமர்ந்து இருப்பது அந்த பறவை இல்லை , வேறு ஒரு பறவை.

மாடி பால்கனியில் வட்டமாய் தொங்க விட்டு இருக்கும் தகடுகள்  இந்த மரங்கொத்திகளிடமிருந்து வீட்டை பாதுகாக்க.  இல்லையென்றால் துளைபோட்டு விடும் வீடு முழுவதும். சூரியஓளியில்   தகடுகள் வெளிச்சத்தை  பிரிதிபலிக்கும் பறவைக்கு  கண் கூசும் போல  அதனால் அது  வராது. சில வீடுகளில் ஆந்தையின் சிலை வைத்து இருப்பார்கள் அதற்கும் பயந்து வராதாம் மகன் சொன்ன செய்தி இது.




சிறிய காணொளி தான்.  வீட்டுக்கு வந்த பலவித பறவைகள் இருக்கிறது காலையில் கண்ணாடி கதவு வழியாக அலை பேசியில் எடுத்த படம்.

மகன் வீட்டில் வைக்கும் உணவை சாப்பிட நிறைய பறவைகள் வரும் தினம். 

                                                               வாழ்க வளமுடன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. அருமையான படங்களுடன் விபரங்களுடன் கூடிய பதிவு. இந்த வகை மரங்கொத்தியை இப்போது தான் பார்க்கிறேன். கண்ணாடித் தகடுகள் தொங்க விடும் விஷயம்புதியது. பறவைகள் நிறைய வருகின்றன என்பதும் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம். காணொளியைப் பின்னர் தான் பார்க்கணும். இல்லை, இல்லை வந்து விட்டது. பார்த்துட்டேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இந்த மரங்கொத்தியை மகன் ஊரில்தான் முதன் முதலில் நானும் பார்த்தேன்.
      நீங்கள் சொல்வது போல் எனக்கு பறவைகளை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் தான். காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. மரவீடுகளில் தகடு போடும் விஷயம் புதிது.

    மரங்கொத்திப் பறவை படங்கள் மிக அழகு.

    நம்மூர் மரங்கொத்திகள் மாதிரி இல்லை.

    புதுக் கேமரா... அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லத்தமிழன், வாழ்க வளமுடன்

      //மரவீடுகளில் தகடு போடும் விஷயம் புதிது.//
      நானும் இங்கு வந்தபின் தான் தெரிந்து கொண்டேன்.

      நம்மூர் மரங்கொத்திகள் போல இல்லைதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  3. தகடு போடும் விசயம் புதிதாக இருக்கிறது. அருமையான காட்சிகள் சகோ காணொளியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      ஆமாம் தகடு போடும் விசயம் புதிதுதான் எனக்கும்.
      காட்சிகளை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் மற்றும் விவரங்கள் சிறப்பு. படங்கள் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன.

    தொடரட்டும் நிழற்படங்கள் - மனதிற்கு இதம் தரும் விஷயமாக இதுவும் இருக்கட்டும் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் வாழ்க வளமுடன்
      சதா மரகொத்தி பறவை போல நினைவுகள் மனதை குடைந்து கொண்டு இருக்கிறது.

      மன ஆறுதல் பெற இறைவனை துதிப்பதும், இப்படி இயற்கையை ரசிப்பதும், பேரனுடன் விளையாடுவதும் என்று இருக்கிறேன்.
      நீங்கள் சொல்வது போல மனதுக்கு இதம் தருகிறது இந்த பறவைகளை பார்ப்பது.
      விடுமுறை நாட்களில் வண்ண வண்ண பலூங்கள் வானத்தில் பறக்கிறது மனிதர்களை தாங்கி அதையும் ரசிக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. மரங்கொத்திப் பறவை படங்களும் விளக்கமும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு நன்றாக உள்ளது. பறவைகளை கண்டால் என்றுமே நம் மனதிற்குள் ஒரு ஆனந்தம் வரும். அங்குள்ள மரங்கொத்தி பறவைகள் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது.இங்குள்ளதை போல இல்லை என நினைக்கிறேன். அங்குள்ள மர வீடுகளை அவற்றினிடமிருந்து பாதுகாக்க செய்யும் உபாயங்களை தெரிந்து கொண்டேன்.

    தங்களுக்கு புதிதான கேமரா வாங்கித்தந்த தங்கள் மகனுக்கு பாராட்டுக்கள்.

    உங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள் அனைத்தும் அழகாக உள்ளது புறாக்கள் கூட வந்துள்ளது போலும்.. காணொளியும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். பறவைகளின் நேசரான உங்களைப் பார்த்து பழகவே அவைகள் தினமும் இனி அங்கு வரும். நல்லது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பறவைகளை கண்டால் என்றுமே நம் மனதிற்குள் ஒரு ஆனந்தம் வரும். //

      ஆமாம், உண்மை.

      //தங்களுக்கு புதிதான கேமரா வாங்கித்தந்த தங்கள் மகனுக்கு பாராட்டுக்கள்.//

      நன்றி அவனிடம் சொல்கிறேன்.

      வருத்தபடாமல் இருக்க செய்யவேண்டும் என்று நினைக்கிறான்.

      மணிப்புறா, மாடப்புறா நிறைய உண்டு, காகம் உண்டு ஆனால் மலைபள்ளத்தாக்கில் மட்டுமே இருக்கிறது. வீடுகளுக்கு வராது.

      குருவிகள் வித விதமாக இருக்கிறது. பறவைகள் நேசர் என்று அழைப்பது மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.


      நீக்கு
  7. அழகிய படங்கள்.  சுவையான விவரங்கள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. பொட்டு இருந்தால் ஆண்பறவை!  ஹா..  ஹா...  என்ன ஒரு மாறுபாடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ,வியக்க வைக்கும் மாறுபாடு இல்லையா!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. அன்பு கோமதிமா,
    உங்கள் மனத்தை அறிந்து அத்தனை பறவைகளும்
    தேடி வருகின்றன.
    நான் மைனாக்கள் என்று நினைத்தேன்.
    மரங்கொத்தியைப் பற்றி இத்தனை தகவல்களா.
    அழகழகான படங்கள்.
    உங்களுக்கு என்று போஸ் கொடுக்கின்றன.

    நல்ல காமிராவைப் பரிசளித்த மகனுக்கு வாழ்த்துகள்.
    மகளும் தேடிக் கொடுத்திருக்கிறார்.

    நல்ல பதிவை பொருத்தமாகப் படங்களுடன்
    பதிவது எத்தனை அழகாக இருக்கிறது.
    காணொளி மிக அழகு.
    சுறுசுறுப்பாக அவை இயங்குவதும், உங்கள் மகன்

    உணவளிப்பதும் மிக மிகச் சிறப்பு.
    வாழ்க வளமுடன் தங்கச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      நிறைய பறவைகள் இருக்கிரது அக்கா.
      மரங்கொத்தி பறவைகள் வீட்டை நாசம் செய்வதுதான் வருத்தமாக இருக்கிறது.

      அதிகமாக துளையிட்டு வீட்டை நாசம் செய்தால் பிடித்து வேறு இடத்திற்கு அதை அப்புறபடுத்த வர ஆட்கள் இருக்கிறார்களாம்.
      ஆமாம் , மகள் பேர் தேடி கொடுத்தாள்.
      மகன் காமிரா கொடுத்தான் வாழ்த்துக்களை சொல்கிறேன்.

      உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. அழகிய படங்களும் விவரமான செய்திகளும் இன்றைய பதிவு அருமை..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. தங்களது கை வண்ணத்தில் கரடிக் கோலத்தினை நேற்றைய எங்கள் பிளாக்கில் கண்டேன்... அழகாக இருந்தது..

    நேற்று வேலைச் சூழலில் அங்கே சொல்ல முடியவில்லை.. இப்படியான கோலங்களைக் காண்பதில் எல்லாருக்குமே மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயவரம் வீட்டில் வரைந்த கோலம். 10 வீடுகளில் உள்ளவர்கள் தினம் வந்து மார்கழி கோலத்தை பார்ப்பார்கள். அவர்கள் குழந்தைகள் அத்தை இதை வரையுங்கள் என்று ஏதாவது படத்தை கொடுப்பார்கள். நானும் என்னால் முடிந்தவரை வரைந்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவேன்.
      என்னைவிட அழகாய் வரைபவர்கள் இருப்பார்கள்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது இந்த கிலா மரங்கொத்திப் பறவை. படங்களும் விவரங்களும் காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க் வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. ஆ கோமதி அக்கா, இவை மரங்கொத்திப் பறவைகளோ.. பார்த்தால் சிட்டுக்குருவிபோல இருக்குதே, நம்மூர்களில்தான் பெரிதாக இருப்பினமோ..

    மகன் வீட்டுக்கு வரவில்லைப் பறவைகள்.. அவை கோமதி அக்காவைத் தேடித்தான் வருகின்றன:)).. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      சிட்டுக்குருவியைவிட பெரிது.

      மரங்கொத்தி பறவைகள் தான்.
      என்னை தேடி வருகிறதா!
      படங்களை ரசித்தமைக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  15. புறாக்கூட்டம் அழகு. வீடியோ நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறாக்கள் மட்டும் இல்லை, வேறு பறவைகளும் இருக்கிறது அதிரா.
      காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குளிர் எப்படி இருக்கிறது. உங்கள் வேலை ஆரம்பித்து விட்டதா?

      நீக்கு
  16. மரங்கொத்திப் பறவைகள், ரொம்ப அழகா காட்சி படுத்தி இருக்கீர்கள் மா ...அனைத்து படங்களும் மிக துல்லியமும் , அழகும் .

    தகவல்கள் மிக சிறப்பு மா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு