வெள்ளி, 29 அக்டோபர், 2021

இலையுதிர் கால விழா -2


McDonough   அழகிய கட்டிடம்


இலையுதிர் கால விழா -1   McDonough என்ற இடத்திலும் இலையுதிர் கால விழா நடந்தது அதை பார்க்க போனோம், அது அடுத்த பதிவில் என்று இதற்கு முந்திய பதிவின் நிறைவில் சொல்லியிருந்தேன். இந்த பதிவில் இந்த ஊரில் பார்த்த காட்சிகள் .


குளிர் சாதன பெட்டி அமைப்பில்   மோட்டர் ரூம், அதன் மேல்    அழகான ஓவியம்

 
இந்த இடத்தில் நிறைய பேர் ஸ்பான்சர் செய்து வித விதமாக பொம்மைகளை வைத்து இருக்கிறார்கள்.




ஆம்புலன்ஸ்
தன் வளர்ப்பு செல்லத்துடன் சைக்கிளில்





இந்த வீட்டை படம் எடுக்கப்போகும் போது கீழே விழுந்து கிடந்த  மரத்தின் காய்கள் கோலி குண்டு போல்  என்னை கீழே இடர வைக்க பார்த்தது ,  அந்த காயை எடுத்துப் பார்த்தேன், சின்ன பனங்காயை சீவியது போல இருந்தது.

பனங்காய் போல தானே தெரிகிறது?

படைவீரர்கள் , காற்றுக்கு தலை சாய்ந்து இருக்கிறது.
நம்மால் முடியும்
இலவச ஆலோசனை நேரம்

குடும்ப சந்திப்பு நேரம்




101 டால்மேஷியன்ஸ் என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சாகச நகைச்சுவைத் திரைப்பட  மாடலில் 

கட்டிடத் தொழிலாளி

குதிரை வீரர்  நம் முகத்தை  துவாரத்தில் வைத்து படம் எடுத்து கொள்ளலாம்.















இவர்களுக்கு கண்டிப்பாய் நன்றி சொல்ல வேண்டும். இந்த கொரோனா காலத்தில் அவர்கள் செய்த சேவைக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறோம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. பெரிய சிரமம் எடுத்துச் செய்யப்பட பொம்மைகள் இல்லை என்று தோன்றுகிறது..   சின்னக் குழந்தைகள் வரையும் மனித பொம்மை போல...  இந்த பொம்மைகள் எனக்கு மணி ஹெயிஸ்ட் தொடரின் முகமூடியை நினைவூட்டுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பெரிய சிரமம் எடுத்துச் செய்யப்பட பொம்மைகள் இல்லை என்று தோன்றுகிறது..//

      பார்க்க ஆழகாய் இல்லை என்றாலும் அதற்கு வேலை செய்ய வேண்டும் தானே!

      குழந்தைகள் வரையும் மனித பொம்மை போல இருக்கா ? குழந்தைகளை கவர அவர்கள் செய்ததுபோல செய்து இருக்கிறார்கள் நினைக்க தோன்றுகிறது.


      நீக்கு
  2. அது மோட்டார் ரூமா?  ஏதோ சிறு கடையாய் இருக்கும் ன்று நினைத்தேன்.  இந்தப் பக்கம் திறக்கும்படியான கவுண்ட்டர் இருப்பது போல தோன்றியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏதோ சிறு கடையாய் இருக்கும் ன்று நினைத்தேன்.//

      நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன்.

      //இந்தப் பக்கம் திறக்கும்படியான கவுண்ட்டர் இருப்பது போல தோன்றியது!/

      இரண்டு பக்கமும் அப்படி இருக்கிறது.

      நீக்கு
  3. ஆம், பனங்காயைப் போலதான் தெரிகிறது.  மேலும் செயற்கையாய் செய்திருப்பது போலவும் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் படைப்பு செயற்கை போல இருக்கிறதா?
      இது காயின் உள் பக்கம். காயின் மேற்பகுதி குடை ஜிமிக்கி போல இருக்கும். அந்த குடை போன்ற மேல் பகுதி கீழே விழுந்து விட்டால் இப்படி பனங்காய் போல தெரியும். இங்கு மகள் வீட்டிலும் இந்த மரம் இருக்கிறது. சின்னதாக காய் இருக்கிறது. இது போலவே இருக்கிறது. ஒரு நாள் அதை படம் எடுத்து போடுகிறேன்.

      நீக்கு
  4. காற்றில் கவுன் பறப்பது போல சிலை..    கொரோனா காலத்தில் அவர்களின் சேவைக்கு அவர்களுக்கு கண்டிப்பாய் நன்றி சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்றில் தலை முடியும் அவள் முகத்தை மறைத்து இருக்கிறது.


      //கொரோனா காலத்தில் அவர்களின் சேவைக்கு அவர்களுக்கு கண்டிப்பாய் நன்றி சொல்லவேண்டும்.//

      ஆமாம். மகத்தான சேவை. [வணங்கி பாராட்டி நன்றி சொல்ல வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமான அழகு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. எத்தனை எத்தனை அழகான காட்சிகள். நீங்கள் பார்த்ததை எங்களுடனும் பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

    தலைநகரில் இன்னும் வழக்கமாக நடக்கும் கண்காட்சிகள் நடத்த ஆரம்பிக்கவில்லை. தீநுண்மி பயம் இன்னும் சில இடங்களில் விட்டு விலகவில்லை என்பதே காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நகாராஜ், வாழ்க வளமுடன்

      இங்கு இருக்கும் போது நடக்கும் விழாவை காட்டிவிட வேண்டும் அம்மாவிற்கு என்று நினைப்பதால் அழைத்து செல்கிறாள்.நான் பார்த்து மகிழ்ந்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து கொள்கிறேன். நாளைய எனது சேமிப்பாக பதிவு செய்கிறேன்.

      //தலைநகரில் இன்னும் வழக்கமாக நடக்கும் கண்காட்சிகள் நடத்த ஆரம்பிக்கவில்லை. தீநுண்மி பயம் இன்னும் சில இடங்களில் விட்டு விலகவில்லை என்பதே காரணம்.//

      தீநுண்மி விலகி வழக்கம் போல கண்காட்சிகள் நடைபெற வேண்டும்.
      நீங்கள் அந்த காட்சிகளை பகிரும் நாள் வரவேண்டும் விரைவில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  7. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பொம்மைகள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன கோமதிக்கா. ஒவ்வொரு தீம் ஒவ்வொரு பொம்மை அலங்காரத்திற்கும். ரசித்தேன் மிகவும்.

    இதுவும் ஒரு கலைதான். இல்லையா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன் , வாழ்க வளமுடன்

      //பொம்மைகள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கின்றன கோமதிக்கா. ஒவ்வொரு தீம் ஒவ்வொரு பொம்மை அலங்காரத்திற்கும். ரசித்தேன் மிகவும்.//

      ஆமாம் கீதா. ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //இதுவும் ஒரு கலைதான். இல்லையா.//

      ஆமாம்.

      நீக்கு
  9. சென்ற பதிவிலும் பார்த்தேன் இந்தப் பதிவிலும் வித்தியாசமான பொம்மைகள் அலங்காரங்கள். எல்லாப்படங்களும் சிறப்பாக இருக்கின்றன சகோதரி

    இது ஒரு விழா போலவே கொண்டாடுகிறார்கள் என்று தெரிகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //சென்ற பதிவிலும் பார்த்தேன் இந்தப் பதிவிலும் வித்தியாசமான பொம்மைகள் அலங்காரங்கள். எல்லாப்படங்களும் சிறப்பாக இருக்கின்றன சகோதரி//

      சென்ற பதிவையும், இந்த பதிவையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //இது ஒரு விழா போலவே கொண்டாடுகிறார்கள் என்று தெரிகிறது//
      மகிழ்ச்சியாக இருப்பதற்கு விழாக்கள் உதவி செய்கிறது.

      நீக்கு
  10. அக்கா எனக்கும் பனங்காயைப் போலத்தான் தெரிகிறது.

    முதல் படம் அட்டகாசம் என்றால் இரண்டாவது படம் ஃப்ரிட்ஜ் போன்ற படம் அழகோ அழகு. பெட்டிக்கடை என்று நினைத்தேன்...அல்லது டிக்கெட் கவுண்டர் என்று.

    நம்மூரில் கொலு போன்று அங்கு வெளியிடங்களில் இப்படி அழகாகச் செய்கிறார்கள் என்று நான் நினைத்ததுண்டு. ஒவ்வொன்றையும் அவர்கள் அனுபவித்து அழகாகச் செய்கிறார்கள்.

    கோவிட் தீமும் வந்திருக்கிறது...நம்மூரில் தீமாட்டிக் கொலு வைப்பது போல!!!!

    மிகவும் ரசித்தேன் கோமதிக்கா எல்லாப் படங்களையும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா எனக்கும் பனங்காயைப் போலத்தான் தெரிகிறது.//

      மகிழ்ச்சி.

      //முதல் படம் அட்டகாசம் என்றால் இரண்டாவது படம் ஃப்ரிட்ஜ் போன்ற படம் அழகோ அழகு. பெட்டிக்கடை என்று நினைத்தேன்...அல்லது டிக்கெட் கவுண்டர் என்று.//

      அந்த கட்டிடம் அழகு என்று படம் எடுத்துவிட்டு திரும்பினால், ஃப்ரிட்ஜ் போன்ற தோற்றம் அளித்ததில் இந்த கட்டிட ஓவியம் கவர்ந்தது.

      டிக்கட் இல்லை இலவசம் தான் .

      //நம்மூரில் கொலு போன்று அங்கு வெளியிடங்களில் இப்படி அழகாகச் செய்கிறார்கள் என்று நான் நினைத்ததுண்டு. ஒவ்வொன்றையும் அவர்கள் அனுபவித்து அழகாகச் செய்கிறார்கள்.//

      ஆமாம் , அவர் அவர் எண்ணங்களை வெளியில் காட்ட இந்த விழா அவர்களுக்கு துணைபுரிகிறது.

      //கோவிட் தீமும் வந்திருக்கிறது...நம்மூரில் தீமாட்டிக் கொலு வைப்பது போல!!!!//
      உலகையே அச்சுறுத்திய கோவிட் சமயம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சேவை மிகவும் மகத்தானது இல்லையா? அதற்கு நன்றி பாராட்ட தீம் வைத்து இருப்பதை பாராட்ட வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.





      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. படங்களை அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    முதல் படம் அழகான கட்டிடம் கவர்கிறது. மோட்டார் ரூமை குளிர் சாதன பெட்டி போல் செய்திருக்கும் படமும், அதன் பின் வரிசையாக வந்த படங்களும் நன்றாக உள்ளது. எல்லா பொம்மைகளுக்கும் பரங்கி காய்கள்தான் பிரதானமாக (தலையாக) அமைந்திருக்கிறது. அதை வைத்து ஒவ்வொன்றாக செய்வதற்கும், நல்ல பொறுமை வேண்டும். அவர்களின் உழைப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

    சைக்கிளில் தன் செல்லத்துடன் செல்லும் பொம்மையும், கவுன், தலைமுடி முதலியன உண்மையிலேயே காற்றில் பறப்பது போல் ஸ்டைலாக நிற்கும் பெண் பொம்மையும் மிகவும் அழகாக உள்ளது.

    உங்கள் காலை இடறிய மரக்காய்கள் அச்சு அசல் பனங்காய்களை சீவி வைத்தது போல் இருக்கிறது. இயற்கைதான் எவ்வளவு வலியதாக ஒரு சிறந்த கலைஞனைப் போல் உள்ளது என வியக்கத் தோன்றுகிறது. நல்லவேளை.. அந்த தருணம் உங்களை கீழே விழாமல் தப்பிக்கப் செய்த ஆண்டவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    எல்லாப் படங்களையும் பெரிதாக்கி பார்த்து ரசித்தேன்.உங்களால் ஒரு புதுமையான இடத்தை, இதுவரை நான் அறியாத தகவல்களுடன் உங்களுடன் சுற்றிப் பார்த்த அனுபவத்தை தந்த,உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. படங்களை அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.//

      நன்றி.எல்லா படங்களும் அலைபேசியில் எடுத்த படங்கள்.


      //முதல் படம் அழகான கட்டிடம் கவர்கிறது. மோட்டார் ரூமை குளிர் சாதன பெட்டி போல் செய்திருக்கும் படமும், அதன் பின் வரிசையாக வந்த படங்களும் நன்றாக உள்ளது. எல்லா பொம்மைகளுக்கும் பரங்கி காய்கள்தான் பிரதானமாக (தலையாக) அமைந்திருக்கிறது. அதை வைத்து ஒவ்வொன்றாக செய்வதற்கும், நல்ல பொறுமை வேண்டும். அவர்களின் உழைப்பை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.//

      படங்களை ரசித்துப்பார்த்து அவர்களின் பொறுமை, திறமை இவற்றை சொல்லி பாராட்டியது மகிழ்ச்சி.

      பரங்கிகாய்கள்தான் இந்த மாதச் சிறப்பு.


      //சைக்கிளில் தன் செல்லத்துடன் செல்லும் பொம்மையும், கவுன், தலைமுடி முதலியன உண்மையிலேயே காற்றில் பறப்பது போல் ஸ்டைலாக நிற்கும் பெண் பொம்மையும் மிகவும் அழகாக உள்ளது.//

      ஆமாம்.


      //இயற்கைதான் எவ்வளவு வலியதாக ஒரு சிறந்த கலைஞனைப் போல் உள்ளது என வியக்கத் தோன்றுகிறது//

      ஆமாம், இயற்கை சிறந்த கலைஞன் தான். ஒவ்வொன்றையும் ரசித்து படைத்து இருக்கிறான்.

      // அந்த தருணம் உங்களை கீழே விழாமல் தப்பிக்கப் செய்த ஆண்டவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.//

      ஆமாம், நன்றி சொன்னேன் இறைவனுக்கு. அப்புறம் தரையைப்பார்த்து நட என்று என் கணவர் சொல்வதும் காதில் கேட்டது.

      அந்த இடம் சரிவாக இருந்தது, காய்கள் உருண்டையாக வழ வழவென்று இருந்தது அதனால் எளிதில் இடரவைக்க முடிந்தது. உங்கள் அக்கறையான பிரார்த்தனைக்கு நன்றி.

      படங்களை எல்லாம் ரசித்து பார்த்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. விதம் விதமாக அழகாக செய்திருக்கிறார்கள்.
    பனங்காய்போல காய் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      ஆமாம், வித விதமாக அழகாக செய்து இருக்கிறார்கள்.

      பனங்காய் போல காய் இப்போதுதான் நானும் பார்த்தேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. அன்பின் கோமதி மா,
    வாழ்க வளமுடன்.
    பதிவின் படங்கள் எல்லாமே மிக அருமை. அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு துறை
    உரிமையாளர்களும்
    அவரவர்களை மாடல் செய்து
    பொம்மைகளைத் தத்ரூபமாக வைத்திருக்கிறார்கள்.

    நல்ல முயற்சி எடுத்து அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்.

    மழை வராத போது கண்காட்சி வைத்த சாமர்த்தியம் பாராட்டத்தக்கது.
    இந்த வாரம் 31 ஆம் தேதி வரை மழை இருக்கிறது.

    இப்போது வைத்திருந்தால் மழை வந்து
    சலிப்புக் கொடுத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      //பதிவின் படங்கள் எல்லாமே மிக அருமை.//

      நன்றி அக்கா.

      //அந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு துறை
      உரிமையாளர்களும்
      அவரவர்களை மாடல் செய்து
      பொம்மைகளைத் தத்ரூபமாக வைத்திருக்கிறார்கள்.//

      ஆமாம் அக்கா.


      மழை வராத போது கண்காட்சி வைத்த சாமர்த்தியம் பாராட்டத்தக்கது.
      இந்த வாரம் 31 ஆம் தேதி வரை மழை இருக்கிறது.//

      24 ம் தேதி நடபதாக இருந்த விழா மழை வரும் என்பது தெரிந்துதான் 16ம் தேதியே வைத்து விட்டார்கள்.


      //இப்போது வைத்திருந்தால் மழை வந்து
      சலிப்புக் கொடுத்திருக்கும்.//

      ஆமாம் அக்கா, நீங்கள் சொல்வது போல
      நடத்துபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் சலிப்பு ஏமாற்றம் ஆகி இருக்கும். மழையில் நனைந்து எல்லாம் ஊரி போய் அசிங்ககமாய் இருந்து இருக்கும். விடாது இரண்டு நாளாக மழை பெய்து கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  14. பனங்காயின் சின்ன வடிவத்துக்கு என்ன பெயரோ.
    அணில் அடிக்கடி கொண்டுவந்து போடும் ஏகார்ன்?
    நல்ல படங்களை ரசனையோடு எடுத்திருக்கிறீர்கள்.
    இந்த அழகு நிறைந்த காட்சிக்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பனங்காயின் சின்ன வடிவத்துக்கு என்ன பெயரோ.
      அணில் அடிக்கடி கொண்டுவந்து போடும் ஏகார்ன்?//
      அது போலதான் தெரிகிறது அக்கா.

      //நல்ல படங்களை ரசனையோடு எடுத்திருக்கிறீர்கள்.
      இந்த அழகு நிறைந்த காட்சிக்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக நன்றி மா.//

      அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  15. நல்ல படங்கள். முதல் படம் மிக நன்றாக அமைந்துள்ளது. இளம்பெண்ணின் ஆடை காற்றில் பறக்கும்போது அவள் தலை மயிரும் சேர்ந்து பறப்பது இயற்கையாக அமைக்கப் பட்ட பாட்டைக் காட்டுகிறது. பனங்காய்கள் போலுள்ள சின்னச் சின்னக் காய்களின் பெயர் என்ன? உள்ளே என்ன இருக்கும்? இதுவரையிலும் இந்தக் கொண்டாட்டங்களை இத்தனை விஸ்தாரமாகச் செய்வார்கள் என்பதே தெரியாது. சுவையான விஷயங்களுடன் அருமையான படங்களுடன் அரியதொரு படங்களுடன் கூடிய கட்டுரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      ஒவ்வொரு பொம்மைகளும் பாடு பட்டுதான் உருவாக்கி இருக்கிறார்கள்.

      வல்லி அக்கா அந்த பனங்காய் அணில் கொண்டு வந்து போடும் ஏகார்ன் என்கிறார்கள்.
      எனக்கு அதன் பேர் தெரியவில்லை.

      ஒவ்வொரு மாதமும் இங்கு விழா இருக்கிறது. கொண்டாட்ங்கள் இருக்கிறது.

      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு
  16. உண்மையிலேயே இந்தக் கொரோனா காலகட்டத்தில் உழைக்கும் மக்களுக்குப் பாராட்டுகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உண்மையிலேயே இந்தக் கொரோனா காலகட்டத்தில் உழைக்கும் மக்களுக்குப் பாராட்டுகளும் நன்றியும்.//

      ஆமாம், பல இன்னல்களை சகித்து கொண்டு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் சொல்ல வேண்டும், சொல்வோம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு