போன மாதம் வார இறுதி நாளில் சில இடங்கள் சுற்றிப்பார்க்க மகள் அழைத்துப் போனாள். அதில் இரண்டு மணி நேரத்தில் பார்த்த ஊர் ஆல்பைன் ஹெலன் ஜார்ஜியா என்ற ஊர் . 430 குடியிருப்பாளர்கள் மட்டுமே இங்கு வசிக்கிறார்கள். 2.1 சதுர மைல் தூரத்திற்கு அமைந்து உள்ள அழகான நகரம். ஜார்ஜியா மாநிலத்தில் அதிகமாக சுற்றுலா பிரியர்கள் சுற்றிப்பார்த்த இடமாம்.
நாங்கள் அங்கு பார்த்த காட்சிகள் இங்கு பதிவாக. அக்டோபர் மாதம் "ஹலோவின்" மாதம். நாங்கள் போனது செம்டம்பர் கடைசியில் .
அப்போதே இந்த ஊரில் ஹலோவின் அலங்காரம் ஆரம்பித்து விட்டது.
இந்த மாதம் முடிவதற்குள் இந்த ஊர் பதிவு போட்டுவிட வேண்டும் என்பதால் "டோம்ப்ஸ்டோன்" தொடர் பயணக் கட்டுரை பிறகு வரும்.
முன்பு இந்த நகரம் செவ்விந்திய செரோக்கி மக்கள் வசிக்கும் வீடாக இருந்தது. பின்னர் தங்கம் , மற்றும் மரங்களுக்காக வந்த ஐரோப்பியர்கள் தங்கினார்கள். இப்போது மக்கள் ப்ளூ ரிட்ஜ் மலை அமைப்பிற்காகவும், தென்கிழக்கின் மிக சிறந்த பவேரிய கிராமத்து காட்சிக்காகவும் வந்து செல்கிறார்கள்.
ஊரில் கட்டிடங்கள்ஜெர்மன் கட்டிட கலையில் இருக்கிறது
கிடார் இசைத்து கொண்டு இருந்தார்கள், அவர் இசைப்பதை ரசிக்க ஆசனங்கள் இருந்தன, சிலர் அமர்ந்து ரசித்து கொண்டு இருந்தார்கள்.
இதற்குள் சாக்கேல்ட் செய்யும் இடம் இருக்கிறது. அதை கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்
விசித்திரமான ஹோட்டல்கள் , கல்ப்ஸ்டோன் நடைபாதைகள், ஆலபைன் உணவு மற்றும் பானம் சிறப்பாம்.
நடைபயணம் விரும்பும் அன்பர்கள் இந்த ஊரின் இயற்கை அழகை ரசித்து நடைபயணம் செய்ய அடிக்கடி வருவார்களாம். ஓயின் ஆலைகள் நிறைய இருக்கிறதாம். கைவினைஞர்கள் நிறைய இருக்கிறார்கள் சின்ன சின்னதாக கலைப்பொருட்கள் நிறைய கடை வீதியில் வாங்கலாம் . திருவிழாக்கள் அடிக்கடி நடக்கும் ஊர்.
ஊர் முழுவதும் ஹாலோவின் அலங்காரம் இருக்கிறது.
வித வித பரங்கி காய்கள்
வித விதமான பொம்மைகள்
ஒரே மாதிரி ஆரஞ்சு வண்ண செயற்கை பூக்களால் அலங்காரம் . ஆரஞ்சு வண்ணம் சிறப்பாம் ஹாலோவின் சமயம். கல்லரை முழுவதும் ஆரஞ்சு வண்ண செயற்கை பூக்களால் அலங்காரம் செய்து வைத்து இருக்கிறார்கள்.
மினி ரயிலில் அமர்ந்து ஊரின் அழகை ரசிக்கலாம்
இது போன்ற குதிரை வண்டிகளில் அமர்ந்து ஊரைச்சுற்றி வரலாம்.
இரவு மின் விளக்கு போட்டு அலங்காரம்
ஐஸ் கீரிம் கடையில் வெண்ணிலா ஜஸ்கீரிம் சாப்பிட்டேன், அப்போது அந்த கடையில் பார்த்த புத்தர் சிலை அழகாய் இருந்தது .
அந்த கடையில் பார்த்த பல நாடுகளின் நாணய சேகரிப்பு
ஆலோவின் தின கொண்டாட்டம் 2014ம் ஆண்டு எழுதிய இந்த பதிவில் மகன் வீட்டில் விழா கொண்டாட்டத்திற்கு வாசலில் வைத்த அலங்காரம் . மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் வாசலில் வைத்து இருக்கும் பொம்மைகள் படம் இருக்கும். விழா ஏன் கொண்டாடுகிறார்கள் என்ற விவரம் இருக்கும்.
ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.
//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும்.
இப்போது இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். "பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா" என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பரிசு பொருள், பணம் கொடுத்து அனுப்புவார்கள்.
முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.
ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//
முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளும் செய்து வைத்து வணங்குகிறார்கள்.
மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் (பேய்) இருள் விலக்கும் பண்டிகை.
தீயவை அழிந்து எங்கும் நல்லது நடக்கட்டும்.
இருள் விலகி ஓளி பரவட்டும்.//
இந்த பதிவில் ஹாலோவின் பதிவு பற்றி எழுதியது.
நம் நாட்டில் புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறந்தது என்பார்கள். அக்டோபர் 6ம் தேதி வந்தது
மகாளய அமாவாசை. முன்னோர்கள் வழிப்பாட்டுக்கு மிகவும் சிறந்த மாதம் என்கிறார்கள். அன்று அவர்கள் அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு வருவார்கள் என்று நம்பபடுகிறது.
//மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்றும் கருடபுராணம் கூறுகிறது.
அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களை நினைக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்களாம்.
அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களளின் தாகமும், பசியும்தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.//
அது போல அக்டோபர் 31 ம் தேதி மேலை நாடுகளில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து வணங்குகிறார்கள். வீட்டை அலங்கரித்து கொண்டாடுகிறார்கள்.
ஹெலன் ஊரில் இன்னொரு நம்பிக்கைப் பார்த்தேன் , அவை கீழே வருகிறது:-
இந்த பாலத்தில் நிறைய பூட்டுக்கள் மாட்டப்பட்டு இருந்தது.
ஏன் என்ற கேள்வி உங்களுக்கு ஏற்பட்டது போல் எனக்கும் ஏற்பட்டது கேட்டேன் மகளிடம்.
இந்த பாலம் இரவு வண்ண விளக்குகள் அலங்காரத்தில் இருக்குமாம் அழகாய்.
பாலத்திற்கு கீழே ஆறு ஓடி கொண்டு இருக்கிறது.
காதலர்கள் தங்கள் அன்பு நிலைத்து இருக்கவும், பிரியாமல் இருக்கவும் வேண்டிக் கொண்டு இந்த பூட்டை இங்கே மாட்டி பூட்டிவிட்டு சாவியை ஓடும் ஆற்றில் போட்டு விடுவார்களாம்.
நம்பிக்கை வாழ்க !
வலது பக்கம் தெரிவது ஓட்டல்
செல் பார்த்துக் கொண்டே போய் கல்லில் இடித்து நின்ற அழகிய பெண்
பெரியவர்கள், சின்னவர்கள், வயதானவர்கள் என்று எல்லோரும் இந்த ரப்பர் படகில் பயணம் செய்து மகிழ்கிறார்கள்.
ரப்பர் படகுகளை கொண்டு வந்து ஆற்றில் விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பயணம் செய்ய கட்டணம் உண்டு. இது போன்ற வாகனம் போய் கொண்டே இருந்ததைப் பார்த்தோம்.
இவர்கள் பேசிக் கொண்டே வீதியை கடந்தபின் பொறுமையாக பள்ளி வாகனம் தன் பயணத்தை தொடர்ந்தது.
நம் வாகனங்களை இரண்டு மணி நேரம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு ஊரை வலம் வந்தோம். கட்டணம் உண்டு. வாகனம் நிறுத்த .
நான் எடுத்த படங்கள் மூலம் இந்த ஊரின் அழகை பார்த்தீர்கள், மேலும் இந்த ஊரின் அழகை
பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. புத்தர் காணொளி மிகவும் அழகாக உள்ளது. இந்த விழாவை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. நாம் செப்டம்பரில் முன்னோர்களின் நினைவாக மஹாளயபக்ஷம் என பதினைந்து நாட்கள் கொண்டாடுவது போல், இந்த அக்டோபர் மாதம் முழுவதும் முன்னோர்கள் நினைவாக இந்த விழாவை கொண்டாடுவது சிறப்புத்தான். வண்ணம் அடித்த பறங்கி காய் பொம்மைகளும், மற்றும் ஹாலோவின் பொம்மைகள் அனைத்தும் பார்வையாக உள்ளது. வைக்கோல் அடைத்து, சோளக் கதிர்களை அழகாக குவித்து.. என புதுமையாக அழகாக செய்துள்ளார்கள். . (நம்மூர்களில் இறந்த பசுக்கன்றுக்கு பதிலாக அதன் உடலை பாடம் செய்து வைக்கோல் அடைத்து பசுமாட்டை திருப்திபடுத்துவதும் நினைவுக்கு வருகிறது...) இந்த விழா குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருக்கும். பெரியவர்களும் அவர்களுடன் சேர்ந்து விட்டால், அவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகளும் இரட்டிப்பு சந்தோஷத்தை அடைவார்கள். அனாவசியமாக பேய் பற்றிய பயங்கள் கூட அவர்களுக்கு இதனால் அகன்று விடும். இங்கு கூட சில வீடுகளில், (அப்பார்ட்மெண்ட்டில்) அக்டோபர் 31தேதி இந்த கொண்டாட்டங்கள் கொண்டாடுவதை சென்ற வருடங்களில் எல்லாம் பார்த்திருக்கிறேன்.
ஆற்றுப்பாலங்கள், ஆற்றின் அழகு, ரப்பர் படகுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஆற்றின் பாலத்தின் கம்பிகளில் பூட்டு விஷயம் படித்திருக்கிறேன். எல்லா பூட்டின் மேலும் அவரவர்கள் பெயர்களை பொறித்து உள்ளார்கள் போலும். இதைப்பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். ஏதோ அவர்களின் நம்பிக்கைகள் பலித்தால் நல்லதுதான்...! நம்பிக்கைதானே வாழ்க்கை. பதிவில் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அழகாக இருந்தது. மேலும் அந்த ஊரைப் பற்றிய காணொளி படங்களையும் பிறகு நிதானமாக பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
//பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. புத்தர் காணொளி மிகவும் அழகாக உள்ளது.//
நன்றி.
//அக்டோபர் மாதம் முழுவதும் முன்னோர்கள் நினைவாக இந்த விழாவை கொண்டாடுவது சிறப்புத்தான். வண்ணம் அடித்த பறங்கி காய் பொம்மைகளும், மற்றும் ஹாலோவின் பொம்மைகள் அனைத்தும் பார்வையாக உள்ளது. வைக்கோல் அடைத்து, சோளக் கதிர்களை அழகாக குவித்து.. //
ஆமாம். செப்டம்பர் மாதம் வார இறுதி நாளில் வரும் சுற்றுலாவினரை மகிழ்ச்சி படுத்த ஊர் முழுவதும் இப்படி வைத்து இருக்கிறார்கள்.
இன்னும் பயமுறுத்தும் தோற்றங்கள் வாசலில் வைத்து இருப்பதை காரில் வரும் போது பார்த்தேன்.
//இங்கு கூட சில வீடுகளில், (அப்பார்ட்மெண்ட்டில்) அக்டோபர் 31தேதி இந்த கொண்டாட்டங்கள் கொண்டாடுவதை சென்ற வருடங்களில் எல்லாம் பார்த்திருக்கிறேன்.//
மதுரையில் எங்கள் குடியிருபிலும் இப்போது வருகிறார்கள். நம் ஊர் திருவிழாவில் வேஷம் போட்டுக் கொண்டு வருவார்கள். அது போல்தான் எல்லோரும் அக்டோபர் 31 வேஷம் போட்டுக் கொண்டு வீடு வீடாக போவார்கள். கடைகளில் அவர்களுக்கு அதற்கு தேவையான ஆடைகள் வித விதமாக கிடைக்கும்.
//ஏதோ அவர்களின் நம்பிக்கைகள் பலித்தால் நல்லதுதான்...! நம்பிக்கைதானே வாழ்க்கை.//
ஆமாம்.
//அந்த ஊரைப் பற்றிய காணொளி படங்களையும் பிறகு நிதானமாக பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
//பூட்டு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையில் வேண்டுகிறார்கள் வியப்பாக இருக்கிறது//
ஆமாம். மதுரை சட்டை நாதர் சன்னதி கதவில் நிறைய பூட்டுக்கள் பூட்டி இருப்பார்கள். மக்களை பூட்டாதீர்கள் என்று சொல்லி பார்த்தது கோயில் நிர்வாகம், அப்படியும் கேட்காமல் பூட்டியதால். கதவை கழற்றி வைத்து விட்டார்கள். இப்போது கொடுமரத்திற்கு எதிர் உள்ள வீரபத்திர சாமி யை சுற்றி போட்டு இருக்கும் கம்பி தடுப்பில் பூட்டுகிறார்கள்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன் காணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி. சின்ன ஊராக இருந்தாலும் மனதை கவரும் ஊர். நம் ஊர் போல ஆருவி, ஆறுகள் இருந்தால் இவர்கள் எல்லாம் எப்படி மகிழ்வார்கள் என்று நினைத்து கொண்டேன்.
//பூட்டின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள், தங்கள் ஆண்பின்மேல் நம்பிக்கை வைக்காமல்! ஏதோ ஒரு பற்றுகோல்!..
அன்பில் நம்பிக்கை வைக்க தான் இந்த பூட்டும் போல! அன்புக்கு இடையூராக அவர்களுகுள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது, மற்றும் உறவுகள், நட்புகள், மற்றும் சமூகத்தால் ஏற்படுகிறதே! ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களை இணைந்து வாழ வைப்பது மகிழ்ச்சிதானே!
பாலத்தின் பூட்டுகள் அருமை. எல்லா நாடுகளிலும் இந்த வழக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் கோயில், பாலங்களில் இது போலப் பூட்டுகள். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் அட்டையிலும் எழுதித் தொங்க விடுவதைப் பார்த்திருக்கிறேன்.
மகன் இருக்கும் ஊரிலும் ஒரு சிறிய கோயில் கதவில் தொங்கும். இங்கும் தென் டகோட்டா சென்ற போது பார்த்தோம்.
//அதுவும் கோயில், பாலங்களில் இது போலப் பூட்டுகள். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் அட்டையிலும் எழுதித் தொங்க விடுவதைப் பார்த்திருக்கிறேன்.//
ஆமாம், நம்பிக்கைகள் நிறைய எல்லா நாடுகளுக்கும் பொதுவாக நிறைய இருக்கிறது அக்கா. சிவந்த மண் படத்தில் ரோம் நகரில் நீர் நிலையில் காசை விட்டு வேண்டிக் கொள்வார்கள். பார்த்து இருக்கிறேன்.
//மகன் இருக்கும் ஊரிலும் ஒரு சிறிய கோயில் கதவில் தொங்கும். இங்கும் தென் டகோட்டா சென்ற போது பார்த்தோம்.//
அப்படியா! நல்லது அக்கா. நம்பிக்கை அவர்கள் வாழ்வை நலமாக இருக்க வைக்கட்டும். நாமும் வாழ்த்துவோம்.
ஹாலோவீன் படங்கள் மிக அருமை. இங்கு வீட்டின் முன்னால் கல்லறைக் காட்சிகளும் எலும்புக்கூடுகள், ஆவி வடிவங்கள், சிலந்தி கூடுகள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கின்றன.:)
முன்னோர்கள் தினம் நம்மூர் மசானக் கொல்லையை நினைவு செய்ய வைக்கும்.
இங்கு கண் முன் சிறார்கள் வளர்ந்து விட்டார்கள். புதிதாகக் குழந்தைகள் வருவார்கள் என்று நினைக்கிறேன்.
//இங்கு வீட்டின் முன்னால் கல்லறைக் காட்சிகளும் எலும்புக்கூடுகள், ஆவி வடிவங்கள், சிலந்தி கூடுகள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கின்றன.:)//
மகன் வீட்டுக்கு எதிர்புறம் இப்படி பயமுறுத்தும் காட்சிகள் வைப்பார்கள்.
//முன்னோர்கள் தினம் நம்மூர் மசானக் கொல்லையை நினைவு செய்ய வைக்கும்.//
ஆமாம். நம்மூரில் அம்மன் திருவிழாவிற்கு அழகர் திருவிழாவிற்கு வேஷம் கட்டி வருவர்கள்.
மகன் ஊரில் பெரியவர்களும் வேஷம் போட்டு வீடு வீடாக வருவார்கள், அவர் அவார் வீடுகளில் நண்பர்களை, உறவினர்களை அழைத்து வேஷம் அணிந்து இனிப்புகள் வழங்கி மகிழ்வார்கள்.
காணொளி நிறைய இருக்கிறது நடந்து பார்க்கும் இடம் தான். நீங்கள் பார்த்து மகிழ்ந்தது மகிழ்ச்சி. அடுத்து கிறித்துமஸ் சமயம் இந்த ஊர் வேறு மாதிரி இருக்கும். இரவு விளக்கு அலங்காரத்தில் நன்றாக இருக்குமாம். ஏதோ மக்கள் சுற்றுலா சென்று மனதை மகிழ்ச்சி படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
ஹாலோவின் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் அசத்துகின்றன. வித்தியாசமான ஊர். அதன் பழக்கங்களும் அருமையாக இருக்கின்றன. நதியின் ஓரத்தில் இருக்கும் விடுதி மனதைக் கவர்ந்தது. அங்கே உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக நதியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதோ/காஃபி, தேநீர் போன்றவை குடிப்பதோ அருமையான அனுபவமாக இருக்கும். இங்கேயும் பூட்டுக்கள் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பார்க்கலாம். அநேகமாக இப்படியான நம்பிக்கைகளே மனிதரை ஒன்று சேர்க்கின்றன. எல்லாப் படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். காணொளியும் நன்றாக உள்ளது. சென்னை, பெங்களூர் வரை ஹாலோவின் கொண்டாட்டங்கள் வந்து விட்டன போலும்!
//ஹாலோவின் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் அசத்துகின்றன. வித்தியாசமான ஊர். அதன் பழக்கங்களும் அருமையாக இருக்கின்றன//
ஆமாம் . ஒவ்வொரு பண்டிகைக்கும் அந்த ஊர் தன்னை அழகு படுத்திக் கொண்டு மக்களை கவர்கிறது. டிசம்பர், ஜனவரி வேறு வகை உற்சாகத்தில் இருக்குமாம்.
//நதியின் ஓரத்தில் இருக்கும் விடுதி மனதைக் கவர்ந்தது. அங்கே உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக நதியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதோ/காஃபி, தேநீர் போன்றவை குடிப்பதோ அருமையான அனுபவமாக இருக்கும்.//
அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே தங்கள் உறவுகள் படகில் போகும் போது உற்சாக கர கோஷம் செய்கிறார்கள்.
//இங்கேயும் பூட்டுக்கள் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பார்க்கலாம். அநேகமாக இப்படியான நம்பிக்கைகளே மனிதரை ஒன்று சேர்க்கின்றன.//
ஆமாம், நம்பிக்கைகள் மனிதர்களை ஒன்று சேர்ப்பது உண்மைதான்.
எல்லாப் படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். காணொளியும் நன்றாக உள்ளது. சென்னை, பெங்களூர் வரை ஹாலோவின் கொண்டாட்டங்கள் வந்து விட்டன போலும்!//
படங்களை, பதிவை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
படங்கள் அனைத்தும் அழகு. தகவல்கள் பகிர்ந்தது நல்ல விஷயம். எத்தனை எத்தனை கொண்டாட்டங்கள். மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது.
//மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது.//
ஆமாம். ஏதாவது ஒன்றை வைத்து விழா கொண்டாடி மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். வாரமுழுவதும் வேலை வார இறுதியில் எங்காவது போய் மக்ழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு நிறைய இடங்கள் இருக்கிறது. உங்கள் கருத்துக்கு நன்றி
அருமையான இடத்தைத் தெரிவு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார் கயல். ஆலோவீன் மற்றும் மகாளய அமாவாசை பற்றியத் தகவல்களும் பகிர்வும் நன்று. வெவ்வேறு பிரதேசங்களானாலும் பழக்கவழக்கங்கள் வேறானாலும் மனிதர்களின் நம்பிக்கை ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.
பல வருடங்களுக்கு முன் அதீதம் மின்னிதழில் தெரிவு செய்து வெளியிட்ட ஒரு புகைப்படம் நினைவுக்கு வந்து போகிறது. ஒரு கம்பி வேலி முழுக்க இது போன்று பூட்டப்பட்ட பூட்டுகளைக் கொண்ட படம். அதன் பின்னணியைத் தற்போது அறிந்து கொண்டேன்.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன் ஆமாம், நல்ல இடம் அழைத்து போன இடம்.
//வெவ்வேறு பிரதேசங்களானாலும் பழக்கவழக்கங்கள் வேறானாலும் மனிதர்களின் நம்பிக்கை ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.//
ஆமாம். நம்பிக்கை ஒத்து போவதுதான் மகிழ்ச்சியை தருகிறது.
//பல வருடங்களுக்கு முன் அதீதம் மின்னிதழில் தெரிவு செய்து வெளியிட்ட ஒரு புகைப்படம் நினைவுக்கு வந்து போகிறது. ஒரு கம்பி வேலி முழுக்க இது போன்று பூட்டப்பட்ட பூட்டுகளைக் கொண்ட படம். //
ஓ ! நான் நம் ஊர் கோயிலில் மதுரை, மற்றும் சில ஊர்களில் பார்த்து இருக்கிறேன்.
இங்கு வித விதமான மாடலில் பூட்டு இருந்தது பதிவில் அதிகமான படம் என்று எடுத்து விட்டேன். மீன் மாதிரி இதயம் போல் எல்லாம் பூட்டு.
நம்பிக்கை அவர்களை இணைந்து வாழ வைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.
அனைத்தும் அழகு... கொடுத்துள்ள சுட்டிகளுக்கும் சென்றேன்... காணொளி அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவை,படங்களை, காணொளியை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வியப்பான செய்திகளும் படங்களும்
பதிலளிநீக்குகாதலர்கள் பூட்டு விடயம் நானும் முன்பு பதிவிட்டு இருந்தேன்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//காதலர்கள் பூட்டு விடயம் நானும் முன்பு பதிவிட்டு இருந்தேன்.//
நினைவு இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. புத்தர் காணொளி மிகவும் அழகாக உள்ளது. இந்த விழாவை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. நாம் செப்டம்பரில் முன்னோர்களின் நினைவாக மஹாளயபக்ஷம் என பதினைந்து நாட்கள் கொண்டாடுவது போல், இந்த அக்டோபர் மாதம் முழுவதும் முன்னோர்கள் நினைவாக இந்த விழாவை கொண்டாடுவது சிறப்புத்தான். வண்ணம் அடித்த பறங்கி காய் பொம்மைகளும், மற்றும் ஹாலோவின் பொம்மைகள் அனைத்தும் பார்வையாக உள்ளது. வைக்கோல் அடைத்து, சோளக் கதிர்களை அழகாக குவித்து.. என புதுமையாக அழகாக செய்துள்ளார்கள். . (நம்மூர்களில் இறந்த பசுக்கன்றுக்கு பதிலாக அதன் உடலை பாடம் செய்து வைக்கோல் அடைத்து பசுமாட்டை திருப்திபடுத்துவதும் நினைவுக்கு வருகிறது...) இந்த விழா குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருக்கும். பெரியவர்களும் அவர்களுடன் சேர்ந்து விட்டால், அவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகளும் இரட்டிப்பு சந்தோஷத்தை அடைவார்கள். அனாவசியமாக பேய் பற்றிய பயங்கள் கூட அவர்களுக்கு இதனால் அகன்று விடும். இங்கு கூட சில வீடுகளில், (அப்பார்ட்மெண்ட்டில்)
அக்டோபர் 31தேதி இந்த கொண்டாட்டங்கள் கொண்டாடுவதை சென்ற வருடங்களில் எல்லாம் பார்த்திருக்கிறேன்.
ஆற்றுப்பாலங்கள், ஆற்றின் அழகு, ரப்பர் படகுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஆற்றின் பாலத்தின் கம்பிகளில் பூட்டு விஷயம் படித்திருக்கிறேன். எல்லா பூட்டின் மேலும் அவரவர்கள் பெயர்களை பொறித்து உள்ளார்கள் போலும். இதைப்பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். ஏதோ அவர்களின் நம்பிக்கைகள் பலித்தால் நல்லதுதான்...! நம்பிக்கைதானே வாழ்க்கை. பதிவில் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அழகாக இருந்தது. மேலும் அந்த ஊரைப் பற்றிய காணொளி படங்களையும் பிறகு நிதானமாக பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. புத்தர் காணொளி மிகவும் அழகாக உள்ளது.//
நன்றி.
//அக்டோபர் மாதம் முழுவதும் முன்னோர்கள் நினைவாக இந்த விழாவை கொண்டாடுவது சிறப்புத்தான். வண்ணம் அடித்த பறங்கி காய் பொம்மைகளும், மற்றும் ஹாலோவின் பொம்மைகள் அனைத்தும் பார்வையாக உள்ளது. வைக்கோல் அடைத்து, சோளக் கதிர்களை அழகாக குவித்து.. //
ஆமாம். செப்டம்பர் மாதம் வார இறுதி நாளில் வரும் சுற்றுலாவினரை மகிழ்ச்சி படுத்த ஊர் முழுவதும் இப்படி வைத்து இருக்கிறார்கள்.
இன்னும் பயமுறுத்தும் தோற்றங்கள் வாசலில் வைத்து இருப்பதை காரில் வரும் போது பார்த்தேன்.
//இங்கு கூட சில வீடுகளில், (அப்பார்ட்மெண்ட்டில்)
அக்டோபர் 31தேதி இந்த கொண்டாட்டங்கள் கொண்டாடுவதை சென்ற வருடங்களில் எல்லாம் பார்த்திருக்கிறேன்.//
மதுரையில் எங்கள் குடியிருபிலும் இப்போது வருகிறார்கள். நம் ஊர் திருவிழாவில் வேஷம் போட்டுக் கொண்டு வருவார்கள். அது போல்தான் எல்லோரும் அக்டோபர் 31 வேஷம் போட்டுக் கொண்டு வீடு வீடாக போவார்கள். கடைகளில் அவர்களுக்கு அதற்கு தேவையான ஆடைகள் வித விதமாக கிடைக்கும்.
//ஏதோ அவர்களின் நம்பிக்கைகள் பலித்தால் நல்லதுதான்...! நம்பிக்கைதானே வாழ்க்கை.//
ஆமாம்.
//அந்த ஊரைப் பற்றிய காணொளி படங்களையும் பிறகு நிதானமாக பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
பூட்டு
பதிலளிநீக்குஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையில் வேண்டுகிறார்கள்
வியப்பாக இருக்கிறது
நன்றி சகோதரி
வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்கு//பூட்டு
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையில் வேண்டுகிறார்கள்
வியப்பாக இருக்கிறது//
ஆமாம். மதுரை சட்டை நாதர் சன்னதி கதவில் நிறைய பூட்டுக்கள் பூட்டி இருப்பார்கள். மக்களை பூட்டாதீர்கள் என்று சொல்லி பார்த்தது கோயில் நிர்வாகம், அப்படியும் கேட்காமல் பூட்டியதால். கதவை கழற்றி வைத்து விட்டார்கள்.
இப்போது கொடுமரத்திற்கு எதிர் உள்ள வீரபத்திர சாமி யை சுற்றி போட்டு இருக்கும் கம்பி தடுப்பில் பூட்டுகிறார்கள்.
நம்பிக்கை வியப்பை அளிப்பது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
காணொளிகள் பார்த்தேன். அழகான இடம், அல்லது கண்கவரும் இடம். வண்ணமயமாக இருக்கிறது. அழகிய புகைப்படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குகாணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி. சின்ன ஊராக இருந்தாலும் மனதை கவரும் ஊர்.
நம் ஊர் போல ஆருவி, ஆறுகள் இருந்தால் இவர்கள் எல்லாம் எப்படி மகிழ்வார்கள் என்று நினைத்து கொண்டேன்.
அழகிய புகைப்படங்கள்//
நன்றி.
அன்பின் கோமதிமா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
படங்கள் அனைத்துமே சிறப்பு.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்துமே சிறப்பு.//
நன்றி அக்கா.
பூட்டின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள், தங்கள் ஆண்பின்மேல் நம்பிக்கை வைக்காமல்! ஏதோ ஒரு பற்றுகோல்!
பதிலளிநீக்கு//பூட்டின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள், தங்கள் ஆண்பின்மேல் நம்பிக்கை வைக்காமல்! ஏதோ ஒரு பற்றுகோல்!..
நீக்குஅன்பில் நம்பிக்கை வைக்க தான் இந்த பூட்டும் போல!
அன்புக்கு இடையூராக அவர்களுகுள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது, மற்றும் உறவுகள், நட்புகள், மற்றும் சமூகத்தால் ஏற்படுகிறதே!
ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களை இணைந்து வாழ வைப்பது மகிழ்ச்சிதானே!
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
பாலத்தின் பூட்டுகள் அருமை. எல்லா நாடுகளிலும் இந்த வழக்கம் இருக்கிறது
பதிலளிநீக்குஎன்று நினைக்கிறேன்.
அதுவும் கோயில், பாலங்களில் இது போலப்
பூட்டுகள். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல்
அட்டையிலும் எழுதித் தொங்க விடுவதைப் பார்த்திருக்கிறேன்.
மகன் இருக்கும் ஊரிலும் ஒரு சிறிய கோயில் கதவில் தொங்கும். இங்கும்
தென் டகோட்டா சென்ற போது பார்த்தோம்.
//அதுவும் கோயில், பாலங்களில் இது போலப்
நீக்குபூட்டுகள். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல்
அட்டையிலும் எழுதித் தொங்க விடுவதைப் பார்த்திருக்கிறேன்.//
ஆமாம், நம்பிக்கைகள் நிறைய எல்லா நாடுகளுக்கும் பொதுவாக நிறைய இருக்கிறது அக்கா.
சிவந்த மண் படத்தில் ரோம் நகரில் நீர் நிலையில் காசை விட்டு வேண்டிக் கொள்வார்கள். பார்த்து இருக்கிறேன்.
//மகன் இருக்கும் ஊரிலும் ஒரு சிறிய கோயில் கதவில் தொங்கும். இங்கும்
தென் டகோட்டா சென்ற போது பார்த்தோம்.//
அப்படியா! நல்லது அக்கா. நம்பிக்கை அவர்கள் வாழ்வை நலமாக இருக்க வைக்கட்டும். நாமும் வாழ்த்துவோம்.
ஹாலோவீன் படங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குஇங்கு வீட்டின் முன்னால் கல்லறைக் காட்சிகளும் எலும்புக்கூடுகள்,
ஆவி வடிவங்கள், சிலந்தி கூடுகள் எல்லாம்
தொங்கிக் கொண்டிருக்கின்றன.:)
முன்னோர்கள் தினம் நம்மூர் மசானக் கொல்லையை
நினைவு செய்ய வைக்கும்.
இங்கு கண் முன் சிறார்கள் வளர்ந்து விட்டார்கள். புதிதாகக்
குழந்தைகள் வருவார்கள் என்று நினைக்கிறேன்.
//இங்கு வீட்டின் முன்னால் கல்லறைக் காட்சிகளும் எலும்புக்கூடுகள்,
நீக்குஆவி வடிவங்கள், சிலந்தி கூடுகள் எல்லாம்
தொங்கிக் கொண்டிருக்கின்றன.:)//
மகன் வீட்டுக்கு எதிர்புறம் இப்படி பயமுறுத்தும் காட்சிகள் வைப்பார்கள்.
//முன்னோர்கள் தினம் நம்மூர் மசானக் கொல்லையை
நினைவு செய்ய வைக்கும்.//
ஆமாம். நம்மூரில் அம்மன் திருவிழாவிற்கு
அழகர் திருவிழாவிற்கு வேஷம் கட்டி வருவர்கள்.
மகன் ஊரில் பெரியவர்களும் வேஷம் போட்டு வீடு வீடாக வருவார்கள், அவர் அவார் வீடுகளில் நண்பர்களை, உறவினர்களை அழைத்து வேஷம் அணிந்து இனிப்புகள் வழங்கி மகிழ்வார்கள்.
ஸ்கூல் பஸ் காத்திருப்பது புன்னகை வரவழைத்தது.
பதிலளிநீக்குஅப்படித் தன்னை மறந்து பேசிச் செல்பவர்களும் இங்கே அதிசயம் தான்!!!!
இநு நடந்து செல்பவர்களுக்கு கொடுக்கும் மரியாதை வியப்பில் ஆழ்த்தும்.
நீக்குஎல்லா வாகனங்களில் செல்பவரும் நடந்து போகிறர்வர்களுக்கு வழி விட்டு நிற்பார்கள்.
நடந்து போகும் இடத்தில் நாம் நடந்து வீதியை கடக்கும் போது.
ஹெலன் ஊர் காணொளி மிக அருமை.
பதிலளிநீக்குநல்ல பகிர்வுக்கு மிக நன்றி மா.
காணொளி நிறைய இருக்கிறது நடந்து பார்க்கும் இடம் தான்.
நீக்குநீங்கள் பார்த்து மகிழ்ந்தது மகிழ்ச்சி.
அடுத்து கிறித்துமஸ் சமயம் இந்த ஊர் வேறு மாதிரி இருக்கும்.
இரவு விளக்கு அலங்காரத்தில் நன்றாக இருக்குமாம்.
ஏதோ மக்கள் சுற்றுலா சென்று மனதை மகிழ்ச்சி படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.
ஹாலோவின் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் அசத்துகின்றன. வித்தியாசமான ஊர். அதன் பழக்கங்களும் அருமையாக இருக்கின்றன. நதியின் ஓரத்தில் இருக்கும் விடுதி மனதைக் கவர்ந்தது. அங்கே உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக நதியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதோ/காஃபி, தேநீர் போன்றவை குடிப்பதோ அருமையான அனுபவமாக இருக்கும். இங்கேயும் பூட்டுக்கள் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பார்க்கலாம். அநேகமாக இப்படியான நம்பிக்கைகளே மனிதரை ஒன்று சேர்க்கின்றன. எல்லாப் படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். காணொளியும் நன்றாக உள்ளது. சென்னை, பெங்களூர் வரை ஹாலோவின் கொண்டாட்டங்கள் வந்து விட்டன போலும்!
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஹாலோவின் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் அசத்துகின்றன. வித்தியாசமான ஊர். அதன் பழக்கங்களும் அருமையாக இருக்கின்றன//
ஆமாம் . ஒவ்வொரு பண்டிகைக்கும் அந்த ஊர் தன்னை அழகு படுத்திக் கொண்டு மக்களை கவர்கிறது. டிசம்பர், ஜனவரி வேறு வகை உற்சாகத்தில் இருக்குமாம்.
//நதியின் ஓரத்தில் இருக்கும் விடுதி மனதைக் கவர்ந்தது. அங்கே உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக நதியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதோ/காஃபி, தேநீர் போன்றவை குடிப்பதோ அருமையான அனுபவமாக இருக்கும்.//
அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே தங்கள் உறவுகள் படகில் போகும் போது உற்சாக கர கோஷம் செய்கிறார்கள்.
//இங்கேயும் பூட்டுக்கள் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பார்க்கலாம். அநேகமாக இப்படியான நம்பிக்கைகளே மனிதரை ஒன்று சேர்க்கின்றன.//
ஆமாம், நம்பிக்கைகள் மனிதர்களை ஒன்று சேர்ப்பது உண்மைதான்.
எல்லாப் படங்களும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். காணொளியும் நன்றாக உள்ளது. சென்னை, பெங்களூர் வரை ஹாலோவின் கொண்டாட்டங்கள் வந்து விட்டன போலும்!//
படங்களை, பதிவை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
மதுரையிலும் வருகிறார்கள் குழந்தைகள்.
அருமையான இடம். உடன் வந்த உணர்வு. பொருத்தமான புகைப்படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அழகான படங்களும் செய்திகளும் அந்தந்த் இடங்களுக்கே இட்டுச் செல்கின்றன..
பதிலளிநீக்குஇதெல்லாவற்றையும் எப்போதுமே சென்று பார்ப்பது?...
இப்படியான பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகின்றன..
வாழ்க நலமுடன்...
வாழ்க மகிழ்வுடன்..
வணக்கம் சகோ துரை செல்வாரஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான படங்களும் செய்திகளும் அந்தந்த் இடங்களுக்கே இட்டுச் செல்கின்றன.//
நன்றி.
//இதெல்லாவற்றையும் எப்போதுமே சென்று பார்ப்பது?.//
இதெல்லாம் நாம் எப்படி போய் பார்ப்போம்! குழந்தைகள் அந்த ஊரில் இருப்பதால் அழைத்து செல்கிறார்கள்.
இல்லையென்றால் இந்த நாட்டை பார்க்க வருமாட்டோம். நாம் நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் நமக்கு நிறைய இருக்கே! கோயில் குளம் போவோம்.
உங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது அறிந்து எனக்கு மகிழ்ச்சி.
வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்கள் அனைத்தும் அழகு. தகவல்கள் பகிர்ந்தது நல்ல விஷயம். எத்தனை எத்தனை கொண்டாட்டங்கள். மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் அழகு. //
நன்றி.
//மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது.//
ஆமாம். ஏதாவது ஒன்றை வைத்து விழா கொண்டாடி மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
வாரமுழுவதும் வேலை வார இறுதியில் எங்காவது போய் மக்ழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு நிறைய இடங்கள் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி
அருமையான இடத்தைத் தெரிவு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார் கயல். ஆலோவீன் மற்றும் மகாளய அமாவாசை பற்றியத் தகவல்களும் பகிர்வும் நன்று. வெவ்வேறு பிரதேசங்களானாலும் பழக்கவழக்கங்கள் வேறானாலும் மனிதர்களின் நம்பிக்கை ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன் அதீதம் மின்னிதழில் தெரிவு செய்து வெளியிட்ட ஒரு புகைப்படம் நினைவுக்கு வந்து போகிறது. ஒரு கம்பி வேலி முழுக்க இது போன்று பூட்டப்பட்ட பூட்டுகளைக் கொண்ட படம். அதன் பின்னணியைத் தற்போது அறிந்து கொண்டேன்.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், நல்ல இடம் அழைத்து போன இடம்.
//வெவ்வேறு பிரதேசங்களானாலும் பழக்கவழக்கங்கள் வேறானாலும் மனிதர்களின் நம்பிக்கை ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.//
ஆமாம். நம்பிக்கை ஒத்து போவதுதான் மகிழ்ச்சியை தருகிறது.
//பல வருடங்களுக்கு முன் அதீதம் மின்னிதழில் தெரிவு செய்து வெளியிட்ட ஒரு புகைப்படம் நினைவுக்கு வந்து போகிறது. ஒரு கம்பி வேலி முழுக்க இது போன்று பூட்டப்பட்ட பூட்டுகளைக் கொண்ட படம். //
ஓ ! நான் நம் ஊர் கோயிலில் மதுரை, மற்றும் சில ஊர்களில் பார்த்து இருக்கிறேன்.
இங்கு வித விதமான மாடலில் பூட்டு இருந்தது பதிவில் அதிகமான படம் என்று எடுத்து விட்டேன். மீன் மாதிரி இதயம் போல் எல்லாம் பூட்டு.
நம்பிக்கை அவர்களை இணைந்து வாழ வைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
கலைகள் கொண்டாட்டங்கள் எனசிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குகாண்பதற்கு இனிதாக இருந்திருக்கும்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், கலைகள் கொண்டாட்டங்கள் என சிறப்பாக இருந்தது.
காண்டது இனிமையான நினைவுகள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.