துப்பாக்கி சண்டை நாடகம் நடக்கும் இடம்
அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அங்கு பார்த்தவைகளைப் பற்றி தொடர் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது.
அரிசோனாவின் எல்லைப்புற நகரமான டோம்ப்ஸ்டோனில் கவ்பாய்ஸ் மற்றும் விழிப்புணர்வு சட்டத்தரணிகள் குழுவினருக்கு இடையிலான பதற்றம் வெடிக்கும் நிலை வந்தபோது வெறும் 30 வினாடிகளில் 30 சுற்றுகள் சுடப்பட்ட சண்டை உண்மையில் நடந்தது.
ஓகே கோரல் என்ற இடத்தில் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சுட்டியில் சென்று துப்பாக்கி சண்டை விவரம் படிக்கலாம்.
டிக்கட் பரிசோதிக்கப்படுகிறது
பார்வையாளர்கள் அமர வைக்கப்படுகிறார்கள்
ஆரம்பம் ஆகி விட்டது நாடகம் . மது கடையில் மது அருந்தி விட்டு சணடைக்கு அழைப்பது. நான்கு நடிகர்கள்தான்.
//பழைய அமெரிக்க தென்மேற்கில், "கவ்பாய்" என்பவர்கள் சட்டவிரோத அல்லது குடிகார கால்நடை கடத்தல்காரர்கள் மற்றும் குதிரை திருடர்களின் கும்பலின் உறுப்பினரைக் குறிக்கிறது. டோம்ப்ஸ்டோனில், அந்தக் குழுவினர் கோச்சிஸ் கவுண்டி கவ்பாய்ஸ் என்று அழைக்கப்பட்டனர்.
அக்டோபர் 28, 1880 இல் சிட்டி மார்ஷல், ஃப்ரெட் வைட், ஒரு உறுப்பினரை தற்செயலாகக் கொன்றபோது, கோச்சிஸ் கவுண்டி கவ்பாய்ஸ், ஏர்ப் சகோதரர்களின் மரண எதிரிகளுக்கு ஒரு தொல்லை தருகிறது. குடிபோதையில் கவ்பாய்ஸ் தங்கள் துப்பாக்கிகளை இரவு இறக்குகிறார்கள். வெள்ளைக்காரர்கள் தங்கள் ஆயுதங்களை சரணடையும்படி கேட்டார்கள், அவர்கள் அதற்கு இணங்கினர், ஆனால் “கர்லி பில்” ப்ரோசியஸுக்கு சொந்தமான துப்பாக்கி தற்செயலாக வைட்டை குடலில் சுட்டது.
இது ஒரு விபத்து, ஃப்ரெட் வைட் கூட அவரது மரணக் கட்டிலில் படுத்துக் கொள்ளும்போது வலியுறுத்துவார், அதே போல் ப்ரோசியஸை விசாரணையில் ஆதரித்த வியாட் ஈர்ப். ஆனால் ஃப்ரெட் ஒயிட்டின் மரணம், விர்ஜில் ஈர்ப் அவருக்குப் பதிலாக புதிய நகர மார்ஷல் என்று பெயரிட்டது, அதனுடன், கல்லறைக்கு ஒரு புதிய சகாப்தம் வந்தது.//
பழைய ஆங்கிலப் படம் பார்த்த உணர்வு
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குபழைய ஆங்கிலப் படங்கள் போலதான் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள், காணொளிகள் அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்கள், காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
துப்பாக்கிச் சண்டை.... நிகழ்வுகளின் படங்கள், காணொளிகள், தகவல்கள் என அனைத்தும் நன்று. பார்த்து ரசித்தேன் மா.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குபதிவில் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
"ஓகே கோரல்" அந்தச் சுட்டியை க்ளிக்கியதும் அது என் ஜாதகத்தையே அலசியது. எனவே சட்டென மூடிவிட்டேன்!!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஎனக்கு இந்த சுட்டி ஏதும் கேட்கவில்லையே!
என்ன என்று தெரியவில்லை.
காணொளிகள் பார்த்தேன். உங்களுக்கு கொஞ்சம் பின்னால் இடம் கிடைத்திருந்தது போலும். கவ்பாய் என்னும்போது சிறுவயதில் படித்த கிஸ்க்கோகிட் போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.
பதிலளிநீக்குநாங்கள் கடைசியில் தள்ளி தள்ளி உட்கார்ந்தோம்.
நீக்கு//
கவ்பாய் என்னும்போது சிறுவயதில் படித்த கிஸ்க்கோகிட் போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.//
காமிக்ஸ் கதைகள் நினைவுக்கு வருகிறது. பழையகாலத்து சினிமாக்கள் நினைவுக்கு வருகிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தகவல்களும், படங்களும் பிரமிப்பாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குதகவல்கள் பிரமிப்பாக தான் இருக்கிறது.
அந்த காலத்து சட்டங்களும் செயல்பாடுகளும் பிரமிக்க வைக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. துப்பாக்கி சண்டை குறித்த படங்களும், சண்டையின் நடிப்பு காணொளிகளும் பார்த்தேன் சுவாரஸ்யமாக உள்ளது. முதலில் அதைப்பற்றி தகவல்களுடன் கூடிய ஓகே கோரல் சுட்டியையும் கிளிக்கிப் பார்த்தேன். ஆங்கில படங்களின் கதை மாதிரி உள்ளது. தெரியாமல் நடந்த நிகழ்வெனினும் ஒரு உயிர் பிரிந்தது வருத்தந்தான். இதை ரியலாக நடித்து காட்டும் போது பார்வையாளர்களுக்கு கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கும். நீங்கள் அனைவரும் நாடகத்தை பார்த்து ரசித்தது மகிழ்வை தந்தது. நீங்கள் தந்த படங்கள், கதை, காணொளியும் எங்களுக்கும் புதிய தகவல்களுடன் சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்து சென்ற இடங்களையும், அடுத்தப் பதிவையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது.//
நன்றி.
//துப்பாக்கி சண்டை குறித்த படங்களும், சண்டையின் நடிப்பு காணொளிகளும் பார்த்தேன் சுவாரஸ்யமாக உள்ளது//
நிறைய நேரம் எடுக்கலாம் ஆனால் பார்ப்பவர்களுக்கு கஷ்டமாக் இருக்கும் நீண்ட வசனம் பேசி கொண்டே இருந்தார்கள்.
சுட்டியை வாசித்துப்பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. இந்த உண்மை கதையை சினிமாக்களுக்கு மாற்றி அமைத்து உள்ளார்கள்.
பதிவில் அனைத்தையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வித்தியாசமான நிகழ்வு. ரசித்துப் பார்த்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத்தமிழன்.
நீக்குவில்லியம்ஸ் என்ற ஊரில் பாங்க் கொள்ளை, துப்பாக்கி சூடு வீதி நாடகம் பார்த்தோம்.
அதுவும் நான்கு பேர்தான்.
நன்றாக நடித்தார்கள்.
நீங்கள் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததன் விவரங்கள், படங்கள், காணொளிகள் - என, பழைய வரலாற்றின் பதிவு..
பதிலளிநீக்குபடங்களும் செய்திகளும் அருமை..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குபழைய வரலாற்று பதிவுதான்.
அனைத்தையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அன்பின் கோமதி மா,
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
அருமையான சரித்திரப் பதிவு.
வயாட் ஏர்ப், வர்ஜில் ஏர்ப் கதைகள்
முன்பு நாவல்களாக வந்தன.
நீங்கள் படகளாகப் போட்டிருப்பது தான்
சந்தோஷம்.மா.
இப்போது சந்தோஷமாகப் பார்க்கும் துப்பாக்கி சண்டை
அப்போது பயம் கொடுத்திருக்கும்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், சரித்திர பதிவுதான்.
//வயாட் ஏர்ப், வர்ஜில் ஏர்ப் கதைகள்
முன்பு நாவல்களாக வந்தன//
சினிமாவாகவும் எடுத்து இருக்கிறார்கள்.
//இப்போது சந்தோஷமாகப் பார்க்கும் துப்பாக்கி சண்டை
அப்போது பயம் கொடுத்திருக்கும்.//
முன்பு வலு சண்டைக்கு இழுத்து கோபமாக பேசியது இப்போது சிரிப்பாக பேசுகிறார்கள். அப்போது தூக்கு தண்டனை , விசாரணை என்று எல்லோரும் கஷ்டபட்டு இருக்கிறார்கள்.
சட்டப் பாதுகாவலர்களும் கொள்ளைக்காரர்களும்
பதிலளிநீக்குஎப்போதும் சந்தித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள்
போலிருக்கிறது.
இப்போது நீங்கள் சென்று எல்லாவற்றையும் படங்களோடு
பதிவிடுவதுதான் சிறப்பு.
சினிமாக்களில் எல்லாக் கதைக்கும் புதுச்சாயம் பூசப்பட்டிருக்கும்.
இங்கே நடப்பது ரியலிஸ்ட்டிக்காக இருக்கிறது.
//சட்டப் பாதுகாவலர்களும் கொள்ளைக்காரர்களும்
நீக்குஎப்போதும் சந்தித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள்
போலிருக்கிறது.//
அவர்களுக்குள் எப்போதும் மோதல் இருந்து கொண்டே இருந்து இருக்கிறது.
//சினிமாக்களில் எல்லாக் கதைக்கும் புதுச்சாயம் பூசப்பட்டிருக்கும்.
இங்கே நடப்பது ரியலிஸ்ட்டிக்காக இருக்கிறது.//
ஆமாம்.
//இப்போது நீங்கள் சென்று எல்லாவற்றையும் படங்களோடு
பதிவிடுவதுதான் சிறப்பு.//
நன்றி அக்கா.