அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்" என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட் மாதம் வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி இருந்தோம்.
இந்த பதிவு வரலாற்று சிறப்பு மிக்க வீடு என்ற போன பதிவின் தொடர்ச்சி.
சமையல் அறையில் இப்படி எழுதி வைத்து இருந்தார்கள்.
இந்த பாத்திரத்தில் துளைகள் இருக்கிறது. மாவை ஊற்றி ஆவியில் வேக வைப்பார்கள் போலும் நம் இட்லி போல.
.3. பேரன் உட்கார்ந்து இருக்கும் ஷோபா பின் புறம் உள்ள மரச்சுவற்றில் பழைய காலத்தில் பயன்படுத்திய இரும்பு கருவிகள் இருக்கிறது.
அந்தக் காலத்து எண்ணெய் பீப்பாய் வடிவில் அலங்காரமாக வைத்து இருந்தார்கள்.
பழைய கால பீங்கான் பாத்திரங்கள் நல்ல கனமாக இருக்கிறது.
கைபிடி வைத்த செம்பு பாத்திரங்கள்.இந்த அலமாரி புதுமையும் பழமையும் இணைந்து இருக்கிறது
காப்பி மேக்கர், சீனி, காப்பித்தூள்
பழைய காலத்து அலமாரி, அழகு சாதன பெட்டிகள் மேலே இருக்கிறது.
மேஜைக்கு கீழே மைக்ரோ ஓவன் மற்றும் சின்ன குளிர்சாதனபெட்டி உள்ளது.
1.பழைய இரும்பு சாமான்கள் மேலே பலகையில் வைத்து இருக்கிறார்கள், காப்பிகொட்டை அரைக்கும் மெஷின் இருக்கிறது. 2. இடியாப்ப அச்சு போல் இருக்கிறது, கீழ் பகுதியில் அச்சு இருக்கிறது..3. பேரன் உட்கார்ந்து இருக்கும் ஷோபா பின் புறம் உள்ள மரச்சுவற்றில் பழைய காலத்தில் பயன்படுத்திய இரும்பு கருவிகள் இருக்கிறது.
4. காய் நறுக்க பயன்படும் மர தட்டு, மற்றும் மரக்கரண்டிகள். 5. காரட் துருவும் கருவி இருக்கிறது.
6.பொருட்களை அளந்து போட வில் தராசும் பாத்திரமும் இருக்கிறது.
7.குளியல் அறையில் அழகான சின்ன மர அலமாரி.
8. அவர்கள் பயன்படுத்திய கோடாரிகள்.
9.சின்ன சின்னதாக நிறைய இரும்பு சமையல் பாத்திரங்கள்.
பழைய காலத்து தொலைபேசி.
கம்பி இல்லா தந்தி கொடுக்கும் தகவல் சாதனம் போல் இருந்தது அலமாரி மேல் .பொருட்களை அப்படியே இருக்க வேண்டும் என்று சொன்னதால் அதை எடுத்துப்பார்க்கவில்லை. வீட்டின் உரிமையாளர் அருகில் இருந்து இருந்தால் கேட்டு இருக்கலாம். கூகுளில் பார்த்தேன் இது போல் தான் இருக்கிறது கம்பி இல்லா தந்தி கொடுக்கும் சாதனம்.
பின் வாசல் கதவு புதுப்பிக்க பட்டது போல் இருக்கிறது.
வீட்டுக்கு பின்னால் சின்ன அழகான பால்கனி. டீபாயில் கண்ணாடி கூண்டுக்குள் மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றி மாலை நேரம் அமர்ந்து பேசலாம்
நான்கு படி இறங்கி போனால் தோட்டம்.
பால்கனியிலிருந்து தோட்டத்தை எடுத்த படம்.
வீட்டின் பின் பகுதி, வேண்டாதவை போட்டு வைத்துக் கொள்ள ரேடிமேட் மர வீடு. பழைய நாற்காலி, குளிர் காய கட்டைகள் போட்டு நெருப்பு மூட்ட நடுவில் நாலு கால்வைத்த இரும்பில் செய்த பாத்திரம் .நெருப்பு பொறி பறக்காமல் இருக்க அதன் மேல் இரும்பு வலை மூடி.
அந்தக் காலத்தில் வழிப்பயணங்களில் இப்படி பாத்திரங்களை தொங்க விட்டு நெருப்பு மூட்டி சமைத்து சாப்பிடுவார்கள். பழைய காலத்து அரிக்கேன் விளக்குகள்.(லாந்தர் விளக்குகள்)
அழைப்பு மணியாக பயன் படுத்தியது. கொக்கி போன்ற கம்பியை அந்த முக்கோண கம்பியில் அடித்தால் நல்ல ஒலி வருகிறது. வீட்டின் இலக்கம் 11.
ஒரு சின்ன அறையில் கிட்டார் வைக்கும் பெட்டியும் , பழைய காலத்து வெந்நீர் தயார் செய்யும் ஹீட்டரும் இருந்ததது.
அடுத்த பகுதி ஊரைப் பார்ப்போம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------------------------------------------
பீங்கான் பாத்திரங்களை அடுப்பில் வைப்பார்களா? அலமாரிதான் கொஞ்சம் பழமையைக் காட்டுகிறது!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபீங்கான் பாத்திரங்கள் மிக பழமையானது.
அடுப்பில் வைப்பதற்கு அல்ல பார்வைக்கு மட்டுமே!
இரும்பு,பாத்திரங்கள் பழமையை காட்டவில்லையா?
பீங்கான் பாத்திரங்களைக் குமுட்டி அடுப்பில் வைத்துத் தேநீர், காஃபி தயாரித்து இருக்கிறேன். அதற்கெனத் தனியான பீங்கான் பாத்திரங்கள் உண்டு. என்னிடம் ஒரு செட்டே இருந்தது. ஆங்காங்கே மாற்றல் ஆனதில் எல்லாம் உடைந்து போய்விட்டன. குமுட்டியை இப்போத்தான் 2 வருடங்கள் முன்னர் தூக்கிப் போட்டோம். பீங்கான் கோப்பையில் தேநீர் குடித்தால் அந்த ருசியே தனி!
நீக்குஅடடே... பழைய காலத்துத் தொலைபேசி... எந்த வருடத்தையதாய் இருக்கும்?! தந்தி கொடுக்கும் சாதனங்கள் வீட்டிலேயே வைத்திருப்பார்களா?
பதிலளிநீக்குபழைய காலத்து போன் கூகுள் சொல்கிறது 1875 ஆண்டு பழமையாக இருக்கலாம்.1901 வரை இந்த மாடல் இருந்தது என்று கூகுள் சொல்கிறது.
நீக்குதந்தி கொடுக்கும் கருவி போன்றது கூட தொலைபேசியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அது போலவும் தொலைபேசி பார்த்தேன்.
காலிங் பெல் பழமையைச் சொல்கிறது. அதற்கு அடுத்த படம் மிக அழகாய் எடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகாலிங்க் பெல் நன்றாக இருக்கிறது நன்றாக சத்தம் வருகிறது.
நீக்குஅடுத்த படம் சின்ன அறை அங்கு லைட் வெளிச்சம் மிக அருமையாக இருந்தது.
அதனால் படம் நன்றாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பழமையான வீட்டில் இருக்கும் உணர்வைத் தருகின்றன படங்கள்.
பதிலளிநீக்குவித்தியாசமான, ஆனால் அறிந்திராத இடங்களை எனக்குக் காட்டுகிறீர்கள்.
வீட்டின் பொருட்கள் பல்வேறு நினைவலைகளைத் தோற்றுவிக்கின்றன
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குபழைய பதிவை படித்தீர்களா?
//வித்தியாசமான, ஆனால் அறிந்திராத இடங்களை எனக்குக் காட்டுகிறீர்கள்.//
மகன் அழைத்து சென்றதால் இந்த பகிர்வு.
//வீட்டின் பொருட்கள் பல்வேறு நினைவலைகளைத் தோற்றுவிக்கின்றன//
நினைவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கலாமே!
அவர் நிறைய சேகரித்து வைத்து இருந்தார், பழைய பவுடர் டப்பா, பழைய சென்ட் பாட்டில்கள், பழைய மருந்து பாட்டில்கள் என்று.
அந்த ஊரில் நிறைய பழைய காலத்து பொருட்கள் விற்பனைக்கு , காட்சிக்கு வைத்து இருந்தார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான படங்கள் எடுத்த விதம் மிகவும் அருமை சகோ தொடர்கிறேன்...
பதிலளிநீக்குவணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.
தொடர்வது மகிழ்ச்சி.
அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குவாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குவாழ்க வையகம் வாழ்க வளமுடன்
படங்கள் எல்லாம் அழகு...
பதிலளிநீக்குசெய்திகளைச் சொல்லிச் செல்லும் பதிவும் அழகு..
இப்படியொரு கனவு வீடு என் மனதிலும் இருக்கின்றது..
வாழ்க வையகம்..
வாழ்க மகிழ்வுடன்..
//படங்கள் எல்லாம் அழகு...
நீக்குசெய்திகளைச் சொல்லிச் செல்லும் பதிவும் அழகு..//
நன்றி.
//இப்படியொரு கனவு வீடு என் மனதிலும் இருக்கின்றது.//
கனவு வீடு மெய்பட இறைவன் அருள்வார்.
வாழ்க வையகம் மகிழ்வுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஒவ்வொரு பொருட்களும் அழகு... படங்கள் தொகுப்பு அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஒவ்வொரு பொருட்களும் அழகு... படங்கள் தொகுப்பு அருமை...//
ஆமாம், நாம் பார்க்க பத்திரபடுத்தியது சிறப்பு.
நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பழைய காலத்துப் பொருட்களில் சில து வித்தியாசமாக இருக்கின்றன. தொலைபேசி, தந்தி கொடுக்கும் சாதனம் எல்லாம் மிகவும் வித்தியாசமாகப் பாக்கவே ரசனையாக இருக்கிறது. பழைய ஆங்கிலப்படங்களில் பார்த்ததுண்டுதான். ஆனால் இவை அதற்கும் முன்னானவை அல்லவா..
பதிலளிநீக்குஅனைத்துப் படங்களும் அருமை. ரசித்தேன் சகோதரி
துளசிதரன்
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குபழைய படங்களில் நிறைய வித்தியாசமான பொருட்கள், தொலைபேசி எல்லாம் பார்த்து இருப்போம். பழைய கால தொலைப்பேசிதான்.
அனைத்து படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அக்கா ஹையோ என்ன அழகா இருக்கு சில சாமான் எல்லாம். அஞ்சார் பெட்டி போல பிடியுடன் ஓட்டையுடன் இருக்கிறதே அது ஏதேனும் ஆவியில் வேக வைப்பதாக இருக்குமோ? இட்லிக்கு ஊத்தினால் ஓட்டை வழி வழிந்திடாதோ?
பதிலளிநீக்குபேரன் உட்கார்ந்திருக்கும் படத்திற்கு இடப்புறமுள்ள படத்தில் நடுவில் ஓட்டையுடன் இருக்கிறதே காய் கழுவும் முறம் போல இருக்கிறதே...அல்லது அவர்கள் பேஸ்டா, ஸ்பெகட்டி எல்லாம் வெந்து குளிர் நீரில் அலசுவார்களே அதற்காக இருக்குமோ?
அந்த சாமான் எல்லாம் அழகாக இருக்கின்றன
பலதும் நம்மூர் சாமான் போலத்தான் இருக்கின்றன
கீதா
அந்த ம
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குசாமாங்கள் எல்லாம் அழகுதான்.
//அஞ்சார் பெட்டி போல பிடியுடன் ஓட்டையுடன் இருக்கிறதே அது ஏதேனும் ஆவியில் வேக வைப்பதாக இருக்குமோ? இட்லிக்கு ஊத்தினால் ஓட்டை வழி வழிந்திடாதோ?//
நம் இட்லி தட்டில் ப்ட்டை இருக்குமே நாம் துணி போட்டு மாவை ஊற்றி செய்வோம் தானே!
ஆமாம், பலதும் நம் பொருடகள் போலவே இருக்கிறது.
அழைப்பு மணி, தொலைபேசி எல்லாம் அந்தக்காலத்தவை என்று அழகாக இருக்கின்றன. அழைப்பு மணி ரொம்பவே வித்தியயசம்.
பதிலளிநீக்குதந்தி கொடுக்கும் மெஷின் வீட்டில்!!!!
பீங்கான் பாத்திரம் எல்லாம் அப்போதையவையா? பார்த்தால் இப்போதும் இப்படி இருப்பது போல இருக்கிறது இல்லையா அக்கா.?
தண்ணீர் சூடு செய்யும் பாத்திரம் அந்த ஹீட்டர் வித்தியாசம்.
அரிக்கேன் லைட், முக்காலியில் நடுவில் தொங்கவிட்டு சமைப்பது நம்மூரில் உள்ளவை இப்போதும் இல்லையா
அங்கு பெரும்பாலும் வீடுகளில் பின்புறம் ஒரு பால்கனி Patio இருக்கும் அங்கு இருந்து சாப்பிட டீ குடிக்க என்று. தனி வீடுகளில் பெரும்பாலும் கண்டிப்பாக இருக்கும். அதற்கென்று ஃபர்னிச்சரும் உண்டு...
ரொம்ப அழகான படங்கள் எல்லாமே மிகவும் ரசித்தேன் அக்கா
கீதா
//அழைப்பு மணி, தொலைபேசி எல்லாம் அந்தக்காலத்தவை என்று அழகாக இருக்கின்றன. அழைப்பு மணி ரொம்பவே வித்தியயசம்//
நீக்குஆமாம். நிறைய வீட்டில் பெரிய சேவல் ஒரு மணி மேல் நிற்கிறது அந்த மணியை ஒளிக்க செய்ய வேண்டும்.
பீங்கான் பாத்திரம் எல்லாம் நம்மால் தூக்கவே முடியாது அவ்வளவு கனம்.
அவர்கள் பீங்கான் பேஸின் வைத்து அதில் ஜக் வைத்து இருப்பது அவர்கள் பாதங்களை வெந்நீரீல் வைத்து பாதக்குளியல் செய்ய அவை எல்லாம் பழைய பொருட்கள் இருக்கும் மியூசியத்தில் பார்த்தோம். அப்போது உள்ளதைப்பார்த்து இப்போதும் அவர்கள் ஊரில் நம் ஊரில் செய்கிறார்கள் ஆனாலும் அந்த பழைய கால பீங்கான் பள பளப்பு, மினு மினுப்பு இல்லை. காலம் கடந்தும் புதிது போல இருக்கிறது.
//தண்ணீர் சூடு செய்யும் பாத்திரம் அந்த ஹீட்டர் வித்தியாசம்.//
கர்நாடாகபில் இப்படி அடுப்பு பார்த்து இருப்பீர்கள் கீழே விறகு போடலாம் மேல் பகுதி, அல்லது சைடில் புகை போக வசதி செய்து இருப்பார்கள், பெரிய அண்டாவில் வெந்நீர் எப்போதும் கிடைக்கும்.
//அரிக்கேன் லைட், முக்காலியில் நடுவில் தொங்கவிட்டு சமைப்பது நம்மூரில் உள்ளவை இப்போதும் இல்லையா//
இவை எல்லாம் எல்லா நாட்டிலும் உண்டுதான். நாம் பழைய பொருட்களை தூக்கி போட்டு விடுவோம். பழைய வீட்டை விற்றோ, அல்லது அடுக்குமாடி குடியிருப்போ கட்டி விடுவோம். இங்கு பாராமைத்து காசு சம்பாதிக்கிறார்கள்.
//அங்கு பெரும்பாலும் வீடுகளில் பின்புறம் ஒரு பால்கனி Patio இருக்கும் அங்கு இருந்து சாப்பிட டீ குடிக்க என்று. தனி வீடுகளில் பெரும்பாலும் கண்டிப்பாக இருக்கும். அதற்கென்று ஃபர்னிச்சரும் உண்டு...//
ஆமாம், குடை உண்டு. கூடாரம் உண்டு. மகனும் வைத்து இருக்கிறான்.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஒவ்வொன்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். பெரிய காவியமே எழுதலாம் போலப் பழமை.
பதிலளிநீக்குஎத்தனை சுத்தமாகப் பேணி இருக்கிறார்கள்!!!
இத்தனைக்கும் நவீன கழிப்பிடம் எல்லாம்
அப்போது இருந்திருக்காது.
வீட்டுக்கு வெளியில் out house என்ற முறைப்படி
இருந்திருக்கும். நம் பழங்காலப் புழக்கடை மாதிரி!!
உங்களுக்கு இந்த இடம் சௌகரியமாக
இருந்ததா?
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//ஒவ்வொன்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். பெரிய காவியமே எழுதலாம் போலப் பழமை.
எத்தனை சுத்தமாகப் பேணி இருக்கிறார்கள்!!!//
ஆமாம்.
//இத்தனைக்கும் நவீன கழிப்பிடம் எல்லாம்
அப்போது இருந்திருக்காது.
வீட்டுக்கு வெளியில் out house என்ற முறைப்படி//
ஆமாம், இப்போது நவீன கழிப்பிடம் உண்டு. கண்ணாடி அறையில் ஷ்வர் வைத்த குளியல் அறை.
பழங்காலப் புழக்கடை இருந்து இருக்கும்.
உங்களுக்கு இந்த இடம் சௌகரியமாக
இருந்ததா?//
மிக செளகரியமாக இருந்தது. மூன்று படுக்கை அறை இருந்ததே. உயரமில்லா கட்டில் போன பதிவில் போட்ட படத்தில் உள்ளதை எனக்கு அளித்தான்.
மருமகள் வித விதமாக சமைத்து தந்தாள்.
அதனால் கவலை இல்லை.
ரெடி மேட் டூல் ஷெட் நல்ல ஐடியா.
பதிலளிநீக்குசிங்கம் இதைப் பார்த்து ஆசைப்படுவார். யாருடைய தொந்தரவும் இல்லாமல்
நான் சிற்பம் செய்வேனே என்று ஆதங்கப் படுவார்:)
டூல் செட் அருமை.
நீக்குசார் சிற்பங்கள் செய்ய அறுக்க கட் செய்ய அதை பாலிஷ் செய்ய என்று ஏராளமான கருவிகள் இருந்தது உண்மை.
அழைப்பு மணி நம் ஊர் ரயில் நிலையத்தை
பதிலளிநீக்குநினைவுக்குக் கொண்டு வருகிறது,.
மிக மிக நல்லதொரு பதிவு மா. நன்றி கோமதி.
ரயில் நிலையங்களில் தண்டவாளம் துண்டு தொங்க விட்டு இருப்பார்கள் ஒலி வெகு சத்தமாக வரும். இது மெலிதான ஒலி எழுப்புகிறது.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பழைய கால பொருட்கள் அனைத்துமே அழகாக வைத்துள்ளார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், பழைய பொருட்கள் எல்லாம் அழகாக வைத்து இருந்தார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பழமையான பொருட்கள் அனைத்தையும் இத்தனை கவனமுடன் பாதுகாக்கிறார்களே! அதற்கே நன்றி சொல்லணும். வாயிலில் உள்ள அழைப்பு மணி, வெந்நீர் போடும் ஹீட்டர், தந்தி கொடுக்கும் சாதனம், தொலைபேசி எல்லாமே அருமை. நன்றாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். நல்லதொரு பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//பழமையான பொருட்கள் அனைத்தையும் இத்தனை கவனமுடன் பாதுகாக்கிறார்களே!//
ஆமாம்.
//வாயிலில் உள்ள அழைப்பு மணி, வெந்நீர் போடும் ஹீட்டர், தந்தி கொடுக்கும் சாதனம், தொலைபேசி எல்லாமே அருமை. நன்றாய்ப் பாதுகாத்து
வைத்திருக்கிறார்கள்.//
ஆமாம். பழமையை பாதுகாத்து அதையே வருமானத்திற்கு வழி செய்து கொண்டார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.