ஹெலன் ஊரில் ஹாலோவின் கொண்டாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹெலன் ஊரில் ஹாலோவின் கொண்டாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 அக்டோபர், 2021

முன்னோர்கள் வழிபாடு





போன மாதம் வார இறுதி நாளில் சில இடங்கள் சுற்றிப்பார்க்க மகள் அழைத்துப் போனாள். அதில் இரண்டு மணி நேரத்தில்  பார்த்த ஊர் ஆல்பைன் ஹெலன் ஜார்ஜியா என்ற ஊர் . 430 குடியிருப்பாளர்கள் மட்டுமே  இங்கு வசிக்கிறார்கள்.  2.1 சதுர மைல் தூரத்திற்கு அமைந்து உள்ள அழகான நகரம். ஜார்ஜியா மாநிலத்தில் அதிகமாக சுற்றுலா பிரியர்கள் சுற்றிப்பார்த்த இடமாம்.

நாங்கள் அங்கு பார்த்த காட்சிகள் இங்கு பதிவாக.  அக்டோபர் மாதம் "ஹலோவின்" மாதம். நாங்கள் போனது செம்டம்பர் கடைசியில் .


அப்போதே இந்த ஊரில் ஹலோவின் அலங்காரம் ஆரம்பித்து விட்டது.

இந்த மாதம் முடிவதற்குள் இந்த ஊர் பதிவு போட்டுவிட வேண்டும் என்பதால் "டோம்ப்ஸ்டோன்"  தொடர் பயணக் கட்டுரை பிறகு வரும்.