செவ்வாய், 12 அக்டோபர், 2021

நவராத்திரி கொலு பார்க்க வாங்க


ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயில்  நவராத்திரி கொலு

அட்லாண்டா இந்து கோயில் என்று இதற்கு முன்பு போட்ட பதிவு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா அருகில் உள்ள "ரிவர்டேல்" எனும் நகரத்தில் உள்ளது இந்த  கோயில்.
இந்த இடத்தில்  ஸ்ரீ வேங்கடேஸ்வர் ,திருக்கோயிலும், அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது.

நாங்கள் போன ஞாயிறு போய்  இருந்த போது நவராத்திரி கொலுவிற்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள் என்றேன்.

இந்த ஞாயிறு  நவராத்திரி கொலுவைப்  பார்க்க அழைத்து போனாள் மகள். பெருமாள்கோயில், சிவன் கோயில் இரண்டிலும் மிக அழகாய் கொலு வைத்து இருந்தார்கள்.
அங்கு பார்த்த கொலு படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

பாலாஜி கோயிலும் நிலவும் 

சங்கு, சக்கரம், நாமம் இரவு ஒளி வெள்ளத்தில் ( மிக அவசரமாக எடுத்தேன், சரியாக வரவில்லை என்பதை பார்க்கவில்லை பார்த்து இருந்தால் மீண்டும் எடுத்து இருப்பேன்.)

மூன்று தேவியர், மச்சாவதாரம், , பிள்ளையார், சக்கரத்தாழ்வார், அஷ்டலட்சுமிகள், ஓங்கி உலகளந்த பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்திர சாயி , ஸ்ரீரங்கம் ரங்கன், பத்மநாப சாமி. மற்றும் துலாபார கண்ணன், பஞ்சமுக ஆஞ்சநேயர், சக்கரத்து ஆழ்வார் எல்லாம் இருக்கிறார்கள்., கஜேந்திர மோட்ச பொம்மை,  உறியில் வெண்ணை திருடும் கண்ணன் என்று மனதை கவரும் பொம்மைகள்  அழகாய் இருந்தன . வருடா வருடம் வண்ணம்  தீட்டுவார்கள் போலும் புதிதாக பார்க்க அழகாய் இருக்கிறது .


கடைசி படியில் பாரத மாதா சிலை,  மற்றும் முன்னாள்  ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்கள் உரை ஆற்றுகிறார்கள். மாணவ , மாணவிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் கல்யாணசெட் என்று அழகாய் இருக்கிறது.


தசாவதாரம் பொம்மை பெரிதாக அழகாய் இருக்கிறது. அஷ்டலட்சுமிகளை  முகம் வைத்து அழகாய் சேலை கட்டி  அலங்காரம் செய்து இருக்கிறார்கள். தனலட்சுமி டாலர் மழை பொழிகிறாள்.

ஐந்து பெண்கள் துர்கைக்கு  மறுநாள் பழ அலங்காரம் செய்ய தயார் செய்து கொண்டு இருந்தார்கள்.

துர்கை, பத்மாவதி தாயார் , ஆண்டாளை மிக அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்.  பாலாஜியும் மிக அலங்காரமாக இருந்தார், அவர்களை படம் எடுக்க தடை.

                                       சிவன் கோயில் கொலு

 முதல் படியில்  ரிஷபாரூடர், திருவண்ணாமலை  சுவாமி, கலச தேங்காயில் பிள்ளையார் தோற்றம் நன்றாக இருந்தது.  வள்ளி தெய்வானையோடு முருகன், அர்த்தநாரீஸ்வரர் . 

புட்டுக்கு மண் சுமந்த கதை சொல்லும் பொம்மை, "ராமசாமியின் தூதன் நானடா  ராவாணா" என்று அனுமன் தன் வாலில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்த  இராவணன் தர்பார் காட்சி  என்று ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தோம்.  தனி தனியாக எடுக்கலாம்.  சிலவற்றை மட்டும் எடுத்தேன்.  கும்பகர்ணனை தூக்கத்திலிருந்து எழுப்பும் காட்சி எடுக்க முடியவில்லை பாதிதான்  வந்து இருந்தது.  


இது என் உறவினர் வீட்டில் வைத்த கொலுவில் உள்ளது அவர்கள் அனுப்பிய படம்.

 

சாக்கு மூட்டையில் பொருட்களை ஏற்றி வந்த மாட்டு வண்டி

போரில் லட்சுமணன் மூர்ச்சையான போது அனுமன் சஞ்சீவி மலையை  எடுத்து வந்த காட்சி.


பர்வதவர்த்தினி அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்து இருந்தார்கள். நிறைய சேலையை  வரிசையாக அழகாய் கட்டி இருந்தார்கள்."அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்" சொல்லி கொண்டு இருந்தார்கள். அது முடிந்தவுடன் இரண்டு பேர்  பாடவும் அதற்கு அடுத்து ஆடவும் காத்து இருந்தார்கள் குழந்தைகள் நடன உடையில் இருந்தார்கள்.ராமலிங்கேஸ்வரருக்கு கயிலையில் இருப்பது போல் அலங்காரம் செய்து இருந்தார்கள்.  இங்கு தரிசனம் முடித்தவுடன்   நாங்கள் இன்னொரு கோயிலுக்கு போனோம். வடநாட்டினர் கட்டிய சக்தி கோயில். அது அடுத்த பதிவில்.

நவராத்திரி காலங்களில் வீட்டில் கொலு வைப்பதுடன் கோயில்களுக்கு சென்று கொலுவும் பார்ப்போம். அவை நினைவுகளில் வந்து போகிறது.  

வாழ்க வையகம் !  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

 


37 கருத்துகள்:

 1. தங்களது பதிவின் மூலமாக இனிய தரிசனம்...

  படங்கள் ஒவ்வொன்றும் அழகு.. அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தங்களது பதிவின் மூலமாக இனிய தரிசனம்...

   படங்கள் ஒவ்வொன்றும் அழகு.. அழகு.//

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. மிக அருமையான கொலுக்காட்சிகள் அன்பின் கோமதிமா.

  அனுமனும் ,கும்பகர்ணனும் தத்ரூபம் எத்தனை
  கற்பனை. !!. பொம்மை செய்பவர்களின்
  உழைப்பும் கற்பனா வளமும் அதிசயிக்க வைக்கின்றன.
  அதும் நம் கலாம் மாணவர்கள், ராவண தர்பார்,
  கைலாசக் காட்சி அனைத்தும் உயர்ந்த காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   பொம்மை எல்லாம் மிக அருமையாக செய்து இருக்கிறார்கள், அது எந்த ஊரிலிருந்து வாங்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
   பொம்மை செய்பவர்களுக்கு நல்ல கற்பனை வளம் தான்.

   நீக்கு
 3. ஒளி, நிலா ,சங்கு சக்கரத்தோடு வெளிப்புறக் காட்சிகள் அருமை மா.
  துல்லியமாகக் கொலு அமைத்திருக்கிறார்கள் நம் பண்பாடு
  மாறாமல், மறக்காமல் காப்பாற்றப் படுவது மிக அருமை. பெருமாள் கோவில் கொலுவின் காட்சிகளும் மிக அருமை. தசாவதாரமும், அஷ்ட லக்ஷ்மிகளும்

  காணக்காண அருமை.
  இரண்டு கோவில்களிலும் பொம்மைகளின் எண்ணிக்கையும்
  அலங்காரங்களும் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

  நம் ஊரில் கூட இவ்வளவு அழகு பார்த்ததில்லை. ஒரே ஒரு தடவை ஸ்ரீரங்கம் கொலு பார்த்திருக்கிறேன்.
  புது மண்டபத்தில் நிறைய பழைய காலப் பொம்மைகள்
  அப்போது இருக்கும்.
  காளிங்க நர்த்தன காட்சி, அவதாரக் காட்சிகள்,
  நாரதர் என்று ஒவ்வொன்றாகக் கண்ணைக் கவர்கின்றன.

  இங்கே என்னால் செல்ல முடியவில்லை.

  மகளின் வேலை எல்லா நேரத்தையும்
  விழுங்கிக் கொள்கிறது:)
  அதனால் நீங்கள் சென்று வந்து பதிவாகச் சொல்வது
  மிக மகிழ்ச்சிமா.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒளி, நிலா ,சங்கு சக்கரத்தோடு வெளிப்புறக் காட்சிகள் அருமை மா.//

   நான் தான் இன்னும் சரியாக எடுக்கவில்லை.

   //பெருமாள் கோவில் கொலுவின் காட்சிகளும் மிக அருமை. தசாவதாரமும், அஷ்ட லக்ஷ்மிகளும் காணக்காண அருமை.//

   நம் மக்கள்தான் இதை செய்கிறார்கள்.

   //இரண்டு கோவில்களிலும் பொம்மைகளின் எண்ணிக்கையும்
   அலங்காரங்களும் ஆச்சர்யப்பட வைக்கின்றன.//

   ஆமாம் , எல்லோரின் கூட்டு உழைப்பு .
   நம் ஊரில் கொலு நன்றாக இருக்கும் அக்கா. கும்பகோணத்தில் மிக அழகாய் இருக்கும் , மதுரை கொலு மிக அழகாய் இருக்கும் அக்கா. இப்போது பொம்மைகள் வருட வருடம் புது பொம்மைகள் சிறப்பு காட்சிகள் என்று மதுரை மீனாட்சி கோவில் கொலு இருக்கிறது.நான் முகநூலில் போட்டு இருக்கிறேன் முன்பு.

   இங்கு மகளுக்கு ஞாயிறு விடுமுறை மற்ற நாட்கள் வேலைகள் அதிகம் தான்.

   நீங்கள் வீட்டில் கொலு வைத்து இருக்கிறீர்கள் வேலை சரியாக இருக்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.   நீக்கு
 4. பாலாஜி கோவிலும் நிலவும் படம் அழகாய் இருக்கிறது.  

  ஒரு கோவிலில் இரு கொலுக்கள்.  அனுமன் சஞ்சீவி மலை தூக்கி வரும் பொம்மை அழகு.  உறவினர் அனுப்பி இருக்கும் கும்பகர்ணனை துயிலெழுப்பும் காட்சி பொம்மையும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //பாலாஜி கோவிலும் நிலவும் படம் அழகாய் இருக்கிறது.//

   நன்றி.

   அனுமன் சஞ்சீவி மலை தூக்கி வரும் பொம்மை அழகு. //

   நிறைய கோவில் கொலுக்கள் பார்த்து இருக்கிறேன். இந்த காட்சி பார்த்தது இல்லை, ராமர் தம்பி லட்சுமணனை மடியில் கிடத்தி இருக்கும் காட்சி அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வருவதை பார்த்தது இல்லை.

   //கும்பகர்ணனை துயிலெழுப்பும் காட்சி பொம்மையும் அழகு.//

   ஆமாம், உறவினரின் மருகமள் அமெரிக்காவில் வைத்த கொலு பொம்மைதான் இந்த கும்பகர்ணன்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 5. படங்களை காணும் போது பழைய நினைவுகள் வருகிறது.

  மிகவும் அழகான படங்கள் வாழ்த்துகள் சகோ.

  தொடர்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //படங்களை காணும் போது பழைய நினைவுகள் வருகிறது.//

   சிறுவயது கொலு நினைவுகளா?

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
   தொடர்வது மகிழ்ச்சி.

   நீக்கு
 6. கொலு மிகவும் அழகாக உள்ளது... ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 7. கொலு காட்சிகள் அனைத்தும் அழகு. வெளி நாட்டிற்குச் சென்றாலும் அங்கேயும் பழக்க வழக்கங்களைத் தொடர்வது நல்ல விஷயம். இங்கே தில்லியிலும் நிறைய கோவில்களில் நவராத்ரி கொலு வைத்திருக்கிறார்கள். சென்று பார்க்க முடியவில்லை.

  படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. பெருமாள், சிவன் கோவில் கொலு பொம்மைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக உள்ளது. பார்க்கப் பார்க்க திகட்டவில்லை. ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பார்த்தேன்.இன்னொரு தடவையும் பார்க்கத் தூண்டுகிறது. அந்த ஊரிலும் இப்படி பிரம்மாண்டமாய் கொலு வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பொறுமையாகவும், அழகாகவும் வைத்திருக்கின்றனர். கொலு பொம்மைகள் கண்களுக்கு விருந்தாகவும், மனதுக்கு நிறைவாகவும் உள்ளது. விட்ட பதிவுகளை பிறகு நிதானமாக படித்துப் பார்க்கிறேன் சகோதரி.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   பதிவு அருமையாக உள்ளது//
   நன்றி.


   //பொறுமையாகவும், அழகாகவும் வைத்திருக்கின்றனர். கொலு பொம்மைகள் கண்களுக்கு விருந்தாகவும், மனதுக்கு நிறைவாகவும் உள்ளது .//


   ஆமாம் கமலா. மனதுக்கு நிறைவு தந்தது.


   //விட்ட பதிவுகளை பிறகு நிதானமாக படித்துப் பார்க்கிறேன் சகோதரி.பகிர்வுக்கு மிக்க நன்றி.//

   குழந்தை நலமா? மெதுவாக படியுங்கள் அவசரமில்லை.

   உங்கள் கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 9. கொலு படங்கள் காட்சிகள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. இக்கோயிலுக்குத்தானே நீங்கள் போயிருந்தது பற்றி முன்பு பதிவு போட்டிருந்தீர்கள்.

  அனைத்தும் அருமையாக இருக்கிறது.

  வாழ்த்துகள் சகோதரி

  எங்கள் கருத்துகள் போகவில்லை என்று கீதா சொல்லிக் கொண்டிருந்தார். போகும் போது பதிகிறேன் என்று சொன்னார்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

   //கொலு படங்கள் காட்சிகள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. இக்கோயிலுக்குத்தானே நீங்கள் போயிருந்தது பற்றி முன்பு பதிவு போட்டிருந்தீர்கள்.

   அனைத்தும் அருமையாக இருக்கிறது.//

   ஆமாம், முன்பு போன போது நவராத்திரிக்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள் என்றேன். அடுத்த வாரம் கொலு பார்த்து விட்டேன்.

   கருத்து இப்போதுதான் வந்தது. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 10. கோமதிக்கா தாமதமாகக் கொலு பார்க்க வந்திருக்கிறேன். ஆமாம் கருத்துகள் போகவே இல்லையே அதனால்...

  இன்று போகிறது எபியில் போனதால், துரை அண்ணாவின் பதிவிலும் போகிறது என்று தெரிந்து இங்கும் பதிகிறேன் பார்ப்போம் வரும் என்று நினைக்கிறேன்.

  பாலாஜி கோயில் நிலவு படம் செம அழகு இரவுக் காட்சி கோயிலின் நிறம் அழகு!'

  பாரதமாதா சிலை அப்துல்கலாம் மாணவர்கள் இதுவரை இந்த செட் பார்த்ததில்லை நன்றாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா தாமதமாகக் கொலு பார்க்க வந்திருக்கிறேன். ஆமாம் கருத்துகள் போகவே இல்லையே அதனால்...//

   ஏன் கருத்துக்கள் போகவில்லை தெரியவில்லையே!
   தாமதமாக வந்தால் என்ன இந்த கொலு எடுத்து வைத்து விட மாட்டோமே!
   நேரம் கிடைக்கும் போது இணையம் ஒத்துழைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.

   //பாலாஜி கோயில் நிலவு படம் செம அழகு இரவுக் காட்சி கோயிலின் நிறம் அழகு!//

   நேரில் நிலா இன்னும் அழகாய் இருந்தது கீதா.

   //பாரதமாதா சிலை அப்துல்கலாம் மாணவர்கள் இதுவரை இந்த செட் பார்த்ததில்லை நன்றாக இருக்கிறது.//

   நானும் இங்குதான் முதன் முறை பார்த்தேன்.   நீக்கு
 11. சிவன் கோயில் கொலு வும் மிக அழகு

  ராவணன் தர்பார் ஹனுமன் வால் சுருட்டி அமர்ந்திருக்கும் செட், கும்பகர்ணன் செட்டும் அழகு. உறவினர் வீட்டிலும் பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் கும்பகர்ணன் செட் உங்கள் உறவினர் வீட்டிலும்!!!!. கோயில் கொலுவிலும் இருக்கிறதே தெரிகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவன் கோயில் பொம்மைகளும் அழகுதான்.
   ராவணன் தர்பார் மாயவரத்தில் எல்லா கோயில் கொலுவிலும் இடம்பெற்று இருக்கும்.
   நான் முன்பு பதிவு செய்து இருக்கிறேன்.

   குமபகர்ணன் என் காமிரவில் பாதிதான் வந்து இருந்தார். படியில் உள்ள கும்பகர்ணன் மேல் ஏணி இல்லை. இதில் ஏணி இருக்கிறது.

   நீக்கு
 12. மிக மிகக் கண்ணையும் மனதையும் கவர்வது மாட்டுவண்டியில் சாக்கு மூட்டை ஏற்றி வரும் செட்...வெகு அழகு!! இதெல்லாம் வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்குத்தெரிய வேண்டும்.

  ஹனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வருவதும் போரில் லஷ்மணன் மயங்கி இருக்கும் செட் இப்போதுதான் பார்க்கிறேன். கொலு பொம்மைக் காட்ட்சி பார்த்து இரு வருடங்களுக்கும் மேல் ஆகிறது. பாண்டிச்சேரியில் இருந்த வரை வருடா வருடம் வாங்குவதில்லை என்றாலும் பார்த்துவிட்டு வருவேன் விற்பனைக்கு வைத்திருக்கும் காட்சிகளை புதியதாக இருந்தால் உறவினர்க்கு வாங்குவதுண்டு.

  சென்னையிலும் ரவுன்ட் வருவேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மிக மிகக் கண்ணையும் மனதையும் கவர்வது மாட்டுவண்டியில் சாக்கு மூட்டை ஏற்றி வரும் செட்...வெகு அழகு!! இதெல்லாம் வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்குத்தெரிய வேண்டும்.//

   ஆமாம் கீதா, எனக்கு மிகவும் பிடித்தது.

   //ஹனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வருவதும் போரில் லஷ்மணன் மயங்கி இருக்கும் செட் இப்போதுதான் பார்க்கிறேன்.//
   நானும் இப்போதுதான் பார்க்கிறேன்.

   நாங்கள் கடைசியாக சில வருடங்கள் இருக்கும் பொம்மை போதும் என்று புதிதாக வாங்குவதை நிறுத்தி விட்டோம். வாங்கி நட்பு வீட்டு கொலுவிற்கு கொடுத்து வந்தோம். 2017ல் மகன் வீட்டு கொலுவிற்கு வாங்கினோம்.

   சென்னையில் மயிலாப்பூர் கடைவீதியில் கொலு பார்த்தாலே போதுமே!   நீக்கு
 13. ராமலிங்கேஸ்வரருக்கு கயிலையில் இருப்பது போல் அலங்காரம் செய்து இருந்தார்கள். //

  ஓ அந்தப் படம் எடுக்க முடிந்திருக்காது இல்லையா...அனுமதி இல்லையே..

  அடுத்த சக்தி கோயில் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 14. //ராமலிங்கேஸ்வரருக்கு கயிலையில் இருப்பது போல் அலங்காரம் செய்து இருந்தார்கள். //

  ஓ அந்தப் படம் எடுக்க முடிந்திருக்காது இல்லையா...அனுமதி இல்லையே.//

  ஆமாம் கீதா.

  சக்தி கோயில் பதிவு போட்டு விட்டேன் கீதா. "நவராத்திரி வாழ்த்துக்கள்" என்று பதிவு போட்டு இருக்கிறேன்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. கோவிலும் நவராத்திரி கொலுக்களும் மிகவும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. அனைத்துக் கொலுக் காட்சிகளும் தங்கள் வர்ணனைகளும் மிக அருமை. பெரிய தசாவதாரப் பொம்மைகள் அழகு. இராவணன் தர்பார் காட்சி இதுவரைக் கண்டிராதது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //அனைத்துக் கொலுக் காட்சிகளும் தங்கள் வர்ணனைகளும் மிக அருமை. //

   நன்றி.

   தசாவதாரப் பொம்மைகள் அழகு.
   படியிலும் தசாவதாரம் இருக்கிறது. வெளியே பெரிதாக அழகாய் இருக்கிறது.


   //இராவணன் தர்பார் காட்சி இதுவரைக் கண்டிராதது.//

   பழைய கொலு படங்கள் போட்ட பதிவுகளில் (மாயவரம் கோயிலில் எடுத்த படங்களில்) இந்த இராவண தர்பார் காட்சி போட்டு இருக்கிறேன் ராமலக்ஷ்மி.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 17. இந்தக்கோயிலுக்குப் போனோம். இங்கே தான் காய்கறிகள் முக்கியமாய் நாட்டுக்காய்கள் விலை மலிவாகக் கிடைத்ததாக நினைவு. கத்திரிக்காய் அருமையா இருக்கும். மெம்பிஸுக்குப் பெண் வீட்டுக்கு வரும்போது சமைக்கவெனக் காய்கள் அங்கே வாங்கினோம். நாங்க போனப்போ மார்கழி மாசம் என்பதால் கொலுவெல்லாம் பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   இங்கே தான் காய்கறிகள் முக்கியமாய் நாட்டுக்காய்கள் விலை மலிவாகக் கிடைத்ததாக நினைவு. கத்திரிக்காய் அருமையா இருக்கும். //

   இங்கே வாழைக்காய், கத்திரிக்காய் நன்றாக இருக்கிறது, விலையைப்பற்றி தெரியவில்லை.

   மார்கழி மாத அலங்காரம் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு சிறப்பு.

   நீக்கு
 18. அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் காட்சியை நண்பர் ஒருத்தர் வீடியோ எடுத்து வாட்சப்பில் அனுப்பி இருந்தார். அதே போல் கஜேந்திர மோக்ஷமும். இப்போதெல்லாம் பொம்மைகள் இப்படியான கருத்துக்களைத் தாங்கி வருகின்றன. இளம் தலைமுறையினருக்கு எளிதாகப் புரிய வைக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் காட்சியை நண்பர் ஒருத்தர் வீடியோ எடுத்து வாட்சப்பில் அனுப்பி இருந்தார்.//

   ஓ ! மகிழ்ச்சி.

   //அதே போல் கஜேந்திர மோக்ஷமும். இப்போதெல்லாம் பொம்மைகள் இப்படியான கருத்துக்களைத் தாங்கி வருகின்றன. இளம் தலைமுறையினருக்கு எளிதாகப் புரிய வைக்கலாம்.//

   ஆமாம்.

   செய்தி வாசிப்பவர் ரத்னா வீட்டு கொலு சக்தி விகடன் தொலைக்காட்சியில் காட்டினார்கள், அவர்கள் இந்த முறை எம்.எஸ் அம்மா அவர்கள் வாழ்க்கை வரலாறை மிக அருமையாக காட்சிபடுத்தி இருந்தார்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 19. மிக அழகான பொம்மை கொலு! கும்பகர்ணன் துயிலெழுப்பும் காட்சி பொம்மை அற்புதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு